Saturday, July 31, 2010

கெர்ஜர் பாலம் !

ராமேஸ்வரம் -- பாம்பன் ரயில் பாலத்தைதான் கெர்ஜர் பாலம் என்கிறார்கள் . ஜெர்மன் இஞ்சினியரான கெர்ஜர் கட்டியதால் இந்த பாலம் அவரது பெயரால்லேயே அழைக்கப்படுகிறது . இந்த ரயில் பாலத்தை கட்டும் பணி , 1913ல் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் முடிவடைந்தது . 2.06 கி. மீட்டர் நீளமுள்ள இந்த ரயில் பாலத்தில் 145 தூண்கள் உள்ளன . கப்பலோ , பெரிய படகோ வரும்போது , இந்தபாலம் திறந்து அவைகளுக்கு வழிவிடும் ! இந்தக் கண்கொள்ளா காட்சியை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் வருகிறார்கள் . 1964ம் ஆண்டு புயலில் இந்த பாலம் பலத்த சேதமடைந்தது . இருப்பினும் 3 மாதத்தில் சரிசெய்யப்பட்டு மீண்டும் ரயில்போகுவரத்து தொடங்கப்பட்டது . கடந்த 2006ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் , இந்த ரயில்பாலத்தை அகல ரயில்பாதையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதை அடுத்து இப்பாலம் அகலரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது .
--- கே. எஸ். பாலகிருஷ்ணன் . தினகரன் , 26. 02. 2010 .

Friday, July 30, 2010

கஜூரோஹா கோயில்கள் !

மத்தியப்பிரதேசத்தின் சாதர்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன , கஜூரோஹா கோயில்கள்... கஜூர் என்றால் பேரீச்சை . கஜூரோஹா என்றால் பேரீச்சை மரங்கள் அதிகம் உள்ள பகுதி . இதன் வரலாறு ?
ஹேமவதி என்ற பிராமணப் பெண்ணை காந்தர்வ மணம் புரிந்தான் சந்திரன் . சந்திரவர்மன் என்ற மகன் பிறந்தான் .கொந்தளித்த சமூகம், ஹேமவதியை ஊர்விலக்கு செய்து காட்டுக்குள் விரட்டியது . காட்டுக்குள் துணிவோடு வாழ்ந்த ஹேமவதி , மகன் சந்திரவர்மனை வீராதிவீரனாக வளர்த்தபின் விண்ணுலகம் சேர்ந்தாள் . சந்திரவர்மன் மாமன்னனாகி, சந்தால அரச வம்சத்தைத் தோற்றுவித்தான் .
அவன் முன் தெய்வீக உருவில் வந்த ஹேமவதி , ' காமம் வெறும் மாயை என்பதை உணர்த்தும் கோயில்களைக் கட்டு ' என்று உத்தரவிட்டாள் . அதன்படி கஜூரோஹாவின் முதல் கோயிலை கி. பி. 950ல் கட்டினான் சந்திரவர்மன் . அவனது வம்சத்தினரும் இதே ரீதியான கோயில்களைக் கட்டினர்.. நூறு ஆண்டுகளாக - கி. பி. 1050 வரை மொத்தம் 85 கோயில்கள் ! இப்போது எஞ்சியிருப்பவை 22 !
இங்கு கண்டரிய மகாதேவ், மாதங்கேஸ்வரர், ஜகதாம்பிகா, 64 யோகினியர், விஸ்வநாத், சதுர்புஜர், வாமனர் , வராஹர், சித்ரகுப்தர், சூரியன், லஷ்மனர் உள்ளீட்ட இந்து கோயில்களோடு ஜைனமதக் கோயில்களும் ( பார்ஸ்வநாத் ) உள்ளன . மாதங்கேஸ்வரர் கோயில் போன்ற ஒரு சில கோயில்களில் வழிபாடு தொடர்கிறது .
--- தினமலர் இனைப்பு . பிப்ரவரி 21 . 2010 .

Thursday, July 29, 2010

செல்போன் மோசம் !

டாய்லெட் கதவை விட செல்போன் மோசம் . 18 மடங்கு கிருமி பாதிப்பு .
சராசரியாக டாய்லெட் கதவின் கைப்பிடிகளில் உள்ளதைப்போல 18 மடங்கு பாக்டீரியாக்கள் செல்போன்களில் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது . இது உடல் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் .
இதில் அதிகபட்சமாக சிலவற்றில் 39 மடங்கு கிருமிகளும் உள்ளன . இது பாதுகாப்பான அளவுதான் . பொதுவாக மனிதன் மற்றும் விலங்குகளின் கீழ்குடல் பகுதிகளில் காணப்படும் எண்டோபேக்டீரியா எனப்படும் கிருமிகள்தான் இவை . இதுதவிர , உணவை விஷமாக்கும் இ - கோலி மற்றும் ஸ்டபிலோகாக்கஸ் உள்ளிட்ட பாக்டீரியாக்களும் செல்போன்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இவை மனித உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
" டாய்லெட் உபயோகித்த பின்னர் சுகாதார முறைகளை கடைபிடிக்காததன் காரணமாக கைகளில் இருக்கும் இத்தகைய பாக்டீரியாக்கள் செல்போன்களில் குடியேறிவிடுகின்றன . எனவே , சுகாதாரமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது ".
--- தினகரன் & தினமலர் . 29 ஜூலை , 2010.

கொஞ்சம் யோசிங்க !

அப்பா, மகன் இருவரின் வயதையும் கூட்டினால் 66 வரும் . அப்பாவின் வயதைத் திருப்பிப் போட்டால் வருவது மகனின் வயது . இவர்களின் சரியான வயது என்ன ?
--- விடை: அப்பாவின் வயது 51. மகன் வயது 15 .
யூத் தத்துவம் .:
நட்புங்கறது மச்சம்
மாதிரி
சாகுற வரைக்கும் போகாது
காதலுங்கறது
கேன்சர் மாதிரி...
சாகடிக்காம போகாது !
--- குமுதம் . 24. 02. 2010 .

Wednesday, July 28, 2010

நன்றி சொல்லுங்கள் !

ஒரு இளைஞன் ரொம்பவும் நொந்துகொண்டான் . கடவுள் உதவுவார் என்பதெல்லாம் நடக்கக்கூடிய விஷயமல்ல என்று நினைத்தான் . ஆனால், அவனுடன் கடவுள் பேசினார் . " உன்னுடனேயே நான் வருகிறேன் . நீ நடந்து செல்லும்போது சற்றே திரும்பி வந்த பாதையைப் பார் . அங்கே இரண்டு ஜோடி காலடித் தடங்கள் தெரியும் . ஒரு ஜோடி உன்னுடையது ; மற்றொரு ஜோடி என்னுடையது !"
திகைத்த அவன் திரும்பிப் பார்த்தான் . சரிதான் . நான்கு கால் தடங்கள் ! நாளாக ஆக , அவன் கடவுள் உடனிருப்பதை நம்ப ஆரம்பித்தான் .
ஒரு கட்டத்தில் அவன் பெரிய பிரச்னையில் சிக்கிக் கொண்டான் . அப்போது அவன் திரும்பிப் பார்த்தபோது இரு காலடித் தடங்கள்தான் தெரிந்தன . என்ன ஏமாற்று இது ! கூட வருவதாகச் சொன்னவர் நான் இக்கட்டில் மாட்டிக் கொண்டபோது கழற்றிக் கொண்டுவிட்டாரே .... என்னுடனேயே வருவதாக அவர் சொன்னதெல்லாம் வெறும் பித்தலாட்டம்தானா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தான் . அதனால் கோபம்தான் கூடியது . உடனே கடவுளை ஏச ஆரம்பித்துவிட்டான் . அப்போது கடவுள் குரல் கேட்டது : " நீ பார்த்தது உன் காலடித் தடங்கள் இல்லை , தம்பி . அவை என்னுடையவை . எப்படித் தெரியுமா ? உன் காலடித் தடம் தெரியாதபடி நான் உன்னை இப்போது சுமந்து சென்று கொண்டிருக்கிறேன் . பிரச்னை தீர்வான பிறகு உன்னைக் கீழே இறக்கி விட்டுவிடுவேன் . ஏனென்றால், அப்போது நீ உன் சொந்தக் கால்களால் நடக்கும் தெம்பைப் பெற்றிருப்பாய் . ஆனால், அப்போதும் நான் உன்னுடனேயே கூடவே வருவேன் !"
இது கதை . ஆனால் பொதுவான சிக்கல் என்னவென்றால், அவர் நம் கூடவே இருப்பதைக் காண முடியாதபடி அகந்தை நம் கண்களை மறைப்பதுதான் .
--- பிரபுசங்கர் . தினகரன் . இணைப்பு . 14. 02. 2010 .

Tuesday, July 27, 2010

சுவாரஸ்யத் தகவல்கள் :

* ஒரு பசுவை படிகள் வழியாக மேல் தளத்திற்கு கூட்டிச் செல்ல முடியும் ; ஆனால், கீழே கூட்டிவர முடியாது !
* நெருப்புக் கோழியின் கண்கள் , அதன் மூளையை விடப் பெரியவை !
* உடலில் உள்ள வலிமையான தசை ? நாக்கு !
* நீங்கள் 8 ஆண்டுகள் , 7 மாதங்கள் , 6 நாட்களுக்குத் தொடர்ந்து கூச்சலிட்டால் அந்த சப்ததில் இருந்து ஒரு கப் காபியைச் சூடாக்கத் தேவையான வெப்ப சக்தியைப் பெறலாம் !
* எறும்பால் தனது எடையை விட 50 மடங்கு எடையைத் தூக்க முடியும் ; 30 மடங்கு எடையை இழுக்க முடியும் !
* கடிகார முட்கள் போல் இடமிருந்து வலமாக சுற்றிவரும் ஒரே கிரகம் வெள்ளி ( வீனஸ் ) .
* குதிக்க முடியாத ஒரே விலங்கு , யானை !
* ' லாவா 'வின் வெப்பநிலை , ஆயிரத்து 300 டிகிரி பாரன்ஹீட் முதல் இரண்டாயிரத்து 200 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் . ஆரம்பத்தில் சென்னிறத்தில் ஒளிரும் லாவா , கீழே ஓட ஓட வெண்ணிறத்திற்கு மாறும் .
--- தினமலர் பிப்ரவரி , 19 . 2010 .
* வாள் சண்டைப் போட்டியில் ' போயில் ' , ' எபி ' , ' சாபர் ' என மூன்று விதமான கத்திகள் பயன்படுகின்றன .
* தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு ஆங்கிலத்தில் ' சோம்னாம்புலிசம் ' என்று பெயர் .
* தங்கம் , வெள்ளி கட்டியாக இருக்கும்போது அதற்கு ' புல்லியன் ' என்று பெயர் .
--- தினத்தந்தி , இணைப்பு . 26 - 02 - 2010 .

Monday, July 26, 2010

' ரோல்மாடல் யார் ? '

" என் ரோல்மாடல் என் ஆசிரியர்கள்தான் . அவர்கள் இன்றி நான் இல்லை . எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர்கள்தான் அவர்களின் ரோல்மாடலாக இருக்க வேண்டும் . மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் பதினேழு வருடங்களை , அதாவது இருபத்தைந்தாயிரம் மணித்துளிகளை ஆசிரியர்களிடம் செல்வழிக்கிறார்கள் . பிறகு ஆசிரியர் அன்றி வேறுயார் ரோல்மாடலாக இருக்க முடியும் ?"
சொன்னவர் யார் ? டாக்டர் அப்துல் கலாமைத் தவிர வேறு யார் சொல்லியிருக்க முடியும் என்று இந்நேரம் யூகித்துவிட்டு இருப்பீர்கள் .
இன்று நாடு கொண்டாடும் கலாமை நாம் பெற்றதற்கு இரக்க குணமுள்ள ஒரு பழைய பேப்பர் கடைக்காரர்தான் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா ?
சென்னை எம். ஐ. டி . கல்லூரியில் கலாம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அவரது தந்தையிடமிருந்து வந்த ஒரு கடிதம் , கலாமின் இதயத்தைக் கிழித்தது . ராமேஸ்வரம் புயலில் கலாமின் வீடு சிதிலமடைந்தது . தந்தையாரின் சிறிய கப்பலை கடல்னீர் கபளீகரம் செய்துவிட்டது . ' படிப்பை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் . எப்படியாவது பணம் புரட்டிக்கொண்டு வீட்டுக்கு வா ' என்று கட்டளையிட்டு விட்டது கடிதம் .
எப்படி பணத்தைப் புரட்டுவது ? கையில் இருந்த புத்தகங்கள் மட்டுமே கலாமின் சொத்து . படிப்பு கிடக்கட்டும் , குடும்பத்தைப் பார்ப்போம் என்று கனத்த மனதோடு தன் புத்தகங்களைப் பழைய பேப்பர்க் கடையில் போடுகிறார்.
கலாமின் புத்தகங்களைக் கண்ணுற்ற அந்த ஈரமனதுக்காரர் நிலமையை விசாரிக்கிறார் . ' படிக்கிற பையன் புக்கையெல்லாம் விக்காதேப்பா , உனக்கு வேண்டிய காசை இப்போது தர்றேன் . தைரியமா ஊருக்குப் போயிட்டு வா ! '
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த பேப்பர் கடைக்காரர் ஒருவேளை கலாமுக்கு உதவியிருக்காவிட்டால் ?
--- நூல் : அப்துல் கலாம் ; கனவு நாயகன் . ஆசிரியர் : ச. ந. கண்ணன் .
--- புதிய தலைமுறை . 14 ஜனவரி 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Sunday, July 25, 2010

தினகரன்

ஜூலை 25 , 2010 ஞாயிற்றுக்கிழமை .
உடல் இளைக்க வழி
குண்டாக இருப்பவர்களுக்கு வரி விதிக்கலாமா என பல நாடுகள் யோசித்து வருகின்றன . ஜெர்மனி அரசு அதற்கான சட்டத்தை தயாரித்து கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை உருவாக காத்திருக்கிறது . அனைவருக்கும் மருத்துவ வசதி வழங்குவதற்கு ஆகும் செலவு அதுகரித்து வருவதை சமாளிக்க முடியாமல் அரசுகள் இந்த யோசனைக்கு தள்ளப்படுகின்றன .
உயரத்துக்கு பொருந்தாத அதிக எடையை ஓவர் வெயிட் அல்லது ஒபிசிட்டி என்கின்றனர் டாக்டர்கள் . எடையை ( கிலோ ) உயரத்தின் ( மீட்டர் ) மடங்கால் வகுக்கும்போது வருவது பி. எம்.ஐ என்ற குறியீடு . அது 25 க்கு மேல் இருந்தால் அது ஓவர் வெயிட் ; 30 ஐ தாண்டினால் ஒபிசிட்டி . இந்த கண்டிஷன் வந்தால் ஆபத்தான பல நோய்களுக்கு உடலின் கதவுகள் திறந்துவிட்டதாக அர்த்தம் .
உடல் உழைப்பு குறைந்த சொகுசு வாழ்க்கையால் உலகம் முழுவதும் மக்கள் குண்டாகிக் கொண்டிருக்கிறார்கள் . பெல்ஜியம் போன்ற சில நாடுகளில் ராணுவ வீரர்களே நம்மூர் போலீஸ் மாதிரி தொப்பை சுமக்கின்றனர் . இதனால் நோய்களும் அதற்கான சிகிச்சையும் அரசுக்கு செலவும் அதிகரிக்கின்றன . ஜெர்மனி அரசுக்கு இந்த வகையில் ஆண்டுக்கு ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது . இதற்கு முடிவு கட்ட பல வழிகலை ஆராய்கின்றனர் .
கேன்சர் உண்டாக்கும் பீடி, சிகரெட் மீது அதிக வரி விதிப்பது போன்று , உடலில் கொழுப்பு சேர உதவும் சாக்லேட் போன்ற தின்பண்டங்களுக்கும் வரி விதிக்கலாம் என்பது ஒரு யோசனை . கோலா, சிப்ஸ், கேக், பீஃப் என்று பெரிய பட்டியல் பரிசீலிக்கப்படுகிறது . குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் முதலில் எடை மெஷினில் ஏறச் சொல்லி , எடை கூடியிருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் தீர்மானம் போட்டிருக்கிறது . ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் நல்லது என்ற அக்கறை . இந்த ரீதியில் போனால் விமான , பஸ் , சினிமா டிக்கெட் கட்டணத்தை எடைக்கு ஏற்றபடி உயர்த்தும் திட்டமும் அமலுக்கு வரலாம் .
தவறான வாழ்க்கை முறையால் உடல் நலம் பாதிக்கப்படுபவர்களுக்காக எங்கள் வரிப் பணத்தை அரசு ஏன் செலவிட வேண்டும் என குண்டாகாத மக்கள் கேட்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது . உடல் நலத்தில் அக்கறை காட்ட மக்களை தூண்டும் என்கிற வகையில் இந்த யோசனகளை பரிசீலிக்கலாம் .
--- தினகரன் , தலையங்கம் . ஜூலை 25 , 2010 ஞாயிற்றுக்கிழமை

மோப்ப சக்தி !

மோப்ப உணர்வு செல்களின் எண்ணிக்கை, மனிதர்களிடம் 50 லட்சம் ; நாய்களிடம் 22 கோடி ! இதனால், நாய்களின் மோப்பசக்தி மனிதர்களின் மோப்பசக்தியைவிட மிக அதிகமாக இருக்கிறது .
கடலுக்குள் 40 அடிக்குள் கிடக்கும் உடல்களைக்கூட மோப்பசக்தியால் நாய்கள் கண்டுபிடித்துவிடும் . மனித மூச்சுக்காற்றை மோப்பம் பிடித்தே நுரையீரல் புற்றுநோய் இருக்கிறதா , இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கும் சக்தியும் நாய்க்கு இருக்கிறது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர் .
நாய் பற்றி 2 வரலாற்று சுவாரஸ்யங்கள் : கிரேக்கப் பேரரசர் அலெக்ஸாண்டர் , தனது செல்லநாயின் நினைவாக ' பெரிடாஸ் ' என்ற நகரையே உருவாக்கினார் ; மங்கோலியப் பேரரசர் குப்ளாய் கான் , தனது அரண்மனையில் 5 ஆயிரம் நாய்களை வளர்த்து வந்தான் .
--- தினமலர் . பிப்ரவரி , 19 . 2010 .

Saturday, July 24, 2010

உப்புக்கடல் !

சாக்கடல் -- உப்புக்கடல் !
ஜொர்டானில் இருக்கிறது ' சாக்கடல் '. இதற்கு ' உப்புக்கடல் ' என்றும் பெயர் உண்டு .
உண்மையில் இது கடல் அல்ல ; 810 சதுர கி. மீ. , பரப்பளவும் 135 கி. மீ. , கரையும் கொண்ட மிகப்பெரிய ஏரி ! உலகின் மிக ஆழமான உப்புத்தன்மை கொண்ட ஏரி இதுதான் !
சாக்கடலின் சராசரி ஆழம் , 118 மீட்டர் . இதன் தென்பகுதியில் குறைந்த பட்ச ஆழம் 13 அடி ; வடபகுதியில் அதிகபட்ச ஆழம் 1300 அடி .
சாக்கடலின் உப்புத்தன்மை 33. 7 சதவீதம் . இது , கடலின் உப்புத்தன்மையைவிட 8.66 மடங்கு அதிகம் . அதிக உப்புத்தன்மையால் சாக்கடலில் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது . இதனால்தான் ' சாக்கடல் ' என்று பெயர் !
சாக்கடலின் இரு அதிசயங்கள் :
* இதில் நாம் மூழ்க மாட்டோம் . நீச்சல் தெரியாதவர்களும் ' சும்மா ' மிதக்கலாம் .
* சாக்கடல் நீரில் உள்ள உப்பு தாதுக்கலுக்கு தோல் நோய், மூட்டுநோய், தசைவலியை நீக்கும் மருத்துவ குனம் உண்டு !
--- தினமலர் . பிப்ரவரி 19 , 2010 .

தெரியுமா ?

* நம் உடலில் இருக்கும் மிகச் சிறிய எலும்பு எது தெரியுமா ? நடுக்காதில் இருக்கும் ஸ்டாப்ஸ் என்ற எலும்புதான் . இந்த எலும்பு ஒரு அரிசியை விட சிறியதாக இருக்கும் .
* நம் வயிற்றினுள் இருக்கும் சிறுகுடலின் நீளம் எவ்வளவு தெரியுமா ? 22 அடி .
* ஒரு நாளைக்கு ஒரு பெண் சராசரியாக 7000 வர்த்தைகள் பேசுவார் ; ஆனால் , ஒரு ஆண் 2000 வார்த்தைகள் மட்டுமே பெசுவார் என்கிறது ஒரு ஆய்வுத்தகவல் .
* திங்கட்கிழமையில்தான் ஹார்ட் அட்டாக் மரணங்கள் அதிகம் என்று ஜெர்மனி ஆய்வில் ஒரு முடிவு வந்திருக்கிறது !
--- தினமலர் . பிப்ரவரி 20 . 2010 .

' மான்ஸ்டர் ஸ்டார் '

சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு . ' மான்ஸ்டர் ஸ்டார் ' என பெயர் .
சூரியனைவிட 320 மடங்கு பெரிய, 1 கோடி மடங்கு பிரகாசமான, இதுவரை இல்லாத மெகா அளவில் புதிய நட்சத்திரத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் . அதற்கு ' மான்ஸ்டர் ஸ்டார் ' என்று பெயரிட்டுள்ளனர் .
சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திர கூட்டத்தில் இரண்டு குழுக்கள் இருந்தன . அவற்றை நுணுக்கமாக தொலைநோக்கியில் ஆராய்ந்தபோது, ஒரு நட்சத்திர கூட்டத்தில் பயங்கர பிரகாசத்துடன் மிகப் பெரிய நட்சத்திரத்தை கண்டனர் . அதன் அளவை கணக்கிட்டனர் .
ஆர்எம்சி 136 ஏ என்ற அந்த நட்சத்திரம் , அளவில் சூரியனைவிட 320 மடங்கு பெரியதாகவும் , பிரகாசத்தில் 1 கோடி மடங்கு அதிகமாகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் .
அதற்கு ' மான்ஸ்டர் ஸ்டார் ' ( ராட்சத நட்சத்திரம் ) என்று பெயரிட்டனர் . அது தோன்றியபோது இப்போதுள்ள அளவைவிட பெரியதாக இருந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது . அதைச் சுற்றியுள்ள மேலும் பல நட்சத்திரங்கள் 40,000 டிகிரிக்கு வெப்பமாக இருப்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்தது .
இந்த புதிய கண்டுபிடிப்பு பற்றி : " எடையில் சூரியனைவிட இது 265 மடங்கு அதிகம் . அதிக வெப்பம் காரணமாக இது போன்ற நட்சத்திரங்கள் தன்னைதானே எரித்து அழியக்கூடியவை . அதனால், பூமியைவிட பல மடங்கு அதிக வெப்பம் கொண்டவை . இதுபோன்ற வெப்ப நட்சத்திரங்கள் 30 லட்சம் ஆண்டுகள் வரைகூட இருக்கும் . நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே இவை இருப்பதால் தூரம் காரணமாக இவற்றை அடையாளம் காண்பது சிரமம் "
சூரியனை விட 150 மடங்கு பெரிய நட்சத்திரம் மட்டுமே இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது . அதைவிட 2 மடங்கு பெரிய மான்ஸ்டர் ஸ்டார் இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது . இந்த கண்டுபிடிப்பால் , இதைவிட பெரிய நட்சத்திரங்கள் அதிகளவில் ஏற்கனவே இருந்திருக்ககூடும் .
--- தினகரன் , ஜூலை 23 . 2010.

Friday, July 23, 2010

' தண்ணீர் பிளாஸ்டிக் '

இரட்டைபலன் தரும் ' தண்ணீர் பிளாஸ்டிக் '
தண்ணீரை இப்படியும் பயன்படுத்த முடியுமா ? என்று வியக்க வைத்துள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள் .நெகிழா தன்மை கொண்ட பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தண்ணீரையே பிளாஸ்டிக்காக பயன்படுத்த வழி கண்டுள்ளனர் இவர்கள் .
மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியாததால் பிளாஸ்டிக் கழிவுகள் , சமூக வாழ்வுக்கு ஒரு பெரும் சவாலாகவும் , தொல்லையாகவும் இருந்து வருகிறது . இதனால் கணிசமான அளவில் புவி சூடாகி இருப்பது மறுக்க முடியாத உண்மை .
டோக்கியோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ள இந்த ' எலாஸ்டிக் வாட்டர் ' ( Elastic Water ) நெகிழும் தண்ணீர் பிளாஸ்டிக்காக பயன்படுத்தப்பட உள்ளது . 95 சதவிகிதம் தண்ணீரும் , 2 கிராம் களிமண் மற்றும் ஒரு சில ரசாயனங்களும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது . ஒளி ஊடுருவும் தன்மை , நெகிழும் தன்மை , மீள் தன்மை கொண்டதாக இருப்பதால் மறுசுழற்சி செய்ய முடியும் . சுற்றுச் சூழலுக்கும் தீங்கற்றது .
மருத்துவத்துறையிலும் இந்த ' எலாஸ்டிக் வாட்டர் ' பயன்படுத்தமுடியும் என்பதுதான் இதன் மற்றொரு சிறப்பம்சம் . குறிப்பாக காயம் பட்ட இடங்கள் , அறுவைச் சிகிச்சைப் பகுதியில் வெட்டப்படும் மேற்தோல் , தசைப் பகுதியை உலராமல் பாதுகாப்பதில் இது முக்லிய பங்காற்றுகிறது .
மருத்துவத்திலும் , சுற்றுப்புறச் சூழலிலும் பெரிதும் துணைபுரியும் ' எலாஸ்டிக் வாட்டர் ' சமீபத்திய சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது .
--- , தினத்தந்தி , இணைப்பு . 13. 02. 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள். திருநள்ளாறு

Thursday, July 22, 2010

விமான கறுப்பு பெட்டி .

விமான கறுப்பு பெட்டி .
விமான கறுப்பு பெட்டி கண்டுபிடித்த ஆஸ்திரேலய விஞ்ஞானி மரணம் . விருதுகள் பெற்றவர் .
விமான விபத்துக்கான காரணத்தை அறிய உதவும் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்த ஆஸ்திரேலியர் , 85 வயதில் கடந்த திங்கள் கிழமை ( 19 .07. 2010 ) மரணம் அடைந்தார் .
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள குரூட் தீவில் 1925 ம் ஆண்டு பிறந்தவர் டேவிட் வாரன் .பழங்குடியினர் வசித்து வந்த அந்த தீவில் பிறந்த முதல் ஐரோப்பிய வம்சாவளி குழந்தை வாரன் என்பது குறிப்பிடத்தக்கது . வாரன் அந்நாட்டின் ராணுவ அறிவியல் தொழில்நுட்ப அமைப்பில் விஞ்ஞானியாக இருந்தார் .
வாரனுக்கு 9 வயதான போது , ஆஸ்திரேலியாவின் பாஸ் ஜலசந்தியில் ' மிஸ் ஹோபர்ட் ' என்ற தபால் விமானம் விழுந்து நொருங்கியதில் , வாரனின் தந்தை உட்பட 12 பேர் பலியாயினர் . 1953 -- 54 ஆண்டுகளில் ' கமெட் ' விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாயின . இந்த விபத்துக்களில் விமானத்தில் இருந்த யாரும் உயிர்தப்பவில்லை . இந்த ஜெட் விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்திய குழுவில் டெவிட் வாரன் இடம்பெற்றார் .
அப்போது , கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிக்கும் இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் விமான கருவிகளின் அளவீடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் , விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்க எளிதாக இருந்திருக்கும் என வாரன் எண்ணினார் . 1956 ல் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்தார் வாரன் .
தீயில் எரியாத , உடைக்க முடியாத கடினமான பெட்டிக்குள் பதிவு கருவியை வாரன் வைத்தார் . அதை விமானத்தின் வால் பகுதியில் பொருத்த அவர் பரிந்துரைத்தார் .மேலும் , விபத்து ஏற்பட்டால் எளிதில் தேடிக் கண்டுபிடிக்கும் விதத்தில் அந்தப் பெட்டிக்கு பிரகாசமான சிவப்பு வண்ணம் பூசப்பட்டது . கறுப்புப் பெட்டி என பெயர் பெற்றாலும் , அது சிவப்பு வண்ணத்தில் இருந்தது .' மாய வித்தை ' காட்டுவதை ஆங்கிலத்தில் ' பிளாக் மேஜிக் ' என்கின்றனர் . அதனால் அதற்கு ' பிளாக் பாக்ஸ் ' என பெயர் வந்தது .
உலகம் முழுவதும் பயணிகள் விமானங்களில் கறுப்பு பெட்டி கட்டாயமானது . இதற்காக 2001 ல் விருது பெற்றார் டேவிட் வாரன் .
-- தினமலர் & தினகரன் , ஜூலை 22 . 2010.

நாய்கள் !

* நாய்கள் வாலாட்டுவது ( நன்றிக்காக அல்ல ) மகிழ்ச்சிக்காக . அதுவும் எந்த திசையில் வாலாட்டுகிறது என்பதில்தான்
விஷயமே உள்ளது .
* நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டினால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தம் . 56 சதவிகித நாய்கள் இப்படித்தான் வாலாட்டுகிறதாம் . 21 சதவிகித நாய்கள் எப்போதும்போல் வாலாட்டாமல் இருக்கின்றன அல்லது எப்போதாவது வலதுபக்கமாக வாலாட்டுகின்றன .
* தன்னை வளர்ப்பவர்களைப் பார்த்த்தும் 41 சதவிகித நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டுகின்றன ..
* நாய்கள் வாலாட்டுவது வேதித்தன்மையின் வெளிப்பாடாக இருக்கவும் வாய்ப்புள்ளது .

Wednesday, July 21, 2010

அழாதே !

கல்லாமையை நினைத்து
கண்ணீர் வடிக்கும் ஒருவன்
குப்பையில் கிடந்த
காகிதம் எடுத்து
கண்ணீரைத் துடைக்கிறான்
காகிதம் சொல்லுகிறது
" படிக்காமல் நீ கிழித்தெறிந்த
புத்தகத்தின் தாள்தான் நான் "
--- கவி. அக்பர்தீன் , பண்டாரவாடை. தினத்தந்தி , இணைப்பு . 13. 02. 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள். திருநள்ளாறு.

Tuesday, July 20, 2010

கால்வாய்கள் .

* மான்செஸ்டர் கால்வாய் -- இங்கிலாந்து ( 58 கிலோ மீட்டர் ).
* பனாமா கால்வாய் -- மத்திய அமெரிக்கா ( 58 கி. மீ .).
* வோல்காடான் கால்வாய் -- ரஷ்யா ( 97 கி. மீ ).
* கில்கால்வாய் -- ஜெர்மனி ( 98 கி. மீ ).
* சூயஸ் கால்வாய் -- எகிப்து ( 169 கி. மீ ).
* கோட்டா கால்வாய் -- சுவீடன் ( 227 கி. மீ ).
* ஆங்கிலக் கால்வாய் -- தென் அமெரிக்கா ( 564 கி. மீ ).
--- தினத்தந்தி , 24. 04. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

பொது அறிவுக்கு ...

* உடலின் எல்லாப் பகுதிக்கும் ரத்தம் ஒருமுறை சுற்றிவர ஆகும் நேரம் -- 24 வினாடிகள் .
* கை வைத்தாலே உருகும் தன்மை உள்ள உலோகம் -- சிலிக்கான்.
* மேற்குத் தொடர்ச்சி மலையின் மறுபெயர் -- மைகால் .
* பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தை அமைத்தவர் -- நெபுகட் நெசார் .
* பரணி என்பது 1000 யானைகளை கொன்ற வீரனைப் பற்றி பாடுவதாகும் .
* ' சென்னை மாநிலம் ' என்ற பெயர் ' தமிழ் நாடு ' எனப்பெயர் மாற்றம் பெற்ற நாள் -- 03. 05. 1969.
* சென்னைத் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட நாள் -- 15. 08. 1975 .
* ' மெட்ராஸ் ' என்ற பெயர் சென்னையாக மாற்றப்பட்ட நாள் -- 17 .07 . 1996 .
* இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட நாள் -- 01. 04. 1935 .
* செல்வச் செழிப்பான கோவை நகரத்தை ' லட்சுமி நகரம் ' என்று , மறைந்த முதலமைச்சரான பக்தவத்சலம்
அழைத்து மகிழ்வார்

Monday, July 19, 2010

ஒதுக்குங்கள் .

நேரம் ஒதுக்குங்கள் .
சிரிக்க நேரம் ஒதுக்குங்கள் ;
அது இதயத்தின் ஓசை .
சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள் ;
அது சக்தியின் பிறப்பிடம் .
விளையாட நேரம் ஒதுக்குங்கள் ;
அது இளமையின் ரகசியம் .
படிக்க நேரம் ஒதுக்குங்கள் ;
அது அறிவின் ஊற்று .
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் ;
அது மகிழ்ச்சிக்கு வழி .
தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள் ;
அது தெளிவுக்கு வழி .
உழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள் ;
அது வெற்றிக்கு வழி .
--- எம். பிரேமா , மணிமுத்தாறு. தினத்தந்தி , இணைப்பு . 13. 02. 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள். திருநள்ளாறு.

தேவை !

கவனம் தேவை !
காலை உணவில் கவனம் தேவை .
சாதாரணமாக ஜீரணமாகும் கார்போஹைட்ரேட் கொண்ட உணவை காலையில் சாப்பிடிவது உடல்நலத்துக்கு நல்லது என்று கண்டுபிடித்திருக்கிறது, இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆய்வுக்குழு .
' இந்த வகையிலான உணவை சாப்பிட்டால் , இடையில் வேறு ஐட்டங்களை விழுங்க வேண்டிய அவசியம் இருக்காது மதியச் சாப்பாடு மற்றும் இரவு சாப்பாட்டின் அளவு தானாகக் குறையும் . இதனால், உடல் பெருத்து நோய்களை வரவழைக்கும் அவதியைத் தவிர்க்கலாம் ' என்பது இவர்களின் அட்வைஸ் !
" அரிசி, உளூந்து கலந்த தோசைக்குப் பதில் , பருப்புவகைகளால் தோசை தயாரித்து சாப்பிடலாம் . சாதரண இட்லிக்குப் பதில் வெஜிடபிள் இட்லிக்கு மாறலாம் " என்கிறார் , இந்தியாவின் பிரபல டயட்டீஷியன் பத்மா விஜய் .
ஒரு ' நினைவூட்டல் ' : ' நோயற்ற வாழ்வு வேண்டுமா ? காலையில் ராஜா போல் சத்தான உணவும் , மதியத்தில் நோயாளி போல் குறைவான உணவும், இரவில் பிச்சைக்காரர் போல் மிகமிகக் குறைவான உணவும் சாப்பிடுங்க ! ' என்பது நமது மருத்துவ பாரம்பரிய அறிவுரை . இதைத்தான் இங்கிலாந்து பல்கலை, குழு ஆய்வும் உறுதிசெய்திருக்கிறது !
--- தினமலர். பிப்ரவரி . 14 . 2010.

Sunday, July 18, 2010

அரிசி !

அதிசய அரிசி !
சமைக்காமலே சாப்பிடலாம்...
நமது அசாமில்தான் விளைகிறது அந்த அதிசய அரிசி . பெயர் , ' கோமல் சால் '. இதை 45 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து அப்படியே சாப்பிடலாம் ! பால், தயிர், சர்க்கரை சேர்த்தால் ருசியோ ருசி !
அரிசி உள்ளிட்ட தானியங்களைக் கடினமாக்கும் ரசாயனப் பொருள் , அமிலோஸ் . இது சாதாரண அரிசியில் 20 முதல் 25 சதவீதம் இருக்கும் . அமிலோஸ் வெறும் 5 சதவீதம் மட்டுமே இருப்பதுதான் கோமல் சாலின் மென்மைக்குக் காரணம் . இதனால்தான், சமைக்க வேண்டிய அவசியம் இல்லை .
சியாசின் போன்ற பனிப்பிரதேச எல்லைகளில் காவல்பணியில் ஈடுபடும் நமது ராணுவ வீரர்களை கோமல் சால்தான் பசியாற்றி வருகிறது .
' இந்த சூப்பர் அரிசியை நாடு முழுவதும் பயிரிட்டால் எவ்வளவு லாபம், நன்மை ? விறகு , காஸ் செலவுகளை கோடி கோடியாகக் குறைத்திருக்கலாம் . பெண்களுக்கு நேரம் மிச்சமாகும் .' பேச்சலர் ' ஆண்களுக்கு எவ்வளவு நிம்மதி ? புவி வெப்பமாவதையும் குறைக்கலாமே ? என்றெல்லாம் கேள்விகள் வருகிறதுதானே ?'
ஒரிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள தேசிய அரிசி ஆய்வு நிறுவனம், நாட்டின் பல பகுதிகளிலும் பயிரிடுவதற்கு ஏற்ற கோமல் சால் புதுரகத்தை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டது !.
" ஏறக்குறைய அசாம் பருவநிலை உள்ள எல்லா பகுதிகளிலும் இதைப் பயிரிட முடியும் . ஆந்திரா, பீகார், மே.வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் சில பகுதிகளில் இதைப் பயிரிடலாம் . நாடு முழுவதும் பயிரிடும் வகையிலான தொழில் நுட்பத்தை உருவாக்கி வருகிறோம் . விரைவில் வெற்றி பெறுவோம் " என்று நம்பிக்கையூட்டுகிறார் , கட்டாக் ஆய்வு நிறுவன இயக்குனர் , தபன் ஆதித்யா .
--- தினமலர் . இணைப்பு . பிப்ரவரி 14 . 2010 .

Saturday, July 17, 2010

ரூபாய்க்கு புதிய குறியீடு .

இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு . ரூபாய்க்கு சின்னம் வந்தாச்சு.
அமெரிக்க டாலர் , ஐரோப்பிய யூரோ , பிரிட்டிஷ் பவுண்ட் , ஜப்பான் யென் வரிசையில் இந்திய ரூபாய்க்கு புதிய சின்னத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது . தேவநாகரி மொழியில் ' ரா ' என்ற வடிவம் , ரோம எழுத்தில் ' ஆர் ' என்ற வடிவம் இணைந்ததாக அது உள்ளது . இதற்காக பொதுமக்களீடமிருந்து டிசைன்களை அனுப்ப அரசு கேட்டிருந்தது .சுமார் 2500 -- 3000 பேர் அனுப்பியிருந்தனர் . அவற்றில் ஐ. ஐ. டி. பட்ட மேற்படிப்பு முடித்துள்ள , சென்னையை சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் அனுப்பிய வடிவத்தை மத்திய அமைச்சரவை தேர்வு செய்தது . இதற்காக உதயகுமாருக்கு ரூ . 2 லட்சத்து 50 ஆயிரம் தரப்படும் . இது குறித்து அவர் கூறுகையில் , ' ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைப்பதை சவாலாக எடுத்துக்கொண்டு உழைத்தேன் . இதை உருவாக்க 8 மாதங்கள் பிடித்தது . இரட்டை கிடைமட்ட கோடுகளும் நடுவில் வெள்ளைநிறமும் கொண்ட இந்த குறியீடு இந்திய தேசியய்க்கொடியை நினைவூட்டும் வகையில் அமைக்கபட்டுள்ளது..
--- தினமலர் , தினகரன் . 16 , ஜூலை 2010.

அரண்மனை !

ஜெய்ப்பூர் அரண்மனை !
ராஜஸ்த்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் கம்பீர அடையாளம்.... ' ஹவா மஹால் '!
ஹவா என்றால் , காற்று . மஹால் என்றால் மாளிகை . பெயரில் மட்டுமல்ல , உண்மையிலேயே இது காற்று மாளிகை . எந்த நேரம் உள்ளே நுழைந்தாலும் உடலை இதமாக வருடும் இளங்குளிர் காற்று .
மகாராஜா ஹவாய் பிரதாப் சிங்கால் 1799ல் கட்டப்பட்டது . இந்த ஐந்தடுக்கு அற்புத மாளிகை . இந்த மாளிகையை வடிவமைத்தவர் , கட்டிடக்கலை மேதை லால் சந்த் உஸ்தாத் . இவர் , ஸ்ரீகிருஷ்னர் மற்றும் ராதா தேவியின் பக்தர் .
' அரண்மனை மற்றும் சாலையில் நடக்கும் நிகழ்வுகளை அரசகுலப் பெண்கள் வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் உள்ளே இருந்தபடியே ரசிக்கும் வகையில் ஒரு மாளிகை அமைக்க வேண்டும் ' என்று மகாராஜா பிரதாப் சிங்க் கூறியதும் , கட்டட வடிவமைப்பு பற்றி பல நாட்களாக யோசித்திருக்கிறார் லால் சந்த் . அவர் அளித்த எல்லா வடிவமைப்புகளையும் மகாராஜா நிராகரித்துக் கொண்டே இருந்ததில் அவருக்கு கவலை .
ஒருநாள் , வழக்கம்போல் ஸ்ரீகிருஷ்ணரையும் ராதா தேவியையும் வழிபட்ட வேளையில் , கிரீடத்தில் அவரது கண்கள் பதிய... கிடைத்தது தீர்வு !
மகாராஜாவிடம் ஓடிய அவர் , " எனது இஷ்ட தெயவமான ஸ்ரீகிருஷ்ணரின் கிரீட வடிவில் மாளிகையை அமைத்துவிடுகிறேன் . கிரீடத்தின் அடுக்குகள் போல் மாளிகை ஜன்னல்களை அமைத்துவிட்டால் நீங்கள் விரும்பும் விதத்தில் மாளிகை அமைந்துவிடும் " என்று சொல்லியிருக்கிறார் . அவர் வரைந்து அளித்த படத்திலேயே மயங்கிவிட்டார் மகாராஜா... 953 ஜன்னல்கள் கொண்ட ஹவா மஹால் மலர்ந்தது !
--- தினமலர் . பிப்ரவரி 14 . 2010 .

Friday, July 16, 2010

' ஜீன்ஸ் '

' ஜீன்ஸ் ' என்பது சில தலைமூறைகள் ' கொயட்' டாக இருந்துவிட்டு, திடீரென்று விஸ்வரூபம் எடுப்பதுண்டு ! உதாரணத்துக்கு, சில அம்மாக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம் .
க்ளாரா , படிப்பறிவு இல்லாத எளிமையான கிராமத்திப் பெண் . அடக்க ஒடுக்கமாக வீட்டு வேலைகள் மட்டுமே செய்துவந்த அவரை உறவினர் ஒருவர் ( மாமன் முறை ) சின்னவீடாக வைத்துக்கொண்டு , பிறகு திருமணமும் செய்து கொண்டார் . அதற்குள் மூன்று குழந்தைகள் பிறந்து, இறந்தன . நாலாவதும் இறந்துவிடுமோ என்று ரொம்பக் கவலைப்பட்டார் க்ளாரா. இறக்கவில்லை...அடால்ஃப் ஹிட்லர் என்று பெயர் சூட்டப்பட்ட அந்தக் குழந்தை !
ரோஸா ரொம்ப மென்மையான டைப் . கிராமப் பள்ளிக்கூடத்தில் டீச்சர் . அருகில் இரும்புப் பட்டறை வைத்திருந்த ஒரு சாமான்யரைக் காதலித்து மணந்து கொண்ட ரோஸாவுக்கு, முதலாவதாக ஒரு மகன் பிறந்தான் . பெயர் முசொலினி .
அலியா கேனம் , ஒரு வியாபாரியின் மகள் . புகுந்த வீட்டில் அவர் அடக்கமாக நடந்துகொண்ட விதத்தையும் , கணவரின் வீட்டாருக்குச் செய்த பணிவிடைகளையும் பார்த்து, அவளுக்கு உறவினர்கள் ' அடிமை ( The slave ) என்று பெயரிட்டனர் . அவருக்குப் பிறந்த ஒரே மகனின் பெயர் ஒஸாமா பின்லேடன் !
--- ஹாய் மதன் . ஆ. விகடன் . 17. 02. 2010.

Thursday, July 15, 2010

தந்தைத் தன்மை .

மீன், குஞ்சு பொரித்தால் அதன்பிறகு அவற்றைத் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை . எப்படியோ போங்க என்று விட்டுவிடுகிறது . யானையோ தன் குட்டிகளை காலமெல்லாம் கண்பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது . சிங்கங்கள் அப்படி அல்ல . ஒரு குறிப்பிட்ட பருவம் வரை பராமரித்து, உனக்கென்று தனி எல்லை வகுத்துக்கொள் ; ஓடிப்போய்விடு என்னிடமிருந்து என்று உரிமை தருகிறது . தந்தைத் தன்மைக்கு சிங்கம்தான் சிறந்த உதாரணம் .
--- லேனா தமிழ்வாணன் . குமுதம் . 17 .02. 2010

Wednesday, July 14, 2010

கண் இமைகள் .

கண்விழிகள் , எண்ணையில் மிதக்கும் பந்து போன்றவை . உராய்வு இல்லாத அசைவுக்கு ' லூப்ரிகன்ட் ' என்ற எண்ணைப்பொருள் தேவை .
நமது இமைகளின் நடுவில் லூப்ரிகன்ட் எண்ணையை உற்பத்தி செய்யும் 20 முதல் 30 செபாகியஸ் சுரப்பிகள் உள்ளன . இமைகள் சிமிட்டப்படும் போது சுரப்பிகளில் இருந்து லூப்ரிகன்ட் விழிகளின் மீதாக கசியும் . இதனால், தங்குதடங்கல் இல்லாமல் விழிகள் சுலபமாக அசையும் . இமைகள் அசையாவிட்டால் , லூப்ரிகன்ட் கிடைக்காமல் கண்கள் வறண்டு விடும் !
இமைகள் அசைவதால்தான், தூசிகள் கண்ணுக்குள் நுழைந்து எரிச்சலூட்டாமல் இருக்கின்றன .
இமைகள் மிக வேகமாக திறந்து மூடுவதால்தான் , மூடும் வேளையில் பார்வை மறைவதில்லை .
இமைகளின் அசைவு, அனிச்சை செயல் . அதாவது, இதயம் துடிப்பது போல், மூச்சு விடுவது போல் தானாக நடக்கும் செயல் . இது , கண்களைப் பாதுகாக்க இயர்கை அளித்த வரம் .
--- தினமலர் . இணைப்பு . பிப்ரவரி , 12 . 2010 .

Tuesday, July 13, 2010

இயற்கை .

இயற்கை என்னதான் அழிவுகளை ஏற்படுத்தினாலும் தானே முன்னின்று அவற்றை சரி செய்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை .
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி , பயங்கர அழிவுகளை ஏற்படுத்தியது . அந்த சுனாமி தாய்லாந்து கடல் பகுதிகளில் இருந்த பவளப்பாறைகளையும் , கடல் தாவரங்களையும் அழித்து துவம்சம் செய்தது . ஆனால், சமீபத்தில் அந்தக் கடல்பகுதியை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் அதிசயப்பட்டுப் போனார்கள் . அங்கே பவளப்பறைகளும் , தாவரங்களும் முன்பைவிட அதிக மடங்கு வளர்ந்திருந்தன .
--- என்.ஜி. கோகுல்ராஜ் , நாகமநாயக்கன்பட்டி . தினமலர் . இணைப்பு . ஜனவரி 8 . 2010 .

Monday, July 12, 2010

யானை மொழி !

சமீபத்தில் யானை எழுப்பும் ஒலிகளை ஆராய்ச்சி செய்து பல சுவாரஸ்யமான உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள் அலறல், பிளிறல், உறுமல் என்று மூன்று வகைகளில் யானைகள் பேசுகின்றன . இதைவிட மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா ? 5-30 ஹெர்ட்ஸ் என்கிற ஒலி அலை வரிசையில் இவை எழுப்பும் குரலை மனிதனுடைய கேட்கும் சக்தித் திறனால் கேட்கவே முடியாது . இது இன்ப்ரா சத்தம் என்று அழைக்கப்படுகிறது . வவ்வால்களும் இந்த .ஒலி அலைவரிசையையையே பயன்படுத்துகின்றன .
குட்டியை பிரசவித்த பின் தன்னுடைய பலவீனமான நிலையைச் சொல்லும் வகையில் தாய் யானை ஒரு விதமான சத்தத்தை எழுப்பியபடி இருக்கும் .அந்த நேரத்தில் அதன் அருகில் செல்வது ஆபத்தானது . சில சமயங்கலில் யானைக் கூட்டங்கலுக்கு இடையே சண்டை நடக்கும் . அப்போது அவை எழுப்பும் ஒலிகள் உக்கிரமாக இருக்கும் . வவ்வால்களும் இந்த .ஒலி அலைவரிசையையையே பயன்படுத்துகின்றன .
குட்டி யானைகள் தங்கள் காலால் பூமியைத்தட்டி ஒலி எழுப்புவதன் மூலம் தாய்க்கு அதன் தேவைகளை உணர்த்துகின்றனவாம் .
--- ஏ. முத்து , வாழப்பந்தல் . . தினமலர் . இணைப்பு . ஜனவரி 8 . 2010 .

பெட்ரோல் !

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை
( இந்திய மதிப்பில் )
பாகிஸ்தான் -- 36 ரூபாய் .
பங்களாதேஷ் -- 32 ரூபாய் .
க்யூபா -- 19 ரூபாய் .
நேபாளம் -- 34 ரூபாய் .
பர்மா -- 30 ரூபாய் .
ஆப்கானிஸ்தான் -- 36 ரூபாய் .
கதார் -- 30 ரூபாய்.
இந்தியாவில் மட்டும் ஏன் -- 53 ரூபாய் ?
என்று கேட்கிறது ஒரு எஸ். எம். எஸ்.!
ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை 16.50 ரூபாய் .
மத்திய வரி 11.80 , எக்ஸைஸ் டூட்டி 9.75 , மாநில அரசு வரி 8.00 , வாட் மற்றும் செஸ் வரி 4.00 , ஆக மொத்தம் 50.05 . அப்புறம் ஏன் 53 வசூலிக்கிறீர்கள் ?
என்று கேட்கிறது இன்னொரு எஸ். எம். எஸ்.
--- ப. திருமாவேலன் . ஆனந்தவிகடன் , 14. 07. 2010.

Saturday, July 10, 2010

' ஏழு ஜென்மம் '

நாம் விழித்திருக்கிறோம் , இது ஜாக்கிரதாவஸ்தை. இதை ஒரு மனநிலை என்கிறோம் . தூங்கும்போது கனவு காண்கிறொம் . இதற்கு சொப்பனா வஸ்தை என்று பெயர் . அதுவும் ஒரு மனநிலையே . பிறகு அயர்ந்த உறக்கம் வருகிறது . அங்குக் கனவுக்கு இடமில்லை . இது சுஷூப்தி அவஸ்தை என்னும் பெயர் பெறுகிறது . இதுவும் ஒரு மனநிலையே . இம்மூன்றையும் நாம் ஒருவாறு அறிந்துள்ளோம் . இம்முன்றையும் மூன்று வித ஞானநிலை என்கின்றனர் .
-- வேதாந்தம் . தினமலர் , இணைப்பு . ஜனவரி 21 , 2010 .

Friday, July 9, 2010

திப்புசுல்தான் .

திப்புசுல்தான் ஒரு பெரும் வீரன் மட்டுமல்ல, அருமையான தலைமைப்பண்புகள் நிறைந்த மன்னனும்கூட . ராக்கெட், ஏவுகணை தொழில் நுட்பத்தை நமது நாட்டுக்கு முதலில் கொண்டு வந்தவன் என்றுகூடச் சொல்லலாம் . 1799 ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் அவன் பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்ட பிறகு, திப்புவின் ஆயுதக் கிடங்கில் இருந்த நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் , ராக்கெட் உதிரி பாகங்களையும் கண்டு ஆங்கிலேயர்கள் மிரண்டே போனார்கள் . அந்த தொழில்னுட்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அந்த ராக்கெட்டுகளை இங்கிலாந்துக்கு எடுத்துப் போனார்கள் .வெள்ளைக்காரர்கள் . அந்த அடிப்படையை வைத்துத்தான் அவர்கள் ராக்கெட் டெக்னாலஜியில்முன்னேற ஆரம்பித்தார்கள் . திப்பு எத்தனை படைப்புத் திறன் கொண்ட தலைவன் என்று யோஜித்துப் பாருங்கள் .
--- ஆர். கே. ஸ்வர்ணலதா , கிருஷ்ணகிரி. தினமலர் . இணைப்பு . டிசம்பர் 11 , 2009 .

Thursday, July 8, 2010

கண்ணதாசன் .

* கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல . ' அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும்,
வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம் . அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன் ' என்பது அவரே
அளித்த விளக்கம் . பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
* சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன் . அந்த வீட்டில் அவர்
பெயர் நாராயணன் .
* கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம் . ' நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான் '
என்பார் .
* முதல் மனைவி பெயர் பொன்னம்மா . அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் .
இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50 -வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார் . இவர்களுக்குப்
பிறந்தவர்தான் விசாலி . மொத்தம் 15 பிள்ளைகள் .
* ' உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? ' என்று கேட்டபோது , அவர்
சொன்ன பதில்....' புத்தகங்களைப் பின்பற்றுங்கள் . அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள் !'
* ' பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி
நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது ' என்பது அவர் அளித்த வாக்குமூலம் .
* தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது
கண்ணதாசனின் கடைசி விருப்பம் !
* இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார் . அதன் கடைசி வரி இப்படி
முடியும்...
' ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு !'
--- ஆ.விகடன் ,10.02. 2010 .

Wednesday, July 7, 2010

நீங்கள் யார் ?

* முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிஷ்டசாலி .
* இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி.
* மூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி .
* நான்காம் முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி.
* வெற்றி பெறும் வரை முயற்சி செய்பவன் சாதனையாளன் .
இதில் நீங்கள் யார் ?
--- இரா. திருப்பதி , ஆலங்காடு. தினத்தந்தி . 06.02.2010 . .இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Tuesday, July 6, 2010

துப்பாக்கி ரகங்கள் .

சில துப்பாக்கி ரகங்களும் அவற்றை கண்டுபிடித்தவர்களும்...
ஏ.கே . 47 .............. ...........கலாஷ் நிக்கோவ்.-- ( மிகையீல் கலஷ்னிகோவ் என்கிற ரஷ்யர் .)
சுழல் துப்பாக்கி...............சாமுவேல் கோல்ட்.
கைத்துப்பாக்கி.................கர்மினெலியோ.
எலக்ட்ரான் துப்பாக்கி.... பிரான்ஸ்.
இயந்திரத் துப்பாக்கி.......ஜேம்ஸ் பக்கிள் .
பிரெம்னிங் துப்பாக்கி......பிரெம்னிங்.
பிரீச்லோடர் துப்பாக்கி...தோர்ன்டன்.
--- ச. ராஜசேகர் , செய்யாறு. தினத்தந்தி , 06.02.2010 .இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Monday, July 5, 2010

பெரிய கோயில் .

தஞ்சை பெரிய கோயில் .
1010 ல் முதல் கும்பாபிஷேகம் . ஓலைச் சுவடியில் ஆதாரம் .
தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் மேல் உள்ள கலசம் பற்றியும் , பிற்காலத்தில் நிகழ்ந்த கும்பாபிஷேகங்களை விவரிக்கும் வகையில் ஓலைச்சுவடி கிடைத்துள்ளது . சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள அந்த ஓலைச்சுவடியில் பெரிய கோயிலுக்கு ராஜராஜசோழன் முதன்முதலில் கும்பாபிஷேகம் செய்தது கி. பி. 1010 ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் தற்போது கோயிலின் உச்சியில் காணப்படும் கலசம் 12 அடி உயரமுடையது . இது 1729 ம் ஆண்டில் அங்கு பொருத்தப்பட்டதாகும் . 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விமானத்திற்கு பொற்தகடுகள் வேய்ந்ததோடு 3,083 பலம் ( கிலோ ) எடையில் செப்புக்குடம் ராஜராஜன் அளித்தார் என்றும் ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளது .
மேலும் அதில் சக ஆண்டு 1795 சோபகிருது வருடம் ஆவணி 24 சுக்ல பட்சம் சதுர்தசி குருவாரத்தில் சிவாஜி மன்னரால் ஒரு முறையும் , அதற்கு முன்பு சக ஆண்டு 1,611 சௌமிய வருடம் முதல் சரபோஜி மன்னரால் ஒரு முறையும் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளன . இவை முறையே 1843 செப்டம்பர் 7 ம் தேதியையும் , 1729 ம் ஆண்டையும் குறிக்கிறது .
ஓலைச்சுவடியில் உள்ள இதே தகவல் சரஸ்வதி மகாலில் உள்ள ஒரு மோடி ஆவணத்திலும் கூறப்பட்டுள்ளது . 1797 ல் ஆங்கிலேயர் ஒருவர் பெரிய கோயிலின் உச்சிவரை ஏறினார் . ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆங்கிலப் படையினரின் தங்குமிடமாகவும் கோயில் பயன்பட்டதாகவும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது .
1857 ல் லாம்ண்டன் என்ற ஆங்கிலேயர் கோயிலின் உச்சியில் சென்று நில அளவை செய்வதற்கு கயிறு கட்டி நிலஅளவை கருவியை ஏற்றும்போது கயிறு அறுந்து அக்கருவி உடைந்ததாக அவர் எழுதிய குறிப்பு உள்ளது .
--- தொல்லியலாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தினகரன் 11 . பிப்ரவரி 2010 ..

Sunday, July 4, 2010

'ஃபோர்ஜரி '

To forge ahead என்றால் ' முன்னேறுவது '. அதுவே forgery என்றால் ' போலியாகத் தயாரிப்பது '! ஒரு காலத்தில் பிரெஞ்சு மொழியில் உலோகத்தைச் சூடாக்கி பொருட்களைத் தயாரிப்பதற்குத்தான் இந்தப் பெயர் இருந்தது . அச்சு வார்த்து அதிலிருந்து பல ' காப்பி 'கள் ( சிலைகளை ) எடுக்க ஆரம்பித்தால், சற்று அர்த்தம் ,ஆறி போலிக்கையெழுத்துக்காக வந்துவிட்டது .!

Saturday, July 3, 2010

அடையாளம் தெரியவில்லை !

54 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள் .
' என் காலம் முடிந்துவிட்டதா ?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் .
"இல்லை... இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன ." என்றார் கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் .
' என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் . தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள் . என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது .' என்றாள் .
ஏராள செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றமே மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
" எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் , லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?" என்று கோபமாகக் கேட்டாள் .
" அட, நீயா அது ? அடையாலம் தெரியாமல் போய்விட்டதே !" என்றார் கடவுள் .
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆ . விகடன் , 16. 12. 2009.

Friday, July 2, 2010

குசேலன் .

திருக்காட்டுப்பள்ளித் தமிழாசிரியராகவும், திருவையாற்று அரசர் கல்லூரி முதல்வராகவும், புதுச்சேரி பிரெஞ்சு இந்தியப் பண்பாட்டுக் கழகத்தின் தமிழாய்வுத்துறைத் தலவராகவும் விளங்கிய திரு .' தமிழ்க்கடல் ' பண்டித வித்வான் தி. வே. கோபாலய்யர் அவர்களின் புலமை, பல்கலைக் கழகங்கள் போற்றும் தனிச் சிறப்புடையதாகும்.
" குசேலன் இருப்தேழு மைந்தர்களைப் பெற்றிருந்தால், முதல், இரண்டு, முன்று புதல்வர்கள் இருபது வயதுக்கு மேல் வளர்ந்திரிருப்பார்களே ? வறுமை எப்படி அவர்கள் குடும்பத்துக்கு வரும் ?" என்று ஒருமுறை சற்று கூர்மையாக அவர்டம் நான் கேட்டேன் . அவர் சிரித்தார் .
" குசேலோபாக்கியானத்தை எழுதியவர் மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை . அதனை வல்லூர்த் தேவராசர் எழுதியதாக ஒப்புதலளித்து விட்டார் . அவர் பாடிய பாடலில் பிழை இருக்குமா? பாடலைப் படி !" என்றார் .
' ஓரேழ் தலையிட்ட இருபான் மைந்தர்த் தந்தனன் ' என்ற பாடல் அடிக்கு ஒன்பது முறை மக்களைப் பெற்றாள் என்பது பொருள் . தாய் உண்வூட்டும்போது ' ஒரு மகவு கைந்நீட்டும் ! உந்தி மேல் விழுந்து இரு மகவும் கைந்நீட்டும் ' என்ர பாடல் மூலமும் , ' ஒரு மகவு கைந்நீட்ட இருமகவும் கைந்நீட்டும் மும்மகவும் கைந்நீட்டும் ' என்ற தொடர் மூலமும் மும்மூன்று குழந்தைகளாக அவள் ஒன்பது முறை குழந்தைகளைப் பெற்றது புலனாகும். ஆதலால் முதல் மக்களுக்கே பத்து வயதாகவில்லை என்பது புரியும் " என்றார் . அணிசெய் காவியம் ஆயிரம் கற்று , ஆழ்ந்திருக்கும் கவியுள்ளமும் அறிந்த புலவர் பிரான் கோபாலய்யர் .
--- புலவர் இரா. இராமமூர்த்தி. இலக்கியப்பீடம் . ஜனவரி 2010 .

Thursday, July 1, 2010

குண்டானவர்கள் இளைக்க !

மலை மீது சில நாள் தங்கினால் குண்டானவர்கள் இளைக்கலாம் . பசி குறைந்து , கலோரி கரையும் . ஆய்வு முடிவில் தகவல் .
உடம்பைக் குறைப்பதற்கான எல்லா வழிகளையும் ஒரு கை பார்த்து விட்டு , மூச்சு வாங்க பின்வாங்கிய குண்டானவரா நீங்க , உட்காராதீங்க , நேராக மலையை நோக்கி நடங்க . உச்சி மீது சில நாட்கள் தங்கினால் வேறெந்த உதவியும் இன்றி ஒல்லியாகி விடுவீர்கள் . இதை ஜெர்மனியில் நடந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது .
கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்த பகுதிக்குச் செல்லும்போது காற்றில் மாற்றம் ஏற்படும் . மெல்லிய காற்று மேலே தொடர்ந்து படுவதால் பசி குறைந்து விடும் . உடல் இயக்கம் வேகமெடுக்கும் . வேலையே செய்யாமல் கலோரிகள் தானாக கரையும் . இதனால் , எடை வேகமாக குறையும் .
ஆய்வில் பங்கேற்று மலை மீது செல்லாமல் மற்ற வழிகளை கையாணவர்களைவிட மலை மீது தங்கிவிட்டு திரும்பியவர்கள் அதிக எடை குறைந்தது தெரிய வந்தது .
--- தினகரன் . பிப்ரவரி 7 . 2010 .