Wednesday, September 30, 2009

vஒரு மனிதர் !

மதிக்கும் ஒரு மனிதர் !
அணுசக்தி விஞ்ஞான மேதை டாக்டர் பாபா அமரத்துவம் அடைந்த அன்று கூட ' ட்ராம்பே அணுசக்தி நிலையம் ' விடுமுறை விடப்படாம செயல்பட்டுக் கொண்டிருந்தது .
அதுக்கு காரணம் அவரேதான் . யாருடைய மரணமும் ட்ராம்பே அணுசக்தி நிலையதின் பணிகளைத் தடைசெய்து விடக்கூடாதுன்னு டாக்டர் பாபா தன் மரணத்துக்குச் சில நாள் முன்பே தெரிவிச்சிருந்தாராம் . அவரோட கோரிக்கையை ஏற்றே இன்றளவும் அவரது நினைவு நாள்ல கூட அணுசக்தி நிலையத்துக்கு விடுமுறை கிடையாதாம் .
இதை அறிவிப்பாகவே அணுசக்தி நிலையத்தில் எழுதி வச்சிருக்காங்க . உழைப்போட உன்னதத்தை மதிக்க அந்த மாமனிதரை எப்பவும் எல்லொரும் மதிக்கணும் .
--- ஒருத்தர் டாக்டர்கிட்ட வந்து , " டாக்டர்.... தினம் வேலைக்காக பஸ்ல போகும்போதெல்லாம் ஒரே தூக்கமா வருது டாக்டர் . என்னால கண்ட்ரோலே பண்ண முடியல"ன்னாரு .
உடனே டாக்டர் , " தூக்கம் வந்தா கொஞ்ச நேரம் அப்படியே சாஞ்சி படுத்து தூங்குங்க . உடம்புக்கு ரெஸ்ட்தானே " ன்னு சொல்ல,
அதுக்கு வந்தவர் , " நான் தூங்க ஆரம்பிச்சா , அப்ப பஸ்ஸை யாரு டாக்டர் ஓட்டறது ?" ன்னாராம் .
---பாக்யராஜ் , பாக்யா . மே 29 -- ஜூன் 4 ; 2009 .

Tuesday, September 29, 2009

கலிகாலம் .

போருக்குப் புறப்பட்ட
வீரமிகு மைந்தனுக்கு
வாளுரை கொடுத்தாள்
தமிழகத்து அன்னை !
ஊருக்குப் புறப்பட்ட
உத்தமப் புத்திரனுக்கு
ஆணுறை கொடுக்கிறாள்
அமெரிக்க அன்னை !
--- பாக்யா , மே 22 -- 28 ; 2009

அசத்தல் ஐடியா !

* துளசி இலையைச் சிறிது எடுத்து ஒரு மெல்லிய துணியில் சிறு மூட்டையாகக் கட்டி ஸ்டவ்விற்குள் போட்டு வைத்தால் , மண்ணெண்ணெய் விரைவில் தீராது !
* கோடைக் காலத்தில் கோழி முட்டைகள் விரைவில் கெட்டு விடும் என்பதால் வேப்பிலைக்குள் முட்டைகளை போட்டு வைத்தால் அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் .
* நிறம் மங்கி டல்லடிக்கும் சப்பாத்தி குழவிகளை அதிக கனமில்லாத உப்புத்தாள் கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவி வைத்தால் , புதிது போல் ஆகிவிடும் .
* மோதிரம் , மிஞ்சி போன்றவற்றைக் கழற்ற முடியவில்லையா ? சிறிது ஐஸ் கட்டியை விரல் மீது வைத்து பின் கழற்றினால் உடனே ஈஸியாக கழன்றுவிடும் .
* கண்ணாடி வளையல் நீண்டநாள் வர வேண்டுமானால் கைகளில் மாட்டுவதற்கு சற்று முன்பு சிறிது நீரில் கொதிக்க வைத்து பின் அணிந்தால் உடையாமல் பல நாட்கள்
உழைக்கும் !
* மீன் துண்டுகளை எண்ணெயில் வறுக்கும்போது , அசைவம் சாப்பிடாத அக்கம்பக்கத்தவர் இருந்தால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கலாம் . இதைத் தவிர்க்க , மீன் பொறிக்கும் போது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள் . மீன் வாடை அடிக்காது .
* கற்பூரத்தை எவ்வளவு டைட்டான டப்பாவில் போட்டு வைத்தாலும் கூட சில நாட்கள் கழித்து கரைந்துவிடும் . கற்பூரம் கரையாமல் இருக்க , டப்பாவில் கொஞ்சம் அரிசியை போட்டு வைத்தால்
போதும் . கற்பூரம் கரையவே கரையாது .
* பிஸ்கட்டுகளை என்னதான் டைட்டான டப்பாக்களில் போட்டு வைத்தாலும் அது இரண்டு , மூன்று நாட்களில் நமுத்துப் போய்விடும் . இதைத் தடுக்க , பிஸ்கட் வைக்கும் டப்பாக்களில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி விட்டு பிறகு அழுத்தி மூடிவிட்டால் போதும் , ஒரு வாரம் கழித்து திறந்து பார்த்தால்கூட , பிஸ்கட் மொறுமொறுவென்று புத்தம் புதிதாய் இருக்கும் .
* சிக்கன் வாங்கி அதை கட் பண்ணும்போது வாடை அதிகமாக இருக்கும் . எனவே , வாடை குறைய வேண்டுமென்றால் , சிக்கன் மீது கொஞ்சம் மஞ்சள் தூளை தூவி விட்டு , பத்து நிமிடம் கழித்து கட் பண்ணினால் வாடை ஓரளவு குறைந்திருக்கும்

Sunday, September 27, 2009

சாமம் -- இரவு !

" சாமக்கோழி கூவுகிறது " " நடுச்சாமத்தில் வந்தார் " என்று சொல்லும் போது , சாமம் என்றால் இரவு என்றே பொருள் கொள்ளப்படுகிறது . ஆனால் , அவ்விதம் பொருள் கொள்வது அறியமையாகும்
காரணம் , சாமம் என்பது ஒரு கால அளவீடு . அது இரவு நேரத்திற்கு மட்டும் உரியது அன்று .
சாமம் என்பது பகலிலும் உண்டு . இரவிலும் உண்டு .
60 நொடி = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை .
71/2 நாழிகை = 1 சாமம் .
8 சாமம் = 1 நாள் .
7 நாள் = 1 வாரம் .
15 நாள் = 1 பக்கம் .
2 பக்கம் = 1 மாதம் .
6 மாதம் = 1 அயனம் .
2 அயனம் = 1 ஆண்டு .
இதுவே நம் மக்களின் கால அளவீடு ( கணக்கீடு ).
இதில் 8 சாமங்கள் கொண்டது 1 நாள் . அதாவது பகலில் 4 சாமம் , இரவில் 4 சாமம் . அதாவது ஒரு சாமம் என்பது 3 மணி நேரம் . எனவே , சாமம் என்பது வேளையைக் குறிப்பது என்பது தவறு .
ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் என்பது கணக்கு . 60 நாழிகைகளை 8 ஆல் வகுத்தால் 7 1/2 கிடைக்கும் .
7 1/2 நாழிகை ஒரு சாமம் . நான்கு சாமம் சேர்ந்தது ஒரு பகல் . அதேபோல் , நான்கு சாமம் சேர்ந்தது ஓர் இரவு . எனவே , சாமம் என்பது இரவு அல்ல .
--- மஞ்சை வசந்தன் . பாக்யா , மே 22 -- 28 ; 2009 .

" நம்மால் முடியும் "

ரால்ப்வால்டோடிரைன் என்ற தத்துவஞானி , ' பிரபஞ்சத்துடன் ஒன்றிப் போய் ' ( In tune with the in- finite ) என்ற தலைப்பில் ஓர் அற்புதமான நூலை எழுதியிருக்கிறார் . அதில் , " நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்போது , அதைச் செய்து முடிக்கும் தார்மிக வலிமை உடலில் பிறக்கிறது . திரும்பத் திரும்ப எண்ணும் ஓர் எண்ணம் நம்பிக்கை ஆகிறது . நம்பிக்கை நம்மைச் செயல்படத் தூண்டுகிறது . திரும்பத் திரும்பச் செயல்படும் பழக்கமாக மாறுகிறது . பழக்கங்கள் மனிதனின் குணநலங்களாக மாறுகின்றன . குணநலன் அவனது விதியை நிர்ணயிக்கிறது " என்று குறிப்பிடுகிறார் . இங்கே நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கிய விஷயம் , எப்படி எண்ணங்கள் நமது நம்பிக்கையாக மாறுகிறது என்பதுதான் .
ஒரு வீடு கட்ட வேண்டும் , ஒரு பெரிய தொழிலை உருவாக்க வேண்டும் , ஒரு தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் ஒரு சாதாரண எண்ணமாக மனத்துள் தோன்றுகிறது . ' நம்மிடம் என்ன இருக்கிறது ? வீடு கட்டப் பனம் வேண்டாமா ? போதுமான வருமானம் வேண்டாமா ?' என்று மனம் வரிசையாக எண்ணங்களை அடுக்குகிறது . நடுவில் ' முடியுமா ' என்ற ஒரு சந்தேகத்தையும் கிளப்புகிறது . ' நம்மிடம் இவ்வளவு சேமிப்பு இருக்கிறது , வங்கியில் இவ்வளவு கடனாக வாங்கலாம் . மாதாமாதம் இவ்வளவு என்று கட்டிவிடலாம் ' என்று இழையோடு இழையாக மற்றோர் எண்ணத் தொடர் ஓடுகிறது . ' ஏதோ முடியும் போலிருக்கிறதே !' என்ற தெம்பைக் கொடுக்கும் . உற்சாகத்தை ஊட்டும் ஓர் எண்ணம் ஊடே ஓடுகிறது
மலை உச்சியில் வீடு கட்டிக்கொள்பவர்கள் , சுலபமாக ஏறி இறங்க எப்படி வழி கண்டுபிடிக்பார்கள் தெரியுமா ?
தங்கள் மாட்டை மேய்வதற்காக அவிழ்த்து விட்டுவிடுவார்கள் . மடு அப்படி இப்படி என்று கவனித்து மலையிலிருந்து எளிதாக கீழிறங்க ஒரு நல்ல வழியைக் கண்டுபிடித்து , தினமும் கீழே போய்ப் புல் மேய்ந்துவிட்டு வரும் .
மனமும் அப்படித்தான் . மனத்துக்கு ஒரு லட்சியத்தை , ஆசையைக் காட்டிவிடோமானால் போதும் ; அதை எப்படி அடைவதென்ற வழியைத் தானே அது கண்டுபிடித்துக் கொடுக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள் .
மனத்துக்கு ஒரு விஷயத்தின் உண்மை , பொய்களைப் பற்றி ஏதும் அக்கறை இல்லை . மனம் எப்படிப் பார்க்கிறதோ அப்படியே அதை ஏற்றுக் கொள்கிறது .
அதாவது மனம் நடப்பதை நம்பும்போது , உடலின் எல்லா உறுப்புக்களையும் தன் நம்பிக்கைக்கேற்ப இயங்கச் செய்கிறது .
---டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி , ஆனந்த்விகடன் . 20 - 05 - 2009 .

Friday, September 25, 2009

கனகாபிஷேகம் !

காஞ்சி முனிவருக்கு கனகாபிஷேகம் !
காஞ்சிப் பெரியவர் ( 20 - 05 - 1894 -- 08 - 01 - 1994 ).
1907 -ம் ஆண்டு தம்முடைய 13 -வது வயதில் ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68 - வது பீடாதிபதியானவர் பூஜ்யஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் .
எந்தச் சமயத் தலைவருக்கும் இதுவரையில் நடந்திராத வகையில் , ஐந்து கனகாபிஷேகங்கள் நடத்தப்பட்டது ஸ்ரீ காமகோடி பீடத்தின் சிறப்பானதொரு விஷயம் . 1954 - ல் ஸ்ரீ மஹா சுவாமிகளின் 60 ஆண்டு நிறைவு விழாவின்போது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன் குருநாதருக்கு முதல் கனகாபிஷேகம் செய்தார் . ஸ்ரீ பரமாச்சாரியாள் ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி இரண்டாவது கனகாபிஷேகம் 1957 - ல் நடந்தது ! சென்னை மைலாப்பூரில் நடந்த ஸ்ரீ ராமநவமி விழாவின்போது ( 1965 - ல் ) காஞ்சிப் பெரியவருக்கு மூன்றாவது கனகாபிஷேகம் செய்தார் ஸ்ரீ ஜெயேந்திரர் . இப்போது நூற்றாண்டு விழாவின் ஒரு சிறப்பம்சமாக 25 - 04 - 1993 அன்று ஸ்ரீ மஹா சுவாமிகளுக்கு நான்காவது கனகாபிஷேகம் நடத்தப்பட்டது .
26 - 05 - 1993 அன்று ஸ்ரீ பரமாச்சாரியாருக்கு ஐந்தாவது கனகாபிஷேகம் நடந்தது . காலை 9 : 30 மணியளவில் நடந்த இந்த மகா வைபவத்தைக் காண அதிகாலை மூன்று மணியிலிருந்தே மக்கள் க்யூவில் நிற்கத் தொடங்கிவிட்டார்கள் .
சுவாமிகள் அமர , வெள்ளியினால் ஆன ஒரு சிம்மாசனம் ' தகதக ' வென்ற ஜொலிப்போடு காத்திருக்க... பெரியவர் வந்து அமர்ந்ததும் , அது மேலும் ஒளியுடையதாக மின்னியது .
இம்முறை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்கவென்று தனி ஏற்பாடுகளை மடம் செய்திருந்தது . பி.பி.சி. , சி.என்.என். போன்ற வெளிநாட்டு டி.வி.க்காரர்கள் உட்பட வீடியோ மற்றும் புகைப்பட காமிராக்கள் மட்டுமே கிட்டத்தட்ட 35 இருந்தன .
பார்வையாளர்களிலிருந்து வி.ஐ.பி. வரிசைக்குள் நைசாக நுழைய முயன்றவர்களை, ஆஜானுபாகுவாய் இருந்த தேர்தல் அதிகாரி டி.என். சேஷன் கையைப்பிடித்துத் தடுத்துக் கொண்டிருந்தார் .
சரியாக 20 நிமிடங்களில் கனகாபிஷேகம் முடிய , பெரியவர் மக்களைப் பார்த்து இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்திக் கூப்பியபோது மொத்தக் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டது !
--- ஆனந்தவிகடன் , 06 - 06 - 1993 .

Thursday, September 24, 2009

சப்தஸ்வரங்களின் சாவி .

மங்கள இசை என்று அழைக்கப்படும் நாதஸ்வரம் வாசிக்க 2 முக்கியமான அம்சங்கள் தேவை . அதில் ஒன்று நதஸ்வரத்தில் 7 விதமான ராகங்கள் ( சப்தஸ்வரம் ) வெளிப்படுத்தக் கூடிய துவாரங்கள் . மற்றொன்று நாதஸ்வர வித்வான் வாசிக்க பயன்படுத்தப்படுத்தும் சீவாளி .
சீவாளியின் வழியே வித்வான்களின் வாசிப்பு ஸ்வரங்களாக வெளிப்படுகிறது . எனவே , சீவாளியை சப்தஸ்வரங்களின் சாவி என்றும் , நாதத்திற்கு ஸ்வரம் சேர்க்கிறது என்றும் கூறப்படுகிறது .
சீவாளி என்பது ஒருவித நாணல் வகையில் இருந்து தயாரிக்கப்படுகிறது . குறிப்பாக காவிரி , வாய்க்கால் , குளக்கரை போன்ற நீர் நிலைகளில் அதிகளவு காணப்படும் கொருக்குத்தட்டை என்ற நாணல் வகை பயிரில் இருந்து தயாரிக்கப்படுகிறது .
முற்றிய தட்டைகளை அறுவடை செய்து கொண்டு வந்து தோகைகளை நீக்கிவிட்டு தட்டையை மட்டும் காய வைக்கின்றனர் . பின்னர் , தேவையான அளவில் சிறிது சிறிதாக வெட்டி உலர்த்தி , தண்ணீரில் நனைத்து அதற்குரிய இயந்திரத்தை கொண்டு பக்குவப்படுத்தி நுணுக்கமாக தயாரிக்கின்றனர் .
சீவாளி இறுக்கமாக இருப்பதற்கு செம்பிலான நீள உருண்டை தயாரித்து அதற்குள் பொருத்தி , நூலால் இணைத்து தயாரிக்கின்றனர் . ஒரு மாதத்திற்கு 500 சிவாளிகள் தயாரிக்கப்படுகின்றன .
தமிழகத்தில் திருவாவடுதுறை , பண்ருட்டி , திருவீழிமிழலை ஆகிய 3 இடங்களில் மட்டும் தான் நாதஸ்வரத்திற்கான சீவாளி தயரிக்கப்படுகிறது .
ஒரு டன் ரூபாய் ஆயிரம் வரை விற்கப்படுகிறது . சீவாளி செருக பயன்படுத்தும் செப்பி குழலை முன்பு நாங்களே தயாரித்தோம் . இப்போது வேலை அதிகமாகி விட்டதால் மற்றவர்களிடமிருந்து வாங்குகிறோம் .
சராசரியாக 6 மாதம்தான் சீவாளி பயன்படும் என்பதால் அடிக்கடி நாதஸ்வர கலைஞர்கள் வாங்குகின்றனர் . கோடை காலத்தில் அறுவடை செய்து , நெல்லுடன் சேர்த்து அவித்து , நீராகாரத்தில் (சாதம் ஊற வைத்த தண்ணீர் தான் ) ஊறவைத்து , கிட்டி பனையில் சொருகி , நெருக்கி கட்டி முடிச்சு போட்டால் சீவாளி ரெடி .
--- முத்துராமன் , சீவாளி தயாரிப்பாளர் . திருவாவடுதுறை . தினமலர் , 18 - 05 - 2009 .

Wednesday, September 23, 2009

அகிம்சை -- வீரம் ?

" அகிம்சைக்கும் வீரத்துக்கும் தொடர்பே இல்லையா ?"
" கோட்சேயின் குண்டுக்குப் பலியாவதற்குச் சரியாக 10 நாட்கள் முன்பு , ஜனவரி 20 , 1948 . காந்தி தனது தொண்டர்களில் ஒருவராகிய மனுபென்னுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்...
' ஒரு பைத்தியக்காரனின் குண்டுக்கு நான் பலியானால் , புன்னகையோடு சாக வேண்டும் . கடவுள் என் இதயத்தில் மட்டுமல்ல , உதடுகளிலும் குடியிருக்க வேண்டும்' . தான் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்று யூகிக்தும் , அதைப் புன்னகையோடு எதிர்கொள்ள விரும்பியதற்குப் பெயர் என்ன?"
--- கே. ராஜா , கம்பம் . ஆனந்தவிகடன் , 20 - 05 - 2009 .

Tuesday, September 22, 2009

மலைப் பாம்பு !

மலைப் பாம்புகள் ஆடுகள் , சிறுத்தை , ஆறடி நீள முதலைகளைக்கூட விழுங்கக்கூடிய வல்லமை படைத்தவை . சில சமயம் முள்ளம்பன்றிகளைக்கூட விழுங்கிவிட்டு , அதன் முட்கள் பாம்பின் உடலுக்கு வெளியே நீட்டிக்கொள்வதும் உண்டு .
பொதுவாக , மலைப் பாம்பின் வயிற்றில் இருக்கும் அமிலம் இரையின் குளம்புகள் , கொம்பு , பற்களைக்கூடக் கரைத்து ஜீரணித்துவிடும் . மலைப் பாம்பு காடுகளிலும் , நதிக்கரை ஓரமாகவுமே அதிகம் வசிக்கும் . மலைப்பை ஏற்படுத்தும் பெரிய பாம்பு என்பதால் மலைப் பாம்பு . உலகிலேயே பெரிய பாம்பான ' அனகோண்டா' வின் பெயர் தமிழில் இருந்து போனது என்பது பலருக்குத் தெரியாது . ' ஆனை - கொல்றா ' என்பதுதான் மருவி அனகோண்டா ஆனது .( ஆதாரம் -- என்சைக்ளோபீடியா ஆஃப் அனிமல்ஸ் )!
--- ஹாய் மதன் , ஆனந்தவிகடன் , 20 - 05 - 2009 .

Monday, September 21, 2009

வரலாறு !

பெரும்பாலான வரலாறுகள் மன்னர்களை மையப்படுத்தியவையே , மக்களை மையப்படுத்தியவை அல்ல . இரா . பூபாலனின் இந்தக் கவிதையை படியுங்கள் ...
' மகாபாரதம்
இதிகாசமானது .
பகவத்கீதை
வேதமானது .
கண்ணன் , அர்ச்சுனர்
அனைவரும் கடவுளானார்கள் .
எல்லாம் சரி ,
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள் !'
--- வே. திருநாவுக்கரசு , பேராவூரணி . ஆனந்தவிகடன் , 13 - 05 - 2009 ..

Sunday, September 20, 2009

போராட்டம் -- பயங்கரவாதம் !

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்த அமைதிப் படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார் . அமைதிப் படை இந்தியா திரும்பிய பிறகு யோணன் சிங்குக்கு வீர விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது . இந்தச் செய்தியைத் தன் அப்பாவிடம் சொன்ன யோணன் , விழாவுக்கு அவரையும் அழைத்தார் . ஆனால் , ரன்பீர்சிங்கோ , ' ஓர் இன விடுதலையை அடக்கியதற்காகக் கொடுக்கப்படும் விருதை வீர விருதாகக் கருத முடியாது . அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைய வேண்டாம் ! என்றார் . யோணன் சிங் அந்த விருதைப் புறக்கணித்தார் . ஒரு விடுதலைப் போராட்டத்தின் வலி என்ன என்பதை பகத்சிங்கின் பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் ரன்பீர் சிங்கால் அப்படிச் சொல்ல முடிந்தது ! போராட்டத்துக்கும் , பயங்கரவாதத்துக்கும் என்ன விதியாசம் என்பதை , உண்மையாக விடுதலையை நேசிப்பவர்களால் தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும் .
--- எம்.ராஜா , பூண்டி . ஆனந்தவிகடன் , 13 - 05 - 2009

Saturday, September 19, 2009

தீவிரவாதிகள் !

அவன் ஓர் ஏழைச் சிறுவன் . அவனுடைய தந்தை பஸ் ஸ்டாப் ஓரமாக நடைபாதயில் பஜ்ஜி சுட்டு விற்பவர் . வறுமை காரணமாக வேலை தேடி அந்தச் சிறுவன் லாகூருக்குப் போகிறான் . வேலை கிடைக்கவில்லை . பிறகு ராவல்பிண்டி . அங்கேயும் வேலை கிடைக்கவில்லை . பசிக் கொடுமை காரணமாக , சகா ஒருவனுடன் சேர்ந்து ' வீடுகளில் புகுந்து திருடலாம் ' என்று முடிவு செய்கிறான் . அதற்கு ஆயுதம் தேவை . ராவல்பிண்டியில் ராஜா பஜாரில் எதுவும் கிடைக்கும் . துப்பாக்கிகள் கூட . தற்செயலாக , மறைவாக இருந்த ஆயுதக் கடைக்குள் இருவரும் நுழைய அது லஸ்கர் - இ - தொய்பா பயங்கர இயக்கத்தின் கடை . துப்பாக்கி கிடைக்கிறது . திரும்பும்போது கடைக்காரன் ' தம்பிகளா ! துப்பாக்கி சுடத் தெரியுமா ?' என்கிறான் . தெரியாது என்றவுடன் ' உள்ளே வாருங்கள் ' என்று அழைக்கிறான் அவன் . இளைஞர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சியும் , பணமும் கிடைக்கிறது . கூடவே மூளைச் சலவையும் . இப்போது அந்த இளஞன் ஏ. கே .47 . போன்ற துப்பாக்கிகளை சர்வ அலட்சியமாகக் கையாளக் கூடிய ஒரு பயங்கரவாதி ! அவனுக்கு உதவியவர்களிடம் நன்றியுணர்வோடு ' எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள் !' என்கிறான் . ' நீங்கள் மும்பைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது !' என்று பதில் வருகிறது . மும்பை கொடூரத் தாக்குதலில் , உயிரோடு பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அந்த இளைஞன்தான் கஸாப் .
ஸோ , நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் தீவிரவாதிகள் உருவாகிறார்களா ... உருவாக்கப்படுகிறார்களா...எது சரி என்று !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் , 13 - 05 - 2009

Thursday, September 17, 2009

கோவேறு கழுதை !

ஆச்சர்யமாக இருக்கிறது . கோவேறு கழுதைகளுக்குத் தாய்மை அடையும் தன்மை இல்லை .
குதிரை குதிரையையும் , கழுதை கழுதையையும்தான் புணர வேண்டும் . குதிரையும் கழுதையும் புணர்வதால் பிறப்பது கோவேறு கழுதை . விதியை மீறியதால் ' மிஸ்டர் பரிணாம வளர்ச்சிக்குக் கோபம் .' ஆகவே , கோவேறு கழுதைக்கு வாரிசுகள் பிறக்காது . ஜெனடிக் சட்டம் அப்படி !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் , 13 - 05 - 2009

Wednesday, September 16, 2009

ஹர்த்தால் .

முன்பெல்லாம் எல்லாக் கடைகளையும் அடைக்கச் செய்யவேண்டும் என்றால் , ஒவ்வொரு கடையின் பூட்டிலும் ஒவ்வொரு எலும்புத் துண்டைச் செருகி வைத்துவிடுவது வழக்கமாம் . அப்படி எலும்புத் துண்டு இருப்பதைப் பார்க்கும் கடைக்காரர்கள் , அன்று கடையையே திறக்க மாட்டார்கள் . ' ஹட் ' என்ற இந்தி வார்த்தை எலும்பையும் , ' தால்' என்ற இந்தி வார்த்தை பூட்டையும் குறிப்பிடுவன . அதனால்தான் , கடையடைப்புக்கு ' ஹர்த்தால் ' என்ற பெயர் வந்தது .
பின்னர் , இந்த எலும்பு சம்பந்தப்பட்ட அனாசார வார்த்தையை உபயோகிக்க விரும்பாமல் , ' அந்தந்தக் காரியத்தை அப்படியே அப்படியே போடு ' என்று பொருள்படும் ' கார்பார் பந்த் ' என்ற வார்த்தையையே ஹர்த்தாலுக்குப் பதில் உபயோகிக்கத் தொடங்கினர் .
--- ஆனந்தவிகடன் , 13 - 05 - 2009 .

Tuesday, September 15, 2009

அப்படியா !

*அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முழுப் பெயர் ' எல்டியூப் லோடி நியூஸ் டிராசெனராலா ரெய்னா - டி - லாஸ் ஏஞ்சல்ஸ் ' ஆகும் . உலகிலேயே மிக நீளமான பெயர்
கொண்ட நகரம் இதுதான்
* மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதக் க்ற்றுத்தரும் நாடு ஜப்பான் .
* மக்கள் பயணம் செய்யும் கப்பல் ' லைனர் ' என்ப்படுகிறது . சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல் ' டிராம்ப் ' எனப்படுகிறது .
* நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த முதல் இந்திய ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல்கலாம் .
* பெண்களுக்கு நோய்கள் ஆண்களைக் காட்டிலும் விரைவாக குணமாகுமாம் .
* பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் நீரை அருந்துமாம் .
* தினமும் சராசரியாக நூறு முடிகள் உதிர்வது வழக்கமான ஒன்றுதான் . உதிர்ந்தது பிறகு அதுவாகவே உதிக்கும் .
* நவீன செக்ஸாலஜியின் தந்தை என்றழைக்கப்படும் மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன் , ஓர் ஆண் இரண்டு நிமிடம்தான் நான்ஸ்டாப்பாக உறவில் ஈடுபட முடியும் என்று ஆய்வு
செய்து நிரூபித்துள்ளார் .
*'சீனாவின் நாகரிகத் தொட்டில்': 8 ஆயிரத்து 464 கிலோ மீட்டர்கள் தூரம் பொங்கிப் பாயும் மஞ்சள் ஆறு சீனாவிலேயே இரண்டாவது பெரிய நதி . உலகிலேயே ஆறாவது பெரிய
நதி . .
* விஞ்ஞானத்தின் முதல் மட்டுமல்ல , சிறப்பான சூப்பர் கண்டுபிடிப்பு சக்கரம் தான் .
* ஒவ்வொரு மின்னலுக்கும் மின்சார சக்தியின் அளவு மாறுபட்டாலும் சராசரியாக ஒரு மின்னல் கடத்திச் செல்லும் மின்சாரத்தின் அளவு ஒரு பில்லியன் ஜூல்ஸ் என்று
கணக்கிட்டிருக்கின்றனர் .
*ஓர் ஆணுக்கு துயரம் நெஞ்சை கவ்வும் போது தாய் மடியும் , சந்தோஷம் தலைக்கு ஏறும் போது மனைவி மடியும் சுகம் தரும் .
* தவளைகள் கண்கள் மூலம்தான் சத்தத்தைக் கேட்கின்றனவாம் .
* இப்போதுள்ள போயிங் 747 விமான சிறகின் பாதி நீளம் கூட ரைட் சகோதரர்கள் முதன் முதலாக கண்டுபிடித்த விமானத்திற்கு கிடையாது .
* கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய பாக்டீரியா முதல் மிகப் பிரமாண்டமான திமிங்கிலம் வரை இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினமும் மனிதனுக்கு ஏதோ ஒரு
வகையில் நன்மை செய்பவையாகவே இருக்கின்றன .
* மனிதனுக்கு எந்த விதத்திலும் உதவாமல் தொந்திரவு கொடுக்கும் ஒரே உயிரினம் கொசு .
* மின்சாரத்தைப் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆண்ட்ரே ஆம்பியர் . மின்சாரத்தின் சக்தி இவர் பெயராலேயே ஆம்பியர் என்று அளவிடப்படுகிறது .
* மாவீரன் அலெக்ஸாண்டர் , ப்ளேட்டோ , டாவின்சி , மைக்கேல் ஏஞ்சலோ... இப்படி ' ஹோமோசெக்ஸ் ' மேதைகளைப்பற்றிய பெரிய புத்தகமே உண்டு .
* சுத்தமும் சுகாதாரமும் அற்ற குடியிருப்புப் பகுதிகள் , பலதரப்பட்ட மக்கள் கூடும் இடங்கள் , சுகாதாரக் கேடு , பராமரிப்பு இல்லாத சுத்தமற்ற கழிவறைகள் , நீண்ட நாள் மாசு பட்ட நீர்த்தேக்கம் போன்றவை வைரஸ் கிருமிகள் பரவும் இடங்களாகும் .
* கர்ப்பிணிகள் , தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஊறுகாய் தவிர்ப்பது நல்லது . குறிப்பாக வெள்ளரிக்காய் ஊறுகாய் வேண்டாம் . ' குகர்பிட்டின் ' என்கிற ஒருவித நச்சுப்பொருள் வெள்ளரிக்காயில் இருப்பதுதான் அதற்குக் காரணம் .
* 62 ஆண்டுகள் , இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் என்கிறது ஐ. நா. சபையின் மனித மேம்பாட்டு ஆய்வு .
* சுத்தமும் சுகாதாரமும் அற்ற குடியிருப்புப் பகுதிகள் , பலதரப்பட்ட மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங்கள் , சுகாதாரக் கேடு , பராமரிப்பு இல்லாத சுத்தமற்ற கழிவறைகள் , நீண்ட நாள் மாசு பட்ட நீர்த் தேக்கம் போன்றவை வைரஸ் கிருமிகள் பரவும் இடங்களாகும் .
* 165 கோடி ரூபாய் செலவில் , சென்னையில் அதிநவீன நூலகத்தைத் தமிழக அரசு அமைக்கவுள்ளது .

Monday, September 14, 2009

அரசியல் ஆத்திசூடி !

அகப்பட்டதைச் சுருட்டு .
ஆதாயம் என்றால் காலைப் பிடி .
இலஞ்சம் வாங்கு .
ஈந்தவனின் ( கொடுத்தவனின் ) காரியத்தை நினைவுகொள் .
உறவாடிக் கெடு .
ஊர்ப் பணத்தில் உலா வா .
எதிர்த்தவனை ஒழித்துக்கட்டு .
ஏழைக்கு உதவுவதாய் நடி .
ஐயோ என்று , யார் இறந்தாலும் அழுது புலம்பு .
ஒன்றாய் இருந்து ஊழல் செய் .
ஓட்டுக்கு விலை பேசு .
ஔவை போன்றோர்க்கு அடிக்கடி சிலை வை .
எஃகு போல் எந்த கமிஷன் வந்தாலும் எதிர்கொள் .
--- எஸ். ஜெயம் , கடலூர் - 1 . ஆனந்தவிகடன் . 13 - 05 - 2009 .

Sunday, September 13, 2009

திப்பு சுல்தான் .

மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பெங்களூர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தார் . அவர் பிறந்த வருடம் குறித்து இரு வேறு தகவல்கள் கூறப்படுகிறது . எனினும் , மைசூர் மன்னர் ஹைதர் அலி , அவரது 2 - வது மனைவி வாதிமா என்ற பெற்றோருக்கு 1750ம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி திப்பு சுல்தான் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .
மைசூர் புலி என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தான் தன் தந்தை மரணத்துக்குப் பின்னர் 1782 ம் ஆண்டு மைசூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் .
திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில்தான் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்டது . லால் பாக் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி ஹைதர் அலி காலத்தில் தொடங்கியது . ஆனால் , அதை நிறைவு செய்யும் முன்பு அவர் இறந்து விட்டார் . இதையடுத்து லால் பாக் பூங்காவை திப்பு சுல்தான் கட்டி முடித்தார் .
திப்பு சுல்தான் கண்டு பிடித்த போர் ஆயுதமான ராக்கெட்தான் உலகின் முதல் போர் ராக்கெட் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார் . போர் வீரர் மட்டுமின்றி சிறந்த கவிஞர் என்றும் போற்றப்பட்டார் .
ஹைதர் அலி மன்னராக இருந்த போது ஆங்கிலேயர்கள் மைசூர் மீது படையெடுத்தனர் . அப்போது , போரில் தந்தைக்கு உதவியாக திகழ்ந்து திப்பு சுல்தான் வெற்றி தேடித்தந்தார் .
ஆனால் , திப்பு சுல்தான் ஆட்சியில் மீண்டும் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர் . 3 வது மற்றும் 4 வது போரில் ஆங்கிலேயர் மற்றும் அதன் கூடுப்படைகளிடம் தோல்வியை திப்பு சுலதான் தழுவினார் . மைசூரின் ஆட்சி தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் 1799 ம் ஆண்டு மே மாதம் 4 ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார் .
--- தினமலர் , 04 - 05 - 2009 .

Saturday, September 12, 2009

அறிஞர் .

அண்ணாதுரை அறிஞர் .
எண்ணாத் துறைநாடி
எண்ணிப் பிற்காலம்
ஏற்பச் செய்தான்
அண்ணாத் துரை ' அறிஞன் '
சொற்பெருக்கில் நற்றொடர்கள்
ஆய்ந்தே டுத்துப்
பண்ணாத் துறைஎன்ன ?
வீழ்ந்தபுகழ் மீட்டான்
பார்ப்பனத் தீ
நண்ணாமற் செய்தான்
திராவிடர்க்கு வாழ்வளித்தான்
நன்றே நன்றே !
( அண்ணா அவர்கட்கு ' அறிஞர் ' பட்டம் கொடுத்தவர் ' கல்கி ' என்று சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள் . அண்ணாவை அவர் ' தென்னாட்டு பெர்னாட்ஷா ' என்றுதான் பாராட்டினார்.
முதன் முதலில் ' அறிஞர் ' எனக் குறிப்பிட்டுப் பாடியவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனே யாவார் . அவருடைய கவிதைதான் மேலே உள்ளது .
--- மீண்டும் கவிக்கொண்டல் , ஏப்பிரல் -- 2009 . என்ற திங்கள் இதழிலிலிருந்து

Friday, September 11, 2009

ஆண் -- பெண் !

மருத்துவ உலகம் ஒரு மனிதனை ஆணா அல்லது பெண்ணா என்று ஏழு அம்சங்களை வைத்துத்தான் தீர்மானிக்கிறது .
குரோமோசோம்களின் அமைப்பு , தாடி -- மீசை மற்றும் முடி வளர்ச்சி , உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் இருக்கும் ஜனன உறுப்புகள் , செக்ஸ் ஹார்மோங்கள் , உடலின் அமைப்பு , மூளையின் அமைப்பு .
இவற்றைக் கவனத்தில்கொள்ளாமல் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியாத ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவனை ஆண்மையற்றவன் என்று சொல்வது தவறு .
--- டாக்டர் டி . நாராயண ரெட்டி . செக்ஸாலஜிஸ்ட் . ஆனந்தவிகடன் , 29 - 04 - 2009 .

Thursday, September 10, 2009

பூவா...? இரும்பா...?

" ஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம் ? " என்று ஆசிரியர் கேட்கிறார் .
" இரும்பு " என்கிறான் ஒரு மாணவன் .
" எப்படி ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"
" உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன்... ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன் ... எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் " என்றானாம் மாணவன் .
அதைப் போல ஊழலும் மதவாதமும் ஒன்றுபோல் தோன்றினாலும் , ஊழலில் ஆபத்து அதிகம் !
பெண் -- கறுப்பு !
பெண் கறுப்பென்றால் ஒதுக்குவார்கள் . பணம் கறுப்பென்றால் பதுக்குவார்கள்

Wednesday, September 9, 2009

உயிர் !

" வைத்தியர் ராஜ நமஸ் தேஸ்து , யமராஜ ஸகோதரா " என்று ஒரு சுலோகம் உண்டு . ' யமன் உயிரைத்தான் கவர்ந்து செல்கிறான் . வைத்தியனோ உயிரோடு பணத்தையும் கவர்ந்து செல்கிறான் ' என்று பெரியவர்கள் சொல்வார்கள் .
உறவு !
உறவுகள் இல்லாது உலகம் இல்லை . சமீபத்தில் ஒரு புத்தகத்தில் , ' நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்களோ , அந்த ஊரில் விளையும் காய்கறிகளை , உணவுப்பொருட்களைச் சாப்பிடுங்கள் . அப்பொதுதான் உங்கள் உடல் அங்கிருக்கும் வெப்ப தட்பத்துக்கேற்ப இயங்கும் ' என்று எழுதப்பட்டிருந்தது . இதன் விஞ்ஞான உண்மை நமக்குத் தெரியாது . ஆனால் , நாம் வாழும் சூழ்நிலையுடன் உறவேற்படுத்திக் கொள்ளும் மனப்பான்மை இருக்கிறதே , அது பெரிதும் ரசிக்கவேண்டிய , மதிக்க வேண்டிய விஷயம் .
--- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி .

தெரியுமா உங்களுக்கு ?

" மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனா
கண்டேட் டே பத்நாமி சுபகே சஞ்சீவ சரதஸ்ஸம் "
-- ஒவ்வொரு திருமணத்தின்போதும் , மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது இந்த ஸ்லோகத்தை புரோகிதர் கூறுவார் .
இதன் அர்த்தம் தெரியுமா ?
" இது புனிதமான கயிறு . நான் நல்லபடியாக ஜீவித்திருக்க வலிமை தருவது . இதை , நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் . நீ எல்லாவித நலன்களும் , சிறப்புகளும் பெற்று நூறு வயது வாழ்வாயாக !" என்று , மாப்பிள்ளை பெண்ணைப்பார்த்து கூறுவதாக இந்த ஸ்லோகம் பொருள் தருகிறது .
---தினத்தந்தி , 07 - 04 - 2009 .

Tuesday, September 8, 2009

துளசி தீர்த்தம் .

பெருமாள் கோவில்களில் துளசி இலைகளை பிரசாதமாக கொடுப்பார்கள் . இதை , சனிக்கிழமை , ஏகாதசி நாட்கள் , திருவோண நட்சத்திரம் வரும் நாட்களில் பெறுவது மிகவும் நல்லதாகும் .
இப்படிப்பட்ட துளசியை எப்போதெல்லாம் செடியில் இருந்து பறிக்கக் கூடாது என்பதற்கும் விதிமுறைகள் உள்ளன .
பவுர்ணமி , ஞாயிற்றுக்கிழமை , சங்கராந்தி தினம் , நடுப்பகல் , இரவு , சூரியோதயத்திற்கு பிறகு மற்றும் எண்ணெய் தேய்த்த உடம்புடனும் , குளிக்காமலும் துளசி இலையை பறிக்கக்கூடாது .
--- தினத்தந்தி , 30 - 12 - 2008 .

Monday, September 7, 2009

கவுதம புத்தர் .

ஒரு சமயம் கவுதம புத்தர் , தனது சீடகளிடம் , மனித வாழ்க்கை எத்தனை காலம் ? என்று கேட்டார் . அதற்கு சீடர்கள் , 50 வருடம் , 60 வருடம் என்று ஆளுக்கு ஒவ்வொன்றாக கூறினார்கள் .
அதற்கு புத்தர் பதில் அளிக்கையில் , " நீங்கள் கூறும் பதில்கள் அனைத்துமே தவறு . உண்மையான மனித வாழ்க்கை மூச்சு இருக்கும் வரையே ! " என்றார் .
---தினத்தந்தி , 07 - 04 - 2009 .

Sunday, September 6, 2009

ஆனந்தநடனம் .

நடராஜர் ஆனந்தநடனம் புரியும் திருச் சபைகள் ஐந்து என்கிறார்கள் . அவை:
சிதம்பரம் ---------- பொன்னம்பலம் .
மதுரை --------------- வெள்ளியம்பலம் .
திருநெல்வேலி -- தாமிரச்சபை .
குற்றாலம் ---------- சித்திரசபை .
திருவாலங்காடு -- ரத்தினசபை .
--- தினத்தந்தி , 06 - 01 - 2009 .

Saturday, September 5, 2009

பதிவிரதைகள் .

சூரியனின் மனைவி --------- ------சுவர்ச்சலா .
இந்திரன் மனைவி ----------- -------சசிகலா .
வசிஷ்டரின் மனைவி ------------ அருந்ததி .
சந்திரனின் மனைவி ------- --------ரோகிணி .
அகத்தியரின் மனைவி ------------- லோப முத்திரை .
சியவண ரிஷியின் மனைவி -- சுகன்யா .
சத்தியவானின் மனைவி --------- சாவித்திரி .
நளனின் மனைவி --------------------- தமயந்தி .
ராமனின் மனைவி -------------------- சீதாதேவி .
--- தினத்தந்தி , 20 - 01 - 2009 .

Friday, September 4, 2009

தர்ப்பைப்புல் .

தர்ப்பைப்புல் , புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது . இதற்கு , ' அக்னி கர்பம் ' என்ற பெயரும் உண்டு . இந்த புல்லில் காரமும் , புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்கிறார்கள் . அப்படி செய்தால் , அவற்றின் ஓசை திறன் குறையாமல் இருக்கும் .
தர்ப்பைப்புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது . நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது . சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகமாக இருக்கும் . இதன் காற்றுபடும் இடங்களில் தொற்றுநோய்கள் வராது .
---தினத்தந்தி , 27 - 01 - 2009 .

Thursday, September 3, 2009

வெற்றிலை .

வெற்றிலையின் பின்பக்கம் உள்ள நரம்புகள் நடுநரம்பின் ஒரு புள்ளியிலிருந்து இடம் வலமாகப் பிரிந்து சென்றால் , அது பெண் வெற்றிலை .
நடுநரம்பின் வெவ்வேறு பிள்ளிகளிலிருந்து கிளை நரம்புகள் இடது பக்கமாகவோ , வலது பக்கமாகவோ பிரிந்து சென்றால் அது ஆண் வெற்றிலை .
--- மஞ்சை வசந்தன் . பாக்யா . மே 1 -- 7 ; 2009 .

Wednesday, September 2, 2009

எதையும் தாங்கும் இதயம் .

" எதையும் தாங்கும் இதயம் வேண்டும் " என்றக் கருத்தை முதன் முதலில் அண்ணா சொன்னதாக பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் . அவ்வாறு சிலர் கூறவும் எழுதவும் செய்கின்றனர் . ஆனால் , இது சரியன்று . உண்மையில் இச்சொற்றொடரைக் கூறியவர் பகுத்தறிவுச் சிந்தனையாளரான லார்ட் பைரன் என்பவர் ஆவார் . இவர் பிரிட்டிஷ் அரசால் இங்கிலாந்திலிருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார் . புறப்படுவதற்கு முன் , " டோவர் " துறைமுகத்திலிருந்து படகில் சென்றபோது , இக்கருத்தைக் கூறுகிறார் .
" என்னை நேசிப்பார்க்கு ஒரு
பெருமூச்சு
என்னை வெறுப்பார்க்கு ஒரு புன் முறுவல்
என்ன வந்தாலும் சரியே
எதையும் தாங்கும் இதயம் உண்டு ".
-- என்று கூறிவிட்டு பிரான்சுக்கு விடைபெற்றார் . இச்சொற்றொடரை அண்ணா எடுத்து ஆண்டார் என்பதே சரியாகும் .
இதேபோல் ,
நாடு என்ன செய்தது
என்று கேட்காதே !
நீ நாட்டுக்கு என்ன
செய்தாய் ?
-- என்ற சொற்றொடர் கென்னடியால் சொல்லப்பட்டது என்று பலரும் சொல்கின்றனர் . ஆனால் , அது உண்மையல்ல .
இதைச் சொன்னவர் கவிஞர் கலீல் ஜிப்ரான் ஆவார் . " புரோக்கன் விங் " " தி பிராபட் " போன்ற புகழ்மிக்க நூல்களை எழுதியவர் இவர் . அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கென்னடி இதை எடுத்தாண்டார் என்பதே உண்மை !