Sunday, January 31, 2010

அக்டோபர் .

அக்டோபர் 2 , 1869 மகாத்மா காந்தியடிகள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறப்பு .
2 , 1904 இந்தியாவின் 2 வது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறப்பு .
2 , 1906 இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மா மறைவு .
2 , 1975 முன்னாள் முதல்வர் காமராஜர் மறைவு .
3 , 1995 ம . பொ . சிவஞானம் மறைவு .
4 , 1884 சுதந்திரப்போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா பிறப்பு
4 , 1904 இந்திய சுத்ந்திரத்திற்காக பாடுபட்ட கொடிகாத்த குமரன் பிறப்பு .
5 , 1823 ராமலிங்க அடிகளார் திருமருதூரில் பிறப்பு .
5 , 1951 இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் தொடங்கியது .
9 , 1897 முன்னாள் தமிழக முதல்வர் எம் . பக்தவத்சலம் பிறப்பு .
9 , 2000 இந்திய ரிசர்வ்வங்கி புதிய 1000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டது .
10 , 1910 நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி எஸ். சந்திரசேகர் பிறப்பு .
10 , 1974 தமிழ் அறிஞர் மு. வரதராசனார் மறைவு .
12 , 1492 கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிந்த நாள் .
16 , 1799 வீரபாண்டிய கட்டபபொம்மனை , ஆங்கிலேயர் கயத்தாற்றில் தூக்கிலிட்டனர் .
16 , 1910 கர்நாடக இசை பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி பிறப்பு .
17, 1605 மொகலாயப் பேரரசரான அக்பர் மறைவு .
18 , 1871 கால்குலேட்டர் கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் மறைவு .
18 , 1931 விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் 84 வது வயதில் மறைவு .
21 , 1833 வெடி மருந்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பிறப்பு .
21 , 1952 சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்தது .
22 , 1929 உலகின் முதல் ஏர் மெயில் தபால் தலை வெளியிடப்பட்டது .
23 , கி. மு. 42 , மாமன்னர் ஜூலியஸ்சீசர் உயிர்விட்டதாக வரலாறு கூறுகிறது .
23 , 1623 துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் மறைவு .
24 , 1890 மைக்ரோஸ்கோப் உருவாக்கிய விஞ்ஞானி அன்ட்டோனி வேன் பிறப்பு .
25 , 1881 உலகப்புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காஸோ பிறப்பு .
27, 1728 இங்கிலாந்தைச்சேர்ந்த பயண வீரர் ஜேம்ஸ்குக் பிறப்பு .
27 , 1728 நவீன தையல் இயந்திரத்தை கண்டறிந்த மெரிட் சிங்கர் பிறப்பு .
27 , 2004 காமராஜர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது .
28 , 1636 அமெரிக்காவின் முதல் பல்கலை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் துவக்கம் .

Saturday, January 30, 2010

வெண்மை .

பால் வெண்மை .
பாலில் எந்தவித நிறமிப் பொருளும் இல்லை . அதாவது பாலில் உள்ள மூலக்கூறுகளுக்கு ஒளியில் உள்ள குறிப்பிட்ட நிறங்களை உட்கவரும் ஆற்றல் கிடையாது . எனவே அதில் படும் ஒளி முழுவதும் அப்படியே எதிரொளிப்பதால் பால் வெள்ளை நிறமாகவே தோன்றுகிறது .
எவரெஸ்ட் நகர்கிறது !
--- தினமலர் , அக்டோபர் 2 . 2009 .

Friday, January 29, 2010

முத்துசாமி தீட்சிதர் .

முத்துசாமி தீட்சிதர் 1835 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வழக்கம்போல பூஜைகளைச் செய்தார் . பூஜை வேளையில் தன்னுடைய சீடர்களைப் பாடச்செய்தார் . அன்று அவர்கள் பாடியது தீட்சிதர் இயற்றிய கமகப்பிரியா -- பூர்விகல்யாணி -- ராகக் கீர்த்தனையான மீனாக்ஷி மே முதம் என்ற உருப்படியை . சரணத்தில் வரும் ' மீனலோசனி பாசமோசனி ' என்ற வரியைச் சீடர்கள் பாடிக்கொண்டிருக்கும்போது ' சிவ பாஹி ' என்று உச்சரித்தார் தீட்சிதர் . இந்த உலகத்தில் அவர் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள் அவைதாம் .
--- என் . வெங்கடேசன் , ஆஸ்திரேலியா . காலச்சுவடு . செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Thursday, January 28, 2010

விதிவிலக்கு !

இறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை விதிவிலக்கு உண்டு . வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும் , வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும் , தாமரையை பறித்து 7 நாள் வரையிலும் , அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம் .
துளசியை பறிக்க .
துளசி பறிக்கக் கூட சில விதிமுறைகள் உள்ளது . திருவோண நட்சத்திரம் , சப்தமி , அஷ்டமி , துவாதசி , சதுர்தசி , அமாவாசை , பவுர்ணமி , மாதப்பிறப்பு , மாலை வேளை , இரவு நேரம் , ஞாயிறு , திங்கள் , செவ்வாய் , வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக துளசி பறிக்கலாம் .
அர்ச்சனை .
இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூக்களையும் , இலைகளையும் பறிக்கும் போது பேசிக் கொண்டோ , சிரித்துக் கொண்டோ பறிக்கக் கூடாது . அதுபோல கைகளை கீழே தொங்கவிட்ட வாக்கிலும் பறிக்கக் கூடாது . அத்துடன் கையால் உடம்பையும் , உடைகளையும் தொட்டவாறும் , கொம்புள்ள கிளைகளை முறித்தலும் கூடாது . நம் மனதில் இறைவனை முழுவதுமாக நிறுத்தி , அவன் நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும் .
--- தினமலர் , பக்திமலர் . ஆகஸ்ட் 27 . 2009 .

Tuesday, January 26, 2010

ரத்தினங்கள் !ஆண்கள் பெண்கள் மலைகள்

24 வகை ரத்தினங்கள் !
ரத்தினங்களின் வகை மொத்தம் 24 ஆகும் . இதில் 9 வகை ரத்தினங்கள் பெயர் பெற்றவை . அவை : நவரத்தினங்கள் என்று அழைக்கப்படுகின்றன . வைரம் , முத்து , மரகதம் , மாணிக்கம் , நீலம் , புஷ்பராகம் , வைடூரியம் , கோமேதகம் , பவளம் இவை நவரத்தினங்கள் .
மற்ற ரத்தினங்கள் எவை எனில் , வல்மரம் , இந்திர நீலம் , கதர்கேதளம் , பத்மராகம் , ருத்ராட்சம் , விபுலம் , விமலகம் , ராஜமணி , ஸ்படிகம் , சந்திர காந்தம் , சவுகந்திகம் , பிரஷ்மணி , ஜியோதீரசம் , ஸீவியகம் , சங்கம் என மொத்தம் ரத்தினங்கள் 24 ஆகும் .
ஆண்கள் 7 வகை .
ஆண்கள் 7 வகை என்பர் . அவை : பாலன் , மீளி , மறவோன் , திறவோன் , காளை , விடலை , முதுமகன் .
பெண்கள் 7 வகை .
பெண்கள் ஏழு வகை என்பர் . அவை : பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம் பெண் ஆகும் .
ஏழு மலைகள் .
1 . வெங்கடாத்ரி .
2 . சேஷாசலம் .
3 . வேதாசலம் .
4 . கருடாசலம் .
5 . வருஷபாத்ரி .
6 . அஞ்சனாத்ரி .
7 . அனந்தாத்ரி .
--- தினமலர் , சிறுவர் மலர் . செப்டம்பர் 25 , 2009 .

Monday, January 25, 2010

நதிக்கரை நகரம் .

இந்தியாவில் நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்கள் :
1 . கங்கை - பத்ரிநாத் , ஹரித்வார் , பாட்னா , காசி , அலகாபாத் .
2 . யமுனை - ஆக்ரா , டில்லி , .
3 . காவிரி - திருச்சி .
4 . வைகை - மதுரை .
5 . தாமிரபரணி - நெல்லை .
6 . கோதாவரி - நாசிக் .
7 . நர்மதா - விஜயவாடா .
8 . துங்கபத்ரா - பிருந்தாவனம் .
9 . சரயூ - அயோத்தியா .
10 . ஹூக்ளி - கொல்கத்தா .
11 . கோமதி - லக்னோ .
12 . பிரம்மபுத்ரா - கவுகாத்தி .
13 . ஜீலம் - ஸ்ரீநகர் .
14 . தபதி - சூரத் .
15 . மியூசி - ஐதராபாத் .
16 . அமராவதி - கரூர் .
17 . கூவம் - சென்னை .

Sunday, January 24, 2010

ஸ்பூன் எதற்கு ?

ஒரு சமயம் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் , நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்திற்கு சென்றனர் . விருந்து பரிமாறப்பட்டது . ராதாகிருஷ்ணன் கையை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொண்டு வந்தார் . சர்ச்சில் ஸ்பூனை வைத்துக்க்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க , ராதாகிருஷ்ணன் கைகளால் சாப்பிட ஆரம்பித்தார் . ஸ்பூனால் சாப்பிடுங்கள் அதுதான் சுத்தம் ; ஆரோக்கியம் என்றார் சர்ச்சில் . இல்லை , கைதான் சுத்தம் . ஏனென்றால் என் கையை நான் மட்டுமே பயன்படுத்த முடியும் . அதனால் கைதான் சுத்தம் என்றாராம் .
சிசேரியன் .
இப்போதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு குழந்தை சிசேரியன் முறையில்தான் பிறக்கிறது . புகழ் பெற்ற ரோமாபுரி தளபதி ஜூலியஸ் சீஸர் , இப்படித்தான் பிறந்தாராம் ! எனவே , அவரது பெயரையே இம்முறைக்கு வைத்துவிட்டார்களாம் ! ஒரு விஷயம் தெரியுமா ? சிசேரியனில் பிறக்கும் குழந்தை நார்மல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் , புத்திசாலியாக இருக்கிறதாம் ! அதேநேரம் , நார்மல் முறையில் பிறக்கும் குழந்தை தனது தாய் - தந்தையிடம் காட்டும் அன்பு பரிவு பாசத்தைவிட சிசேரியனில் பிறக்கும் குழந்தை குறைவாகவே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறது ஆய்வு
--- தினமலர் , வாரமலர் . செப்டம்பர் 20 2009 ..

Saturday, January 23, 2010

நவராத்திரி விரதம் .

நவராத்திரி விரதம் இரண்டு வகையாக பின்பற்றப்படுவதுண்டு . பகலும் இரவும் விரதமிருந்து தேவியை வழிபடுவது நவராத்தர விரதம் எனப்படும் . விரதமிருந்து இரவில் மட்டும் வழிபடுவது நவராத்திரி விரதம் எனப்படும் .
நவராத்திரி விரதம் , பூஜை , பாராயணம் முதலானவற்றை ஒன்பது நாட்கள் தொடர்ந்து செய்யவேண்டும் என்று விரத கல்க நூல்கள் சொல்லியிருக்கின்றன . முதல் மூன்று நாட்கள் துர்கா பூஜை , அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி பூஜை , இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி பூஜை என முப்பெரும் தேவியரை வழிபடுவார்கள் .
--- தினமலர் , பக்தி மலர் . செப்டம்பர் 24 , 2009 .

Friday, January 22, 2010

அதா சங்கதி ?

* காந்திஜிக்கு 15 வயதிலிருந்து 35 வயதுக்குள் 5 மகன்கள் பிறந்தனர் . அதில் முதல் குழந்தை , பிறந்த மூன்று நாட்களிலேயே இறந்து போனது .
* மேலாடையைத் துறந்தபின் மகாத்மா காந்தி முதன் முதலாக உரையாற்றிய இடம் மதுரையில் தற்போது ' காந்தி பொட்டல் ' என்று அழைக்கப்பட்ட இடம்தான்22
* இளவரசர் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னராக முடிசூட்டிக்கொண்ட நாளை சென்னையிலும் கொண்டாடினார்கள் . எப்படித் தெரியுமா ? தி . நகர் தெருவெங்கும் தூங்குமூஞ்சி மரங்கள் நடப்பட்டன . அன்றுதான் 555 சிகரெட் சென்னைக்கு அறிமுகமானது ..
* DOWRY என்னும் சொல்லை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர் ஷேக்ஸ்பியர் . அவர் தனது நாடகமான கிங்கியரில் உபயோகித்துள்ளார் DOWRY என்னும் சொல்லை .
* அலகாபாத்தில் உள்ள அக்பர் கோட்டையில் ஒரு ஆலமரம் உள்ளது . அம்மரம் அக்பர் காலத்திலிருந்தே இருப்பதாக சமீபதில் கண்டுபிடித்துள்ளனர் .
* மலையே இறைவன் என்பது திருவண்ணாமலையில் மட்டுமே . அண்ணாமலையின் வயது 260 கோடி ஆண்டுகள் . மலையின் உயரம் 2748 அடிகளாகும் . ஆழம் 200 கி. மீ .
* நோபல் பரிசு பெற்ற தாகூருக்கு கல்கத்தாவில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற வி. ஐ. பி. கள் வாசலில் இருந்த வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டனர் . அதில் ஒரே ஒருத்தர் மட்டும் தமிழில் கையொப்பமிடிருந்தார் . அவர்தான் தமிழக விஞ்ஞானி சர். சி . பி . ராமன் .
* சிகரெட்டில் அமோனியா , ஆர்செனிக் , கரியமில வாயு , கார்பன் மோனாக்சைட் , நிகோடின் , பார்வோ லின் , பென்ஸோபைரிடின் , ப்ரஸ்சிக் , பெண்டிலுன் , லூட்டிசைன் போன்ற 10 வகையான நஞ்சுகள் உள்ளனவாம் .
* காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்த நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து , சாரைப்பாம்பின் விஷத்திலிருந்து தயாரிக்கப்படுகிறதாம் .
* கவிஞர் ரவீந்திநாத் தாகூரும் , மோதிலால் நேருவும் ஒரே ஆண்டில் , ஒரே மாதத்தில் , ஒரே நாளில் பிறந்தவர்கள் .
* சுவாமி ராமதீர்த்தர் தீபாவளியன்று பிறந்தார் . ஒரு தீபாவளியன்று சன்னியாசம் பெற்றார் . தீபாவளி தினத்தன்று முக்தியடைந்தார் .
* தீபாவளியன்றுதான் ஆதிசங்கரர் ' ஞானபீடம் ' என்ற அமைப்பையும் , சீக்கிய குரு கோவிந்தசிங் ' கால்சா ' என்ர அமைப்பையும் தொடங்கினர் .
* விரைவில் ரிசர்வ் வங்கி 10 ரூபாயை பிளாஸ்டிக் நோட்டுகளாக வெளியிடுகிறது . ஆனால் , முத்ன் முதலாக பிளாஸ்டிக் நோட்டு வெளியிட்ட நாடு , ஆஸ்திரேலியாதான் . 1988 -ல் பத்து டாலர்
பிளாஸ்டிக் நோட்டுகளை , ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்த கேப்டன் குக் கப்பலில் வரும் படத்தோடு வெளியிட்டது .
* மனிதனின் கைகள் 27 சின்னஞ்சிறு எலும்புகளால் உருவானவை . அதனால்தான் எல்லா பக்கமும் திருப்பியும் அசைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது .
--- பாக்யா , அக்டோபர் 2 -- 8 ; 2009 .-- 9 - 15 , 2009 .- 23 - 29 ; 2009 .-- நவம்பர் 13 - 19 ; 2009 .

Thursday, January 21, 2010

தூக்கணாங்குருவி 1

ஆண் குருவி கூடு கட்டும் . பெண் குருவி சோதித்துப் பார்க்கும் . அந்தக் கூடு சரியில்லையென்றால் பெண் குருவி அந்தக் கூட்டில் வாழாது . கூட்டையும் நிராகரித்துவிட்டு தன் இணை ஆண் குருவியையும் பெண் குருவி நிராகரித்துவிடுகிறது . பெண் உரிமையை சொல்லாமல் சொல்கின்றன . தூக்கணாங்குருவிகளின் வாழ்வியல் சரித்திரம் .
--- இரா . கார்த்திகேயன் , குமுதம் , 30 - 09 - 2009 .
உங்களுக்குத் தெரியுமா ?
உலகில் முதன்முதல் தோன்றிய பத்திரிகை எது ?
' இட்ச்சிங் பங் ' என்ற சீன தினசரியே உலகில் முதன்முதல் வெளியான பத்திரிகை . அது கி. பி . 910 - முதல் பெய்யிங் நகரிலிருந்து வெளிவருகிறது . இதன் ஆசிரியர்களில் 800 பேருக்கு மேல் தங்கள் உயிரை ' அச்சுச் சட்ட ' த்தினால் இழந்திருக்கிறார்களாம் .
வக்கீல்கள் ஏன் கறுப்பு கவுன் அணிகிறார்கள் ?
கி. பி . 1714 - ல் இங்கிலாந்து தேச ராணியான ஆன் இறந்ததும் , சீமை வக்கீல்கள் வெகுநாள் வரை கறுப்புச் சட்டை அணிந்து துக்கம் கொண்டாடினார்களாம் . அந்தக் கறுப்பு சட்டை கடைசியில் அவர்கள் தொழிலின் சின்னமாகிவிட்டது .
--- காலப்பெட்டகம் . 1935 . ஆனந்தவிகடன் .

Wednesday, January 20, 2010

சாதனைக்கு துணை !

மனிதனின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுவது விண்வெளிக்குச் சென்றது . இந்தச் சாதனைக்கு துணை நின்றது ஒரு நாய் என்றால் நம்பமுடிகிறதா ? ஆம் , விண்வெளியில் உயிரினம் இருக்க முடியுமா என்று ஆராய்வதற்காக முதன் முதலில் அனுப்பபட்டது ஒரு நாய்தான் . லைகா என்ற நாய் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நாள் 1957 , நவம்பர் 3 .
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் விண்வெளித்துறையில் கடும்போட்டி நிகழ்ந்த நேரம் அது .விண்வெளித்துறையில் மைல்கல்லாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடித்தார் ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் . அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் விஞ்ஞானிகள் உருவாக்கிய திட்டம்தான் நாயை விண்வெளியின் புற சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி சோதிப்பது . ஸ்புட்னிக் -- 2 என்ற விண்கலம் இதற்காக வேக வேகமாக உருவாக்கப்பட்டது . மாஸ்கோ நகர வீதிகளில் திரிந்து கொண்டிருந்த மாங்குரல் ரகத்தை சேர்ந்த பெண் நாயை விண்வெளிக்கு அனுப்புவது என்று முடிவாயிற்று .
அந்த நாய்க்கு லைகா என்று புதுப்பெயரும் சூட்டப்பட்டது . ஸ்புட்னிக் - 2 புறப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே லைகா அதில் ஏற்றப்பட்டது . விண்வெளியின் மேல் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும்போது உயிரினத்தின் ( நாயின் ) உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்று கண்டறிய சென்சார்கள் பொருத்தப்பட்டன .நாய் உண்பதற்காக ஜெல் வடிவ உணவும் தயார்படுத்தப்பட்டிருந்தது .
1957 , நவம்பர் 3 ல் லைகாவுடன் ஜிவ்வென்று விண்ணுக்கு கிளம்பியது ஸ்புட்னிக் - 2 . ஆனால் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே நாய் உடலில் பொருத்தப்பட்டிருந்த டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து சிக்னல்கள் வரவில்லை .உடனேயே விஞ்ஞானிகளுக்கு புரிந்து போயிற்று . லைகா விண்வெளியில் இறந்துவிட்டது என்று . லைகாவின் கதி இதுதான் என்று முன்கூட்டியே தெரிந்திருந்ததால் விஞ்ஞானிகள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை . ஆனால் உலகெங்கும் இருந்து விலங்கு நல ஆர்வலர்கள் சோதனை என்ற பெயரில் நாயை சித்ரவதை செய்து கொலை செய்ததாக குற்ற்ம்சாட்டி பெரும் போராட்டங்கள் நடத்தினர் . ஆனால் ரஷ்யாவில் மட்டும் இது தொடர்பாக எந்த சர்ச்சையும் எழவில்லை .
--- தினமலர் , 03 - 11 - 2009 .

Tuesday, January 19, 2010

அழியபபோவது யாரு ?

தேனீக்களைக் காணவில்லையாம் !
இந்தக் கவலை உலகெங்கும் அதிகரித்து வருகிறது . அமெரிக்காவில் கோடிக்கனக்கான தேனீக்கள் காணாமற் போய்விட்டதைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் திரைப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது . ' வேனிஷிங் ஆஃப் ஹனிபீஸ் ' என்ற இந்தப் படம் தேனீக்கள் காணாமற் போனதற்குக் காரணம் பூச்சி மருந்துகள்தான் என்று குற்றம் சாட்டுகிறது .
தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடிமுழுகிப்போய்விடும் என்று கேட்பவர்கள் அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத்தானிருக்க முடியும் . மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும் , பயிர்கள் விளைவதும் நடக்கின்றன . மகரந்தச் சேர்க்கையின் மன்மதத் தூதர்கள் தேனீக்கள்தான் .
தேனீக்கள் காணாமற்போனதையடுத்து , ஆஸ்திரேலியாவிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது . தேனீக்கள் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன . கரையான் பூச்சிகள் முதல் , செல்போன் அலைவரிசைகளின் பாதிப்பு வரை பல காரணங்கள் இருந்தாலும் , இந்தப் படம் பூச்சி மருந்தை முக்கியக் காரணமாக விவரிக்கிறது . விதைக்குள்ளேயே சென்று ஊடுருவியிருக்கும் பூச்சி மருந்துகள் தேனீக்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வதை பூச்சி மருந்து தயாரிக்கும் பேயர் கம்பெனி மறுக்கிறது . எது எப்படியானாலும் தேனீக்கள் அழிந்தால் விவசாயம் அழியும் ; மனிதன் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .
தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பா என்று மேலைநாடுகளில் மட்டுமல்ல , விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான் என்கிறது ' டைம்ஸ் ஆஃப் இந்தியா '.
தேனீக்கள் , சிட்டுக் குருவிகள் எல்லாம் அழிவதற்குக் காரணம் பூச்சி மருந்துகள் மட்டுமல்ல , செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன . செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகலையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .
--- ஞாநி . ஓ...பக்கங்கள் . குமுதம் 04 - 11 - 2009 .

Monday, January 18, 2010

பாரதியே !

பாரதியே ! மீண்டும் நீயே வருக !
பாரதியின் ஆசை , கனவு , கவிதை , காதல் , கடமை , கண்ணியம் எல்லாமே அவர் எழுத்து மூலம் நமக்குக் கிடைத்த பெரும் வரங்களாகும் . இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே போதும் . நாம் நம்மையும் நம் நாட்டையும் சீர்படுத்தலாம் . அவர் எத்தனையோ கவிதைகளை நமக்கு அளித்து நாமும் பேரின்பம் பெற்றிருக்கிறோம் . அவரைப் போற்றிப் பாராட்டி நாம் ஒரு கவிதையைச் சமர்ப்பணம் செய்வோமா ?
மகாகவியே
உன் கவிதைகளைப் படிக்க - அவை தேனாக இனிக்க -
பெரும் இன்பத்தை அளிக்க - அதில் என்மனம் திளைக்க -
இனி உன்னைப்போல் இருக்க - அது இயலாமல் தவிக்க -
மனம் உன்னையே அழைக்க - இந்த உலகம் செழிக்க -
நீயே மீண்டும் பிறக்க - இறையருள் வேண்டுகிறேன் .
--- சாதனா ராதாகிருஷ்ணன் , இலக்கியப்பீடம் , செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Sunday, January 17, 2010

வேத , உபநிஷதங்கள் .

நமது வேத உபநிஷதங்கள் யாவும் செவி வழியாகக் கேட்டு மனத்தில் இருத்தி , திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யப்பட்டே பாதுகாக்கப்பட்டன .எனவேதான் அவற்றுக்கு சுருதி ( காதால் கேட்கப்பட்டது ) , ஸ்மிருதி ( நினைவில் வைக்கப்பட்டது ) என்ற பெயர் வந்தது . உலகத்திலேயே மிகப் பழமையான மறைநூலான ரிக்வேதம் இப்படித்தான் நமது மூதாதையரால் பாதுகாக்கப்பட்டது .
--- இளசை சுந்தரம் , இலக்கியப்பீடம் . செப்டம்பர் 2009 .

Saturday, January 16, 2010

மாவீரன் அலெக்ஸாண்டர் !

அலெக்ஸாண்டர் பல சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றிய பின் வெற்றிக் களிப்பில் சொந்த நாட்டுக்குத் திரும்ப முனைந்தான் . அவன் பயணத்தின் போது , திடீரென்று தீவிரமான நோய் ஒன்று அவனைத் தாக்கியது . உயிர் பிழைப்பதே அரிது என்ற நிலை . தன் தாயின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறாமல் மரணம் அடையப்போகிறோம் என்று அலெக்ஸாண்டருக்குப் புரிந்தது . தன் தளபதிகளை அழைத்தான் .
' என் கடைசி ஆசைகள் மூன்றைத் தவறாமல் நிறைவேற்றிவையுங்கள் ' என்றான் . ' என் சவப்பெட்டியை என் மருத்துவர்கள்தாம் சுமக்கவேண்டும் . என் இறுதி ஊர்வலம் செல்லும் பாதையில் இடுகாடு வரையில் முத்தும் , மணியும் , நான் வெற்றிகொண்ட மற்ற நவரத்தினங்களும் தூவப்பட வேண்டும் . என் இரு கைகளும் வெளியே ஊசலாடும்படிதான் என் சவப்பெட்டி மூடப்பட வேண்டும் .
தளபதிகள் கண்ணீரோடு மண்டியிட்டனர் .
' மாமன்னா . இந்த விசித்திர ஆசைகளின் நோக்கம் என்ன ?'
அலெக்ஸாண்டர் சொன்னான் : ' வாழ்வில் நான் கற்றுக்கொண்ட மூன்று முக்கிய பாடங்களை மக்களுக்குச் சொல்லிவிட்டுப் போக விரும்புகிறேன் . எப்பேர்ப்பட்ட மாமன்னராக இருந்தாலும் , மருத்துவர்களால் அவன் உயிரைக் காப்பாற்றிவிட முடியாது என்பதை அறிவிக்கவே என் சவப்பெட்டியை அவர்கள் சுமக்க வேண்டும் என்றேன் . ஒரு குன்றிமணி தங்கம்கூட என்னுடன் வரப்போவது இல்லை என்பதைத் தெரிவிக்கவே வழி எங்கும் நவரத்தினங்களைச் சிதறடிக்கச் சொன்னேன் . இந்த பூமிக்கு வந்தபோது ஒன்றுமற்றவனாக வந்தேன் . விட்டுப் போகும்போதும் , ஒன்றுமற்றவனாகப் போகிறேன் என்பதை , சவப்பெட்டிக்கு வெளியே ஊசலாடும் என் திறந்த கைகள் மக்களுக்குச் சொல்லட்டும் ' என்றான் அலெக்ஸாண்டர் . இதுதான் வாழ்வின் உண்மை .
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் , ஆனந்தவிகடன் , 16 - 09 - 2009

Friday, January 15, 2010

காடு !

' அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் , ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி தருகிறது ' என்று சொல்கிறார்களே ... நாட்டில் மழை பெய்தால் , காட்டை ஏன் இழுக்க வேண்டும் ?
' காடு ' என்பதற்கு அடிப்படையான அர்த்தமே ' அளவுக்கு அதிகமான ( மிகுதி , excessive )' என்பதுதான் . உதாரணமாக , இறந்தவர்களின் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கும் இடத்தைக்கூட ' இடுகாடு ' என்கிறோம் . ஆங்கிலத்தில்கூட forest of swords , concrete jungle என்கிற வார்த்தைகள் உண்டு .
--- ஹாய் மதன் , ஆனந்தவிகடன் . 16 - 09 - 2009 .
மார்பிள்ஸ் .
மார்பிள்ஸ் என்பது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு வகையான சுண்ணாம்புக் கல் . நம் ஊரில் பூமியைத் தோண்டினால் மண் வருவது போல ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பூமியின் உள்ளே பாறை பாறையாக மார்பிள்ஸ் கிடைக்கின்றன . அவைதான் நம் வீடுகளை அலங்கரிக்கின்றன . மார்பிள்ஸைக் கொண்டு தரைத் தளம் அமைகப்படும் வீடுகளில் எப்போதும் குளிர்ச்சி இருக்கும் . குளிர்ச்சியைத் தக்கவைக்கும் தன்மையும் , வெப்பத்தை வெளியேற்றும் தன்மையும் மார்பிள்ஸூக்கு உண்டு . காதலின் சின்னமான தாஜ்மஹால் முழுக்க , முழுக்க மார்பிள்ஸ் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது .
--- பாரதி தம்பி , கிரஹப்பிரவேசம் . ஆனந்தவிகடன் , 16 - 09 - 2009 .

Thursday, January 14, 2010

நல்ல நண்பர்கள் .

' உங்கள் நண்பர்களைப் பற்றிச் சொல்லுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் ' என்று ஓர் அறிஞர் சொன்னதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் . நண்பர்கள் நமது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் . வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கிறவர்கள் நண்பர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் .
உடல் வளர்வதற்காக வாய் உண்கிறது . வாய் உண்பதற்காக கை உதவுகிறது . கண்கள் உறங்க காது இசையைக் கேட்கிறது . கால்கள் சரியாக நடக்க கண்கள் பார்க்கின்றன . இடுப்பில் உள்ள ஆடை நழுவும்போது கை உதவுகிறது . உடலில் காயம் பட்டால் கண் அழுகிறது . இப்படித்தான் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பர் .
நல்ல ஆலோசனைகளைச் சொல்ல , கவலைகளைப் பகிர்ந்து கொள்ள , தொழில்களில் பங்குதாரர்களாக , நலிவு ஏற்படும்போது தாங்கிப் பிடிக்க , விருந்துகள் மூலம் மனச் சோர்வைப் போக்க , தகவல்களைப் பரிமாற , ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க இப்படி இன்னும் எத்தனையோ முறைகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பர் . உறவினர்கள் நம்மிடம் எப்போதும் , எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருப்பர் . நண்பர்கள்தான் நமக்காக விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பர் .
நல்ல நண்பர்களைத் தேர்வு செய்ய வேண்டும் . அவ்வாறு தேர்ந்தெடுக்கும் வரை நிதானம் வேண்டும் . தேர்ந்தெடுத்த பின் உறுதியாக இருக்க வேண்டும் .தேவையில்லாத சந்தேகங்களுக்கு இடம் தரக்கூடாது . நல்ல நண்பர்கள் இன்பத்திலும் , துன்பத்திலும் , தோல்வியிலும் உடன் இருப்பர் . நல்ல நண்பர்கள் கண்ணாடி போன்றவர்கள் . முக அழகையும் காட்டுவர் ; அழுக்கையும் காட்டுவர் . பாராட்டும்போது பாராட்டுவர் . கண்டிக்கும்போது கண்டிப்பர் . கெட்ட நண்பர்கள் நம்மைப் புகழ்ந்து கொண்டே செயலைச் சாதித்துக் கொள்வர் .
' உன்னை விட உயர்வான மனிதரைத் தவிர மற்றவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டாம் ' என்பார் சிந்தனையாளர் கன்பூஷியஸ் . நல்ல நண்பன் வெயில் காலத்தில் விசிறியாகவும் , குளிர்காலத்தில் குளிர்காயும் நெருப்பாகவும் இருப்பான் . மனைவியைவிட நண்பனிடமே சில விஷயங்களை மனம் விட்டுப் பேச முடியும் . பதற்றமின்றி பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும் .
ஒருமுறை லியோ டால்ஸ்டாய் ஒரு பூங்காவிற்குச் சென்றார் . எதிரில் வந்தவரைப் பார்த்து ' ஹலோ எப்படி இருக்கிறீர்கள் ' என நலம் விசாரித்தார் . வந்தவர் சிடுமூஞ்சி . ' நாம் இவரை இதுவரை சந்தித்ததே இல்லை . என்ன ஹலோ வேண்டிக் கிடக்கிறது ' என்றபடி போய் விட்டார் . மறுநாளும் டால்ஸ்டாய் பூங்காவிற்குச் சென்று மீண்டும் அவரை நலம் விசாரித்து , ' நேற்று நாம் இருவரும் சந்தித்தோம் . தெரியாது என்று சொல்லி விடாதீர்கள் ' என்று சொல்ல அந்த நண்பர் சிரித்து விட்டார் . இருவரும் நண்பர்களாயினர் .
கொடுத்ததை மறப்பதும் , பெற்றதை நினைப்பதும் நல்ல நட்புக்கு அடையாளம் என்கிறார் திருவள்ளுவர் . புதிய ஆடை உடலுக்கு அழகு . ஆனால் , பழைய நண்பனே வாழ்க்கைக்கு அழகு . நாம் வளமாக இருக்கும்போது நண்பர்களுக்கு நம்மைத் தெரியும் . நாம் வறுமையில் இருக்கும்போது நமக்கு நண்பர்களைத் தெரியும் . நல்ல நட்புக்கு எல்லாச் சுமைகளும் லகுவானவை . இவற்றை மனத்தில் வைத்துக் கொண்டு வெற்றிகளைப் படைப்போம் .
--- இளசை சுந்தரம் , இலக்கியப்பீடம் . ஜூலை 2009 .

Wednesday, January 13, 2010

கலப்பட பெட்ரோல் !

" பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும் . கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச் செல்லும் .
நீங்கள் எந்த பங்கில் பெட்ரோல் போட்டாலும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் அந்த பங்கின் நிர்வாகியிடம் அதை பரிசோதிப்பதற்கான ஃபில்டர் பேப்பர்களை கேட்டு வாங்குங்கள் . அதில் சிறிது பெட்ரோலை விடுங்கள் . எந்த தடயமும் இல்லாமல் மாயமாய் மறைந்துவிடும் . கலப்படம் இருந்தால் திட்டுத் திட்டாய் கலப்படம் செய்யப்பட்ட பொருளின் கறை படிந்து நிற்கும் .
கலப்படம் இல்லாத பெட்ரோலைக்கூட அதன் தரம் எப்படி இருகிறது என்று நீங்கள் பரிசோதித்துப் பார்க்க நினைத்தால் அதற்கான டென்ஸிட்டி மீட்டார் - அடர்த்திமானியும் பங்கில் இருக்கும் . அதை வாங்கி டென்ஸிட்டியை அளவிட்டு , பங்கில் போர்டில் எழுதிப் போட்டிருக்கும் அடர்த்தியும் இதுவும் ஒன்றாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம் .அதில் ஏதும் முரண்பாடு தென்பட்டால் அந்த பங்கில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு உங்கள் புகாரை தெரிவிக்கலாம் . அந்த தொலைபேசி எண்ணும் எல்லா பங்கிலும் எழுதப்பட்டிருக்கும் .
--- தகவல் தமயந்தி , குமுதம் , 16 - 09 - 2009 .

Tuesday, January 12, 2010

கத்துதல்... காணுதல் ...!

சகுனம் பார்க்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது . நம் மக்கள் பார்க்கும் சகுனங்களில் சில :
கத்தலாம் காணக் கூடாது -- எது ?
காணலாம் கத்தக் கூடாது -- எது ?
கத்தவும் செய்யலாம் , காணவும் செய்யலாம் -- எது ?
கத்தவும் கூடாது , காணவும் கூடாது -- எது ?
விடை : கழுதை , நரி , கருடன் , பூனை .
-- பிச்சாண்டார் கோவில் திரு . ஜி . பாலசுப்பிரமணிய பாகவதர் , வானொலியில் நிகழ்த்திய சங்கீத உபன்யாசத்தின்போது கூறியது . 11 - 08 - 1974 .

பண்புகள் !

பார்ச்சூன் என்ற அமெரிக்க வியாபாரப் பத்திரிகை உயர் பதவிகளை வகிக்கும் 75 பேரை பேட்டி கண்டு , 15 முக்கிய பண்புகளை வெளியிட்டுள்ளது . அவை :
தீர்ப்பளித்தல் , முன்முயற்சி , நம்பகத்தன்மை , தொலைனோக்குப் பார்வை , சக்தி , வேலைவாங்குதல் , இனிமையாகப் பழகுதல் , சரியான நேரத்தில் முடிவெடுத்தல் , பதற்றப்படாத உணர்ச்சி , சார்ந்திருத்தல் , நேர்மையாக இருத்தல் , வெற்றிக் கனவுகள் , அர்ப்பணம் , நடு நிலைமை , ஒத்துழைத்தல் .
நண்பர்களுக்கு மட்டுமன்று ; எதிரிகளுக்கும் கருணை காட்டுபவன்தான் உண்மையான தலைவன் . தனக்குரியவர்களைக் காப்பாற்றுவது தலைவனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது . தன்னைப் பிடிக்காதவர்களுக்கும் பரிவு காட்டுவது தலைமையின் உச்சப் பண்பு .
--- இளசை சுந்தரம் , இலக்கியப்பீடம் . ஆகஸ்ட் 2009 .

Monday, January 11, 2010

அப்படியா ?

* நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம் .
* குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் . முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும் , குதிரையின் இதயம் 38 முறையும் , சுண்டெலியின் இதயம் 200 முறையும் , நாயின் இதயம் 118 முறையும் , ஆட்டின் இதயம் 60- லிருந்து 78 முறையும் , யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம் .
* அறிஞர் ' வால் ' என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு , பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை , செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார் .
* பாம்பைக் கண்டால் பயப்படுவதற்கு அறிவியல் பெயர் ஒபிடி போபியா .
* எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ' ஓ ' பாஸிட்டிவ் .
* செல்போனில் சிம் கார்டு பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் , அதுவல்ல . தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தயாரிக்கப்படுகிறது சிம்கார்டு .
* 'வெள்ளெழுத்து ' என்ற குறைபாடு 40 வயதானால் கட்டாயம் எல்லோருக்கும் வரும் . இது ஒரு நோய் அல்ல . முதுமை தொடக்கத்தின் அடையாளம் . இதை ' சாளேஸ்வரம் ' என்றும் அழைப்பர் .
* ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர் . .
--- பாக்யா இதழிலிருந்து .

Sunday, January 10, 2010

கங்கண சூரியகிரகணம் !

108 வருடங்களுக்கு பிறகு , ஜனவரி 15 -ந்தேதி 2010ல் வருகிறது .
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரன் மறைக்கப்படுகிறது . இதுவே சந்திர கிரகணம். அது போல சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவது சூரியன் மறைக்கப்படுகிறது . இதுவே சூரியகிரகணம் . உலகில் வருடத்திற்கு 3 முறை சந்திர கிரகணமும் , 2 முதல் 5 வரை சூரிய கிரகணமும் ஏற்படுகிறது .
சூரியனை சந்திரன் நேருக்கு நேர் மறைக்கும்போது அதிகபட்சமாக சூரியனை மறைத்தாலும் சூரியன் ஒரு வளையம் போல தெரியும் . இதுவே கங்கண சூரிய கிரகணம் . அதுவும் உலகில் இது எல்லா இடத்திலும் கங்கண சூரிய கிரகணமாக தெரியாது . கங்கண சூரிய கிரகணம் ஒரு இடத்தில் தெரிந்தால் மீண்டும் அதே இடத்தில் தெரிய 108 ஆண்டுகள் ஆகும் . அதுபோல 108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் தமிழ் நாட்டிற்கு ஜனவரி மாதம் 15 -ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெரியும் .
இந்த சூரிய கிரகணத்தை தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க்களிலும் , கேரளாவின் தெற்கு பகுதிகளிலும் நன்றாக தெரியும் .
இதற்கு முந்தைய கங்கண சூரிய கிரகனம் தமிழ் நாட்டில் 1901 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்டுள்ளது . இனி அடுத்த கங்கண சூரிய கிரகணம் 20019 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வர உள்ளது .கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது .
--- தினத்தந்தி ,தினமலர் -- 18 . 12 . 2009 .

ஏழு சிரஞ்சீவிகள் !

என்றும் பதினாறாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசைப்படுகின்றனர் . ஆனால் , பிணி , மூப்பு , சாக்காடு கேட்காமலேயே வந்துவிடுகிறது . ஆனால் , இந்த மூன்றும் தங்களை அண்டாமல் இருந்தவர்கள் என்றும் சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர் . அவர்கள் ஏழு பேர் . அவர்களுடைய பெயர்கள் :
அஸ்வத்தாமா , பலி , வியாஸர் , அனுமான் , விபீஷணன் , கிருபர் , பரசுராமர் முதலியோர் ஏழு சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர் . மேலும் மார்க்கண்டேயர் சிவனால் சிரஞ்சீவி ஆக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Saturday, January 9, 2010

செப்டம்பர் .

செப்டம்பர் 01 , 1947 ஐஎஸ்டி நேரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது .
11 , 1921 மகாகவி சுப்ரமணிய பாரதியார் மறைவு .
13 , 1814 அமெரிக்காவில் முதன்முதலாக தேசிய கீதம் பாடப்பட்டது .
14 , 1901 மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் ஏற்பட்டது .
14 , 1941 இந்தியாவில் முதல் வெளினாட்டு தபால்கர்ர்டு விற்பனைக்கு வந்தது .
15 , 1909 முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் பிறப்பு .
15 , 1928 பென்சிலின் மருந்தை அலெக்சாண்டர் பிளாமிங் கண்டுபிடித்தார் .
15 , 1949 இந்தி மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டது .
15 , 1950 தமிழ் அறிஞர் மறைமலையடிகள் மறைவு .
15 , 1981 தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உருவாக்கப்பட்டது .
16 , உலக ஓசோன் தினம் .
18 , 1709 முதல் ஆங்கில டிக்ஸ்னரியை உருவாக்கய சாமுவேல் ஜான்சன் பிறப்பு .
19 , 1945 இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு வாக்குறுதி அளித்தது .
19 , 1968 ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடித்த செஸ்ட்டர் கால்சன் இறப்பு .
20 , 1986 திருநெல்வேலி கட்டபொம்மன் , சிதம்பரனார் மாவட்டங்கள் தோற்றம் .
21 , அண்டார்டிகாவில் ஆண்டுக்கு ஒரு முறை சூரியன் உதிக்கும் நாள் .
21 , 1985 சீனாவில் முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறப்பு .
22 , 1539 சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் மறைவு .
22 , 1791 டைனமோ கண்டறிந்த மைக்கேல் பாரடே பிறப்பு .
26 . 1816 புதுச்சேரி பிரஞ்சு ஆதிக்கதின் கீழ் வந்தது .
26 . 1954 கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மறைவு .
27 . 1825 ஸ்டீவென்சன் கண்டுபிடித்த ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது .
27 . 1833 உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்த ராஜாராம் மோகன்ராய் மறைவு .
28 . கி. மு . 551 சீனாவின் தத்துவஞானி கன்பூசியஸ் பிறப்பு .
28 . 1895 நுண்ணுயிரியல் அறிஞர் லூயிபாஸ்டர் மறைவு .

Friday, January 8, 2010

அமேசான் நதி !

எங்கேயாவது ' நல்ல நீர்க் கடல் ' உண்டா ?
கடல் என்றாலே உப்பு நீர்தான் . உப்பின் அளவு மாறுபடலாம் . நல்ல நீர்க் கடல் ?! 6, 000 கி. மீ . நீளம் உள்ள உலகப் பெரும் நதி அமேசான் . உலகத்தின் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு அந்த நதியில் மட்டுமே ஓடுகிறது ! கடலுக்குள் கலந்த பிறகும் தன் தனித் தன்மையை இழக்காமல் ஆவேசமாகப் போராடும் அந்த நதி -- ஒரு சுத்த வீரன் ! அங்கே அட்லாண்டிக் கடலுக்குள் 180 கி. மீ. தொலைவுக்கு அதன் ஆக்கிரமிப்புத்தான் . அதாவது நல்ல நீர் ! பிறகு போராடி , உப்பு நீரிடம் தோற்கிறது அமேசான் Amaze என்றாலே ஆச்சர்யம் !
--- ஆனந்தவிகடன் , 02 - 09 - 2009 ..

Thursday, January 7, 2010

3 குரங்கு பொம்மை !

தீயவைகளைப் பார்க்காதே , தீயவைகளை கேட்காதே , தீயவைகளைப் பேசாதே!
இந்த குரங்குப் பொம்மைகளைப் பார்த்திருக்கலாம் . சரி , இந்தப் பொம்மைகளுடைய பெயர் என்னன்னு தெரியுமா ?
தீயவைகளை பார்க்காதே ( கண்களை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : மிஷாரு .
தீயவைகளை கேட்காதே ( காதுகளை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : கிகஷாரு .
தீயவைகளை பேசாதே ( வாயை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : இவஷாரு .
--- தினமலர் சண்டே ஸ்பெஷல் , 23 - 08 - 2009 .

Wednesday, January 6, 2010

தெரிந்து கொள்வோம் !

* பெருங்காய வாசனையை ஆங்கிலேயர்கள் , ' சாத்தானின் சாணம் ' என்று அழைக்கிறார்கள் .
* உருளைக் கிழங்கு பற்றி பைபிளில் எந்தக் குறிப்பும் இல்லை என்பதால் , அதைச் சாப்பிடக்கூடாது என்று பல நூறு வருஷம் ஐரோப்பாவில் தடுத்து வைத்திருந்தார்கள் . பின்பு ரஷ்யாவிலும் , இங்கிலாந்திலும் அது அடிமைகளுக்கும் , ஆடு , மாடுகளுக்கும் போடப்படும் உணவாக இருந்தது .
* மனைவியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு , கணவன் அனுசரித்துப் போவதற்கு Seduction என்று பெயர் .
* உலக மக்கள் தொகையில் 7 முதல் 10 சதவிகிதம் பேர் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் . ' இது நோய் இல்லை , அதனால் , உங்கள் பிள்ளைகள் இடது கையைப் பயன்படுத்தினால் அதைத் திருத்துகிறேன் என்று முயற்சிக்க வேண்டாம் . அது குழந்தைகளின் இயல்பான திறமைகளைப் பாதிக்கும் ' என்கிறார்கள் மருத்துவர்கள்
* ஆண்களைப் போல பெண்களுக்கும் மீசை , தாடி , உடல் பாகங்களில் முடி வளர்வதை Hirsutism என்போம் .
* ஒவ்வொரு தலைமை தபால் நிலையத்திலும் Philatelic Bureau என்று இருக்கும் . அங்கு புதிதாக வெளியிடப்படும் ஸ்டாம்புகளை வாங்கிக்கொள்ளலாம் . அரிய வகை ஸ்டாம்புகளை விற்பதற்காகவே அங்கீகாரம் பெற்ற பிரத்யேக டீலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பார்கள் . Phila India. 2009 கேட்லாக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் . அந்த ஸ்டாம்பின் மார்க்கெட் ரேட்டைக் காட்டிலும் குறைந்த விலைக்கு அந்த டீலர்களிடம் வாங்கிக்கொள்ளலாம்
* வயது அதிகமுள்ள பெண்ணுக்கும் வயது குறைவான ஆணுக்கும் உள்ள உறவுக்கு ' மே- டிசம்பர்- ரிலேஷன்ஷிப் ' என்று பெயர் . .
--- ஆனந்தவிகடன் , 26 - 08 - 2009 .-- 02 - 09 - 2009 -- 09 - 09 - 2009 ..

Tuesday, January 5, 2010

அலர்ஜி ?

நாம் உண்ணும் பொருளோ அல்லது வெளியில் உள்ள ஒரு பொருளோ நம் உடலுக்குள் போகும்போது , சில ரசாயனப் பொருட்களை வெளியிடும் . அதை எதிர்த்துப் போராட நம் உடலும் நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் சில ரசாயனங்களை உண்டாக்கும் . இந்த இரண்டு ரசாயனங்களும் ஒத்துப்போய்விட்டால் பிரச்னை இல்லை . ஒன்றுக்கொன்று எதிர்த்துப் போரிடும்போதுதான் உடலில் அலர்ஜி ஏற்படுகிறது .
---இலையரவி . தகவல் தமயந்தி , குமுதம் , 26 - 08 - 2009 .

Monday, January 4, 2010

Highlights of year 2009 .

Highlights of year 2009 .
09 - 09 - 09 ...... This day comes only in a 100 year .
22 - 07 - 09 ...... The biggest Suryagrahanam in 100 years .
2009 started and ended on Thursdays .
2009 had 5 Saturdays and 5 Sundays in just one month . This happens once in 723 years .
7 th August 2009 at 12 hrs 34 minutes 56 seconds , The time was mentioned as 12 : 34 : 56 07 - 08 - 09 . This 123456789 may come only once in a lifetime .
--- Message from Mr . Karthikesan from Puducherry .
SMS to selloor Kannan from M . Karthikesan , Puducherry .

எரிபொருள் செலவு !

விமானங்களைப் பொறுத்தவரை எரிபொருள் செலவு என்பது அதன் எஞ்சினின் திறன் , ஏற்றிச்செல்லும் பயணிகளின் எண்ணிக்கை , பறக்கும் வேகம் என பலவற்றைப் பொறுத்தது .
சுமார் 900 கி. மீ . வேகம் வரை பறக்கக்கூடிய போயிங் 74ஏ விமானம் ஒன்று 400 பயணிகளுடன் பறக்க நேர்ந்தால் , மணிக்கு 12, 788 லிட்டர் பெட்ரோல் செலவாகும் என்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் . கொஞ்சம் தலைசுற்ற வைக்கும் இந்தக் கணக்கை இன்னொரு வகையில் எளிமையாகக் கணக்கிடுகிறார்கள் .
75 சதவிகித பயணிகளுடன் பறக்கும் ஒரு விமானத்தில் ஒரு பயணி 1 லிட்டர் எரிபொருள் செலவில் 22. 2 கி. மீ. தூரம் பயணம் செய்ய முடியுமாம் . அதாவது ஒரு காரில் டிரைவர் மட்டும் அதை ஓட்டிச் செல்லும் போது ஏற்படும் எரிபொருள் விரயத்தைவிட இது சிக்கனமானது என்றும் சொல்லப்படுகிறது .
எரிபொருள் விலையை பொறுத்தவரை இந்தியாவில் ஒரு கிலோலிட்டர் விமான எரிபொருள் சுமார் 35,000 ரூ முதல் 45,000 ரூ வரை இருக்கிறதாம் .
--- இளையரவி . தகவல் தமயந்தி , குமுதம் 26 - 08 - 2009 .

Saturday, January 2, 2010

அசத்தல் ஐடியா .

* வெள்ளைப்பூண்டு சில நேரங்களில் அவசரமாக தேவைப்படும் . அச்சமயங்களில் பூண்டை உரித்து உபயோகப்படுத்த நேரம் பிடிக்கும் . இதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட அலவு பூண்டை வாங்கி தோலுரித்து நல்லெண்ணையில் போட்டு வைத்து விடலாம் . பூண்டு தேவைப்படும் சமயத்தில் ஒரு ஸ்பூன் அளவு அந்த எண்ணையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் . வெள்ளைப்பூண்டு போட வேண்டிய அவசியம் இல்லை .
* ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசி கலர் மங்கி போயிருந்தால் , சிலர் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்வது உண்டு . அப்படி செய்த பின்னும் அரிசி வெள்ளை வெளேர் என்று மாறவில்லையென்றால் , கவலைப்பட வேண்டாம் . அதாவது ... அரிசியை அடுப்பில் வைத்தவுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச் சாற்றை ஊற்றுங்கள் . பின்பு சொறு வெள்ளை வெளேர் என்று காட்சியளிக்கும் . குழைந்தும் போகாது .
* முட்டைகோஸ் பொரியல் நல்ல நறுமணத்துடன் இருக்கும் . ஆனால் , முட்டைகோஸ் சமைத்த ஓரிரு மணி நேரத்தில் அந்த நறுமணம் குறைந்து விடும் . அப்படி நறுமணம் குறையாமல் இருக்க , பொரியல் செய்யும்பொழுது சிறிதளவு இஞ்சி சேர்த்துச் கொள்ள வேண்டும் . நறுமணம் குறையவே குறையாது .
--- பாக்யா இதழ் . ஜூம் 26 - ஜூலை 2 ; 2009 .

கல்லணை !

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால் , அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும் . அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதயும் . இதைத்தான் டெக்னாலஜியாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள் .
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு , படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை . ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
--- தினமலர் . நவம்பர் 6 , 2009 .