Tuesday, November 30, 2010

அய்யன் வள்ளுவன் .

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமானது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே சிலை வடிக்க அடிக்கல் நாட்டினார். 1990ல் சிலை அமைப்பது துவங்கினாலும், 1997ல் தான் சிலை அமைக்கும் பணி புத்துயிர் பெற்றது. ஆய்வுகள், நீர் பரிசோதனை, கற்களை பெயர்த்தெடுக்கும் பணி, சிற்ப வேலைகள் என மூன்று ஆண்டுகள் நீடித்தது. வள்ளூவர் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் கணபதி ஸ்தபதி. 1330 குறள்களை 133 அதிகாரங்களில் உள்ளடக்கிய உலகப் பொது மறை நூலென்பதால் 133 அடி உயர சிலை வடிவமைப்பது என முடிவானது. அதன்படி சிலையைத் தாங்கி நிற்கும் பீடம் 38 அடி உயரத்திலும், வள்ளூவர் சிலை 95 அடி உயரத்திலும் வடிவமைக்கப்பட்டது.
சிலையின் உயரம் கூட ஏனோதானோ கணக்கில் வடிவமைக்கப்படவில்லை. அதிலும் குறியீடாக ஒரு சிறப்பு உள்ளடங்கியிருக்கிறது. குறளை அறம், பொருள், இன்பம் என மூன்று பால்களாக பிரித்திருக்கிறார் வள்ளுவர். இதில் முதலாவதாக அறத்துப்பால். இதில் 38 அதிகாரங்கள் உள்ளன. பொருள் மற்றும் இன்பத்துப் பாலில் 95 அதிகாரங்கள் உள்ளன. அறத்தை அடிப்படையாகக் கொண்டே பொருளூம் இன்பமும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பீடம் அறமாக 38 அடி உயரத்திலும், பொருள், இன்பமாக 95 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டது. மொத்தமாக 7 ஆயிரம் டன் எடை கொண்ட கற்களின் உதவியோடு செதுக்கப்பட்ட சிலை, தமிழர்களின் சின்னமாக 2000 ம் ஆண்டு குமரிக்கடலில் நிறுவப்பட்டது. இது வள்ளுவர் சிலையின் வரலாறு.
--- தினமலர், 20. 06. 2010.

Monday, November 29, 2010

நோயாளியா ?

ரத்த அழுத்த நோயாளியா ?
மாத்திரை போல செயல்படும். ரத்த அழுத்த நோயாளியா ? தினமும் சாக்லேட் சாப்பிடுங்க. ஆஸி. ஆய்வில் தகவல்.
ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி, பாதிப்பு குறையும் என்று ஆஸ்திரேலிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சாக்லேட்டில் ப்ளேவனாய்ட் என்ற ஒரு ரசாயன பொருள் உள்ளது. அது ரத்தத்தில் செயல்படும் விதம் பற்றி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி நடத்தியது. அதில் வெளியான தகவல்கள் :
அடைபடும் ரத்த தமனிகளை திறக்க செய்வதில் ப்ளேவனாய்டு ரசாயன பொருள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. அடைபட்டிருக்கும் ரத்தம் இளகி சீராக ஓடுவதற்கு ரத்த தமனியை அது ஊக்குவிக்கிறது. இந்த ப்ளேவனாய்டு ரசாயனம், சாக்லேட்டில் அதிகமுள்ளது.
எனவே, தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிட்டு வருவதால், ரத்த ஓட்டம் சீராகி, அழுத்தம் குறைந்து விடும். உயர் ரத்த அழுத்தம் பாதித்தவர்களுக்கு சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரத்த அழுத்தம் குறைவது ஆய்வில் தெரிய வந்தது.
எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் ஒவ்வொரு முறை பாதிப்பின்போதும் மருந்து, மாத்திரைகளை நாடாமல், சாக்லேட் சாப்பிட்டாலே ஓரளவு நிவாரணம் பெறலாம். எனினும், உடனடி பலன் 5 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி அடிலெய்டு பல்கலைக்கழக ஆய்வு குழு பேராசிரியர் கார்வின் ரீட் கூறுகையில், " ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எப்போதும் மருந்து தேவைப்படாது. உணவுகளே மருந்தாக அமையும். அவற்றில் சாக்லேட்டும் ஒன்று " என்றார்.
--- தினகரன் , 29 ஜூன் , 2010.

எந்த பல்பு ' பெஸ்ட் ' ?

பூமி வெப்பமடைவதை முடிந்த வழிகளில் எல்லாம் தடுக்க வேண்டும், மின்சாரத்தை சிக்கனப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு சர்வதேச அளவில் வளர்ந்துவருகிறது. இந்த இரண்டு அம்சங்களையும் செயல்படுத்த உதவுபவை, ' சிஎப்எல் ' ( காம்பாக்ட் ஃப்ளோரஸென்ஸ் லேம்ப் ) மின்விளக்குகள்.
சாதாரண பல்புகளில் ( குண்டு பல்பு ) டங்க்ஸ்டன் இழையை மின்சாரம் மூலம் சூடாக்கி வெளிச்சம் பெறப்படுகிறது. இந்த இழையை சூடாக்க அதிக மின்சாரம் தேவை. இந்த பல்பு தரும் வெளிச்சம் குறைவு. வெளியிடும் வெப்பம் அதிகம். பல்பின் ஆயுட்காலம் குறைவு.
இந்தக் குறைபாடுகள் சிஎப்எல் பல்புகளில் இல்லை. இவற்றின் உட்புறத்தில் பாஸ்பர் என்ற ரசாயனம் பூசப்பட்டுள்ளது. பல்புக்குள் ஒரு வாயு நிரப்பப்பட்டுள்ளது. மின்சாரம் பாயும்போது வாயுவில் நடக்கும் ரசாயன செயல்பாடு, பாஸ்பரை ஒளிர வைத்து வெளிச்சம் வருகிறது. சிஎப்எல் பல்புகளை ஒளிரவைக்க அதிக மின்சாரம் தேவையில்லை; இவை வெளியிடும் வெப்பம் மிகமிகக் குறைவு... ஸோ, சிஎப்எல் பல்புகள்தான் பெஸ்ட் !
--- தினமலர், ஜூன் 25 . 2010.

Sunday, November 28, 2010

கடம் !

கடம் என்பது மண், நீரால் பிசையப்பட்டு, நெருப்பால் சுடப்பட்டு, கடமாகி, அதன் உள்ளே காற்று, வெற்றிடமான ஆகாயம் என்று பஞ்சபூதங்களூம் அடங்கியதாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் கடல் கடந்து, விண்ணில் பறந்து, சூரியன் உதிக்கும் நாடுகளிலெல்லாம், நம் மண்ணின் பெருமையை, காற்றைவிட கடிதாகக் கொண்டு சேர்க்கிறது.
--- விக்கு விநாயகராம், தினகரன் . 26. 06. 2010.

Saturday, November 27, 2010

பகைகள்.

6 வகை பகைகள்.
* பகைகள் : காமம், குரோதம், கோபம், மோசம், மதம், மாச்சர்யம்.
* தீட்சை : கட்சுதீட்சை, ஸ்பரிச தீட்சை, வாசகதீட்சை, மானசதீட்சை, சாத்திரதீட்சை, யோகதீட்சை.
* சாஸ்திரங்கள் : மந்திரம், வியாகரணம், நிருத்தம், நிகண்டு, சந்தோபிசிதம், சோதிடம்.
--- தினமலர், ஜூன் 24 . 2010.

Friday, November 26, 2010

தொலைத்தது போதும் !

மானிடனே !
உன்னுடைய
கணக்குப் போடும் திறமையை
கால்குலேட்டரிடம் தொலைத்தாய்...
நினைவாற்றலை
கம்யூட்டரிடம் தொலைத்தாய்...
உழைப்பாற்றலை
எந்திரங்களீடம் தொலைத்தாய்...
வெப்பம் தாங்கும் சக்தியை
குளிர்சாதனக் கருவியிடம் தொலைத்தாய்...
உன் ஆரோக்கியத்தை
ரசாயன உணவுகளிடம் அடகு வைத்தாய்...
எல்லா சக்திகளையும்
இயந்திரங்களிடம் இழந்துவிட்டு
சக்கையாய் நிற்கிறாய்...
இழந்ததெல்லாம் போதாதென்று
மணல்திருடி, காடுகளை அழித்து
நீராதாரங்களை ஆக்ரமித்து
விளைநிலங்களை
' விலை ' நிலங்களாக்கி
பூமியையும் பொசுக்குகிறாய்...
உன் உயிரயும் தொலைக்க
உனக்கென்ன அவ்வளவு ஆசை ?
-- வேலூர் காந்திமதி கிருஷ்ணன், தினமலர் . ஏப்ரல் . 3 2010.

Thursday, November 25, 2010

7 வகை குணங்கள் !

* தேவர், மனிதர், மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம், ஆகியவை ஏழு தோற்றங்கள் ஆகும்.
* அதலம், தலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் ஆகியவை ஏழு கீழ் உலகங்கள்.
* பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோலோகம், காலோகம், சத்யலோகம் ஆகியவை ஏழு மேலுலகங்கள்.
* வசிட்டர், விசுவாமித்திரர், அத்திரி, ஆங்கிரஸ், மரீசி, கவுதமர், மவுதகல்யர் ஆகியோர் சப்தரிஷிகள் என்று போற்ற்ப்படுகின்றனர்.
* அறியாமை, பொய், அயர்வு, மோகம், பைசாசம், சூன்யம், மாச்சர்யம், பயம் ஆகிய ஏழும் மாயையின் குணங்களாகும்.
--- தினமலர், ஜூன் 24 . 2010.

Wednesday, November 24, 2010

ஆதிவாசிகள் !

பிஹலி, சக்மா, டங்கி, தொடியா, துந்தாரி, கடிகாலி, கசாரியா, கோஷ்ரி, ஹல்பி, கோட்டா, ஹின்பி, லம்பானி, லாரியா, மாவிச்சி, மன்வாரி, சர்கோடி, தாகூகுரு, வர்லி, ஹாரோ, மரிங், மம்பா, சுலாங், தோடா, பூச்சோரி, சேமா, ஷெர்பா, கொண்டி, ஹதார், அசூரி, நிகோபாரிசி, வாஞ்சோ, நிமாரி.... இதெல்லாம் என்னவென்று பார்க்கிறீர்களா ?
இவை அனைத்துமே இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆதிவாசிகள் பேசும் மொழிகள். இதன் பெயர்களைக்கூட நாம் கேள்விப்பட்டது இல்லை. இந்த மொழிகளைப்போல இன்னும் 100 ஆதிவாசிகளின் மொழிகள் உள்ளன. அதில் பெரும்பான்மை இன்று அழித்தொழிக்கப்பட்டு விட்டது. காட்டில் இருந்து ஆதிவாசி துரத்தப்படும் போது முதலில் அழிக்கப்படுவது அவனது மொழியே. அதை காலனிய அதிகாரிகள் மிகக் கவனமாகச் செயல்பட்டு அழித்து ஒழித்தனர்.
--- எஸ். ராமகிருஷ்ணன் . ஆனந்தவிகடன், 23. 06. 2010.

Tuesday, November 23, 2010

இரு நதிகள் !

அந்த இரு நதிகள் !
அந்த நாட்டில் இரண்டு கடல்கள் இருக்கின்றன. வடக்கில் அமைந்திருக்கும் கடலில் ஜோர்டான் நதி கலக்கிறது. கடலாக இருந்தாலும் நல்ல தண்ணீரால் நிரம்பியிருக்கிறது அந்த கடல். தெளிந்த தண்ணீருக்குள் விளையாடிக்கொண்டு இருக்கும் மீன்கள், கடலைச் சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் பசுமை, சுற்றிலும் மான், முயல்போன்ற மிருகங்களோடு, மனிதர்களும் சின்ன சின்ன குடில்கள் அமைத்து அங்கு தங்கி இருக்கிறார்கள். சூரியங்கூட அங்கு சுள்ளெனச் சுட்டெரிக்காமல் மென்மையாக மிளிர்கிறது. அந்தக் கடலில் கலக்கும் அதே ஜோர்டான் நதி இன்னொரு கிளை பிரிந்து தென்பகுதியில் இன்னொரு கடலில் கலக்கிறது.
இந்தக் கடலில் மீன்கள் இல்லை. முகர்ந்து பார்த்தாலே தண்ணீர் காந்துகிறது. ஒரு துளி பசுமை இல்லை. மிருகங்கள் இல்லை. ஒரு செல் உயிரிகூட அங்கு ஜீவிப்பதற்கான சூழல் இல்லை. மயானச் சூழல். முந்தையக் கடலில் கலக்கும் அதே நல்ல தண்ணீரைத்தான் இந்தக் கடலிலும் கலக்கிறது ஜோர்டான் நதி. ஆனாலும், ஏன் இந்த வித்தியாசம் ?
காரணம், முதல் கடல் தனக்குள் வந்து விழும் ஒவ்வொரு துளி நீருக்கு இணையாக மறு திசையில் நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது. உள்ளே விழுவதற்கு நிகராக நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அந்தக் கடலின் பெயர் கலீலி. அதே அந்த இரண்டாவது கடல் தனக்குள் விழும் நீரை அப்படியே சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஒரு துளிகூடத் தப்பித்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் மயான மிதவையாகக் காட்சி அளிக்கும் அந்தக் கடலின் பெயர் டெட் ஸீ... சாக்கடல் !
பாலஸ்தீனத்தில் இருக்கும் அந்த இரு வகைக் கடல் போல மனிதர்களிலும் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். நீங்கள் அதில் எந்த வகை என்பதை உங்கள் டீன் ஏஜிலேயே முடிவு செய்துகொள்ளுங்கள் !
--- கி. கார்த்திகேயன் , ஆனந்தவிகடன், 23. 06. 2010.

Monday, November 22, 2010

சூப்பர் காண்டம் .

' கெடுக்க முயன்றால் கடித்து விடும் '
இனி, கற்பை பாதுகாக்க சூப்பர் காண்டம் வந்தாச்சு.
தென் ஆப்பிரிக்க பெண் டாக்டர் சானட் எலர்ஸ், உலகிலேயே முதல் முறையாக, பெண்களை பாலியல் வல்லுறவில் இருந்து தடுக்கக்கூடிய காண்டம் தயாரித்து சாதனை படைத்துள்ளார். அவர், ' ரேப் - ஆக்ஸ் ' என்று அதற்கு பெயரிட்டுள்ளார். அணியும் பெண்களுக்கு வேண்டுமானால் அது சாதாரணமான லேடக்ஸ் ரப்பராக இருக்கலாம். அணிந்திருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்ய ஆண் முயன்றால், அது வெறும் ரப்பரல்ல... ரம்பம் என்பதை காட்டி விடும். ஆம். கூரான பற்களை கொண்ட காண்டம். ஆணுறுப்பை கடித்து விடும்.
வல்லுறவு கொள்ள முயற்சிக்கும் ஆண்...அடுத்த நொடியே அய்யோ... அம்மா.. என்று அலறியடித்து ஓட வேண்டியத்துதான். அதுவும், ஒருமுறை கடித்ததும் ஆணுறுப்பை காண்டத்தின் பற்கள் விடவே விடாது. குற்றத்தில் இறங்கிய ஆண் எவ்வளவு முயன்றாலும் அதை பிரித்தெடுக்க முடியாது. முயன்றால் காண்டம் மேலும் இறுக்கி வலியை அதிகரிக்கும். தப்பிக்க டாக்டரின் உதவியை நாடியே ஆக வேண்டியிருக்கும்.
இந்த நிலைமையில் ஒருவர் சிகிச்சைக்கு வந்தாலே, அவர் ஒரு பெண்ணிடம் பலாத்காரத்தில் இறங்கியதை டாக்டர் கண்டுபிடித்து போலீசுக்கு புகார் செய்யலாம். உடனடி கைது தான். இதனால், பலாத்கார குற்றங்கள் பெருமளவில் குறைந்து விடும். இதை சோதித்து பார்ப்பதற்காக உலக கோப்பை கால்பந்து நடக்கும் தென் ஆப்பிரிக்காவில் 30,000 காண்டம்களை டாக்டர் சானட் விநியோகிக்க உள்ளார். ' ரேப் - ஆக்ஸ் ' ரூ. 100க்கு கிடைக்கும்.
இதுபற்றி சானட் எலர்ஸ் கூறுகையில், " 40 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ ஆராய்ச்சி மாணவியாக இருந்தேன். அப்போது, பலாத்காரத்தில் சிக்கிய ஒரு இளம்பெண் என்னிடம் வந்தார். விரக்தியின் உச்சத்தில் இருந்த அவர், ' பெண்ணுறுப்பில் பற்கள் இருந்திருந்தால் இந்த கதி ஏற்பட்டிருக்காது ' என்று குறிப்பிட்டார். அவஸ்தையால் வந்த அந்த வார்த்தைகள் தான் இந்த காண்டம் உருவாக காரணம் " என்றார்.
--- தினகரன், 22 ஜூன் 2010.

Sunday, November 21, 2010

மனிதமூளை !

* ஆண் மூளைக்கும் பெண் மூளைக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன.
* ஆண் மூளைதான் பெரியது.
* ஒரே நேரத்தில் பல செயல்களில் கவனம் செலுத்த வல்லவர்கள் பெண்கள். ஆண்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே செயலில்தான் கவனம் செலுத்துவார்கள்.
* உடல், மன வளர்ச்சிகள் ஆண், பெண்ணுக்கு வெவ்வேறூ பருவங்களில் நிகழும்.
-- அ. ஐஸ்வர்யா, ஆனந்தவிகடன் , 16.. 06. 2010.

Saturday, November 20, 2010

கப்பல் !

டைட்டானிக் கப்பல் !
டைட்டானிக் என்கிற 11 மாடி உலக சொகுசுக் கப்பல் ஏப்ரல் 14, 1912 - ல் ஐஸ் பாறை மீது மோதி மூழ்கியது. 1,500 - க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள். இன்று டைட்டானிக், அட்லான்டிக் கடலின் அடியில், 13,00 அடி ஆழத்தில் கிடக்கிறது. சுமார் நான்கு கி. மீ. ஆழம் இது. என்ன ஆழம் தெரியுமா ? ஈஃபில் டவர் உயரம் 984 அடி. அதாவது மூழ்கி இருக்கும் டைட்டானிக் அருகே 13 ஈஃபில் டவர்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால் கடல் மட்டம் வரும். இன்று டைட்டானிக் உலக மகா ஆழமான மாபெரும் கல்லறை !
--- ஹாய் மதன் ,ஆனந்தவிகடன் , 23. 06. 2010.

Friday, November 19, 2010

நடராஜர்.

* தரிசிக்க முக்தி தரும் தலம், சிதம்பரம். நடராஜப் பெருமான் இங்கு தாழ்சடையுடன் விளங்குகிறார்.
* மூலவரே உற்சவராய் வலம் வரும் கோயில் அநேகமாக இது மட்டுமே.
* பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத்தலமாக விளங்குகிறது.
* சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல்பெற்ற சிறப்புடையது.
* ஆன்மிக உலகில் ' கோயில் ' என்னும் பொதுச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறதென்றால், அது சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்தான்.
* சேக்கிழார் பெருமான் இயற்றிய சிவனடியார்களின் சரிதங்கள் அடங்கிய ' பெரிய புராணம் ' நூல் இங்குதான் அரங்கேற்றப் பட்டது.
* அருவ ( ரகசியம் ) உருவ ( நடராஜர் ) அருவுருவ ( மூலநாதர் லிங்க வடிவம் ) என மூவகை வழிபாடுகளைக் கொண்ட திருத்தலம்.
* தில்லை -- ஊர்ப்பெயர் , பொன்னம்பலம் -- கோயில் பெயர்.
* இத்தலத்தின் நான்கு கோபுர வாயில்கலிலும் சைவ சமயகுரவர்கள் நான்கு பேரும் நுழைந்து தரிசனம் செய்திருக்கிறார்கள்.
* மும்மூர்த்திகளையும் இங்கே ஒரு சேர வணங்கலாம்.
* இங்குள்ள பொற்சபை, சிலப்பதிகாரம் விளக்கும் நாட்டிய மேடை அமைப்பைக் கொண்டது.
* மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இறைவனே எழுதி, படி எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
* அனைத்து தெய்வங்களின் சக்தியும் தினந்தோறும் நடராஜப்பெருமானிடம் ஒடுங்கி, பின்பு அந்த தெய்வங்களிடமே செல்லும் தன்மை மிக்கது இத்தலம்.
--- தினகரன் , 19. 06. 2010.

ரயில் எண்கள் மாற்றம் !

டிசம்பர் 20 முதல் ரயில் எண்கள் 5 இலக்கமாக மாற்றம் .
ரயில்களுக்கு இப்போது 4 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன . இதன்மூலம் 9 ஆயிரத்து 999 ரயில்களுக்கு மட்டுமே எண்கள் வழங்க முடியும் . ஆனால், நாடு முழுவதும் பயணிகள் வசதிக்காக தினமும் சராசரியாக 11 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன . எனவே, ரயில்களின் எண்களை 5 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது .
இதன்படி, எக்ஸ்பிரஸ் ரயில்களின் இப்போதைய எண் முன்பு ' 1 ' சேர்க்கப்படுகிறது . சிறப்பு ரயில்களுக்கு ' 0 ', வழக்கமான பாசஞ்சர் ரயில்களுக்கு ' 5 ', மெயின்லைன் ரயில்களுக்கு ' 6 ', டீசல் இஞ்சின் ரயில்களுக்கு ' 7 ' எண்கள் சேர்க்கப்படும் . ' 3 ' என்ற எண்ணுடன் கோல்கத்தா புறநகர் ரயில்களுக்கும், ' 9 ' என்ற எண்ணுடன் மும்பை புறநகர் ரயில்களுக்கும், ' 9 ' என்ற எண்ணுடன் சென்னை உட்பட மற்ற நகரங்களின் புறநகர் ரயில்களுக்கும் எண்கள் தொடங்கும் . இந்த மாற்றம் டிசம்பர் 20 ம்தேதி அமுலுக்கு வரும் .
--- தினமலர் . 19 . 11 . 10 .

Thursday, November 18, 2010

கணக்கு விளையாட்டு !

என் பெயர் ராணி... என் வயது 9...
எனக்கும் என் தம்பி ராஜாவுக்கும் 2 வயது வித்தியாசம்...
என் வயதையும் என் தம்பி வயதையும் கூட்டி 2 ஆல் பெருக்கினால் வரும் விடைதான் எங்கள் அம்மா கீதாவின் வயது...
அம்மாவுக்கும் அப்பா மோகனுக்கும் 3 வயது வித்தியாசம்..
அப்பா வயதையும் பாட்டி மீனாட்சியின் வயதையும் கூட்டினால் 100 வரும்...
அம்மா வயதையும் தாத்தா சுந்தரத்தின் வயதையும் கூட்டினால் 100 வரும்...
என் தம்பி, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியோரின் வயதைக் கண்டுபிடிச்சு சொல்லுங்கள், பார்க்கலாம் !
விடை :
ராஜா வயது 7; அம்மா கீதாவின் வயது 32; அப்பா மோகனின் வயது 35; பாட்டி மீனாட்சியின் வயது 65; தாத்தா சுந்தரத்தின் வயது 68.
--- தினமலர். ஜூன் 18 , 2010.

Wednesday, November 17, 2010

விளையாட்டு !

அர்த்தமுள்ள விளையாட்டு !
ஆங்கில எழுத்தான ' பி ' என்னும் எழுத்தில் ஆரம்பிக்கும் 10 வார்த்தைகளைச் சொல்லுங்கள் என்றான் பள்ளி மாணவன் ஒருவன். என்னால் சொல்லமுடியவில்லை. பிறகு, அவன் ' பி ' எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளை கடகடவென சொல்ல ஆரம்பித்தான்.
அவன் சொன்னான் :
" Betty Beaker bought a bit of butter. That bit of butter was bitter. To make that bit of butter better. Betty bought a bit of better butter "
அவன் கூறியதற்கு தமிழ் அர்த்தம் ' பெட்டி பீக்கர் என்பவன் ஒரு துண்டு வெண்ணை வாங்கினான். அது கசந்தது. அதை நல்ல வெண்ணையாய் மாற்ற அவன் கொஞ்சம் நல்ல வெண்ணை வாங்கினான்.' என்பதாகும்.
அந்த விளையாட்டு இன்றும் என் மனதில் நிலைத்திருக்கிறது.
--- சி. சபரீஷ், உறையூர். தினமலர். ஜூன் 18 , 2010.

Tuesday, November 16, 2010

சாணம் .

சாணம் -- வரப்பிரசாதம். சென்ற நூற்றாண்டுகளில் இல்லங்களைத் தூய்மை செய்யப் பயன்படுத்தப்பட்ட இணையில்லாத கிருமி நாசினி. சாணத்தால் மெழுகப்பட்ட இடத்தில் வைரஸ் தொந்தரவு வரவே வராது. எனவேதான் வீடுகளின் தெருவாசல் மற்றும் பின்வாசலில் சாணி தெளித்து வந்தார்கள்.
' சாணி ' தெளிக்க, சாணம் சேகரிப்பது எப்படி ? என்ற சந்தேகத்துக்கு சாஸ்திரங்களில் விடை இருக்கிறது. பசு சாணம் போடும்போது அது பூமியில் விழுவதற்கு முன்பாக அரசிலை அல்லது ஏதாவது ஒரு இலையில் பிடிக்க வேண்டும். அதனைக் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
பூமியில் விழுந்த சாணத்தைச் சேகரிக்க நேரும் பட்சத்தில் சாணத்தின் மேற்புறம் கீழ்புறம் மற்றும் புறப்பகுதிகளில் உள்ள சாணத்தை நீக்கி மத்தியில் உள்ள சாணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி.
--- தினமலர், ஏப்ரல் 11 , 2010.

Monday, November 15, 2010

மலைக்கோட்டை.

மங்களாவரம் மலையில் ஆடுமேய்த்த ஒரு சிறுவன் ஒரு இடத்தில் அதிசயமான தெய்வீக விக்ரகத்தைக் கண்டு காகாதிய மன்னரிடம் சொல்ல, அதை புனித இடமாகக் கருதிய மன்னர், இங்கு கோட்டை கட்டினார். இதனால் இந்த இடத்திற்கு ' மேய்ப்பனின் மலை ' என்ற அர்த்தம் கொண்ட ' கொள்ள காண்டா ' என்ற தெலுங்கு பெயர் வந்தது. பின்னர், கோல்கண்டா என்று மருவியுள்ளது.
கோல்கண்டா, ஆரம்பத்தில் இந்து மன்னர்களின் ஆட்சியில் தக்காண நாட்டின் தலைமையிடமாக இருந்துவந்தது. காகாதிய மன்னர்கள் ஆட்சியில் களிமண் கோட்டையாக இருந்த இந்த மலைக்கோட்டை, பாமினி சுல்தான்கள் ஆட்சியில் கல் மதில்களுடன் சில மாற்றங்களைப் பெற்றது. பிறகு, குதூப் சாஹி வம்ச ஆட்சியில் 7 கி. மீ., தூர மதில்சுவர் மற்றும் கிரானைட் வேலைப்பாடுகளுடன் பிரமாண்ட வடிவம் பெற்றது. அதன்பின் கோல்கண்டாவைக் கைப்பற்றிய முகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப், கோட்டையின் பல பகுதிகளை இடித்து புதுப்பித்தார். இப்படி, இந்தியப் பாரம்பரிய கட்டடக்கலையும் பாரசீகக் கலைநுட்பங்களும் கலந்து மிளிர்கிறது இந்தக் கோட்டை !
காகாதிய வம்ச மன்னர் கட்டிய காளிகோயில், கோட்டையின் ஆரம்பகால வரலாற்றுக்கு சாட்சி கூறுகிறது. அனுமதி பெறாமல் பத்ராசலம் கோயில் கட்டிய பக்த ராமதாஸரை சுல்தான் தானா ஷா சித்ரவதை செய்த சிறை, இன்னொரு மவுன சாட்சி.
இந்த கோட்டையின் தனிச்சிறப்பு, ' எதிரொலி ' அறைகள். விதவிதமான கூரை அமைப்புகளால் ஒலியைத் திசைதிருப்பி இந்த அதிசய அறைகளை அமைத்துள்ளனர். ' கைதட்டல் அறை ' என்ற அறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கை தட்டினால், 24 முறை எதிரொலி கேட்கிறது !
தண்ணீரை கோட்டை பகுதிகளுக்குள் இடமாற்றூவதற்கான நுட்பமான அமைப்புகள், இன்னொரு பிரமிப்பு. பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரம் இருந்த இடம், மார்க்கபோலோ புகழ்ந்து எழுதிய இடம் என்று நீண்டுகொண்டே போகிறது கோல்கொண்டா மலைக்கோட்டையின் சரித்திரம் !
--- தினமலர் , ஏப்ரல் 11 , 2010.

Sunday, November 14, 2010

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் .

* தஞ்சன் என்னும் அசுரனை சிவபெருமான் வதம் செய்தபோது, தன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட வேண்டுமென அசுரன் வேண்டியதால் இவ்வூர் தஞ்சாவூர் என்றானது .
* தஞ்சாவூர் என்ற சொல்லுக்கு குளிர்ந்த நிலப்பரப்பினைக் கொண்ட ஊர் என்று பொருள் .
* தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சாவூருக்கு பெருமை சேர்ப்பது ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் என்ற பெருவுடையார் கோயில் .
* ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டு 17-ம் நூற்றாண்டுக்குப் பின் பிரகதீஸ்வரம் என பெயர் மாற்றமடைந்தது இந்தக் கோயில் .
* மூலவரான பிரகதீஸ்வரர் லிங்க வடிவினர் . உயரம் 13 அடி. வட்ட ஆவுடை 54 அடி சுற்றளவு. மத்தியப்பிரதேச நர்மதை ஆற்றங்கரையில் உள்ள மலையிலிருந்து எடுத்து வந்த கல்லால் அந்த பிரமாண்ட லிங்கம் செய்யப்பட்டது.
* இங்குள்ள லிங்கம் போன்றே முன்புறம் உள்ள நந்தியும் பிரமாண்டம்தான். உயரம் 12 அடி, நீளம் 9 அடி, அகலம் 6 அடி. ஒரே கல்லால் ஆனது.
* சிவலிங்கம் மூன்று அமைப்புகளைக் கொண்டது. அடியில் நான்கு பட்டை தூண் வடிவை பிரம்மனாகவும், இடையே எட்டுப் பட்டை வடிவை விஷ்னுவாகவும், வட்டத் தூணை ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி, பரமசிவம் என்றும் அழைப்பர்.
* கருவூரார் என்ற சித்தரின் அறிவுரைப்படி 10ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. கோபுரம் தரையிலிருந்து 216 அடி உயரம். நான்கு பட்டை வடிவில் கூம்பிச்செல்லும் விமானம், 26க்கு 26 அடி சதுர தளத்தில் நிற்கிறது. இதன் மேல் உள்ள அரைப்பந்து வடிவச் சிகரத்தின் உச்சியில் 12 அடி உயரமுடைய தங்கமுலாம் பூசப் பெற்ற செம்புக் கவசம் உள்ளது.
* கோபுர விமானம் வாய் அகலமான கூம்பை தலைகீழாகக் கவிழ்த்தது போன்ற அமைப்புடையது. இந்த விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பதும் தவறான செய்தியாகும்.
* இக்கோயிலிலிருந்து ராஜராஜன், அவனது பட்டத்தரசி லோகமாதேவி ஆகியோரது செப்புச் சிலைகள் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கௌதம் சாராபாய் கலைக்கூடத்தில் உள்ளன.
* பெரிய கோயிலின் முதல் கோபுர வாயிலுக்கு கேரளாந்தன் வாயில், 2ம் வாயிலுக்கு ராஜராஜன் வாயில், தெற்கு கோபுர வாயிலுக்கு விக்ரம் சோழன் வாயில் என்றும் பெயர்.
* கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் 18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான இரண்டு துவாரபாலகர்கள் சிற்பங்களாக பிரமாண்டம் காட்டுகிறார்கள்.
* இக்கோயில் யுனஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
--- தினகரன் , 12. 06. 2010.

Saturday, November 13, 2010

வலை பாயுதே !

kanapraba @ twitter .com :
* இரண்டு செய்திகள் . செய்தி ஒன்று : ' நான் விஜயா மருத்துவமனையில் இருந்தபோது, எஸ். பி.பி, கங்கை அமரன் தவிர யாரும் வரவில்லை ' -- மலேசியா வாசுதேவன் . செய்தி இரண்டு : கடும் சுகவீனத்திற்கு மத்தியிலும் ' கலைஞர் 87 ' நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தார் பாரதிராஜா !
RamaSubramaanian @ twitter .com:
* அடங்க மறு... அத்துமீறு... பின்பு, தி.மு.க -- வுடன் கூட்டணி சேரு -- திருமா !
sanaKannan @ teitter .com :
* இனிமேல் கலைஞர் எந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்தாலும், அதனை மூன்று மாதங்களுக்குப் பிறகே சென்று பார்க்க வேண்டும் !
---- ஆனந்த விகடன் , 29 .9 . 10 .
Kaattuvaasi @ twitter . com :
* சண்டைபோட்டுக்கொண்டே வருபவர்களை, சமாதானமாக அனுப்புவதும் ..... சமாதானமாக வரும் நண்பர்களை, சண்டை போடச் செய்வதும்... டாஸ்மார்க்கின் திருவிளையாட்டு !
Ilango Krishnan @ facebook . com :
* சாந்தி நிகேதனில் ஒரு சிறுமி, காந்தியிடம் ஆட்டோகிராஃப் கேட்க, ' நீ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உயிரைக் கொடுக்கவும் தயங்காதே . அது தவறான வாக்குறுதி
என்றாலும் ! ' என்று எழுதிக் கையெழுத்து இட்டாராம் . தாகூர் அந்தத் தாளின் பின்புறம், ' நீ கொடுத்த வாக்குறுதி தவறு எனில் திரும்பப் பெறத் தயங்காதே ' என்று எழுதிக்
கையெழுத்து இட்டாராம் . நான் என் நண்பனிடம் சொன்னேன், ' நண்பா ! காந்தி ஒரு நல்ல கவிஞர் ... தாகூர் ஒரு நல்ல அரசியல்வாதி ! '
Chennaitalks @ twitter. com :
* சமீபத்திய அதிர்ச்சி : வேலூர் பொற்கோவில் குளத்தில் நூற்றுக்கணக்கான கிரெடிட், டெபிட் கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ் அட்டைகளைப் பார்த்தது !
swamiomkar @ twitter. com :
* கோழி கஷ்டப்பட்டு முட்டை இடுகிறது . அரசியல்வாதிகள் நாங்கள் முட்டை போட்டோம் என அறிக்கை விடுகிறார்கள் # யாரை நம்ப !
--- ஆனந்த விகடன் , 6 .10 . 10 .

தற்கொலை !

உளவியல் நிபுணர்கள் வெளியிட்டுள்ள பல செய்திகள் கவனத்துக்குரியவை , மனிதனுக்கு வாழ்வதற்கான ஆசை இருப்பதைப் போலவே சாவதற்கான ஆசையும் உள்ளேயே இருக்கிறதாம் . ' வாழ்நாளில் தற்கொலை செய்துகொண்டு விடுவோமே என்ற நினைப்பு வராதவர்களே உலகில் இல்லை ' என்கிறார்கள். ஒரு வட்டம் என்பது வரையப்படும்போது எங்கே தொடங்கியதோ அங்கே வந்து முடிவடைவதைப்போல, வாழும் ஆசையில் தொடங்கி அது நின்றதும் சாகும் விருப்பம் உருவாகி வாழ்க்கை வட்டம் நிறைவு செய்யப்படுகிறது என்கிறார்கள்.
ஒரு பள்ளியில், ஒரு குழுவில், ஒரு கூட்டத்தில், ஒருவரைப் பிடித்து ஆட்டுகிற தற்கொலை உணர்வு அந்தப் பள்ளி, குழு, கூட்டம், குடும்பம் முழுவதையும் பேயாக ஆட்டுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர். சுருங்கச் சொன்னால் மனதிலிருந்து மனதுக்குப் பாயும் தொற்று நோய் இந்தத் தற்கொலை உணர்வு. இந்த நோய்க்கான எதிர்ப்புசக்தி, வாழும் ஆசை, வாழ்தலின் மீது மரியாதை உணர்வு, தன் மீது தானே வைத்திருக்கும் மதிப்பு, இது வளர வேண்டும் .
--- சுகி. சிவம், தினகரன் . 12. 06. 2010.

Friday, November 12, 2010

'முத்து' கோட்டை !

' இந்தியக் கோட்டைகளில் தனிப்பிரகாசத்துடன் ஜொலிக்கும் மகத்தான முத்து ' என்று முகலாயப் பேரரசை ஸ்தாபித்த பாபரை வியக்கவைத்த அழகு பிரமிப்பு எது தெரியுமா ? மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டை ! இது, நகரில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் மலைமீது 3 சதுர கி. மீ., பரப்பில் 10 மீட்டர் உயர சுவர்களுடன் கம்பீரமாகக் காட்சிதரும் அழகே அழகு !
இந்தியக் கோட்டைகளில் அதிக பாதுகாப்பு கொண்ட பிரம்மாண்டமான இதன் அருகில்தான் 1857ன் முதல் சுதந்திரப் புரட்சியின்போது ஜான்சிராணி லட்சுமிபாய்க்கும் பிரிடிஷ் படைகளுக்கும் முக்கியப் போர் நடந்தது .
கி. பி. 8வது நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சிசெய்துவந்த சூரஜ்சிங்கை ஒரு பயங்கர நோய் தாக்கியது . கோபாசல் மலையில் தங்கியிருந்த குவாலிகா என்ற முனிவர் தனது தெய்வீக சக்தியாலும் ஒரு குளத்தின் புனித நீராலும் அவரைக் காப்பாற்றினார் . ' உன் பெயரை சூரஜ் பால் என்று மாற்று, உன் தலைமுறை பால் என்ற பெயரைப் பயன்படுத்தும் வரை இங்கு உங்கள் ஆட்சி நீடிக்கும் ' என்று அருளாசி வழங்கினார் குவாலிகா முனிவர் .
அவருக்கு நன்றிசெலுத்தும் வகையில் அவரது பெயரிலேயே குவாலியர் நகரையும், ஒரு கோட்டை மற்றும் சில கோயில்களையும் உருவாக்கினார் சூரஜ் பால். இவரது தலைமுறையின் 84வது மன்னர், பால் என்ற பெயருக்குப் பதில் வேறுபெயர் சூட்டியதால் தோமார் வம்ச அரசரிடம் ஆட்சியைப் பறிகொடுத்தாராம் . பின்னர் டில்லி லோடிகள், முகலாயர்கள், மராத்தியர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைக்கு மாறிய இந்தக் கோட்டை, இறுதியாக சிந்தியா வம்சத்தினரிடம் வந்தது.
தோமார் வம்ச ராஜா மான்சிங், 15வது நூற்றாண்டில் குவாலியர் கோட்டையைப் புனரமைத்தார் . மான்சிங் அரண்மனை, மான்சிங் தனது ராணி ம்ருக்னைனிக்காகக் கட்டிய குஜிரி மஹால், கரண் அரண்மனை ஜஹாங்கீர் மஹால் உள்ளிட்ட 6 அரண்மனைகள், சிற்பநுணுக்கங்கள் நிறைந்த 2 விஷ்ணுகோயில்கள், மாமியார் கோயில், மருமகள் கோயில் என்று வித்தியாசமான பெயர்கள் கொண்ட 2 கோயில்கள், ஒரு ஜைனக் கோயில், ராணிகள் கூட்டமாக சதி தீயில் பாய்ந்து உயிர் விட்ட ஜவ்ஹர் குன்ட்; சூரஜ் பாலின் நோயைக் குணப்படுத்திய சூரஜ் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் என இந்தக் கோட்டை முழுவதுமே சரித்திர சாட்சிக்கூடமாக ஒளிர்கிறது !
--- தினமலர் , ஜூன் 13 . 2010 .

Thursday, November 11, 2010

" கற்பனையை மிஞ்சிய அனுபவம் ?"

கற்பனையை மிஞ்சிய அனுபவம் ஒன்று உண்டு !
முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திரப் பிரசாத், பீகார் மாகாணத்தில் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்கச் சென்றபோது, ஒரு குடிசையில் ஏழைப் பெண் ஒருவர் வசிக்கிறார் . அவரைப் பார்த்து ஓட்டு கேட்கிறார் ராஜேந்திரப் பிரசாத் . அவருடைய மகள் உள்ளே இருப்பது அறிந்து, அவரைப் பார்த்து ஓட்டு கேட்கவும் விரும்புகிறார். காத்திருக்கச் சொல்கிற அந்தத் தாய் உள்ளே சென்ற ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, வெளியே வருகிறார் மகள் , இருவரையும் ஒருசேர சந்தித்துப் பேச வேண்டும் என்று நினைக்கிறார் ராஜேந்திரப் பிரசாத் . ஆனால், அது முடியவில்லை. சிந்தித்துப் பார்த்த அவருக்கு ஓர் உண்மை புரிகிறது . தாய்க்கும் மகளுக்கும் இருப்பது ஒரே புடவை
--- ஸ்ரீநிகே, சென்னை - 75. நானே கேள்வி... நானே பதில் ! ஆனந்தவிகடன் , 16. 06. 2010 .

Wednesday, November 10, 2010

ராகம் !

எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும் :
ஆகிர் பரவி................... அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும்
குணப்படுத்துகிறது .
பைரவி ............................ முட்டி மற்றும் முழங்கால் வலி .
சந்திரகௌன்ஸ் ........... பசியின்மை .
தர்பாரி கானடா .......... தலைவலி .
தீபக் ................................... அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .
குஜரிகோடி ..................... இருமல், சளி .
குணகளி .......................... மலச்சிக்கல், தலைவலி, மூலம் .
ஜோன்புரி ........................ வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .
ஜெய் ஜெய் வந்தி ... பேதி, தலைவலி, மூட்டுவலி .
( த்வஜாவந்தி )
மால்கௌன்ஸ் ............. குடல் வாயு .
பூர்விகல்யாணி ............ இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .
பூர்ய தனஸ்ரீ ................. இரத்தசோகை .
சோஹானி .................... தலைவலி.
வசந்த பஹார் .............குடற்கற்கள் .
யெமன் கல்யாணி ....... மூட்டுவலி.
---டாக்டர் பால சாண்டில்யன் , இலக்கியப்பீடம் , ஜூன் 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Tuesday, November 9, 2010

விவேகானந்தர் .

* விவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு பெயர்கள் மூலமாகத்தான்
அவர் இந்திய நகரங்களுக்கு அறிமுகமானார் . அமெரிக்கா செல்ல ஏற்பாடானபோது , கேத்திரி மன்னர் தான் ' விவேகானந்தர் ' என்ற பெயரைச் சூட்டினார் !
*தாஜ்மாஹால் அவரது மனம் கவர்ந்த இடம் . அதை முழுமையாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு மாதங்கள் வேண்டும் என்று சொன்னார் .
*'' எழுமின்... விழுமின்...குறிக்கோளை அடையக் குன்றாமல் உழைமின் ' என்ற வார்த்தையை முதன் முதலாகச் சொன்ன இடம் கும்பகோணம் .
* ' பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னால் சீனாவால் நம் நாட்டுக்குப் பேராபத்து நிகழும் ' என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசனத்துடன் சொன்னது அவர்தான் !
* விவேகானந்தருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு . ' சென்னை இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன், ஆன்மிக அலை சென்னையில் இருந்துதான் அடிக்க வேண்டும் ' என்ற அவரது பேச்சில் சென்னைப் பாசம் அதிகமாக இருக்கும் !
--- ப. திருமாவேலன் , ஆ. விகடன் . 31. 03. 2010.

Monday, November 8, 2010

கங்கைகொண்ட சோழபுரம் .

தஞ்சை பெரிய கோவில் போன்ற தோற்றத்திலேயே அமைந்திருப்பது கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோவில் . தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் ( கி.பி . 1014 -- 1044 ) இந்த கோவில் கட்டப்பட்டது .
வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக , கங்கையிலிருந்து நீர் எடுத்து வந்து ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டதுதான் இந்த கோவில் . அதனாலேயே இந்த ஊர் ' கங்கைகொண்ட சோழபுரம் ' ஆயிற்று .
12 நிலைகளைக் கொண்ட இங்குள்ள கோவிலின் ராஜகோபுரம் 172 அடி உயரம் கொண்டது . இது தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தைவிட 12 அடி உயரம் மட்டுமே குறைவானது .இங்குள்ள சிவலிங்கம் 13 அடி உயரம் கொண்டது .
கோவிலின் நுழைவாயிலில் , கோவிலை கட்டிய ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது . தஞ்சை பெரிய கோவில் போலவே , இக்கோவிலுக்கு முன்புறமும் மிகப்பெரிய நந்தி ஒன்று உள்ளது . 12 அடி உயரம் கொண்ட இந்த நந்தி , பெரிய கோவிலைப் போலவே ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும் .
மூலவரான சிவபெருமான் தஞ்சை பெரிய கோவிலில் அழைக்கப்படுவது போலவே ' பிரகதீஸ்வரர் ' என்று அழைக்கப்படுகிறார் . எங்கும் இல்லாத சிறப்பாக இந்த கோவிலின் பிரகாரம் எப்போதும் குளிர்ச்சியான சூழ்நிலையில் காணப்படுகிறது . இந்த பிரகாரத்தின் ஓரிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சந்திரக் காந்தக்கல்தான் இதற்கு காரணம் என்கின்றார்கள் .
--- தினத்தந்தி , 16. 3. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு

Sunday, November 7, 2010

லூஸ் -- லஸ் !

மயிலாப்பூரில் உள்ள லஸ் என்ற இடத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் தெரியுமா ? சொன்னால் என்னை லூஸ் என்பீர்கள் .
வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா செல்லும் கடல் வழியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து , கி. பி. 1500 -ல் எட்டு போர்ச்சுகீசிய பாதிரியார்கள் இந்தியாவை நோக்கிக் கப்பலில் கிளம்பி , ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கோழிக்கோடு வந்து சேர்ந்தார்கள் . கரை இறங்கியதும் அவர்களில் மூன்று பேர் கொல்லப்படவே , பதறிய மீதி ஐந்து பேரும் கடல் வழியாகப் புறப்படுகிறார்கள் . பயணத்தின்போது புயலில் மாட்டி வழி தெரியாமல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டபோது , மேரி மாதாவைப் பிரார்த்தனை செய்கிறார்கள் .
அப்போது ஓர் இடத்தில் வெளிச்சம் தெரியவே , அதை நோக்கிக் கப்பலைச் செலுத்துகிறார்கள் . அந்த இடம் ஒரு கடற்கரை . .அந்தக் கரையில் இருந்து பார்த்தபோதும் வெளிச்சம் சிறிது தூரத்தில் தெரியவே , அதைத் தொடர்ந்து வருகிறார்கள் . ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் வெளிச்சம் மறைகிறது . அந்த இடத்தில் அந்த பாதிரிகள் மேரி மாதாவுக்கு ஒரு கோயிலைக் கட்டுகிறார்கள் . அவர்கள் இறங்கிய இடம் , மெரினா கடற்கரை . மாதாவுக்குக் கோயில் கட்டிய இடம் இன்றைய லஸ் .
1516 -ல் கட்டி முடித்த அந்த ஆலயத்தை ' நோஸா செஞோரா தெ லூஸ் ' என்று போர்ச்சுகீசிய மொழியில் அழைத்தார்கள் . லூஸ் என்றால் வெளிச்சம் . ' எங்களுக்கு வெளிச்சத்தை அளித்த மாதா ' என்று பொருள் . இன்றும் இந்த ஆலயத்தை மக்கள் காட்டுக் கோயில் என்றும் , பிரகாச மாதா ஆலயம் என்றும் அழைக்கிறார்கள் .
மயிலாப்பூர்வாசிகளுக்கு இந்த ஆலயத்தின் மகிமை தெரியுமா என்று தெரியவில்லை .
--- மனம் கொத்திப் பறவை ! என்ற தொடரில் , சாரு நிவேதிதா . ஆனந்தவிகடன் , 28. 07.2010.

Saturday, November 6, 2010

யார் நல்லவர் ?

* எவள் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி .
* எவனிடத்தில் சுகம் உண்டாகிறதோ அவனே மகன் .
* எவனிடத்தில் நம்பிக்கை இருக்குமோ அவனே நண்பன் .
* எவ்விடத்தில் வாழ்வு இருக்குமோ அதுவே தேசம் .
* எவன் குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ அவனே அரசன் .
* எந்தநேரம் இறைவனது திருநாமம் நினைக்கப்பட்டதோ அதுவே நம்முடைய நேரம்
* எது தர்மத்தில் செலவழித்ததோ அதுவே நம்முடையது .
--- கிருபானந்தவாரியார் . தினத்தந்தி , 16. 3. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு .

Friday, November 5, 2010

உலகத் தமிழ் மாநாடுகள் .

முதல் மாநாடு .
ஆண்டு ...............1966
தேதி ....................ஏப்ரல் 16 முதல் 23 வரை
நகரம் .................. கோலாலம்பூர்
நாடு .....................மலேசியா
தலைமை ...........வி.தி. சம்பந்தன் ( மலேசிய அமைச்சர் )
இரண்டாவது மாநாடு.
ஆண்டு ................1968
தேதி .................... ஜனவரி 3 முதல் 10 வரை
நகரம் ..................சென்னை
நாடு ....................இந்தியா
தலைமை ..........அண்ணாதுரை ( தமிழக முதல்வர் )
மூன்றாவது மாநாடு .
ஆண்டு ..............1970
தேதி ..................ஜூலை 15 முதல் 18 வரை
நகரம் ................பாரீஸ்
நாடு ..................பிரான்ஸ்
தலைமை ........பேரா .ஜான் பிலியோசா
நான்காவது மாநாடு .
ஆண்டு ..............1974
தேதி ...................ஜனவரி 3 முதல் 9 வரை
நகரம் .................யாழ்ப்பாணம்
நாடு ...................இலங்கை
தலைமை .........பேரா . எஸ். வித்தியானந்தன்
ஐந்தாவது மாநாடு .
ஆண்டு .............1981
தேதி ..................ஜனவரி 4 முதல் 10 வரை
நகரம் ................மதுரை
நாடு ..................இந்தியா
தலைமை .......எம். ஜி. ஆர் . ( தமிழக முதல்வர் )
ஆறாவது மாநாடு .
ஆண்டு ............1987
தேதி ................நவம்பர் 15 முதல் 19 வரை
நகரம் ..............கோலாலம்பூர்
நாடு ................மலேசியா
தலைமை ......டத்தோ ' ச. சாமிவேலு ( மலேசிய அமைச்சர் )
ஏழாவது மாநாடு.
ஆண்டு ..........1989
தேதி ..............டிசம்பர் 1 முதல் 8 வரை
நகரம் ............போர்ட்லூயி
நாடு ..............மொரீஷியஸ்
தலைமை ....ஆறுமுகம்பரசுராமன் ( மொரிஷியஸ் கல்வி அமைச்சர் )
எட்டாவது மாநாடு .
ஆண்டு .........1995
தேதி .............ஜனவரி 1 முதல் 5 வரை
நகரம் ...........தஞ்சாவூர்
நாடு ..............இந்தியா
தலைமை ....ஜெ. ஜெயலலிதா ( தமிழக முதல்வர் )
ஒன்பதாவது மாநாடு .
ஆண்டு ........1010
தேதி ............ஜூன் 23 முதல் 27 வரை
நகரம் ......... கோயம்புத்தூர்
நாடு ............இந்தியா
தலைமை ..மு. கருணாநிதி ( தமிழக முதல்வர் )
--- தினமலர் , 14. 4. 2010.

Thursday, November 4, 2010

பஞ்சாங்கம் .

பழைய காலத்தில் வாழ்ந்த ஜோதிட வல்லுனர்களின் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பஞ்சாங்கத்தை வாக்கிய பஞ்சாங்கம் என்பார்கள் .
சில ஜோதிடர்கள் வானவெளியை உற்று நோக்கி ஆய்ந்தறிந்து வாக்கிய பஞ்சாக்கத்தில் சில வேறுபாடுகள் இருப்பதை கண்டுகொண்டார்கள் . அவர்கள் தம் பார்வை கொண்டு கணித்த பஞ்சாங்கம் த்ருக்கணிதம் எனப்படும் பஞ்சாங்கமாகும் . த்ருக் என்றால் பார்வை . கணிதம் என்றால் கணிக்கப்பட்டது . இளையாத்தங்குடி பெரியவர் காலத்தில் பஞ்சாங்கம் தொடர்பாக பெரும் சர்ச்சை உருவாயிற்று .
--- தினமலர் . ஏப்ரல் 8 . 2010 .

Wednesday, November 3, 2010

கூடாதவை .

கூடாதவை என்று சொல்லப்படும் சில...
1 . தண்ணீரில் முகம் பார்க்கக் கூடாது .
2 . நெருப்பை வாயால் ஊதக்கூடாது .
3 . வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது .
4 . ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது .
5 . ஈரக்காலுடன் படுக்கக் கூடாது .
6 . தலையணையின் மீது உட்காரக் கூடாது .
7 . உணவு உண்டபின் குளிக்கக் கூடாது .
8 . பூமி அதிர நடக்கக் கூடாது .
-- கே. கஸ்தூரி கதிர்வேல் , காட்பாடி . தினமலர் , ஜூலை 24 . 2010.

Tuesday, November 2, 2010

கணக்குப் புலி !

நண்பர்களிடம் , " நான் ஒரு மேஜிக் கணக்கு சொல்வேன் . கடைசியில் வரும் விடையில் என்ன எண் இருக்கிறதோ , அந்த எண்ணுக்குரிய ஆங்கில எழுத்தில் தொடங்கும் விலங்கை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் .... அது என்ன விலங்கு என்று நான் சட்டென சொல்லிவிடுவேன் !" என்று ' பில்டெப் பேச்சு ' பேசுங்கள் .
பிறகு கீழ்க்கண்டபடி சொல்லுங்கள் ...
1 . எந்த எண்ணை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் .
2 . அந்த எண்ணை 2 -ஆல் பெருக்குங்கள் .
3 . வரும் விடையோடு 20 ஐ கூட்டுங்கள் .
4 . வரும் விடையை 2 -ஆல் வகுத்துக் கொள்ளுங்கள் .
5 . வரும் விடையில் இருந்து , நீங்கள் முதலில் நினைத்த எண்ணை கழித்துக் கொள்ளூங்கள் .
6 . வரும் விடையை 2 -ஆல் பெருக்குங்கள் .
7 . வரும் விடைக்கு உரிய ஆங்கில எழுத்தைக் கண்டுபிடியுங்கள் . அந்த எழுத்தில் துவங்கும் பயங்கரமான காட்டு விலங்கு ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் !
-- இப்படி சொல்லிவிட்டு , " என்ன நினைத்துக் கொண்டீர்களா ?" என்று கேளூங்கள் ! அவர்கள் தலையாட்டுவார்கள் !
உடனே , " நீங்கள் நினைத்தது டைகர்...புலி !" என்று கம்பீரமாகச் சொல்லுங்கள் .
" கரெக்ட் ! எப்படி கண்டுபிடிச்சே ? நீ கணக்குப் புலி ! " என்று நண்பர்கள் அசந்து பாராட்டுவார்கள் !
மேஜிக் சீக்ரெட் : எந்த எண்ணை வைத்து இந்தக் கணக்கை செய்தாலும் விடை 20 -தான் வரும் ! ஆங்கிலத்தில் 20 -வது எழுத்து ' T ' ( S எழுத்துக்குப் பிறகு வருவது ) . பயங்கரமான காட்டு விலங்கை நினைக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதால் எல்லோருமே டைகர் ( புலி ) என்றுதான் நினைப்பார்கள் !
--- தினமலர் , ஜூலை 23 , 2010.

Monday, November 1, 2010

பழைய கணக்கீடு முறை !

நீட்டலளவை : அங்குலம் , சாண் , முழம் , அடி .
12 பெருவிரல் ஒரு சாண் , 2 சாண் ஒரு முழம் , 3 முழம் ஒரு அடி .
கோல் , காதம் , பர்லாங் , மைல் .
முகத்தலளவை : திரவப் பொருள்களுக்கு -- கால் சேர் , அரை சேர் , சேர் .
நிறுத்தலளவை : தானியங்களை அளக்க -- சுண்டு , கால் படி , அரை படி , மரக்கால் , கலம் , மூட்டை .
தங்கம் போன்ற மதிப்பான பொருள்களுக்கு -- குன்றிமணி , மஞ்சாடி , பணவெடை , கழஞ்சு ,
வராகன் .
மற்ற பொருள்களுக்கு -- வீசை , தூலம் , மணங்கு , பாரம் . ,
--- தினமலர் , ஜூலை 23 , 2010.