Sunday, November 30, 2008

ஹிட்லர் !

நேசநாடுகளின் படைகள் பெர்லின் நகரைச் சூழ்ந்துகொண்ட நிலையில் , ' தோல்வி நிச்சயம் ' என்கிற காலகட்டத்தில் ஹிட்லர் தான் செய்த தவறுகளை, கொடூரங்களை, கொலைகளை உணர்ந்தாரா ?! இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது....
அந்தக் கடைசி நாட்கள்....மார்ஷல் ஷுகோவ் தலைமையில் ரஷ்ய ராணுவ டாங்கிகள் பெர்லின் தெருக்களில் நுழைந்து விட்டன. இன்னொருபுறம் அமெரிக்க ஜெனரல் ஜார்ஜ் பேட்டன் நூற்றுக்கணக்கான டாங்கிகளுடன் பெர்லின் நகரில் ஓடும் புகழ்பெற்ற ரைன் நதியைக் கடந்தார்.
பாதி பாலத்தில் டாங்கியிலிருந்து கீழே குதித்த பேட்டன் ஓரமாக நின்று பாண்ட் 'ஜிப் 'பை கழற்றியது கண்டு மற்ற ராணுவ வீரர்கள் சற்றுத் திகைத்தனர். பாலத்தின் மேலேயிருந்து பேட்டன் , ரைன் நதியின் மீது சிறுநீர் கழித்தார் ! பிறகு திரும்பிப்பார்த்து புன்னகையுடன் ' இது என் நீண்ட நாள் கனவு !' என்று அவர் சொல்ல , அமெரிக்க வீரர்கள் பலமாகச் சிரித்தனர்.
-- மதன். மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்ற நூலில்.

Saturday, November 29, 2008

ரத்தம் !

ரத்தம் என்பது இயற்கை உருவாக்கிய ஒரு பேராச்சரியம் ! உயிரிருக்கும் வரை உடலுக்குள்ளே ஓடும் ஜீவநதி அது. கடைசி மூச்சும் , இதயத்துடிப்பும் நிற்கும் வரை உள்ளே இந்த நதி சளைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
உடலுக்குள்ளே கிளைகள் விட்டுப் படர்ந்திருக்கும் ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் மைல்கள். இது பூமியின் நான்கு மடங்கு சுற்றளவு.
மனித உடலிலுள்ள ரத்தம் ( மற்றுமுள்ளப் ) பற்றிய ஆராய்ச்சிக்கு ' ஸராலஜி ' என்று பெயர். 'ஸர ' என்கிற சமஸ்கிருத வார்த்தயிலிருந்து வந்தது இது. ' ஸர ' என்றால் ஓடுவது, -- to flow என்று அர்த்தம்.
ரத்தத்துக்கு இரு ' முகங்கள் ' உண்டு ! ஒன்று -- அது மருத்துவர்களுக்குக் காட்டும் ( நமக்கு ஓரளவுக்குத் தெரிந்த )முகம். மற்றது -- போலீஸுக்குக் காட்டும் முகம் !
-- மதன். மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்ற நூலில் .

Friday, November 28, 2008

பற்களைப் பேணுதல் !

பற்களைப் பேணுதல் ஒரு விஞ்ஞானக்கலை. பல் துலக்கும்போது பற்குச்சி நார்களில் ஐம்பது சதம் ஈறுகளில் இருக்கவேண்டும் . ஐம்பது சத்ம்தான் பல்லில் படவேண்டும். ஒரே இடத்தில் முன்னும் பின்னுமாய் உருட்டி அழுத்தித் தேய்க்க வேண்டும். மேற்பல்லை மேலிருந்து கீழாய்; கீழ்ப்பல்லை கீழிருந்து மேலாய்.
வெளிப்புறம் துலக்குவதோடு பலபேர் முடித்துக் கொள்கிறார்கள். உட்புறமும் துலக்கவேண்டும். நித்தம் இருமுறை பல் துலக்கவேண்டும். ஓரம் தேய்ந்த பற்குச்சிகளை எறிந்துவிட வேண்டும். " பற்களையும் பாதங்களையும் தூய்மை செய்யாமல் படுக்கைக்குச் செல்லாதே " என்பது நல்ல தத்துவம்.
பாம்பு !
பாம்பிற்குத்தான் காலில்லையே பிறகென்ன பாம்பின் கால் பாம்பறியும் ?
' கால் ' என்ற சொல்லுக்கு ' வளை ' என்றோர் பொருள் உண்டு. எத்தனை தூரம் இரைதேடி மீண்டாலும் பாம்பு தன்வளையைத் தான் அறியும். என்பது அதன் பொருள்.
--வைரமுத்து . குமுதம் . ( 19-12-2007 ) .

Thursday, November 27, 2008

தேனீக்கள் !

சொகுசாயிருக்கும் ராணித்தேனீயைவிட ,பறந்து பற்ந்து தேன் சேகரிக்கும் வேலைக்காரத் தேனீக்கள் தான் இரக்கத்திற்குரியவை .ஆனால் , ராணித்தேனீயும் அனுதாபத்திற்குரியதுதான் . பல ஈக்கள் போட்டியிட்டு ஒரே ஓர் ஆண் தேனீதான் ராணித்தேனீயைக் கூடுகிறது . உறவு முடிந்ததும் ஆண் தேனீயின் ஆண் குறி உடைந்து ராணித்தேனீயின் பெண் புழையை முற்றிலுமாய் மூடிவிடுகிறது . அதன்பிறகு எந்தத் தேனீயும் ராணித்தேனீயை புணர முடியாது .
அது ஒரு முறை உள்வாங்கிய இந்திரியத்தில்தான் காலந்தோறும் கருத்தரித்து முட்டையிட்டுக் கொண்டேயிருக்கிரது .தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் உடலுறவுக்கு அனுமதிக்கப்பட்ட ராணித்தேனீயும் அனுதாபத்திற்குரியதுதான். அதைவிட அனுதாபத்திற்குரியது அதைப் புணர்ந்து முடித்ததும் ஆண்குறி உடைந்து அப்போதே செத்துப் போகிற ஆண்தேனீ ,
இயற்கையில்தான் எத்தனை விசித்திரங்கள் .
--வைரமுத்து . குமுதம் . ( 19-12-2007 ) .

Wednesday, November 26, 2008

இடி - மின்னல் !

மழை பெய்யுமா , வெயில் அடிக்குமா எனக் கணிக்க இயலாத நிச்சயமற்ற வானிலை சில சமயம் நிலவும் . குளிர்ச்சியான காற்று உங்கள் உடம்பைத் தழுவிச் செல்கிற அந்த க்ளைமேட்டில் , பூமியிலிருந்து காற்று மேலே எழும்பும் . நல்ல ஈரப்பதம் உள்ள காற்று மேலெழும்ப அதற்கு ஒரு சக்தி வேண்டும் . அந்த சக்தி வெளியில் கிடைக்காதபோது , உள்ளுக்குள் இருந்தே எடுத்துக்கொள்ளும் . அப்போது ஈரப்பதமான காற்று குளிர்ச்சி அடைந்து திரள் மேகங்கள் ( நீர்த் துளிகள் ) உருவாகும் .
அவை மேலே போகும்போது ஏற்கனவே அங்குள்ள திரள் மேகங்களுடன் உராயும் . அப்போது , ஒருவித மின்புலம் உண்டாகும் . அந்தச் சமயத்தில் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு வெப்பம் உருவாகும் . இந்த அளவுக்கான அதிக வெப்பத்தினால் அப்பகுதி திடீரென விரிவடையும்போது உண்டாகும் சத்தத்தைத்தான் இடி என்கிறோம் .
அப்போது ஏற்படும் வெளிச்சம்தான் மின்னல் .ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் , இடி முதலில் தோன்றினாலும் மின்னல்தான் நம்மை முதலில் வந்தடைகிறது .
இடிதாங்கி !
இடிதாங்கி ஒன்றே பெரிய கட்டடங்களையும் , வீடுகளையும் இடியிலிருந்து காப்பதற்கான வழி என்ற நிலையில் எங்கு கிடைக்கின்றன இடிதாங்கிக் கருவிகள் ?
சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு கடையில் கிடைக்கிறது . அங்கு , " பைப் , ராடு டைப் என இரண்டு வகையான இடிதாங்கிகள் விற்பனைக்கு உள்ளன .பைப் வகை 950 -- 1,000 ரூபாய் வரையிலும் , ராடு வகை 2,750 --4,250 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது .முழுவதும் காப்பரால் ஆன இந்த இடிதாங்கிகள் , எந்தக் கோணத்தில் இடி விழுந்தாலும் கிரகித்துக்கொள்ளக் கூடியவை .
இடியிலிருந்து வரும் மின்சாரத்தைக் கிரகித்து பூமிக்குள் அனுப்புவதற்காக இடிதாங்கியுடன் காப்பர் ஒயர்கள் இணைக்கப்பட்டு , அவை பூமிக்குள் புதைக்கப்படுகின்றன .
--சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், ரமணன் .ஆனந்தவிகடன் .( 05-11-2008 ) .

Tuesday, November 25, 2008

--தெர்மாமீட்டர் '

கி.பி. 1561 -ல் இத்தாலியில் மருத்துவ மேதை ஸாங்ட்டோரியஸ் பிறந்தார் . 1564 -ல் பிறந்த இன்னொருவர் , மருத்துவம் படித்துவிட்டு விஞ்ஞானத்துக்கு தாவினார் . அவர் , கலிலீயோ !
இருவரும் பலவிதமான தெர்மா மீட்டர்களை ஒரே சமயத்தில் ...ஒரே நாட்டில் கண்டுபிடித்தார்கள் .
' SLEAZY '
குடும்ப நாவல் , க்ரைம் நாவல் , போல ' S L E A Z Y '- ம் ஒரு நாவல்தான் .
இதன் உச்சரிப்பு மென்மையாக இருந்தாலும் , அர்த்தம் என்னவோ கடுமையானது . ' கீழ்த்தரமான , நேர்மையற்ற , சாக்கடைத்தனமான ' என்பது பொருள் .அமெரிக்க மீடியா 80 - களில் உருவாக்கிய புது வார்த்தை இது --ஹாய் மதன் . ஆனந்தவிகடன் .( 19-11-2008 ) .

Monday, November 24, 2008

கூவம் ஆறு !

கூவம் நதி சென்னைலில் இருந்து 72 கி.மீ., தொலைவில் அரக்கோணம் தாலுகா தக்கோலம் கிராமத்துக்கு அருகே கேசவரம் அணைக்கட்டில் துவங்குகிறது .
புறநகர் பகுதிகளில் கூவம் நதியில் ஆரண்வயல் அணைக்கட்டு , கொரட்டூர் அணைக்கட்டு , கண்ணன்பாளையம் அணைக்கட்டு , ஆயலசேரி அணைக்கட்டு , பருத்திப்பட்டு அணைக்கட்டு ஆகியவை கட்டப்பட்டுள்ளன .
கூவத்தின் துணை வடினிலங்களில் மொத்தம் 82 குளங்கள் உள்ளன . 13,575,93 எக்டேர் ஆயக்கட்டு கொண்டது . வளைந்து நெளிந்து வந்து பல வடிகால்களை ஏற்று , சென்னை நகர எல்லையான கோயம்பேட்டில் கூவம் நதி நுழைகிறது .
அங்கிருந்து சென்னை நகருக்குள் 17.98 கி.மீ. தூரம் பயணிக்கிறது . இடையில் 16 பாலங்களை கடந்து , நேப்பியர் பாலத்துக்கு கீழே கடலில் வந்து சேறுகிறது .
அதற்கு முன்பாக , லாஸ் பாலத்தில் இரண்டாக கூவம் பிரிந்து மீண்டும் நேப்பியர் பாலத்தில் ஒன்று சேருவதால் , அங்கு தீவுத்திடல் அமைந்துள்ளது .
கூவம் நதியின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து ஏராளமான குடிசைப் பகுதிகள் அமைந்து உள்ளதால் கூவத்தின் உண்மையான அகலம் மூன்றில் இரண்டு மடங்காக குறைந்துள்ள்து .இதன் காரணமாக , கூவம் நிரம்பி வழிந்து பக்கிங்காம் கால்வாய் , ஒட்டேரி போன்ற சிறு நீர்வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன .
இதனால் சாக்கடை தண்ணீரின் தொடர்புகளும் அடைபடுகின்றன . இது தவிர , கடலில் கலக்கும் நுழைவாயிலில் மன் அடைப்பு அதிகரிப்பதால் , தண்ணீர் செல்வது தடைபடுகிறது .
இந்த நிலையில் தேம்ஸ் நதி போல் கூவம் மாறுமா ? அல்லது தொடர்ந்து நாறுமா ?.
-- தினமலர் .சென்னை பதிப்பு . ( 06-10-2008 ) .

Sunday, November 23, 2008

காந்தியின் அரண்மனை !

இன்று குண்டுவெடிப்புக்களால் குதறப்பட்டுக்கிடக்கும் அதே அகமதாபாத்தில்தான், இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதிய அந்த எளிய மனிதர் வசித்த அரண்மனை இருக்கிறது.
சலசலத்துச் செல்லும் சபர்மதி நதிக்கரையோரம், பல சரித்திர நினைவுகளைத் தன்னுள்ளே பதித்து, மிக எளிய குடில்களுடன் அசோக மரங்கள் தலையாட்டி அழைக்கின்றன.காந்தியின் சத்திய சேதிகளை எடுத்துச் செல்வது போல் அணில்கள் ஓடுகின்றன.கிலிகள், குருவிகள், மைனாக்கள், புறாக்கள் என்று பறவைகள் சந்தோஷமாக திரிகின்றன.
முதலில் கவர்வது காந்தியைப்பற்றி பற்றிய கண்காட்சி புகைபடங்கள், ஓவியங்கள்,மகாத்மா கைப்பட எழுதிய கடிதங்களின் நகல்கள் எல்லாம் தேசத்தின் கறைபடாத நாட்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
அடுத்து மகாத்மாவும், அன்னை கஸ்தூரிபாவும் வாழ்ந்த ஹிருதயகுஞ் குடில்.ஆசிரமத்துக்கே இதயமாக விளங்கிய குடில் என்பதால், இதற்கு இந்தப் பெயர்.
வாயிலில் ஒரு முதியவர் கை ராட்டினத்தில் நூல் நூற்றுக்கொண்டு இருக்கிறார்.
குடிலில் நுழைந்தவுடன் அதன் எளிமை தாக்குகிறது. காந்தியின் அறை பட்சிகளின் இன்னிசைக்கிடையே மோனத்தவம் புரிகிறது. மெல்லிய மெத்தை, திண்டு, குட்டையான எழுது மேஜை, ராட்டை, ஊன்றுகோல்,
தேசியத் தலைவர்கள், வெளினாட்டுத் தலைவர்கள் காந்தியை இங்கே வந்துதான் சந்தித்தார்கள். இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் இங்கேதான் கருத்தரித்தன காந்தியின் அறையை ஒட்டி, அன்னை கஸ்தூரிபாவின் அறை.இரு ஜன்னல்களைத் தவிர வேரு எதுவும் இல்லை.ஒரு திறந்தவெளி முற்றம்.சமையல் சதுரம்.
அடுத்து, காந்தியால் கவரப்பட்ட வினோபா பாவே வாழ்ந்த 'மீரா' குடில், அதையடுத்து இருப்பது, ராஜேந்திர பிரசாத், நேரு, ராஜாஜி, கான் அப்துல் கபார்கான் போன்ற பெரும் தலைவர்கள் வாழ்ந்த 'நந்தினி'எளிமையான குடில்.
சபர்மதி நதிக்கரை ஓரம் திறந்தவெளி , பிரார்த்தனை பூமி. காந்தி வாழ்ந்த பூமியைத் தொட்டுத் தழுவிச் செல்கிற பெருனையோடு, சபர்மதி நதி ஆசிரமத்தின் அஸ்திவாரத்தை ஈரம் பண்ணிக்கொண்டு ஓடுகிறது. .
--ஆனந்தவிகடன். ( 06-08-2008 ).

Saturday, November 22, 2008

தாமஸ் ஆல்வா எடிசன் !

அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ,1877-ம் ஆண்டு நவம்பர் 21 -ல் தனது கிராமபோன் கண்டுபிடிப்பை முறைப்படி அறிவித்தார்.
அமெரிக்காவில் 1847-ம் ஆண்டு பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன், நவீன உலகுக்கு தந்த கொடைகள் ஏராளம்.
எடிசன் கண்டுபிடிப்புகளுக்கு மூல காரணமாக இருந்தது சிறு வயதில் அவர் பார்த்த டெலிகிராப் ஆபரேட்டர்வேலைதான். இதுதான் அவரை பல கண்டுபிடிப்புகளுக்கு உந்தித்தள்ளியது. புதுப்புது ஆராய்ச்சிகளுக்காக நியூஜெர்சி நகரில் அவர் பிரத்யேகமான ஆய்வுக் கூடத்தை அமைத்திருந்தார்.
தந்தி தொழில் ட்பம் மூலம் ஒலியை பதிவு செய்து பிறகு அதே ஒலியை மறு ஒலிபரப்பு செய்யும் ஆராய்ச்சியை அவர் 1870 களில் செய்து வந்தார்.தகர இழைகள் சுற்றப்பட்ட உருளையைக் கொண்டு ஒலியை பதிவு செய்ய முயற்சித்தார்.
1877-ம் ஆண்டு ஆய்வுக் கூடத்தில் தனது தொழிலாளி குரேசி என்பவரை உருளையை சுற்றச் சொல்லிவிட்டு, எடிசன் ஒரு பாடல் பாடினார் . சிறிது நேரம் கழித்து கருவியை இயக்கிய போது அதே பாடல் ஒலிபரப்பானது. இதைப் பார்த்த எடிசனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
இது குறித்து பின்னாளில் அவர் கூறும்போது,'புது கண்டுபிடிப்பு ஒன்று வெற்றியடையும் போது எனக்கு உடனடியாக ஏற்படுவது பயம்தான்' என்றார்.எடிசனின் ஒலிப்பதிவு கருவியைப் பார்த்து நியூஜெர்சி நகரமே அதிசயித்தது.
மற்ற கருவிகள் கண்டுபிடிப்பினால் கிடைத்தது போன்று கிராமபோன் கண்டுபிடிப்பில் எடிசனுக்கு பணம் கிடைக்கவில்லை. எனினும், இசை உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கிராமபோன் கண்டுபிடித்தவர் என்ற அழியாப் புகழுக்கு எடிசன் சொந்தக்காரரானார்.
--தினமலர் ( 21-11-2008 ). .

Friday, November 21, 2008

'விரல்கள்' சாதனை !

மேகாலயாவைச் சேர்ந்த தமிகி பஸாவுக்கு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்ததும், அதிக விரல்கள் கொண்ட 3 நபர்கள் உள்ள நாடு என்று இந்தியாவுக்கு ஒரு தனிச்சிறப்பு கிடைத்துவிடும்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில், கை-கால்களில் அதிக விரல்கள் கொண்ட நபர்கள் என்று 2 இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.இந்நிலையில் '25 விரல்' நபரான தமிகி பஸாவும் கின்னஸ் அங்கீகரிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.இவர் ஜெயின்ஷியா மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.கைகளில் 13 விரல்கள், கால்களில் 12 விரல்கள் இருந்ததால், 'ஜெயிக்க முடியாத அதிசயப்பிறவி'என்ற அர்த்தம் கொண்ட பினார் மொழி வார்த்தையான 'தமிகி' என்ற பெயரை பெற்றோர் சூட்டினர்.
"இந்த விரல்கள் தானே கேவலம் என்று, இந்த விரல்களைப் பார்த்துப்பார்த்து ஆத்திரப்படுவேன், கின்னஸ் விஷயம் தெரிந்தபிறகு, இந்த விரல்கள் மீது புது பாசம் வந்திருக்கிறது" என்று கை விரல்களுக்கு முத்தம் கொடுத்தபடியே தெரிவித்தார் தமிகி !.
--தினமலர். 15-11-2008.

Thursday, November 20, 2008

நிலவில் மனிதன் .II ம் முறை.

நிலவில் மனிதன் .II ம் முறை.
நிலவில் மனிதன் இரண்டாவது முறை தரையிறங்கிய சாதனை நாள் :நவம்பர் 19.
நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆஸ்டிரினும் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்கள் என்ற சரித்திர சாதனையை 1969 ஜூலை 21-ல் படைத்தனர்.அவர்கள் அமெரிகாவின் அப்பல்லோ -11 விண்கலத்தில் சென்றனர்.
இந்த சாதனையை 'ஒன்ஸ்மோர்' செய்ய, சார்லஸ் கன்ராட், ஆலன் பீன், ரிச்சர்ட் கோர்டன் என் 3 வீரர்களுடன் அப்பல்லோ 12 விண்கலத்தை 1969 நவம்பர் 14-ல் அமெரிக்கா ஏவியது.இது நவம்பர் 19 -ல் நிலவை நெருங்க, அதி இருந்து பிரிக்கப்பட்ட ' இன் ட்ரிபெட்' என்ற ஆய்வுக்கலனில் சார்லஸும் ஆலனும் நிலவுக்கு சென்றனர்.இன் ட்ரிபெட்டை ஆலன் இயக்கினார்.மேலே சுற்றிக்கொண்டிருந்த அப்பல்லோ -12 ஐ ரிச்சர்ட் இயக்கினார். நிலவின் 'புயல் கடல்'என்ற பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மிகத்துல்லியமாக இன் ட்ரிபெட் தரையிறக்கப்பட்டது. சார்லசும் ஆலனும் அடுத்தடுத்து நிலவில் இறங்க, அமெரிக்க கொடியை சார்லஸ் நாட்டினார்.
நிலவில் இறங்கியதும், ஆய்வுக்காட்சிகளை பூமிக்கு அனுப்ப கலர் டி.வி., கேமராவை சூரியனை நோக்கி திருப்பியதால்
அதன் லென்ஸ் பாதிக்கப்பட்டு இயங்காமல் போனது.
இன் ட்ரி பெட்டில் இருந்து நிலவில் இறங்கும் ஏணி நீளம் குறைவாக இருந்தது.இதனால், கடைசி படியில் இருந்து சார்லஸ் துள்ளிக்குதித்து நிலவில் கால்பதித்தார். அப்போது, "ஆர்ம்ஸ்ற்றாங் நிலவில் கால்பதித்தபோது, அதை அவர் எடுத்து வைக்கும் சிறிய அடி என்று சொன்னார்...ஆனால், எனக்கு இது பெரிய அடி ( துள்ளிக்குதிப்பு ) " என்று 'ஜோக்' அடித்தார்.
--தினமலர். ( 19-11-2008 ).

தாய் !

"பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி" வெளியிட்டு இருந்த கல்லூரி மலர் ஒன்றில் வெளியான கவிதை:
"மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துப்
போகவேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !"
--ஆனந்தவிகடன். ( 19-11-2008 ).

Wednesday, November 19, 2008

முண்டாசு கவிஞனின் கடைசி போச்சு...

இந்திய சுதந்திரத்துக்கு தன் பாடல்களால் வேகம் ஊட்டிய முண்டாசு கவிஞன் பாரதியின் பேச்சுகளும் . உணர்ச்சிமிக்கதாய் இருக்கும் . தனது அழியாத பாடல்களால் தமிழ் மக்கள் மனதில் ,கி
மட்டுமல்லாமல் , இந்திய அளவில் தேசியக் கவிஞர் பெயருடன் இன்று வரை வாழ்ந்து வருகிறார் பாரதியார் . சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் , பல பொதுக் கூட்டங்களில் பேசிய
பாரதி , அந்த வகையில் கடந்த 1921 , ஆகஸ்டில் ஈரோட்டுக்கு வந்தார் . கருங்கல்பாளையம் நூலகத்தில் ' மனிதனுக்கு மரணமில்லை ' என்ற தலைப்பில் பாரதியார் உணர்ச்சிமிகு உரையாற்றினார் . அதன் பிறகு சென்னை சென்ற அவர் , அதற்கு அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 11- ல் மரணம் அடைந்தார் .ஈரோட்டில் இருந்து சென்னை சென்ற பாரதி , பின்னர் எந்தக் கூட்டத்திலும் உரையாற்றவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது . ஈரோட்டில் அவர் ஆற்றிய எழுச்சிமிகு உரையே இறுதியாக அமைந்ததால் , அவரது நினைவாக கருங்கல்பாளையம் நூலகத்துக்கு ' மகாகவி பாரதியார் நூலகம் ' என்று பெயரிட்டு , பாரதியாரை பெருமைப்படுத்தி வருகின்றனர் ஈரோடு மாவட்ட மக்கள் .
--தினமலர் . ( 01-12-2008 ).

Tuesday, November 18, 2008

'எல்லாம் மாயை தானா ?'

'எல்லாம் மாயை தானா ?'
எல்லாமே மாயை என்கிறார்கள் ஞானிகள் . அது சத்தியமான வார்த்தை . உதாரணமாக , ' நில் ' என்கிறோம் . உடனே நிற்கிறீர்கள் அல்லவா ? இதுவே மாயைதான் .காரணம் எதுவுமே நிற்பதில்லை . பூமி ஒரு நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் நகருகிறது . அல்லது சுழல்கிறது . அதாவது மணிக்கு 1,000 மைல்கள் வேகம் . பூமி சூரியனைச் சுற்றி வருகிறது . ஒரு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் . மொத்தமாக நம் சூரிய மண்டலம் பால்வீதியை ( Milky Way Galaxy ) வினாடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது . பால்வீதியும் வினாடிக்கு 1,000 கி.மீ.வேகத்தில் Great Attractor என்கிற
அகண்ட கண்டத்தில் 15 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள , ஒரு பகுதியை நோக்கி விரைந்துகொண்டு இருக்கிறது . மொத்தத்தையும் கூட்டினால் நீங்கள் வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான கி.மீ. வேகத்தில் ( எப்போதும் )நின்றபடி போய்க்கொண்டு இருக்கிறீர்கள் . பூமி என்பதே அந்தரத்தில் இருப்பதால் பறந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதே சரியானது . இப்போது சொல்லுங்கள் . ' நில் ' என்பது மாயைதானே ?
--ஹாய் மதன். ஆனந்தவிகடன் . (03-12-2008 ).

Monday, November 17, 2008

தேட வேண்டாம் !

தேட வேண்டாம் !
ராஸ்வான் நெஸ் என்பவர் ஓர் அமெரிக்கப் பேராசிரியர் . இவர், ' அமெரிக்கர்கள் வாரத்தில் மூன்று மணி நேரத்தை எதையேனும் தேடுவதிலேயே தொலைக்கிறார்கள் ' என்கிறார் .
திட்டமிட்டுச் செயல்படும் அமெரிக்கர்களுக்கே இந்தக் கதி . தேடுவதில் வீணடிக்கும் நேரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றால் அதற்குச் சில வழிகள் உண்டு .
மனிதர்கள் இந்த விஷயத்தில் மூன்று இரகத்தினர் முதலாமவர்கள் குவிப்பவர்கள் . முடிந்துபோன சங்கதிகளைக்கூட கிழிதுப் போடாமல் போற்றி வைத்துக் குப்பை சேர்க்கும் குணத்தவர்கள் .
இரண்டாமவர்கள் அடைப்பவர்கள் . எதை எங்கே வைக்கிறோம் என்கிற வழிமுறையே இல்லாமல் கைக்கு வருபவற்றையெல்லாம் கிடைக்கிற இடத்தில் திணித்துக்கொண்டே இருப்பார்கள் .
அடுத்தவர்கள் , பரப்புவர்கள் . கடை பரப்புவதே இவர்கள் வேலை .
உரிய இடத்தில் உரிய பொருளை வைக்க ஒரு நிமிடம்தான் ஆகும் .இந்த இடத்தில் இன்னது என்று பிரித்து வைத்தால் தேடுவதைத் தவிர்த்து விடலாம் .
--லேனா தமிழ்வாணன் . குமுதம் (03-12-2008 ).

Sunday, November 16, 2008

புதிய கிரகம்.

சூரியகுடும்பத்துக்கு வெளியே முதல்முறையாக ஒரு கிரகத்தை ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.கடந்த 18 ஆண்டுகளாக இந்த ஹப்பிள் என்ற தொலைநோக்கி ஆய்வு செய்துவருகிறது.
சூரியக் குடும்பத்துக்கு வெளியே பாமல்கட் என்ற மற்றொரு சூரியனை பாமல்கட் பி என்ற புதிய கிரகம் சுற்றுவதை ஹப்பிள் படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஜூபிடர் கிரகத்தை விட புதிய கிரகம் 3 மடங்கு பெரியது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சதர்ன் பிஷ் என்ற பகுதியில் இருந்து 25 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கிரகம் அமைந்துள்ளது.சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள மற்றொரு சூரியனை வேறொரு கிரகம் சுற்றி வருவது இப்போது நிரூபணமாகியுள்ளது. பாமல்கட் சூரியனில் இருந்து இப்போது தெரிய வந்துள்ள 'பாமல்கட் பி' கிரகம் 2 ஆயிரத்து 150 கோடி மைல் தொலைவில் அமைந்திருகிறது.பாமல்கட் குறித்த செய்திகள் கடந்த 28 ஆண்டுகளாக நிலவி வருகிறது.கடந்த 2004-ம் ஆண்டு இந்த பகுதியில் ஒளிச்சிதறல் தெரிவதை ஹப்பிள் படம் பிடித்தது.
தினமலர். 15-11-2008.

Friday, November 14, 2008

அந்த கணம் ..!

ஒரு குரு தன் சிஷ்யர்களிடம் , " ஒரு நாளின் இருள் விலகி வெளிச்சம் பரவும் அந்தக் கணத்தை மிகச் சரியாக நாம் எப்படிக் கண்டுபிடிப்பது ?" என்று கேட்டார். ' இது நாய், இது ஆடு என்று தெளிவாகக் கூறுமளவுக்கு வெளிச்சம் பரவும் போது !', ' ஆல மரத்துக்கும் அரச மரத்துக்குமான வித்தியாசம் தெரியும் சமயம் !' என்பன போன்ற இன்னும் பல விளக்கங்கள் . 'இவை எதுவுமே இல்லை !' என்ற குருவிடம், , சரியான பதிலைக் கேட்டனர் மாணவர்கள். " நமக்கு அறிமுகமே இல்லாதவர் நம்மைத் தேடி வந்தாலும் , நம் சகோதரர் என நினைத்து வரவேற்று உபசரிக்கும் அளவிலான இருள் விலகி ஒளி பரவும் கணம் !" என்றார் குரு. எனவேதான் , அவர் குரு. !
அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற ஷிமொன் பெரெஸ் சொன்ன குட்டிக் கதை.
--ஆனந்தவிகடன். ( 06-08-2008 ).

Thursday, November 13, 2008

'இருபது டாலர் '

பேராசிரியர் பாடத்தைத் துவக்கும் முன் ஓர் இருபது டாலர் நோட்டினை மாணவர்களிடம் காட்டினார். " யாருக்கு இந்த நோட்டு வேண்டும்? "அனைவரின் கைகளும் உயர்ந்தன. அந்த நோட்டை சிறு பந்தாகக் கசக்கிச் சுருட்டியவர், "இப்போது யாருக்கு வேண்டும்?" என்றார். மீண்டும் எல்லா கைகளும் உயர்ந்தன."இப்போதும் வேண்டுமா பாருங்கள் !" என்றவர் அந்த நோட்டை பிளாக்போர்டில் தேய்த்து தரையில் புரட்டி அழுக்காக்கினார். அப்போதும் எல்லோரும் ஹேண்ட்ஸ் அப் ! "இதை எப்போதும் மறக்காதீர்கள். இந்த இருபது டாலர் நோட்டினை நான் என்ன பாடுபடுத்தினாலும் அதன் மதிப்பு 'இருபது டாலர் ' என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்.இது தான் வாழ்க்கை. நாம் எத்தனை அவமதிப்புகள், விரக்திகள், வேதனைகள், சோகங்கள், சதிகளை எதிர்கொண்டாலும் நமக்கான மதிப்பு குறையாது. நாம் எப்போதும் நாம்தான் !"
--கி. கார்த்திகேயன். ஆனந்தவிகடன். ( 06-08-2008 ).

Wednesday, November 12, 2008

குங்-ஃபூ-ஸு !

சீன அறிஞர் கன்ஃப்பூசியஸின் பெயர் குங்-ஃபூ-ஸு. ஆங்கிலேயர்கள் அதை கன்ஃப்யூசியஸ் என்று கன்ஃப்யூஸ் செய்து விட்டார்கள்.கி.மு. 551-ல் பிறந்ததாகச் சொல்லப்படும் இவர் பற்றி எந்தத் தகவலும் கிடையாது.அவர் கருத்துக்கள் மட்டுமே மிச்சம். அவரது சீடர்கள் எல்லாம் பல ராஜ்யங்களில் பெரும் பதவிகல் வகித்தாலும், குங்-ஃபூ-ஸூக்கு மட்டும் எந்த மன்னரிடமும் வேலை கிடைக்கவில்லை என்று கேள்வி !.
-- ஹாய் மதன். ஆனந்தவிகடன் . ( 06-08-2008 ).

வாழைப் பழம் !

தெய்வங்களுக்கு படையல் அல்லது நெய்வேத்தியம் செய்யும் போது ,நாம் பெரும்பாலும் வாழைப் பழங்களில், பூவன் வாழைப் பழ்த்தையே வைத்து செய்கிறோம்.அதைப் போல நாம் செய்யக் கூடாது. பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களுக்குத த்னித் தனியே பழங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துத் தான் நாம் படையல் அல்லது நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.பிரும்மா_பூவன் வாழைப் பழம். (பூவன்-பூவின் மேல் இருப்பவன். )விஷ்ணு _முகுந்தன் வாழைப் பழ்ம். (விஷ்ணுவிற்கு ,முகுந்தன் என்ற பெயரும் உண்டல்லவா, அதனால் மொந்தம் பழம் என்று பழக்கத்திலுள்ள முகுந்தன் வாழைப் பழ்ம் ).சிவன் _பேயன் வாழைப் பழம் ( பேயன் என்று சிவனுக்கு வேறு பெயர் உண்டு. ஆகவே சிவனுக்கு உகந்தது பேயன் வாழைப் பழம்.). _காலஞ்சென்ற என் தாய் மாமன். வித்வான்.பொன்.முருகையன்.சொல்லக்கேட்டது.அவருக்கு இன்று 16-ஆம் நாள் காரியம்.

Tuesday, November 11, 2008

'ஹேண்ட்பால்'

ஹேண்ட்பாலின் வரலாறு சுவாரஸ்யமானது.ஜெர்மனி உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் உருவாக்கிய விளையாட்டு இது. 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டைச் சேர்க்கவேண்டும் என்ற போது, "வேண்டாம்" என்று ஒரே வார்த்தையில் மறுத்திருக்கிறார் சர்வாதிகாரி ஹிட்லர். 'ஒரே ஒரு முறை இந்த விளையாட்டை நேரில் பாருங்கள்' என்று கெஞ்சிக்கூத்தாடி, அவரை பார்க்க வைத்திருகிறார்கள் அதிகாரிகள்.ஹேண்பாலின் வேகத்தைப்பார்த்த தும் அசந்து போன ஹிட்லர், 'இந்த விளையாட்டு உடல் திறன் அதிகரிக்கும். உடனே ஒலிம்பிக்கில் சேருங்கள் !' என்று அனுமதி கொடுத்துள்ளார். அதோடு, தனது ராணுவத்தினர் ஓய்வு நேரங்களில் விளையாடுவதற்காக ஹேண்ட்பாலைக் கற்றுக்கொடுக்கவும் உத்தரவு இட்டு இருக்கிறார்.ஹிட்லரையே ஈர்த்ததால்,'அப்படி என்னதான் இருக்கிறது இந்த விளையாட்டில் ?' என்ற ஆர்வம் கிளம்பி , பல ஐரோப்பிய நாடுகளில் பரவியது ஹேண்ட்பால். இந்தியாவில் 1970 வாக்கிலேயே ஹேண்பால் அறிமுகமானாலும் 2003 வரை இப்படி ஒரு விளையாட்டு இருப்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. பின்னர், பல்கலைக் கழக மாணவரிடையே ஹேண்ட்பால் பரவிபோட்டிகள் நடக்க ஆரம்பித்தன.
பெரும்பாலும் பன்னிரண்டாவது வயதில்தான் எலும்புகள் வலுவடையும். அந்த வயதிலேயே ஹேண்ட்பால் கற்றுக்கொள்ளத் துவங்கினால் நிச்சயம் எதிர்காலத்தில் சிறந்த பிளேயராக உருவாகலாம்.
--ஆனந்தவிகடன். ( 26-11-2008 ).

Monday, November 10, 2008

ஆட்டிஸம் நோய் !

"மூளை வளர்ச்சி குறைந்து இயல்பான செயல்திறன் பாதிப்புடன் பிறப்பதுதான் ஆட்டிஸம் நோய். நார்மலான குழந்தையின் இயல்பான விஷயங்களைக்கூட ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஆட்டிஸம் குழந்தையாகப் பிறந்தவர்தான். பில்கேட்ஸுக்குகூட ஆட்டிஸத்திற்கான அறிகுறிகள் இருக்கின்றன.அவர்கள் அதைக் கடந்து வந்து சாதித்ததைப்போல மற்றவர்களையும் கொண்டுவரவேண்டும்.
--ஆனந்தவிகடன். 26-11-2008.

Sunday, November 9, 2008

தேனீயின் குணம் !

தூய்மையின் இருப்பிடம் தேனீதான். தேன் கூட்டில் ஒரு தேனீக்கு நோய் வந்து விட்டால் அது தானாகவே வெளியேறி இறந்து விடுமாம். அப்படிப் போகாவிட்டால் மற்ற தேனீக்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு அதைக் கொன்று விடுமாம்.

தூங்கும் வரிசை !

ஒரே சமயத்தில் எல்லா உருப்புகளும் தூங்கத் தொடங்குவது இல்லை. முதலில் கண்கள், பிறகு வசனையை அறியும் உருப்புக்கள்,பின்பு சுவை மொட்டுக்கள், காது,கடைசியில் தோல். இந்த வரிசையில் தூங்கத் தொடங்குகின்றன. எழும் போது இது தலைகீழ் பாடமாக முதலில் தோல் தன் வேலையைத் தொடங்குகிறது.கண் கடைசியில் விழிக்கிறது.
-கல்கி . (25-11-1984 ).

Saturday, November 8, 2008

செய்தித் துளிகள் !

தொடக்கத்தில் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலிவ் தழைகளால் ஆன கிரீடம் சூட்டப்பட்டது.
மூங்கில் விரைவாக வளரக் கூடியது.இளம் மூங்கில் நாள் ஒன்றிற்கு ஒன்பது அங்குலம் வரை வளரும்.
உலகில் 26 நாடுகளுக்குக் கடற்கரையே கிடையாது.
உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள விமானதளம் இந்தியாவிலுள்ள லடாக் விமானதளம்.
கிரிக்கெட் கிரவுண்டில் 'ஸ்டம்ப்'ஸ் பூமியிலிருந்து 27 அங்குல தூரம் வெளியில் தெரிய வேண்டும்.
பூமியில் ஏற்படும் சுழற்காற்றுக்கு 'டார்னடோ' என்றும், கடலில் உருவாகும் சுழற்காற்றுக்கு 'வாட்டர் ஸ்பெளட்' என்றும் பெயர்.
மனிதனை நினைக்கவோ ,பேசவோ, பார்க்கவோ ஞாபகம் வைத்துக் கொள்ளவோ செய்யும் மூளையின் பாகத்தின் பெயர் 'செரிப்ரம்' இந்த பாகம் மிருக மூளையில் கிடையாது.
எஃகு 70%, குரோமியம் 20 %, நிக்கல் 10% சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுவது எவர்சில்வர் எனப்படும் 'ஸ்டெயின்லெஸ்' ஸ்டீல்.
மனித மூளையின் எடை மூன்று பவுண்டு.,

Friday, November 7, 2008

அது என்ன பதினான்கு?

அது என்ன பதினான்கு?
கைகேயி இராமனை 14 ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பினாள். அது என்ன கணக்கு பதினான்கு?
அந்தக் காலத்தில் திருமண வயது ஆண்களுக்குப் பதினாறு என்றும், பெண்களுக்கு பன்னிரண்டு என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகியின் திருமணத்தின் போது அவள் 'ஈராறு ஆண்டு அவகையினள்' என்றும், கோவலன் 'ஈரெட்டு வயதினன்' என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு வயதுகளின் சராசரி பதினான்கு. அதாவது, 14 ஆண்டுகளில் அடுத்த தலைமுறை உருவாகிவிடுகிறது. எனவே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து வரும் போது கோசலத்தில் இராமனை அறியாத, பரதனை மட்டுமே அறிந்த ஒரு புதிய தலைமுறை உருவாகி விடும்.இந்தத் தீய எண்ணத்து டன் தான் கைகேயி இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பும் படி தசரதனிடம் வரம் வேண்டினாள்.
-கல்கி ( 25-11-1984 ).

Thursday, November 6, 2008

செய்தி !

"தம்பி,பார்த்தாயா,நான் பதவிக்கு வரவேண்டும் என்று பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் -தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள் எல்லாம் ,என் வீட்டிற்குள் , எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். -இதுதான் அரசியல்".
-(1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மாலை போட வந்த , கவிஞர். நா. காமராசனிடம் எம்.ஜி ஆர் . சொன்னது.

Wednesday, November 5, 2008

இந்திரன் !

இந்திரன் !
'இந்திரன் என்ற சொல்லுக்குப் பொருள் 'தலைவன்' என்பதே.தேவர்களுக்குத் தலைவன் தேவேந்திரன். அசுரர்கலுக்குத் தலைவன் அசுரேந்திரன், மனிதர் தலைவன் நரேந்திரன், மிருகங்களுக்குத் தலைவன் மிருகேந்திரன், அரசர்களுக்குத் தலைவன் ராஜேந்திரன். '

Tuesday, November 4, 2008

கவிதை

'உன் திருப் பேரைக் கெடுக்க
தென் திருப்பேரை சென்றவன் (கோவிலில் திருட்டு )
கோட்டையை மட்டுமா விட்டான் ?-அருப்புக்
கோட்டையுமல்லவா விட்டான் !
-புலமைப்பித்தன்.
'மத்திய அரசை' மைய அரசு என்று அழைப்பதற்கு, உள்ள காரணம் எனக்கு இப்போது தான் புரிகிறது. மையம் என்பதற்கு நெல்லைத் தமிழில் 'பிணம்' என்றொரு அர்த்தமும் உண்டு.
-வலம்புரி ஜான். அக்டோபர் 18. வ. உ.சிதம்பரனார் மாவட்டத் திறப்பு விழாவில் பேசியது.

Monday, November 3, 2008

சலூன் சம்பாஷணை:

சலூன் சம்பாஷணை:
தலையைக் கொடுத்துவிட்டு ,
"முடியை மட்டும் குறை" என்றேன் ,
"அதைத் தவிர வேறு என்ன இருக்கிறது அதில் !" என்றார் அந்த சலூங்காரர்.
பேருந்து:
வீட்டையும் -அலுவலகத்தையும்
சமயத்தில் .....
யமலோகத்தையும்
இணைக்கும் வாகனம்.!
மரணம்:
எந்த வி.ஐ. பி.யையும்
அப்பாயின்மெண்ட் பெறாமல்
சந்திக்கும் சக்தியுடையது.!

Sunday, November 2, 2008

கவிதை

"பனை' ஓலையில் பாட்டு எழுதியவனுக்கு
'நுங்கம்' பாக்கத்தில் கோட்டம் அமைத்தவனே ! "
-மு.க. பற்றி அப்துல் காதர்.
'நம் நாட்டின் பெயரை உச்சரித்துப் பாருங்கள் அதுவே இந்தியை விரும்பாது 'இந்தியா' என்று முகம் சுளிக்கிற மாதிரிதான் கேட்கும்.
-அப்துல் காதர்.
'இப்போதெல்லாம் லஞ்சம் மறைமுகமாக நடப்பதில்லை. அலுவலகக் கதவுகளிலேயே 'தள்ளு' என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் எதுவும் நடப்பதில்லை.
-அப்துல் காதர்.

Saturday, November 1, 2008

கவிதை !

புலவரே, 'பத்துப் பாட்டு ' பாடு என்றேன்-
தொகை வேண்டுமென்றார்
'எட்டுத் தொகை' போதுமா எனக் கேட்க,
இல்லை. அது எனக்கு ' குறுந்தொகை' என்றார்.
ஓகோ 'ஐங்குறு நூறு' வேண்டுமோ என்றேன்.
நானூறு தருவீரோ என்றார்
அதுவும்
அக(த்தில்) நானூறு (காசோலை )
புற (த்தில் ) நானூறு (கருப்பு )
-மு.க. 1-10-1986.

உப்பில்லாப் பண்டம் !

"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" -என்பதற்கு என்ன பொருள்? உப்பு- சுவை என்று தான் பொருள். சுவையில்லாததை மனிதன் உண்ணமாட்டான், தூக்கி எரிந்து விடுவான்.
உணவு அறுசுவையுடையது. இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, கரிப்பு அல்லது உவர்ப்பு ( காரம் உள்ள ) கார்ப்பு எல்லாவற்றிலும் கடைசியில் 'உப்பு' இருப்பதை கவனித்தால், உப்பு என்பதற்குச் சுவை என்ற பொதுப் பொருளே முன்பு இருந்தமை புலப்படும். உவர்ப்பு ஒன்றை மட்டுமே இன்று உப்பு என்பது அதன் சுவை மிகுதி கருதி வந்து விட்டது.
-தமிழண்ணல். ' இனிக்கும் இலக்கியம்'.