Sunday, February 28, 2010

7 படிகள் !

வெற்றிக்கு 7 படிகள் !
தனிப்பட்ட வளர்ச்சியை ஏழு படி நிலைகளாக விவரிக்கும் நூல் , ரால்ஃப் ஸ்மித் எழுதிய ' செவன் லெவல்ஸ் ஆஃப் சேஞ் ' ( The 7 Levels Of Change ) என்ற புத்தகம் .
அதென்ன ஏழு படிகள் ? ஒவ்வொன்றாக ஏறி மேலே போகலாமா?
முதல் படி , Effectiveness, அதாவது சரியான விஷயங்களைச் செய்வது .
இரண்டாவது , Efficiency , அதாவது முதல் படியில் நாம் பார்த்த ' சரியான விஷயங்களை சரியாகச் செய்து முடிப்பது .
மூன்றாவது படி , Improving . அடுத்தவர்கள் சொல்வதை அப்படியே நன்றாகச் செய்து முடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் , அதை இன்னும் சிறப்பாகச் செய்வது எப்படி என்று யோசிக்கத் தொடங்குவது .
நான்காவது படி , Cutting , அதாவது , களையெடுப்பது , தேவையில்லாத சமாசாரங்களை வெட்டி வீசி எறிவது .
ஐந்தாவது படி, Copying , ' காப்பி என்றவுடன் தப்பாக நினைத்துவிடாதீர்கள் , அடுத்தவர்கள் செய்யும் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வது .
ஆறாவது படி , காப்பியடிப்பதற்கு நேர் எதிர் , Creating , இதுவரை யாரும் செய்யாத புது விஷ்யங்களை யோசித்துச் செய்வது . ஒருவருடைய படைப்புத்திறனுக்கும் நிஜமான சவால் இது .
ஏழாவது படிதான் சிகரம் , Impossible , அதாவது யாராலும் செய்யமுடியாத விஷயங்களைச் செய்வது
நீங்கள் இப்போது எந்தப் படியில் இருக்கிறீர்கள் ? அடுத்து எங்கே ஏறப்போகிறீர்கள் ?
--- என். சொக்கன் . குமுதம் தீபாவளி ம்லர் I V . 21 - 10 - 2009 .

Saturday, February 27, 2010

காச நோய் .

காச நோய்க்கு டி.பி., என 1839 ம் ஆண்டு பெயரிடப்பட்டது . காசநோயை ' மைகோபேக்டீரியம் , டியூபர்குலோசிஸ் ' என்ற பாக்டீரியா ஏற்படுத்துகிறது என்று 1882 ம் ஆண்டில் ராபர்ட் கோக் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார் . அவருக்கு 1905 ம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது . பின்னர் , 1906 ம் ஆண்டில் பி.சி.ஜி. எனப்படும் காசநோய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது . 1943 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ம் தேதி ' ஸ்ட் ரெப்டோமைசின் ' என்ற புதிய ஆன்டிபயாடிக் மருந்தை ஆல்பர்ட் ஸ்காட்ஸ் என்ற ஆராய்ச்சி மாணவர் கண்டுபிடித்தார் . எனினும் , அதை ஆராய்ச்சி கண்காணிப்பாளர் வாக்ஸ்மேன் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு , அவருக்கு 1952 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது . இதனால் வாக்ஸ்மேனுக்கு எதிராக ஸ்காட்ஸ் வழக்குத் தொடர்ந்தார் . இதன் பின்னர் , ஸ்ட்ரெப்டோமைசின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக ஸ்காட்ஸ் அங்கீகரிக்கப்பட்டார் . இந்த புதிய மருந்து கண்டுபிடிப்பால் , காசநோயாளிகளுக்கு புது வாழ்க்கை கிடைத்தது
--- தினமலர் , 19 - 10 - 2009 .

Friday, February 26, 2010

பல்லோடு பிறந்தார் !

அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பெண்மணி பெட்ஸிராஸ் . அமெரிக்கா இப்பொதும் பயன்படுத்தும் தேசியக்கொடியை வடிவமைத்தவர் இவர்தான் . இவருக்கு இன்னொரு பெருமையும் உண்டு . பொதுவாக குழந்தை பிறந்த நான்கைந்து மாதங்கள் கழித்துதான் பற்கள் முளைக்கும் . பெட்ஸிக்கு பிறக்கும்போதே சீரான வரிசையில் பற்கள் இருந்தனவாம் .
--- தினகரன் தீபாவளி மலர் . 2009 .

Thursday, February 25, 2010

முழு நிலா .

முழுநிலா இல்லாத மாதம் !
முப்பது நாட்களுக்கு ஒருமுறை முழுநிலவு நாளான பௌர்ணமி வருகிறது என்று பொத்தாம்பொதுவாக சொல்லப்பட்டாலும் , ஒரு பௌர்ணமிக்கும் அடுத்த பௌர்ணமிக்கும் இடைப்பட்ட காலம் என்பது சராசரியாக 29 நாட்கள் , 12 மணி , 44 நிமிடங்கள் . அப்படியானால் ஒரு மாதத்தில் பௌர்ணமியே வராமல்போக சாத்தியகூறுகள் உண்டா? உண்டு . பிப்ரவரி மாதத்திற்கு மட்டும் இப்படி வாய்க்கிறது . 28 அல்லது 29 நாட்களே பிப்ரவரி மாதத்துக்கு உண்டு என்பதால் , நூறு ஆண்டுகளில் நான்கு தடவை பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமி வருவதே இல்லை . கடந்த நூற்றாண்டில் 1915 , 1934 , 1961 , மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் , பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமி வரவில்லை . இந்த நூற்றாண்டில் இது முதல் முறையாக 2018 ல் நிகழ்கிறது .
--- தினகரன் தீபாவளி மலர் . 2009 .

Wednesday, February 24, 2010

இங்கிலீஷ் தெரியாது !

ஒரு தேசத்தின் மொழியை அறியாதவர் அந்த தேசத்தை ஆளமுடியுமா ? படையெடுத்து ஆக்ரமித்தவர்கள் தவிர்த்து , இதர சந்தர்ப்பங்களிலும் வரலாற்றில் இப்படி நேர்ந்ததுண்டு . 1714 - ம் ஆண்டில் இங்கிலாந்தில் முடிசூட்டிக்கொண்ட முதலாம் ஜார்ஜ் மன்னருக்கு சுத்தமாக இங்கிலீஷ் தெரியாது . ஜெர்மனியில் பிறந்த அவர் , பெண்வழி வாரிசாக இங்கிலாந்தை ஆளும் உரிமை பெற்றவர் . ஜெர்மன் , பிரெஞ்ச் , லத்தீன் என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும் , பதவி ஏற்றபோது அவருக்கு ஆங்கிலம் ஆப்சென்ட் . இதனாலேயே அவரை லாயக்கற்ற மன்னராக வர்ணித்த நிர்வாகிகள் உண்டு . காலப்போக்கில் ஆங்கிலத்தில் பேசவும் , எழுதவும் கற்றுக்கொண்டார் அவர் .
--- தினகரன் தீபாவளி மலர் . 2009 .

Tuesday, February 23, 2010

அலெக்ஸாண்டர் .

உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் புறப்பட்டவர் அலெக்ஸாண்டர் . பார்சீக நாட்டை வெற்றி கொள்ள அப்பகுதிக்குள் படையோடு நுழைந்தார் அவர் . படையெடுக்கக் காத்திருந்த வேளையில் கடுமையான காய்ச்சல் அவரைத் தாக்கியது . உடன்வந்த அவரின் வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை .
' இது இந்த நாட்டுப் பகுதியில் வரும் விஷக் காய்ச்சல் போல் தெரிகிறது . பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்தால் இந்த நோயைக் குணப்படுத்தி விடுவார் ' என்று அவர்கள் சொன்னார்கள் .
' எதிரி நாட்டு வைத்தியரை நம்பி எப்படி வைத்தியம் செய்ய அழைப்பது ?' என்று பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் , அலெக்ஸாண்டர் மட்டும் தயங்கவில்லை . பாரசீக மன்னர் தன் எதிரி என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்லவர் என்று அவர் நம்பினார் . அரண்மனை வைத்தியர் அழைத்து வரப்பட்டார் . பரிசோதனை செய்தபின் ' இந்த விஷக் காய்ச்சலுக்கு உரிய மூலிகைச் சாற்றை நாளை கொண்டுவருகிறேன் ' என்று சொல்லிவிட்டு , புறப்பட்டுச் சென்றார் அவர் .
மறுநாள் அவர் திரும்புவதற்கு முன்னால் ஒற்றர்கள் மூலம் அலெக்ஸாண்டருக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது . ' எதிரி நாட்டு வைத்தியர் கொண்டுவரும் மூலிகைச் சாற்றைக் குடிக்காதீர்கள் . அதில் விஷம் கலக்கப்பட்டுள்ளது ' என்பதுதான் அந்தச் செய்தி .
அந்த வைத்தியர் கொடுதத மருந்தை குவளையில் பிடித்தபடி ஒற்றர்கள் அனுப்பிய தகவலை வைத்தியரிடம் சொன்னார் அலெக்ஸாண்டர் .
வைத்தியர் முகத்தில் அச்சம் பரவியது . ஆனால் , அடுத்த விநாடியே அந்த மூலிகைச் சாற்றை கடகடவென குடித்து விட்டார் அலெக்ஸாண்டர் .
' எப்படி என்னை நம்பி அதைக் குடித்தீர்கள் ?' என்று வைத்தியர் கேட்டபோது , அதற்கு அலெக்சாண்டர் சொன்ன பதில் இதுதான் ...
' பார்சீக மன்னர் எனக்குப் பகைவராக இருந்தாலும் சூழ்ச்சி செய்து என்னைக் கொல்ல மாட்டார் என நம்பினேன் . அரண்மனை வைத்தியரான நீங்களும் தொழில் நேர்மை உள்ளவராக இருப்பீர்கள் எனறு நம்பினேன் . எனவே விஷம் கலக்கப்பட்டிருக்காது என்று எண்ணி தைரியமாகக் குடித்தேன் ' என்றார் .
' பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் '
என்று வள்ளுவர் சொன்னது இதைத்தான் .
--- இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் . அக்டோபர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Monday, February 22, 2010

உள்ளாடைகள் !

ஜட்டிகளில் ட்ரங்க்ஸ் , பிரிப் என்ற இருவகைகள் இருந்து வந்தன . ட்ரங்க்ஸ் என்பது சாதாரணமாக அணியும் ஜட்டி வகையாகும் .
தொடையை கவ்விப்பிடிக்கும் பிரிப் வகை ஜட்டிகள் இருக்கும் . பிரிப் வகை ஜட்டிகள் வேஷ்டி அணியும் போது மட்டுமே அணிய வேண்டும் .
பேன்ட் அணியும் போது பயன்படுத்தப்படும் ட்ரங்க்ஸ் வகை ஜட்டிகளை தேர்வு செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும் . டைட் பேன்ட் அணிபவர்கள் ஜட்டியின் முன்பகுதி உயரம் குறைவாக இருக்கும் ஜட்டிகளை தேர்வு செய்ய வேண்டும் .
பிரிப் மற்றும் ட்ரங்க்ஸ் ஜட்டிகளுக்கு மாற்றாக இப்போது ரெட்ரோ சார்ட்ஸ் என்ற புது வகை ஜட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன . இந்த வகை ஜட்டிகள் அனைத்து வகை பேன்ட் மற்றும் வேஷ்டிகளுக்கு ஏற்றது .
--- தினமலர் , 14 - 10 - 2009 .

Sunday, February 21, 2010

புடவை .

கோ - ஆப்டெக்ஸ் புடவை .
கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தென் மண்டலப் பிரிவு , தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருவள்ளுவர் உருவம் மற்றும் ஆயிரத்து 300 குறளுடன் கூடிய பட்டுப்புடவையை தயார் செய்து மதுரை அங்கயற்கண்ணி பட்டுப்புடவை நிறுவனத்தில் அறிமுகப்படுத்தியது . தமிழ் மணக்கும் வகையில் குறளுடனும் , செம்மொழி பெயர் சொல்லும் இந்த அபூர்வ பட்டுப் புடவையின் விலை அதிகமில்லை பெண்களே வெறும் 80 ஆயிரம் ரூபாய்தான் !
--- தினமலர் , 14 - 10 - 2009 .

Saturday, February 20, 2010

காஸ்ட்லி

காஸ்ட்லி காக்டெய்ல் !
மான்செஸ்டரில் உள்ள ஹார்வே நிக்கோல் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படும் காக்டெய்லில் , வழக்கமாக ஊறவைக்கப்படும் ஆலிவ் பழங்களுக்குப் பதிலாக வைர மோதிரம் ஒன்று இருக்குமாம் . இதை கஸ்டமரின் டேபிளுக்குக் கொண்டுவருவதற்கே செக்யூரிட்டிகள் துணையோடுதான் வருவார்களாம் . ஒரு கிளாஸ் திரவத்தை ருசி பார்க்க மட்டும் 12 லட்சம் வேண்டும் . வைரத்தை விழுங்கி உயிருக்குச் சேதாரமானால் கம்பெனி பொறுப்பல்ல !
காஸ்ட்லி ' ஹேர்கட் '.
நம்மூரில் முடி வெட்டிக்கொள்வதற்கு 100 ரூபாய் போதும் . ஆனால் , லண்டனின் லீ ஸ்டா ஃபோர்ட்டிடம் முடி வெட்டிக்கொள்ள ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் . ஏன் இவ்வளவு காஸ்ட்லி ? உலகின் நம்பர் ஒன் ஹேர்டிரஸ்ஸர் லீ ஸ்டா தான் . முடி வெட்டும்போது குடிக்க ஷாம்பெய்ன் தருவது இவரது ஸ்பெஷாலிட்டி !
காஸ்ட்லி வாட்ச் .
உலகின் காஸ்ட்லி கடிகாரம் தயாராவது சுவிட்சர்லாந்தில் ! ' ரோமைன் ஜெரோம் ' நிறுவனம் தயாரித்திருக்கும் ' தி மூன் டஸ்ட்வாட்ச் 'சின் குறைந்தபட்ச விலையே ஏழரை லட்சம் ரூபாய் ! அப்படி என்னவாம் ஸ்பெஷல் ?
நிலாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ம்ண் , துகள்களையும் , அப்போலோ ராக்கெட்டின் சிற்சிறு பாகங்களையும் இந்த வாட்ச்சின் டயலில் பொருத்தி இருக்கிறார்கள் . ரேட்டுக்குக் காரணம் புரியுதுங்களா ?!
---முருகானந்தம் , கார்த்திகா . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 . இதழுடன் இணைப்பு .

Friday, February 19, 2010

நம்பர் ' ஒன் ' டாய்லெட் !

நாசா ஸ்பேஸ் ஸ்டேஷனுக்காக ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய டாய்லெட்டின் விலை 19 மில்லியன் டாலர்கள் . ' பூமியில் கட்டும் ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சமமான உழைப்பும் செலவும் இதற்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது ' என்கிறது நாசா .
விண்வெளி வீரர்களின் மிகப் பெரிய சவால் தண்ணீர் தேவை . நீண்ட காலம் விண்வெளியில் இருக்கும்போது போதுமான தண்ணீர் கிடைப்பது இல்லை . அதற்காகவே தண்ணீர் தேவைப்படாத ஸ்பெஷல் டூத் பேஸ்ட் எல்லாம் பயன்படுத்துகிறார்கள் . ஆனால் குடிக்க ? அதற்குத்தான் இந்த டாய்லெட் . அதாவது இந்த டாய்லெட் , சிறுநீரை அப்படியே நல்ல தண்ணீராக மாற்றித் தரும் . முகம் சுளிக்காதீங்க . நம்ம ஊர் ஃபில்டர் வாட்டரைவிடச் சுத்தமாக , தரமாக இருக்குமாம் .
--- சேவியர் , ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 . இதழுடன் இணைப்பு .

Thursday, February 18, 2010

மரியாதை !

அங்கே நாட்டுக்கு மரியாதை !
ஒரு சமயம் இந்திரா காந்தி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது , அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் பி. கே. இந்திரா காந்திக்கு விருந்தளித்தார் . அதில் துணை ஜனாதிபதி ஹபர்ட் ஹம்ப்ரே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் . அந்த விருந்துக்கு அழைக்கப்படாமல் இருந்தும் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் கலந்து கொண்டார் . அதன்பிறகு வெள்ளைமாளிகையில் நடந்த வரவேற்பின் போது தன்னுடன் நடனமாடும்படி இந்திரா காந்தியை அழைத்தார் ஜான்சன் . அது இந்தியாவில் தன்னுடைய மரியாதையை குலைத்துவிடும் எனக்கூறி இந்திரா காந்தி மறுத்துவிட்டார் . இந்திராவின் பண்பை வியந்த லிண்டன் ஜான்சன் 30 லட்சம் டன் கோதுமை , 90 லட்சம் டாலரையும் இந்தியாவுக்கு உதவிப் பொருளாகக் கொடுத்தனுப்பினார் .
--- தினமலர் * வாரமலர் * அக்டோபர் 11 ; 2009 .

Tuesday, February 16, 2010

விளையாடுங்க .

பணம் லாஸ் ஆகும்னுதான் லாஸ் வேகாஸ்னு பேரு வெச்சிருக்காய்ங்க் !
மது , மாது , சூது ... இந்த மூன்றில் மதுவுக்கு பாரீஸ் . மாதுவுக்கு ஆம்ஸ்டர்டாம் . சூதாட்டத்துக்கு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம் .
' தூங்கா நகரம் ', ' முத்து நகரம் ' போல லாஸ் வேகாஸ் நகரத்தை அமெரிக்கர்கள ' குற்ற நகரம் ' என்கிறார்கள் . நகரம் முழுக்க கேசினோ எனப்படும் சூதாட்ட மையங்கள்தான் . உலகம் முழுக்க இருந்து சூதாட்டப் பிரியர்கள் குவிவதால் , வருடம் முழுக்க கும்பமேளா எஃபெக்டிலேயே இருக்கும் . லாஸ் வேகாஸில் உள்ள மொத்த ஹோட்டல்களிலும் சேர்த்து 67 ஆயிரம் அறைகள் உள்ளன . ஒவ்வொரு ஹோட்டலிலும் ரம்மியில் துவங்கி கீனோ , போக்கர் , ஸ்லாட் மெஷின் , பிளாரி ஜேக் என்று வகை வகையாகச் சூதாட்டங்கள் உண்டு .
--- பி. ஆரோக்கியவேல் . ஆனந்தவிகடன் 21 - 10 - 2009 . இதழுடன் இனைப்பு .

Monday, February 15, 2010

பழம் பாடல் .

" நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புட்டம் சாத்தியே...
சுற்றி வந்து முணுமுணுவென்று சொல்லு
மந்திரம் ஏதடா...
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள் இருக்கையில்
சட்டி சுட்ட சட்டுவம் கறிச்சுவை
அறியுமோ...?"
--- சிவவாக்கியச் சித்தர் வாக்கு .
" உள்ளம் பெரும் கோவில்
ஊனுடம்பு ஆலயம் "
--- திருமூலர் வாக்கு .

Sunday, February 14, 2010

தங்கச் சாமி !

திருப்பதி வெங்கடாஜலபதிதான் இப்போது உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் ! வங்கியின் சொத்து மதிப்பு 1 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது . வங்கி டெபாசிட்டுகளில் இருந்து வட்டியாக மட்டும் வருடத்துக்கு 225 கோடி வருகிறது .
தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் திருப்பதி வந்து செல்கிறார்கள் . வாரத்துக்கு 12 கிலோ தங்கம் கோயில் உண்டியலில் காணிக்கையாக விழுகிறது . இது போக , பக்தி பரவசத்தில் வைரங்களைக் கொட்டிவிட்டுப் போகிற கோடீஸ்வரர்களும் உண்டு . கர்நாடக அமைச்சர் ஒருவர் வைரக் கற்கள் பதித்த ஒரு தங்கக் கிரீடத்தைக் காணிக்கையாகக் கொடுத்தார் . விலை ஜஸ்ட் 4.5 கோடி . பகிரங்கமாகவும் சிலசமயம் ரகசியமாகவும் வரும் காணிக்கைகள் ஒவ்வொன்றுமே மில்லியன் டாலர் நியூஸ் !
கோயிலில் இருக்கும் நகைகளின் மதிப்பு இதுவரை துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை . என்றாலும் மொத்தம் 12 டன் ( ஒரு டன் என்பது 1,000 கிலோ ) எடையுள்ள நகைகள் இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது . மொத்த நகைகளையும் நான்கு லாரிகளில் லோடு ஏற்றலாம் . இந்த நகைகளின் சொத்து மதிப்பு மட்டுமே 35 ஆயிரம் கோடியைத் தாண்டும் .
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் தலைமுடியே வருடத்துக்கு 40 கோடி ரூபாய் வசூல் தருகிறது . திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் மதிப்பு 1,500 கோடிக்கும் மேல் . பக்தர்கள் கோயிலுக்கு தானமாக வழங்கிய நிலத்தின் மதிப்பு 15 ஆயிரம் கோடிக்கும் அதிகம் .
திருப்பதியில் முன்பு ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு முறைதான் உண்டியலை மாற்றினார்கள் . இப்போது தினமும் 10 தடவைக்கு மேல் உண்டியல் மாற்றப்படுகிறது . ஏழுமலையான் அணிந்திருக்கும் கிரீடம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் அளித்தது . தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான் 100 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தில் சங்கிலி ஒன்றை கொடுத்திருக்கிறார் . இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 25 ஆயிரம் பேர் !
--- வேல்ஸ் . ஆனந்தவிகடன் , 14 - 10 - 2009 . இதழுடன் இணைப்பு .

Saturday, February 13, 2010

சேலை !

8 கிலோ சேலை !
உலகின் காஸ்ட்லியான புடவை எங்கே இருக்கிறது ? சென்னை என்று சரியாக யூகித்திருந்தால் சபாஷ் !
2007 -ம் ஆண்டு சென்னை சில்க்ஸால் நெய்யப்பட்ட இந்தச் சேலையின் விலை 40 லட்சம் ரூபாய் . கின்னஸ் புத்தகத்திலும் இந்தச் சாதனை இடம்பெற்றுள்ளது . கிட்டத்தட்ட 7 மாதங்கள் சுமார் 4,680 மணி நேரங்கள் 30 நெசவாளர்களைக்கொண்டு நெய்யப்பட்ட இந்தப் புடவையைப் பல்லக்கில் வைத்துக் கடைக்குக் கொண்டுவந்தார்கள் .
இந்த அழகான சிவப்பு நிறப் புடவை முழுவதும் அசல் தங்க ஜரிகையால் நெய்யப்பட்டது . தவிர , பிளாட்டினம் , வெள்ளி , வைரம் , வைடூரியம் உள்ளிட்ட நவரத்தினங்களும் பதிக்கப்பட்டது .
புடவையின் முந்தானைப் பகுதியில் வரையப்பட்டுள்ள ரவிவர்மாவின் ' பெண் இசைக் கலைஞர்கள் ' ஓவியம் இந்தச் சேலைக்குக் கூடுதல் மெருகேற்றுகிறது . சேலையின் இரு பக்க பார்டர்களிலும் ரவிவர்மாவின் ஓவியங்களும் உண்டு . புடவையின் எடை 8 கிலோ !
--- ஸ்ம்ருதி . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 . இதழுடன் இணைப்பு .

Friday, February 12, 2010

கலைஞர் !

கட்டடக் கலைஞர் !
உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் கிறிஸ்டோபர் ரென் . லண்டனில் ஒரு சர்ச் கட்டுவதற்கான பொறுப்பை அவரிடம் கொடுத்திருந்தனர் . அவரும் அதைச் சிறப்பாகக் கட்டினார் .
தூண்கள் இல்லாமலேயே உறுதியாக நிற்கும்படி வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த ஹால் . இந்தச் சாதனையைப் பொறுக்க முடியாத சிலர் , அதற்குத் தூண்களை அமைக்கச் சொல்லி வற்புறுத்தினர் .. நிர்வாகக் குழுவினரும் ரென்னிடம் தூண்களை அமைக்கச் சொல்லி வேண்டுகோள் வைக்கவே அங்கு இரண்டு தூண்களைக் கட்டினார் ரென் .
ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு அந்த சர்ச்சைப் புதுப்பிக்கும் பணி நடந்தது . அப்போதுதான் ஓர் அதிர்ச்சிகரமான காட்சியை அங்கிருந்தவர்கள் கண்டனர் . கடைசியாகக் கட்டப்பட்ட அந்த இரண்டு தூண்களும் மேல் தளத்துடன் இணைக்கப்படாமல் சிறு இடைவெளியில் தனியாக நின்றிருந்தது . மற்றவர்களின் திருப்திக்காக ரென் அந்தத் தூண்களைக் கட்டியிருந்தாரே தவிர , அந்தத் தூண்கள் கட்டடத்தைத் தாங்கவில்லை .
என்றாவது ஒருநாள் உரியவர்கள் , மக்கள் உண்மையை உணர்ந்து தன்னைப் பாராட்டுவார்கள் என்று ரென் நம்பினார் .
--- இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் . அக்டோபர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Thursday, February 11, 2010

நவரத்தினம் .

ரத்தினம் ( Sapphire ) :
அலுமினியமும் ஆக்ஸிஜனும் எக்குத்தப்பாகச் சேர்ந்த கலவைதான் ரத்தினம் . காலையில் அடர் நிறத்திலும் , மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிஜொலிக்கும் . மோசஸ் 10 கட்டளைகளைத் தந்தபோது கைகளில் ரத்தினத்தையும் தந்தார் என்பவர்கள் உண்டு . 17 - ம் நூற்றாண்டில் மக்கள் யாராவது சஃபையர் அணிந்தால் தலையைத் தனியே எடுத்துவிடுவார்கள் . ஏனெனில் , அப்போது அது ராஜாஆபரணம் . அலெக்சாண்டர் , அக்பர் போன்ற மன்னர்கள் சஃபையர் அணிந்திருந்தார்கள் என்கிறது வரலாற்றுக் குறிப்பு .
புஷ்பராகம் ( Topaz ) :
' ஏழைகளின் வைரம் ' என்று இதற்குப் பெயர் . தேன் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கும் . 18 - ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய மன்னர் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,680 கேரட் .
முத்து :
கடலில் சிப்பிக்கு உள்ளே செல்லும் தூசு , மணல் துகள் போன்றவையே முத்தாக உருவெடுக்கின்றது . வெள்ளை மட்டும் அல்ல ... பழுப்பு , பச்சை , நீலம் , இளஞ்சிவப்பு , கறுப்பு நிறத்திலும்கூட , முத்துக்கள் உண்டு . முழுக்க முழுக்க கால்ஷியம் கார்பனேட்தான் முத்து . கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் ரேட் ஜாஸ்தி . இப்போது சிப்பிக்குள் செயற்கையாகத் தூசுகளை அனுப்பி முத்துக்களை உருவாக்குகிறார்கள் . கடையில் கிடைக்கும் பெரும்பாலான முத்துக்கள் செயற்கைதான் !
பவழம் :
பவழத்துக்கும் கடல்தான் வீடு . வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில்தான் இது விளையும் . பவழப்பூச்சி எனும் கடல்வாழ் உயிரினம் , கரையான் போல் கட்டும் புற்றே பவழப் பாறையாகிறது . ரத்தச் சிவப்பில் ஜொலிக்கும் பவழம் தான் ஒரிஜினல் . சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவழப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்ட பிறகு , மார்க்கெட்டில் பவழங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது !
மாணிக்கம் :
மாணிக்கமும் ரத்தினமும் அண்ணன் தம்பி போல . குணாதிசயங்களில் அவ்வளவு ஒற்றுமை . பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகைக் கல்தான் இது . ஆக்ரோஷமான காதலின் அடையாளமான இது உலகக் காதலர்களிடையே ஃபேமஸ் !
வைடூரியம் :
க்ரைசோபெரில் என்ற இந்தக் கல்லின் செல்லப் பெயர் பூனைக் கண் . தமிழில் வைடூரியம் . பூமிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக உள்ளே இருக்கும் லாவா என்கிற எரிமலைக் குழம்பு எக்குத்தப்பாக எகிறி வெளியே வந்தால் , அதுதான் வைடூரியம் . வைரம் , மாணிக்கம் என்று வலிமை வரிசைப் பட்டியலில் இதற்கு மூன்றாவது இடம் !
மரகதம் :
பச்சை நிறத்தில் பளபளக்கும் மரகதம் நோய் எதிப்புச் சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . அதனால் தம்மாத்தூண்டு இருக்கும் கல்லே சில லட்சங்கள் வரை விலை போகும் . உத்தரகோசமங்கையில் இருக்கும் மங்கள நடராஜர் கோயிலில் ஏழரை அடி உயரத்தில் மரகதத்தால் ஆன மூலவர் சிலை இருக்கிறது . பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக மரகதம் கிடைக்கிரது . அந்தப் பகுதியில் இருக்கும் தலிபான்களுக்கு அதுதான் பெரிய வருமானம் .
கோமேதகம் :
நவரத்தினங்களில் விலை குறைந்தது இதுதான் . பசுவின் சிறு நீர் நிறத்தில் இருப்பதால் , இந்தப் பெயர் .நகைகளில் பளபளப்பைக் கூட்டப் பயன்படுகிறது . ஜீரண சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . இதில் டூப்ளிகேட்டை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது . அதனாலேயே கோமேதக பிசினஸ் இந்தியாவில் செம ஹிட் !
---சரண் , நரேஷ் . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 இதழுடன் இணைப்பு

Wednesday, February 10, 2010

ஆலயம் .

பசுபதிநாத் ஆலயம் .
மகாபாரதக் காலம் அது . பாண்டவர்கள் ஐவர் . நூறு கௌரவர்களையும் வீழ்த்திய நேரம் அது . போரில் வெற்றி பெற்றாலும் சொந்தக்காரர்களையே கொன்றதால் கோத்ர தோஷம் அவர்களைப் பிடித்தது . துன்புறுத்திற்று .
அதற்கு ஒரே வழி , சிவனின் தரிசனம்தான் என்று உணர்ந்து , பஞ்ச பாண்டவர்கள் கைலாயம் நோக்கி விரைந்தார்கள் .
உடனே அவர்களுக்குக் காட்சி தர விரும்பாத சிவபெருமான் கொஞ்சம் போக்குக் காட்டினார் . காளையாக உருமாறி ஓடி ஒளிந்தார் . அவர்களும் விடாமல் தொடர்ந்தார்கள் .
நேபாள் வந்து சேர்ந்தார் ஈசன் . அந்த மந்திர பூமி அவருக்கு மிகவும் பிடித்துப் போனது . அங்கேயே இருக்க முடிவு செய்தார் . இப்போது பசுபதிநாத் ஆலயம் இருக்குமிடத்தில் பூமிக்குள் காளை உருவில் புதைந்து கொண்டார் இறைவன் .
பாண்டவர்கள் விடவில்லை . விடாமல் தொடர்ந்தார்கள் . பூமிக்குள் ஒளிந்து போக்குக் காட்டிக் கொண்டிருப்பது தெரிந்து அவரை எப்படியும் தரிசனம் செய்துவிட வேண்டும் என்று விரும்பி , பயபக்தியுடன் அந்த இடத்தில் தோண்டி , வாலைப்பிடித்து வெளியில் இழுத்தார்கள் .
பூமிக்குள்ளிருந்து ஒரு புயலாக , விஸ்வரூபத்துடன் வெளிப்பட்டார் சிவபெருமான் .
அவருடைய முகம் , நெற்றி , கொம்பு வெளிப்பட்ட இடம்தான் பசுபதிநாத் . திமிள் வெளிப்பட்ட இடம் கேதார்நாத் முன்னங்கால் வெளிப்பட்ட இடம் துங்காநாத் . காளையின் ரோமங்கள் வெளிப்பட்ட இடம் கல்பநாத் . தொப்புள் வெளிவந்த இடம் மத்திய மகேஷ்வர் . இவ்வாறு ஏழு இடங்களில் அவை வெளிப்பட்டன . கடவுளிடம் ஒன்றக்கூடிய ஏழு இடங்கள் சக்தி மிக்க எனர்ஜி தரக்கூடிய ஏழு சக்கரங்கள் . கோவையில் உள்ள தியான லிங்கம் இதுபோல் ஏழு சக்கரங்களை வைத்து உருவாக்கப்பட்டதுதான் .
---ப்ரியா கல்யாணராமன் . குமுதம் , 14 - 10 - 2009 .

Tuesday, February 9, 2010

வேடிக்கை !

உங்கள் சினேகிதனை ஏதவது ஒரு புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள் . அதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துக்கொண்டு , அதில் முதல் ஒன்பது வரிகளுக்குள் ஒரு வரியை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள் . அந்த வரியில் முதல் ஒன்பது வார்த்தைகளுக்குள் ஒரு வார்த்தை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள் . இப்பொழுது உங்கள் நண்பனை ஒரு காகிதமும் பென்சிலும் எடுத்துக்கொண்டு , இந்தக் கணக்கைப் போடச் சொல்லுங்கள் .
அவன் எந்தப் பக்கம் எடுத்துக் கொண்டானோ அந்தப் பக்கத்தின் எண்ணைப் பத்தால் பெருக்கவும் . அத்துடன் 25 - ஐக் கூட்டவும் . அதோடு , எந்த வரி எடுத்துக் கொண்டானோ அந்தவரியின் எண்ணையும் கூட்டிக்கொள்ளவும் . வந்ததொகையைப் பத்தால் பெருக்கி , அத்துடன் எந்த வார்த்தை எடுத்துக் கொண்டானோ , அந்த வார்த்தையின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ள வேண்டியது . கடைசியில் கிடைத்த விடையைச் சொன்னால் , அவன் எந்த வார்த்தையை எடுத்துக் கொண்டான் என்று நீங்கள் சொல்லிவிடலாம் .
உதாரணமாக , விடை 2124 வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் . இதிலிருந்து 250 ஐக் கழிக்க வேண்டும் . 1874 வருகிறதா ? இந்த விடையின் கடைசி எண்தான் ( அதாவது 4 ) வார்த்தையின் எண்ணிக்கை . அடுத்த எண் ( அதாவது 7 ) வரியின் எண்ணிக்கை . பாக்கி இருக்கும் 18 - தான் பக்க எண்ணிக்கை . ஆக , அவன் என்ன வார்த்தை எடுத்துக்கொண்டான் என்று சொல்லிவிடலாம்தானே ?
--- காலப்பெட்டகம் . 1938 . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 .

Monday, February 8, 2010

அடைமழை !

அடைமழையை ஆங்கிலத்தில் ' raining cats and dogs ' என்று சொல்கிறோம் . ஒரு காலத்தில் பிரிட்டனில் , லண்டன் போன்ற நகரங்களில் சீரான சாக்கடைகள் கிடையாது . பெருமழை பொழிந்தால் போச்சு ! தெருக்களில் அலையும் நாய்களும் , பூனைகளும் நீரில் மூழ்கி இறந்துவிடும் . மழைநீர் வடிந்த பிறகு ஆங்காங்கே தெருக்களில் அவற்றின் உடல்கள் கிடக்கும் . ஆகவே , பெரிய மழையை ' It is raining - ( there are dead ) cats and dogs ' என்பார்கள் .
' இல்லை ! இந்தச் சொற்றொடர் பண்டைய நார்வே நாட்டின் புராணத்திலிருந்து வந்தது . Norse என்கிற அந்த மொழியில் புயலுக்கு நாய் , மழைக்கு பூனை என்று உருவகப்படுத்தி இருந்தார்கள் .' என்கிறார்கள் .!
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 .

செய்திகள் .

* 507 காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம் , தென்னாப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .
* உயிர் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அது காமத்தால் தொற்றிக்கொண்ட நோய் ( ' life is a sexually transmitted disease ' ) என்றார் .
* ' வேகமாகப் போக விரும்பினால் , தனியாகப் பயணம் செய் . தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் ' என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச் சொல்லப்படும் வாக்கியம் .
* எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு . பின்பக்கமாகத் திரும்பி
வெற்றிக்கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான் .
* சங்கரா பரணம் ராகத்தில் , ' ஜனகணமன ' பாடலுக்கு இசை அமைத்தவர் நேதாஜியின் படையில் பணியாற்றிய கேப்டன் ராக்சிங்
* மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த கானகப் பகுதிக்கு ' மௌனப் பள்ளத்தாக்கு ' என்று பெயர் .
* மனைவி விருப்பம் இல்லாத நேரத்தில் கட்டாயப் படுத்தி உறவுகொள்வது ( மேரிட்டல் ரேப் ) , மனைவியைக் கணவனும் அவனது உற்றாரும் கொடுமைப்படுத்துவது ( டொமஸ்டிக் வயலென்ஸ்.) எனப்படும் .
* பறவைகளுக்கு ( வாத்து , அன்னம் , நெருப்புக் கோழி தவிர்த்து ) ஆண்குறி கிடையாது . க்ளோயேகா ( cloaca ) என்கிற ' சமச்சீர் பகுதி ' யினால் தேய்த்துக்கொள்ள வேண்டியதுதான்
* என்னதான் கனவு என்றாலும் , கண் முழித்த ஐந்தாவது நிமிடமே 50 % கனவுகள் மறந்துவிடும் . 10 நிமிடம் ஆனால்
90 % கனவு காலி ..
* இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Nocturnal Enuresis என்று குறிப்பிடுவோம் . இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான் .

Sunday, February 7, 2010

சிணுங்கல் சீக்ரெட் !

மைமோசாபூடிகா என்ற தாவரயியல் பெயர் கொண்ட தொட்டால் சிணுங்கிச் செடியைக் கவனித்தால் , அவை கூட்டு இலைகளைக்கொண்டிருக்கும் . அந்தக் கூட்டு இலைக் காம்பிற்கு அடியில் தண்டுடன் ஒட்டிக்கொண்டுள்ள பகுதி சற்று பருத்த முண்டு போல இருக்கும் . இந்த முண்டுவானது மெல்லிய சவ்வுச் செல்களால் ஆனது . இந்தச் செல்லினுள் நீர் மூலக்கூறுகள் எளிதில் சென்று வரமுடியும் .
இந்த் முண்டுவில் நீர் நிறைந்திருக்கும் போது இலைகள் விரிந்த நிலையில் இருக்கும் . இச் செடியைக் காற்று , பூச்சி , விலங்கு , மனிதன் , மழை துளி தொட சட்டென்று வெளிப் புற உணர்வுகள் உட்சென்றதும் , முண்டுகளில் இருக்கும் செல்கள் நீரை இழக்கின்றன .
இதனால் இலைகள் சுருங்குகின்றன . இதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர முண்டில் நீர் நிறைய வேண்டும் . இதற்கு 15 முதல் 30 நிமிடம் ஆகும் .
இலை காம்பில் சவ்வூடு பரவல் அழுத்த வேறுபாடு காரணமாகவே இந்த இயக்கம் ஏற்படுகிறது .
--- தினமலர் , சிறுவர்மலர் . அக்டோபர் 9 , 2009 .

Saturday, February 6, 2010

நோபல் பரிசு ...!

உலகின் உயரிய விருதான நோபல் பரிசு 108 ஆண்டு வரலாறு கொண்டது . டைனமைட் வெடிமருந்து கண்டுபிடித்த சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழிலதிபர் ஆல்பிரிட் நோபல் எழுதி வைத்த உயிலின்படி , 1901 ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன .
நோபல் பரிசு என்பது ரூ. 7 கோடி பரிசுப்பணம் , பாராட்டுச் சான்றிதழ் , தங்கப்பதக்கம் அடங்கியதாகும் . சுவீடன் தலைநகர் ஸ்டா ஹோமில் டிசம்பர் 10 ம் தேதி நடக்கும் விழாவில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படும் .
நோபல் இந்தியர்கள்
..................................................................................................................................................................
பெயர் ஆண்டு பிரிவு
................................................................................................................................................................
ரவீந்திரநாத் தாகூர் 1913 இலக்கியம்
சந்திரசேகர் வெங்க ட்ராமன் 1930 இயற்பியல்
ஹர்கோபிந்த் கொரானா * 1968 மருத்துவம்
சுப்ரமணியம் சந்திரசேகர் * 1983 இயற்பியல்
அன்னை தெரசா * * 1979 உலக அமைதி
அமர்த்தியா சென் 1998 பொருளாதாரம்
ஆர். கே. பச்சோரி 2007 உலக அமைதி
வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் * 2009 வேதியியல்.
* இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் .
* * அல்பேனியா நாட்டில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்றவர் .
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான வித்யாதர் சூரஜ் தைபால் 2001 ம் ஆண்டு இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றார் . 2007 ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை பருவநிலை அமைப்புக்கான ஐ . நா . வின் சர்வதேச அமைப்பின் தலைவராக இருந்த ஆர். கே. பச்சோரியும் , அனெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோரும் பகிர்ந்துகொண்டனர் .
--- தினமலர் . 08 - 10 - 2009 .

Friday, February 5, 2010

சக்தி பீடங்கள் .

சக்தி பீடங்கள் வரிசையில் முக்கியமான ஒன்று ஜனஸ்தல ( ஜனஸ்தானம் ) பீடம் ஆகும் . மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பஞ்சவடியில் இந்த பீடம் அமைந்துள்ளது . பத்ரகாளி கோயில் என்று இந்த பீடமழைக்கப்படுகிறது . இது அம்பிகையின் முகவாய் கட்டை விழுந்த இடமாகக் கருதப்படுகிறது . தேவியின் பெயர் ப்ராமரி . இறைவன் பெயர் ஸர்வஸித்தீசர் . கோல்கத்தா காளி போலவே இங்கு அம்பிகை , சிம்ம வாகனத்தில் 18 கைகளிலும் ஆயுதமேந்தி , மகிஷாசுரனை அழிக்க புறப்பட்ட கோலத்தில் மிகக் கோபமாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சந்நிதியின் ஒரு ஓரத்தில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது . எப்படி வருகிறது ? என்பதை மட்டும் இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .
ராமாயண காலத்திலிருந்தே நாசிக் , பஞ்சவடி ஆகிய பகுதிகள் சிறப்புப் பெற்றுள்ளது . வனவாசத்தின் போது கங்கைக் கரையிலிருந்து பஞ்சவடிக்குத்தான் ராமர் , சீதை , லட்சுமணன் ஆகியோரை குகன் அழைத்துச் செல்வதாக வால்மீகி ராமாயணம் குறுகிறது . ராமர் தங்கிருந்த இடங்களை பஞ்சவடியில் இன்றும் காணலாம் .
பஞ்சவடிக்கு மிக அருகில்தான் ஷீர்டி , பண்டரிபுரம் , திரியம்பகி ஆகிய புண்ணியத் தலங்கள் உள்ளன . பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனையும் , ஷீரடியில் சாயிநாதனையும் தரிசிப்பது வாழ்க்கையில் கிடைக்காத பாக்கியம் . மேலும் திரயம்பகியில் அருள்புரியும் திரியம்பகேஸ்வர லிங்கம் , நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று .மும்பையிலிருந்து 188 கிலோ மீட்டர் தூரத்தில் நாசிக் உள்ளது . நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரம் சென்றால் பஞ்சவடியில் உள்ள சக்தி பீடத்தை அடைந்துவிடலாம் . இக்கோயிலில் வட இந்திய முறைப்படிதான் பூஜைகள் நடக்கின்றன .
--- தினமலர் பெண்கள் மலர் . செப்டம்பர் 11 , 2004 .

Thursday, February 4, 2010

காந்திஜியும் , சாஸ்திரியும் !

மகாத்மா காந்திக்கும் , லால்பகதூர் சாஸ்திரிக்கும் பிறப்பிலும் இறப்பிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது . இருவரும் பிறந்தது அக்டோபர் 2 - ம் தேதி . இருவரும் இறந்தது பகுள பஞ்சமி தினத்தன்று . அதாவது தியாகப் பிரும்மம் மறைந்த புனித நாள் அது .
இவர்களுடைய மரணத்தில் மற்றொரு ஒற்றுமையும் காணலாம் . காந்திஜி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக உயிர்த் தியாகம் செய்தார் . சாஸ்திரியோ இந்திய - பாகிஸ்தான் ஒற்றுமைக்காக அல்லும் பகலும் உழைத்து உயிர் துறந்தார் . துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மண்ணில் சாய்ந்தபோது மகாத்மா கூறிய ' ஹரே ராம் ' என்ற வார்த்தைகளையே சாஸ்திரியும் உயிர் பிரியும்போது கூறினார் .
--- ஆனந்தவிகடன் . 23 - 01 - 1966 .

Wednesday, February 3, 2010

எவரெஸ்ட் !

எவரெஸ்ட் , எவரெஸ்ட் என்று உலகமே கொண்டாடினாலும் நேபாள மக்கள் மட்டும் அதை எவரெஸ்ட் என்று அழைக்க மாட்டார்கள் . ஆமாம் . அவர்கள் ' சாகர் மாதா ' என்றுதான் அதனை அழைக்கிறார்கள் . கடல் அன்னை . அதாவது கடல் போல் பெரிய மலை ! சகர மகாராஜா தவம் செய்த இடம் என்பதாலும் இந்தப் பெயர் வந்திருக்கலாம் .
எவரெஸ்ட் என்று யாராவது சொன்னாலே நேபாளிகள் வெறுப்பாகப் பார்க்கிறார்கள் . ஏன் ?
இந்த மலைச் சிகரத்தை ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பிரிட்டிஷ் அதிகாரிதான் அளந்து உலகிலேயே உயர்ந்த சிகரம் என்பதைக் கண்டுபிடித்தார் . அதனால் இந்தச் சிகரத்திற்கு வெள்ளைக்காரர்கள் அவரது பெயரையே சூட்டிவிட்டுப் போய் விட்டார்கள் .
காலம் காலமாய் இருக்கும் மலையின் உயரத்தை அளந்த சர்வேயரின் பெயரைப் போய் , அந்த மலைக்கே வைப்பது என்ன நியாயம் ? சாகர் மாதாதான் சரியான பெயர் என்று எனக்கும் தோன்றியது .
--- ப்ரியா கல்யாணராமன் . குமுதம் . 07 - 10 - 2009 .
நேபாளத்தில் இருக்கிறது எவரெஸ்ட் சிகரம் . இது , ஆண்டுதோறும் 7 சென்டிமீட்டர் வீதம் சீனாவை நோக்கி நகர்ந்து செல்வதாக இப்போது கண்டுபிடித்துள்ளனர் .
--- தினமலர் , அக்டோபர் 2 . 2009 .

Tuesday, February 2, 2010

விமானம் வந்த கதை .

விமானம் இந்தியாவுக்கு வந்த கதை சுவாரஸ்யமானது . பாட்டியாலா மகாராஜா 1910 ல் இந்தியாவுக்கு விமானத்தை அறிமுகப்படுத்துவதற்காக பெளல்ஸ் என்ற ஆங்கிலப் பொறியாளரை அனுப்பி , பார்மென் என்ற குட்டி விமானத்தை பிரான்ஸில் இருந்து வாங்கி வரச் செய்தார் . 1910 டிசம்பர் 11 - ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் கிளம்பியது . முதல்முறையாக விமானத்தில் ஏறிப் பறந்த இந்தியர் , காசி மகாராஜாவின் மகன் . ஹென்றி பெக்கே என்ற விஞ்ஞானி அந்த விமானத்தை ஓட்டினார் . சென்னையில் 1911 பிப்ரவரி 18 - ம் தேதி விமானம் பறந்தது . அந்தக் காட்சியைப் பார்க்கப் பொதுமக்கள் திருவிழா போலத் திரண்டு இருந்தார்கள் .
மகாத்மா காந்தி விமானத்தில் பயணம் செய்த்து இல்லை . விமானத்தில் செல்லும்படியான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் ' அது ஏழைகள் பயணம் செய்ய முடியாத வாகனம் . எனக்கும் அதில் பயணம் செய்ய விருப்பம் இல்லை ' என்று தவிர்த்திருக்கிறார் காந்தி . அவரது லண்டன் பயணம் கப்பலில்தான் நடந்தது . இந்தியா முழுவதும் ரயிலிலும் கார்களிலும்தான் பயணம் செய்திருக்கிறார் . இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யாத முதல் அரசியல்வாதி காந்தியாகத்தான் இருக்கக்கூடும் .
--- எஸ் . ராமகிருஷ்ணன் . ஆனந்தவிகடன் , 30 - 09 - 2009 .

Monday, February 1, 2010

தமாஷ் !

* " அப்பா கிளாஸ்ல ஜோசப் என்னை அடிச்சுட்டே இருக்கான் !"
. " உன் சார்கிட்டே சொல்ல வேண்டியதுதானே !"
" அந்த நாதாரி பேருதாம்பா ஜோசப் !"
* " எல்லா டாக்டர்களும் ஏன் நின்னுகிட்டே ஆபரேஷன் செய்றாங்க சொல்லு ?"
" தெரியலையே !"
" தெய்வம் மட்டுமில்லை... டாக்டர்களும் நின்றுதான் கொல்வாங்க !"
* சாலையில் ஒரு டீனேஜ் பெண்ணும் பையனும் .... " டேய் முட்டாள் , நீ பைக்குல வந்த வேகத்துல என் மேல மோதியிருந்தா என்ன ஆகியிருக்கும் ?"
* " பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா ?"
" ரெண்டுமே கட்டிக் கொடுக்குறவரை தலைவலிதான் ".
* " அந்த இருதய ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ..?"
" பைபாஸ் வழியா போங்க ..."
* " நல்லா இருந்த பேஷண்ட்டை ஸ்ட்ரெக்சர்ல தூக்கிட்டு வர்ற அளவு சீரியஸா எப்படி ஆச்சு ?"
" நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சத , டாக்டர் கேட்டுட்டாராம் ."
* செக்கர் : " டிக்கெட் எங்கே ? '
சர்தார்ஜி : " பஸ் எங்கே ?"
செக்கர் : " இதுதான் பஸ்ஸூ !"
சர்தார்ஜி : " இந்தாங்க டிக்கெட் ! "
செக்கர் : " இது பழைய டிக்கெட் ! "
சர்தார்ஜி : " இந்த பஸ்ஸு மட்டும் புதுசா ?
* " பாவம் , அந்தப் பொண்ணுக்குக் காது கேட்காது போல , நான் ஒண்ணு சொன்னா அது ஒண்ணு சொல்லுது !"
" ஏன் என்னாச்சு ?"
" நான் ஐ லவ் யூன்னு சொன்னா , அதுக்கு செருப்பால அடிப்பேன்னு சொல்லுது !"
* ' டீ' க்கும் ' காபி ' க்கும் என்ன வித்தியாசம் தெரியுங்களா ...?
டீயில ஒரு ' ஈ ' இருக்கும் . காபியில ரெண்டு ' ஈ ' இருக்கும் .
* " டாக்டர் என் பேரன் விரல் சூப்புற பழக்கத்தை விடமாட்டேங்கறான் "
" கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும் "
" சொன்னா , பேரனோட சம்சாரம் கேட்க மாட்டேங்கறா "
* " டாக்டர் ... வாய் துர்நாற்றத்தை எப்படி போக்கறது ?"
" டெய்லி மூணு தடவை பல் தேய்க்கணும் "
" நாளையிலிருந்து அதை செய்யுங்க "