Thursday, June 30, 2011

7 தலைமுறைகள் !

ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .
தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள்; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் -- ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும்; ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும்; ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெருகின்றன . எனவே தான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .
நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் -- இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம் .
--- தினமலர் . செப்டம்பர் 23 . 2010 .

Wednesday, June 29, 2011

தெரியுமா ? தெரியுமே !

* ஒரு கிராம் தண்ணீரை ஒரு டிகிரி சென்டிகிரேட் சூடேற்ற என்ன சக்தி தேவைப்படுமோ அது ஒரு கலோரி . பொதுவாக்கி பார்த்ததில் ஆணுக்கு 2900 , பெண்ணுக்கு
2200 கலோரி உணவு ,தினமும் தேவை --- தினகரன் . 29 .9 .2010.
* ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருக்கும் . அதேபோல ஓர் அர்த்தத்துக்குப் பல வார்த்தைகள் இருக்கும் . இவற்றை ' தெசாரஸ் ' ( Thesaurus ) என்போம் . இவற்ரை சிறந்த அகராதி மூலம் தெரிந்துகொள்ளலாம் . --- ஆனந்தவிகடன் . 22 . 9 . 2010 .
* அரைஞாண் என்பது : அரை என்றால் இடுப்பு , ஞாண் என்றால் கயிறு . ஆனாலும், ஏன் அரைஞாண் கயிறு என்கிறார்கள் . --- ஆனந்தவிகடன் 13 . 10 . 2010 .
* எந்த அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ , அதே அமெரிக்காவில் இப்போது அதிகம் விற்பனையாவது சே குவேராவின் உருவம் பதித்த டி - ஷர்ட்டுகள்தான் . சே என்னும் புரட்சிக்காரனையும் ஒரு பிராண்ட் ஆக்கிவிட்டார்கள் !
* திரையுலகின் பிதாமகர் அகிரா குரோசோவா இயக்கிய மிகச் சிறந்த படம் ' ரொஷோமோன் '. அகிரா கொஞ்சம் ரிவர்ஸில் சிந்தித்ததால் ' ஃப்ளாஷ்பேக் ' என்கிற யுத்தி சினிமாவுக்குக் கிடைத்தது .
* குறைந்த செலவில் , குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றை ஜி.டி.நாயுடு தயாரித்தார் . 7.11..1967 அன்று காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது . அடுத்த நாள் மாலை 3.45 மணிக்கு கட்டப்பட்ட வீட்டின் திறப்பு விழா நடத்தப்பட்டது .
* தங்களை பிரிட்டனின் காலனி நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் அமெரிக்கர்கள் . 1776 ம் ஆண்டு தாமஸ் பெய்ன் என்பவர் ' அமெரிக்கர்களே ... சிந்தித்துப் பாருங்கள் ! ஒரு கண்டம், ஒரு துணைக்கண்டத்தை ஆளலாம் . ஆனால், பிரிட்டன் என்கிற துணைக்கண்டம், அமெரிக்கா என்கிற கண்டத்தை ஆளலாமா ? என்று கேள்வி கேட்டுவைத்தார் . சிம்பிளான கேள்விதான் . ஆனால், அது அமெரிக்கர்களின் சுயமரியாதையை உசுப்பியது . பிரிட்டனுக்கு எதிராகப் போராட்டங்கள் துவங்கின . அமெரிக்கா, சுதந்திர நாடு ஆனது .
* பைபிள் பேசி
ரைஃபிள் விற்கும்
அமெரிக்கா
உன்னையும் என்னையும்
மறு கன்னம் காட்டச் சொல்லி
மறுபடி மறுபடி அறையும் !
--- புரட்சி விகடன் . 6 .1 .10 .

Tuesday, June 28, 2011

மனிதரின் மொழிகள் .

மனிதரின் மொழிகள் புரிந்துவிடில்....மொழி வளர்க்க... அறிவு சிறக்க... சில டிப்ஸ் !
' மொழி என்பது ஒரு வலிமையான ஆயுதம் . ஆனால், அது அக்குள் சிரைப்பதற்கானது அல்ல ! ' என்கிறார் எழுத்தாளர் மகா . ஸ்வேதாதேவி . மொழியின் வீரியம் எவ்வளவு என்பதை வெளிப்படுத்தவே இந்த மேற்கோள் .
" முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் . ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே தவிர அது அறிவு கிடையாது . ஆனால், அதைக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், வேறு வழி இல்லை என்கிற பிம்பம் நிலவுகிறது . அதை முற்றாக மறுக்க முடியாத இன்றைய சூழலில் ' மொழியறிவு ' என்ற புதிய சொல்லின் அவசியத்தை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் . மொழியறிவு என்பதைக் காட்டிலும் ' மொழித்திறன் ' என்ற வார்த்தைப் பதம் மிகக் கச்சிதமாகப் பொருந்தும் ! "என்கிறார் ஹெலன் மேத்தா . பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தின் சென்னைக் கிளைத் தலைவர் மற்றும் பயிற்சியாளர் .
' டெக்னிக்கல் ஸ்கில்ஸ் ' என்ற அந்த வகைத் திறன்கள் முக்கியம்தான் . ஆனால், அதைவிட முக்கியம் தொடர்புகொள்ளும் திறன் . தொடர்புகொள்வதில்கூட நன்றாகப் பரிணமிக்கிறார்கள் . ஆனால், தொடர்புகொள்ளுதலைப் பயன்படுத்தும் விதம் என்பதில்தான் தவறு நிகழ்கிறது . அதாவது, மற்றவர்கள் சொல்வதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா என்பதைக் காட்டிலும், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதே முக்கியம் . நம்மில் பலர் மற்றவர் பேசுவதைப் புரிந்து கொள்கிறோம் . ஆனால், அதற்கு எதிர்வினை அளிக்க முற்படுகிறபோது தடுமாறுகிறோம் . இந்தத் தடுமாற்றம்தான், நமக்கு அவ்வளவு மொழித் திறன் இல்லை என்பதை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் .
ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான படிநிலைகள் நான்கு . அவை ... கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் . ஒருவர் மிகச் சிறந்த கேட்டல் திறன் உடையவராக இருந்தால், அவரால் சிறந்த பேச்சாளராக இருக்க முடியும் . சிறந்த பேச்சாளராக இருக்கும்போது, அவரால் சிறந்த படிப்பாளியாக இருக்க முடியும் . சிறந்த படிப்பாளியாக இருக்கும் ஒருவர் நல்ல எழுத்தாளராகவும் இருக்க முடியும் . இந்தப் படிநிலையின் சாராம்சம் இதுதான் .
உச்சரிப்பு மிக அவசியம் . நீங்கள் தெளிவாக உச்சரிக்கும்போது, வார்த்தைகள் கோவையாக வராமல் போனாலும், உங்கள் பேச்சு மற்றவருக்குப் புரியும் . ' அக்ஸென்ட்' ( accent ) என்பார்கள் . அதாவது குறிப்பிட்ட பகுதியில் இருந்து வரும் ஒருவர் ஒரு வார்த்தையைக் குறிப்பிட்ட முறையில் உச்சரிக்கும் முறை . உதாரணமாக, தமிழர்கள் ' ஆபீஸ் ' என்பார்கள் . மலையாளிகளோ ' ஓபீஸ் ' என்பார்கள் . ஆனால், இப்போது எல்லாம் ' அக்ஸென்ட் ' பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை . எல்லா நாடுகளுக்கும் ஏற்றவாறு ஒரு சமன்பாட்டு நிலைக்குத் தயாராகி விட்டார்கள் ! என்று உற்சாகப்படுத்துகிறார் ஹெலன் .
" Applied Linguistics ' என்பது, ஒரு மொழியை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது .
பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பாடத்தில், இரண்டாவது அத்தியாயமே விசாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதாக இருக்கின்றது .
ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தருவதை Phonetics என்பார்கள் . அதைக் கற்றுக்கொள்வது மிக முக்கியம் .
மூல மொழி ( Source Language ) . மொழியாக்க மொழி ( Target language ) இரண்டிலும் தேர்ச்சி பெறுவது முக்கியம் . மூல மொழியில் இருக்கும் சில சொல்லாடல்களை அப்படியே மொழிமாற்றம் செய்வது நல்லது அல்ல . உதாரணமாக, ' நாங்கள் நடந்து சென்றோம் ' என்பதை ஆங்கிலத்தில் சொல்லும்போது, பலர் ' We Went by Walking ' என்கிறார்கள் . அது தவறு .
' நாங்கள் பேருந்தில் சென்றோம் , ரயிலில் சென்றோம் ' என்பதுபோல நடப்பது என்பதும் ஒரு சர்வீஸ்போன்ற அர்த்ததைக் கொடுக்கும் . நாம் செய்வது சிறு தவறுதான் என்றாலும், மொத்தக் கருத்துமே மாறிவிட வாய்ப்பு இருக்கிறது . தொடர்ந்த நேசிப்பும், இடைவிடாத வாசிப்பும் மட்டுமே ஒரு மொழியில் உங்களுக்கான அறிவை மேம்படுத்திக்கொள்ள உதவி செய்யும் " என்று முடிக்கிறார் மீனா கந்தசாமி .
--- ந. வினோத்குமார் . ஆனந்தவிகடன் , 22 . 9. 2010 .

Monday, June 27, 2011

கட்டவிரல் கடி !

Voice Mail .
நான் உதட்டோடு
உதடாக கொடுத்த
ஒரே முத்தத்தில்
கர்ப்பமானது....
' பலூன் ! '
( எப்பூடி....? )
In Box
நீங்க கம்ப்யூட்டர் முன்னாடி
உட்கார்ந்து வொர்க் பண்ணுனா
அது என்ன நினைக்கும் தெரியுமா ?
இன்டெல் இன்சைடு
மென்டல் அவுட்சைடு ...
My Folder
செய் அல்லது
செத்துமடி
நேதாஜி .
படி அல்லது
பன்னி மேய்
எங்க பிதாஜி !
Reports .
உலகத்துல இருக்குற 60 %
பசங்களுக்கு லவர் கிடையாது...
30 % பசங்களுக்கு கேர்ல்
ஃபிரெண்ட் இருக்காங்க ...
மீதி இருக்கும் 10 % பசங்களுக்கு
அறிவு இருக்கு...
New message
எல்லாரும் உன்னை விட்டு
விலகும்பொதும் உன்னை
வெறுக்கும்போதும்
உன் மனசு கஷ்ட்ப்படுவது எனக்குத்
தெரியும்டா
ஆனா , ஒண்ணு புரிஞ்சுக்கோ...
தயவு செஞ்சு நீ குளிக்கணும்
தினமும் ..!
Sent
இசை எல்லா
இடத்துலயும்
இருக்கு...
உன் கேர்ல்
ஃப்ரெண்டுகிட்ட
கூட இருக்கலாம்
நம்பிக்கை
யில்லையா...?
நல்லா பழகிப் பாரு
மச்சி...
சீக்கிரமே ' சங்கு '
சத்தம் கேட்க
ஆரம்பிக்கும் .
---குமுதம் 29 / 9 / 2010 .

Sunday, June 26, 2011

அபூர்வம் !

1.1.11.,
11.1.11 .,
1.11.11..,
11.11.11 .!
823 ஆண்டுகளுக்கு பின் அபூர்வம் .
நமக்கு தமிழ் பஞ்சாங்க காலண்டர் இருந்த போதிலும் பொதுவாக ஆங்கில காலண்டரையே பயன்படுத்தி வருகிறோம் . 2011 ம் ஆண்டை ஒரு வித்தியாசமான ஆண்டாக ஆங்கில காலண்டர் நமக்கு காட்டுகிறது . இது போன்ற நிகழ்வு ஒவ்வொரு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம் .
அந்த ஆச்சர்யம் இதோ...
அடுத்து பிறக்கும் ஜூலை மாதத்தில் வெள்ளிக்கிழமை 5 நாட்களும், சனிக்கிழமை 5 நாட்களும், ஞாயிற்றுகிழமை 5 நாட்களும் இடம் பெறுகிறது . இதுபோன்று 823 ஆண்டுகள் ( சத்தியமாக 10 வது தலைமுறையால் மட்டுமே சாத்தியம் ) காத்திருக்க வேண்டும் . இந்த ஆண்டு நாம் சந்தித்த, இனி சந்திக்கும் வித்தியாசமான தினங்கள்... 1.1.11., 1.11. 11., 11.1.11., 11.11.11. இதுபோன்ற நாட்களை நாம் இனிமேல் பார்க்க முடியுமா ?
இதுமட்டுமா... நீங்கள் பிறந்த வருஷத்தின் கடைசி 2 இலக்க எண்களுடன் தற்போது உங்களுடைய வயதை சேர்த்து கூட்டினால் வருவது 111 என்றே . ஆகவே உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கும் . இதுதான் இந்த ஆண்டின் மிகப் பெரிய பொக்கிஷம் .
இதனை சுலபமாக புரிந்து கொள்ள நீங்கள் பிறந்தது பிறந்தது 1988 என்று வைத்துக் கொள்ளுங்கள் . அதில் உள்ள கடைசி இரண்டு இலக்கத்தை மட்டும் அதாவது 88 ஐ மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் . அதனுடன் இப்போது உங்களுக்காகும் வயது 23 ஐ கூட்டினால் வருவது 111 ஆக இருக்கும் .
--- தினமலர் , சண்டே பேப்பர் , 26 . 6 .2011 .

பாட்டில் குடிநீர் !

பாட்டில் குடிநீருக்கு பி ஐ எஸ் சான்றிதழ் கட்டாயம் .
மத்திய நுகர்வோர் அமைச்சகம் அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிடுள்ளது . இதன்படி, பி ஐ எஸ் சான்றிதழ் பெறாமல் குடிநீரை விற்க யாருக்கும் அனுமதி இல்லை . பி ஐஎஸ் சான்றிதழ் பெற்று சந்தையில் குடிநீர் விற்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
சந்தையில் விற்கப்படும் உணவுப்பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வாங்கி பரிசோதித்து தரக்கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று பி ஐ எஸ் அமைப்பு சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது . 1955 உனவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீருக்கு இருவிதமான சான்றிதழ்களை பி ஐ எஸ் அமைப்பு வழங்கிவருகிறது . பேக்கிங் செய்யப்பட்ட இயற்கையான மினரல் வாட்டர் ( ஐஎஸ் 13428 ; 2005 ), இயற்கையான மினரல் வாட்டர் அல்லாத தண்ணீர் ( பிஎஸ் 14543 ; 2004 ) என இரு வகைகளில் பி ஐஎஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுவருகிறது .
இப்போதைய நிலையில் பி ஐஎஸ்ஸின் முறையான அனுமதி பெற்று 18 பேக்கேஜ்டு நேச்சுரல் மினரல் வாட்டர் நிறுவனங்களும் 2 ஆயிரத்து 354 ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிறுவனங்களும் 633 இயற்கை ஆதாரங்களில் இருந்து நேரடியாக பெறப்பட்ட தண்ணீர் வழங்கும் நிறுவனஙகளும் சந்தையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் . 26 . 9 . 2010 .

Saturday, June 25, 2011

சிறகடித்து பறக்கும் விமானம் .

சிறகடித்து பறக்கும் தன்மைகொண்ட ஒரு விமானத்தை கனடாவில் ஒருவர் வடிவமைத்து பரிசோதனையில் வெற்றியும் கண்டுள்ளார் .
அந்த விஞ்ஞானியின் பெயர் டோட்ரிக்கெட் , இவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மாணவர் . இவரது சிந்தனையில் உருவான அந்த சிறகடித்துப் பறக்கும் விமானத்தின் பெயர் ஸ்னோபேர்ட் , அதாவது பனிப்பறவை .
இவரது பனிப்பறவை சுமார் 20 வினாடிகள் அந்தரத்தில் பறந்தது . 25 கிலோ மீட்டர் வேகத்தில் 145 மீட்டர் தூரத்திற்கு இவர் பறந்துள்ளார் . இந்த விமானம் எப்படி செயல்பட்டது என்றால், இவர் காலில் சைக்கிள் பெடலிங் போன்ற சாதனத்தை மிதிக்க, அத்துடன் இணைக்கபட்டுள்ள இழுவை இயந்திரம் கைகளில் கட்டப்பட்ட இறக்கைகளை இயக்கியது , அதன் காரணமாக டோட்ரிக்கெட், அந்தரத்தில் பறந்தார் .
இது முதற்கட்ட பரிசோதனை என்பதால் குறைந்த தூரம் மட்டுமே அவர் பறக்க முடிந்தது . உயரே ஏறுவதிலும், இறங்குவதிலும் அவருக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை . நன்கு திட்டமிட்டு இந்த விமானத்தை உருவாக்கியதால் பரிசோதனை முயற்சியின் போது ரிக்கெட்டுக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை .
இந்த ஸ்னோபேர்ட் விமானத்தின் மொத்த எடை 42.5 கிலோதான் . அதன் இறக்கைகள் 105 அடி நீளம் இருந்தது . அதாவது ஒரு சிறிய ரக விமானத்தின் இறக்கையை போன்று இருந்தது . ரிக்கெட்டின் இந்த முயற்சி 100 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது . எனவே, இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற சர்வதேச பிளையிங் கிளப் வாயிலாக முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன .
--- தினமலர் . 25 . 9 . 2010 .

Friday, June 24, 2011

மீடியா பிளேயர் ஷார்ட்கட் .

விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம் . இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன . நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம் .
ALT + ! : 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர .
ALT + 2 : ஸூம் 100 சதவிகிதமாக .
ALT + 3 : ஸூம் 200 சதவிகிதமாக்க .
ALT + Enter : வீடியோ காட்சியை முழுதிரையில் காண .
ALT + F : மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல .
ALT + T : டூல்ஸ் மெனு செல்ல .
ALT + P : பிளே மெனு செல்ல.
ALT + F4 :மீடியா பிளேயரை மூடிவிட .
CTRL + 1 : மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டுவர .
CTRL + 2 : மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டுவர .
CTRL + B : இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செயதிட .
CTRL + F : வரிசையில் அடுத்த பைலை இயக்க .
CTRL + E : சிடி டிரைவில் இருந்து சிடி / டிவிடியை வெளியே தள்ள .
CTRL + P : இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க .
CTRL + T : இயங்கியதை மீண்டும் இயக்க .
CTRL + SHIFT + B : ஒரு பைலை ரீவைண்ட் செய்திய .
CTRL + SHIFT + F : ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட .
CTRL + SHIFT + S : வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ / வீடியோ இயக்க .
CTRL + SHIFT + G : வழக்கத்திற்கு மாறாக வேகமாக் ஆடியோ / வீடியோ இயக்க
CTRL + SHIFT + .N : சரியான வேகத்தில் ஆடியோ / வீடியோ இயக்க
F 8 : மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த .
F9 : மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட.
F 10 :மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க .
Enter / Space bar : ஒரு பைலை இயக்க .
--- தினமலர் . 27 . 9 . 2010 .

Thursday, June 23, 2011

தெரிந்து கொள்ளுங்கள்

திடீரென நிற்கும் புரோகிராம் !
கம்ப்யூட்டரில் ஒரு புரோகிராமை இயக்க முயற்சி செய்கிறீர்கள் அல்லது எதனையேனும் அதில் தேட முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் . அப்போது திடீரென அந்த புரோகிராம் எதுவும் செய்திடாமல் நின்று விடுகிறது . எந்த சலனமும் இல்லாமல் அப்படியே உள்ளது . என்ன செய்யலாம் ?
CTRL + ALT + DEL என்ற மூன்று பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள் . ஒரு கட்டம் எழுந்து வரும் . அதில் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் வரிசையாகக் காட்டப்பட்டிருக்கும் . அந்த பட்டியலில் உங்களைத் திகைக்க வைத்த புரோகிராம் பெயரைத் தேடித் தேர்ந்தெடுங்கள் . பின் End Task என்ற கட்டத்தில் கிளிக் செய்திடுங்கள் . இனி உங்கள் கம்ப்யூட்டர் முடக்கம் நீங்கி மீண்டும் செயல்படத் தொடங்கும் . இப்போது மீண்டும் நீங்கள் விரும்பிய அந்த புரோகிராமை இயக்கி செயல்படுங்கள் .
--- தினமலர் . 27 . 9 . 2010 .
திடீரென நிற்கும் புரோகிராம் !
கம்ப்யூட்டரில் ஒரு புரோகிராமை இயக்க முயற்சி செய்கிறீர்கள் அல்லது எதனையேனும் அதில் தேட முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் . அப்போது திடீரென அந்த புரோகிராம் எதுவும் செய்திடாமல் நின்று விடுகிறது . எந்த சலனமும் இல்லாமல் அப்படியே உள்ளது . என்ன செய்யலாம் ?
CTRL + ALT + DEL என்ற மூன்று பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள் . ஒரு கட்டம் எழுந்து வரும் . அதில் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் வரிசையாகக் காட்டப்பட்டிருக்கும் . அந்த பட்டியலில் உங்களைத் திகைக்க வைத்த புரோகிராம் பெயரைத் தேடித் தேர்ந்தெடுங்கள் . பின் End Task என்ற கட்டத்தில் கிளிக் செய்திடுங்கள் . இனி உங்கள் கம்ப்யூட்டர் முடக்கம் நீங்கி மீண்டும் செயல்படத் தொடங்கும் . இப்போது மீண்டும் நீங்கள் விரும்பிய அந்த புரோகிராமை இயக்கி செயல்படுங்கள் .
--- தினமலர் . 27 . 9 . 2010 .

Wednesday, June 22, 2011

பால் எமன் ?

பாலில் தண்ணீர் கலப்பார்கள் தெரியும் . தெரியாதது... சோப் பவுடரும் , கிழங்கு மாவும் கலக்கிறார்கள் என்பது . ரத்தத்தை ' ஜிலீரிட ' வைக்கும் இந்தத் தகவல், அன்றாடம் பால் பயன்படுத்துபவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது .
" கொழுப்பு நீக்கப்பட்ட பாலில், புரதம் மட்டுமே இருக்கும் . அதில் நுரை அதிகம் வராது . அதற்காக சோப் பவுடர் கலப்பது உண்டு . அதனால் நுரை தளும்பத் தளும்ப வரும் . அதேபோல், பால் கெட்டியாக இருக்க மாவுச் சத்து ( ஸ்டார்ச் ) அதிகமுள்ள மரவள்ளிக்கிழங்கு சேர்க்கிறார்கள் . இதனால் பாலில் இயற்கையாக இருக்கும் சத்துக்கள் குறையும் . மற்றபடி பாதிப்புகள் பெரிதாக இருக்காது . ஆனால், சோப் பவுடர் அப்படியில்லை ! "
என்னதான் சூடாக்கினாலும், இந்த இரண்டு சேர்ப்பிகளும், இரண்டு மூன்று நாட்கள் வரை பாலிலேயே தங்கியிருக்கும் என்பது அதிர்ச்சி ரகம் . இதில், மற்றொரு கொடுமை என்ன தெரியுமா ? ' யூரியா'வும் கலக்கப்படுவதுதான் .
பொதுவாக ஒரு பொருளை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதற்கு ' பிரிசர்வேட்டிவ்கள் ' சேர்ப்பதுண்டு . அதேபோல், கறந்த பாலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு போகும் போது பால் கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு . அதனைத் தடுப்பதற்காக யூரியா சேர்க்கிறார்கள் .
இது மட்டுமா ? புளிக்காமல் இருக்க சோடியம் - பை - கார்பனேட்டும், அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்த ' ஹைட்ரஜன் பெராக்ஸைடும் சேர்க்கிறார்கள் .
பாலில் ' ஹைட்ரஜன் பெராக்ஸைடு ' ஒரு துளி விட்டால்போதும், கெட்டுப் போகாது . கூடவே அந்த ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதும் சிரமம் . இதில் உச்சகட்ட கொடுமை என்ன தெரியுமா ? கலப்பட பாலில் கொஞ்சூண்டு உப்பு அல்லது சர்க்கரை போட்டால் போதும், கலப்படம் வெளியில் தெரியாது . இருந்தாலும் இந்த ரசாயனச் சேர்மங்களை எல்லாம் ' நியூட்ரலைஸர்ஸ் ' என்கிற பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் .
--- எஸ். அன்வர் . குமுதம் . 29 . 9 . 2010 .

Tuesday, June 21, 2011

மருத்துவ வார்த்தைகள் !

மருத்துவ வார்த்தைகள் எல்லாம் ஏன் இப்படி குழப்படியாக இருக்கின்றன ?
எல்லாமே குழப்படி அல்ல . சில அர்த்தபூர்வமானவை . கண்களில் உள்ள லென்ஸின் .மீது மெல்லிய படலம் போன்ற திரை படர்வதால் ஒளி ஊடுருவல் தன்மையை அது இழக்கிறது .
இதை ' கேடராக்ட் ' என்கிறார்கள் . இந்த வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து கடன் வாங்கியது . லத்தீனில் கேடராக்டர். என்றால் நீர்வீழ்ச்சி என்று பொருள் . நீர்வீழ்ச்சிக்கு இடையில் இருந்து பார்ப்பது போல கண்ணின் பார்வை தெரிவதால் இந்த குறைபாட்டுக்கு இந்தப் பெயரை வைத்துவிட்டார்கள் .
--- தினகரன் . வசந்தம் . நாட்டாமை பதில்கள் . 26 . 9 . 2010 .

Monday, June 20, 2011

புத்திசாலிகள் !

எல்லாவறறுக்கும் சரியான விடை சொல்பவர்களை ' புத்திசாலிகள் ' என்று சொல்லிவிட முடியுமா ?
டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்றில் துப்பறியும் வேலைக்கு ஆள் தேர்வு நடந்தது . மூன்று பேர் சென்றார்கள் . முதல் ஆளிடம் இண்டர்வியூ செய்த அதிகாரி ஒரு போட்டோவைக் காட்டினார் .பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படம் அது . " இது ஒரு பயங்கர கிரிமினலோட போட்டோ .இவனை ஞாபகம் வச்சுக்க எதை நீ அடையாளம் எடுத்துக்குவ ? ' என்று அதிகாரி கேட்டார் .
' ரொம்ப ஈஸி சார் . இவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு ' என்றான் முதல் ஆள் . அதிகாரிக்கு சரியான கோபம் வந்தது . ' யோவ், சைடு போஸ்ல எடுத்த போட்டோவுல ஒரு கண்ணுதான்யா தெரியும் . இதுகூடதெரியாத முட்டாளா இருக்கியே ' என்று விரட்டி விட்டார் .
இரண்டாவதாக வந்த ஆளிடமும் அதே போட்டோவைக் காட்டி, அதே கேள்வியைக் கேட்டார் . ' ரொம்ப ஈஸி சார் . இவனுக்கு ஒரு காதுதான் இருக்கு ' என்றான் அந்த ஆள் . அதிகாரி
நொந்து நூலாகி விரட்டினார் .
சலிப்புடன் மூன்றாவது ஆளிடம் அந்த போட்டோவைக் காட்டி கேள்வி கேட்டார் .
படத்தை உற்றுப் பார்த்த மூன்றாம் ஆள், ' இவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார் ' என்றான் . அதிகாரிக்கு ஆச்சர்யம் . அந்த குற்றவாளியின் ஃபைலை எடுத்துப் படித்தார் .
என்ன அதிசயம் . அவன் கான்டாக்ட் லென்ஸ் போடுபவன்தான் .
' பிரமாதம்பா ... எப்படி கண்டுபிடிச்சே ? '
' ரொம்ப ஈஸி சார் . இவனுக்கு ஒரு கண், ஒரு காதுதான் இருக்கு . கண்ணாடி போட முடியாதே ! '
--- தினகரன் . வசந்தம் . நாட்டாமை பதில்கள் . 26 . 9 . 2010 .

Sunday, June 19, 2011

ஹெலிபிளேன் .

ரன்வே இல்லாமல் டேக் ஆஃப். லேண்டிங் செய்யக் கூடிய நவீன ஹெலிபிளேனை வடிவமைத்து, நாசா நடத்திய போட்டியில் வென்றிருக்கிறார்கள் நமது சென்னை மாணவர்கள் .
ஹெலிகாப்டர்களைப் பொருத்தவரை, மிகக் குறைந்த அளவு சரக்கு மற்றும் மனிதர்களைத்தான் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும் .
எனவே, இதற்குத் தீர்வு காண பல வருடங்களாக நாசா ( National Acronautics and Space Administration ) முயற்சித்து வருகிறது . இது தொடர்பான போட்டிகளையும் நடத்தி வருகிறது . மீட்புப் பணிகளுக்கு உதவக்கூடிய வானூர்திகளை வடிவமைக்கும் போட்டி ( tiltrotor design competition 2009 -- 2010 ) ஒன்றினை மாணவர்களுக்காக கடந்த ஆண்டு நடத்தியது . மேனிலைப்பள்ளி அளவில் அல்லது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகோள்ளலாம் . அமெரிக்கர்களுக்கு, அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு என்று இருவேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது .
உலகெங்கும் இருந்து அமெரிக்கா, கனடா, நைஜீரியா, இங்கிலாந்து, ஆஸ்திரியாவென பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டார்கள் . இப்போது நாசா தனது இணைய தளத்தில் போட்டி முடிவுகளை அறிவித்திருக்கிறது . அமெரிக்கரல்லாதோர் பிரிவில் இடம் பெற்றிருப்பது சென்னை, ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழுவின் வானவூர்தி வடிவமைப்பு .
" இது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் . போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியல்களில் இருப்பவர்கள் ".என்கிறார் குழு உறுப்பினரான பெர்னார்ட் அடைக்கலராஜ் . மற்றும் மனோஜ் என்ற சக தோழர் . நாசாவின் முடிவுக்குப் பிறகு இந்த வடிவமைக்குக் காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள் .
நம் நாட்டில், மீட்புப் பணிகள், ராணுவம், கப்பற்படை, விமானப்படை போன்ற பணிகளுக்கு இந்தப் புதுரக வானவூர்தியைப் பயன்படுத்தலாம் .
---புதிய தலைமுறை . 30 செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent - Thirunallar ) கொல்லுமாங்குடி

Saturday, June 18, 2011

ஆன்லைன் பரிசுகள் !

ஆன்லைன் லாட்டரிப் பரிசுகள் குறித்து எச்சரித்துள்ளது ரிசர்வ் வங்கி .
உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் ( இ மெடில் ) அல்லது தொலைபேசி அழைப்பு வருகிறது... ஒரு பிரபல அமெரிக்க இணைய நிறுவனம் ( கூகுள், மைக்ரோசாஃப்ட் என்று உங்களுக்கு பரிச்சயமான பெயர் ஒன்று ) நடத்திய லாட்டரியில் பத்து மில்லியன் டாலர்கள் பரிசு உங்களுக்கே உங்களுக்கு விழுந்திருப்பதாக ! அதாவது இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் !
உங்களுக்கு இன்ப அதிர்ச்சிதான் . ஆர்வமாக அந்தக் கடிதத்துக்கு, இந்தப் பணத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு பதில் அனுப்பினாலே, இணையத் திருடர்களின் முதல் வலையில் விழுந்தமாதிரிதான் !
அடுத்து... இந்தப் பணத்தை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற வேண்டும் என்றால், 3 லட்சம் ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கிக்கு ப்ராசசிங் ஃபீஸ் செலுத்த வேண்டும் . அதை நாங்கள் சொல்கிற வங்கிக் கணக்கில் செலுத்தினால், அடுத்த நாளே நீங்க கோடீஸ்வரர்தான் என்று கருமமே கண்ணாக உங்களுக்குப் பதில் வரும் .
3 லட்சத்தை அந்த அக்கவுண்டில் செலுத்துகிறீர்கள் . உங்களைப் பாராட்டி இன்னொரு கடிதம் .அத்தோடு மூன்று லட்சம் பத்தாது சார் , டிரான்சேக்க்ஷன் சார்ஜ் இரண்டு லட்சம் தேவை . அதைக் கட்டிவிட்டால் அடுத்த நாளே, மீண்டும் டாக்ஸ் கிளியரன்ஸ் சார்ஜ், கன்வர்ஷன் சார்ஜ், கிளியரன்ஸ் ஃபீஸ் என உங்களிடமிருந்து 15 லட்சம் ரூபாய் வரை கறந்துவிட்டு... ஒரு சுபயோக சுபதினத்தில் கம்பிநீட்டி விடுவார்கள் . பிறகென்ன தலையில் துண்டுதான் .
இதைத் தடுக்கும் பொருட்டு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தன்னுடைய இணைய தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிடுள்ளது . அதன்படி வெளிநாட்டு லாட்டரிகளில் இந்தியர்கள் பங்கேற்றுப் பணத்தை இந்தியாவிற்கு மாற்றுவது 1999இல் வெளிநாட்டுப் பணப்பட்டுவாடா சட்டத்தின் ( FOREIGN EXCHANGE MANAGEMENT LAW ) படி தவறானது . அதையும் மீறி இதுமாதிரியான லாட்டரிகளில் ( எந்த விதமாக இருந்தாலும் ), ஒருவேளை உங்களூக்கு நிஜமாகவே பணம் விழுந்திருந்தாலும் அதை உங்களால் எப்போதுமே பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .
இது தவிர, இந்தத் திருடர்கள் போலியாக ஆர். பி ஐ. யே கொடுத்ததாகப் போலி லெட்டர் பேடுகளில் பத்திரங்கள் தயாரிப்பதாகவும், உயரதிகாரிகள் போல போலிக் கையெழுத்தோடு பத்திரங்களைக் கொடுத்தாலும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறித்தியுள்ளது . அதேபோல இது மாதிரியான அழைப்புகள் வந்தால் அதை நிராகரிக்கவும் வலியுறுத்தியுள்ளது . வங்கிகளையும் இதுமாதிரியான தொடர்புகள் குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
---புதிய தலைமுறை . 30 செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent - Thirunallar ) கொல்லுமாங்குடி

Friday, June 17, 2011

ஜெமினி இரட்டையர் !

நீங்கள் அந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, ஜெமினி இரட்டையரை நிச்சயம் அறிந்திருப்பீர்கள் . பழைய கருப்பு, வெள்ளைப் படங்களை டி. வி. யில் பார்க்கும்போது ஜெமினி ஸ்டுடியோவின் பீப்பி ஊதும், ஜட்டி மட்டுமே அணிந்த இரட்டையர் சின்னத்தைப் பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பேயில்லை .
அந்தச் சின்னத்துக்கான ஐடியா, ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ். எஸ். வாசனுக்கு எங்கிருந்து வந்தது ?
ஜெமினி என்பது நட்சத்திரம் . ஜெமினி என்ற சொல் லத்தீன் மொழியைச் சார்ந்தது . அச்சொல்லுக்கே இரட்டையர் என்பதுதான் பொருள் . கேஸ்டர் மற்றும் போலகஸ் என்ற இரட்டை
நட்சத்திரங்கள் இணைந்ததுதான் ஜெமினி . கேஸ்டரும், போலக்ஸும் இரட்டையர். கிரேக்கப் புராணத்து கதை மாந்தர்கள் . ஒரே தாய் . ஆனால், வேறு வேறு தந்தை என்பதாக வித்தியாசமான கதை உண்டு . அக்காலத்தில் மாலுமிகளுக்கு இரவில் திசை காட்டும் நட்சத்திரமாக ஜெமினிதான் இருக்குமாம் .
--- புதிய தலைமுறை . 30 செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent - Thirunallar ) கொல்லுமாங்குடி .

Thursday, June 16, 2011

5 மேஜிக் !

ஒரு காகிதத்தில் ' 5 ' என்று எழுதுங்கள் . அதை மடித்து உங்கள் நண்பரிடம் கொடுத்து, " நான் ஒரு கணக்கு சொல்வேன் . நீ என்னிடம் எதுவும் சொல்லவேண்டாம்.... கணக்கைச் செய்து முடித்தபிறகு இதைத் திறந்து பார் , சரியான விடை இருக்கும் ! " என்று ' பில்டெப் ' கொடுங்கள் .
பிறகு இப்படிச் சொல்லுங்கள் :
1 . ஏதாவது 3 இலக்க எண்ணை எழுதிக்கொள் .
2 . அதோடு 7 -ஐ கூட்டு .
3 . வரும் விடையை 2 -ஆல் பெருக்கு .
4 . வரும் விடையில் இருந்து 4 -ஐ கழி .
5 . வரும் விடையை 2 -ஆல் வகு .
6 . வரும் விடையில் இருந்து நீ முதலில் நினைத்த எண்ணைக் கழி .
இதன்பிறகு, " இப்போது நான் தந்த காகித்த்தைப் பிரித்துப் பார் ... உனக்கு வந்த விடையை எழுதியிருப்பேன் ! " என்று கம்பீரமாகச் சொல்லுங்கள் . அவர் திறந்து பார்த்து அசந்துபோவார் !
ஒரு உதாரணம் : நண்பர் நினைத்த எண் 234 ; 7 -ஐ கூட்டினால் 241 ; 2 -ஆல் பெருக்கினால் 482 ; 4 -ஐ கழித்தால் 478 ; 2 -ஆல் வகுத்தால் 239 ; இதிலிருந்து 234 -ஐ கழித்தால் 5 !
--- தினமலர் . செப்டம்பர் 24 , 2010 .

Wednesday, June 15, 2011

அயோத்தி .

மொத்தம் உள்ள 77 ஏக்கர் நிலத்தில் வெறும் 2.7 ஏக்கர் நிலம்தான் சர்ச்சைக்குரியதாக விளங்குகிறது . இதுதான் ராமர் பிறந்த இடம் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . 26 / 9 /10.
டீன்ஸ் ட்ரிங்...ட்ரிங்...
* காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது .
அலகு ஒப்பீடு .
1 இன்ச் = 2.54 செ. மீ.
1 அடி = 12 இன்ச் .
1 எக்டேர் = 2. 471 ஏக்கர் .
1 மைல் = 1.609 கி. மீ.
1 கடல் மைல் = 1.852 கி. மீ.
1 கிலோ = 2.205 பவுண்டு . 25 / 9 / 10.

Tuesday, June 14, 2011

'ப்ளூ ஃபிலிம் '

* ஜெர்மன் நாட்டின் காதல் தெய்வம் வீனஸ் நீல நிறத்தில் இருக்கும் . ஜெர்மனியில் நிர்வாணமாகப் படம் எடுத்தால் அது வீனஸை அவமானப்படுத்துகிற மாதிரி . குற்றவாளிகளுக்கு ப்ளூ கலர் டிரஸ் கொடுத்து சிறையில் தள்ளினார்கள் . இதனால் அந்த மாதிரிப் படங்களுக்கு ' ப்ளூ ஃபிலிம் ' என்று பெயர் வந்ததாம் !
வண்ணத்துப் பூச்சி !
* வண்ணத்துப் பூச்சிகள் எதிரிகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தன் உடம்பின் நிறத்தைத் தற்காப்பாகப் பயன்படுத்துகின்றன .' அபோஸ்மேடிசம் ' ( Aposematism ) எனப்படும் முறைப்படி வண்ணங்கள், வாசனைகள், ஒலிகள் போன்றவற்றைப் படன்படுத்தி எதிரியை மயக்கிவிடும் . எதிரி அசந்த நேரத்தில் எஸ்கேப் !
' வெள்ளை அறிக்கை '
* அவ்வப்போது நாடாளுமன்றத்தில் ' வெள்ளை அறிக்கை ( blank statement ) வேண்டும் ' என்று யாராவது கேட்பார்கள் . ' எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி தெரிவிப்பது 'தான்! வெள்ளை அறிக்கை . இந்த அறிக்கையே இறுதியானது !
* வெள்ளை நிறக் காய்கறிகளில் உள்ள அசிலின் கொலஸ்ட்ராலைக் கன்ட்ரோல் பண்ணும் .
* விஷத்தனமைகொண்ட உணவின் குறியீடாகத்தான் நீலம் இருக்கிறது . உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் நீல நிறத் தட்டில் சாப்பிட ஆரம்பித்தால் ஒரு சில மாதங்களில் சாப்பிடும் உணவின் அளவு பாதியாகக் குறைந்துவிடுகிறதாம் .
* நிறங்களை வைத்துச் செய்யப்படும் மருத்துவ முறைக்கு க்ரோமோதெரபி ( Chromotherapy ) enRu peyar .
* பிரபல வேதியியல் மேதை ஜான் டால்டன் தனக்கு நிறக்குருடு இருப்பதைக் கண்டுபிடித்து, அதைப்பற்றி ஆராய்ந்து உலகுக்கு அறிவித்தார் . இதனாலேயே நிறக்குருடுத் தன்மை ' டால்டனிஸம் ' என்று அழைக்கப்படுகிறது .
* விலங்குகளின் நிறக்குருடை மனிதர்கள் கண்டுபிடிக்கும் முறைக்கு ' மைக்ரோஸ்பெக்ட்ரோபோட்டோமெட்ரி !'
* பெயர்தான் செங்கடல் . நீர் நீலமாகத்தான் இருக்கும் . எடாம் என்கிற மலையின் நிழல் இந்தக் கடலில் விழுகிறது . ஹீப்ரு மொழியில் எடாம் என்றால் சிவப்பு . ஆகவே செங்கடல் ஆனது !
--- கலர் விகடன் . 30 / 12 / 09

Monday, June 13, 2011

பச்சோந்தி !

சில பச்சோந்திகளுக்கு மட்டுமே நிறம் மாறும் குணம் உண்டு . பிங்க், நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, கறுப்பு, பிரவுன், இளநீலம், மஞ்சள், டர்காயிஸ் என நினைத்த செகண்டில் பச்சோந்திகள் நிறம் மாறும் . பொதுவாக, பச்சோந்திகள் இடத்துக்குத் தகுந்த மாதிரி நிறத்தை மாற்றாது . அவற்றின் மூடுக்குத் தகுந்த மாதிரி நிறத்தை மாற்றும் .அது நிறம் மாறினால் சுற்றி இருப்பவர்களுக்கோ அல்லது மற்ற பச்சோந்திகளுக்கோ ஏதோ ஒரு செய்தி சொல்லுகிறது என்று அர்த்தம் . அதேபோல சூழலுக்குத் தகுந்த மாதிரி தன்னை மறைத்துக்கொள்ளும்.
கண்டுபிடிக்க முடியாதபடி ' காமோஃபளாஜ் ' முறையில் நிறமாற்றம் செய்யும் ஸ்மித்ஸ்டவார்ஃப் பச்சோந்திகள் இருக்கின்றன . இப்போது அவை எண்ணிக்கையில் சொற்பமாகிவிட்டன .
தன் உடலில் உள்ள வெவ்வேறு வகை நிறமிகளைத் திறந்து மூடுவதன் மூலம் பச்சோந்திகள் தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன . தட்ஸ் ஆல் !
--- மதுமிதா, கலர் விகடன் . 30 / 12 / 09 .

Sunday, June 12, 2011

சாத்தான் காளான் !

புதுச்சேரியில் ஒரு புதுவகை ஆம்லெட் சாப்பிடுகிறார்கள் இளைஞர்கள் . இதற்குப் பெயர் மஸ்கரம் ஆம்லெட் . ஈரமான பகுதிகளில் மரத்தடியில் முளைக்கும் ஒருவகை குடைக்காளானைப் பிடுங்கி காயவைத்துப் பொடி செய்தால் அதுதான் மஸ்கரம் . ஆம்லெட்டின் மேல் மிளகுப் பொடி மாதிரி இந்த மஸ்கரத்தை 5 கிராம் தூவினால் போதை ஆம்லெட் ரெடி . ' கஞ்சா அடித்தால் 2 மணி நேரம்தான் போதை . மஸ்கரம் சாப்பிட்டால் 5 மணி நேரம் போதியில் திளைக்கலாம் ' என்பது மஸ்கரம் அபிமானிகளின் கருத்து .
--- எச். சிராஜுதீன் , போதை விகடன் . 16 / 12 / 2009.

Saturday, June 11, 2011

கப்பலுக்கு ஓகே !

* கப்பல் கிளம்பியவுடன் சிறு கற்களைக் கப்பலில் இருந்து வீசுவது கடலை அவமானப்படுத்தும் செயலாம் .
* கப்பல் துறைமுகத்தைவிட்டுக் கிளம்பியவுடன் திரும்பிப் பார்ப்பது, கடற்பயணத்தின்போது முடி வெட்டிக் கொள்வது அல்லது நகங்களை வெட்டுவது எல்லாம் கெட்ட சகுனங்கள்
* டால்ஃபின்கள் கப்பலைத் தொடர்ந்து வந்தாலும், கப்பலின் மேல் தலத்தில் மது அருந்தினாலும் நல்ல சகுனங்களாம் .
* பூமியில் உள்ள உயிர்களில் 99 சதவிகிதம் கடலுக்குள்தான் இருக்கின்றன .
* கடலின் ஆழமான பகுதி பசிபிக் கடலில் இருக்கிறது . இதன் ஆழம் 11 கி. மீ.க்குக் கொஞ்சம் அதிகம் . எவரெஸ்ட் சிகரத்தைத் தூக்கி அந்த இடத்தில் போட்டால்கூட அது கடல் மட்டத்தில் இருந்து இரண்டே கால் கி. மீ. உள்ளேதான் இருக்கும் !
* 1,459 - க்கு பின்னால் 15 பூஜ்யங்களைப் போடுங்கள் . அதுதான் கடலின் எடை . பூமியின் மொத்த எடையில் இது வெறும் 0.022 சதவிகிதம்தான் !
* 90 சதவிகித எரிமலைகள் கடலில்தான் இருக்கின்றன .
* 6,400 கி. மீ. நீளமுள்ள அமேசான் நதி அட்லாண்டிக் கடலில் விநாடிக்கு 35 லட்சம் கன அடி பாய்கிறது . இந்த இடத்தில் கடல் தண்ணீர் உப்புக் கரிக்காது !
--- கடல் விகடன் , இணைப்பு - 9 / 12 / 2009

Friday, June 10, 2011

காதல் போதை !

காதல் போதை ஐந்து வகை ! நீங்கள் அதில் எந்த வகை ?
வழிந்தொழுகும் ரத்தத்துடன் ஆஸ்பத்திரிக்குப் போனாள் அந்தப் பெண் . அவளை அடித்து நொறுக்கியது அவளது கணவன் . ஆனாலும் அவள் ' அவர் கூடத்தான் சேர்ந்து வாழ்வேன் ' என்றாள் . அன்பு இல்லாத அடிதடி புருஷனைக்கூட விட்டுக் கொடுக்காமல் பேசுகிற பெண்களுக்கு ' அப்செஸ்டு லவ் அடிக்டஸ் ' என்று பெயர் . இவர்களுக்குப் புருஷனோ, காதலனோ அயோக்கியனாக இருந்தாலும் பதிலுக்கு அன்பையே பரிசளிப்பார்கள் .
இன்னொரு வகை ' கோ- டிபன்டெண்ட் லவ் அடிக்ட்ஸ் '. இவர்களுக்குச் சுத்தமாக சுயமரியாதை கிடையாது . காதலன் அல்லது புருஷனுக்காக மண்சோறு சாப்பிடுவது, அங்கப்பிரதட்சணம் செய்வது என்று தன்னை வருத்திக்கொள்வார்கள் .காதலன் சந்தோஷத்துக்காகக் கிடைத்த இடத்தில் எல்லாம் கடன் வாங்கிக் கொடுப்பார்கள் . ' என்றைக்காவது தன் துணை மனம் மாறும் ' என்ற நம்பிக்கையுட்னேயே வாழ்ந்து - செத்துப் போவார்கள் . இந்த இரண்டு வகையில் பெரும்பாலும் பெண்களே உண்டு .
காதலியையோ, மனைவியையோ சுத்தமாகப் பிடிக்காது . 100 சதவிகிதம் மனதளவில் வெறுத்தாலும், பிரிந்து செல்ல மாட்டார்கள் . 'ஐ ஹேட் யூ ... என்னை விட்டுப் போயிடாதே ! ' என்று மன்றாடுவார்கள் . இவர்கள் ' ரிலேஷன்ஷிப் அடிக்ட்ஸ் '. இந்த வகையில் ஆண்கள் நிறையவே உண்டு .
வீட்டில் அமளிதுமளி அராஜகம் செய்வார்கள் . தான் என்ன அழிச்சாட்டியம் செய்தாலும் துணை தன்னை மட்டுமே நம்பி இருக்கவேண்டும் என நினைப்பார்கள் . இந்த ரகத்தினர் ' நார்சிஸ்டிக் லவ் அடிக்ட்ஸ் '. இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது . இவர்களின் பிரச்னையே அநியாயத்துக்கும் இவர்களுக்கு லவ் தேவைப்படும் . காதலுக்காக நாயாய் பேயாய்த் திரிவார்கள் . ஆனால், தான் காதலிக்கிற ஆள் தன்னுடன் நெருக்கமானால் அலறியடித்து ஓடுவார்கள் . இருப்பது போக இன்னொரு காதலுக்கும் ஏங்கித் தவிப்பார்கள் . இதுவும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது !
--- ஷண்மதி . போதை விகடன் . 16 / 12 / 2009.

Thursday, June 9, 2011

அந்த ஏழு கடல்கள் !

ஐரோப்பிய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஏழு கடல்கள் , ' பாரசீக வளைகுடா, கருங்கடல், காஸ்பியன் கடல், செங்கடல், மத்தியதரைக் கடல், அட்ரியாடிக் கடல், அரபிக் கடல் ஆகியவை .
அரேபியர்களின் ' ஆயிரம் இரவு ' கதைகளின்படி, ' அரபு நாட்டில் இருந்து சீன தேசத்துக்குப் போக பாரசீக வளைகுடா, கம்பத் வளைகுடா, வங்காள விரிகுடா, மலாக்கா ஜலசந்தி, சிங்கப்பூர் ஜலசந்தி, தாய்லாந்து வளைகுடா, தெற்கு சீனக் கடல் ஆகிய ஏழு கடல்களைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற குறிப்பு காணப்படுகிறது
காலனி ஆதிக்கச் சமயத்தில் ஐரோப்பியர்கள் கீழை நாடுகளான இந்தோனேஷியாவைத் தேடி வந்தபோது, பாண்டா கடல், செலிபஸ் கடல், ஃப்ளோர்ஸ் கடல், ஜாவா கடல், தெற்கு சீனக் கடல், சுலூ கடல், டைமோர் கடல் போன்ற ஏழு கடல்கள் வழியாகத்தான் வந்தார்களாம் ..
நவீனயுகத்தில் வட, தென் அட்லான்டிக் பெருங்கடல்கள், வட, தென் பசிபி பெருங்கடல்கள், இந்தியப் பெருங்கடல்கள், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல்கள் ஆகிய ஏழு பெருங் கடல்களையே பிரதான கடல்கள் என்கிறார்கள் .
---பா. முருகானந்தம் , . கடல் விகடன் , இணைப்பு - 9 / 12 / 2009

Wednesday, June 8, 2011

வேலையில் டென்ஷனா ?

வேலையில் டென்ஷனா ... கொஞ்சம் விசிலடிங்க . மனநல நிபுணர்கள் அட்வைஸ் .
டென்ஷனான வேலை , கடினமான உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் , ரிலாக்சாக வேலையை பார்க்க எளிய வழி உள்ளது . பிடித்தமான பாடல்களை பாடலாம் அல்லது சில நிமிடங்களுக்கு ஒருமுறை விசில் அடியுங்கள் .
இதை சொன்னால் சர்ச்சைக்குரிய விஷயம் என்று நினைக்கக்கூடும் . ஆனால் , உள்ளிருந்து காற்றை இழுத்து விசில் அடிப்பதால், சோர்வடைந்திருந்த மூளை நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவது அறிவியல்ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
பாடுவதாலும் இதே பலனை அடையமுடியும் . கால்பந்து போட்டியில் சிக்கலான பெனால்டி கிடைத்தபோதும் , முக்கியமான தேர்வு எழுதும்போதும் இதை செய்யச் சொல்லி பரிசோதிக்கப்பட்டது . பாடியதாலோ அல்லது விசில் அடித்ததாலோ ரிலாக்ஸ் ஆனது தெரியவந்தது . இப்படி ஏதாவது ஒன்றை செய்யும்போது வழக்கமான வேலைச்சுமை பற்றிய பதற்றத்தில் இருந்து மூளை பிரேக் எடுத்துக் கொள்கிறது . அதனால் , பணியில் கூடுதல் கவனமும் , எளிமையும் ஏற்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது .
அமெரிக்காவைச் சேர்ந்த மனநல நிபுணர் சியான் பெய்லாக் , சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் . இவரது தலைமையில் ரிலாக்ஸ் செய்யும் வழிகள் பற்றி நடந்த ஆய்வு முடிவில் கூறினர் .
--- தினகரன் , 23 செப்டம்பர் 2010 .

Tuesday, June 7, 2011

பீர் புரொடக்க்ஷன் !

* பீரின் வரலாறு, தயாரிப்பு முறை அனைத்தும் தியரி பாடங்கள்தான் . பார்லி, ஹாப்ஸ், ஈஸ்ட், நீர் இந்த நான்கின் கலவைதான் பீர் . நீரில் பார்லியை மசித்துக் கொதிக்கவைத்து ,பின்பு ஈஸ்ட் சேர்த்து நொதிக்கவைத்து கடைசியாக ஹாப்ஸ் எனப்படும் ஒரு தாவர வகையைச் சேர்த்தால் பீர் தயார் .
* ' 86 சதவிகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள் ' என்கிறது ஒரு சர்வே !
* குடிமகங்களை நாலு வகைகளாகப் பிடிக்கலாம் . ஒரு மாதம் முழுக்க ஒருவர் குடிக்கவே இல்லையென்றால் ' white zone '. அதாவது, சமத்து என்று அர்த்தம் . ஒன்று முதல் ஏழு யூனிட்டுகள் குடித்தால் ' green zone '. ( ஒரு யூனிட் என்பது பிராண்டி விஸ்கி வகையறாக்களில் 30 மி.லி. ) அவர் கட்டுப்பாடான நிலையில்தான் இருக்கிறார் . 8 முதல் 20 யூனிட்டுகள் வரை குடித்தால் ' amber zone '. அவரைக் கண்காணிப்பது அவசியம் . 21 யூனிட்டுகளுக்கு மேல் சென்றால் ' red zone '. உடனடியாக அவர் குடிப்பதற்குத் ' தடா ' போட வேண்டும் . பாரதத் திருனாட்டில் பத்துப் பேருக்கு எட்டுப் பேர் ' தடா ' ( red zone ) லிமிட்டுக்குள் வருபவர்கள் .
* ' கர்நாடகாவில் மதுக்கடைகள் மூலமாக வருமானத்தில் 60 சதவிகிதம் குடிப்பழக்கப் பாதிப்புகளைச் சரி செய்யவே செலவழிக்கப்படுகிறது ' என்கிறது ஓர் ஆய்வு . ' இந்தியாவின் பெரும்பாலான சாலை விபத்துகளுக்குக் காரணம் ' டிரங்க் அண்ட் டிரைவ் ! ' என்கிறது யுனெஸ்கோ புள்ளிவிவரம் .
* உலகிலேயே மிகப் பெரிய ' விஸ்கி சந்தை ' எது தெரியுமா ? நமது பாரதம் தான் . தகவல் உபயம் : வர்த்தக மையம் !
* 1970 -ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன்தான் சிகரெட் டப்பாக்களின் மேல் ' எச்சரிக்கை ' வாசகம் எழுதும் சட்டத்தைக் கொண்டுவந்தார் .
* உங்கள் குழந்தை ஹோம்வொர்க் செய்யும்போது ஏதேனும் தவறு வந்தால் அழித்துத் திருத்தப் பயன்படுத்தும் வொயிட்னர் மீது எதற்கும் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள் . ஏனென்றால் , இன்றைய புத்திசாலிக் குழந்தைகள் அதைப் போதைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர் .
--- போதை விகடன் . 16 / 12 / 2009.

Monday, June 6, 2011

எம்.எஸ். விஸ்வநாதன் .

இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ். வி - யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள் .
கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928 ஜூன் 17 ல் பிறந்தவரின் அன்புக்கு உகந்த ஜானகி அம்மாள் என்ற மனைவி . கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் . லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள் . ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை !
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமை இவருக்குத்தான் . எகிப்திய இசையைப் ' பட்டத்து ராணி ' பாடலும் , பெர்சியன் இசையை ' நினைத்தேன் வந்தாய் நூறு வயது 'விலும் , ஜப்பான் இசையைப் ' பன்சாயி. காதல் பறவை 'களிலும் , லத்தீன் இசையை ' யார் அந்த நிலவிலும் ', ரஷ்ய இசையைக் ' கண் போன போக்கிலே கால் போகலாமா 'விலும் , மெக்சிகன் இசையை ' முத்தமிடும் நேரமெப்போ ' பாடலிலும் கொண்டுவந்தார் !
' நெஞ்சில் ஓர் ஆலயம் ' படத்தில் இடம்பெற்ற ' முத்தான முத்தல்லவோ ' பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல் . ' நெஞ்சம் மறப்பதில்லை ' பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது !
--- நா. கதிர்வேலன் . ஆனந்த விகடன் . 22 . 9 . 2010.

Sunday, June 5, 2011

கடல் எல்லை....பெரும் தொல்லை !

ஒவ்வொரு நாடும் , அதன் கடற்கரையில் இருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தன் எல்லையாக்கிக்கொள்ளலாம் . 12 நாட்டிகல் மைல் என்பது உத்தேசமாக 22.2 கி. மீ. தூரம் . இந்த 22 கி. மீ. தூரத்துக்கும் முதலாளி அந்த நாடு தான் . ஆனால் , இந்த வழியாக பிற நாட்டுக் பயணக் கப்பல்கள் போன்றவை செல்லலாம் . ஒருவேளை 22 கி. மீ.க்குள் இன்னொரு நாட்டின் எல்லை வந்தால் என்ன செய்வது ? அதுதான் நமக்கும் இலங்கைக்கும் உள்ள பிரச்னை .
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 30 கி. மீ.தான் . இரண்டு நாட்டின் கடல் எல்லைகளும் ஒன்றின் மீது ஒன்றாக இருக்கின்றன . இத்தகைய சூழலில் இரு நாடுகளும் தங்களுக்குள் பேசி எல்லையை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் .
'எனக்கு 22 கி. மீ. தேவை இல்லை . கொஞ்சம் போதும் ' என நினைத்தால் பிரச்னை இல்லை . சிங்கப்பூர் , ஜோர்டான் போன்ற நாடுகள் எல்லாம் ' எங்களுக்கு 6 கி. மீ. தூரம் போதும் ' என விரும்பி ஏற்றுக்கொண்டு இருக்கின்றன . இரண்டு நாடுகளுமே எனக்கு அதிகம் இடம் வேண்டும் என குடுமிப்பிடி சண்டை போட்டால் நிலைமை சிக்கலாகும் .
இந்த 22 கிலோ மீட்டரையும் தாண்டி இன்னும் ஒரு 22 கி. மீ. தூரத்தை நாடுகள் தங்கள் ' கண்காணிப்பில் ' வைத்திருக்கலாம் .இது பெரும்பாலும் போர்கள் அண்டை நாடுகளிலிருந்து வரும் ஆபத்து போன்ற சிக்கல்களுக்காக ஏற்படுத்தப்பட்டது . கடலில் ரோந்து போக வேண்டும் , தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றால் இந்த எல்லையைப் பயன்படுத்தலாம் .
இந்த இரண்டு எல்லைகளையும் தாண்டி , மூன்றாவதாக ஓர் எல்லையும் உண்டு . அது பொருளாதார எல்லை . கரையில் இருந்து சுமார் 393 கி. மீ. தொலைவில் உள்ள எல்லா கடல் வளங்களும் அந்த நாட்டுக்கே சொந்தம் . வேறு நாடுகள் கப்பல் ஏறி வந்து உரிமை கொண்டாடமுடியாது . மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற சகல பொருளாதார உரிமைகளுக்கும் கடிவாளம் அந்தந்த் நாட்டிடமே . இதற்கு மேலும் எல்லையை நீட்டிக்க விரும்பினால், சர்வதேசக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் .
--- சேவியர் . கடல் விகடன் , இணைப்பு - 9 / 12 / 2009 .

Saturday, June 4, 2011

மிளகாயில் லிப்ஸ்டிக் !

மிளகாயில் லிப்ஸ்டிக் விஞ்ஞானிகள் தகவல் .
ரசாயன பொருட்களை தவிர்த்து இயற்கை முறையில் லிப்ஸ்டிக் தயாரிக்க புதுவகை மிளகாய் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
இதுநாள் வரை ரசாயன பொருட்களை பயன்படுத்திதான் கம்பெனிகள் உதட்டு சாயத்தை தயாரித்து வருகின்றன . ஆனால் , இனிமேல் மிளகாயை பயன்படுத்தியும் உதட்டு சாயத்தை தயாரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் . இந்திய வேளாண் விஞ்ஞானிகள் உதட்டுச்சாயம் தயாரிக்க பயன்படும் புதுரக மிளகாயைக் கண்டுபித்துள்ளனர் . வாரணாசியைச் சேர்ந்த இந்திய காய்கறி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த 5 ஆண்டுகள் தீவிர ஆய்வுகள் நடத்தி புதிய ரக மிளகாய் ஒன்றை கண்டுபிடித்து , அதற்கு ஐ.வி.பி.சி 535 என்று பெயரும் வைத்துள்ளனர் .
பார்க்க செக்கச் சிவந்த பழம்போல் இருக்கும் இந்த மிளகாயில் காரம் சுத்தமாக இருக்காது . எனவே இதை சமையலுக்குப் பயன்படுத்த முடியாது . இந்த மிளகாய் சிவப்பு மட்டுமல்லாமல் , மஞ்சள் , ஆரஞ்சு , இளஞ்சிவப்பு என மேலும் பல வண்ணங்களிலும் உருவாக்கி உள்ளனர் அதுமட்டுமல்லாது கேக், ரசகுல்லா போன்றவற்றை தயாரிக்க உதவும் கேசரிப்பவுடருக்கு பதிலாகவும் , இந்த மிளகாயைப் பயன்படுத்தி இயற்கை சாயத்தை உருவாக்க முடியும் .
--- - தினமலர் .18 / 9 /10 .

Friday, June 3, 2011

வாட்டர் பியூரிபயர்கள் ' வேஸ்ட் '

வாட்டர் பியூரிபயர்கள் ' வேஸ்ட் ' : ஆய்வில் அம்பலம் .
சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான வாட்டர் பியூரிபயர்கள் கிருமிகளை அழிப்பதில்லை என்று ஆய்வில் அம்பலமாகியுள்ளது . பெரும்பாலான நோய்களுக்கு அசுத்தமான தண்ணீர்தான் காரணம் என்று கூறப்படுகிறது . சுத்தமான தண்ணீர் கிடைப்பது நகர்புறங்களில் அரிதாகி வருவதால் மக்கள் வாட்டர் பியூரிபயர் எனப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர் .சந்தையில் இந்த சாதனங்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் வாட்டர் பியூரிபயர்கள் பிராண்டுகள் புற்றீசலாய் கிளம்பியுள்ளன . தண்ணீரில் உள்ள அனைத்துவிதமான கிருமிகளையும் அழிக்கும் என்று இவை தங்களை விளம்பரப்படுத்திக்கொள்கின்றன .
இந்நிலையில் , சந்தையில் கிடைக்கும் வாட்டர் பியூரிபயர்கள் உண்மையிலேயே எல்லா கிருமிகளையும் அழிக்கிறதா என்று புனேவை சேர்ந்த தேசிய வைராலஜி மையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது . பிரபல மருத்துவ விஞ்ஞானிகள் அடங்கிய குழு இதற்காக அமைக்கப்பட்டது . அரசு உதவி பெற்று இயங்கும் இந்த அமைப்பு நியமித்த குழுவின் ஆய்வு முடிவுகள் அதிரவைப்பதாக உள்ளது . ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 8 வாட்டர் பியூரிபயர்களில் இரண்டு மட்டுமே அனைத்து வைரஸ்களையும் அழித்திருந்தது . மற்ற ஆறிலும் பகுதியளவே கிருமிகள் அழிந்திருந்தன . ஒவ்வொரு பிரபல பிராண்டில் இருந்தும் ஒரு தயாரிப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது . கார்பன் பில்டர் , செராமிக் கேண்டில் பில்டர் உள்லிட்ட முக்கிய பாகங்களின் செயல்பாடுகள் நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டன .
--- - தினமலர் .18 / 9 /10 .

Thursday, June 2, 2011

செயற்கை கர்ப்பப்பை .

விரைவில் வருகிறது செயற்கை கர்ப்பப்பை .
கல்யாணம் நடந்து பலவருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சில பெண்கள் இருக்கிறார்கள் . இவர்களில் பலருக்கு கர்ப்பப்பை கோளாறு இருப்பதால்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன . இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது .
இயற்கையான கர்ப்பப்பை போன்றே செயற்கையான கர்ப்பப்பையை இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது . தகுதிவாய்ந்த பெண்கள் மகப்பேறு காலத்தில் கொடுத்த செல்களைக் கொண்டு , ஆய்வகத்தில் அந்த செல்களை பகுப்பாய்வு செய்து கடினமாக உழைத்து செயற்கை கர்ப்பப்பையை உருவாக்கியுள்ளனர் . இந்த செயற்கை கர்ப்பப்பையிலும் இயற்கையைப் போன்றே கரு முட்டைகளை உருவாக்கமுடியும என்பதால் , கருமுட்டை உருவாகாத குறைபாடு உள்ள பெண்களுக்கு இந்த செயற்கை கர்ப்பப்பையை பொருத்தினால் உடனே கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது .கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்ட பெண்கள் அதை அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் . அவர்களுக்கும் இந்த செயற்கை கர்ப்பப்பை உதவிகரமாக இருக்கும் .
செயற்கை கர்ப்பப்பை உருவாக்க தகுந்த உடல் திறன் கொண்ட ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை செல் ஒன்று வாங்கப்பட வேண்டும் . பின்னர் , அதை தேவைப்படுவோரின் உடலில் செலுத்தி தேன்கூடு போன்ற முறையில் பல செல்களாக உருவாக்கி செயற்கை கர்ப்பப்பை உருவாக்கி , அதன் பிறகு செயற்கை கர்ப்பப்பையில் கரு முட்டைகளையும் உருவாக்கி கரு வளரச் செய்வதற்கு தேவையான சிகிச்சை அளித்தால் கரு வளரும் .
--- தினமலர் .18 / 9 /10 .

Wednesday, June 1, 2011

தியாகம் ! ?

" எல்லா தியாகங்களும் அங்கீகரிக்கப்படுகின்றனவா ? "
" அப்படிச் சொல்லிவிட முடியாது . 1984 - டிசம்பர் 3-ம் தேதி போபால் நகரின் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மெத்தில் ஐசோ சயனேட் என்ற விஷவாயு கசிந்து , ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்துகொண்டு இருந்த தருணத்தில் , போபால் ரயில்வே ஸ்டேஷனில் துருவே என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி . போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோவில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார் . அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது . அவர் கண் முன்னால் ரயில்வே ஸ்டேஷனில் நின்ற நாய் ஒன்று சுருண்டு விழுந்தது . ரயில் நிலையத்தில் படுத்து உறங்கிக்கிடந்த பிச்சைக்காரர்கள் அலறி ஓடி விழுந்தார்கள் . துருவேக்கு ஏதோ விபரீதம் என்பது புரிந்தது . அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார் . எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்துவிடுவதுதான் அவரது நோக்கம் . ஆனால் , அந்த ரயில் ஏற்கனவே கிளம்பிவிட்டது . துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை . லக்னோ மும்பை ரயில் வந்தது . அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷவாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள் . ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள் . கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன . அந்தக் காட்சி துருவேயை நிலைகுலைய வைத்தது . பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார் . அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக்கிடந்தார் . அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு , ' எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம் ' என்று தகவல் அனுப்பத் தொடங்கினார் . அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக்கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாக போய்விடுமாறு அறிவுறுத்தினார் . மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு , இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்த்தார் . அந்த இரவு விடிந்தது . அடுத்த நாள் சிக்னல் அறையைத் திறந்தபோது , ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக்கிடந்தார் . துருவே மட்டும் இல்லை எனில் , போபால் விஷக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும் . ஆனால் , போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங் , நகரில் இருந்து 14 கி. மீ. ஓடோடிச்சென்று தப்பித்தார் . இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு அர்ஜுன் சிங்கைத் தெரியுமா , துருவேயைத் தெரியுமா? "
--- கே. திலீபன் , நாகப்பட்டினம் . ஆனந்த விகடன் . 15 / 9 / 10 .

ஒரு கிராம் சிந்தனை !

ஒரு கிராம் சிந்தனை !
Innovate -- இந்த வார்த்தைக்கு ' எதையேனும் புதிதாகக் கண்டு பிடிப்பது அல்லது அறிமுகப்படுத்துவது ' என்று அர்த்தம் சொல்கிறது அகராதி . அர்த்தம் ஐந்து வார்த்தைகளுக்குள் அடங்கிவிட்டது . ஆனால் , அதன் நீள அகல விஸ்தீரணம் எந்தக் கற்பனை எல்லைகளிலும் அடங்காதது .
* மாருதி சுஸுகி நிறுவனம் தான் தயாரிக்கும் கார்களின் எடையைக் குறைக்க முடிவெடுத்தது . கிட்டதட்ட 2,500 உதிரி பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்படும் காரின் எடையை அசெம்ப்ளிங் யூனிட் மட்டும் நினைத்தால் குறைக்க முடியாது . அதேசமயம் , எல்லா உதிரி பாகங்களின் எடையைச் சகட்டுமேனிக்கும் குறைக்க முடியாது . அப்படிக் குறைத்தால் காரின் பெர்ஃபார்மன்ஸ் சீர்குலைந்துவிடும் . பிரச்னைக்கு தீர்வு தேடி முட்டிக்கொண்டு இருந்தபோது , ஒருவர் மூளையில் பல்ப் . ' 2,500 உதிரி பாகத் தயாரிப்பாளர்களிடமும் அவரவர்கள் தயாரித்து அனுப்பும் பாகங்களில் ஒரே ஒரு கிராம் எடையைக் குறைத்துத் தயாரிக்கச் சொன்னால் என்ன? ' சொன்னார்கள் . காரின் எடையில் 2.6 கிலோ எடை குறைந்தது .
பெர்ஃபார்மன்ஸும் மைலேஜும் அதிகரித்தது . அந்த ஒரு கிராம் சிந்தனைதான் இன்னோவேஷன் !
* அப்போலோ மருத்துவமனைகள் இந்தியாவில் பரவலாகச் செயல்படத் துவங்கிய காலகட்டத்தில், மிகப் பெரிய எதிப்பினை எதிர்கொண்டது . ' நீங்கள் நோயாளியா ? எங்களிடம் வாருங்கள் ... நாங்கள் உங்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கிறோம் ' என்று விளம்பரப்படுத்த முடியாது . ' ஆம்... நான் நோயாளி ' என்று யார் தானாகவே முன்வந்து ஒப்புக்கொள்வார்கள் . அதிலும் இந்தியர்களின் மனப்போக்கு இந்த விஷயத்தில் உலகப் பிரசித்தம் . ' நான் மரணமற்றவன் .என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் மரணம் நிகழும் . நான் சஞ்சீவி ! ' என்ற மனநிலையுடனேயே வளைய வருபவர்களிடம் எந்தப் பருப்பும் வேகாது என்று அவநம்பிக்கைக் குரல்கள்தான் எழுந்தன . ' மாத்தி யோசி ' தத்துவம்தான் அப்போது அப்போலோவின் துணைக்கு வந்தது . ' நோயாளிகள்தான் மருத்துவமனைக்குச் செல்வார்கள் ' என்பது பொதுவிதி . ' தன் ஆயுள் முழுக்க நடை உடையுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் , அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் மகிழ்ச்சியுடன் உலாவுவார்கள் என்பது புது விதி ' என்று விளம்பரப்படுத்தினார்கள் . இப்போது அப்போலோ எப்போதும் ஹாஸ்பிட்டல் ஃபுல் !
இதில் சில சங்கதிகள் மிக அந்நியப்மற்றதாகத் தோன்றுபவர்களுக்கு மட்டும் ஒரு பின்குறிப்பு :
' நிலவில் மனிதன் காலடி எடுத்துவைக்க முடியும் ' என்று தோன்றிய முதல் சிந்தனைப் பொறியை நினைத்துக்கொள்ளுங்கள் !
--- கி. கார்த்திகேயன் . ஆனந்த விகடன் . 15 / 9 / 10 .