Wednesday, August 31, 2011

நரகம் நிரந்தரம் அல்ல !

* '' சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என கர்மாக்கள் மூன்று வகைப்படும் . அவற்றை முற்றிலுமாக அனுபவித்து, இனி அனுபவிக்க ஏதுமில்லை என்ற நிலையை அடைபவர்களுக்கு பூமியில் மறுபிறவி வாய்ப்பது இல்லை ! ' என்கிறது கடோபநிஷத் * மறுபிறவி சாத்தியம் என்பதற்கு உலகில் வாழும் ஆதாரங்களாகக் காட்டப்படுவது புத்த மதக் குருக்களான தலாய் லாமாக்களைத்தான் . தலாய் என்றால் கடல் . லாமா என்றால் குரு . கடலளவு விஷயங்களைக் கற்றுக் கொடுப்பவர் என்று பொருள் . ஒரு தலாய் லாமா இறந்த பிறகு, அவரது ஆன்மா மறுபடியும் பிறக்கும் ' என்பது தலாய் லாமாக்களின் நம்பிக்கை . * .ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமலேயே அவனால் அந்தப் புது மொழியைப் பேச முடிந்தால், அதற்கு ' ஸெனோக்ளாஸி ' என்று பெயர் . உதாரணமாக, ஜெர்மன் மொழி கற்றிடாத அல்லது ஜெர்மனுக்கு ஒருமுறைகூடச் சென்றிடாத, ஜெர்மன் மொழி பேசுபவர்களைக்கூட அறிந்திடாத ஒருவர் ஜெர்மன் மொழியைச் சரளமாகப் பேசினால் அவரைத்தான் ' ஸெனோக்ளாஸ் ' என்கிறர்கள் . ' ஸெனோ ' என்றால் அந்நியம் , ' க்ளாஸி ' என்றால் மொழி அல்லது நாக்கு என்று அர்த்தம் . இப்படி உலகம் எங்கும் நிறைய ஸெனோக்ளாஸ்கள் இருக்கிறார்கள் . --- ஜென்மம் விகடன் இணைப்பு . 14 . 4 . 10 .

Tuesday, August 30, 2011

உயிர் துற... உண்மை திற !

தான் இறக்கப்பொகிறோம் என்ற நம்பிக்கையை முழுதாகக் குற்றவாளிக்குத் தருவதன் மூலம் அவனிடம் இருந்து உண்மைகளைக் கறக்கும் இந்த முறையை ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்துகின்றன . இதற்காகப் பயன்படுத்தப்படும் ஆளுயர நீர்த் தொட்டிகள்தான் இந்த ' சென்ஸரி டெப்ரிவேஷன் ' தொட்டிகள் . இவற்றில் குற்றவாளியை நிர்வாணமாக உள்ளே தள்ளி மூடிவிடுவார்கள் . தண்ணீர் திறந்துவிடப்பட்டு முழுக்க நீர் நிரப்பப்படும் . நீர்மட்டம் உயர உயர, நீரில் மூழ்கி தான் இறக்கப் போகிறோம் என்ற பயம் குற்றவாளிக்கு ஏற்படும் . அப்போது குற்றவாளியிடம் கேட்கும் கேள்விக்குத் தானாகவே பதில் வந்துவிடும் . அதையும் மீறி முரண்டு பிடித்தால், முழுக்க நீரால் சூழப்படுவார்கள் . அப்புறம் என்ன மரணம்தான் என்கிறீர்களா ? அதுதான் இல்லை . இந்த நீரில் கலந்திருக்கும் பெர்ஃப்ளூரோ கார்பன் என்ற வேதிப்பொருளை நம் நுரையீரல் சுவாசிக்கும் . ஆனால், நம் மூளையோ, ' நீரில் மூழ்கினால் மரணம் ' என்றுதான் சொல்லும் . அதோடு கேட்கும் திறன், தொடுதிறன், பார்க்கும் மற்றும் நுகரும் திறன் அனைத்தும் தற்காலிகமாக மறைந்துவிடும் .இந்த நீரில் இருக்கும் எப்சம் உப்பு, நம் உடலை இறந்த உடல் போலவே மிதக்கவைக்கும் . இதனால் குற்றவாளியின் மனம் தான் இறந்துவிட்டதாகவே நினைக்கும் . பத்து நிமிடங்கள் கழித்து தொட்டியைத் திறக்கும்போது, தான் உயிரோடு இருக்கிறோமா, இல்லையா என்பதே குற்றவாளிக்குத் தெரியாது . கிட்டத்தட்ட அல்ல... நிச்சயமாகவே இது ஒரு மறுபிறவி விசாரணைதான் ! --- தீபக் , ஜென்மம் விகடன் இணைப்பு . 14 . 4 . 10 .

Monday, August 29, 2011

மனித , மிருக கலவி !

மிருக கலவிக்கும், மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு . எல்லா மிருகங்களும் முகமே பாராமல்தான் கூடிப் புணரும் . அதுவும் இனப்பெருக்க காலத்தில் மட்டும், எந்தவித சுகமும் உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்புச்சப்பு இல்லாத சம்பிரதாயமாக இருக்கும் . ஆனால், முகம் பார்த்து, இன்னாருடன் உறவுகொள்கிறோம் என்று அறிந்து, பருவ காலம் மட்டும் அல்லாமல், தனக்குப் பிடிக்கும்போது எல்லாம் ஆசைக்காக உறவுகொள்ளும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்குத்தான் உண்டு . ஒன்று, மனிதன் . இன்னொன்று, பொனோப்போ . நடத்தையிலும் மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறது என்றால், மரபு அணுக்களில் ? பரிசொதனை செய்துபார்த்தால் ஆச்சர்யம் . ஆனால், உண்மை . பொனோப்போக்களின் மரபு அணுப்புரதங்கள் 98 சதவிகிதம் மனிதர்களைப்போலவே இருப்பதைக் கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள் . ஆக, மரபு அணுரீதியில் பார்த்தால் மனிதர்களும், பொனோப்பொக்களும் சகோதர இனங்கள் . இவற்றுக்குள் இனக் கலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது . ஆனால், இதை எல்லாவற்றையும்விட மிகப் பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா ? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன . இவை மட்டும் அல்ல; நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பன்சிகளும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன . அப்படியானால், மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூக முறையைத்தான் கடைபிடித்து இருப்பார்கள் என்றுதானே அர்த்தம் ! -- ' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .

Sunday, August 28, 2011

பெண்ணுக்கு அதிக திறமை !

குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள் . பெண்கள் வேட்டைக்குப் போனார்களா ? அது ஆண்களின் வேலை அல்லவா என்று ஆச்சரியம் எல்லாம் படக் கூடாது . எல்லா விலங்குகளிலும் ஆணைவிடப் பெண்தான் அதிக வேட்டுவத் தன்மைகொண்டு இருக்கும் . கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் . அப்பிராணி, கடிக்காது . ஆனால், பெண் துரத்தித் துரத்திக் கடித்து மலேரியாவைப் பரப்பும் . காரணம், பெண்ணுக்குத்தான் தன் குட்டிகளைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை இருக்கிறது . இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத் திறன், அதிக பார்வைக் கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித் திறன், அவ்வளவு ஏன் ... துரித கதியில் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றைத் தகவமைத்து இருக்கிறது . இந்தப் புலன் நுணுக்கத்தினாலேயே ஆணைவிட, பெண் அதிக திறமையுடன் வேட்டையாட முடிகிறது . --- ' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .

Saturday, August 27, 2011

வேண்டாம் இனி கண்ணாடி !

இனி கண்ணாடி என்ற பொருள் அனேகமாக யாருக்கும் தேவைப்படாது . ஏனென்றால் முகத்தில் கொஞ்சம் பவுடர் அதிகமாக இருக்கிறது, இடது ஓரம் எண்ணை வழியுது என்று குறைகளையும், நிறைகளையும் சுட்டிக் காட்டுவதற்கு என்றே வந்துவிட்டது பிரத்யேகமான செல்போன் . சந்தைக்குப் புதிதாக வந்துள்ள ஐ. போனில்தான் இந்தவசதிகள் உள்ளன . இந்த ஐபோனை உங்கள் முகத்தின் முன் வைத்து ஆன் செய்தால் போதும், முக அழகுக்கு பத்து மதிப்பெண்கள் வைத்து நிறைகுறைகளை சொல்லிவிடும் . அதிக மதிப்பெண் கிடைத்தால் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம், குறைவான மதிப்பெண் கிடைத்தால் நீங்கள் அசிங்கமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் . இந்த ஐபோனை டாப்பர் ஜென்டில்மேன் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது . இதில் உள்ள கேமரா, முக அழகை ஸ்கேன் செய்து, செல்போனில் உள்ள சாப்ட்வேர் புரோக்கிராமில் ஒத்துப்பார்க்கிறது . அதற்கு ஏற்ப முகத்தின் நிறைகுறைகளை மதிப்பீடு செய்து விடை சொல்கிறது . ஐபோனின் இந்த முடிவு மிகச் சரியாக இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் . உலகின் மிக கிளாமரான சிலரை இந்த போனில் பரிசோதனை செய்தபோது குழப்பமான முடிவு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . ஆனால், அது எந்த அளவு உண்மை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை . --- தினமலர் , அக்டோபர் 20 , 2010 .

Friday, August 26, 2011

ஏ.டி.எம் கார்டு பாதுகாப்பானதா ?

' உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த நீங்கள் கொடுக்கும் கார்டை electronic data capture இயந்திரத்தில் ஸ்வைப் செய்வார்கள் . அப்போது கார்டில் உள்ள தகவல்கள் அந்த இயந்திரம் மூலமாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனையைத் தொடங்கலாமா என்பதை முடிவு செய்யும் . அந்த இயந்திரம் போலவே கார்டில் உள்ள தகவல்களைப் பிரதியெடுக்கும் இன்னொரு இயந்திரம் இருக்கிறது . அதை skimmerனு சொல்வாங்க . கார்டை ஸ்வைப் செய்யக் கொடுத்துட்டு நீங்க அதைக் கவனிக்காமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், மறைவிடத்தில் இருக்கும் ஸ்கிம்மர் இயந்திரத்தில் ஒரு முறை உங்கள் கார்டைத் தோய்த்துவிட்டால், தேவையான தகவல்களை அந்த இயந்திரம் பிரதி எடுத்துவைத்துக்கொள்ளும் . ஒரே ஒரு ஸ்கிம்மர் இயந்திரத்தில் 100 கார்டுகளின் தகவல்களைப் பதிந்துகொள்ள முடியும் . பிறகு, அந்தக் தகவல்களைவைத்து டம்மி கார்டு தயாரிப்பார்கள் . சம்பந்தப்பட்ட வங்கியில் தங்களின் கைகூலியாக வேலை செய்யும் நபர் மூலம், கார்டு உரிமையாளர் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் . அந்த டூப்ளிகேட் கார்டு மூலம் ஏ.டி. எம்.ல் பணம் எடுக்க முடியாது . ஆனால், ஆன்லைன் வர்த்தகம் மூலம் விமான, டிரெய்ன் டிக்கெட் பதிவது, ஷாப்பிங் விண்டோ மூலம் பொருட்கள் வாங்குவது போன்ற காரியங்களை மேற்கொள்ளலாம் .வங்கியில் உள்ள இவர்களின் பார்ட்னர் மூலம் ' ஒன்டைம் பாஸ்வேர்டு ' பெற்று பரிவர்த்தனைகளை முடித்துவிடுவார்கள் . மாதாந்திர வங்கி ஸ்டேட்மென்ட் மூலமாகவோ அல்லது அக்கவுன்டில் பணம் குறைவதை உணரும்போதோதான் இந்த மோசடியை கார்டின் நிஜ உரிமையாளர் உணர்ந்துகொள்ள முடியும் . ஆக, நீங்கள் உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டை மற்றொரு நபரிடம் கொடுக்கும்போது மிகவும் உஷாராக இருங்கள் ! " என்கிறார் சென்னை மாநகர போலீஸ் சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் . ---பா. பிரவின்குமார் . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .

Thursday, August 25, 2011

தெரியுமா ? தெரியுமே !

* சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் ' பதுக்கி இருக்கும் கறுப்புப் பணம் ?! ஜஸ்ட் ஒன்றரை ட்ரில்லியன் டாலர்கள்தான் ! ஒரு ட்ரில்லியன் ( Trillion ) என்பது ஆயிரம் பில்லியன் ( Billion ) ஒரு பில்லியன் என்பது 100 கோடி . மொத்தமாக சுமார் ரூ. 50 லட்சம் கோடி ! வறுமை நாடா இந்தியா ?! * ' சச்சின் எப்போது எல்லாம் சீக்கிரம் அவுட் ஆகிறாரோ அப்போதெல்லாம் இந்திய பங்குச் சந்தை சுமார் 20 % இறங்குகிறது ' என்று ஆச்சரியத்தகவல் அளித்திருக்கிறது, ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் . ' எப்படி... அப்படி ? ' என்று கேட்டால், ' சச்சின் அவுட் ஆனால், முதலீட்டாளர்களின் மனம் பாதிக்க்ப்படுகிறது . அதனால் இந்தச் சரிவு ! என்று வருகிறது பதில் . * ஒரு பெண் பல புருஷர்களோடு கூடிக்கொள்ளும் முறையைத்தான் பாலி ஆண்ட்ரி ( poly andry ) என்போம் * நத்தைகளின் வேகம் மணிக்கு 0.048 கி.மீ . உலகின் மிக மெதுவான உயிரினம் நத்தை .. --- ஆனந்த விகடன் 20 . 10 . 10 & 3 . 3 . 10 .

Wednesday, August 24, 2011

சாப்பாடு .

சுடச்சுட உணவு இருந்தால் தாத்தா அதிகம் சாப்பிடுவார் அம்மா உணவு பரிமாறினால் அப்பா அதிகம் சாப்பிடுவார் தூக்கி வைத்துக்கொண்டு. உணவு ஊட்டினால் தங்கை அதிகம் உண்ணுவாள் தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தா;ல் தம்பி அதிகம் சாப்பிடுவான் சமைத்து மீதமானால் மட்டுமே அம்மா அதிகம் சாப்பிடுவாள் ! --- கோ. மோகன்ராம் . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .

Tuesday, August 23, 2011

கங்கா ஸ்நானம் .

தலங்களுள் முதன்மை பெற்று விளங்குவது ... காசி . இங்கு வாரணா, அஸி என்ற இரு நதிகள் சங்கமம் ஆவதால் இதை வாரணாசி என்பார்கள் . காசிக்கு நிகரான பதியும் இல்லை ! கங்கைக்கு நிகரான நதியும் இல்லை ! காசியைப் பற்றி நூல்கள் சொல்வது : காசியை நினைத்தாலும் முக்தி, காசி என்று உரைத்தாலும் முக்தி, காசியைக் கண்ணால் கண்டாலும் முக்தி, காசியைக் காதால் கேட்டாலும் முக்தி, காசியில் வசித்தாலும் முக்தி, காசியில் வசிப்போரைக் கண்டு வணங்கினாலும் முக்தி . இந்த ஸ்தலத்தை பூலோக கயிலாயம் என்பார்கள் . இங்குள்ள காசிவிஸ்வநாதன் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று . புண்ணிய பாரதத்தில் முக்தி ஸ்தலம் 7 . அவை : காசி, காஞ்சி, மதுரை, ஹரித்வார், மாயா, அயோத்தி, துவாரகை என்னும் தலங்கள் ஆகும் . இவற்றில் முதன்மை வகிப்பது காசி . சக்தி பீடங்களுக்குள் இதுதான் முதல்பீட தலம் . இதற்கு ' கௌரிமுகம் ' என்ற திருப்பெயரும் உண்டு . இங்கு இறந்தோருக்கு அன்பால் முக்தியருளுவதால் ' அவிமுக்தம் ' என்ற பெயரும் உண்டு . ' பனாரஸ் ' என்னும் மன்னன் இந்த நகரை புதுப்பித்தான் . அதனால் பனாரஸ் என்றும் பெயர் ஆனது . மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் முதன்மையான ஸ்தானம் பெறுகிறது . காசி வந்தால் ஒரு இரவு தங்கினால்தான் புண்ணியம் நமக்குக் கிடைக்கும் . கங்கை தெற்கு நோக்கி ஓடுவது இயல்பு, ஆனால் இங்கு அவள் வடக்கு நோக்கி ஓடுகின்றாள் . இங்குள்ள விஸ்வநாதருக்கு கங்கா ஜலத்தில் அபிஷேகம் செய்து... பில்வம் அர்ச்சித்து... மூலவரை தொட்டு வணங்கலாம் . கங்கை நதிக்கரையில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன . கட்டங்களை இங்கு ' காட் ' என்பார்கள் . முக்கியமான ஒரு விஷயம்... இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த ஜன்மாவில் ஒரு முறையாவது காசி கங்கை ஸ்நானம் செய்ய வேண்டுமாம் . ஏனெனில், இறந்த நம் பித்ருக்கள் கங்கைக் கரையில் நம் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பார்களாம் . அங்கு ஒருமுறையாவது பித்ரு கடன் செய்தால்தான் அவர்களுக்கு நற்பிறவி கிடைக்குமாம் . பாவம் ! நம்மை பெற்று, வளர்த்து, ஆளாக்கி, வாழவைத்த தெய்வங்களுக்கு ( தாங்களாக ஏதும் செய்து கொள்ள இயலாத சூட்சும உருவில் உலவும் அவர்களுக்கு ) நிச்சயம் பித்ரு கடன்பட்டிருக்கிறோம் . பெரிய கடன் இது . இதை எல்லோரும்னினைவில் வைத்துக் கொள்வோம் . ----சசிரேகை . அவள் விகடன் . நவம்பர் 7 , 2003 .

Monday, August 22, 2011

ரசித்த ஜோக் .

இணையத்தில் ரசித்த ஜோக் . Files -- Piles வித்தியாசம் என்ன ? Files -- உட்கார்ந்து பார்க்க வேண்டும் . Piles -- பார்த்து உட்கார வேண்டும் . -- அவள் விகடன் . நவம்பர் 7 , 2003 .

Sunday, August 21, 2011

டிப்ஸ் ... டிப்ஸ் ...

* தொலைபேசியில் நாம் டயல் செய்து நீண்ட நேரமாய் ' ரிங் ' ஆகியும் யாரும் எடுக்காமலும் தானாகவும் நிற்காத நிலையில் நாமாக வைத்துவிடும்போது, முதலில் கையால் கட் செய்து ரிங் நின்றவுடன் ரிசீவரை வைப்பதே நல்லது . மாறாக, நேரடியாக ரிசீவரை வைக்கும்போது நாம் காதிலிருந்து ரிசீவரை எடுத்து தொலைபேசியில் வைக்குமுன் உள்ள அந்த ஒரு சில நொடியில் எதிர் முனையில் எடுத்து, இணைப்பு கிடைத்துவிட்டால் ஒரு ' கால் 'க்கான கட்டணம் பதிவாகிவிடும் . * பிரெட் துண்டுகள் காய்ந்து விரைத்துவிட்டால், தோசை சுடும்போது தோசையை திருப்பி போட்டு அதன் மேல் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் அன்று வாங்கிய பிரெட் போல சாஃப்டாக இருக்கும் . --- அவள் விகடன் . செப்டம்பர் 12 , 2003 .

Saturday, August 20, 2011

டூ வீலர் திருட்டை தடுக்க ....

டூ வீலர் திருட்டை தடுக்க சாவிக்கு பதில் கைரேகை ! இரு சக்கர வாகனங்களின் திருட்டை தடுக்கும் வகையில் சாவியே இல்லாமல் பைக்கை இயக்கும் கருவியை கும்பகோணம் கல்லூரி மாணவர் விவேக்ராஜ் கண்டுபிடித்துள்ளார் . அந்த கருவி பற்றி விவேக்ராஜ் கூறுகையில் : " இந்த நவீன கருவியை பைக்கில் பொருத்தியவுடன் வீட்டில் உள்ள அனைவரது கை ரேகையும் பதிவு செய்ய வேண்டும் . அதேபோல் பைக் உரிமையாளரின் அனுமதியுடன் ரகசிய எண் அந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் . கைவிரல் ரேகை மற்றும் ரகசிய எண்ணை மாற்றிக்கொள்ளவும் முடியும் . இந்த கருவியை பொருத்தியுள்ள வாகனத்தை மற்றவர்களால் உருட்டிக் கூட செல்ல முடியாத வகையில் 3 விதமான தானியங்கி பூட்டுகள் பயன்படுத்தப்படுகிறது . முதலாவதாக போர்க் லாக் . இந்த லாக் மூலம் வண்டியில் உள்ள போர்க் லாக் தானாக பூட்டிக் கொள்ளும் . இரண்டாவது பேக்வீல் லாக் . இந்த முறையால் வண்டியின் பின் சக்கரம் எந்த சூழ்நிலையிலும் சுற்றாத வகையில் பொருத்தப்பட்டுள்ளது . மூன்றாவதாக எந்த தொழில் நுட்ப முறையிலும் இல்லாத வகையில் பெட்ரோல் லாக் அமைக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் வண்டியை ஸ்டாட் செய்தால் மட்டுமே டேங்கிலிருந்து பெட்ரோல் வரும் . இதனால் வாகன திருட்டை தடுப்பதுடன் பெட்ரோல் திருட்டையும் முற்றிலுமாக தடுக்க முடியும் . இந்த 3 லாக்குகள் ஒரே நேரத்தில் திறக்க அல்லது பூட்ட கைரேகை அல்லது ரகசிய எண்ணை பயன்படுத்திலால் மட்டுமே முடியும் . --- தினமலர் . அக்டோபர் 19 , 2010 .

Friday, August 19, 2011

உலகின் முதல் தங்கக் கோயில் .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் பாரத தேசத்தில் திகழ்ந்த முதல் பொற்கோயில் எது தெரியுமா ? தஞ்சைப் பெரிய கோயில்தான் ! ஆமாம் . 216 அடி உயரத்தில் நீண்டு நெடிதுயர்ந்து காணப்படும் விமானம் முழுவதையும் தங்கத்தாலேயே வேய்ந்து அழகு பார்த்தான் ராஜராஜசோழன் . இப்போது தங்கக் கோபுரம் எங்கே ? பிற்காலப் படையெடுப்புகளால் அத்தனையும் சூரையாடப்பட்டுவிட்டது . சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலை எப்படி தங்க நிறத்தில் ஜொலிக்கிறதோ அது போலவே பெரிய கோயிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, 216 அடி உயரத்துக்கும் தங்கக் கூரை அமைத்தான் . இப்போது காணப்படும் தஞ்சைப் பெரிய கோபுரம் முழுக்க முழுக்கத் தங்கமயமாக தகதகத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . அப்படித்தான் இருந்தது ராஜராஜன் காலத்தில் . இந்தக் கோயிலைப் பார்த்துவிட்டுத்தான் சிதம்பரம் ஆலயத்திற்குப் பொற்கூரை அமைத்தான் இரண்டாம் குலோத்துங்கன் . ---ப்ரியா கல்யாணராமன் . குமுதம் , 20 . 10 . 2010 .

Thursday, August 18, 2011

ஒரு கடவுள் ஜோக் !

" எல்லாப் படைப்பிலும் நல்லதும் இருக்க வேண்டும், கெட்டதும் இருக்க வேண்டும் . அதுதான் என்னுடைய ஃபார்முலா " என்று நாரதரிடம் சொன்னார் கடவுள் . " புரியவில்லையே " என்று வழக்கம் போல் வம்பு செய்தார் நாரதர் . கடவுள் புன்னகைத்தார் . " நான் ஜப்பானைப் படைத்தேன் . அந்த நாட்டு மக்கள் அறிவில் சிறந்தவர்கள் . உழைப்பாளிகள் . ஆனால், அந்த நாட்டில் ஏராளமான எரிமலைகளையும் படைத்தேன் ." " ஆமாம் ". " உலகத்திலேயே செல்வச் செழிப்புள்ள நாடாக அமெரிக்காவைப் படைத்தேன் . அதே சமயம் பாதுகாப்பின்மையையும், பதற்றத்தையும் அவர்களுக்குத் தந்துள்ளேன் ". " ஆமாம், ஆமாம் " என்ற நாரதர், " சரி கடவுளே, நீ படைத்த நாடுகளுள் மிக நல்ல நாடு எது ? " கடவுள் பதில் சொன்னார் . " இந்தியாதான் . எல்லா வகை கலாச்சாரங்களும் அங்கே உண்டு . நல்ல இயற்கை வளங்கள், தொழில் வளம், சிறந்த மக்கள் என்று இந்தியாவுக்கு நான் அளித்துள்ளேன் ". " நல்லதும் கெட்டதும் இருப்பதுதான் உங்கள் ஃபார்முலா என்றீர்களே ? இந்தியாவில் பிரச்னைகளே இல்லாமல் ஏன் செய்தீர்கள் ? " கடவுள் கலகலவென சிரித்தார் . " அதற்காகத்தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளைக் கொடுத்தேன் ". --- அரசு பதில்கள் .. குமுதம் , 20 . 10 . 2010 .

Wednesday, August 17, 2011

மிடுக்கான பேச்சு !

பேச்சு ஒரு பெர்ஸனாலிட்டி .... மற்றவர்களைக் கவர மேடையில் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் எப்படி பேசி நீங்கள் அசத்தலாம் , உங்கள் பெர்ஸனாலிட்டியை டெவலப் செய்துகொள்ளலாம் ? * ' நெவர், நெவர், நெவர் கிவ் அப் ' -- ஒரு முக்கிய நிகழ்ச்சியில் சர்ச்சிலின் பேச்சை ரேடியோவில் கேட்க உலகமே காத்திருந்த நேரத்தில், அவர் பேசியது இந்த ஐந்தே வார்த்தைகள்தான் . மணிக்கணக்கில் பேசினால்கூட இப்படி ஒரு அழுத்தமான தாக்கத்தை எவராலும் ஏற்பத்த முடியாது ! அதனால் சுருக்கமாக சுருக்கென்று பேசுங்கள் . * விவேகானந்தரின் சொற்பொழிவுகள் காலம் கடந்தும் பேசப்படுவதற்குக் காரணம், அவரது பேச்சில் ஒரு வாக்கியத்தைக் கூட தேவையற்றதாகக் கருத முடியாது . * ஒன்றை விளக்குவதாக இருந்தால்கூட விரிவாகப் பேசாமல் தெளிவாகப் பேசவேண்டும் . " govt for the people, by the people, of the people " என்று ஒரு கூட்டத்தில் பேசிய லிங்கன் ஜனநாயகத்துக்கு மிகச் சாதாரணமாக விளக்கம் கொடுத்தார் . இதைவிட வேறு எளிமையான விளக்கத்தை அரசியல், அறிவியல் பேரறிஞர்களால்கூட கொடுக்க முடியாது . * ' சொல்லைத் தேடு, சொல்லை அறி, சொல்லை சொல்லால் பின்பற்று ' என்கிறார் கபீர்தாசர் . இது வளரும் பேச்சாளர்கள் மறக்கக் கூடாத சூத்திரம் . * பெருங்கூட்டத்துக்காக பேசாதீர்கள் . உலகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருந்த புரட்சியாளர்களின் பேச்சுக்கள் எல்லாம் சிறு கூட்டங்களில்தான் நிகழ்த்தப்பட்டன . * கேட்பாளர்களின் தன்மை அறிந்து பேசுங்கள் . பாமரர்களிடம் பிளேட்டோ, சாக்ரடீஸ் என மேற்கோள் காட்டி பயமுறுத்தாதீர்கள் . * பேசும்பொழுது தன் மனதில்பட்ட உண்மையைப் பேசுங்கள் . அது உங்களுக்கு ஒரு கம்பிரத்தைக் கொடுக்கும் . உண்மையைப் பேசும்பொழுது உங்களையறியாமல் நிங்கள் உயர்வீர்கள் . --- தமிழருவி மணியன் . குமுதம் , 20 . 10 . 2010 .

Tuesday, August 16, 2011

பால் புட்டியில் கேன்சர் .

பால் புட்டியில் கேன்சர் அபாயம் .. இலினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பால் புட்டிகளில் புராஸ்ட்ரேட் புற்றுநோயை தோற்றுவிக்கும் ஆபத்தான சங்கதி இருக்கிறது என்கின்றனர் . பொதுவாக நாம் இப்போது உபயோகப்படுத்தி வரும் பிளாஸ்டிக்கை உருவாக்க ' பிஸ்பினால் ஏ ' என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது . இந்த பிஸ்பினால்தான் புராஸ்ட்ரேட் கேன்சரை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கிறது . பிஸ்பினாலை எலிகளுக்கு கொடுத்து ஆராய்ச்சி செய்ததில் இது உறுதியாகி இருக்கிறது . இந்த வேதியியல் பொருள் உடலுக்குள் புற்று நோய்க்கான திசுக்களை மெல்ல உருவாக்கி விடுகிறது . நாளடைவில் இது புராஸ்ட்ரேட் கேன்சராக உருமாற்றம் பெறுகிறது . குழந்தைகளுக்கு பிஸ்பினால் கலந்து உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் பால் புகட்டும்போது இந்த வேதியல் பொருள் அவர்களுக்குள்ளும் சென்று இந்த பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது . புட்டிகளில் மட்டுமல்லாது, குழந்தைகளுக்கு என்று நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் கிண்ணங்கள், கத்திகள் போன்றவற்றிலும் பிஸ்பினால் ஆபத்து ஒளிந்திருக்கிறதாம் . இந்த பிஸ்பினால் மார்பக புற்று நோய், மாரடைப்பு, மலட்டுத்தன்மை போன்றவைகளுக்கு காரணகர்த்தாவாக இருக்கிறது . கடைசியாக ஒரு எச்சரிக்கை... ஆண்களை குறி வைத்து தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக இருப்பது இந்த புராஸ்ட்ரேட் கேன்சர்தான் . ---தினமலர் , அக்டோபர் 17 , 2010 .

Monday, August 15, 2011

கையெழுத்தே தலையெழுத்து !

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ? கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால், கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் விவேகானந்தர், சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே . கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால், ரொமான்டிக் பார்ட்டி . உடை மாற்றுவதுபோலக் காதலன் / காதலியை மாற்றுவீர்கள் . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் . அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால், கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் . பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. டாக்டர் விக்ரம் சாராபாய், உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ, கோடோ கிடையாதா ? உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் . அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக் ஒபாமா இருப்பார் . பெயருக்கு சம்பந்த்மே இல்லாமல் கையெழுத்துப் போட்டால் கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம் சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ, கபில்தேவ். பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால் புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால், யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் . ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் . முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால் நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால், உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் . வெறுமனே பெயரை எழுதிவைத்தால் அம்மாஞ்சி . பாசமாகவும், உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த வகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, மதர் தெரஸா . கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம் போடுவீர்களா ? ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக் கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி. வி.ராமன் . --- கார்த்திகா ,ஸ்டைல் விகடன் இணைப்பு . 10 . 2. 2010 .

Sunday, August 14, 2011

ஜீன்ஸ் .

ஜீன்ஸின் வரலாறு ஆச்சரியமானது . 1950 -களில் டீன் ஏஜ் கும்பல் அணிய ஆரம்பித்த பிறகுதான் இவை அனைவருக்கும் பொதுவான ஃபேஷன் டிரெஸ் ஆனது . அதற்கு முன் அது தொழிலாளிகளுக்கான ஆடை . ஜீன்ஸ் என்ற வார்த்தை ' ப்ளூ தி ஜீன்ஸ் ' என்ற ஃபிரெஞ்சு வாசகத்தில் இருந்து வந்தது . ஜெனோவாவின் நீல உடை என்று இதற்கு அர்த்தம் . இத்தாலியின் ஜெனோவா பகுதியில் உள்ள துறைமுகத் தொழிலாளிகளுக்குச் சீக்கிரத்தில் கிழியாத, எல்லாக் காலத்திலும் அணிவதற்கு ஒரு உடை தேவைப்பட்டது . அப்போது உருவானதுதான் ஜீன்ஸ் . இப்போது அமெரிக்கக் கடற்படையின் யூனிஃபார்மே ஜீன்ஸ் தான் . பாரம்பரிய மிலிட்டரி உடையை முக்கிய விழா நாட்களில் மட்டுமே அணிகிறார்கள் . --- தீபக் , ,ஸ்டைல் விகடன் இணைப்பு . 10 . 2. 2010 .

Friday, August 12, 2011

' ஃப்ரனெமி '

* ஒருவரது இமேஜை டேமேஜ் செய்வது பெரும்பாலும் அவர்களது நண்பர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி நம்பர் ஒன் ! இப்படிப்பட்ட நண்பர்களை ? ! ) ' ஃப்ரனெமி 'என்கிறார்கள் ( frenemy -- ஃப்ரெண்ட் பாதி, எனிமி மீதி ). * நீர் வாழ் உயிரினங்களில் மனிதனின் ஒரே சிறந்த நண்பன் டால்ஃபின்தான் . திசை மாறிய படகுகளுக்கு வழிகாட்டுவது, நீரில் மூழ்கிய மனிதர்களை முதுகில் ஏற்றிக் கரை சேர்ப்பது, திமிங்கிலம், சுரா போன்ற ஆபத்தான உயிரினங்கள் வந்தால் மனிதர்களுக்கு சிக்னல் கொடுப்பது என்று டால்ஃபின்கள் கடல் பயணத்தில் மனிதர்களுக்கு எவ்வளவோ நல்லது செய்கின்றன * மனிதர்கள் தனக்கு வில்லன்தான் என்பதைப் புரிந்துகொள்ளும் புத்திசாலிகள்தான் டால்ப்ஃபின்கள் . ஆனாலும், அவை நட்புக்கு மரியாதை செய்கின்றன . * ஒருவர் மீது ஒருவருக்கு இனக் கவர்ச்சியோ, உடல் கவர்ச்சியோ இல்லாமல் அன்பு, பாசம், நட்பு, மரியாதை கூடிக்கொண்டே இருந்தால் அதுதான் ' பிளேட்டானிக் லவ் ' பிளேட்டானிக் லவ், காமமும் காதலும் இல்லாத அதற்கு இணையான நட்பு என்று சொல்லலாம் . கிரேக்க மேதை சாக்ரட்டீஸுக்கும், அவரது மாணவர் அல்ஸபையடீஸுக்கும் அப்படி ஓர் ஈர்ப்பு . இருவரும் ஒரே அலைவரிசையில் யோசித்தார்கள் . அந்தக் காலகட்டத்தில் அவர்களை ஓரினச் சேர்க்கையாளர்களாகப் பார்த்தார்கள் . ' இது அப்படி இல்லை, இது காதலைவிடப் பூனிதமானது ! ' என்று சாக்ரட்டீஸின் இன்னொரு மாணவர் மக்களுக்கு விளக்கினார் . அன்று முதல் இது ' பிளேட்டானிக் லவ் ' என்று அழைக்கப்படுகிறது . * எட்மன்ட் ஹிலாரி -- டென்சிங் நார்கே : எவரெஸ்ட் சிகரத்தை முதல்முதலில் தங்கள் காலடியில் வைத்தவர்கள் . ஹிலாரியின் உதவியாளர்தான் டென்சிங் . சிகரம் தொட உதவியதற்குக் கைம்மாறாக எவரெஸ்ட் உச்சியில் டென்சிங்கை போட்டோ எடுத்தார் ஹிலாரி . தான் எடுத்துக் கொள்ளவில்லை .அந்தப் பெருமைக்காகவே ' யார் முதலில் எவரெஸ்ட் உச்சியை அடைந்தது ? ' என்ற ரகசியத்தை இறுதிவரை சொல்லவே இல்லை டென்சிங் ! --- நட்பு விகடன் இணைப்பு , 3 . 2. 10 .

Wednesday, August 10, 2011

உங்க ஸ்டைல் என்ன ?

ஸ்டைல் என்பது என்ன ? நம் உடல்மொழி மூலமாக ஏதோ ஒன்றை வித்தியாசமாகச் செய்வதுதான் இல்லையா ? இந்த வகையில் பார்த்தால் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான ஸ்டைல் இருக்கிறது என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்மாண்ட் மோரிஸ், 1977 ல் இவர் எழுதிய ' மேன்வாட்ச்சிங் ' என்ற புத்தகத்தில் . மார்புக்குக் குறுக்கே கை கட்டிக்கொண்டு பேசுவார்கள் . இதைத் ' தன்னடக்கம் ' என்று மட்டுமே சொல்ல முடியாதாம் . ஆனால், கைகட்டுவதை மேனரிசமாகக்கொள்ளாத ஒருவர் அப்படிச் செய்தால், எதிராளியின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றோ, தன்னைப்பற்றிய பயம் அதிகமாகிவிட்டது என்றோ அர்த்தமாம் . கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேசுவது கம்பீரம் மட்டுமல்ல, எதிராளியை நம்பவில்லை என்பதையும் குறிக்குமாம் . நீங்கள் பேசும்போது எதிராளி இடுப்பில் கைவைத்து நிற்கிறாரா ? அவருக்குப் பொறுமையே இல்லை . சீக்கிரம் பேச்சை முடித்துக்கொள்ளுங்கள் . எதிராளி கையைப் பின்னால் கட்டிக்கொள்கிறாரா ? அவர் ஏதோ ஒரு விஷயத்தைச் செய்ய முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறார் . ஒன்று, அது உங்கள் மேலுள்ள பயமாக இருக்கலாம், அல்லது நீங்கள் பேசுவது பிடிக்காமல் உங்கள் மூக்கில் குத்தவும் யோசித்துக்கொண்டு இருக்கலாம் . ஒன்றுமே பேசாமல் கீழ் உதட்டை மேல் பற்களால் கடிக்கிறாரா ? அப்படியெனில், அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . எதிராளி ஏதாவது செய்த பிறகு அதைப் பொறுத்துதான் அவரது செய்கைகள் இருக்கும். பாக்கெட்டில் கைவிட்டபடியே பேசுகிறாரா ? ஒன்று அவருக்கு போர் அடிக்கிறது அல்லது நடுக்கத்தை மறைக்கிறார், அல்லது உங்களிடம் பொய் சொல்லுகிறார் . ' மனிதர்களும் புத்தகங்கள்போலத்தான், வாசிக்க ஆரம்பித்தால் மூடி வைக்கத் தோணாது ' என்கிறார் டெஸ்மாண்ட் மோரிஸ் . --- கார்த்திகா ,ஸ்டைல் விகடன் இணைப்பு . 10 . 2. 2010 .

Tuesday, August 9, 2011

அறிவோம் தெளிவோம் .

* உலகத்தின் முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறந்தது, இங்கிலாந்தில் . * 'கீரைத்தோட்டம் என் மருந்துத் தோட்டம் ' என்று சொன்னவர், லியோ டால்ஸ்டாய் . * இந்தியாவின் முதல் வங்கி , தி ஒய்ரசிடென்சி பேங்க் . * மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள், இருபது லட்சம் . * வீரமாமுனிவரின் இயற்பெயர், ஜோசப் பெஸ்கி . * பலகையே இல்லாத மரம், வாழைமரம் . * செவ்விந்தியர், அமெரிக்க நாட்டில் வாழும் மக்கள் . * உலகில் மிகவும் புழக்கத்தில் உள்ளதாகக் கருதப்படும் பாலம், கொல்கத்தா ஹௌரா . * இரத்த ஓட்ட முறையைக் கண்டுபிடித்தவர், வில்லியம் ஹார்வி . * நோய்களை குணமாக்கும் நிறம், நீலம் . --- ஆரம் . ஜூலை 2010 . நூல் உதவி & பத்திரிகை ஆசிரியர் : செல்லூர் மணியன் , காரைக்கால் .

Monday, August 8, 2011

சைக்கிள் ஓட்டுவோம் .

உலகம் முழுவதுமே கார், பைக்குகளுக்கு பதிலாக சைக்கிள்களை பயன்படுத்தும் திட்டம் அதிகரித்து வருகிறது . இதன்மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் . ஒன்று, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதில்லை . இரண்டு, உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதால் மரணம் நெருங்குவதில்லை . ஒரே ஒரு நகரில் மட்டும் ஆண்டுக்கு 9000 டன் நச்சு வாயு வெளிப்படுவது தடுக்கப்பட்டுள்ளது . ஆண்டுக்கு 12 பேரின் இறப்பும் தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது .
லண்டனின் போரீஸ் பைக்ஸ் சைக்கிள் திட்டம் மிகவும் பிரபலம் . 400 ரயில் நிலையங்களில் உள்ள 6 ஆயிரம் சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள் . மெட்ரோ ரயிலில் பயணம் செய்து இறங்கியபிறகு, அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல, இந்த சைக்கிள்களை உறூப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் . வேலையை முடித்த பிறகு வேறு எந்த ரயில் நிலையம் பக்கமோ அங்கு விட்டு விடலாம் . இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது . இதேபோன்ற திட்டம்தான் ஸ்பெயின் பார்சலோனாவில் இயங்கி வருகிறது . 1.82 லட்சம் உறுப்பினர்கள் . சராசரியாக ஒவ்வொரு உறுப்பினரும் தினமும் 3 கி.மீ. வரை சைக்கிளை ஓட்டுகிறார் .அதாவது 14 நிமிடங்கள் . இதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள் . சைக்கிள் திட்டத்தால் இந்த நகரில் ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது . சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பது, சாலை விபத்துக்கள் குறைந்திருப்பது மற்றும் காற்று மாசுபடுவது குறைவது ஆகியவற்றால் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது . அதாவது மொத்தத்தில் ஆண்டுக்கு 12 பேர் இறப்பது தடுக்கப்பட்டுள்ளது என்கிறது ஆய்வு .
ஒவ்வொருவரும் வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது . அதாவது வாரத்துக்கு 5 நாட்களில் தினமும் 30 நிமிட நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓடுவது அவசியம் என்கிறது . சைக்கிள் திட்டத்தால் இது சாத்தியமாகிறது . அனைத்து பெரிய நகரங்களிலும் காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் இதுபோல் சைக்கிள் ஷேரிங் திட்டத்தைக் கொண்டு வருவதும் அவசியம் . இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறைந்து, மக்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
--- தினகரன் தலையங்கம் . ஆகஸ்ட் 8 , 2011 .
--- நாளிதழ் உதவி :P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு .

ஞாபக மறதி நோய் !

மூளையில் மின் அதிர்வு கொடுத்தால் ஞாபக மறதி நோய் குறையும் . மின்சாரம் மூலம் மூளையில் அதிர்வை ஏற்படுத்தினால் ஞாபக மறதி நோய் குறையும் என்று பிலடெல்பியாவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் . ஞாபக மறதி நோய் உள்ளவர்களுக்கு மின்சாரம் மூலம் மூளையில் அதிர்ச்சி ஏற்படுத்தினால், அதன் உள்ளே இருக்கும் எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்கள் தூண்டப்படும் . இதன் மூலம், மறந்துபோன பதிவுகள் மீண்டும் மூளைக்கு வரும் . தனது பெயரே மறந்துபோகும் நிலையில் இருப்பவர்களுக்கு இந்த மின்சார சிகிச்சை மிகவும் பயனுடையதாக இருக்கும் . ஞாபக மறதி ஏற்படுவதற்கு நியூட்ரான்கள் பலவீனமாக இருப்பதுதான் காரணம் . இந்த பாதிப்பு முதுமையில்தான் ஏற்படுகிறது . இதைத்தவிர்க்க, சுமார் 1 முதல் 2 மில்லி ஆம்ஸ் மின் அதிர்வு கொடுத்தால் அவர்களின் மூளையில் ஆண்டிரியர் என்னும் பகுதி தூண்டப்படுகிறது . இதனால் அவர்களின் நியூட்ரான்கள் செயலாக்கம் பெற்று மீண்டும் சிறப்பாக செயல்படுகிறது . இதனால் நோயாளிகளுக்கு ஞாபக மறதி பாதிப்பு 11 சதவிகிதம் குறைகிறது என்று ஆய்வுத்தகவல் சொல்கிறது .ஆனால், இந்த மின் அதிர்வை எத்தனை முறை கொடுக்கவேண்டும் என்ற தகவலை ஆய்வாளர்கள் தெரிவிக்கவில்லை . --- தினமலர். அக்டோபர் 13 , 2010

Sunday, August 7, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...

* பால் பவுடரைக் கரைக்கும்போது, பெரும்பாலும் கட்டியாகி படுத்திவிடும் . பவுடருடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையை கலந்து கொள்ளுங்கள் . பிறகு, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு கரைத்தால்... கட்டி இல்லாமல் எளிதில் கரைந்துவிடும் . * சின்னக் குழந்தைகளுக்கு பார்டர் வைத்த ஜரிகை பாவாடைகள் தைக்கும்போது, புடவைக்கு வைப்பது போலவே, பாவாடை பார்டரிலும் ஃபால்ஸ் வைத்துத் தைத்து விடுங்கள் . இதனால், பார்டர் ஓரம் கிழியாமலும், ஜரிகை காலில் உராயாமலும், கொலுசு மாட்டி ஜரிகை இழுக்காமலும் இருக்கும் . * பண்டிகை நாட்களில் வீடுகளுக்கு முன்பாக மாவிலை கட்டுவோம் . அடுத்த நாளே காய்ந்து தொங்கி, பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கும் . மாவிலையை முந்தைய நாளே தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள் . மறுநாள் தோரணமாகக் கட்டுங்கள் . இரண்டு மூன்று நாட்களானாலும, பச்சைப் பசேல் என்றிருக்கும் . * வாழைத்தண்டை நார் இல்லாமல் நறுக்கி, லேசாக எண்ணெயில் வதக்கி வைத்துக் கொள்ளுங்கள் . 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு பல் பூண்டு, நான்கு காய்ந்த மிளகாயை எண்ணெயில் வருத்து.... உப்பு, வாழைத்தண்டு சேர்த்து அரைத்தால் வாழைத்தண்டு சட்னி ரெடி ! சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும் . * பாயசம் மீந்து விட்டால்... ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள் . பிறகு, ஒரு கண்ணாடி பவுலில் பாயசத்தைவிட்டு... வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, கொய்யா, திராட்சை போன்ற பழத்துண்டுகளைப் போட்டு, ஐஸ்கிரீம் விட்டு, பரிமாறினால்... அசத்தலான ஃபுரூட் சால்ட் ரெடி ! ---அவள் விகடன் . 13 -ம் ஆண்டு மெகா சிறப்பிதழ் , 22 . 10. 10 . இதழ் உதவி : N கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

Saturday, August 6, 2011

மூன்று முடிச்சு !..

மூன்று முடிச்சின் பொருள் : தெய்வ பக்தியுடன் தெய்வசங்கல்பத்திற்கு உட்பட்டு வாழ்தல், பெற்றோருக்குக் கட்டுப்பட்டிருத்தல், கணவனுக்கு அடங்கி வாழ்தல் ஆகிய மூன்று பண்புகளையும் கொண்டவளாக ஒரு பெண் இருத்தல் வேண்டும் . இந்த கருத்தை தான் திருமணத்தின்போது அணிவிக்கப் பெறும் ' மாங்கல்யத்தின் மூன்று முடிச்சுகள் ' உணர்த்துகின்றன . அதனால்தான் மூன்று முடிச்சுகள் இடுகிறார்கள் . திருமாங்கல்ய சரடு ஒன்பது இழைகளை கொண்டது . இந்த ஒன்பது இழைகளும், ' காயத்திரி மந்திரத்தை ' குறிப்பிடுகிறது . அவைகள் : 1 . வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே புரிந்து கொள்வது . 2 . ஆற்றல், 3 . மேன்மை, 4 . தூய்மை, 5 . தெய்வீக நோக்கம், 6 . உத்தமகுணங்கள், 7 . விவேகம், 8 . தன்னடக்கம், 9 . தொண்டு அல்லது சேவை . ஆகியவற்றை ஒரு பெண் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அமையப் பெற்றவை ஆகும் . --தினமலர். அக்டோபர் 31 , 1993 .

Friday, August 5, 2011

தோழன்டா !

* " மச்சி... என் லவ்வர்க்கு பர்த்டே வருது, என்னடா கிஃப்ட் கொடுக்கட்டும் ? " " உன் லவ்வர் எப்படிடா இருப்பா ? " " சூப்பரா இருப்பாடா ..." " அப்போ என் செல் நம்பரை கொடுத்துடுடா ...! " கிளாஸ்ரூம் லகலகலக் ! * " ஏண்டா... கணக்கை தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற ? " " நீங்கதானே சார் சொன்னீங்க், ' கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸுக்கு மார்க் போடுவேன்'னு ! " லவ்வோகிராஃபி ! * பசங்க எந்த தைரியத்துல லவ் பண்றாங்க தெரியுமா ? ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க... எப்படியும் சேர்த்து வெச்சுடுவாங்கனு . ஆனா, பொண்ணுங்க எந்த தைரியத்துல லவ் பண்றாங்க தெரியுமா ? பெத்தவங்க இருக்காங்க... எப்படியும் பிரிச்சு வச்சுடுவாங்கனு ! சிரி...சிரி... * " பிணத்தை போட்டோ எடுக்க வந்த போட்டோகிராபரை ஏன் உறவுக்காரங்க அடிக்கிறாங்க ? " " அதுகிட்ட போய் ' ஸ்மைல் ப்ளீஸ்'னு சொன்னாராம் ! " --- அவள் விகடன் . 13 -ம் ஆண்டு மெகா சிறப்பிதழ் , 22 . 10. 10 . இதழ் உதவி : N கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி ..

Thursday, August 4, 2011

தெரியுமா ? தெரியுமே !

* பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்தின் மூலம் இயல்பாகவே கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே தேங்கிப் போவதும் உண்டு . இப்படித் தேங்கிப்போகும் கொழுப்பைக் கரைத்து, தசைகளாக வயிற்றுப் பகுதியில் உருமாற்றுவதுதான் ' சிக்ஸ் பேக் ' . --- குமுதம் . 20 . 10 . 10 . * புடவை உள்ளிட்ட பெண்களின் ஆடைகளை அணிவதில் ஆர்வம் காட்டும் ஆண்களும் உண்டு . ' அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது ' என்று சொல்லும் இத்தகையோரை, ' க்ராஸ்டிரெஸ்ஸர்ஸ் ' ( Crossdressers ) என்று அழைக்கிறார்கள் . * உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் சுரபுன்னைக் காடுகள் இருப்பது... சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் ! * இன்றைக்கு நீங்கள் பார்க்கும் சென்னையின் மெரினா கடற்கரை, சுமார் 400 ஆண்டுகலுக்கு முன் முழுக்க முழுக்க சுரபுன்னைக் காடுகள்தான் ! * திறமையான புறாக்கள், 600 கி. மீ. தூரத்துக்கு மேலும் பறந்து செல்லும் . அதை வைத்துதான், தகவல் பரிமாற்றத்துக்காக புறாக்களை முதன்முதலில் எகிப்தியர்கள் பயன்படுத்தினார்கள் . ---அவள் விகடன் . 13 -ம் ஆண்டு மெகா சிறப்பிதழ் , 22 . 10. 10 . இதழ் உதவி : N கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி ..

பட்டிமன்ற தமாஷ் ! காமெடிப் பட்டாசு !

* " சாதா ரைஸுக்கும், ஃப்ரைடு ரைஸுக்கும் என்ன வித்தியாசம் ? " " சாதா ரைஸ்னா.... புடைச்சுட்டு சமைப்பாங்க . ஃப்ரைடு ரைஸுனா சமைச்சுட்டு புடைப்பாங்க ! " * " பல் டாக்டருக்கும், மத்த டாக்டருக்கும் என்ன ஒற்றுமை ? " " ரெண்டு பேருமே சொத்த பிடுங்குறவங்கதான் ! " * " இன்னிக்கு பேப்பர்ல என்ன முக்கியமான சேதி ? " " நாடாளுமன்றத்தை ஒத்தி வெச்சுட்டாங்களாம் ." " எவ்வளவு தொகைக்கு ? ! " * " அந்த சாதி சங்கத்துக்காரங்க, எதுக்காக ஊர்வலமா போறாங்க ? " " சாதிவாரி கணக்கெடுக்கற பணியில, அவங்க சாதிக்காரங்களத்தான் அதிக அளவுல நியமிக்கணும்னு மனு கொடுக்கத்தான் ! " * " நீங்க பதில் சொல்ல முடியாத அளவுக்கு உங்க பையன் அப்படி என்ன கேட்டுட்டான் ? " " போலி மருந்து தர்ற ஒரிஜினல் டாக்டர் நல்லவரா... இல்ல, ஒரிஜினல் மருந்து தர்ற போலி டாக்டர் நல்லவரானு கேக்கிறான் ." * " ஏ. டி. எம் --ல பணம் எடுக்கப் போறதுக்கு எதுக்கு இவ்வளவு மேக்கப் ? " " அங்க கேமராவெல்லாம் வெச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன் ! " * " காமன்வெல்த் போட்டியில யாருக்கு முதலிடமாம் ? " " ஊழலுக்குத்தான் ! " * " என்ன பாட்டி... கரன்ட் கம்பியில ஈரச்சேலையை காய வைக்கிறீங்க ? " " அடப் போப்பா ! கரன்ட் வர்றதுக்குள்ள சேல காய்ஞ்சுடும் " --- மதுக்கூர் ராமலிங்கம் . * " ஏழு கழுதை வயசாகியும், பொறுப்பில்லாம இருக்கியே...? நான் போனதுக்கப்புறம்... நீ என்ன ஆவ... எங்க இருப்பேனு கொஞ்சமாவது யோசிச்சியா ? " " என்னப்பா, கிறுக்குத்தனமா பேசிக்கிடிருக்கீங்க . நான் இங்கதான் இருப்பேன் . நீங்கதான் எங்க இருப்பீங்கனு தெரியாது ? ! " * " தொண்டையே சரியில்ல, சாயங்காலம் கச்சேரி வேற இருக்கு, எப்படியாச்சும் என் குரலை காப்பாத்தி கொடுங்கனு சொன்னா...ஒறேயடியா யோசிக்கிறீஈங்களே டாக்டர் ...? " " இல்ல... உங்க ஒருத்தரை காப்பாதறதா... இல்ல, கச்சேரிக்கு வரப்போற நூறு பேரை காப்பாத்றதானு யோசிக்கிறேன் ! " * மேனேஜர் : " ஏண்டா ஆபீஸுக்கு லேட் ? " ஊழியர் : " பஸ்ல துங்கிட்டேன் சார் ! " மேனேஜர் : " ஆபீஸுன்னு ஒண்ணு இருக்கறத மறந்துட்டியா ? " * " ஏம்ப்பா... டாக்டரைப் பார்த்து இந்த பயம் பயப்படுறே ? " " எனக்கு ஆபரேஷன் நல்லபடியா நடக்குமான்னு கேட்டேன் , ' செத்த ' நேரத்துல சொல்லிடறேங்கிறாரே ? ! " * " என்னோட கச்சேரிக்கு வரச் சொல்லி டிக்கெட்டெல்லாம் அனுப்பியிருந்தேனே... நீங்க வரவே இல்லையே ! " " இல்லப்பா... ' அவ்வளவு தூரம் எதுக்காக போகணும் . வீட்டுலேயே தூங்குங்க' னு என் வீட்டுக்காரி சொல்லிட்டா ! " --- ' பட்டிமன்ற ' சிவகுமார் . * " டாக்டர்... என் வீடுக்காரர், விடாம டி. வி. பார்த்துக்கிட்டே இருக்கார் . ஏதாச்சும் பிராப்ளம் இருக்குமா ? " " இது, வியாதியெல்லாம் இல்லையே..." " கரண்ட் போனாலும் மெழுகுவர்த்திய கையில வெச்சுகிட்டு டி. வி.--யைப் பார்த்துக்கிட்டு இருக்கார் ! " * " காலையில ஆபீஸ் போறப்ப, நம்ம வீட்டு சுவத்துல ஒரு கீரலைப் பார்த்தேன் . சாயங்காலம் திரும்பி வந்தா ... காணோமே ! " " ஒரு வீட்டுல ரெண்டு ' க்ராக் ' இருக்கப்படாதுனு உடனடியா சிமெண்ட் பூசி பெயிண்டும் அடிச்சுட்டேன் " * " என்னடி தலைவிரிகோலமா ஆபீஸுக்கு புறப்பட்டுட்டே ? " " லேட்டா போனா... பின்னிருவாங்கள்ல ....அதான் ! " --- பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் . --- அவள் விகடன் . 13 -ம் ஆண்டு மெகா சிறப்பிதழ் , 22 . 10. 10 . இதழ் உதவி : N கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

கிரடிட் கார்டு வருது !

அதிக பாதுகாப்புடன் கிரடிட் கார்டு வருது !
எஸ்பி இ அறிமுகம் .
கிரடிட் கார்டு தொடர்பான மோசடிகள் அதிகரித்துவருகிறது . இந்நிலையில் அதிக பாதுகாப்பு கொண்ட இஎம்வி சிப் பொருத்தப்பட்ட கிரடிட் கார்டுகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது .
ஜி இ கேப்பிடல் நிறுவனத்துடன் இணைந்து இந்த கார்டுகளை எஸ்பி இ அறிமுகப்படுத்தியுள்ளது . இது குறித்து எஸ்பி ஐ கிரடிட் கார்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி கடாம்பி நரஹரி கூறுகையில் ' இதில் உள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் எங்கள் வாடிக்கையளர்களுக்கு பூரண நிம்மதி தருவதாக இருக்கும் . மேலும் பல வாடிக்கையாளர் சார்ந்த திட்டங்களையும் தர முடியும் ' என்றார் . இஎம்வி என்பது ' யூரோ பே, மாஸ்டர்கார்டு அண்டு விசா ' என்பதன் சுருக்கமாகும் . இஎம்வி கார்டுகளை குளோனிங் செய்து போலி கார்டுகளை உருவாக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் . ஆகஸ்டு 3 . 2011 .

Wednesday, August 3, 2011

நேதாஜி .

* ஜனவரி 23 , 1897 -ம் வருடம் ஜானகிநாத் போஸ் -- பிரபாவதி தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9 -வது குழந்தை போஸ் ! * சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு . அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார் . * போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார் . அப்போதுதான் போஸூக்கு ' நேதாஜி ' என்ற பட்டத்தை அளித்தார் தாகூர் . ' மரியாதைக்குரிய தலைவர் ' என்பது அர்த்தம் ! * திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார் . ஆனால், 1934 -ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது . இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா . ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றதுதான் எமிலியுடனான இறுதி சந்திப்பு ! * 'இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன் ! ' -- இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது . 1944 -ல் ' ஆசாத் ஹிந்த் ' வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை, ' தேசப் பிதா ' என்று முதன்முதலில் அழைத்தார் . ' ஆசாத் ஹிந்த் ' என்றால் ' சுதந்திர இந்தியா ' என்று பொருள் ! * காந்திக்கும் போஸூக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர் . எப்படி சுபாஷ், காந்தியை ' தேசப் பிதா ' என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை ' தேச பக்தர்களின் பக்தர் ' என்று அழைத்தார் ! * தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக ' ஜெய் ஹிந்த்... ' அதாவது, ' வெல்க பாரதம் ' என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி . அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர் ! * ஒரே ஒருமுறை மதுரைக்கு வந்தார் . பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று . இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியலியனின் கீழ் 600 -க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள் . ' அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ' என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி ! * பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு . காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தவர் நேதாஜி ! * 1945 -ம் ஆண்டு ஆகஸ்ட் 16 -ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார் . ஆகஸ்ட் 18 -ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது . ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது . இதுவரை 12 கமிஷன்கள்வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை . நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம் ! --- ந. வினோத்குமார் , ஆனந்த விகடன் . 13 . 10 . 10 .

Tuesday, August 2, 2011

கலவியல் தேர்வு ( Sexual selection ) .

ஆண், பெண் இருவருமே கலவியல் பங்கேற்பில் ஈடுபட்டாலும்கூட , இதில் பெண்ணின் பங்குதான் அதிகம் . கலவியல் செல்கள் என்பவை இரண்டு பாலினருக்குமே பொது . இரண்டிலுமே 23 குரோமோசோம்கள்தான் இருக்கின்றன என்றாலும், இவற்றின் எண்ணிக்கையிலும் வடிவமைப்பிலும் எக்கச்சக்க வித்தியாசங்கள் . ஓர் ஆண், ஒரு நாளைக்குக் கிட்டதட்ட 80 முதல் 100 மில்லியன் வரை விந்து அணுக்களை உற்பத்தி செய்கிறான் . அவன் வயதுக்கு வந்த அந்தக் கணம் முதல், அவன் வாழ்நாள் முழுவதுமே இப்படி மில்லியன் கணக்கில் விந்து அணுக்களை உற்பத்தி செய்ய வல்லவன் . ஆனால், பெண், ஒரு மாதத்துக்கு ஒரே ஒரு கரு முட்டையைத்தான் உற்பத்தி செய்கிறாள் . அதுவும் வயதுக்கு வந்த பிறகு ஆரம்பித்து, மெனோபாஸ் ஆகும் வரை . கூட்டிக் கழித்துப்பார்த்தால், கிட்டதட்ட 30 -- 35 ஆண்டுகளுக்கு மட்டும் . வருடத்துக்கு 12 கரு முட்டைகள் என்றால், தன் வாழ்நாள் முழுவதுமே சேர்த்து ஒரு பெண் உற்பத்தி செய்வது, மொத்தமே சுமார் 400 கரு முட்டைகளைத்தான் . கரு முட்டையின் சைஸையும் விந்து அணுவின் சைஸையும் ஒப்பிட்டுப் பார்த்தால், விந்து அணு ஒரு சின்ன புள்ளி மாதிரியும் கரு முட்டை அதைவிட 1,000 மடங்கு பெரிதாக, ஓர் உலக உருண்டை மாதிரியும் இருப்பதைக் காணலாம் . காரணம், விந்து அணுவில் வெறும் 23 குரோமோசோம்களும் அவற்றை நீந்தவைக்க ஒரு வாலும், அந்த வாலுக்கு நீந்தும் சக்தியைத் தர ஒரு குட்டி இன்ஜினும்தான் உள்ளன . கரு முட்டையிலும் அதே 23 குரோமோசோம்கள் என்றாலும், அந்த குரோமோசோம்களைச் சுற்றிலும் சக்தி கொடுக்க நிறைய கொழுப்பும் புரதமும் திரண்டு இருக்கும் . காரணம், கரு முட்டை என்பது ஒரு சக்தி பிழம்பு . கருவுக்கு போஷாக்கு அளிக்க வேண்டிய அளவு எரிபொருளும், ஆற்றலும் அதில் நிறைந்து இருக்கின்றன . Gene economics மரபு அணுப் பொருளாதாரத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆணின் விந்து அணுவைத் தயாரிக்க அதிக செலவு ஆவது இல்லை . அதனால், ஒரே நாளில் பல மில்லியன் கணக்கில் உற்பத்தி செய்து தள்ள முடியும் . ஆனால், பெண்ணின் கரு முட்டையோ, ரொம்பவே காஸ்ட்லியான ஒரு படைப்பு . அதனால்தான், அது மாதத்துக்கு ஒன்று என்று தயாராகிறது . அதனால், எரிபொருள் இருப்பைவைத்து மதிப்பிட்டால், விந்து அணு மலிவானதாகவும் கரு முட்டை விலை உயர்வானதாகவும் ஆகிவிடுகிறது . ஆணின் விந்து அணுக்களுக்குச் செய்கூலி மிகக் குறைவு . அதனால், அது விரையம் ஆனாலும் பெரிய நஷ்டம் ஏற்படாது . அதனால்தான் ஆண் மிருகங்கள், பெண்ணின் சாயலில் இருக்கும் பிற வஸ்துக்களைக் கண்டாலும், உடனே விந்து அணுக்களை வெளியேற்றிவிடுகின்றன . அதனால், அந்த மிருகத்துக்கு எந்தப் பெரிய இழப்பும் இல்லை . ஆனால், பெண் தயாரிப்பதே மாதத்துக்கு ஒரே ஒரு கரு முட்டை என்பதால், அதை விரையம் செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை . அதனால், பெண் தன் காஸ்ட்லியான முதலீட்டை மிகுந்த எச்சரிக்கையுடனே அணுக வேண்டியிருக்கிறது . --'-உயிர்மொழி ' தொடரில், டாக்டர் ஷாலினி , ஆனந்த விகடன் . 13 . 10 . 10 .

Monday, August 1, 2011

நிறுத்துங்கள் தலைவலி மாத்திரையை !

அனாசின், சாரிடான், பூருபென் என்று விதவிதமான வலி நிவாரண மாத்திரைகள் உள்ளன . இவற்றை ஒருமுறை சாப்பிட்டால் அதன் பாதிப்பு 5 ஆண்டுகளுக்கு இருக்குமாம் . அதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு அதிர்ச்சி பதில் காத்திருக்கிறது . அதாவது இத்தகைய வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடும்போது, அந்த மாத்திரைகளில் உள்ள பனடால் என்ற ரசாயனம் மனித உடம்புக்குள் செல்கிறது . அது உடனடியாக கல்லீரலைத்தான் தாக்குவதால் உடல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது . சிறுநீரகப்பாதிப்பும் ஏற்படுமாம் . எனவே, இனி தலைவலி வந்தால் கண்டிப்பாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என்றும், மூலிகை தைலங்கள் மற்றும் இயற்கை மருந்துகளை சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அடித்துச் சொல்கிறார்கள் . சரி தலைவலி ஏன் ஏற்படுகிறது, என்றால் மூளையில் எலக்டிரான், இரும்பு தாதுக்கள் சமச்சீராக இல்லாதபோது தலைவலி ஏற்படும் . இதனை சரிசெய்ய இயற்கை வைத்தியங்கள் ஏராளமாக உள்ளன . அதாவது தலைவலி வந்துவிட்டால் அதிக அளவு தண்ணீர் குடித்தால் கண்டிப்பாக நிவாரணம் கிடைக்குமாம் . அதுபோல பணி நெருக்கடி, ரத்த அழுத்தம் காரணமாக தலைவலி வந்தால், ஒரு பாத்திரத்தில் சுடுநீர் எடுத்து அதன் உள்ளே கால்பாதங்களை வைத்து பதமாக மசாஜ் செய்தால் ஓடிப்போய்விடும் தலைவலி என்கிறார்கள் . --- -தினமலர் . அக்டோபர் 9 , 2010 .