Friday, April 30, 2010

விஷம் !

பாம்பு விஷம் !
நல்ல பாம்பின் நஞ்சில் ' ந்யூரோபாக்சின் ' என்னும் நச்சுப் பொருள் உள்ளது . கட்டு விரியன் பாம்பின் நஞ்சில் ' ஹீமோ டாக்சின் ' என்னும் நச்சுப் பொருள் உள்ளது . இந்த இரண்டும் கொடிய நஞ்சு . எனவேதான் கடிபட்டால் மரணம் ஏற்படுகிறது .
--- மஞ்சை வசந்தன் . பாக்யா . டிசம்பர் 4 -- 10 ; 2009 .

அப்படியா !

* சர். சி. வி . ராமன் அவர்களுக்கும் , மதர் தெரஸாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு . இருவரும் உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் விருதையும் , இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருதையும் பெற்றவர்கள் .
* இந்தியாவின் மிகப் பழமையான அணைக்கட்டு தமிழகத்தில் உள்ள திருச்சி கல்லணைதான் . இலங்கையிலிருந்து பிடித்து வரப்பட்ட கைதிகளைக் கொண்டு கட்டப்பட்டது இந்த அணை என்பது குறிப்பிடத்தக்கது .
* யானைகளின் காதுகளில் ஏராளமான ரத்தக் குழாய்கள் உள்ளன . யானை தன் காதுகளை சில தடவைகள் முன்னும் பின்னும் அசைத்தாலே போதும் , அவற்றின் உடல் வெப்பம் குறைந்து ரத்தமும் குளிர்ச்சி அடையும் . யானைகள் இதனால்தான் தன் காதுகளை ஆட்டிக் கொண்டே இருக்கின்றனவாம் .
* மழை நீரில் 28 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பில் ஓடி கடலை அடைகிறது . மீதி 72 சதவீதம் ஆவியாகி காற்று மண்டலத்தை மீண்டும் அடைகிறது .
* கிரேக்க நாட்டிலே யூரல் மலைப்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற நகரம் உள்ளது . இந்த நகரம் கல் நார் எடுக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது . இந்த நகரின் பெயராலேயே கல் நாருக்கு ஆஸ்பெஸ்டாஸ் என்ற பெயர் வந்தது . கிரேக்க மொழியில் ஆஸ்பெஸ்டாஸ் என்றால் அழிக்க முடியாதது என்று அர்த்தம் .
--- பாக்யா . டிசம்பர் 4 -- 10 ; 2009 .

Thursday, April 29, 2010

ஜாலி ஜோதிடம் !

கேர்ள்ஸ் ! இனி ஆண்களின் கை விரல்களை கொஞ்சம் கவனியுங்கள் . விரல்களின் அளவை வைத்து ஒரு ஆணின் கேரக்டரை சொல்லிவிட முடியும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி முடிவுகள் .
ஆணுடைய விரல்களில் நான்காவது விரல் ரெண்டாவது விரலைவிட பெரிதாக இருந்தால் அவர் ' ப்ளேபாய் ' என்கிறது புது ஆராய்ச்சி . ஆண்களுக்கு முக்கியமான ' டெஸ்டோபிரான் ' ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது ரெண்டாவது விரலைவிட நான்காவது விரல் சற்று நீட்டமாக வளருமாம் . நான்காவது விரல் பெரியதாக இருக்கும் ஆண்கள் , பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் .
பாய்ஸ்... உங்க விரல் ப்ளீஸ் !
ஜனனி .குமுதம் . 02 . 12 . 2009 .

Wednesday, April 28, 2010

செல்போன் !

பில்போட்டு முறையான டீலர்களிடம் நீங்கள் செல்போங்கள் வாங்கியிருந்தால், அவை ஒரு வாரத்திற்குள் இயங்கவே முடியாத அளவிற்கு ரிப்பேர் ஆகியிருந்தால் மாற்றித்தரும் வழக்கம் உள்ளது .
நீங்கள் வாங்கிய போனை அதற்குரிய சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றால் அவர்கள் உங்களது பில் மற்றும் போனை நன்றாகப் பரிசோதித்து , அவர்களின் நிபர்ந்தனைக்கு உட்பட்டு அனைத்தும் இருந்தால் ' COA ' சர்டிஃபிகேட் ஒன்று வழங்குவார்கள் . அதாவது ' Dead on Arrival '. இந்த சர்டிஃபிகேட்டை சர்வீஸ் சென்டரில் பெற்று டீலரிடம் கொடுத்தால் அவர் வேறு போன் தருவார் . முக்கியமாக , நீங்கள் வாங்கும் பிராண்டுக்கு இப்படி மாற்றித்தரும் சலுகை இருக்கிறதா என்பதை வாங்கும்போதே தெரிந்து வாங்குவது நல்லது .
--- இளையரவி தகவல் தமயந்தி . குமுதம் 02 . 12 . 2009 .

Tuesday, April 27, 2010

பாதிப்பு !

எப்போதும் செக்ஸில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற வெறி நிலைக்கு ' எரோடோமேனியா ' ( Erotomania ) என்று பொதுப் பெயர் . இது ஆணுக்கு இருந்தால் , சேடிரையாஸிஸ் ( Satyeiasis ) . பெண்ணுக்கு இருந்தால் , நிம்போமேனியா ( Nymphomania ) என்று அழைக்கப்பட்டன . இதற்கு லேட்டஸ்ட் பெயர் Persistent genital Arousal disorder .
--- டாக்டர் டி. நாராயணரெட்டி . செக்ஸாலஜிஸ்ட் . ஆனந்தவிகடன் , 02 . 12 . 2009 .

Monday, April 26, 2010

சமையல் கேஸ் சிலிண்டர் .

வீட்டிற்கு சப்ளை செய்யப்படும் சிலிண்டர்கள் லீக் இல்லாமல் இருக்கிறதா ? நன்கு சீல் செய்யப்பட்டிருக்கிறதா ? என்பதுடன் சிலிண்டர்கள் உபயோகப்படுத்துவதற்கான காலவரம்புக்குள் இருக்கிறதா ? என்பதைப் பார்ப்பது அவசியம் .
நாம் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு ' இவ்வளவு காலத்திற்குத்தான் அதைப் பயன்படுத்தலாம் ' என்கிற வரையறையுள்ளது . ஒரு வருஷத்தை நான்கு குவார்ட்டர்களாகப் பிரித்து அதற்கு ' A' , ' B ' , ' C ' , ' D ' என குறியீடு வழங்கப்பட்டுள்ளது . ' A ' என்றால் ஜனவரி முதல் மார்ச் வரை , ' B ' என்றால் ஏப்ரல் முதல் ஜூன் வரை , ' C ' என்றால் ஜூலை முதல் செப்டம்பர் வரை , ' D ' என்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பயன்படுத்தலாம் என்பது அந்தக் குறியீட்டின் அர்த்தம் .
' A ' என்ற குறியீட்டுடன் வருஷத்தையும் சேர்த்து ' A09 ' என்று அந்த சிலிண்டரில் குறிப்பிடப்பட்டிருந்தால் 2009 -ம் வருடம் மார்ச் மாதம் வரை அந்த சிலிண்டர் பாதுகாப்பானது என்பது பொருள் .
சரி ; இந்தக் குறியீடு சிலிண்டரில் எங்கே காணப்படும் ?
சிலிண்டரின் மேற்புறம் உள்ள வளையம் , ஸ்டீல் போன்று மூன்று கால்கள் மீது இணைக்கப்பட்டிருக்கும் . அந்தக் கால்களின் உட்புறம் A09 , B09 , C09 , D09 என்று இந்த நான்கில் ஒரு குறியீட்டை பெயிண்டினால் எழுதியிருப்பார்கள் .தற்சமயம் உங்கள் கிச்சனில் உள்ள சிலிண்டரில் D09 என்று இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் !
--- இளையரவி . தகவல் தமயந்தி . குமுதம் 02 . 12 . 2009 .

Sunday, April 25, 2010

ப்ர ( ர) மாதமானஐடியா .

நீங்கள் உங்கள் காதலிக்கு ஒரு ' ப்ரா ' பிரசண்ட் செய்ய நினைக்கிறீர்கள் . காதலியிடம் சைஸ் கேட்க கூச்சமாக இருக்கும் . அல்லது கேட்டாலும் ' ச்சீ .. போங்க ' என்று வெட்கப்பட்டு ஓடுவாள் . அப்பொழுது அவளிடம் ' சரி.. நீ என்னிடம் சொல்ல வேண்டாம் . உன் மனதிற்குள்ளேயே நினைத்துக் கொள் . நான் 615 என்ற மன்மத மந்திரம் மூலம் நீ மனதில் நினத்த சைஸை கூறுவதுடன் , உன் வயதையும் கூறுகிறேன்' என்று சவால் விடுங்கள் . கிளுகிளுப்புடன் சம்மதிப்பாள் . . அடுத்து நீங்கள் அவள் கையில் ஒரு பேனாவும் , பேப்பரும் கொடுங்கள் .
உங்கள் காதலியிடம் அவளது ப்ரா சைஸ் நெம்பரை ரகசியமாக எழுதச் சொல்லுங்கள் . ( உதரணத்துக்கு அவள் எழுதியது உங்களுக்குத் தெரியாது . ஆனால் வாசகர்களுக்கு அதை 32 ( உங்கள் காதலி இளம்குமாரி தானே ) என்று வைதுக் கொள்ளுவோம் .
இப்போது உங்கள் காதலி எழுதிய நெம்பரை இரண்டால் பெருக்கச் சொல்லுங்கள் ( 32 x 2 = 64 ) , பெருக்கிய விடையில் ஐந்தைக் கூட்டச் சொல்லுங்கள் ( 64 + 5 = 69 ) , பிறகு அதை ஐம்பதால் பெருக்கச் சொல்லுங்கள் ( 69 x 50 = 3450 ) , அந்தப் பெருக்கல் தொகையுடன் வருஷ நாட்களைக் கூட்டச் சொல்லுங்கள் ( 3450 + 365 = 3815 ) , இப்போது மொத்த எண்ணுடன் காதலியின் வயதைக் கூட்டச் சொல்லுங்கள் ( உதரணத்துக்கு காதலி வயது ஸ்வீட் 16 ) ( 3815 + 16 = 3831 ) , கடைசியாக இப்போது வந்த கூட்டுத் தொகையை மட்டும் உங்களிடம் கூறச் சொல்லுங்கள் . உங்கள் காதலி கூறிவிட்டாள் 3831 என்று -- இப்போது உங்கள் மனதில் உள்ள ' 615 ' என்ற மன்மத மந்திரத்தை கூட்டுத் தொகையிலிருந்து கழியுங்கள் -- ( 3831 -- 615 = 3216 ) . இதில் கடைசி இரண்டு எண்கள் அதாவது 16 . இது உங்கள் காதலியின் வயது . முதல் இரண்டு எண்கள் 32 , இது நீங்கள் ப்ரசண்ட் செய்ய நினைத்த உங்கள் காதலியின் ப்ரா சைஸ் .
" உன் வயது 16 . சைஸ் 32 " என்று கூறுங்கள் . உங்கள் காதலி அசந்து விடுவாள் .
--- பாக்யா . நவ 27 -- டிச 31 ; 2009 .

Saturday, April 24, 2010

இறந்த பின் !

இறந்த பின்னும் உயிருடன் இருக்கும் பாகங்கள் :
கண்கள் .............. 31 நிமிடங்கள் .
மூளை ................ 10 நிமிடங்கள் .
கால்கள் ............... 4 மணி நேரம் .
தோல் ....................3 நாட்கள் .
காதுகள் ................10 நிமிடங்கள் .
எலும்புகள் ..........30 நாட்கள் .
நட்பு .........................7 ஜென்மங்கள் .
--- தினமலர் . நவம்பர் 28 . 2009 .

Friday, April 23, 2010

ருத்ராட்ச மாலை .

ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட் ஒன்று உள்ளது .
உங்கள் இடது கை விரல்களை மெதுவாக மடக்குங்கள் . ஐந்து விரல்களும் மூடிய நிலையில் , லேசாக வைத்திருங்கள் . அது யோகத்தில் ஒரு முத்திரை . அப்போது ருத்ராட்சமாலையை விரலின் முட்டிக்கு மேலாகத் தொடாமல் தொங்கவிடுங்கள் .
ஓர் ஆச்சர்யம் நிகழும் . ருத்ராட்ச மாலை அப்படியே மெல்ல வலதுபுறமாகச் சுழல ஆரம்பிக்கும் . உடனே கையை அதே பொஸிஷனில் சற்று இறுக்கமாக வைத்திருங்கள் . அது யோகத்தை முறித்தல் நிலை . அப்போது மாலை மெல்ல இடதுபுறமாகச் சுழல்வதை உணர்வீர்கள் . அப்படிச் செய்தால் அது குறையற்ற , சுத்தமான ருத்ராட்ச மாலை . முனிவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்த காரணம் புரிகிறதா ?
அந்தக் காலத்தில் முனிவர்கள் காட்டுக்குள் இருப்பார்கள் . கிடைத்ததைச் சாப்பிடுவார்கள் . அப்போது அது நல்ல உணவா , கெட்ட உணவா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ருத்ராட்ச மாலைஉதவும் . அதாவது நல்ல உணவாக இருந்தால் மாலை கடிகாரம் போல் வலப்புறமாகச் சுற்றும் . விஷமுள்ள உணவாக இருந்தால் இடதுபுறமாகச் சுழலும் . அதை வைத்து அவர்கள் நல்ல உணவைக் கண்டுகொள்வார்கள் .
---ப்ரியா கல்யாணராமன் , சம்போ சிவ சம்போ ! -- குமுதம் . 25 . 11 . 2009 .

Thursday, April 22, 2010

9 - ம் , 95 - ம் !

" எங்கள் வீட்டிற்குத் திருக்குறள் அவதானி சுப்பிரமணிய தாஸ் வந்து பேசிக் கொண்டிருந்தார் . மணி 11. 30 ஆயிற்று . என் மகள் வந்து , ' அப்பா ! இன்றைக்கு ஒன்பதா ? ' என்று கேட்டாள் . எனக்கே தூக்கிப்போட்டது . கொஞ்ச நேரம் யோசித்து , ' ஆமாம்மா ' என்றேன் . அவள் போய்விட்டாள் . இவர் யோசித்தார்... ' என்னடா ஒன்பதா என்று கேட்கிறாள் . யோசித்து ஆமாம் என்று சொல்லுகிறாரே ' என்று . உடனே என் மகளை " இங்கே வா அம்மா " என்றார் . வந்ததும் ' ஒன்பது இல்லையம்மா . நான் 95 - லே இருக்கிறேன் ' என்றார் . அப்படியே வெட்கிப் போய்விட்டது பிள்ளை .
என்ன பொருள் ? ' அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாரே , புதிதாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே , இன்றைக்கு அவருக்கு உணவு தயாராக வேண்டுமா ?' என்று கேட்டாள் . 9 -ம் அதிகாரம் விருந்து . ' ஆமாம்மா ' என்றேன் . போனாள் . இதை அவர் கண்டுபிடித்து விட்டார் . அவர் அவதானி அல்லவா ? ' வா அம்மா ' என்றார் . வந்தவுடன் ' நான் 95 - லே இருக்கிறேன் ' என்றார் . 95 என்றால் மருந்து . ' நான் மருந்து சாப்பிடுகிறேன் விருந்து வேண்டாம் ' என்றார் . திருக்குறள் தலைப்பு 133 - யும் படித்து விட்டீர்களானால் நீங்களும் இப்படித் திருக்குறள் பரிபாஷையில் பேசலாம் ".
--- கி. ஆ. பெ. விசுவநாதம் . ஆனந்தவிகடன் ( 26 . 12 . 1965 ).

Tuesday, April 20, 2010

ஆதிசங்கரர் .

ஆதிசங்கரருடைய பெற்றோர் நீண்டகாலமாகப் பிள்ளை இல்லையே என்று விரதம் இருந்தார்கள் . ஒரேநாள் ஒரேசமயம் இருவர் கனவிலும் இறைவன் தோன்றி , ' நீண்ட நாள் வாழும் மோசமான பிள்ளை உனக்கு வேண்டுமா.... கொஞ்சநாள் வாழும் நல்ல பிள்ளை வேண்டுமா ?' என்று கேட்டார் . ஆச்சர்யம் பாருங்கள்... " அதெப்படி நானே முடிவு செய்ய முடியும் ? என் மனைவியைக் கேட்டு சொல்கிறேன் " என்றபடி கணவர் எழுந்தார் . அதேகணம் , " கணவரைக் கேட்டுச் சொல்கிறேன் " என்று மனைவி கண்விழித்தாள் . இந்த அகங்காரமற்ற தம்பதி வயிற்றில் தான் ஆதிசங்கரர் பிறக்க முடியும் ! இருவருமே சேர்ந்து , " நாங்கள் யார் முடிவு செய்ய ? நீயே முடிவு செய் " என்று அகங்காரமற்று கடவுளிடம் முடிவை விட்டனர் .
மண்டைக் கனம் உள்ளவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்க மாட்டார்கள் . மன வருத்தத்தோடுதான் வாழ்வைக் கழிப்பாரகள் . தீப்பெட்டியில் தீக்குச்சி உரசுகிறது . பெட்டி எரிவதில்லை . குச்சி எரிந்து கருகுகிறது . ஏன் ? குச்சிக்கு மண்டைக் கனம் ஜாஸ்தி !
--- சுகி. சிவம் . தினகரன் . இணைப்பு . 30. 01. 2010 .

தெரியாது , ஆனா , தெரியும் !

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் . அவரிடம் அலுவல் நாடிச் சென்றார் மறைமலையடிகள் . பரிதிமாற் கலைஞர் , குற்றியலுகரம் , முற்றியலுகரம் இரண்டிற்கும் சான்று தருமாறு கேட்டார் . அதற்கு மறைமலையடிகள் , ' எனக்குத் தெரியாது !' என்றார் .
பரிதிமாற் கலைஞர் மிகவும் மகிழ்ந்து , உடனே மறைமலையடிகளுக்கு வேலையைத் தந்தார் .
' எனக்குத் தெரியாது ' என்று சொன்னதற்கா வேலை என்று யோசிக்கிறீர்களா? மறைமலையடிகள் அளித்த விடையில் ' எனக்கு ' என்ற குற்றியலுகரமும் , ' தெரியாது ' என்ற முற்றியலுகரமும் அடங்கி இருந்ததே மறைமலையடிகளுக்கு பரிதிமாற் கலைஞர் வேலை அளிக்கக் காரணம் .
--- ஆனந்தவிகடன் . 13 . 12 . 1964 .

Monday, April 19, 2010

8 : 12 : 18 .

ஒரு பணியாளராக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் விசுவாசமாக உழையுங்கள் ; ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் உழைக்கும் மேலாளர் பதவியை அடையலாம் . மேலாளராக ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உண்மையாக உழையுங்கள் ; ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் முதலாளியாகலாம் !
---'ஷெல்லி ' ராணி . அவள்விகடன் , செப்டம்பர் 25 . 2009 . இதழ் உதவி : k. மகேஷ்குமார் , திருநள்ளாறு .

Sunday, April 18, 2010

போர்த் துளிகள் ...

* ஆரம்பத்தில் போர் விமானங்கள் பொருட்களைக் கொண்டுசெல்ல மட்டுமே பயன்பட்டன . 1911-ல் துருக்கியப் போரின்போது குண்டுகளை எடுத்துச் சென்ற இத்தாலிய விமானி ஒருவர் , ' நேரடியாகப் போரில் ஈடுபட முடியவில்லையே ' என்ற ஆதங்கத்தில் , இரண்டு குண்டுகளைக் கையில் எடுத்து வீசினார் . இப்படித்தான் விமானத்தில் இருந்து குண்டு வீசும் முறை உருவானது .
* ஹிட்லர் பெர்சனலாகப் பயன்படுத்திய ரயிலுக்குப் பெயர் ' அமெரிக்கா '.
* ஜெர்மனி வீழ்த்தப்பட்டதும் , ரைன் நதியின் மீது கூட்டணிப் படைவீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று சிறு நீர் கழித்தனர் . போர்க் காலங்களில் இது சர்வசாதாரணம் . கடைநிலைப் போர் வீரனில் இருந்து சர்ச்சில் வரை இதற்கு விதிவிலக்கு அல்ல .
--- யுத்தம் விகடன் . 25 . 11 . 2009 . இதழுடன் இணைப்பு .

Saturday, April 17, 2010

' மேகஸின் 'குண்டு பல்பு -- டியூப்லைட் !

' மேகஸின் ' என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது . இந்த வார்த்தைக்கு ' செய்தி கருவூலம் ' என்று பொருள் . -- குமுதம் சினேகிதி , அக்டோபர் 16- 31 . 2009 .
குண்டு பல்பு -- டியூப்லைட் !
குண்டு பல்பு எரியும்போது அதுல மிகமிக அதிகமான மின்சக்தி , வெப்பமா மாறுது . வெறும் ஐந்து சதவிகித மின்சாரம் மட்டும்தான் ஒளியைத் தருது .
டியூப்லைட்டையும் இப்பல்லாம் பெருசா சொல்றதல்ல . அதைவிட , சின்னதா டியூப்லைட்டை வளைச்சு சுத்தின மாதிரி வருதே , சி. எஃப். எல் . பல்பு ( C.F.L -- Compact Fluorescent Lamp ) , அதுக்குத்தான் ஆதரவு அதிகம் . குண்டு பல்புல கிடைக்கிற அதே அளவு வெளிச்சத்தை இந்த பல்பு தருது . அதே சமயம் , குண்டு பல்பைவிட 80 சதவிகிதம் குறைவான மின்சாரத்தையே எடுத்துக்குது . அதாவது , ஒரு 100 வாட் குண்டு பல்புக்குப் பதிலா 20 வாட் சி. எஃப். எல். பல்பை மாட்டலாம் . அதுமட்டுமில்லே... குண்டு பல்புகளால நிறைய கரியமிலவாயு வெளியாகி , வளிமண்டலத்துல கலக்குது . இதனால உலகம் வெப்பமடையுது .
--- ஜி. எஸ். எஸ். அவள் விகடன் , 25 . 09 . 2009 . இதழ் உதவி : k. மகேஷ்குமார் , திருநள்ளாறு .

Friday, April 16, 2010

கோத்திரம் !

நமது ஜோதிட நூல்களில் மிகப் பழங்காலத்திலேயே ' ராசியில் ஏழாம் மற்றும் எட்டாம் இடங்களில் சூரியனும் சுக்கிரனும் உள்ளவர்களுக்கு மணமுறிவு அல்லது பிரிவோ ஏற்படும் ' என்று கூறப்பட்டுள்ளது . அப்படி பிரியும் தம்பதிகளுக்கு ஏற்படும் ' கோத்திரம் ' பிரச்னைகள் பற்றியும் அதில் தெளிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளது . தாய் கர்ப்பகிரகம் என்றால் , தந்தை மூலவர் என்பதே ஜோதிட நூல்கள் குழந்தை பிறப்பு பற்றிக் கொண்டுள்ள அடிப்படைக் கருத்து . அந்த நூல்கள் , மணமுறிவு ஏற்படும்போது குழந்தைகள் தந்தையின் கோத்திரத்தையே சார்ந்தவர்கள் என்றும் , அம்மா... அவருடைய அப்பாவின் கோத்திரத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுகின்றன .
--- அவள்விகடன் , செப்டம்பர் 25 . 2009 .

Thursday, April 15, 2010

உடல் இளைக்க...

அமுக்கிராங்கிழங்கு கால் கிலோ எடுத்துகோங்க... அதை நல்லா காய வச்சி பொடியாக்குங்க . பிறகு , ஒரு பாத்திரத்தில பால் ஊத்தி தேவையான அளவு தண்ணி ஊத்தி அதுக்கு மேல வேடு கட்டி ( பாத்திரத்தின் வாய் பகுதியில் துணியைக் கட்டி வைப்பது ) அதுக்கு மேல அமுக்கிராங்கிழங்கு பொடியை வச்சு அவிக்கணும் . நல்லா ஆவி வந்ததும் இறக்கி வச்சு சூடு ஆறினதும் திரும்பவும் பொடியாக்கி வச்சிக்கிடணும் . அதுல கால் ஸ்பூன் எடுத்து கொஞ்சம் தேன் சேர்த்து காலையிலும் சாயங்காலமும் வெறும் வயித்துல சாப்பிடணும் . இதை ஒரு மண்டலமோ , ரெண்டு மண்டலமோ சாப்பிடுங்க . பருத்த தேகம் நாளடைவுல மெலிஞ்சுடும் .
--- அன்னமேரி பாட்டி , அவள் விகடன் 23 . 10 . 2009 . இதழ் உதவி : k. மகேஷ்குமார் , திருநள்ளாறு .

Wednesday, April 14, 2010

விக்ருதி ஆண்டு .

விக்ருதி ஆண்டு .
தமிழ்ப் புத்தாண்டு !
விக்ருதி நாம சாமவாட்சரம் ? அப்படின்னா என்ன ?
விக்ருதி நாம சாமவாட்சரம் என்பது இந்திய 60 வருட காலச்சக்கரத்தில் 24வது வருடமாகும் . சாஸ்திர நிபுணர்களின் கூற்றுப்படி இது விஷ்ணு கடவுளுக்கு உகந்த மாதமாகும் .
சமஸ்கிருதத்தில் ' விகர் ' என்றால் மாற்றம் ஏற்படுதல் என்பது பொருள் .
ஒரே ஆண்டில் 13 மாதங்கள் ? ஆச்சரியமா இருக்கே !
விக்ருதி ஆண்டு 13 மாதங்கள் கொண்டதாகும் . இந்த கூடுதல் மாதத்திற்கு அதிக வைசாக மாசம் என்று பெயர் . இந்த கூடுதல் மாதம் இரட்டிப்பு நன்மைகள் கொண்டதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது . இந்த மாதம் சுபகாரியங்களுக்கு உகந்தது அல்ல என்பது சாஸ்திர நிபுணர்களின் கூற்று .
--- ஸ்ரீராம் சிட்ஸ் , தினமலர் . 07. 04. 2010 .

தீபம் !

திருமுறைகளில் தீபம் !
திருஞான சம்பந்தர் மைலாப்பூர் பதியத்தில் ' தையலார்கள் கொண்டாடும் விளக்கீடு ' என கார்த்திகை தீபத்தைக் குறித்துள்ளார் . அப்பர் சிவபெருமானை ' தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே ' என்பார் . மாணிக்கவாசகர் ' ஜோதியே சுடரே சூழ்விளக்கே ' என்று பெருமானைப் புகழ்வார் . ஒன்பதாம் திருமுறையின் முதல் பாடல் ' ஒளிவளர் விளக்கே ' என்று துவங்குகிறது .
--- தினமலர் . பக்திமலர் . நவம்பர் 26 . 2009 .

Tuesday, April 13, 2010

நில் கவனி வாழ் !

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்கத் தோற்றால் வாழ்க்கையே இழப்பு !
நீ பிறந்தது தரித்திரமாக இருந்தாலும்
வாழ்வது சரித்திரமாக இருக்க வேண்டும் !
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை . ஆனால்
அதற்கான தகுதி அனைவருக்கும் உண்டு..... முயன்றால் !
வாய்ப்புகளை பெறுபவன் அதிஷ்டசாலி
உருவாக்குபவன் புத்திசாலி
பயன்படுத்திக் கொள்பவன் திறமைசாலி !
நேற்று நடந்ததை நினைத்திருந்தால்
நாளை நடப்பது பிழையாகும் !
--- ஹ. தாஹிதாபானு , பெரம்பலூர் . அவள் விகடன் 23 . 10 . 2009 . இதழ் உதவி : k. மகேஷ் குமார், திருநள்ளாறு .

Sunday, April 11, 2010

பூச்சிகள் பாதிப்பு .

செடிகளை பூச்சிகள் பாதிப்பிலிருந்து பாதுகாக்க சிறிதளவு இஞ்சி , இரண்டு பல் பூண்டு , ஐந்து பச்சைமிளகாய் , சிறிதளவு பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும் . அதனுடன் தண்ணீரில் ஊற வைத்த புகையிலையையும் சேர்த்து செடிகளுக்கு தெளித்து வர , பூச்சித் தாக்குதல் நிகழாது .
--- பட்டுக்கோட்டை ஏங்கல்ஸ் ராஜா . அவள் விகடன் , தீபாவளி ஸ்பெஷல் . அக்டோபர் 23, 2009 .

Saturday, April 10, 2010

தெரிஞ்சுக்கோங்க ...

செல்போனில் அடிக்கடி ஏற்படும் சில பிரச்சினைக்காக உடனடியாக செல்போனை தூக்கிக்கிட்டு கடைக்காரரிடம் போய் விசாரிப்போம் . இனி அப்படி அலையாமல் இருப்பதற்குத்தான் இந்த தகவல்கள் .
சில மொபைல் போன்களில் சிம் கார்டு லாக் ஆகிவிடும் . அப்போது சிம் கார்டு லாக் அகற்ற * # 4960 # என்ற எண்ணை டயல் செய்தால் போதும் .
உங்கள் போனில் மென்பொருள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள * # 0000 # என்ற எண்களை அழுத்துங்கள் . அப்போது , அந்தத் தகவலில் முதல் வரி மென்பொருள் பதிப்பு . இரண்டாம் வரி மென்பொருள் வெளியிட்ட தேதி ஆகியவற்ரைக் காட்டும் .
--- தினமலர் வாரமலர் . நவம்பர் 15 2009 .

Friday, April 9, 2010

அப்படியா...

' வெந்து கெட்டது முருங்கைக் கீரை , வேகாமல் கெட்டது அகத்திக் கீரை ' என்பார்கள் . இதன் மூலப் பொருள் என்னவென்றால் , முருங்கைக் கீரையை வேக வைத்தும் , அகத்திக் கீரையை நன்றாக வேக வைத்தும் சாப்பிட வேண்டும் என்பதுதான் .
--- பாக்யா .

Thursday, April 8, 2010

தெரிஞ்சுக்கோங்க ...

செல்போனுக்கான நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்தில் , அல்லது அவுட் கோயிங் வசதி இல்லாதபோது எங்கேனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் , பதட்டப்படாமல் போனில் 112 என்ற எண்னை அழுத்தவும் . உலகம் முழுவதும் செயல்படக்கூடிய இந்த எண்ணை அழைத்தால் , அருகாமையில் உள்ள வேறு நெட்வொர்குடன் இணைப்பு ஏற்படுத்தி , 100 , 101 போன்ற அவசர எண்களை அழைப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தரும் . உங்கள் போனின் விசைப்பலகையை இயக்க முடியாத நிலையிலும் , இந்த எண்ணை மட்டும் எளிதாக டயல் செய்யலாம் .
-------------- -------------- ---------
* # 2640 # _ பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு குறியீட்டைக் காண்பிக்கும் .
* # 67705646 # -- ஆபரேட்டர் லோகோவை நீக்கலாம் .
* # 73 # -- போன் நேரம் மற்றும் கேம்ஸ்கோரை மாற்றியமைக்கலாம் .
* # 7760 # -- தயாரிப்பாளர் குறியீட்டைக் காணலாம் .
* # 92702689 # -- இது மிகவும் முக்கியமான குறியீடு . இதை அழுத்தினால் , பின்வருபவற்றைக் காணலாம் :
-- சீரியல் எண் , தயாரிப்பு , தேதி , போன் வாங்கிய தேதி , கடைசியாக ரிப்பேர் செய்த தேதி ( 0000 என்றிருந்தால் , ரிப்பேர் ஏதுமில்லை என்று பொருள் ).
--- தினமலர் . வாரமலர் . நவம்பர் 15 2009 .

Wednesday, April 7, 2010

கண்டுபிடிப்பு ...!

முகச்சுருக்க பிரச்னைக்கு இப்பொழுது பிரிட்டன் விஞ்ஞானிகள் ஒரு புதிய தலையணையை வடிவமைத்துள்ளனர் . இந்த தலையணைக்குள் தாமிரமும் , ஆக்ஸிஜனும் சேர்ந்த காப்பர் ஆக்ஸைடு என்ற வாயுக்கலவை அடைக்கப்பட்டிருக்கும் . இதனை தலைக்கு வைத்து தூங்கும்போது சருமத் துவாரங்கள் வழியாக வெளியேறும் வியர்வையுடன் இந்த வாயுக்கள் வினைபுரிந்து , முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் . இந்த தலையணை விரைவில் நம்ம நாட்டு சந்தையிலும் விற்பனைக்கு வருதாம் .
--- மிஸ்டர் வாசகன் . தினமலர் . வாரமலர் . நவம்பர் 15 2009 .

Tuesday, April 6, 2010

உங்களுக்குத் தெரியுமா ? வைரமுத்து !

உங்களுக்குத் தெரியுமா ?
உங்களுக்கு ஒன்று தெரியுமா ? மாவீரன் நெப்போலியன் , ஜூலியஸ் சீஸர் , ஹனிபால் , பதினான்காம் லூயி ... இன்னும் பல மாவீரர்கள் எல்லாம் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தவர்கள் .
--- ஆனந்தவிகடன் . 26 . 09. 1999 .
வைரமுத்து !
கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார் வைரமுத்து . நாளை அணையே தூர்ந்துபோனாலும் , அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம் .
பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியிட்ட ' வைகறை மேகங்கள் ' என்ற முதல் கவிதைத் தொகுதி , இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக இருக்கும் பெருமை பெற்றதாம் . இப்போது விற்பனையாகிக்கொண்டு இருப்பது வைகறை மேகங்களின் 29 -ம் பதிப்பு .
' அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் ' இவரது கவிதைகளை , இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து , உலக இலக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாஷிங்க்டன் டி. சி- யில் பாதுகாத்து வருகிறது .
கனடா நாட்டு அரசாங்கத்தோடு இணைந்து ஒரு தமிழ் அமைப்பு , இவர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது . இவரது அஞ்சல் தலை ஒட்டப்பட்டு , இவருக்கு வந்த தபாலை இவரே பிரித்தார் .
--- ஆனந்தவிகடன் , 18 . 11 . 2009 .

எடை !உயரம் !தலைச் சுற்றளவு !

குழந்தையின் எடை !
உங்கள் குழந்தை எவ்வளவு எடை இருக்க வேண்டும் ? ஒரு சின்ன ஃபார்முலா ...
குழந்தையின் வயதுடன் மூன்றைக் கூட்டி ஐந்தால் பெருக்குங்கள் . அத்தனை பவுண்டு எடை உங்கள் குழந்தை இருந்தால் டபுள் ஓகே . அதாவது உங்கள் குழந்தைக்கு நான்கு வயது என்றால் அதன் எடை ( 4 + 3 ) x 5 = 35 பவுண்டு இருக்க வேண்டும் . 2 1/2 பவுண்டு என்பது 1 கிலோ .
இந்த ஃபார்முலா இரண்டு வயதிலிருந்து பன்னிரெண்டு வயது வரை மட்டுமே செல்லுபடியாகும் .
குழந்தையின் உயரம் !
குழந்தையின் வயதை இரண்டால் பெருக்கி 32 - ஐக் கூட்டுங்கள் . வருகிற விடை என்னவோ அத்தனை அங்குலம் இருக்க வேண்டும் அதன் உயரம் . நான்கு வயதுக் குழந்தையின் சரியான உயரம் 4 X 2 + 32 = 40 அங்குலம் . இந்த ஃபார்முலாவும் இரண்டு வயது முதல் பன்னிரெண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கே .
குழந்தையின் தலைச் சுற்றளவு !
பிறந்த குழந்தைக்கு 13 . 8 அங்குலம் தலைச் சுற்றளவு இருக்கும் . இது மாதத்துக்கு 1 / 2 அங்குலம் வீதம் முதல் நான்கு மாதமும் , பின்பு மாதத்துக்கு 1 / 4 அங்குலம் வீதம் அடுத்த எட்டு மாதமும் அதிகரிக்கும் . ஒரு வயது குழந்தையின் தலைச் சுற்றளவு 17 . 8 அங்குலம் இருக்க வேண்டும் . இந்த அளவிலிருந்து கூடுதலாகவோ , குறைவாகவோ இருந்தால் மருத்துவரை அணுகுங்கள் .
--- ஆனந்தவிகடன் , 12 . 09 . 1999 .

Sunday, April 4, 2010

படிகள் !

தத்துவம் சொல்லும் படிகள் !
ஐயப்பன் சந்நிதானத்தில் உள்ள பதினெட்டு படிகள் மிகவும் விஷேஷமானவை . இந்த பதினெட்டு படிகளும் ஒரே கல்லால் ஆனவை . பல வழிகள் ஒருங்கிணைந்து ஒரே லட்சிய ஈடுபாட்டில் மனிதனைச் செலுத்தும் தன்மையை இது வெளிப்படுத்துகிறது . ஐயப்பனை பூஜிப்பது போல பதினெட்டு படிகளையும் பூஜிக்கும் பழக்கம் சபரிமலையில் உண்டு . இதற்குப் ' படி பூஜை ' என்று பெயர் . சென்ற நூற்றாண்டுகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்த இந்தப் பூஜை இப்போது அடிக்கடி நடைபெறுகிறது .
இந்து மதத்தில் பதினெட்டு என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் அதிகம் . இந்த பதினெட்டுப் படிக்கட்டுகள் பதினெட்டு தத்துவங்களைக் குறிக்கிறது .
சபரிமலையின் பதினெட்டுப் படிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் இருக்கிறது . காண்பது , கேட்பது , மணம் , ரசனை , ஸ்பரிசம் என்னும் புலன்கள் -- ஐந்து . காமம் , ஆசை , குரோதம் , லோபம் , மோகம் , மதம் , மாச்சர்யம் , தான் என்னும் அகந்தை ஆகிய அராகங்கள் -- எட்டு . ரரோஜ குணம் ( ராட்சஸ ) , தமோகுணம் ( மந்தம் ) , சாத்வீகம் ( தெய்வீகம் ) என்ற குணங்கள் -- மூன்று . வித்யை ( அறிவு நிலை ) , அவித்தைய ( அறியாமை ) என்பன இரண்டு என்பவை அவை .
சபரிமலையைச் சுற்றி 17 மலைகள் இருக்கின்றன .சபரி மலையையும் சேர்த்து 18 மலைகளை 18 படிகல் குறிக்கின்றன என்ற ஒரு கருத்தும் உண்டு . பொன்னம்பல மேடு , கவுதென்மலை , நாகமலை , சுந்தரமலை , சிற்றம்பல மலை , கல்கி மலை , மாதங்க மலை , மயிலாடும் மேடு , ஸ்ரீபாத மலை , தேவர் மலை , நீலக்கல் மலை , தாலப்பாற மலை , நீலி மலை , கரி மலை , புதுச்சேரி மலை , காளக்கெட்டி மலை , இஞ்சிப்பாறை மலை , சபரிமலை என்பவை அந்தப் பதினெட்டு மலைகள் .
இந்தப் பதினெட்டு மலைகலைத் தாண்டிச் சென்றால் சாஸ்தாவின் தரிசனம் பெறலாம் . 18 தத்துவங்களைக் கடந்தால் சந்நிதானத்தின் திருவருள் பெறலாம் என்பதே 18ம் படியின் தத்துவம் .
--- தினமலர் . பக்தி மலர் . நவம்பர் 12 , 2009 .

Saturday, April 3, 2010

ஜோக் !

ஒரு ஊர்வலம் . இரண்டு சவப்பெட்டிகள் . அதன் பின்னால் ஒரு நாய் . அதன் பின்னால் ஒரு மனிதன் . அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள் . இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க , முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன் . அதற்கு அவன் , ' முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி . இரண்டாவதில் என் மாமியார் . அவர்களுக்கான ஊர்வலம் இது ' என்றான் .
' ஐய்யய்யோ ! அப்படியா ! இந்த நாய் ? ' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன் .
' ஓ , அதுவா ? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது '
வந்தவன் சற்று யோஜித்தான் . ' அந்த நாய் எனக்குக் கிடைக்குமா ?'
' உனக்கும் வேணுமா , அப்போ பின்னாடி வர க்யூவுல போய் நில்லு ' என்றான் மனைவியை பறிகொடுத்தவன் .
இந்த ஜோக் நம்ம ஊர் சரக்கல்ல , இங்கிலாந்துக்குரியது .
--- அரசு பதில்கள் . குமுதம் , 11 . 11 . 2009 .

ஆனந்தம் !

வீடு ஆனந்தம் !
எல்லோரும் தத்தமது வீடுகளில் அவசியம் வளர்க்க வேண்டிய 5 வகையான பச்சிலைகள் உண்டு . அவை மருத்துவச் செலவைக் குறைத்து , ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்துபவை .
வெட்டுக்காயப் பச்சிலை :
உடம்பில் ஏற்படும் காயத்தின் மீது இந்த இலையின் சாறைப் பிழிந்துவிட்டால் , ஓரிரு நாட்களில் காயம் இருந்த இடம் தையல்போட்டது போல ஒட்டிக்கொள்ளும் .
அம்மான் பச்சரிசிப் பச்சிலை :
வயிற்று வலிக்கு மிகச் சிறந்த மருந்து . பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் , சாதாரண வயிற்று வலிக்கும் இந்தப் பச்சிலைச் சாறு உடனடி நிவாரணத்தைத் தரும் .
ஆவாரம்பூ :
' ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ' என்பது சித்தர் பாட்டு . ஆவாரம் பூவை தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு ஓடிவிடும் . இதன் பூவை வெந்நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் சர்க்கரை போட்டுக் குடித்தால் வயிறு தொடர்பான நோய்கள் விலகிவிடும் .
கீழா நெல்லி :
மஞ்சள் காமாலைக்கு இதைவிடச் சிறந்த மருந்து இல்லை .
கார்த்திகைப் பூ :
வேரோடு பிடுங்கிக் காயவைத்து கஷாயம் வைத்துக் குடித்தால் , சிறுநீரகக் கல் கரைந்தோடி விடும் . ' லட்ச ரூபாய் செடி ' என்பது இதன் செல்லப் பெயர் . ' வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு !'
--- பாரதி தம்பி . ஆனந்தவிகடன் , 04 . 11 . 2009 .

Friday, April 2, 2010

செல்லே கதியா ?

தொடர்ந்து 10 ஆண்டுக்கு மேல செல்போன் பயன்படுத்தறவங்களுக்கு பிரெய்ன் டியூமர் வர்றதுக்கு வாய்ப்புள்ளதுன்னு எச்சரிச்சுள்ளது உலக சுகாதார நிறுவனம் . இந்த ஆராய்ச்சியைப் பார்த்து பயந்து போன பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அரசுகள் செல்போனால் ஏற்படும் தீங்குகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் செஞ்சுட்டிருக்கு . செல்லுலேயே வாழ்க்கை நடத்தும் இளைஞிகள் உஷாரா இருப்பது நல்லது .
--- தினமலர் , பெண்கள் மலர் . நவம்பர் , 7 , 2009 .

Thursday, April 1, 2010

அதிர்ஷ்டம் .

அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் .
அதிஷ்டத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா ?
' எதிர்பாராத , எதேச்சையான நிகழ்வு ( chance ) ' என்பதில் நம்பிக்கை உண்டு . அதை ' அதிர்ஷ்டம் ' என்று நீங்கள் அழைத்தால் , எனக்கு ஆட்சேபனை இல்லை !
சுமார் 40 லட்சம் ' உயிரணுக்கள் ' அப்பாவிடம் இருந்து அம்மாவுக்குள் நுழைந்து நீந்துகின்றன . அதில் ஒரே ஒரு உயிரணு -- நீங்கள் ! இந்த நீச்சல் போட்டியில் ஜெயித்து , முட்டையை ' நீங்கள் ' துளைக்கும் சமயம்... அம்மா லேசாக நகர்ந்து படுத்தாலோ , இருமினாலோகூட , ' நீங்கள் ' என்கிற உயிரணுவின் குறி தவறி , இன்னொரு உயிரணு முட்டைக்குள் நுழைந்திருகும் . அதாவது ' வேறு ஒருவர் ' கருவாகிப் பிறந்திருப்பார் ! நுழைந்தது நீங்களாக இருந்தது அதிர்ஷ்டமா ? யதேச்சையான நிகழ்வா ?! ( ' என் திறமை ' என்றெல்லாம் சொல்லக் கூடாது ! ).
-- ஹாய் மதன் . 28 . 10 . 2009 .