Thursday, July 31, 2008

"அநுபவம் "

அ--அறிதல் (தெரிந்து கொள்ளுதல்).
நு--நுகர்தல் (அறிந்தவற்றை நுகர்தல் ).
ப--பகர்தல் (நுகர்ந்ததை பகர்தல் ).
வ--வரவேற்றல் (ந்ல்ல கருத்துக்களை வரவேற்றல் ).
ம்--கற்றுத் தெளிந்து விட்டோம் என்பதைக் குறிக்கும் அறிகுறி.( எல்லாம் தெரியும் என்பதற்கு "ம்' என்று சொல்வது மரபு.
-(04-01-1997).சனி.

தமிழரின் பழைய சொத்து !

"துளைக் கருவி, நரம்புக் கருவி, தோல் கருவி" என்ற மூன்றினுள் எல்லா வகையான இசைக்கருவிகளும் அடங்கும். இவற்றை குழல், யாழ், முழவு என தமிழன் அழைத்தான். இம்மூன்றினுள்ளும் "ழ்" கரத்தை வைத்திருப்பதால் இசை தமிழரின் பழைய சொத்து.
_நன்றி:- கி .ஆ. பெ. விசுவநாதம்.

Wednesday, July 30, 2008

பழமொழி !

"அரச மரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்" என்பது பழமொழி.
அரசமரத்தில் இடைச் செருகலாக வளரும் புல்லுருவியின் இலையை அரைத்து , எலுமிச்சம்பழ அளவு பிள்ளைப் பேறு இல்லாதப் பெண்களுக்கு , மூன்று நாள் சூதகத்திற்கு முன் கொடுத்து வந்தால் பலன் கிடைக்கும்.
நன்றி: தின்மணி (12-11-1999).

Tuesday, July 29, 2008

தாவரங்கள் !

தாவரத்தைத் தமிழ் மக்கள் மதித்ததுபோல் உலகில் வேறு எந்த இந்த்தாரும் மதிக்கவில்லை. செய்யுள்களில் வரும் ஈரசைஸ் சீர்களுக்கும் , மூவகைச் சீர்களுக்கும் முறையே தேமா, புளிமா, கருவிளம் கூவிளம் என்று பெயரிட்டனர். தொடர்ந்து காய்ச்சீர், கனிச்சீர் என்றனர்.
பெண் பருவம் அடைவதை ' பூப்பெய்ரினாள்' என்றும் , அவளுக்குச் செய்யும் மஞ்சள் நீராட்டிலும் மருத்துவப் பயன் இருக்கிறது.
-நன்றி: தினமணி (12-11-1998).

Monday, July 28, 2008

புத்திசாலித்தனம் -தந்திரம் !

புத்திசாலித்தனம்-தந்திரம் வேறுபாடு ?
நீங்கள் வெற்றிகரமாக காரியத்தை முடித்தால் புத்திசாலித்தனம். அதே காரியத்தை மற்றவர்கள் வெற்றிகரமாக முடித்தால் த்ந்திரம்.
-( வ்ண்டலூர் சிவஞானம் - இந்திரா இல்லத்தில் தங்கியிருந்த போது குறித்தது) -25-05-1999).

மாலை - தார்

!ஆண்கள் அணியும் கழுத்து மாலைக்கு 'தார்' என்றும் , பெண்கள் அணியும் கழுத்து மாலைக்கு 'மாலை' என்றும் பெயர்.
மலை என்பது சேர்த்துக் கட்டப்பட்டு , நடுவில் குஞ்சம் வைத்திருக்கும்.
தார் என்பது நடுவில் சேர்த்துக் கட்டப்படாமல் , இரு பிரிவுகளும் தனித்தனி குஞ்சத்துடன் இருக்கும்.
கோவலன் அணிந்த்து தார். கண்ணகி அணிந்தது மாலை

ஸ்தோத்திரம்- நாமாவளி !

ஸ்தோத்திரம் என்பது (அசைச் சொற்களுடன் அமைந்திருக்கக் கூடிய) செய்யுள் வடிவம். நாமாவளி என்பது திருப்பெயர்களை நாலாம் வேற்றுமையில் அமைத்து முன்னால் "ஓம்" , பின்னால் "நம" சேர்த்து அர்ச்சனை செய்வதற்கு ஏற்ற வகையில் அமைந்தது.

முன்னும்- பின்னும் !

முன்னோக்கி வாசித்தாலும் ,பின்னொக்கி வாசிதாலும் ஒரே சொல்லாகத்தான் இருக்கும்:
மாடு சாகுமா, விகடகவி, மோரு தருமோ, கருவாடு வாருக.
MA IS AS SELFLESS AS I AM.
A MAN, A PLAN, A CANAL-PANAMA.
HE LIVED AS A DEVIL EH.

Saturday, July 26, 2008

கெட்டது -10

உண்டு கெட்டது - வயிறு.
உண்ணாமல் கெட்டது - உறவு.
பார்த்து கெட்டது - பிள்ளை.
பாராமல் கெட்டது - பயிர்.
கேட்டுக் கெட்டது - குடும்பம்.
கேளாம்ல் கெட்டது - கடன்.
இட்டுக் கெட்டது - காது.
இடாமல் கெட்டது - கண்.
கொடுத்துக் கெட்டது - நட்பு.
கொடாமல் கெட்டது - நாணயம்.

Friday, July 25, 2008

PUZZLE

A same letter begins and ends but you are in the middle - What is it?
Ans: CHURCH
He is in the middle of two mats with ICS degree - Who is he?
Ans: MATHEMATICS
ஒரே word-ல் 3 meanings (Three meanings in one word) - Miss-under-standing,
நன்றி: R.லெட்சுமி நாராயணன் @முரளி கூறியது.

Thursday, July 24, 2008

PUZZLE:

There is a four letter word.
First letter is first of all,
Final letter is final of all,
Second and third are Nothing,
Ans: FOOL
நன்றி: ஆனந்த விகடன் (14-05-1995)

Wednesday, July 23, 2008

பழமொழி !

"An apple a day keeps the doctor away"- இந்த ஆங்கிலப் பழமொழியை எழுதி வைத்து விட்டு, கீழே இப்படியும் எழுதி வைத்திருக்கிறார் நடிகர் ராதா ரவி.
"If the doctor is a lady ,keep the apple away ".

Tuesday, July 22, 2008

எட்டு (பு) !

எட்டு -(பு).
வாழ்க்கையில் முன்னேற எட்டு பாயிண்ட்டுகள்:-
உழைப்பு, சிரிப்பு ,சுறுசுறுப்பு ,கண்டிப்பு, துடிப்பு, விழிப்பு, பண்பு, படிப்பு.

காந்திஜி !

"எலக்ரோ கார்டியோ க்ராஃப்" என்னும் "ஈசீஜி" டெஸ்ட் இந்தியாவிலேயே முதன் முறையாக நம் தேசப்பிதா காந்தியடிகள் அவர்களுக்குத்தான் செய்யப்பட்டதாம்.

ஸ்தோத்திரம்- நாமாவளி !

ஸ்தோத்திரம் என்பது ( அசைச் சொற்களுடன் அமைந்திருக்கக் கூடிய) செய்யுள் வடிவம்.
நாமாவளி என்பது திருப்பெயர்களை நாலாம் வேற்றுமையில் அமைத்து முன்னால் "ஓ ம்" , பின்னால் "நம" சேர்த்து அர்ச்சனை செய்வதற்கு ஏற்ற வகையில் அமைந்தது.

Monday, July 21, 2008

பாரதியார் !

"நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவி விழும், சிற்றெறும்பால் யானை சாகும்;
வரி வகுத்த உடற் புலியைப் புழுவும் கொல்லும்;
வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பர் !" -பாரதியார்.

Sunday, July 20, 2008

NOTICE

NOTICE !
கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெளியிட்ட நோட்டீஸ்:
"Notice is here by given that further notice with regard to my next notice will be notified in my next notice"

வெட்டாதே !

வெட்டாதே !
மரங்களை வெட்டி அழிக்கும் போக்கைக் கண்டிக்கும் வகையில் ஆனை மலை சுற்றுச்சூழல் சங்கம் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து அட்டையில்:
CUTTING THE TREES IS DESTROYING OUR OWN ROOTS"
"WISHING YOU A TREEFUL NEW YEAR"
-நன்றி .தினமணி (18-01-1997).

Saturday, July 19, 2008

7-வகை மனிதர்கள் !

1) பயந்தவர்கள்.
2) யதார்த்த வாதிகள்.
3) கற்பனைவாதிகள்.
4) தனிமை உணர்வு மிக்கவர்கள்.
5) மற்றவர் செல்வாக்குக்கு ஆட்பட மறுப்பவர்கள்.
6) பற்றற்றவர்கள்.(துறவறம்).
7) மற்றவர் கவலையை தனதாக்கிக் கொள்பவர்கள். (மகாத்மா காந்திஜி).

-வானொலி செய்தி (30-09-19950).

காந்திஜி -கஸ்தூரிபாய் !

காந்திஜியும், கஸ்தூரிபாயும் ஒரே ஆண்டில் (1869) பிறந்தவர்கள். 13 வயதில் திருமண்ம். பால்ய விவாக நிச்சயதார்த்தம் 7 வயதில் நடந்தது,(1882) 24 ஆண்டுகள் இல்லற் வாழ்க்கை. அப்புற்ம் சிறை வாழ்க்கை.
காந்தியடிகள் 'ராம்,ராம்' என்றதால்தான் நாது 'ராம்' கோட்சே சுட்டுவிட்டானா:?
காந்திக்கு மூன்று குண்டுகள்.
இந்திரா காந்திக்கு இருபது குண்டுகள்.
அதுவும் போதாது என்று ராஜிவ் காந்திக்கு வெடி குண்டு.
உயிரோடிருந்த மகாத்மாவைக் குண்டுகளுக்குப் பலியாக்கினார்கள்.இன்று சிலையாகத்தானே வைத்தோம் .அதையும் இன்று குண்டுகளை வைத்துத் தகர்க்கிறார்களோ?
(26-01-1997) ஞாயிறு..

RHYME

Thirty days hath September,
April, June and November;
All the rest have thirty one
Excepting February alone
Which hath twenty eight days clear
And twenty nine in each leap year.

Friday, July 18, 2008

குழந்தைகள் !

ஒரே பிரசவத்தில் இரன்டு குழந்தைகள் பிறந்தால் TWINS என்கிறோம். மூன்று குழந்தைகள் பிறந்தால், TRIPLET என்றும், நான்கு பிறந்தால் QUADRUPLET என்றும், ஐந்து பிறந்தால் QUINTUPLET என்கிறோம்.

Thursday, July 17, 2008

பீமரத சாந்தி !

எல்லா மனிதர்களுக்கும் அவர்களது எழுபதாவது வயதில் ஒரு கண்டம் உள்ளதாக ஒரு ஐதீகம் உள்ளது. அதற்காக ஒரு சாந்தி செய்தால், ஆயுள் விருத்தியாகும். இந்த சாந்திக்குத் தான் 'பீம ரதசாந்தி' என்பது பெயர்.

கின்னஸ் !

1955 ஆகஸ்ட் மாதம் 27 -ம் நாள் முதல் இப்புத்தகம் வெளிவருகிறது. இன்று 24 மொழிகளில் 10 கோடி பிரதிகள் 100 நாடுகளில் விற்கும் நூல் இது. உலக சாதனை, சாதனையாளர்கள் விபரம் அடங்கிய புத்தகம் இது. 'கின்னஸ்' என்பது அயர்லாந்தில் தயாரிக்கப்படும் ஒரு மதுவின் பெயர். பீவர் மற்றும் மெக்வெர்டர் இருவரும் இணைந்து உருவாக்கியதே கின்னஸ் புக்.

-கின்னஸ் வெர்ல்டு ரிக்கார்ட்' புத்தகத்தில் படித்தது. (04-07-2008).

Wednesday, July 16, 2008

ராகு காலம் அறிய !

திரு நாள் - 7:30 =9:00
சந்தடி - 9:00-10:30
வெளியில் 10 -30-12:00
புரண்டு -12:00 -1:-30
விளையாட-1:30 -3:00
செல்வது -3:00 -4:30
ஞாயமா -4:30 - 6:00.
இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால், ராகு காலம் எப்போது என்கிற சந்தேகமே வராது.

உடல் எடை !

ஒருவரின் உடல் எடை அதிகமா இல்லையா என்பதை ஆய்வாளர்கள் 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' என்று சொல்லப்படும், பி.எம்.ஐ. மூலம் முடிவு செய்கிறார்கள். இந்த பி.எம் ஐ. யை எப்படி கணக்கிடுவது?
உங்கள் உடல் எடையை உங்கள் உயரத்தினால் (மீட்டர் ஸ்கொயர்டு கணக்கில்) வகுக்கவேண்டும். அப்போது கிடைக்கும் மீதி 20 முதல் 30 க்குள் இருந்தால் அவர் சரியான எடையில் இருக்கிறார் என்று அர்த்தம். ஒருவரது பி.எம். ஐ, 30 க்கு மேல் இருந்தால் அவர் குண்டர் என்று அர்த்தம்.

நன்றி: தினமலர். (27- 01- 2007).

Monday, July 14, 2008

ஞானி பேசியது

மின் நிலைய யூனிட்
நெய்வேலி அனல் மின் நிலைய யூனிட்டுகளுக்கு எண்கள் ஒதுக்கிய போது, 8 -ம் எண் 'ஆகாத' எண் என்பதால், 7-க்குப் பின் 'ஸீரோ யூனிட்' என்று வித்யாசமாக பெயர் இடப்பட்டது.
நன்றி: ஞானி (ஒ பக்கங்கள்) - ஆனந்த விகடன் ( 26- 09-2007).

காந்தி
காந்தி தன் ஆசிரமங்களில் பின் பற்றி வந்த விதிகளில் முக்கியமான ஒன்று, குழந்தைகள் அனைவரும் ஆண், பெண் வித்தியாசமின்றி ஒன்றாக கிணற்றடியில் சேர்ந்து குளிப்பது என்பதாகும். குழந்தைப் பருவத்திலேயே வெவ்வேறு உடல் அமைப்புகள் பற்றித் தெரிந்து கொள்வது, பின்னாட்களின் மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதே காந்திஜியின் முடிவு.
நன்றி: ஞானி (அறிந்தும் அறியாமலும்) - ஆனந்த விகடன் (26-09-2007).

பெண்

பெண்ணை அறிய.......?
பேதை வயது............5 முதல் 7 வரை.
பெதும்பை வயது............8 முதல் 12 வரை.
மங்கை வயது...........12முதல் 13 வரை.
மடந்தை வயது...........14 முதல் 19 வரை.
அரிவை வயது...........20 முதல் 25 வரை.
தெரிவை வயது...........26 முதல் 31 வரை.
பேரிளம்பெண் வயது............31 முதல் 40 வரை.

சதாம் உசேன் !

சதாம் தூக்கிலிடப்பட்ட காலையில் (30-01-2006. 08:30 A.M).என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ். வாசகம்: "SAD.A.M ".
-அதிரை. சாஜித். நன்றி குமுதம் (31-01-2007)

Sunday, July 13, 2008

அஞ்சல் குறியீட்டு எண் !

PIN CODE(அஞ்சல் குறியீடு) எண் 1972 ல் அறிமுகம் செய்யப்பட்டது. அஞ்சல் குறியீட்டில் 6 எண்கள் உண்டு.முதல் எண் மாநிலத்தை குறிக்கும். இரண்டாவது எண் துணை மாவட்டத்தையும், மூன்றாவது எண் பட்டுவாடா மாவட்டத்தையும், இறுதி மூன்று எண்கள் அஞ்சல் நிலைய எண்கள் எனவும் குறிக்கும்.
-தினமலர். (30-07-2007).

Saturday, July 12, 2008

சேமிப்பு !

சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்.
சோறு
அரிசி
விதை நெல் என்பது போல.
சோறு --- இன்றையத் தேவை.
அரிசி --- நாளையத் தேவை.
விதை நெல்--எதிர் காலத் தேவை.
-நன்றி: வைரமுத்து. குமுதம் (01-08-2007).

இமயமலை !

இமய மலையால் யாருக்கு அதிக லாபம் ? இந்தியாவுக்கா? சீனாவுக்கா ?
இந்தியாவுக்குத் தான். எப்படி என்றால், இமயமலையிலிருந்து சீனாவுக்கு இற்ங்கிச் செல்லும் நதிகள் 16. ஆனால் இந்தியாவுக்குள் இறங்கி வரும் நதிகளோ 48.

Friday, July 11, 2008

மூன்றும் -ஆறும் !

கோயில்,மசூதி, சர்ச் மூன்றுமே மூன்றெழுத்து சொல். அது போல் சிவபெருமான், முகமது நபி, ஏசு கிறிஸ்து மூன்றுமே ஆறு எழுத்துச் சொல்.

நோபல் -பரிசு !

உலகின் மிகப் பெரிய பரிசு,' நோபல் பரிசு.' இதனை உருவாக்கியவர் ஆல்பிரட் நோபல். டைனமட் என்ற வெடிமருந்தை இவர் தான் கண்டுபிடித்தார். இதில் பெரும் செல்வம் கிடைத்தது. இறக்கும் போது தனது செல்வத்தை ஒரு டிரஸ்ட் ஆக்கி அதன் மூலம் ஆண்டு தோறும் தலைசிறந்த மேதைகளுக்கு பரிசளிக்க வழி செய்தார்.
-தினமலர். (09-07-2007).

Wednesday, July 9, 2008

வாரண்டி - கியாரண்டி !

எந்த ஒரு பொருளுக்கும் தயாரிக்கும் நிறுவனம் உபயோகிப்பவர்களுக்கு நேரடியாகத் தரும் உத்தவாதம் வாரண்டி. கியாரண்டி என்பது டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் தருவது. கம்பெனிகள் நேரடியாக உத்தரவாதம் தரும்பொழுது பழுது ஏற்பட்டால் பொருளையே மாற்றித்தர வாய்ப்பு உண்டு. டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் பழுதை நீக்கித் தருவதற்குத்தான் உத்தரவாதம் அளிப்பார்கள். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

நன்றி:தகவல் தமயந்தி - குமுதம்(18-07-2007).

கும்பாபிஷேக அஷடபந்தன மருந்து

கும்பாபிஷேக அஷடபந்தன மருந்தில் கலக்கும் பொருள்கள். சுமார் 300 கிலோ மருந்து தயாரிக்க வேண்டிய ஜாமான் விபரம்:

1. கருங் குங்கிலியம் (84 கிலோ)
2. கொம்பரக்கு (42 கிலோ)
3. சுவர்ண காவி (35.5 கிலோ)
4. மஞ்ச(ண்)ல் மெழுகு (33 கிலோ)
5. செம்பஞ்சு (5 கிலோ)
6. வடிகட்டின சுக்கான் (10.5 கிலோ)
7. கட்டி லிங்கம் (3 கிலோ)
8. வெண்ணெய் (20 கிலோ)

நன்றி: எனது தாய் மாமன் வித்வான் பொன். முருகையன் - குமரகுருபரர் மாத இதழ் (30-05-200)

Tuesday, July 8, 2008

அக்னி நட்சத்திரம்

பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் சற்று குறையும். இதனால் சாதாரண நாட்களை விட இந்த இரு மாதங்களில் பூமியில் சூரிய வெப்பம் சற்று கூடுதலாக இருக்கும். அதிலும் சித்திரை மாதத்தின் பின் பகுதியிலும், வைகாசி மாதத்தின் முன் பகுதியிலும் கடும் கோடை எனப்படும் அக்னி நட்சத்திர காலம் என்பது நடைமுறை.

நன்றி: தினமலர் (05-05-2007).

Monday, July 7, 2008

கோயில் - திருக்குளம் !

கோயிலுக்குப் போகும் முன், கோயிலை ஒட்டி உள்ள திருக்குளத்தில் முங்கி எழுந்து, ஈரக் கூந்தலுடன் போகும் பழக்கம் நம் தேசத்தில் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். இதற்குப் பின்னால் ஒரு சிறு விஞ்ஞானம் உண்டு. சக்தி அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும் திறன், உலர்ந்த உடலை விட ஈர உடலுக்குப் பன்மடங்கு அதிகம்.

நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ் - ஆனந்தவிகடன் (02-05-2007).

Sunday, July 6, 2008

எம கண்டம் அறிய எளிய வழி...

வெள்ளிக் கிழமையை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அன்று 3:00 - 4:30 எமகண்டம். அடுத்தடுத்த நாட்களில் ஒன்றரை மணி நேரத்தை கழித்துக் கொண்டே வரவேண்டும்.

சனிக் கிழமை ... 1:30- 3:00
ஞாயிறு ... 12:00 - 1:3 0
திங்கள் ... 10:30 - 12:00
செவ்வாய் ... 9:00 - 10:30
புதன் ... 7:30 - 9:00
வியாழன் ... 6:00 - 7:30

என்பது போலச் சுலபமாக எமகண்ட நேரத்தை நினைவில் கொள்ளலாம்.

எமகண்டம் !

விரும்பி..........6:00 - 7:30
புதிதை...........7:30 - 9:00
செவ்வையாய்......9:00 - 10:30
தினமும்..........10:30 - 12:00
ஞாலம்..........12:00 - 1:30
சந்திப்பின்........1:30 - 3:00
வெற்றியே........3:00 - 4:30

எனது பள்ளி தலைமை ஆசிரியர் திரு M.தண்டாயுதபாணி கூறக்கேட்டது (24-07-1996).

Friday, July 4, 2008

அப்துல் கலாம் ! அறிவின் நிறைவே....

'வல்லரசு இந்தியா' என்பது உங்கள் தேடல் !
இளைஞர்களுக்கெல்லாம் நீங்கள்தானே ரோல் மாடல் !

மாணவரை மதிக்கும் கலாம் - உங்களுக்கு
வருங்காலத் தலைமுறை இடுமே சலாம் !

தேசம் போற்றும் ஜனாதிபதி !
நேசம் கொள்ளும் குணாதிபதி !!

பிஞ்சு மனங்களில் நஞ்சு விதைப்பவர்களுக்கு மத்தியில்
அறிவெனும் அக்கினிக்குஞ்சு வளர்க்கும் ஆசான்.

முன்னேறும் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு....
கலாம் போல ஒருவரை நீ காட்டு !

இளைய ரோஜாக்களை நேசிப்பதில் இன்னொரு நேரு - புது
இந்தியாவைப் பற்றி இவரிடம் உண்டு கனவுகள் நூறு !

மாணவனைக் கண்டால் தட்டிக் கொடுப்பாய்...
இளைஞனைக் கண்டால் தட்டியெழுப்புவாய் !

அறிவின் நிறைவே அப்துல் கலாம்
ஆற்றலின் திறனே உனக்கொரு சலாம்!

நன்றி: கல்கி(11-03-2007)

மரம் !

ஒரே தன்மையான விதைகளை, ஒரே இடத்தில் சற்று தள்ளி தள்ளி விதையுங்கள். அவை துளிர் விட்டு வளர்ந்து மரமானதும் கவனியுங்கள். அவை அனைத்தும் ஒன்று போல் இருக்கவே இருக்காது. அவற்றின் காய், கனிகளின் வடிவமும், சுவையும் கூட மாறுபட்டு இருக்கும். இதுதான் மரத்தின் சிறப்பு தனித்தன்மை !

நன்றி: கண்மணிசுப்பு - ஆனந்த விகடன்(08-11-2006)

முக்கனிகள்

தமிழ் இலக்கியங்களில் முக்கனிளை மா, பலா, வாழை என்று வரிசைப்படுத்துவது ஏன் தெரியுமா? நிறைய கிளைகளைக் கொண்டு ஒவ்வொரு கிளைகளிலும் பல கனிகளைத் தருவதால் மா முதல் இடத்தில் உள்ளது. பல கிளைகள் இருந்தாலும் ஒரு சில கிளைகளில் மட்டுமே பழங்ளைத் தருவதால் பலா இரண்டாவது இடத்திலும், ஒரே ஒரு குலை தருவதால் வாழை மூன்றாவது இடத்திலும் வைக்கப்பட்டன.
-நன்றி. ராணி (21-01-2007).

POTA

"P O T A"

''பொடா' என்ற ஆங்கிலச் சொல்லின் விரிவாக்கம்:
PREVENTION OF TERRORISM ACT.

Thursday, July 3, 2008

இருதயம்

ஆயுர் வேத நூலில் இருதயத்தை 'ஹரதி ததாதி யாதி இதி ஹ்ருதயம்' என்று குறிப்பிடுகிறார்கள். 'ஹரதி' என்றால் இரத்தத்தை வாங்கிக் கொள்வது, 'ததாதி' என்றால் இரத்தத்தைக் கொடுப்பது, 'யாதி' என்றல் இரத்தம் உடல் முழுவதும் வியாபிக்கச் செய்வது. என்று பொருள்.
-டாக்டர் .எல்.மஹாதேவன் நன்றி கல்கி . (21- 01-2007).

அன்னை தெரசா !

மேற்கு வங்கத்துல'தோட்டியர்' என்று ஒரு ஜாதி உண்டு. இந்த இனத்து மக்களின் வாழ்க்கையை நேரில்பார்த்த அன்னை தேரசா ரொம்பவும் உருகிப் போனார் இதன் பாதிப்புலதான் அந்த இனத்தவர் அணியும்ஆடையை, அவங்களோட மிஷனின் அங்கீகரிக்கப்பட்ட உடை ஆக்கினாங்க !

Wednesday, July 2, 2008

நாய் கடி !

நாய்க் கடியில் 'புரவோக்ட்' , 'அன்புரவோக்ட்' என்று இரண்டு வகை உண்டு. மனிதர்களின் செயல்பாட்டைப் பொறுத்து நாய்கள் கடிப்பது 'புரவோக்ட்' வகை. உதாரணமாக நாய்கள் மீது கல்லெறிவது, துரத்துவது இப்படி. 'அன்புரவோக்ட்' சற்று வித்தியாசமானது. சைக்கிள் அல்லது டூவீலரில் போய்க்கொண்டிருக்கும் போது, அவை எழுப்பும் சத்தம் காரணமாக துரத்தி வந்து கடிப்பது. நாய் கடித்து விட்டதே என்ற பயம் தேவையில்லை. முதல், இரண்டு, ஏழு, பதிநாலு, முப்பது, தொண்ணூறாவது நாள் என்று கைகளில் ஆறு ஊசிகள் போட வேண்டும்.
நன்றி: -குமுதம் (15-11-2006).

ஜப்பான் !

ஜப்பானில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் விதம் மிகஸ் சிறப்பானது. "If you can't, Japan can't.If Japan can't, the World can't." (உன்னால் முடியாதெனில் ஜப்பானால் முடியாது. ஜப்பானால் முடியாதெனின் உலகத்தாலேயே முடியாது).என்ற தன்னம்பிக்கையூட்டும் வாக்கியத்தை மாணவர்களின் சிந்தையில் வளர்க்கிறார்கள்.
-நன்றி: குமுதம் . (20-12-2006).

Tuesday, July 1, 2008

ஜுன் -௨௨.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற குதுப்மினார் கோபுரத்தின் நிழல் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் -22ஆம் தேதி மட்டும் தரையில் படுவது இல்லை. அக்கால கட்டிடக்கலை நிபுணர்களின் கைத்திறனையே இது காட்டுகிறது.
-நன்றி: தினமலர் - வாரமலர் (29-12-2006).

மழை,புழுக்கம் !

சாதாரணமாக மழை பெய்வதற்கு முன்னர் நாம் அதிக புழுக்கத்தை உணர்கிறோம்.அது ஏன் தெரியுமா? கரு மேகங்கள் உதயமான உடனடியாகவே, சுற்றுப்புறம் முழுமையாக நீர் ஆவியால் நிரம்பிவிடும்.! இதனால் நம்முடைய உடலில் உண்டாகும் வியர்வை எளிதில்ஆவியாகாமல் உடலிலேயே தங்கிவிடும். அதனால்தான் ஒருவகை புழுக்கம் ஏற்படுகிறது

கண்டங்கள் ,ஆங்கிலம் !

நம் உலகில் இருக்கும் கண்டங்களின் பெயர்கள் எந்த எழுத்தில் ஆரம்பிக்கிறதோ அதே
எழுத்தில் முடிகிறது. உதாரணமாக America, Asia, Africa, Andartica.
Almost என்ற ஆங்கில வார்த்தையில் மட்டும்தான் எழுத்துக்கள் அல்ஃபபெட்டிகல் ஆர்டரில் வரும்.
Listen என்ற ஆங்கில வார்த்தையில் Silent என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்கள் இருக்கின்றன.

கருக்கல்!

காலை என்பதே கருக்கல் தான்.
எந்த ஜீவராசியும் சூரிய உதயத்திற்குப் பிறகு உறங்குவதில்லை மனிதன் மட்டும் தான் சூரிய உதயத்திற்குபிறகும் உறங்குகிறான் அதிகாலை 4:30 க்கும் 5:30 க்கும் இடைப்பட்ட நேரம் 'கருக்கல்' ஆகும்.
இந்த நேரத்தில் தான் பகலின் வெளிச்சக்காற்று தோன்றி மறைந்து சற்று இருட்டாக இருக்கும். இந்த நேரத்தில் எழுந்து சுவாசித்தால் நெஞ்சில் உள்ள கெட்டக் காற்று நீங்கி அப்பழுக்கற்ற காற்று கிடைக்கும்.அது ஆரோக்கியத்தை அளிக்கும்.
நன்றி: -தினமலர் (26-12-2006).

தங்கம் ,சிலப்பதிகாரம் !

தெய்வீகப் பெருமையும், மந்திரசக்தியும், மருத்துவ வீர்யமும் பெற்றுள்ள தங்கத்தைப் பற்றி ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான்சிலப்பதிகாரம் போற்றியுள்ளது. தற்காலத்தில் தங்கத்தின் தரத்தை 'காரட்' என்று நிர்ணயிப்பது போல் சங்க காலத்தில் தங்கத்தை 'ஆடகம்'(பத்தரை மாற்றுத் தங்கம்) 'கிளிச்சிறை' (கொங்கு நாட்டுத் தங்கம், ) 'சம்பூநதம்'(ஹரிதம்), 'அபரஞ்சி' (தூய-
தங்கம்- Pure Gold) என்று சிறப்பிதுக் கூறுகிறது சிலப்பதிகாரம்.
நன்றி: -குமுதம் (10-01-2007).