Monday, January 31, 2011

ஆபத்து ?

" நான்ஸ்டிக் " குக்கரால் ஆபத்து ?
நான்ஸ்டிக் குக்கர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு விதமான ரசாயனப் பொருள் தைராய்டு நோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது . 20 வயதுக்கு மேற்பட்ட 3,966 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் இருந்து சோதிக்கப்பட்டதில் அவர்களின் ஒரு மைக்ரோ லிட்டர் இரத்தத்தில் 5.7 நானோகிராம் அளவில் பெர்புனோரோஆக்டானிக் என்ற அமிலம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது . இதன் மூலம் அவர்களுக்கு தைராய்டு வருவதற்கு இருமடங்கு சாத்தியகூறுகள் உள்ளன என்று தெரிய வந்துள்ளது . இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 163 பெண்கள் மற்றும் 46 ஆண்களுக்கு தைராய்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது . உடலில் உள்ள திசுக்களை பாழ் படுத்துவதில் நான்ஸ்டிக் குக்கர் தயாரிக்கும் ரசாயனப் பொருளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது அதிர்ச்சி தரும் விஷயமாகும் . இந்த வேதிப்பொருள் எளிதாக உடைந்து விடாமல் உடலில் தங்கிவிடுகிறது என்பதுதான் இந்த பிரச்சனைக்கு முதன்மைக் காரணமாகும் .
( ஆதாரம் : Environmental Health Perspectives . Jan ).
--- பாடம் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Sunday, January 30, 2011

கிருபானந்த வாரியார் .

* வேலூர் அருகே , காங்கேயநல்லூரில் 1906 - ம் ஆண்டு , மல்லைய தாஸ் பாகவதர் -- கனகவல்லி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . இவரோடு பிறந்தவர்கள் 11 பேர் . இவர் நான்காவது குழந்தை !
* வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும் வழங்கியவர் அவரது அப்பா . வீட்டிலேயே இலக்கியம் , இலக்கணம் , இசை எல்லாம் கற்றுக்கொடுத்தார் . பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியரிடம் வீணை கற்றார் . எட்டு வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது . 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார் . மறையும் வரை எந்தப் பாட்டும் மறக்கவில்லை !
* வீர சைவ மரபினைச் சேர்ந்த சுவாமிகள் தம் ஐந்தாவது வயதில் கழுத்தில் சிவலிங்கம் அணிந்தார் . 1936 முதல் தினமும் முருகனுக்கு பூஜை செய்த பின்பே உணவு உட்கொள்வது வழக்கம் .
* வாரியார் தனது 19 -வது வயதில் தாய் மாமன் மகள் அமிர்த லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார் . பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்ததால் , குழந்தைகள் இல்லை !
* தியாகராஜ பாகவத்ர் கதாநாயகனாக நடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடிப் புகழ் பெற்ற ' சிவகவி ' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் வாரியாரே !
* வெளியூர் சென்றாலும் கூடவே பூஜைப் பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம் . தொடர்ந்து 57 வருடங்கள் ஒரு நாள்கூட இடைவெளி இன்றி பூஜை செய்தார் !
* எம். ஜி. ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் , ' பொன் மனச்செம்மல் ' என்பது அனைவராலும் சொல்லப்படுவது . அப்பட்டத்தை வழங்கியவர் இவரே !
* ' தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர் ' என்று கம்பர் கூறுகிறார் . ' தாமரையோ செவ்வண்ணம் உடையது . மது அருந்தியவருக்கும் , அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும் . அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும் ? " என்று கண்ணதாசன் கேட்க , ' அதை ' தம் அரைக் கண்ணால் ' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா ? ' என்று விளக்கம் கூறிக் கவியரசரை அசத்தினார் !
* ' எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது . பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும் , பசி அடங்குவதற்கு முன் கையை வாயைவிட்டு எடுத்துக்கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான் ' என்று ஒரு முஸ்லீம் அன்பர் கூறியதை நினைவில் வைத்திருக்கிறேன் ! ' என்பார் !
* ' எம்பெருமான் திருவருளாலே...' என்ற வார்த்தைகள் இல்லாமல் அவர் பேசியதே இல்லை !
* 20 வயதுக்கு மேல் , மேல் சட்டை அணிந்தது இல்லை . ஆட்டோகிராஃப் கேட்பவர்களுக்கு ' இரை தேடுவதோடு இறையையும் தேடு ' என்ற வார்த்தைகளையே பெரும்பாலும் எழுதிக் கையெழுத்து இடுவார் .
* லண்டனில் சொற்பொழிவை முடித்துவிட்டு , சுவாமிகள் திரும்பும்போது ( 07 - 11 - 1993 ) , விமானத்தில் அமர்ந்த நிலையிலேயே மரணம் சம்பவித்தது . ' மரணம் 88 வயதான அவரது பூத உடலுக்குத்தான் . அவருடைய ஆன்மாவுக்கு அல்ல . அவருடைய அழியாப் புகழுக்கு அல்ல . பூமிக்கு மேலே , சொர்க்கத்துக்கு அருகில் வாரியாரின் உயிர் பிரிந்திருப்பது வியப்பூட்டுகிறது ' என்று அன்று எழுதியது விகடன் !
--- ஆனந்தவிகடன் , 21 . 07. 2010.

Saturday, January 29, 2011

தலைவர் ஆகலாம் .

தலைவராக இருக்க என்ன தேவை ?
ஒருவர் எப்படித் திடுதிப்பென்று தலைவராக முடியும் ? அதற்குத் தேவையான பண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது ?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்விதாமாக , " வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான் ? ' ( ' Where Have All The Leaders Gone ? ' ) என்ற சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகியிருக்கிறது . இதை எழுதியிருப்பவர்கள் , பிரபல மேலாண்மை நிபுணர் , உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லீ அயகோக்கா மற்றும் கேதரின் விட்னி .
இதற்கு , இவர்கள். 9 சி தேவை என்கிறார்கள் . ' 9 சி ' என்பது ' சி ' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒன்பது முக்கியமான குணங்களைக் குறிக்கிறது .
1 . Curiosity -- ஆர்வம் .
2 . Creativity -- படைப்புத்திறன் / புதுமைச் சிந்தனை .
3 . Communication -- தகவல் தொடர்பு .
4 . Character -- ஒழுக்கம் .
5 , Courage -- தைரியம் .
6 . Conviction -- உறுதி .
7 . Charisma -- ஈர்ப்பு / கவர்சிகரமான ஆளுமை .
8 . Competence -- திறமை / தகுதி .
9 . Common Sense -- யதார்த்த அறிவு .
எப்பேர்ப்பட்ட தலைவரும் , அந்தரத்தில் கொடிகட்ட முடியாது . எத்தனை சிறப்பான லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்தாலும் , எதார்த்தத்தைப் புரிந்து தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப் பெரிய வெற்றியடைகிறார்கள் .
இந்த 9சியில் உங்க ஸ்கோர் என்ன ? எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைப்படுகிறது ? சட்டென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத் தயாராகிக்கொள்ளூங்கள் , நீங்களும் தலைவராகலாம் .
---என். சொக்கன் . குமுதம் . 21 . 07. 2010.

Friday, January 28, 2011

தூக்கம் வருவதற்கு !

தூக்கத்தை பீன்ஸ் தரும் . மீன் , யோகர்ட் , கீரையும் உதவும் .
எவ்வளவு காசு , பணம் இருந்தும் தூக்கம் மட்டும் வரவில்லை என்று தவிப்பவரா நீங்க ... !
இரவு உணவில் பீன்ஸ் , யோகர்ட் , மீன் , பசலை கீரை சேர்த்துக் கொள்ளுங்க , உடனே , குறட்டை விட்டு கொர்...கொர்....தான் !
இதை டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் . மேற்கண்ட உணவுகளில் டோகோசஹிசோனிக் என்று ஒரு ரசாயனம் இருக்கிறது . அதை சுருக்கமாக டிஎச்ஏ என்கின்றனர் . தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலாடோனின் என்ற ஹார்மோனை இந்த ரசாயனம் அதிகரிக்கச் செய்கிறதாம் . மீனில் இது அதிகமுள்ளது .
பீன்ஸில் விட்டமின் பி அதிகம் . பி6 , பி12 , போலிக் ஆசிட் ஆகியவையும் உள்ளன . இவை தூக்கத்தை முறைபடுத்தும் . செரோடோனின் என்ற ரிலாக்சுக்கு உதவும் அமிலத்தை தருகின்றன . குறைந்த கொழுப்புள்ள யோகர்ட்டில் கால்ஷியம் , மெக்னீஷியம் உள்ளன . அதை தூக்கத்தை தூண்டும் மினரல்களுக்கு மிக அவசியம் .
அடுத்து பசலைக்கீரை . அதில் அதிக இரும்பு சத்து உள்ளது . தூக்கத்தை தடுக்கும் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் என்ற பிரச்னையை இரும்பு சத்து விரட்டி , தூக்கம் கண்களைத் தழுவச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள் .
--- தினகரன் , ஜூலை 20 . 2010 .

Thursday, January 27, 2011

வடிவமைப்பாளர்கள் .

* சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் -- சபர்ணாராய் சவுத்ரி .
* பழைய டெல்லியை வடிவமைத்தவர் -- ஷாஜகான் .
* புது டெல்லியை வடிவமைத்தவர் -- எட்வின் லுட்தயன்ஸ் .
* கல்கத்தா மாநகரை வடிவமைத்தவர் -- ஜாப் சார்நாக் .
* சண்டிகரை வடிவமைத்தவர் -- லேதகார் பூசியர் .
* ஐதராபாத்தை வடிவமைத்தவர் -- முகமது அலி குதுப்ஷா .
--- தினத்தந்தி , 19 .06. 2010. இதழ் உதவி : N.G. கலியபெருமாள் , திருநள்ளாறு

Wednesday, January 26, 2011

சிறப்புப் பெயர்கள் .

* கடல்களின் அரசி -- பசிபிக் பெருங்கடல் .
* அரபிக்கடலின் அரசி -- கொச்சி ( கேரளா ) .
* ஏட்ரியாட்டிக்சின் அரசி -- வெனிஸ் ( இத்தாலி ).
* மலை வாழிடங்களின் அரசி -- ஊட்டி ( தமிழ் நாடு ).
* டெக்கானின் அரசி -- புனே ( மராட்டியம் ).
* பால்டிக் கடலின் பேரரசி -- ஸ்டாக்ஹோம் ( சுவீடன் ).
* கடற்கரைகளின் அரசி -- கோவா .
* சாத்பூரா மலையின் அரசி -- பஞ்சவடி .
* மலைகளின் இளவரசி -- வால்பாறை ( கோவை ).
--- தினத்தந்தி , 19 .06. 2010. இதழ் உதவி : N.G. கலியபெருமாள் , திருநள்ளாறு .

Tuesday, January 25, 2011

தெரியுமா தெரியுமே !*

!* அத்தி , மா , பலா , வாழை , ஆல் , அரசு , வேம்பு , பூவரசு போன்ற மரங்களில் இருக்கும் இலைகளுக்கு மட்டும்தான் இலை என்று பெயர் .* அகத்தி , பசலை , வல்லாரை , முருங்கை போன்றவற்றின் இலகளுக்கு கீரை என்று பெயர் .* அருகு , கோரை முதலியவற்றின் இலைகளுக்கு புல் என்று பெயர் .* உசிலை , சப்பாத்திக்கள்ளி , தாழை இவைகளின் இலைகளுக்கு பெயர் மடல் .* கரும்பு , நாணல் முதலியவற்றின் இலைகளுக்கு தோகை என்று பெயர் .* தென்னை , பனை முதலியவற்றின் இலைகள் , ஓலைகள் என்று சொல்லப்படுகின்றன . ---- தினமலர் , ஜூலை 16 , 2010.

Monday, January 24, 2011

ஆறாவது அறிவு !

ஆறாவது அறிவுக்கு காரணம் சமைத்த உணவுகள்தான் , ஆராய்ச்சியில் தகவல் .
விலங்குகளுக்கு ஐந்தறிவு , மனிதனுக்கு ஆறு அறிவு என கூறுவதுண்டு . இது உண்மையோ பொய்யோ , உணவை சமைத்து சாப்பிடுவதால் , விலங்குகளைவிட மனித மூளை சிறந்து விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .
ஆரம்பத்தில் பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிட்டு வந்த மனிதர்கள் , படிப்படியாக சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர் . 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சமைத்து சாப்பிட தொடங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன . இதனாலேயே விலங்கிலிருந்து மனித மூளை தனித்தன்மை பெற்று விளங்குகின்றன .
அமெரிக்காவின் ரோடு தீவில் உள்ள ஹார்வர்டு அன்ட் பிரவுன் யுனிவர்சிட்டியின் கிறிஸ்டோபர் ஆர்கன் , ஹார்வர்டு யுனிவர்சிட்டியின் சார்லஸ் நன் மற்றும் ரிச்சர்டு ரங்கம் ஆகியோர் மனித மூளை செயல்பாடு குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர் .
பல்வேறு விலங்குகளின் உணவு பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களை திரட்டினர் . அதை மனிதனின் உணவு பழக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தனர் . விலங்குகள் பச்சையாக உணவை உட்கொள்வதால் அதை நன்றாக மென்று சாப்பிட வேண்டி உள்ளது . அதற்காக விழித்திருக்கும் நேரத்தில் 48 சதவீதத்தை செலவிடுகின்றன . இதனால் அதிக ஆற்றல் செலவாவதால் மற்ற விஷயங்களில் கவனம் குறைகிறது .
ஆனால் மனிதர்கள் உணவை சமைத்து சாப்பிடுகின்றனர் . உணவை சமைக்கும்போது , அதன் செல் சுவர்கள் உடைந்து விடுகின்றன . இதனால் உணவை மெல்வதும் , ஜீரணம் ஆவதும் எளிதாகிறது . உணவை மெல்வதற்கு 10 சத்வீத நேரம் மட்டுமே செலவாகிறது . இதனால் உணவை மெல்லுவதற்கான ஆற்றல் மற்றும் நேரம் குறைந்து மற்ற விஷயங்கள் குறித்து யோசிக்க முடிகிறது . சமூக உறவுகளை வளர்க்கமுடிகிறது . விலங்குகளிலிருந்து மனித மூளை தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு இதுவே முக்கிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் .
--- தினகரன் , 19 ஜூலை . 2010.

Sunday, January 23, 2011

16 மேஜிக் !

உங்களை ' மேத்ஸ் மேஜிஷியன் ' ஆக்கும் ஒரு சூப்பர் கணக்கு டெக்னிக் இது... கவனமாகப் படிச்சுட்டு எல்லோரிடமும் இதைச் சொல்லி அசத்துங்க !
சில காகிதத்துண்டுகளில் ' 16 ' என்று எழுதுங்கள் . இதை உங்கள் நண்பர்கள் பார்க்கக்கூடாது . காகித துண்டுகளை மடித்து நண்பர்களிடம் கொடுங்கள் . " நான் சொல்லும் வகையில் ஒரு கணக்கை நீங்கள் செய்ய வேண்டும் . என்னிடம் எந்த எண்ணையும் சொல்ல வேண்டாம் . கணக்கு முடிந்தபிறகு இந்த காகிதத்தைப் பிரித்துப் பாருங்கள் . சூப்பர் ஆச்சர்யம் காத்திருக்கு ! " என்று ' பில்டப் ' கொடுங்கள் .
பிறகு , கீழ்க்கண்ட முறையில் நண்பர்களிடம் கணக்கு செய்ய சொல்லுங்கள்....
1 . எந்த எண்ணை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் .
2 . அந்த எண்ணுடன் 20 ஐ கூட்டுங்கள் .
3 . வரும் எண்ணை 2- ஆல் பெருக்குங்கள் .
4 . வரும் எண்ணில் இருந்து 8 -ஐ கழியுங்கள் .
5 . வரும் எண்ணை 2 -ஆல் வகுத்துக் கொள்ளுங்கள் .
6 . வரும் எண்ணில் இருந்து , நீங்கள் முதலில் நினைத்த எண்ணைக் கழித்துக் கொள்ளுங்கள் .
இப்படி சொல்லிவிட்டு , " இனி நான் தந்த காகித்தத்தைப் பிரித்துப் பாருங்க . நீங்கள் செய்த கணக்கின் விடை இருக்கும் ! " என்று சொல்லுங்கள் . அவர்கள் பேப்பரைப் பார்த்து , ' அடடே ! நீ சூப்பர் மேஜிஷியன் !' என்று அசந்து பாராட்டுவார்கள் .
ஒரு உதாரணம் : நினைத்த எண் 62 . இதோடு 20 கூட்டினால் 82 . இதை 2 -ஆல் பெருக்கினால் 164 . இதிலிருந்து 8 ஐக் கழித்தால் 156 . இதை 2 ஆல் வகுத்தால் 78 . இதில் 62 ஐ இருந்து ( நீங்கள் நினைத்த எண் ) கழித்தால் 16 !
---- தினமலர் , ஜூலை 16 , 2010.

Saturday, January 22, 2011

தண்டனை !

பெற்றோருக்கு தண்டனை !
குழந்தைகளை அடித்தால் பெற்றோருக்கு தண்டனை .
சட்ட மசோதா தயாராகிறது .
குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க அமெரிக்காவில் சட்டம் உள்ளது . அதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவர அரசு பரிசீலனை செய்து வருகிறது . பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் அடிக்கப்படும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர் . இதைத் தடுக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷன் ( என். சி. பி. சி. ஆர் ). சில விதிமுறைகளை வகுத்துள்ளது . மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு உருவாக்கிய குழ்ந்தைகளுக்கு எதிரான தாக்குதல் தடுப்பு மசோதாவும் அமைச்சரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது .
இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளை அடிக்கும் பெற்றோர் , ஆசிரியர் , உறவினர் மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் . குழந்தைகளை முதல் தடவை அடித்தால் ஓர் ஆண்டு சிறை அல்லது ரூ. 5,000 அபராதம் , இரண்டாவது முறையாக அடித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .
குழ்ந்தைகளை பிச்சை எடுக்க விடுபவர்கள் , வேலைக்கு வைத்திருப்பவர்கள் , கடத்துபவர்கள் மீதும் இந்த சட்டம் பாயும் .
--- தினகரன், 17 ஜூலை . 2010.

Friday, January 21, 2011

டிப்ஸ் !

* பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும்போது , பொருள்களின் அடியில் முக்கோண வடிவில் 1 முதல் 7 வரை எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் . 1 என்பது உபயோகித்த பின்னர் தூக்கி எறியப்பட வேண்டியவை . 7 என்பது உயர்தரமானது , நீடித்து உழைக்கக்கூடியது .
* உப்புக்கு நடுவில் எலுமிச்சை பழங்களை அமிழ்த்தி வைத்தால் ஒரு வாரம் வரையிலும் பழங்கள் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும் .
* ஒவ்வொரு மொபைலுக்கும் IMEI ( International Mobile Equipment Identity ) நம்பர் உண்டு . அதனைக் குறித்து வைத்துக் கொண்டால் , மொபைல் காணாமல் போகும்போது அந்த நம்பரைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம் . *#06# என்று டைப் செய்தால் நம்பர் தெரிந்துவிடும் .
* சாப்பிட்டு முடித்ததும் வெந்நீர் குடிக்க வேண்டும் . உணவு செரிமானம் விரைவில் ஆவதுடன் , உடல் எடையும் குறையும்
--- மங்கையர் மலர் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்

Thursday, January 20, 2011

கால்ஷியம் கார்பைடு கற்கள் !

மாங்காய்களை குவியல் குவியலாக வைத்து , அதற்குள் சின்னத் துளையிட்ட பிளாஸ்டிக் கவர்களில் கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள் . கால்சியம் கார்பைடில் ஆர்சனிக் , பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும் . இது நச்சுத் தன்மை உடையது . இதிலிருந்து வெளிவருகிற அசெட்டிலின் வாயு காய்களின் மீது பரவி , பழுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும் . ஆனால் , உண்மையில் உள்ளூக்குள் பழுத்திருக்காது . நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு போதுமானது .
மாம்பழம் மட்டுமல்லாது பப்பாளி , தக்காளி , வாழை என்று பலதையும் கல் போட்டு பழுக்க வைக்கிறார்கள் .எனவே , மாம்பழத்திலோ , பப்பாளியிலோ கரும் புள்ளிகள் இருந்தால் நிச்சயம் வாங்காதீர்கள் . கால்சியம் கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம் பாதிக்கும் . இதனால் முதுமைத் தோற்றம் , இதய நோய் , புற்று நோய் கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . வெல்டிங் செய்ய உபயோகிக்கும் கால்சியம் கார்பைடு , தடை செய்யப்பட்ட கெமிக்கல் .
--- வி. மணி, இராசிபுரம் . மங்கையர் மலர் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்

Wednesday, January 19, 2011

ஞானம் !

' ஐ வான்ட் பீஸ் ; எனக்கு அமைதி வேண்டும் ' என்று ஒருவர் முனிவரிடம் கேட்டார் . முனிவர் , " முதல் சொல் ' ஐ ' யை விடு " என்றார் . " வான்ட் பீஸ் " என்றார் அன்பர் .
" இரண்டாவது சொல் ' வான்ட் டை விடு " என்றார் முனிவர் . " மிஞ்சியிருப்பது ' பீஸ் ' மட்டுமே " என்றார் அன்பர் .
" ' ஐ ' யையும் ' வான்ட் ' டையும் விட்டால் பீஸ் தானாகக் கிடைக்கும் . அதுவே ஞானம்" என்றார் முனிவர் .
( நம்புங்க... எனக்குக் கூட இப்படித்தான் ஞானம் வந்திச்சு ஹி...ஹி ).
--- எஸ். சௌம்யா , சென்னை , . மங்கையர் மலர் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Tuesday, January 18, 2011

பாஞ்சாலி ஏன் சிரித்தாள் ?

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே , தட்சிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் , காத்திருந்தார் . அவர் மரணமடைவதற்கு முன்பு , அவரிடமிருந்து நீதி , நேர்மை , அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார் .
பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி " தாங்கள் எங்களுக்கு நீதி , நேர்மை , அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர் , " நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? " என்று கடுமையாகக் கேட்டார் .
" துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது , கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் ? தர்மம் தெரிந்த பீஷ்மர் , அந்தச் சபையில் அமர்ந்து , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர , துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா ? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது ? " என்று சொல்ல , பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள் . பீஷ்மர் பேசினார் . " பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை . அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும் . அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும் . துரியோதனன் , அன்னமிடுவதில் உயர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான் . ஆனால் , அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல . சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு , அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான் . உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க , வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இதற்கு சல்லியன் ஓர் உதாரணம் .
" ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் , மற்றவர்களுக்கு அன்னமிட்டால் , அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும் . நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது . அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் ."
" ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது . அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது . எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன் . கேளுங்கள் " என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார் .
அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள் , பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள் .
--- மாயா கிருஷ்ணமூர்த்தி, கோயமுத்தூர் . மங்கையர் மலர் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Monday, January 17, 2011

சர்க்கரை நோயாளி !

சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு.
3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும். இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு .
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டுக்கொள்ள தேவையிருக்காது . ஒரு முறை போட்டுக் கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் தினசரி கஷ்டத்தில் இருந்து இதன்மூலம் விடுதலை கிடைக்கும் . ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் , குளூக்கோஸ் அதிகரித்து சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர் . இன்சுலின் அளவை பராமரிக்க தினமும் ஊசி போட்டுக் கொள்வது வழக்கம் .
இதற்கு விடிவு வராதா என ஏங்குவோர் அதிகம் . அவர்களுக்கு விடுதலை அளிக்க புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. இது பற்றி தேசிய நோய்தடுப்பு நிறுவன ஆராய்ச்சி குழு தலைவர் அவ்தேஷ் சுரோலியா கூறியதாவது :
எஸ ஐ ஏ -- 2 ( சுப்ராமோல்க்யூலர் இன்சுலின் அசெம்ப்ளி -- 2 ) என்ற ரசாயனத்தை ஹார்மோன் வடிவில் எலிகளுக்கு ஊசியாக போட்டு பரிசோதனை நடத்தினோம் . அதற்கு நல்ல பலன் கிடைத்தது . எஸ் ஐஏ - 2 ஊசி போட்ட எலிகளின் உடலில் இன்சுலின் அளவு பல மாதங்களுக்கு மாறாமல் நீடித்தது . இது மனிதர்களுக்கும் பொருந்தும் . இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதற்கு முன் , எஸ் ஐ ஏ - 2 ஹார்மோன் ஊசியை சர்க்கரை நோயாளி போட்டுக் கொள்ள வேண்டும் .
மருந்துக்கு முன்னதாக உடலில் செல்லும் இந்த ஹார்மோன் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு அதிகரிக்காமல் ஒரு மாதம்வரை இருக்கும் . அதிகபட்சமாக 120 நாட்கள் ( 4 மாதங்கள் ) வரை சர்க்கரை நோயாளிகள் தினசரி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதில் இருந்து இது விடுதலை அளிக்கும் .
இப்போது தினசரி அல்லது 2 நாளுக்கு ஒருமுறை இன்சுலின் ஊசி போட்டாலும் , சாப்பிட்ட பிறகு இன்சுலின் அளவு குறைந்து மயக்கம் உட்பட பல பாதிப்புகளை நோயாளிகள் சந்திக்கின்றனர் . இந்த வேதனையை எஸ் ஐஏ - 2 மாற்றும் என்றார் .
--- தினகரன் , 14 ஜூலை . 2010.

Sunday, January 16, 2011

தெரிந்து கொள்வோம் !

* பெரூஸா என்ற செடியில் இருந்து எடுக்கப்படும் பால் , பதப்படுத்தப்பட்டு பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது .
* லாக்சர் எனப்படும் பூச்சிகளின் உடலில் இருந்து வெளிப்படும் பிசின்தான் அரக்கு எனப்படுகிறது .
* செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1640ல் கட்டப்பட்டது .
* இந்தியாவின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு 1911 ம் ஆண்டு மாற்றப்பட்டது .
* செல்போனை உருவாக்கியவர் -- மார்டின் கூப்பர் .
* ஈபிள் டவரை உருவாக்கியவர் -- அலெக்சாண்டர் ஈபிள் .
* ஆக்சிஜனை கண்டுபிடித்தவர் -- ஜோசப் ப்ரீஸ்ட்லி .
* முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951 -- 56 ஆம் ஆண்டுகளுக்குக்குரியது .
* பழங்கால இந்தியாவின் சிறந்த வானவியல் அறிஞர் -- ஆரியபட்டர் .
--- .தினத்தந்தி , இதழ் உதவி : N. G. கலியபெருமாள் . திருநள்ளாறு .

Saturday, January 15, 2011

ஜூஸ் !

பாகற்காய் ஜூஸ் !
டாக்டர்கள் எச்சரிக்கை . பாகற்காய் ஜூஸ் உயிருக்கு ஆபத்து .
டயபடீஸ் நோயாளிகள் பலர் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதற்காக பாகற்காய் , சுரைக்காய் போன்றவற்றை அரைத்து ஜூஸ் செய்து குடிக்கின்றனர் . அதுபோல் டெல்லியை சேர்ந்த சுசில் குமார் சக்சேனா ( 59 ) குடித்து வந்தார் . அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி அவர் . சிலதினங்கள் முன் காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்த சிறிது நேரத்தில் வயிறு பாதிக்கப்பட்டு பலியானார் . அதே ஜூஸ் குடித்த அவரது மனைவி வயிறு புண்ணாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார் . இதையடுத்து , மூலிகை காய்கறி பானங்களை சொந்தமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர் . " வெள்ளரி இனத்தை சேர்ந்த சுரைக்காய் , பாகற்காய் , புடலை போன்றவற்றில் நஞ்சு பகுதி உள்ளது . அதை அகற்றாமல் பயன்படுத்தக்கூடாது . பச்சையாக இந்த காய்கறிகளை ஜூஸ் போட்டு குடிப்பது உயிருக்கே ஆபத்து " என்று டாக்டர் சேத் எச்சரித்தார் .
ஜூஸ் மட்டுமின்றி சமைப்பதற்கு முன்பும் இதுபோன்ற காய்களின் நடுவில் உள்ள நஞ்சு பகுதியை அகற்ற வேண்டியது அவசியம் . கசப்பு தன்மைக்காக அவற்றை டயபாடீஸ் நோயாளிகள் பயன்படுத்துவது உடல்நலனை பாதிக்கும் என்றார் அவர் .
--- தினகரன் , 13 ஜூலை . 2010.

Friday, January 14, 2011

ஆண் மாத்திரை .

ஆஹா.... ஆண் மாத்திரை .
பெண்களின் வயிற்றில் நிஜமாகவே பாலை வார்க்கும் தகவல்தான் இது . குறிப்பாக இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று திட்டமிட்டு வாழ்க்கை நடத்தி வரும் பெண்களுக்கு கர்ப்பத்தைத் தவிர்க்க கருத்தடை சாதனங்கள் இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் நம்பிக்கை கொள்வது அதற்குரிய மாத்திரைகள் மீதுதான் .ஆனாலும் இன்று மாத்திரை எடுத்துக் கொண்டோமா என்ற திடீர் சந்தேகங்கள் வந்து அவர்களை படுத்தி எடுத்துவிடும் . இதற்கு தீர்வாக இனி மாத்திரைகளை நீங்கள் விழுங்க வேண்டாம் . உங்கள் கணவர் விழுங்கினால் போதும் என்று பெண்களின் கரகோஷத்தை வாங்கும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் .
இதற்கு முன் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் இருந்தாலும் அவைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது . ஆனால் , இந்த மாத்திரையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொண்டால் போதும் .
' இந்த மாத்திரையில் உள்ள வேதி பொருட்கள் விந்தணுக்கள் மீது செயல்படும் . விந்தணு வீரியமாக இருப்பதற்குக் காரணம் அதில் உள்ள முக்கிய புரதம் . மாத்திரையில் உள்ள வேதிப் பொருள் இந்த புரதத்தை நீக்கிவிடும் . இதனால் விந்தணு வீரியம்ற்றுப் போகும் . குழந்தை உருவாகும் வாய்ப்பு துளி கூட கிடையாது என்கிறார்கள் . விரைவில் விற்பனை சந்தைக்கு வரப் போகிறதாம் இந்த ஆண் மாத்திரை -- பெயரே அதுதான் .
--- தினமலர், ஜூலை 11 . 2010.

Thursday, January 13, 2011

குட்டி கிரகங்களுக்கு பெயர் !

குட்டி கிரகங்களுக்கு கோல்கத்தா மாணவர்களின் பெயர் .
அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில் விருது பெற்ற கோல்கத்தாவைச் சேர்ந்த , பிளஸ் 2 படித்த மாணவர்கள் அனிஷ் முகர்ஜி , தேபார்க்யா சர்கார். இவர்களின் பெயர்களை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குட்டி கிரகங்களுக்கு சூட்டியுள்ளது அமெரிக்காவின் பிரபல இஞ்சினியரிங் கல்வி நிறுவனமான மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ( எம். ஐ. டி.,) .
அவர்கள் இருவரும் சேர்ந்து, கோல்மால் செய்ய முடியாத பாட்டில் மூடி உருவாக்கி , கண்காட்சியில் வைத்தனர் அவர்களுடைய படைப்புக்கு கண்காட்சியில் விருது கிடைத்தது
' சூரியனை 4 லட்சம் குட்டி கிரகங்களும் , கோள்களும் சுற்றி வருகின்றன. இவற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் கோள்களுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது . இந்த ஆண்டு ஜனவரி 4 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஏடி52 என்ற குட்டி கிரகத்துக்கு முகர்ஜி என்றும் , ஏடி53 என்ற குட்டி கிரகத்துக்கு சர்கார் என்றும் பெயரிடப்பட்டுள்ள்து .' என லிங்கன் ஆராய்ச்சி நிலயம் தெரிவித்துள்ளது .
--- தினமலர், 11. 07. 2010.

Wednesday, January 12, 2011

காந்தி -- பாரதி !

காந்தியைத் திட்டினாரா பாரதி ?
ஒரு தடவை சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தாராம் காந்தி . மீட்டிங்கில் பேசிய அவரது பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது . அதைக் கேள்விப்பட்ட பாரதி , காந்திஜிக்கு உடனே ஒரு கடிதம் எழுதினார் . உங்களூடைய மேடைப்பேச்சு உங்கள் தாய்மொழியான குஜராத்தியில் அமைந்திருக்கலாம் . இல்லையென்றால் இந்தியாவின் ஏதாவது ஒரு மோழியில் அமைந்திருக்கலாம் . ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு நாம் யாரை இந்த நாட்டைவிட்டுத் துரத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ அவர்களுடைய ( ஆங்கில ) மொழியிலேயே பேசினீர்களே ! என்று கடிதத்தில் வருத்தப்பட்டிருக்கிறார் . இதைப் படித்த காந்தி சொன்னார் . " என் தவறை நான் ஒத்துக்கொள்கிறேன் . ஆனால் உங்களுடைய கடிதமும் ஆங்கிலத்தில்தானே இருக்கிறது .".
பாரதியும் விட்டுவிடவில்லை , ' தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி . அந்த மொழியை என் தேசத்தந்தயைத் திட்டுவதற்கு ஒரு போதும் பயன்படுத்தமாட்டேன் " என்றாராம் !
---. குமுதம் சிநேகிதி , ஜூலை 16 - 31 , 2010. இதழ் உதவி : N .கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

Tuesday, January 11, 2011

கட்டியவர்கள் .

* தாஜ்மஹால் ....... ஷாஜஹான் .
* சார்மினார்.......... முகமது ஷாஹி .
* பொற்கொயில் ..... குருஅமர்தாசர் .
* சீனப்பெருஞ்சுவர் ...... ஷிஹவாங்டி .
* தஞ்சை கோயில் ......... முதலாம் ராஜராஜ சோழன் .
* திருப்பதி கோயில் ..... கருணாகரத் தொண்டைமான் .
--- தினத்தந்தி , 29. 05.2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் . திருநள்ளாறு .

Monday, January 10, 2011

கறுக்காமல் இருக்க...

வெள்ளி கறுக்காமல் இருக்க...
* சாக்பீஸ் போடலாம் !
வெள்ளி நகைகள் வைக்கும் பெட்டியில் ஒரு சாக்பீஸ் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காமல் இருக்கும் .
* கற்பூரக் கட்டிகள் !
வெள்ளிப்பாத்திரங்களோடு கூடவே சிறு கற்பூரக்கட்டிகளைப் போட்டு வைத்தால் கறுக்காது .
* கொதிநீரில் போடுங்கள் ...
கொதிக்கும் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் ஆப்பசோடா , அலுமினிய ஃபாயில் பேப்பர்களைப் போடவும் . இதில் கறுத்த வெள்ளிப்பாத்திரங்களைப் போட்டு , 5 நிமிடங்களுக்குப் பின் எடுத்தால் பாத்திரம் பளபளவென இருக்கும் .
* புதுசு போல் இருக்க்...
வெள்ளிப் பாத்திரங்களை காற்றுப்படாமல் பிளாஸ்டிக் கவர்களுக்குள் போட்டு கட்டி வைத்தால் புதிது போல் இருக்கும் .
* காணாமலே போச் !...
உருளைத் தோல் , விபூதி கொண்டு வெள்ளி சாமான்களை தேய்த்தாலும் கறுப்பு காணாமல் போகும் !
* மர பீரோவும் ஓ. கே !
வெள்ளிப்பாத்திரங்களை டிஷ்யூ பேப்பரில் சுற்றி மரப் பெட்டியில் வைத்தாலும் கறுத்துப் போகாது .
--- ர. கிருஷ்ணவேணி , சென்னை - 95. குமுதம் சிநேகிதி , ஜூலை 16 - 31 , 2010. இதழ் உதவி : N .கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

Sunday, January 9, 2011

இலக்கியம் அறிவோம் .

* லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் நிஜாமி .
* ரவீந்திரநாத் தகூரின் புனைப்பெயர் பானுசின்ஹா .
* இத்தாலிய உரைநடையின் தந்தை ' கியோவானி பொகச்சியோ .
* தமிழ்மொழியில் முதல் நாடகம் மனோன்மணியம் .
* சமஸ்கிருதம் என்பதன் பொருள் தூயமொழி .
* ' டாகுமெண்டரி ' என்பது பிரெஞ்சு மொழி வார்த்தையாகும் .
* தமிழில் வெளிவந்த முதல்வார இதழ் ' தினவர்த்தினி ' .
* பொது நூலகங்களை முதலில் ஆரம்பித்தவர் ஜூலியஸ் சீசர் .
* பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா முதன்முதலில் 1768 -ம் ஆண்டில் வெளியானது .
* பலமொழி அறிந்தவர்கள் ' பாலிகிளாட் ' என்று அழைக்கப்பட்டர்கள் .
* நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவியவர் பாண்டிதுரைத் தேவர் .
--- தினத்தந்தி , 29. 05.2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் . திருநள்ளாறு .

Saturday, January 8, 2011

' MY BOSS '

ஒரு காரின் பின் கண்ணாடியில் , ' MY BOSS IS A JEWISH CARPENTER ' என எழுதியிருந்ததைப் பார்த்தேன் . அதன் அர்த்தம் என்ன என்று சொல்லுங்களேன் ?
தச்சுக் ( Carpenter ) குடும்பத்தைச் சேர்ந்த ' இறைவனின் மகன் ' ( Son of God ) யார் ? ஜீசஸ் என்று அர்த்தம் !
' நடைப்பயிற்சி '
' நடைப்பயிற்சி அவ்வளவு அவசியமானதா ? '
" காந்தி சொன்ன வாக்கியம்தான் உங்கள் கேள்விக்குப் பதில்...
' உனது ஆரோக்கியம் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது . நீதான் தினமும் நடந்து சென்று அதனை வாங்கி வர வேண்டும் ' !"
ஸ்ரீரங்கம் ...
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் நாயக்க மன்னர்களால் தொடங்கப்பட்டு , மொட்டைக் கோபுரமாகவே நின்றிருந்ததை உலகமே வியக்கும் ராஜகோபுரமாக மாற்றிய பெருமைக்குறியவர் , ஸ்ரீமத் அகோபிலமடம் 44 -வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் . 25. 03. 1987 அன்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது .
--- ஆனந்தவிகடன் , 14. 07. 2010.

Friday, January 7, 2011

ஜோக் கார்னர் !

* " தலைவா , கூப்பிட்டீங்களா ? "
" உன்னை மனுஷன் கூப்பிடுவானா ? "
" அதனாலதான் கேட்டேன் ! "
* " ஏண்டி இவ்வளவு லூசா ஜாக்கெட் போடுறே ! "
" அது எனக்குத் தெரியும் , உன் வேலையைப் பாருடி ! "
" ' அது' வும் எனக்குத் தெரியுதடி , அதான் சொன்னேன் . "
* " ஆபரேஷன் என்ன ஆச்சு ? "
" மயக்கம் தெளிஞ்ச உடனேதான் தெரியும் ."
" பேஷண்டுக்கு எப்ப மயக்கம் தெளியும் ? "
" மயக்கம் தெளியணுமுன்னு சொன்னது பாதி ஆபரேஷன்ல ரத்தத்தைப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்த
டாக்டருக்கு ! ".
* " 1...11...111... இந்த மூணுக்கும் என்ன வித்தியாசம் ? "
" தெரியலையே... ! "
" 1 தனியா இருக்கு
11 ஜோடியா இருக்கு
111 குடும்பத்தோட இருக்கு ! "
* " மோகத்தை அடக்குவது எப்படி ? "
" அது முடியாமல்தானே சாமியார் ஆனேன் ! "
* " கடைசிச் சொட்டு இருக்கும்வரை விட மாட்டேன்னு தலைவர் பேசறாரே... உடம்புல இருக்குற ரத்தத்தைத்தானே
சொல்றாரு ?"
" நீ வேறப்பா ! பாட்டில்ல இருக்கிற சரக்கைச் சொல்றாரு ! ".
* " அந்த டாக்டர் பேரு என்ன ? "
" ' டக்கு'னு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது....' சா'வுல ஆரம்பிக்குமே..."
* போலீஸ் : " ஏம்ப்பா....இது ' ஒன் வே'ங்கிறதை நீ கவனிக்கலையா ? "
நபர் : " கவனிச்சேன்....ஆனா , நீங்க இருக்கிறதைத்தான் கவனிக்கல சார் ! "

Thursday, January 6, 2011

ஒரு கதை , ஒரு கணக்கு !

ஒரு ஊர்ல 3 நண்பர்கள் , ஒன்றாக சேர்ந்து ஹோட்டலுக்கு சாப்பிடப் போகிறார்கள் . ஒரு சாப்பாடு விலை ரூ. 5 . ( கதையில் மட்டும்தான் இந்த ரேட் ) . 3 பேரும் சாப்பிட்டு முடிந்ததும் பில் வருகிறது . மொத்தம் 15 ரூபாய் . ஆளுக்கு 5 ரூபாய் எடுத்து வைக்கிறார்கள் . சர்வர் பணத்தை எடுத்துக் கொண்டு போய் கல்லாவில் தருகிறார் . ' அட , இவங்க நம்ம ஓட்டலுக்கு ரெகுலரா வர்றவங்க ' என்று சொல்லி ஓட்டல் அதிபர் 5 ரூபாய் தள்ளுபடி செய்துவிடுகிறார் .
சர்வர் வந்து 5 ரூபாயை திருப்பி தந்ததும் சந்தோஷப்பட்ட நண்பர்கள் , 2 ரூபாயை சர்வருக்கு டிப்ஸ் தந்து விடுகிறார்கள் . மீதி 3 ரூபாயை ஆளுக்கு ஒரு ரூபாயாக பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள் .
இப்ப , கணக்கு போட்டு பார்க்கிறார்கள் . ஆளுக்கு 5 ரூபாய் தந்தோம் . ஒரு ரூபாய் திருப்பி லிடைத்தது . ஆக , ஒவ்வொருவருக்கும் செலவு ரூ. 4 . மூவருக்கும் சேர்த்து மொத்தம் 12 ரூபாய் . சர்வருக்கு டிப்ஸ் ரூ. 2 . இரண்டையும் கூட்டினால் ( 12 + 2 ) ரூ . 14 வருகிறது . மூவரும் சேர்ந்து போட்ட மொத்தப் பணம் 15 ல் மீதி ஒரு ரூபாய் எங்கே ? என்று குழம்புகிறார்கள் .
உங்களில் யாராவது இந்த குழப்பத்தை தீர்த்துவைத்து , விவரமாக விளக்குங்களேன் .
--- தினமலர் இணைப்பு , ஜூலை 31 , 2010 .
விடை :
* 3 பேரும் சாப்பாட்டுக்கு கொடுத்தது ரூ. 10 , டிப்ஸ் கொடுத்தது ரூ. 2 , மொத்தச் செலவு ரூ, 12 . மீதி கிடைத்தது ரூ. 3 , ஆக மொத்தம் ரூ. 15 .
* முதல் நபர் செலவு ( சாப்பாடு ரூ. 3.30, டிப்ஸ் 70 காசு ) ஆக ரூ. 4 .
இரண்டாவது நபர் செலவு ( சாப்பாடு ரூ. 3.35 , டிப்ஸ் 65 காசு ) ஆக ரூ. 4 .
மூன்றாவது நபர் செலவு ( சாப்பாடு ரூ. 3.35 , டிப்ஸ் 65 காசு ) ஆக ரூ. 4 .
மூன்று பேருக்கும் திரும்பி வந்த தொகை ( 1 + 1 + 1 ) ரூ. 3 .
செலவையும் மீதியையும் கூட்டினால் ரூ. 15 .
இந்த 2 வகையிலும் விடை சொல்லலாம் . ஆனால், செலவையும் வரவையும் குழப்பி கணக்கு தரப்பட்டதால் தவறான
விடை வந்தது .
--- இரண்டு வகையிலும் சரியான விளக்கம் தந்து பரிசு பெறுபவர் எஸ் . திலகவதி , நாகப்பட்டினம் ரிசல்ட் ,
, தினமலர் ஆகஸ்ட் 14 . 2010 .

Wednesday, January 5, 2011

க்ளூ !

* " கருவில் இருக்கும் குழந்தையின் ரத்த ஓட்டம் விரல் நுனிகளுக்குச் சென்று , அதற்கு மேலே செல்ல முடியாமல் சுழனறு திரும்புவதால் ரேகைகள் உருவாகின்றன என்கிறார்கள் .உலகில் ஒருவரின் விரல் ரேகை இன்னொருவரைப் போல் இருக்காது . அது இரட்டைக் குழந்தையாக இருந்தாலும் சரி ! நமது தோற்றம் நாளுக்கு நாள் மாறக்கூடியது . ஆனால் , எத்தனை வருடங்கள் ஆனாலும் கைரேகை கொஞ்சம்கூட மாறுவது இல்லை . எனவே , அதை ' கடவுள் கொடுத்த முத்திரை ' என்று விரல் ரேகை நிபுணர்கள் வர்ணிக்கிறார்கள் .
* விரல் நுனிகளில் நுண்ணிய சுரப்பிகள் அதிகம் . அவை வியர்வையைச் சுரந்துகொண்டே இருக்கின்றன . இந்த வியர்வைதான் நாம் ஒரு பொருளைத் தொடும்போது அதன் மீது ரேகையாகப் பதிகிறது .
* டைட்டானியம் டை ஆக்ஸைடு , ஜிங்க் ஆக்ஸைடு போன்ற பல்வேறு ரசாயனப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ப கலந்து , குறிப்பிட்ட பொருளின்மீது தூவினால் , அதில் படிந்திருக்கும் ரேகை ( வியர்வை ஈரம் ) ஒட்டிக் கொண்டுவிடும் . பிறகு , ஒரு லென்ஸ் வைத்துப் பார்த்தால் , ரேகை அமைப்பு துல்லியமாகத் தெரியும் .
* நியூட்டனின் முன்பு விழுந்த ஆப்பிள் அவருக்குக் கிடைத்த க்ளூ ! அதை உலகம் முழுவதற்கும் பொருத்திப் பார்த்தது அவரது ஆய்வு மனப்பான்மை . இதன் விளைவே இன்று ரீஃபில் முதல் ராக்கெட் வரை சாத்தியப்படுத்துகிறது நியூட்டனின் விதிகள் . இதுபோலவே குளிக்கும்போது கிடைத்த க்ளூவை வைத்து ஆர்க்மிடிஸ் நீரைக்கொண்டு தங்கத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டு அறிந்தார் .
* 18 - ம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜெனிட்டா என்ற சிறுமி தன் பெயரை மரத்தின் வேரில் கத்தியைக்கொண்டு செதுக்க முயற்சி செய்கிறாள் . அதனைக் கண்ட ஜெனிட்டாவின் அப்பா அவரே செதுக்கித்தருகிறார் . வெட்டப்பட்ட தன் பெயர் பனியால் மூடப்படுவது ஜெனிட்டாவுக்குப் பிடிக்கவில்லை . எனவே , பைபிளை எழுத அவள் அப்பா தயாரித்து வைத்திருந்த காகிதம் ஒன்றை எடுத்து மரத்தின் அந்தப் பகுதியை மூடுகிறாள் . அதன் மீது பனி படுகிறது . அடுத்த நாள் அங்கே வந்த ஜெனியின் அப்பா மரத்தில் செதுக்கிய பெயர் , தாளில் பதிந்திருப்பதைக் கண்டு , அதை பத்திரப்படுத்துகிறார் . பின்னாளில் அந்தத் தாளைக் கண்ட கூட்டன்பர்க் அச்சு முரையைக் கண்டுபிடித்தார் !
* காட்டுக்குள் மனித நடமாட்டம் இருந்தால் , ஆள் காட்டிக் குருவி என்கிற ஒரு குருவி கூவி மற்ற விலங்குகள் , பறவைகளை எச்சரிக்கும் . தேடுதல் வேட்டைக்காக போலீஸ் நுழையும்போதெல்லாம் இதைத் துப்பாக வைத்துக் கண்டுபிடித்து இடத்தைக் காலி செய்துகொண்டு இருந்தான் வீரப்பன் !
* இயற்கைப் பேரழிவு ஏற்படுவதற்கு முன் விலங்குகள் மனிதர்களுக்குத் துப்புக் கொடுக்கும் . நாய்கள் சம்பந்தமே இல்லாமல் கூட்டமாகக் குரைக்கும் . பறவைகள் ஒரு குழுவாக ,இரைச்சலோடு பறந்து செல்லும் . துறவி நண்டு என்கிற ஒருவகை நண்டு பின்பக்கமாக நடக்கும் . இதெல்லாம் நடந்தால் பூகம்பமோ , சுனாமியோ வரப் போகிறது என்று அர்த்தம் .மனிதனுக்குத் தெரியாத இந்த க்ளூக்கள் உயிரினங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்பது பிரபஞ்ச ரகசியம் !
--- க்ளூ விகடன் இதழுடன் இணைப்பு . 16 . 06. 2010. .

Tuesday, January 4, 2011

நவக்கிரகங்களின் தேவியர்

புதன் -- இளாதேவி .
சுக்கிரன் -- சுகீர்த்தி .
சந்திரன் -- ரோகிணி .
குரு -- தாராதேவி .
சூரியன் -- உஷா , பிரத்யுஷா .
செவ்வாய் -- சக்திதேவி .
கேது -- சித்ரலேகா .
சனி -- நீலா .
ராகு -- சிம்ஹி .
--- தினமலர் , இணைப்பு . ஆகஸ்ட் 1 , 2010.

Monday, January 3, 2011

செல்போன் !

* 1973 -ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர் . ' மேரி கிறிஸ்துமஸ் ' என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி . அனுப்பியவர் ,நீல்டேப்வொர்த் ( டிசம்பர் 1992 )
* செல்போன்களை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்தால் உயிரணுக்களில் பாதிப்பை உண்டாக்கி ஆண்களை மலடாக்கும் என்பது உண்மையா ?இதில் உண்மை இல்லாமல் இல்லை . பொதுவாகவே , உடல் வெப்ப நிலையைக் காட்டிலும் குறைவான வெப்ப நிலையில்தான் உயிரணுக்கள் உற்பத்தியாகும் . ஆன் செய்யப்பட்ட
செல்போன்களில் இருந்து எப்போதும் கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் . அந்த நிலையில் போன்களை பேன்ட் பாக்கெட்டில் நீண்ட நேரம் வைத்திருந்தால் நிச்சயமாக உயிரணுக்கள் பாதிக்கக்கூடும் !
* எப்போது யாருக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று எப்படிக் கணிப்பது ? அதற்குக் கை கொடுக்க இருக்கிறது மினியேச்சர் ஈ. சி. ஜி. மிஷின் பொருத்தப்பட்ட செல்போன் . உங்கள் சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் இந்த மொபைல் , உங்கள் இதயத் துடிப்புகளை சென்சார் செய்தபடியே இருக்கும் . ஹார்ட் அட்டாக் சமயம் அலர்ட் ஆகி தானாகவே மோபைலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் டாக்டருக்கு தகவல் அனுப்பிவிடும் , இந்த மொபைல் . உடனே , மருத்துவர்கள் நோயாளியையோ , உறவினர்களையோ தொடர்பு கொண்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடியும் . அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் அட்வான்ஸ் கம்யூட்டிங் டெக்னாலஜி டைரக்டர் ஆலன் சி செஞ் , ' அவ்வளவு பெரிய ஈ. சி. ஜி. இயந்திரத்தைக் கையடக்கத்தில் கொண்டு வந்ததுதான் உண்மையான சாதனை ' என்கிறார் . ஆராய்ச்சி அளவில் இருக்கும் இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால் , இந்தத் தொழில் நுட்பத்தையும் சாஃட்வேரையும் இலவசமாக அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது இந்தத் திட்டத்துக்கு நிதிஉதவி அளித்து வரும் மைக்ரோசாஃட்ப்ட் நிறுவனம் !
---செல்போன் விகடன் இணைப்பு , 26 .05. 2010.

Sunday, January 2, 2011

P 911 .

SHORT MESSAGING SERVICE .
குறுந்தகவல் என்பதுதான் எஸ். எம். எஸ்ஸின் தத்துவமே . ஆனால் , அதையும் அடித்து மடக்கி நுண்தகவல் ஆக்கிவிட்டார்கள் இன்றைய இளஞ்ர்கள் . கல்லூரி மாணவர்களின்
சுருக்கெழுத்து எஸ். எம். எஸ் உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள்....! ?.
B4 -- before
B4N -- bye for now
BFF -- best friends forever
BTW -- by the Way
CIAO , CYA -- See you later
FYI -- for your info
G2G -- got to go
IDC -- I don' t care
KTKS -- Okay , thanks .
L8R -- later
EOL -- laughing out loud , lots of love
OMG -- oh my God
OTW -- on the way
P911 -- Parents alert ( அப்பா -- அம்மா பக்கத்துலடா லூஸூ ! )
ROFL -- rolling on floor laughing
TIA -- thanks in advance
TTYL -- talk to you later .
--- அ . ஐஸ்வர்யா , செல்போன் விகடன் இணைப்பு , 26 .05. 2010.

பிராண சக்தி பெருக...

நம் உடம்பின் இயக்கத்துக்குப் பிராண சக்தியே மூலகாரணமாக விளங்குகிறது . நம் உடம்பில் பிராண சக்தியின் இருப்பு குறைந்தால் சோர்வும், களைப்பும், நோய்களும் உண்டாகும் . எண்ணுதல், பார்த்தல், பேசுதல், சாப்பிடுதல், வேலை செய்தல் முதலிய பல பணிகளால் பிராண சக்தி செலவாகிறது .
மவுனம் : ஒரு நாளைக்கு மவுனமாக இருப்பதன் மூலம் பிராண சக்தியைச் சேமிக்கலாம் . மவுனம் 3 வகைப்படும் . அவை வாய் மவுனம், உடல் மவுனம், மனோ மவுனம் என்பன . பேசாமல் இருப்பது வாய் மவுனம் . சைகைகள் கூட இல்லாமல் இருப்பது உடல் மவுனம் . மனதில் எதுவும் எண்ணாமல் இருப்பது மனோ மவுனம் ஆகும் .
மவுன உண்ணா நோன்பு : பேசாவிரதமும், உண்ணாவிரதமும் சேர்ந்து மேற்கொள்வது மவுன உண்ணா நோன்பு ஆகும் . இதனால் பிராண சக்தியை சேமித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் .
முத்திரைகளால் மூச்சுப்பயிற்சி : கைவிரல்களால் எளிய முத்திரைகளுடன் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் பிராண சக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம் . 2 கைகளிலும் மோதிர விரலின் 3ம் அங்குலாஸ்தியை கட்டை விரலால் தொட்டுக்கொண்டு செய்வது விஷம் நீக்கு முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் உடலின் கழிவுகள் வெளியேறும் .
கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல், சுண்டு விரல் நுனியைச் சேர்த்து வைத்துக் கொண்டு செய்வது பிராண முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் மூச்சுப்பயிற்சி செய்தால் உடலில் பிராண சக்தி பெருகும் .
கைகளை கோர்த்துக் கொண்டு வலதுகட்டை விரலை மேலே நீக்கிவைத்துக் கொள்வது லிங்க முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் கைகளை மார்புக்கு நேரே வைத்துக்கொண்டு ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் மார்புச்சளி நீங்கும் . உடல் எடை குறையும் . உடல் சூடு அதிகமாகும் . நோய் எதிர்ப்புசக்தி பெருகும் .
இரு கட்டை விரல்களால் காதுகளை அடைத்துக்கொண்டு ஆள் காட்டி விரல்களை கண்களின் மீதும், நடு விரல்களை மூக்கின் மீதும், சுண்டு விரல்களை கீழ் உதட்டின் மீதும் வைத்துக் கொண்டு செய்வது சன்முகி முத்திரை ஆகும் . இந்த முத்திரையில் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தால் மனதை உள்நோக்கிப் பார்க்கும் திறன் ஏற்படும் . இது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும் .
கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரலின் நுனியைச் சேர்த்துச் செய்வது சின் முத்திரை ஆகும் . சின் முத்திரையில் மூச்சுப்பயிற்சி செய்தால் மனம் ஒருமுகப்படும் . நினைவாற்றல் பெருகும் .
--- ராமலிங்கம் , தலைவர் . . ஆடுதுறை . காந்திஜி இயற்கை நலவாழ்வு கல்வி அறக்கட்டளை சொற்பொழிவில் ..
--- தினமலர் . 13 . 12 . 2010 .