Thursday, December 31, 2009

சாயிபாபா

சாயிபாபா பெயர் வந்த விதம் .
ஷீர்டியில் உள்ள கண்டோபா ஆலயம் மிகவும் புராதனமானது . ஷீர்டி மக்களுக்குக் குலதெய்வம் மாதிரி . அங்கே மஹல்சாபதி என்கிற பிராமண குருக்கள் அன்றாட வழிபாட்டு பூஜைகளை செய்து வந்தார் . அங்கு பாபாவுக்கு ( விசித்திர மனிதர் ) புதிதாக அறிமுகம் ஆன , பாட்டீல் மனைவியின் அகோதரர் பையனுக்கு திருமணம் . திருமண கோஷ்டியுடன் அந்த விசித்திர மனிதரும் வந்தார் . திருமண கோஷ்டியினர் ஷீர்டி வந்ததும் கண்டோபா கோயிலுக்கே முதலில் சென்றனர் . அங்கு இருந்த மரத்தடியில் இளைப்பாறுவதற்காக அவர்கள் ஒவ்வொருவராக வண்டியில் இருந்து இறங்கி வந்தனர் .
அந்த விசித்திர மனிதரும் ( பாபா ) கண்டோபா ஆலயத்திற்குள் கால் வைத்தார் . அவரை நேரில் பார்த்த மஹல்சாபதிக்குத் தாங்க முடியாத ஆச்சர்யம் . அந்த விசித்திர மனிதரை ' யா சாயீ '
( சாயி நீங்கள் வர வேண்டும் ) என்று உற்சாகமாக இரு கைகளையும் நீட்டியபடியே வரவேற்றார் . அந்த நிமிடத்தில் இருந்து அந்த விசித்திர மனிதர் சாயிபாபா என்று அழைக்கப்பட்டார் . திருமண கோஷ்டியினர் திருமணம் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பினர் . சாயிபாபா மட்டும் ஷீர்டியிலேயே தங்கத் தொடங்கினார் . அவரை ' சாயி ' என்று பெயர் கூறி வரவேற்ற மஹல்சாபதி சாயிபாபாவின் மிக முக்கியமான முதல் அடியவர் ஆனார் . சாயிபாபா இறுதி நாள்களில் முக்தி அடைந்தபோது மஹல்சாபதியின் மடியிலேயே தலை வைத்துப் படுத்து சமாதி நிலையில் இருந்தார் ..
.--- எஸ் . லெக்ஷ்மி நரசிம்மன் , இலக்கியப்பீடம் . ஆகஸ்ட் 2009 .

Wednesday, December 30, 2009

ஹைக்கூ .

* யார் யார் வேண்டுதலுக்கோ கோவில் முன்பு தீக்குளிக்கிறது , ' கற்பூரம் '.
* தவறான வழியில் குழந்தை பிறந்தது , சிசேரியன் .
* ஊர் சுற்றுவது நான் தண்டனை என் செருப்புக்கு , வீட்டுக்கு வெளியே
* விலை குறைத்தே விற்றிருக்கலாம் மிஞ்சிப் போய் வீணாய்ப் போனதும் தோன்றியது , பூ வியாபாரிக்கு .
* கருவறையே கல்லறையாகும் விந்தை , கருத்தடை மாத்திரை .
* மனதை அடக்கினால் தியானம் . மனம்போல் ஆடினால் மயானம் .
* உன்னுள் இருக்கும் என்னைப் பிரித்து , உரசி , சண்டை மூட்டி அதில்... பசி ஆறுகிறான் மனிதன் தீப்பெடியில் தீக்குச்சி !
* ' நேரம் ' சரியில்லை என்று அலுத்துக் கொண்டார் கடிகார வியாபாரி !
* பட்டியலில் இல்லா உலக அதிசயம் - விதைக்குள் உறங்கும் மரம் .
* சுவர் இருந்தும் சித்திரம் வரைய முடியவில்லை எய்ட்ஸ் நோயாளி .
* உன் கூந்தல் அருவி என்பதால்தான் ' கொட்டு ' கிறதோ தலைமுடி ?
* எவ்வளவு உழைத்தும் வியர்வை வரவில்லை மின்விசிறிக்கு .
* மருத்துவர் பிரசவம் பார்த்தார் மணிபர்ஸ் .
--- பாக்யா , ஜூலை 31 - ஆக்ஸ்டு 6 .-- ஆகஸ்டு 14 - 20 ; 2009 .-- செப்ட 18 - 24 ; 2009 .

Tuesday, December 29, 2009

முத்துக்குவியல் .

பஞ்சகன்னியர்..... அகலிகை , சீதை , தாரை , திரெளபதி , மண்டோதரி .
பஞ்சசீலம்.............கொல்லாமை , கல்லாமை , இரவாமை , காமமின்மை , பொய்யாமை .
பஞ்சபட்சி..............வல்லூறு , ஆந்தை , காகம் , கோழி , மயில் .
பஞ்சபுரானம் ........தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , பெரியபுராணம் , திருப்பல்லாண்டு .
பஞ்சரத்தினம் ......வைரம் , முத்து , நீலம் , மரகதம் , மாணிக்கம் .
பஞ்சவர்ணம்........வெண்மை , கருமை , பசுமை , செம்மை , பொன்மை .
பஞ்சாங்கம்...........கரணம் , திதி , நட்சத்திரம் , யோகம் , வாரம் .
பஞ்சநாதம் ..........சங்கு , சக்கரம் , கத்தி , வில் , கதை .
பஞ்சதேவர்..........விஷ்ணு , பிரம்மா , உருத்திரன் , மகேசுவரன் , சதாசிவன் .
பஞ்சசிகை........... தலை , உச்சி , கண் , புருவம் , முழங்கை .
பஞ்சபரமோட்டி...அருகர் , சித்தர் , ஆசிரியர் , குருக்கள் , உபாத்தியாயர் .
பஞ்சமேளம் ........சங்கு , தவில் , ஜாலர் , பம்பை , மத்தளம் .
பஞ்சபாண்டவர்...தருமன் , பீமன் , அர்ச்சுனன் , நகுலன் , சகாதேவன் .
பஞ்சமூலம்.........செவ்வியம் , சித்திமூலம் , பேரரத்தை , சுக்கு , கண்டுபாரங்கி .
--தொகுப்பு : எஸ் . ராஜேந்திரன் , அருட்செல்வர் சேக்கிழார் , ஆகஸ்ட் 2009 .

Monday, December 28, 2009

ஸ்டாம்பு .

சிலர் தபால் ஸ்டாம்புகளை நாக்கினால் நக்கி ஒட்டுகிறார்களே , இது ஆசாரக் குற்றம் . பழைய பூட்ஸ்கள் , செருப்புகளையெல்லாம் நெருப்பில் போட்டு , அதிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவிதப் பசையே ஸ்டாம்பின் பின்புறத்தில் தடவப்பட்டிருக்கிறது , நாக்கில் தடவி ஒட்டுபவர்கள் , இந்த விஷயத்தைக் கவனிப்பார்களாக !
--- காலப் பெட்டகம் . 1930 , ஆனந்தவிகடன் .

Sunday, December 27, 2009

சிரிப்பு !

* " பசங்களா , நீங்க எல்லாம் நல்லா படிச்சு , நாட்டுக்கு நல்ல பேரு வாங்கித் தரணும் ! "
" ஏன் , ' இந்தியா' ங்கிற பேர் நல்லா இல்லையா டீச்சர் ?"
* போலீஸ்காரர் : ஏம்பா ! நீ அந்த சிவப்பு விளக்கைக் கவனிக்கலையோ ?
சைக்கிள்காரர் : கவனிச்சேனுங்க... ஆனா உங்களைத்தான் கவனிக்கலே !
* " தம்பி... காதலிக்காக அடகு வச்ச மோதிரம் மூழ்கிப் போயிடுச்சேன்னு கவலையா இருக்கியாப்பா ? "
" அதில்லங்க... காதலி முழுகாம இருக்கான்னுதான் கவலையா இருக்கு ".
* ' வாழ்க்கை ஒரு டூ வீலர்...ஃரன்ட் வீல் கணவன் , பேக் வீல் மனைவி ... ஒரு வீல் பஞ்சரானாலும் வ்ண்டி ஓடாது ... ஸோ , எப்பவும் ஒரு 'ஸ்டெப்னி ' வச்சிக்கிறது நல்லது '
* ( ஒரு பெட்ரோல் பங்கில் எழுத்தப்பட்டிருந்த வாசகம் )
' அவாய்டு கேர்ல் ஃரெண்ட்ஸ் . சேவ் பெட்ரோல் !'

Saturday, December 26, 2009

ஈஷா பள்ளி .

ஈஷா பள்ளியில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் என்னிடம் கேட்டான் , " சத்குரு , வாழ்க்கை என்பது கனவா ? நிஜமா ?"
நான் சொன்னேன் , " இந்த வாழ்க்கை ஒரு கனவுதான் . ஆனால் , இந்தக் கனவு நிஜம் !"
ஜென் கதைகள் .
சாக்கிய முனி கேட்டார் , " ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு ? " முதல் சீடன் சொன்னான் , " 70 வருடங்கள் " இரண்டாவது சீடன் சொன்னான் , " 60 வருடங்கள் ". அடுத்தவன் சொன்னான் ,
" இல்லை. 50 வருடங்கள் ".
" நீங்கள் சொன்ன பதில்கள் எல்லாமே தவறு " என்றார் சாக்கிய முனி . " வாழ்க்கை என்பது ஒரு சுவாச அளவுதான் ".
---சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆனந்தவிகடன் , 19 - 8 - 2009.

Friday, December 25, 2009

தெரிந்து கொள்வோம் !

* கறுப்பு நிறங்கொண்ட பெண் சிலந்தி உடலுறவு கொள்ளும்போதே ஆணைச் சாப்பிட்டுவிட்டு விதவையாகவும் ஆகிவிடுவதால் , அதற்கு Black widow என்று பெயர் .
* ஆமைகள் சாதாரணமாகவே 100 வயதுக்கு மேல் வாழும் என்பதால் நீண்டகால செக்ஸ் வாழ்க்கை ! ஆமைகளுக்கு இரண்டு மூக்குகள் உண்டு . முகத்தில் ஒன்று , மற்றது , மலத்துவாரத்தில் இரண்டு பக்கங்களும் ஆமை மூச்சுவிடும் .
* கோழி போடுகிற ஒவ்வொரு பத்தாவது முட்டையும் , அதற்கு முன்பு போட்ட முட்டைகளை விட , சற்று பெரிதாக மாறுபட்டு வித்தியாசமாக இருக்குமாம் .
* ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள் , ஒரு நிமிடத்துக்கு 60 நொடிகள் என்று நிர்ணயித்தவர்கள் பாபிலோனியர்கள் .
* ஏதென்ஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு தோட்டம் அகடமஸ் என்ற பெயரில் இருந்தது . இங்குதான் பிளேட்டோ போன்ற தத்துவவாதிகள் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்தார்களாம் . நாளடைவில் இத்தோட்டத்தின் பெயராலேயே ' அகாடமி ' என்ற சொல் உருவானது .
* ஆறு கால் கொண்ட உயிரினங்ககளில் மிகவும் வேகமானது கரப்பான் பூச்சி . ஒரு வினாடியில் ஒரு மீட்டர் தூரத்தை அதனால் தாண்ட முடியுமாம் .
* சிங்கம் குட்டிகளாக இருக்கும் போது ஆணும் , பெண்ணும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் . மூன்று வயது ஆன பிறகுதான் ஆண் சிங்கத்திற்கு பிடரி மயிர் முளைக்க ஆரம்பிக்கும் .
* நாய் சந்தோஷத்தில் வாலை ஆட்டும் . கோபத்தில் காதை விரைத்துக் கொள்ளும் . பூனை நேர்மாறாக சந்தோஷத்தில் காதை விரைத்துக் கொள்ளும் , கோபத்தில் வாலை ஆட்டும் . அதனால்தான் தவறான புரிதலில் பூனையும் நாயும் மோதிக் கொள்கின்றன .

Thursday, December 24, 2009

ஞாபகமறதி .

நம் மூளை ஒரு நாளைக்கு 10 லட்சம் தடவைக்கு மேல் , நம் சிந்தனைகளை முறைப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது . இதற்கு நம் மூளையில் உள்ள 100 பில்லியன் நரம்பணுக்கள்தான் உதவுகின்றன . இந்த நரம்பணுக்களின் செயல் குறைந்துகொண்டே போய் அவற்றின் திறமைகளெல்லாம் மழுங்கிக்கொண்டே போகும் . இதைத்தான் ' ஞாபகமறதி ' ( அல்ஸிமர் ) என்கிறார்கள் .
மூளையின் மெமரி சிப்ஸில் கோளாறு ஏற்பட்டால் ஞாபக மறதி வரும் .
--- இரா . மணிகண்டன் , குமுதம் . 19 - 08 - 2009.

Wednesday, December 23, 2009

விகடம் .

ஒருவன் கங்கை ஆற்றில் இறங்கி , ஜலத்தை தன் இரண்டு கைகளாலும் இறைத்துக்கொண்டிருந்தான் . அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த வைதீகர் ஒருவர் இதைக் கண்டு , " அப்பா ! தண்ணீரை ஏன் வீணாய் இறைக்கிறாய் ? " என்றார் .
ஒருவன் : " சென்னையிலுள்ள என் தென்னந்தோப்பு வாடிப் போவதாகக் கேள்விப்பட்டேன் . அதற்காக இக்கங்கை நீரை இறைக்கின்றேன் ."
வைதீகர் : " என்னப்பா ! அடி வண்டல் முட்டாளாக இருக்கிறாயே ! சென்னையிலுள்ள தென்னந்தோப்பிற்கு கங்கையிலிருந்து ஜலம் இறைத்தால் போகுமா ? இந்தச் சொற்ப அறிவுகூட உனக்கு இல்லாமற்போனது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன் ".
ஒருவன் : " ஓய் வைதீகரே ! கொஞ்சம் நிதானமாய் பேசுங்கள் . சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போக வேண்டாம் . சற்று நேரத்திற்கு முன் தாங்கள் நடத்திய காரியம் நினைவிருக்கிறதா ? தர்ப்பணம் செய்வதாகச் சொல்லி நீங்கள் இரண்டு கைகளாலும் அள்ளி அள்ளி இறைத்த கங்கை நீர் , மேக மண்டலம் , சந்திர மண்டலம் , சூரிய மண்டலம் , நஷத்திர மண்டலம் இவைகளையெல்லாம் தாண்டிப் பல கோடி மைலகளுக்குப்பாலுள்ள மோக்ஷலோகத்தில் வசிக்கும் பிதுர்களுகுப் போய் சேர்கின்றபோது சில நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள சென்னைக்கு ஏன் கங்கை நீர் சேரக்கூடாது ? "
-- காலப் பெட்டகம் . 1929 . ஆனந்தவிகடன் .

Tuesday, December 22, 2009

தமாஷ் !

ஒரு வெள்ளைக்காரனிடம் பரிசாரகன் வேலை பார்த்திருந்த மந்தோனியின் நாய் இறந்துபோனதற்கு அவன் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தான் .
நண்பன் : நாய் இறந்துபோனதைக் குறித்தா இவ்வளவு விசனப்படுகிறாய் ?
மந்தோனி : அது இறந்ததைப் பற்றி விசனிக்கவில்லை . இப்போது ஒரு வேலை அதிகமாயிற்றே என்பதற்காகத்தான் விசனப்படுகிறேன் .
நண்பன் : என்ன வேலை அதிகமாய்விட்டது ?
மந்தோனி : துரை சாப்பிட்ட பின் , பிளேட்களை அந்த நாய் சுத்தமாக நக்கி வைத்துவிடும் . இப்போது அவைகளையெல்லாம் கழுவித் துலக்கவேண்டிய வேலை ஒன்று எனக்கு அதிகமாயிற்றே !
--- காலப்பெட்டகம் , ஆனந்தவிகடன் 1929 .

Monday, December 21, 2009

ஆகஸ்ட் மாதம் ..

ஆகஸ்ட் 14 , 1911 ' வாழ்க வளமுடன் ' வேதாத்திரி மகரிஷி பிறப்பு .
ஆகஸ்ட் 15 , 1972 அஞ்சல் குறியீட்டு எண் முறை அமல் செய்யப்பட்டது .
ஆகஸ்ட் 15 , 1769 மாவீரன் நெப்போலியன் பிறப்பு .
ஆகஸ்ட் 15 , 1975 சென்னை தொலைக்காட்சி நிலையம் திறப்பு .
ஆகஸ்ட் 15 , 1872 சுதந்திரப்போராட்ட தியாகியும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீ அரவிந்தர் பிறப்பு .
ஆகஸ்ட் 16 , 1886 மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு .
ஆகஸ்ட் 16 , 1962 பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமானது .
ஆகஸ்ட் 18 , 1900 விஜயலட்சுமி பண்டிட் பிறப்பு .
ஆகஸ்ட் 19 , 1887 தியாகி தீரர் சத்தியமூர்த்தி பிறப்பு .
ஆகஸ்ட் 21 , 1610 டெலக்ஸ்கோப் கருவியை கலிலியோ உருவாக்கினார் .
ஆகஸ்ட் 21 , 1907 சுதந்திரப் போராட்ட வீரர் ஜீவானந்தம் பிறந்தார் .
ஆகஸ்ட் 22 , 1864 செஞ்சிலுவைச் சங்கம் தோற்றம் .
ஆகஸ்ட் 24 , 1972 நாமக்கல் கவிஞா . வெ. ராமலிங்கம் காலமானார் .
ஆகஸ்ட் 25 , 1819 நீராவி இஞ்சினைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட் மறைவு .
ஆகஸ்ட் 25 , 1867 அறிவியல் அறிஞர் மைக்கேல் பாரடே மறைவு ..
ஆகஸ்ட் 26 , 1883 திரு. வி. க . பிறப்பு .
ஆகஸ்ட் 27 , 1910 சமூக சேவகி அன்னை தெரசா பிறப்பு
29 , 1958 , இணையற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் பிறப்பு .
30 , கி. மு 30 எகிப்து ராணி கிளியோபாட்ரா தற்கொலை செய்த தினம் .
30 , 1569 அக்பரின் மகன் ஜஹாங்கீர் பிறந்தார் .
30 , 1957 கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன் மறைவு .
31 , 1870 புதியகல்வி முறையை கண்ட மாண்டிசோரி பிறப்பு .

Sunday, December 20, 2009

தேசிய கொடி .

தேசிய கொடி உருவான வரலாறு .
கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது . அது சிவப்பு , பச்சை , மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து , பட்டைகளில் வெண்தாமரை மலர்கள் , வந்தேமாதரம் என்ற வார்த்தைகள் , கதிர்வீசும் ஆதவன் , பிறைசந்திரன் , நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது . பின்னர் , 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது .
8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக , வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு , அந்தக்கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும் , அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர் .
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3 ம் முறையாக மாற்றப்பட்டது . இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை ( 5 ) பச்சைநிற பட்டை (4 ) , அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும் , வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும் , நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன . இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை .
1921 ம் ஆன்டூ விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது , பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து , முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி , பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார் . இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது .
பின்னர் , அடர் காவி , அடர் பச்சை , மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் , மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது .
இதை 22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து , அதன்பின் , முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது .
-- தேவராஜன் , தினமலர் ஆகஸ்ட் 14 , 2009 .

Saturday, December 19, 2009

தண்ணீர் ஒன்று தான் !

வானில் இருந்து விழுந்தால் மழை ; ஓடினால் நதி ; உயரமான இடத்தில் இருந்து கீழே பாய்ந்தால் அருவி ; தேங்கி நின்றால் குளம் ; நிலப்பரப்பிற்குள் விரிந்து பரந்திருந்தால் ஏரி ; நிலப்பரப்புக்கு வெளியே விரிந்து பரந்திருந்தால் கடல் ... இப்படி பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் , தண்ணீர் ஒன்று தானே !
மழை , நதி , அருவி , குளம் , ஏரி , கடல் என எல்லாவற்றிலும் உள்ள தண்ணீரும் வெவ்வேறு வகையில் பயனளிக்கின்றன . மழை நல்லது , கடல் கெட்டது என்று தண்ணீரை ஒப்பீடு செய்வது சரியாகாது .
----தினமலர் . பக்திமலர் . ஆகஸ்ட் 13 , 2009

Friday, December 18, 2009

கிருஷ்ணன் .

கிருஷ்ணன் வணங்கும் 6 பேர் .
நான் 6 பேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார் . அந்த 6 பேர் யார் தெரியுமா ?
ப்ராதஸ்நாநி அதிகாலையில் குளிப்பவன் .
அஸ்வத்தசேவி அரச மரத்தை வணங்குபவன் .
த்ருணாக்னி ஹோத்ரி மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன் .
நித்யான்னதாதா நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன் .
சதாபிஷேகி நூற்றாண்டு விழா செய்து கொண்டவன் .
ப்ரம்மஞானி இறைவனை உணர்ந்தவன் .
---- தினமலர் . பக்திமலர் . ஆகஸ்ட் 13 , 2009 .

Thursday, December 17, 2009

ஏகாதசி .

ஒவ்வொரு ஆண்டும் 24 ஏகாதசிகள் வரும் . சில ஆண்டுகளில் அதிகப்படியாக இன்னும் ஒரு ஏகாதசி வரும் . அந்த 25 வது ஏகாதசிக்கு கமலா என்று பெயர் .
சில மாதங்களில் பவுர்ணமி அல்லது அமாவாசை இரண்டு வருவதுண்டு . இப்படி அமையும் மாதங்களில் சுப காரியங்களை தவிர்த்து விடுவார்கள் . ஆனால் , ஏகாதசி ஒரு மாதத்தில் 2 தான் வரவேண்டும் . 3 வந்தால் அது விசேஷமாக கருதப்படும் . மூன்றாவதக அமையும் கமலா ஏகாதசி . 12 மாதங்களுக்கு மேல் அதிகமாக வரக்கூடிய மாதத்திற்கு புருஷோத்தம மாதம் என்று பெயர் . அது நாராயண சொரூபம் .
---- புலவர் . வே. மகாதேவன் . தினமலர் . வாரமலர் . ஆகஸ்ட் , 9 2009 .

Wednesday, December 16, 2009

சிந்தனைக்கு !

அமெரிக்கா செல்ல தீர்மானித்த விவேகானந்தர் , அன்னை சாரதாதேவியை வணங்கி ஆசி கேட்டார் .
" அறையில் இருக்கும் கத்தியை எடுத்து தா " என்றார் அன்னை .
" என்ன இது ?' என்று யோசித்தபடியே , விவேகானந்தரும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் .
கத்தியை வாங்கிய அன்னை , " உனக்கு ஆன்மிக போதனை செய்ய தகுதி இருக்கிறது . தாராளமாக அமெரிக்கா சென்று வா !" என்று ஆசிர்வதித்தார் .
' அம்மா கத்தி அளித்ததை வைத்து ஆன்மிகதகுதியை எப்படி அறிந்துகொண்டீர்கள் ?' என்று விவேகானந்தர் கேட்டதற்கு அன்னை அளித்த பதில் :
" கத்தியின் கூர்மையான பகுதியை உன் கையில் பிடித்துக்கொண்டு , கைப்பிடி பகுதியை என்னிடம் நீட்டினாய்... . இது அடுத்தவருக்கு காயமேற்படக்கூடாது என்று உனக்குள் நிறைந்திருக்கும் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துகிறது !" என்றார் அன்னை .
* மனித ஜென்மம் எடுக்கும் எந்த உயிரும் பிறந்த முதல் மாதத்திலிருந்து பிண்டத்துக்கும் , அண்டத்துக்கும் ஆன தொடர்பை புதுப்பித்துக்கொள்கிறது . .
* ' தத் ' என்றால் ' அது ' என்று அர்த்தம் . ' த்வம் ' என்றால் ' நீ ' என்று அர்த்தம் ; தத்துவம் என்றால் , ' நீயே அது ' என்று அர்த்தம் .
--- தினமலர் , ஆகஸ்ட் 6 , 24 ,.27 . 2009 .

Tuesday, December 15, 2009

பிராணாயாமம் .

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு ; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு , நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம் . மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம் .... இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம் .
நமது நுரையீரலில் வலது , இடது என இரு பகுதிகள் . வலது நுரையீரலில் 3 பகுதிகள் , இடது நுரையீரலில் 2 பகுதிகள் . நுரையீரல் ஸ்பாஞ் போல காற்றுப் பைகளால் ஆனது . வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது , வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க ' பிராணா ' சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , ' சந்திரகலை '. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , ' சூரியகலை '. இது வெப்பமானது .
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான ' சந்திரகலை ' அதிகரிக்கும் . இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும் . விஷ்ணுவின் ' அனந்தசயன ' காட்சியில் பொதிந்துள்ள அறிவியல் உண்மை இதுதான் !.
--- பூஜ்யா , தினமலர் . பக்திமலர் . ஆகஸ்ட் 6 . 2009 .

Monday, December 14, 2009

இரவு என்பது இருக்காது !

ஒரு காலத்தில் நாம் எதெல்லாம் உண்மையாக நடக்க முடியாது என்று சந்தேகப்பட்டோமோ அதெல்லாம் இன்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் உண்மையாகி விட்டது . நாளுக்கு நாள் புதுசு புதுசா , தினுசு தினுசா கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன .
புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் . பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது . இதனால் பூமியின் ஒரு பகுதி எப்போதும் இருளாகவே இருக்கிறது . இதை மாற்ற வேண்டும் என்ற ஆராய்ச்சி தான் அது .
பூமியில் சூரியனின் ஒளி விழும் நாடுகள் பகலாகவும் , சூரியனின் ஒளி படாத நாடுகள் இருளாகவும் இருக்கின்றன . இது சாதாரண நிகழ்வு .
இரவை பகலாக்கும் முயற்சியில் பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரக்கூடிய செயற்கை கோளை அமைக்க உள்ளார்கள் . இந்த செயற்கை கோள்கள் சூரிய ஒளியை கவர்ந்து தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும் . அதை உடனடியாக இருளாக இருக்கும் நாடுகள் மீது செலுத்தினால் அந்த நாடுகள் எல்லாம் பகல் போல் காட்சி தரும் . இது மட்டும் சாத்தியமாகி விட்டால் பூமியில் இரவு என்பதே இல்லாமல் போய்விடும் . எப்போதும் பகல் போல் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும் . இது இயற்கைக்கு முரணானது என்றொரு கருத்தும் நிலவுகிறது . ஆனாலும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது .
அடுத்து வரும் தலைமுறை இரவு என்று ஒரு அற்புதமான நிகழ்வை இழந்து இருப்பார்கள் . இரவு என்றால் என்னவென்று கேட்பார்கள் . இதெல்லாம் கொஞ்ச நாட்களில் நடக்கும் என்கிறார்கள் . எதிர்காலத்தை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானிகள் .
--- தினத்தந்தி , 14 - 04 - 2009 .

Sunday, December 13, 2009

பஞ்சாமிர்தம் .

இருவகை பஞ்சாமிர்தம் .
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பஞ்சாமிர்தம் இருவகைப்படும் :
1 . ரச பஞ்சாமிர்தம் . 2 . பல பஞ்சாமிர்தம் .
பால் , தயிர் , நெய் , தேன் , சர்க்கரை , இளநீர் ஆகியவை கலந்தது ரச பஞ்சாமிர்தம் . இந்த ரச பஞ்சாமிர்தத்துடன் வாழை , பலா , மாம்பழங்களைச் சேர்த்து செய்யப்படுவது , பல பஞ்சாமிர்தம்..
--- தினகரன் , 01 - 08 - 2009 .

Saturday, December 12, 2009

பஞ்ச பத்ர பாத்திரம் .

இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம் . அதன் இயற் பெயர் ' பஞ்ச பத்ர பாத்திரம் ' என்பதாகும் . அதாவது , ஐவகை பத்திரங்களை ( இலைகள் ) நீரில் இட்டு அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு , உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர் . துளசி , அருகு , வேம்பு , வில்வம் , வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் . இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் ' பஞ்ச பத்ர பாத்திரம் ' . இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது
---- தினகரன் , 01 - 08 - 2009 .

Friday, December 11, 2009

Whale Done !

அமெரிக்காவின் ஆர்லாண்டா நகரத்தில் , ' ஸீ வேர்ல்ட் ' என்ற உயிரியல் பூங்கா உள்ளது . அங்கே திமிங்கிலங்களைப் பழக்கப்படுத்தி பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை காண்பிக்கிறார்கள் .
நாய் போன்ற சிறுமிருகங்களை அடித்து மிரட்டி பழக்கி விடலாம் . ஆனால் , திமிங்கிலங்கள் பல மடங்கு பெரியவை . எத்தனை பயிற்சியாளர்கள் சேர்ந்து வந்தாலும் அரை நிமிடத்தில் துவம்சம் செய்துவிடக்கூடிய பலம் அவற்றுக்கு உண்டு . ஆக , திமிங்கிலங்களை அடிப்பது , மிரட்டுவதெல்லாம் உதவாது . வேறுவழியில்தான் அவற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் .
ஒரு திமிங்கிலம் தண்ணீருக்கு வெளியே குதிக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம் அத்தனை பெரிய மிருகம் தன்னுடைய உடம்பைத் தூக்கிக்கொண்டு தானாகக் குதிக்காது . நாம்தான் அதைப் பழக்கப்படுத்தவேண்டும் .
இதற்கான பயிற்சி தண்ணீருக்கு உள்ளே தொடங்குகிறது . திமிங்கிலம் நீந்துகிற குளத்தின் மத்தியில் ஒரு கயிற்றைக் கட்டுகிறார்கள் . திமிங்கிலம் அந்தக் கயிற்றுக்கு மேலேயும் நீந்தலாம் , கீழேயும் நீந்தலாம் .
இப்போது , ஒவ்வொருமுறை திமிங்கிலம் கயிற்றுக்கு மேலே நீந்தும்போதும் , அதற்கு ஒரு மீன் பரிசாகக் கொடுக்கப்படுகிறது . கயிற்றுக்குக் கீழே நீந்தினால் எந்தப் பரிசும் கிடையாது .
சீக்கிரத்திலேயே , திமிங்கிலத்துக்கு விஷயம் புரிந்துவிடுகிறது . பசி எடுக்கும்போதெல்லாம் கயிற்றுக்கு மேலே நீந்தி மீனைப் பரிசாகப் பெற்றுக் கொள்கிறது .
ஆனால் , அந்தத் திமிங்கிலத்துக்குத் தெரியாத விஷயம் , அதன் பயிற்சியாளர் ஒவ்வொரு நாளும் அந்தத் கயிறை அவிழ்த்துக் கொஞ்சம் உயரத்தில் கட்டுகிறார் . இதன்மூலம் மெல்லமாக அந்தத் திமிங்கிலம் மேலே மேலே சென்று நீந்தப் பழகுகிறது .
கொஞ்ச நாள் கழித்து கயிற்றைத் தண்ணீர்ப் பரப்புக்கு மேலே கட்டுகிறார்கள் . இப்போது , மீன் ஆசை கொண்ட திமிங்கிலம் தானாகக் கயிற்றின்மீது தாண்டிக் குதிக்கிறது . அதேபோல் முரண்டு பிடிக்கும் திமிங்கிலங்களை கட்டாயப்படுத்துவதில்லை . விட்டுப்பிடிக்கிறார்கள் . அதன் விருப்பத்துக்கேற்ப விளையாடவிட்டு , பிறகு தங்கள் பயிற்சியை செய்ய வைக்கிறார்கள் .
--- கென்ப் பிளான்சார்ட் . தமிழில் என் . சொக்கன் , குமுதம் 29 - 07 - 2009 .

Thursday, December 10, 2009

A ...பொண்ணு !

என் நண்பர் ஒருவரிடம் அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது , " A - B - C - D - E உள்ள பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன் " என்று சொன்னார் . புரியாமல் நான் விழிக்கையில் , " A - Age , B - Beauty , C - Colour , D - Dowry , E - Education " என்று விளக்கினார் .
--- மாறாந்தை பொன்னையா .
விகடன் 04 - 11 - 1979 இதழில் வந்த திருமணம் பற்றிய துணுக்கை என் தந்தையிடம் காட்டினேன் . " அவை மாத்திரம் இருந்தால் போதாது F , G , H , I , J , K , L , M , N , O , P எல்லாம் உள்ள பெண்ணாகப் பார்க்க வேண்டும் " என்றார் . எனக்கு விளங்கவில்லை . அவர் விளக்கினார் :
F - Family Background , G - General Status , H - Horoscope , I - Intelligence , J - Job , K - Knowledge , L - Love , M - Money , N - Neatness , O - Obedience , P - Personality .
-- எஸ் . ரவி , ஆனந்தவிகடன் 22 - 07 - 2009 .

Wednesday, December 9, 2009

சோர்வில்லாமல் ....

சோர்வில்லாமல் காலையில் எழணுமா ?
திபேத்திய புத்த பிட்சுக்கள் பின்பற்றும் ஒரு மகத்தான ரகசிய வழி . திபேத்தில் புத்தபிட்சுக்கள் நம்மைப்போல் காலையில் அரக்கப்பரக்க எழுந்திருப்பதில்லை . மாறாக , படுக்கையில் படுத்துக் கொண்டே சில உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள் . இதனால் உடலின் அசதியும் சோர்வும் போவதோடு , உடல் முழுக்க சக்தி ஒரே சீராகப் பரவுகிறதாம் . இது காலையில் புத்துணர்ச்சியையும் , சுறுசுறுப்பையும் கொடுக்கிறதாம் . இதில் நல்லதொரு விஷயம் என்னவென்றால் , இந்தப் பயிற்ச்சிகளை கண்களை மூடிக்கொண்டு , படுக்கையில் படுத்தவாறே செய்யலாம் .
ஸ்டெப் - 1 . முதலில் கண்களை மூடிக்கொண்டே , காதுகளை உங்கள் கைகளால் அழுத்திக் கொண்டு , உள்ளங்கைகளை மேலும் கீழுமாக 20 தடவைகள் அசைக்கவும் .
பயன்கள் : இது முகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு , ஈறுகளை வலுவடையவும் செய்யும் . நெற்றிப் பொட்டில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் .
ஸ்டெப் - 2 . வலது கையை முன் நெற்றியில் வைத்து அதன் மேல் இடது கையை வைக்கவும் . பிறகு இந்த் நிலையில் கைகளை மேலும் கீழுமாக 20 தடவை அசைக்கவும் .
பயன்கள் : இது காலைய்ல் தலைவலி வராமல் தடுப்பதோடு எழுந்தவுடன் , சில சமயம் இருக்கும் தலைச் சுற்றலையும் போக்கிவிடும் .
ஸ்டெப் - 3 . கண்களுக்கு வாருங்கள் . இரண்டு கட்டை விரல்களை நடக்கிக் கொண்டு இறகால் தடவுவதுபோல் மென்மையாக கணகள் இரண்டையும் , 15 முதல் 20 தடவைகள் மசாஜ் செய்யவும் .
பயன்கள் : இது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்ய உதவுவதோடு , கண் பார்வை தீர்க்கமாக இருக்கவும் உதவி செய்கிறது .
ஸ்டெப் - 4 . வயிற்றுப் பகுதிக்கு வாருங்கள் . உள்ளங்கைகளை வயிற்றின் மேல் வைத்துக் கொண்டு முழ்ங்கால்களை சற்று மடக்கிக் கொள்ளவும் . பிறகு மெல்ல வயிற்றுப் பகுதியை உள்லங்கைகளால் , 30 - 50 தடவைகள் வரை மசாஜ் செய்யவும் ( Clockwise ) .
பயன்கள் : வயிற்றுத் தசைகளை இது பலப்படுத்துவதோடு , கணையத்தையும் சுறுசுறுப்பாக்குகிறது . கல்லீரலுக்கும் நல்ல பயிற்சி இது . காலையில் சில சமயங்கள் ஏற்படும் வயிற்றுப் புரட்டலையும் போக்கும் . முக்கியமாக பெருங்குடலின் அசைவுகலை சீராக்குகிறது .
ஸ்டெப் - 5 . 20 தடவைகள் வயிற்றை வெளியே தள்ளி , உள்ளே இழுக்கவும் .
பயன்கள் : இதனால் சிறு நீரகங்கள் , கல்லீரல் , ஜீரண உறுப்புகள் பயனடைகின்றன . மேலும் வயிற்றுப் பகுதியில் அதிகமாக இருக்கும் கொழுப்புச் சத்து கரையவும் இந்தப் பயிற்சி உதவுகிறது .
ஸ்டெப் - 6 . படுத்த நிலையிலேயே முழ்ங்கால்களை கைகலால் கட்டிக்கொண்டு அவற்றை மார்புக்கு மேலே கொண்டு வரவும் .
பயன் : இது வயிறு , இதயம் போன்ற உறுப்புகளின் உள்ளே இருக்கும் தசைகளுக்கு நல்லதொரு மசாஜ் .
ஸ்டெப் - 7 . இப்போது மெல்லக் கண்களைத் திறந்து , எழுந்து உட்காரவும் . உட்கார்ந்தவாறே , குனிந்து பாதங்களையும் , உள்ளங்கால்களையும் இரு கைகளால் மசாஜ் சய்யவும் .
பயன் : முதுகுத் தண்டுக்கு நல்ல பயிற்சி இது .
--- இந்திரா வெங்கடராமன் , ஹைதராபாத் . குமுதம் சினேகிதி . ஆகஸ்ட் 1 - 15 , 2009 .

Tuesday, December 8, 2009

பாட்டிலும் தண்ணீரை கெடுக்கும் .

தண்ணீர் மட்டுமல்ல .... அதை எடுத்துச் செல்லும் பாட்டில்கூட அந்தத் தண்ணீரை தரமற்றதாக்கிவிடும் ஆபத்து இருக்கிறது . உதாரணமாக , அலுவலகத்துக்கு நாம் தண்ணீர் எடுத்துச் செல்லும் பாட்டில்கள் வாங்கும் போது பாட்டிலின் பாட்டம் பகுதியில் ஒரு முக்கோண்த்தில் நம்பர் போடப்பட்டிருக்கும் . அதில் 1 லிருந்து 4 வரை போடப்பட்டிருந்தால் அந்த பாட்டிலை வாங்கக்கூடாது . காரணம் , அந்த பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து வெளியேறும் கார்ஸினோஜின் என்ற கெமிக்கல் புற்றுனோயை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன . அந்த நம்பர் 4 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே வாங்குங்கள் .
--- தி. அணுபிரியா . குமுதம் சினேகிதி , ஆகஸ்ட் - 1-15 . 2009 .

Monday, December 7, 2009

வன்மை - மென்மை !

சாகும் தருவாயில் ஒரு குரு படுக்கையில் கிடந்தார் . அவரை சுற்றி அவரது சீடர்கள் நின்று கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர் . குருவின் மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது . மெதுவாக கண் திறந்த குரு , ' என்ன ' என்பது போல் அவர்களைப் பார்த்தார் . சீடர்களின் கண்களில் கண்ணீர் . கடைசியாக அவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைத்த குரு , ' வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரிய வைக்கிறேன் , அருகில் வாருங்கள் ' என்று தன் சீடர்களை அழைத்தார் . நெருங்கி வந்த அவர்களிடம் தன் பொக்கை வாயைத்திறந்து காண்பித்தார் . ' அவ்வளவுதான் போங்கள் ' என்றார் . ஒரு சீடனைத் தவிர எல்லோரும் ' புரிந்தது ' என்று தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டனர் . அந்த சீடனுக்கோ ஒரே குழப்பம் . 'வாய்க்குள் அப்படி என்ன வாழ்க்கை தத்துவம் இருக்கப் போகிறது ' என்று குழம்பியபடியே இருந்தவன் , குருவிடமே கேட்டான் .
' என் வாய்க்குள் என்ன இருந்தது ?' - குரு கேட்டார் .
' நாக்கும் , உள் நாக்கும் இருந்தது ' - சிஷ்யன் .
' பல் இருந்ததா ?' - குரு .
' இல்லை ' - சிஷ்யன் .
' அதுதான் வாழ்க்கை . வன்மையானது அழியும் . மென்மையானது வாழும் ' - குரு .
--- தினமலர் கம்ப்யூட்டர் மலர் , 03 - 08 - 2009 .

Sunday, December 6, 2009

ஐ. எஸ். எஸ்.!-

விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ( ஐ. எஸ். எஸ். ) கடந்த 30 ம் தேதி மாலையில் ஏராளமானோர் பார்த்தனர் .
விண்ணில் இருந்தபடி விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா , ரஷ்யா , கனடா , ஜப்பான் , மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து 98 ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன . இதற்கான கட்டுமானப்பணிகள் வரும் 2010 வரை நடைபெறுகிறது . தற்போது பூமியில் இருந்து 336 முதல் 346 கி. மீ உயர சுற்று வட்டப்பாதையில் விண்ணில் இந்த நிலையம் மணிக்கு 27 ஆயிரத்து 724 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது .
தமிழகத்தில் 30 ம் தேதி மாலை 6 . 24 மணிக்கு வட மேற்கு அடிவானத்தில் தோன்றி தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 6 .35 மணிக்கு தென்கிழக்கு அடிவானத்தில் மறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் 4 நிமிடங்களுக்கு மேல் காணமுடியவில்லை . பிரகாசமான நட்சத்திரம் வேகமாக நகர்வதைப்போல தோற்றம் தந்தது . தொலைநோக்கி ஏதுமில்லாமல் வெறும் கண்ணாலேயே பார்க்கமுடிந்தது .
--- தினகரன் . 1 டிசம்பர் 2009 .
மேலும் , நேற்று 5 ம் தேதி காலை 5 . 53 மணிக்கு தென்மேற்கு அடிவானத்தில் தோன்றி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 5 . 59 மணிக்கு வடகிழக்கு அடிவானத்தில் மறைந்தது .

மூனறு புத்தகம் !

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்கள் மூன்று .
முதலாவது இறைவன் மனிதனுக்குச் சொன்னது . அது , கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த நூல் பகவத் கீதை .
இரண்டாவது , அறியவர் இறைவனுக்கு சொன்னது . மணிவாசகர் மகேசனுக்குப் பாடியது . அது திருவாசகம் .
மூன்றாவது , மனிதன் மனிதனுக்கு சொன்ன நூல் . வாழ்வாங்கு வாழ வள்ளுவர் வகுத்து தந்த திருக்குறள்தான் அது .
இந்த மூன்று நூல்களும் எல்லா இல்லங்களிலும் இருக்க வேண்டியவை . உயரும்போதெல்லாம் படிக்க வேண்டியவை .
--- கி. ஆ . பெ . விஸ்வநாதன் . .

Saturday, December 5, 2009

அப்பா . அடேங்கப்பா !

அப்பா : நான் உனக்கு கல்யானம் செய்து வைக்கலாம்னு இருக்கேன் . பொண்ணு பார்க்க ஆரம்பிக்கவா ?
மகன் : எனக்கேத்த பொண்ண நானே தேர்ந்தெடுக்கலாம்னு இருகேம்பா .
அப்பா : ஓகே ! ஆனால் நான் சொல்ற பொண்ணு மாதிரி உன்னாலேசெலக்ட் பண்ணவே முடியாது .
மகன் : அப்படிப்பட்ட பொண்ணு யாருப்பா அது ?
அப்பா : பில்கேட்ஸோட பொண்ணை உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கேன்... உனக்கு சம்மதமா ?
மகன் ! : அப்படியா ! டபுள் ஓகே.ப்பா !
இடம் : பில்கேட்ஸ் மாளிகை .!
அப்பா : மிஸ்டர் பில்கேட்ஸ் , உங்க பொண்ணு வாழ்க்கை மேலும் பிரகாசமா இருக்க ஒரு நல்ல செய்தியோட வந்திருக்கேன் !
பில்கேட்ஸ் : ஓ... ரோம்ப சந்தோஷம் ... சொல்லுங்க .
அப்பா : நல்ல குணமுள்ள , ஒரு அருமையான மாப்பிள்ளையை , உங்க பொண்ணுக்காக பார்த்து வெச்சிருக்கேன் !
பில்கேட்ஸ் : அவளோட கல்யாணத்தை பத்தி நான் இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவில்லை .
அப்பா : உங்க பொண்ணுக்கு பார்த்து வைத்திருக்கிற மாப்பிள்ளை உலக வங்கியோட வைஸ்பிரசிடென்ட்டா இருந்தா ஓகேவா ? !
பில்கேட்ஸ் : உலக வங்கியோட வைஸ்பிரசிடென்ட்டா ! அப்ப , டபுள் ஓகே .
இடம் : உலக வங்கி பிரசிடென்ட் இல்லம் .
அப்பா : உலக வங்கிக்கு ஒரு நல்ல பையனை வைஸ் பிரஸிடென்ட்டா ரெக்கமென்ட் பண்ண வந்திருக்கேன் .
பிரசிடென் ட் : ஏற்கனவே எங்க வங்கியில தேவைக்கு அதிகமான விஸ்பிரசிடென் ட் இருக்காங்களே !
அப்பா : நான் சொல்ற பையனை நீங்க வைஸ் பிரசிடென் ட்டா சேத்துகிட்டா உலக வங்கியோட அந்த்ஸ்து இன்னும் ஒரு படி உயரும் .
பிரசிடென் ட் : ரியலி ! யாரந்த பையன் ?
அப்பா : உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் பில்கேட்ஸோட மாப்பைள்ளைதான் அந்தப்பையன் .
பிரசிடென் ட் : அப்படியா , வெரி குட் ! நீங்க ரெக்கமென் ட் செய்த பையனை வைஸ் பிரசிடென் ட்டாக்க எனக்கு முழு சம்மதம் ! !
தத்துவம் : வாயுள்ள அப்பாவோட புள்ள பொழைச்சுக்கும் !
--- தினமலர் , 02 - 08 - 2009 .

உடல் இயக்கம் !

நமது உடலை மூலாதாரம் , சுவாதிஸ்தானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆக்ஞா , சகஸ்ரஹாரம் ஆகிய ஏழு சக்கரங்கள் இயக்குகின்றன . சக்கர செயல்பாடு பாதிக்கப்பட்டால் அவற்றால் கட்டுப்படுத்தப்படும் உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டு ஆரோக்கிய குறைபாடு வரும் .
இந்த சக்கரங்கள் சரியாக இயங்க , அவற்றுக்கு ' பிராணா ' ( உயிர்மூச்சு ) சக்தி முழுஅளவில் கிடைக்கவேண்டும் .
மூலாதாரம் சரிவர செயல்பட , அதற்கு ஒரு நாளில் 600 மூச்சு கிடைக்க வேண்டும் . இதுபோல் , சுவாதிஸ்தானம் , மணிபூரகம் மற்றும் அநாகதம் சரிவர செயல்பட ஒரு நாளுக்கு தலா 6 ஆயிரம் மூச்சுக்களும் , விசுத்தி , ஆக்ஞா மற்றும் சகஸ்ரஹாரம் சரிவர செயல்பட ஒரு நாளுக்கு தலா ஆயிரம் மூச்சுக்களும் தேவை . ஆக , உடல் இயக்கம் சரிவர நடக்க , ஒரு நாளுக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுக்கள் தேவை . அதாவது , ஒரு நிமிடத்துக்கு நாம் 15 முறை சுவாசிக்கவேண்டும் .
ஆனால் , மன படபடப்புகளால் இந்த சரியான அளவில் நாம் சுவாசிப்பதில்லை . ஒன்று , மிக அதிகமாக சுவாசிக்கிறோம் அல்லது மிகக் குறைவாக சுவாசிக்கிறோம் .
ஒரு நிமிடத்திற்கு 3 முறை மட்டுமே சுவாசிப்பதால் ஆமையின் ஆயுள் அதிகம் ( சராசரியாக 300 ஆண்டுகள் ) ; ஒரு நிமிடத்திற்கு 20 முறைக்கு மேல் சுவாசிப்பதால்தான் நாய் , குதிரை போன்ற விலங்குகளின் ஆயுள் மிகக் குறைவு . மூச்சு குறையக் குறைய ஆயுள் அதிகரிக்கும் .இதற்கு , ' மூச்சை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தி விட்டால் ஆயுள் அதிகரிக்கும் ' என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் . மூச்சை வலுக்கட்டாயமாக அடக்குவது , பெரும் ஆபத்து .
சராசரி மனிதர்களின் உடலுக்கு ஒரு நாளுக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுகள் அவசியம் . இதற்காக ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் என்ற அளவுப்படி சுவாசத்தை நிதானமாக , ஆழமானதாக மாற்ற பயிற்சி செய்வதே பாதுகாப்பான , சரியான பிராணாயாம முறை .
--- தினமலர் , பக்திமலர் . ஜூலை 30 . 2009 .

Friday, December 4, 2009

ஒட்டகச் சிவிங்கி !

நாலுகால் பிராணிகளிலேயே ரொம்பவும் உயரமுள்ளப் பிராணி ஆங்கிலத்தில் ' ஜிராஃப் ' எனப்படும் ஒட்டகச் சிவிங்கியே ஆகும் . தாய் ஒட்டகச் சிவிங்கி , குட்டியை ஈனும்போது என்ன நடக்கிறது தெரியுமா ? தாயின் இதமான , பாதுகாப்பான வயிற்றிலிருந்து குட்டி வெளியே வந்ததும் வராததுமாக , ரொம்பவும் உயரத்திலிருந்து ' பொத் ' தென்று தரையில் விழுகிறது .
அந்த மோதலிலிருந்தும் அதிர்ச்சியிலிலிருந்தும் அது மீளுவதற்குள் இன்னொரு அதிர்ச்சி அதற்காக காத்திருக்கிறது ! கீழே விழுந்தபின் , அது எழுந்து நிற்கும் முயற்சியில் , இன்னும் முழங்கால்களைத் தரையில் உறுதியாகப் பதிக்கக் கூட இயலாத நிலையில் , தன் பலங்கொண்ட மட்டும் தன் கால்களால் தாய் அதை எட்டி உதைக்கிறது . புதிதாகப் பிறந்த குட்டியைத் தாய் இப்படித் திருப்பித் திருப்பிப் பலமுறை எட்டி உதைப்பது நமக்குப் பார்ப்பதற்கு ஒரு கொடுமை போலத்தான் தோன்றும் ! ஆனால் , தன் குட்டி பிழைத்திருக்க வேண்டும் . அது நெடு நாள் உயிருடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தாய் , தன் உள்ளூணர்வால் உந்தப்பட்டு அது இழைக்கும் கொடுமையிலும் அதன் தாய்ப்பாசம்தான் வெளியாகிறது . அதாவது குட்டி தன் நாலுகால்களையும் ஊன்றிச் சீக்கிரம் ஓட ஆரம்பிக்கவில்லையென்றால் கொடிய காட்டு மிருகங்கள் அதைக் குதறித் தின்றுவிடும் என்று தாய்க்கு நன்றாகத் தெரியும் .
--- பாக்யா , ஜூலை 31 - ஆக 6 ; 2009 .

Thursday, December 3, 2009

மரம் - 1 , இலைகள்விதம் 5 .

பஞ்ச பாண்டவர்கள் மீண்டும் தங்களுக்கு பதவி வேண்டி பூஜை செய்த தலம் என்பதால் ' ஐவர் பாடி ' என்றழைக்கப்பட்ட பெயர் மருவி இப்போது அய்யாவாடியாக அழைக்கப்படுகிறது . கும்பகோண்த்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர் . இங்குள்ள தர்ம சம்வர்த்தினி அம்பாள் சமேத அகத்தீஸ்வர சுவாமி கோயிலின் வடக்கு பிரகாரத்தில் மகா பிரத்யங்கராதேவி அதர்வன காளியாக அருள்பாலிக்கிறாள் . இழந்த பதவியையும் , சிறப்பையும் மீண்டும் பெற இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் அனைத்தும் மீண்டும் கிடைத்து விடும் என்பது நம்பிக்கை. 18 சித்தர்களும் இங்கு வந்து பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது .
இக்கோயிலின் தலவிருட்சம் ஆலமரம் . இம்மரத்தில் உள்ள ஒவ்வொரு இலைக் கொத்திலும் 5 இலைகள் உள்ளன.
ஒவ்வொரு இலையும் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன . அதில் ஆல் , அரசு , புரசு , இச்சி , மா என்ற 5 வடிவங்களில் இலைகள் இருக்கின்றன . வேறு எந்த தலத்திலும் இதுபோன்று வெவ்வேறு வடிவ இலைகள் ஒரே மரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் , 27 - 07 - 2009 .

Wednesday, December 2, 2009

உஷ் ! பேசாதே !

வணக்கம் . 21 - 02 - 1965 இதழ் ஆனந்தவிகடனில் ' பட உலகில் ' பகுதியில் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பைப் படித்தேன் . அவர் அறிந்து கொள்ள முடியாமல் போன சுலோகத்தை நான் எழுதி அனுப்பியிருக்கிறேன் . இதை நான் எனது 85 வயதான தாத்தாவிடமிருந்து தெரிந்துகொண்டு அனுப்புவதால் , சரியாகவே இருக்குமென்று நினைக்கிறேன் .
அந்த சுலோகம் ...
ஆயுர்விருத்தம் , க்ருஹசித்ரம் , மந்த்ரமெளஷதமைதுனே
தானம் மர்னாபமாநெள ச நவ கோப்யானி காரவேத் .
இந்த சுலோகத்தின் கருத்தாவது :
தனது வயது , சொத்து , வீட்டில் நடந்த சண்டை , சிறந்த மந்திரம் , நல்ல மருந்து , கணவன் மனைவியின் பிரியம் , தானம் , தனக்கேற்பட்ட புகழ் , அவமானம் ஆகிய இந்த ஒன்பது விஷயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது என்பதாம் .
( ஸூபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற புத்தகத்திலிருந்து ).
--- வி. கே. கௌஸல்யா, சின்ன காஞ்சிபுரம் . ( 07 - 03 - 1965 ).
--- ஆனந்தவிகடன் , 22 - 07 - 2009 .