Friday, September 30, 2011

மாரடைப்பு வருமா ?

மாரடைப்பு வருமா ? ரத்தம் சொல்லிவிடும் .
எந்த நேரத்திலும் வந்து தாக்குதல் நடத்தி 5 நிமிடத்தில் ஆளை காலி செய்யும் நோய் எது என்று கேட்டால், அது மாரடைப்புத்தான் . அந்த நோய் வந்திருக்கிறதா என்பதை முங்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியாது . இப்போது, அதற்கும் வழி ஏற்பட்டுவிட்டது . ரத்த பரிசொதனைவாயிலாக, ஒருவருக்கு மாரடைப்பு வருமா ? என்பதை முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம் என்று கூறுகிறார்கள் .
இதயத்தில் ஒருவகை புரோட்டின் உண்டு . அந்த புரோட்டினுக்கு " டிராப்போனின் டி " என்று பெயர் . இந்த டிரோப்போனின் இதயத்தின் தசைகளிலும், இதய ரத்தக்குழாய்களிலும் இருக்குமாம் . இதயத்துக்கு பாதிப்பு ஏற்படும் போது, இந்த டிராப்போனின் சிதைந்து ரத்தத்தில் கலக்குமாம் . அப்படி கலந்து வரும்போது, அதை ரத்தபரிசோதனையில் அறிந்துகொள்ளலாம் . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரத்தத்தில் டிராப்போனின் இருந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது என்று நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஆய்வுதகவல் தெரிவிக்கிறது .
இதுவரை 3 ஆயிரத்து 500 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்து பார்த்ததில் இந்த டிராப்போனின் சிதைவுகள் இருப்பது கண்டறியப்பட்டது .
---- தினமலர் , 14 . 12 . 2010 .

Thursday, September 29, 2011

தன்னை அறிதல் .

வேதங்கள் ' அஹம் பிரம்மாஸ்மி ' என்று சொல்கிறது . நானே பிரம்மம் . நானே இறைவன் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் . தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் என்கிறார்கள் . இதுதான் உண்மையான நிலையை அறியும் முறை என்று வேத ஆகமங்கள் கூறுகின்றன .
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாடு தத்துவ ஞானத்தில் மிகவும் சிறப்பாக விளங்கி இருப்பதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன . அந்நாட்டில் அத்தீனியன் கோயில் வாசலில் " GNOTHE SEAVTON " அதாவது " KNOW THYSELF " -- " தன்னை அறி " என்று பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் .
சாதாரண சராசரி மனிதர்கள் ஐந்து சதவிகிதம்தான் தங்கள் மூளையின் சக்தியைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ?
உலகில் மாபெரும் அறிவாளிகள் தங்கள் மூளையின் ஆற்றலில் பதினைந்து சதவிகிதம்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியுமா ? நாம் மனிதப் பிறவி எடுத்துவிட்டோம . ஆகவே, நமது முன்னேற்றத்துக்காக நாம் நமது மனோ சக்திகளை ஐம்பது சதவிகிதமாவது பயன்படுத்திப் பலன் அடைய வேண்டாமா ? யோசியுங்கள் .
நீங்கள் உங்களிடம் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை உணர்ந்துகொண்டு செயல்பட்டால் இப்போது கிடைப்பதைவிட 25 மடங்கு 50 மடங்கு வசதிகளை நீங்கள் பெறலாம் . ஆகவே, உங்களை உணர்ந்து செயல்பட ஆரம்பியுங்கள் .
--- என்.தம்மண்ண செட்டியார் , ' உன் உள்ளே இருக்கும் மாபெரும் ஆற்றல்கள் ' நூலில் .
--- நூல் உதவி : செல்லூர் கண்ணன் , செல்லூர் .

Wednesday, September 28, 2011

இனி அம்மாக்கள் வேண்டாம் !

அப்பாக்கள் மட்டும் போதும் , இனி அம்மாக்கள் வேண்டாம் !
பொதுவாக, ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் பாலூட்டிகள் வகையில் இனப்பெருக்கம் நடைபெறுவது சாத்தியம் . இந்த இயற்கை விதிகளுக்கு மாறாக, ஸ்டெம்செல் பகுப்பாய்வு ஆராய்ச்சி மூலம், இரண்டு ஆண்களின் எக்ஸ் மற்றும், ஒய் குரோமசோம்களை பிரித்து புதிய கருவை உருவாக்கி உள்ளனர் . அதாவது, ஆண் எலி ஒன்றின் எக்ஸ் -- ஒய் குரோமோசோம்களை மரபணு மாற்றம் செய்து, அதில் இருந்து ஐ.பி.எஸ். என்ற ஒரு வகை செல்லை உருவாக்கியுள்ளனர் . இந்த செல் முதிர்ந்த செல் என்பதால், அதைக்கொண்டு கருவை உருவாக்க முடியும் . அதன்படி, ஐ.பி.எஸ். செல்லில் செய்யப்படும் மாற்றத்தினால், அதில் உள்ள ஒய் குரோமோசோம்களை அழித்துவிடுகிறார்கள் .
அதன்பிறகு கிடைக்கும் செல்லுக்கு எக்ஸ்.ஓ. செல் என்று பெயர் சூட்டிய விஞ்ஞானிகள், இந்த செல்லையும், மற்றொரு ஆண் எலியின் செல்லில் உள்ள எக்ஸ்.ஒய். குரோமோசோம்களையும் ஸ்டெம்செல் வாயிலாக பிரித்து இணைத்து கருவை உற்பத்தி செய்துள்ளனர் . இந்த கருவை, ஒரு பெண் எலியின் கருப்பையில் வளர வைத்து புதிய எலியை உருவாக்கி உள்ளனர் . இந்த எலி இரண்டு அப்பா எலிகளுக்கு பிறந்த எலி என்று விஞ்ஞானிகள் அடித்து கூறுகிறார்கள் .
இப்படி தலையை சுற்றி வாலைத் தொட்டாலும், கடைசியில் கரு வளர பெண் எலியின் கருப்பை தேவைப்படுவதால், இனி ஆண் எலிக்கும் கருப்பையை வைத்தால்தான், அது குட்டி போட முடியும் . என்வே இந்த கண்டுபிடிப்பு எலிக்கு சாத்தியம் . மற்ற உயிரினங்களுக்கு சாத்தியமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது .
--- தினமலர் ,12 . 12 . 2010 .

Tuesday, September 27, 2011

பழைய பெயர் -- புதிய பெயர் !

தேசிய கீதத்தில் வரும் ' உத்கல் ' என்ற சொல்தான் இன்றைய ஒரிசாவை குறிக்கிற புராதனப் பெயர் .
மெட்ராஸ் -- சென்னப்பட்டனம் -- சென்னை .
சிலோன் -- ஸ்ரீலங்கா .
பர்மா -- மியான்மர் .
பாரசீகம் -- ஈரான் .
பாலஸ்தீனம் -- இஸ்ரேல் .
சோவியத் யூனியன் -- ரஷ்யா .
கிழக்கு பாகிஸ்தான் -- பங்களாதேஷ் .
மெஸமடோமியா -- ஈராக் .
சயாம் -- தாய்லாந்து .
மலாவாய் -- நியூசிலாந்து .
ஹாலந்து -- நெதர்லாந்து .
கம்பூசியா -- கம்போடியா .
பார்மோஸ் -- தைவான் .
சாண்ட் விச் தீவுகள் -- ஹவாய் .
தென் ரொடீஷியா -- ஜிம்பாவே .
தென் மேற்கு ஆப்பிரிக்கா -- நமீபியா .
அபிசீனியா -- எத்தியோப்பியா .
டச் ஈஸ்ட் இண்டீஸ் -- இந்தோனிஷியா .
---தினமலர் இணைப்பு , டிசம்பர் 10 , 2010 .

மொழி பெயர்க்கிறது கூகுள்

சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது . ஆங்கிலம் தமிழ் மொழிக்களுக்கியையே மொழி பெயர்த்துத் தந்திருக்கும் வசதியே அது . http: // trans-late. google. com என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திறகும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம் .
தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில் , ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும் . பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும் . .தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும் . நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழிபெயர்ப்பு தரப்படுகிறது . தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது .
மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு . இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவனது எண்ணங்கள் . என்வே, அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும் . இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சர்யத்தைத் தந்துள்ளது கூகுள். வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி இது .
--- தினமலர் . 27 . 9 . 2011 .

Monday, September 26, 2011

சொல்வனம் .

கவனிக்கத் தவறிய அப்பா .
தாத்தா சொத்தென்று எதுவும் இல்லை
அப்பாவின் எழுபது வருட உழைப்புதான்
உருவாகி இருக்கிறது
வீடுகளாகவும் விளை நிலங்களாகவும் .
ஆறு பிள்ளைகளுக்கும்
ஆனது திருமணம்
ஏதும் பிரச்னையே இல்லை .
ஒரு சுபயோக சுபதினத்தில்
பைசா பாக்கி இல்லாமல்
பிரித்துக்கொண்டாயிற்று
சொத்துக்களையும் .
கடைசியாகத்தான் பேசிக்கொண்டோம்
அப்பா, அம்மா எங்கே இருப்பாங்க
யார் எவ்வளவு தரணும் என்று .
அப்பாவின் கண்கள்
கலங்கியதா என்றெல்லாம்
நான்
பார்க்கவில்லை !
--- ஆர்.சி.மதிராஜ் , ஆனந்த விகடன் . 15 . 12 . 2010 .

Sunday, September 25, 2011

அட... இப்படியா சங்கதி ?!

" ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணி ! '
இப்ப இருக்கிற நிலைமையில ஒரு பொய்யைச் சொல்லிக்கூட கல்யாணம் பண்ண முடியாது ! இதுல, ஆயிரம் பொய் வேற சொல்லி கல்யாணத்த பண்ணிட்டு யாரு திண்டாடுறது ? ' ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணு'ங்கறதுதான் உண்மையான அர்த்தம் . அதாவது... பொண்ணு பாக்க, மாப்பிள்ளை பாக்க, சொந்தபந்தம் விசாரிக்க, நிச்சயதார்த்தம், பெண் அழைப்பு...இப்படி ஏகப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களையெல்லாம் நடத்தனும்னா ஊரு, உறவுமுறைக்குத் தகவல் சொல்லித்தான் ஆகணும் . அதுக்காக, ஆயிரம் தடவைகூட போய் பார்த்து கல்யாணத்தை முடிக்க வேணும் . அதுதான் இப்படி ' ஆயிரம் பொய் சொல்லி 'ன்னு மாத்தி சொல்லிட்டாங்க போலும் !
' மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதே '
மண் குதிரைன்னு தெரிஞ்சபிறகு, எவனாச்சும் அதை நம்பி ஆத்துல இறங்குவானா ? பிறகெதுக்கு இப்படி சொல்றாங்க ? அப்படி கேளுங்க ... அதாவது, ஆத்துக்கு நடுவுல அங்கங்க திட்டுத்திட்டா மண் மேடு இருக்கும் . இந்த மேடுகள ' குதிர் 'னு சொல்வாங்க . ' மேடு ' தானேன்னு போய் அதுல காலை வைச்சா... அவ்வளோதான், அப்படியே உள்ள போயிடும் . அந்தளவுக்கு பலமில்லாதது அந்த மேடுங்க . அதுக்காக ' மண் குதிர நம்பி ஆத்துல இறங்காத'னு சொல்லி வெச்சத்துதான்... மண்ணு குதிரைனு பறக்க ஆரம்பிச்சுடுச்சு .
--- மெய்யழகன் . அவள் விகடன் .15 . 1 . 2010 .

Saturday, September 24, 2011

எறும்புகளின் ராஜ்ஜியம் .

எறும்புகளின் ராஜ்ஜியத்தில் மனித அடிமைகள் ?
காலம், உலகம்.... என எல்லாமே சுழற்சி முறையில், அதாவது ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடியும் தன்மை கொண்டவை . ஆகவே, ஒரு கட்டத்தில் உலகின் மீது மனிதன் கொண்டிருக்கும் ஆதிக்கமும் முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான் நியதி . சரி, மனிதனுக்குப் பிறகு இந்த பூவுலகை யார் ஆள்வார்கள் என்று கற்பனை செய்து பார்த்தால்... கண்முன்னே சிரிக்கின்றன எறும்புகள் !
ஏன் கூடாது ? பூமிக்கு மேலேயும் சரி, அடியிலும் சரி... எல்லா இடங்களிலும் நீக்கமற பரவிக்கிடப்பவை எறும்புகள்தான் .' உலகில் உள்ள எல்லா மிருகங்களையும் எடை போட்டால், மொத்த எடையில் 25 சதவிகிதம் எறும்புகள்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் . எறும்புகளுக்கு நம்மைவிட புத்தி அதிகம் . கற்பனாசக்தியும் அதிகம் !
நம்மைப் போல நகரங்களையும் சமூகத்தையும் நிர்மாணிக்கும் திறன் கொண்டவை . அதிகாரிகள், ஏவலர்கள், விவசாயிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் ... என எறும்புகளின் காலனியில் பல சமூக அடுக்குகள் உண்டு . நம்மைப் போலவே உபகரணங்களைப் பயன்படுத்தத் தெரிந்தவை . அவற்றுக்கு மருத்துவமும் தெரியும் என்று சொன்னால் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும் ! எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்கு சிந்திக்கவும், திட்டமிட்டு வேலை செய்யவும் தெரியும் .
மனிதனுக்கு அடுத்தபடியாக விவசாயம் செய்யத் தெரிந்த ஒரு ஜீவன், எறும்புகள்தான் . ஆன்டினி, அக்ரோமிர்மெக்ஸ் போன்ற ஒரு சிலவகை எறும்புகள் விவசாயம் செய்து சாப்பிடுகின்றன . இப்படி ஒன்று இரண்டு அல்ல, 200 வகை எறும்புகளுக்கு விவசாயம் செய்யத் தெரியுமாம் . இப்படிப்பட்ட எறும்புகளை ' லீஃப் கட்டர்கள் ' என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள் .
நாம் விவசாயத்தில் பயன்படுத்தும் களையெடுத்தல், பூச்சிமருந்து தெளித்தல் போன்ற யுத்திகளையும் எறும்புகள் கையாள்கின்றன . பாலைத் தயிராக்கும் யுத்திக்கு சமமான ஒரு யுக்தியை எறும்புகளும் பயன்படுத்துகின்றன .
உணவுக்காக மனிதர்கள் ஆடு, மாடு வளர்ப்பதைப் போல எறும்புகளும் கால்நடைகளை வளர்க்கின்றன . எறும்புகளுக்கு கால்நடை மாதிரி இருப்பது 'ஆப்பிட்ஸ் ' என்ற ஒருவகை பூச்சிகள் . மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது மாதிரி எறும்புகள் இந்தப் பூச்சிகளை ஒரு சில செடிகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கின்றன . பிறகு தங்களுக்கு தேவைப்படும்போது அந்த பூச்சிகளின் வயிற்றில் சேர்ந்திருக்கும் இலைகளின் சாற்றை, அந்தப் பூச்சிகளின் வயிற்றை அழுத்தி வாய் வழியாக கறந்துவிடுகின்றன எல்லா எறும்புகளும் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவதில்லை . எறும்புகளின் சமூகத்திலும் மாடு மேய்ப்பதற்கென்று தனியாக இருக்கும் ஓரினம்தான் . பூச்சிகளின் வயிற்றில் இருந்து தாவரச் சாற்றை சேகரித்து, தங்கள் காலனியில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்கின்றன !
--- சொந்தங்களே .... உயிர்களை உரசும் தொடரில், மேனகா காந்தி அவள் விகடன் 17 . 12 . 2010 இதழ் உதவி N. கிரி, நியூஸ் ஏஜென்ட் திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி )

Friday, September 23, 2011

மனைவியை ஏமாற்றுகிறீர்களா ?

மனைவியை ஏமாற்றுகிறீர்களா ? அது உங்கள் மரபணுவின் குற்றம் .
மனைவியை ஏமாற்றும் கணவர், கணவரை ஏமாற்றும் மனைவி இதற்கெல்லாம் அவர்களின் சதித்திட்டம் காரணம் அல்ல , ஜீன் எனப்படும் அவர்களின் மரபணுதான் காரணம் என்று அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இப்படி பரஸ்பரம் ஏமாற்றும் கணவர், மனைவியரை பார்த்து " அவர் என்ன செய்வார், அவரது கிரகம் பிடித்து ஆட்டுகிறது " என்பார்கள் . இங்கே விளையாட்டாகச் சொல்லும் கிரகம்தான் விஞ்ஞானபூர்வமாக ஜீன் என்று சொல்லப்படுகிறது போலும் .
ஏமாற்றும் குணமுடையவர்களின் உடலில் இருக்கும் டி.ஆர்.டி.4 என்ற ஜீன்தான் அவர்களை அப்படி எல்லாம் செய்யச்சொல்கிறது என்பதை ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்தனர் .
இந்த வகை ஜீன் இருந்தால், அவர்கள் மனைவிக்குத் தெரியாமல் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவார்கள் . சிறுசிறு குற்றங்கள் செய்வார்கள் . இதை என்னதான் தடுத்து நிறுத்த முயன்றாலும் முடியாது . இத்தகைய குணங்களை கொண்ட பலாஆயிரம் பேரின் தனிப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்களின் ஜீன் அமைப்பையும் ஒப்பிட்டு பார்த்தபோது இது தெரிய வந்தது . எனவே, ஏமாற்றும் குணமுடையவர்களை மருந்து கொடுத்தோ, தண்டனை கொடுத்தோ திருத்த முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் . ஆக, கிரகம் ஆட்டுகிறது என்று நமது ஊர் பெரிசுகள் சொல்வது சரிதான் போலும் .
---தினமலர் , 3 . 12 . 2010 .

Thursday, September 22, 2011

ஒட்டாததும், ஒட்டுவதும் !

திருக்குறளில், 35 வது அதிகாரம் துறவு - ல், "' யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் " என்ற குறள் . " எந்தெந்தப் பொருள்களில் எல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ, அந்தப் பொருள்களால் நமக்குத் துன்பம் கிடையாது . மனது ஒட்டாமல் இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய இந்தக் குறளை உச்சரிக்கும்போது உதடுகள்கூட ஒட்டாது . உதடு ஒட்டாமல் உச்சரிக்கக்கூடிய ஒரே குறள் இதுமட்டுமே .
அதேபோல, வான்சிறப்பு பற்றிச் சொல்லும்போது, 2 வது அதிகாரத்தில் வரும் " துப்பார்க்கு துப்பாய . துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய தூவும் மழை " எனத் தொடங்கும் குறள், " மழை குறிப்பிட்ட இடைவெளியில் பூமியைத் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும் " என்று அறிவுறுத்துகிறது அந்தக் குறளின் ஒவ்வொரு வார்த்தையிலும் உதடுகள் ஒட்டும் .
--- வனிதா ,ஆசிரியை . குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி , அரும்பாக்கம் சென்னை .. ஆனந்த விகடன் , 8 . 12 . 2010 .

Wednesday, September 21, 2011

கருவறை வாசம் !

மனித ஆணின் மரபணுக்கள் மாறிக்கொண்டே இருக்க, அவன் உடல் டெஸ்டோஸ்டீரான் என்கிற ஆண் இன ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது . இந்த டெஸ்டோஸ்டீரான், ரொம்பவே சுவாரஸ்யமான ஒரு ஹார்மோன் . இந்த ஹார்மோன்தான் ஆண்மைக்கே காரணம் . சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்..... ஜனிக்கும்போது, எல்லாக் கருக்களுமே பெண்ணாகத்தான் உருவாகின்றன . இன்றும் மனிதக் கருக்கள் அனைத்துமே ஆரம்ப காலத்தில் பெண் வடிவாகத்தான் இருக்கின்றன . ஆறு வாரங்கள் இப்படிப் பெண்ணாகக் கருவறை வாசம் செய்த பிறகுதான், Y குரோமோசோம் இருக்கும் கருக்கள், டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன . இந்த டெஸ்டோஸ்டீரான் அந்தக் கருவின் உடல் முழுக்கப் பரவி, ஏற்கனவே பெண்ணாக இருக்கும் இந்தக் கருவை, வேரில் இருந்து நுனி வரை rewinding செய்து ஆண்மைப்படுத்திவிடுகிறது . இப்படி mesculinize செய்யப்படுவதால்தான் ஆண் உறுப்புக்கள், ஆண்மைத்தனமான உடல் அமைப்பு, ஆண் என்கிற பாலியல் அடையாளம் எல்லாம் ஏற்படுகின்றன .
--- ' உயிர்மொழி ' ஆண் பெண் ஊஞ்சல் தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் , 8 . 12 . 2010 .

Tuesday, September 20, 2011

மோகம், தாபம், விரகம், போகம், காமம் !

' மோகம் ' என்றால், சித்தம் கலங்குவது . ' யாரைப் பார்த்து ? ' என்கிற லாஜிக் எல்லாம் அதற்கு அவசியம் இல்லை !
' தாபம் ' என்றால், காதல் தாகத்தால் துன்புறுவது -- அதன் காரணமாக உடலில் வெப்பம் அதிகரிப்பது !
' விரகம் ' என்றால், பிரிவினால் ஏற்படும் ( காதல் ) துன்பம் !
' போகம் ' என்றால், சிற்றின்பங்களை அனுபவிப்பது !
' காமம் ' என்றால், உடற்கூறு சம்பந்தப்பட்டது -- Physical .
நதி !
உலகிலேயே நீள நதி நைல் -- 4,145 மைல் . அடுத்து அமேசான் -- 3,900 மைல் . மிஸௌரி -- மிஸிஸிபி இரண்டும் இணைந்து 3,800 மைல் . இருப்பினும், நீர் என்றால் கடல்தான் .
உலகின் 97 சதவிகித நீர் கடலில்தான் இருக்கிறது . இரண்டு சதவிகிதம் ( அண்டார்டிக்காவிலும், ஆர்டிக்கிலும் ) உறைந்த ஐஸ் ஆக, ஒரு பர்சென்ட்டுக்கு. குறைவான நீர்தான் நதிகளில் !
--- ஹாய் மதன் , கேள்வி - பதில் . ஆனந்த விகடன் , 8 . 12 . 2010 .

Monday, September 19, 2011

பாம்புகளின் விஷம் !

பாம்பின் விஷம், ஏறக்குறைய உமிழ்நீர் போன்றது ; இது விஷப்பொருள் , புரதம், என்சைம்கள் கலந்த கலவை . பாம்புகளைப் பிடித்து விஷத்தை உமிழ வைத்து, அதில் இருந்து புரதம் மற்றும் என்சைம்களைத் தனியாகப் பிரித்தெடுத்து பல வகையான மருந்துகளை உருவாக்குகின்றனர் .
இந்தியா, சினா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பாம்பு விஷத்தை வேறு சில பொருட்களுடன் கலந்து மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர் . பாரம்பரிய மருத்துவத்தின் வாதம், வலிப்பு, மூட்டுவலி, மன படபடப்பு, சுவாசக் கோளாறு, அஜீரணக் கோளாறு ஆகியவற்றைத் தீர்க்கவும் விஷமுறிவு மருந்தாகவும் பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது .
ஆங்கில மருத்துவத்தில், பாம்பு விஷத்தில் இருந்து விஷமுறிவு மருந்துகள், டென்ஷன் குறைக்கும் மருந்துகள், வலி நிவாரணிகள் தயாரிக்கப்படுகின்றன . ஆனால், இவற்றில் இருந்து சில மருந்துகளை மட்டுமே சர்வதேச மருத்துவக் கவுன்சில் அங்கீகரித்துள்ளது .
புற்று நோய், கட்டிகள், ரத்தக் கோளாறுகளை நீக்கும் மருந்துகளைப் பாம்பு விஷத்தில் இருந்து தயாரிக்கும் முயற்சி பல நாடுகளிலும் தொடர்கிறது .
--- தினமலர் இணைப்பு .டிசம்பர் 3 , 2010 .

Sunday, September 18, 2011

தபால் பெட்டி .

ஆரம்ப காலத்தில் தபால் பெட்டிகளுக்கு பச்சை நிறம்தான் பூசியிருந்தார்கள் . அப்புறம் பிரிட்டிஷ் அரசு 1874ல் சிவப்பு நிறத்துக்கு மாற்றியது .
உலகத்தை ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்தா, எல்லா நிற தபால் பெட்டிகளையும் பார்த்துடலாம் . சீனா, ஹாங்காங், தைவான், அயர்லாந்து நாடுகளில் பச்சை நிறம் . ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், ரஷ்யா நாடுகளில் நீல நிறம் . ஆஸ்திரேலியா, பிரேசில், கிரீஸ், மலேஷியா, நார்வே நாடுகளில் மஞ்சள் நிறம் , அர்ஜெண்டைனா, கனடா, இந்தியா, ஜப்பான், பெல்ஜியம் நாடுகளில் சிவப்பு நிறம் . இந்தோனேஷியா, நெதர்லாந்தில் ஆரஞ்சு நிறம்; சான் மரினோவில் வெள்ளை நிறம் ; பிலிப்பைன்ஸ் நாட்டில் கிரே நிறம்னு பல நிறங்களைப் பயன்படுத்துறாங்க .
தபால் பெட்டியின் அடையாள குறியீடுகள் : ஆஸ்திரேலியாவில் ' பி ' என்ற எழுத்தையும், கனடாவில் ' பறக்கும் பறவை ; அயர்லாந்தில் ' எஸ் ஈ ' எழுத்துக்கள் ; ரஷ்யாவில் ' ரஷ்யன் போஸ்ட் ' என்ற வார்த்தை ; ஜப்பானில் ' டி ' என்ற எழுத்து ; அமெரிக்காவில் ' கழுகு ' படம் இப்படியாக விதவிதமான குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள்
எல்லா நாட்டிலும் போஸ்ட் பாக்ஸ்னு பெயர் கிடையாது . கலெக்க்ஷன் பாக்ஸ், .மெயில் பாக்ஸ், டிராப் பாக்ஸ், லெட்டர் பாக்ஸ், லேம் பாக்ஸ், பில்லர் பாக்ஸ், வால் பாக்ஸ், லட்லோ வால் பாக்ஸ்... இப்படி பல பெயர்களால் தபால் பெட்டியைக் குறிப்பிடுறாங்க .
--- தினமலர் இணைப்பு .டிசம்பர் 3 , 2010 .

Saturday, September 17, 2011

ரிப்பீட் வயசு !

யாராவது ஒருவரை அழைத்து இப்படி சொல்லுங்கள் : " நான் சொல்ற ஒரு சின்ன பெருக்கல் செய்தால் உங்க வயசு 3 தடவை ரிப்பீட் ஆகும் ! ". அவர் சரி சொன்னதும், " முதலில் உங்க வயசை 259 ஆல் பெருக்குங்க ; வரும் விடையை 39 ஆல் பெருக்குங்க " என்று சொல்லுங்கள் . கணக்கு செய்பவர், " அட, வயசு 3 தடவை ரிப்பீட் ஆயிடுச்சே " என்று அசந்துபோவார்!
வயது இரட்டைப்படையில் இருந்தால், வயது 3 முறை ரிப்பீட் ஆகும் .
உதாரணம் 1 : வயது 10 ; 259 ஆல் பெருக்கினால் 2590 ; இதை 39 ஆல் பெருக்கினால் 101010 .
உதாரணம் 2 . வயது 90 ; 259 ஆல் பெருக்கினால் 23310 ; இதை 39 ஆல் பெருக்கினால் 909090 .
வயது ஒற்றைப்படையில் இருந்தால், விடையின் மத்தியில் இரண்டு ' 0 ' வரும் .
உதாரணம் 1 ; வயது 9 ; 259 ஆல் பெருக்கினால் 2331 ; இதை 39 ஆல் பெருக்கினால் 90909 .
உதாரணம் 2 : வயது 7 ; 259 ஆல் பெருக்கினால் 1813 ; இதை 39 ஆல் பெருக்கினால் 70707 .
--- தினமலர் இணைப்பு .டிசம்பர் 3 , 2010 .

அதிசயம் என்ன இருக்கு ?

' உன் பிறந்த ஆண்டு என்ன ? '
' 1999 '.
' இப்போது உன் வயது என்ன ? '.
' 12 .'
' இரண்டையும் கூட்டினால் 2011 வரும் . இதுபோல் யார் வேண்டுமானாலும் கூட்டிப் பார்க்கலாம் . 2011 தான் வரும் .'
' அதிசயமா இருக்கே ! '
( உண்மையில் அதிசயம் எதுவுமில்லை . அடுத்த ஆண்டு ஒரு வயது கூடும் . அப்போது 2012 என்று வரும் ).
---- இலக்கியப்பீடம் , செப்டம்பர் 2011 .
---- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Friday, September 16, 2011

தெரியுமா ? தெரியுமே !

* சார்லஸ் ரீடி என்ற அறிஞன் சொல்கிறான் : '' குழந்தைகளிடம் சிந்தையை விதைத்தால், அது செயலாய் விரியும் . செயலினை விதைத்தால் பழக்கமாய் படியும் . பழக்கத்தை விதைத்தால் பண்பாய் மலரும் . பண்பினை விதைத்தால் எதிர்காலத்த்தில் ஒளியாய்த் திகழும் ".
* அன்பை நல்லபடியாகவும், கோபத்தை எதிர்மறை உணர்ச்சியோடும் வெளிப்படுத்துவதுதானே உலக இயல்பு ?
--- குமுதம் , 8 . 12 . 2010.

Thursday, September 15, 2011

வான்வெளியில் நட்சத்திரங்கள் !

20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் வான்வெளியில் கண்டுபிடிப்பு . 3 ஐ தொடர்ந்து 23 பூஜ்யங்கள் அளவு...
விண்வெளியில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை, விஞ்ஞானிகளால் முன்பு கணிக்கப்பட்டதைவிட 20 மடங்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது . 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை விண்வெளியில் நட்சத்திரங்கள் இருக்கலாம் என்பது அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர் .
அந்த எண்ணிக்கையைவிட 10 முதல் 20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் இருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது . அதாவது, 3க்கு அடுத்து 23 பூஜ்யங்களை சேர்த்தால் வரக்கூடிய எண்ணிக்கையில் நட்சத்திரங்கள் விண்வெளியில் உலவிக் கொண்டிருப்பதாக தெரிகிறது .
இதை ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்பதைப் போல 300 செக்ஸ்டிலியன் என்று கூறுகின்றனர் . அதாவது, 10,000 கோடியில் 3 லட்சம் மடங்குகள் செக்ஸ்டிலியன் என்று அழைக்கப்படுகிறது .
--- தினகரன் . 3 டிசம்பர் 2010 .

Wednesday, September 14, 2011

விமான ' கறுப்பு பெட்டி '

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பகுதியைச் சேர்ந்த டேவிட் வாரன் என்பவர்தான் 1953 ல் கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்தார் . 1960 முதல் ஆஸ்திரேலியாவிலும் பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளிலும் இந்தப் பெட்டியை விமானங்களில் பயன்படுத்த ஆரம்பித்தனர் .
இதன் பெயர் ' கறுப்பு ' பெட்டி என்று இருந்தாலும், இது ஆரஞ்சு நிறத்தில்தான் இருக்கும் . விபத்து பகுதியில் இதை விரைவாகக் கண்டுபிடிக்க வசதியாகத்தான் இதற்கு ஆரஞ்சு நிறம் பூசப்படுகிறது .
இந்தப் பெட்டியை விமானத்தின் வால் பகுதியில் பொருத்தியிருப்பார்கள் . விபத்து வேளையில் வால் பகுதி பாதிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால்தான் அங்கு பொருத்துகின்றனர் .
பல தகவல்களையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யும் சிறுசிறு கருவிகள் இந்தப் பெட்டியில் இருக்கும் . விமானம் எவ்வளவு உயரத்தில், எவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்ற தகவல்; விமான இன்ஜின் இயக்கத்தின்போது வெளிப்படும் சத்தம்; விமானி அறையில் நடக்கும் உரையாடல்கள் போன்றவை கறுப்பு பெட்டியில் பதிவாகும் . இதனால், விபத்துக்குப் பின் கறுப்பு பெட்டியை மீட்டு அதில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்யும்போது, விபத்திற்கான காரணம் வெளிப்பட்டுவிடும் .
--- தினமலர் இணைப்பு . நவம்பர் 26 . 2010 .

Tuesday, September 13, 2011

செயற்கை ரத்தம் !

நவீன அறிவியல்துறை, செயற்கை ரத்தத்தையும் உருவாக்கியுள்ளது !
குழந்தை பிறந்தபின் துண்டிக்கப்படும் தொப்புள் கொடியில் இருந்துதான் செயற்கை ரத்தத்தை உருவாக்குகிறார்கள் . தொப்புள் கொடியில் ' ஹெமட்டோபோய்ட்டிக் ' என்ற ஸ்டெம் செல்கள் இருக்கும் . இந்த செல்களில் இருந்து சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்கி, செயற்கை ரத்தத்தைத் தயாரிக்கிறார்கள் . ஒரு தொப்புள் கொடியில் இருந்து கிடைக்கும் ஸ்டெம் செல்களை வைத்து 20 யூனிட் செயற்கை ரத்தம் தயாரிக்க முடியும். ஆனால், இதற்கு ஆகும் செலவு மிக அதிகம் ... 5 ஆயிரம் டாலர்கள் ! ( ஏறக்குறைய ரூ. 2 லட்சம் ).

Monday, September 12, 2011

பொற்கோயில் .

பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ளது பொற்கோயில் .
கோயில் வளாகம் சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம் . கோயில் முழுவதும் சொக்கத் தங்கத்தால் வேயப்பட்டிருக்கிறது . பொற்கோயிலின் நிழல் ' அம்ருத் சரோவர் ' என்ற தடாகத்து நீரில் விழுந்து, நீரோட்டத்தில் அது ஆடி, அசைந்து தரும் காட்சி காணக்கிடைக்காதது . கோயிலின் பிம்பம் விழும் அந்தத் தடாகத்து நீரை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள் . அதில் முழுக்குப் போடலாம் . ஆனால் சோப்பு, ஷாம்பு எதுவும் உபயோகிக்கக்கூடாது . யாராவது ஒரு சீக்கியர் தடாகத்தின் படிகளைத் துடைத்துக் கொண்டேயிருக்கிறார் . இந்தத் தடாகம் 15 -ம் நூற்றாண்டில் வெட்டப்பட்டதாம் .
' கர்பானி கீர்த்தன் ' என்ற பஜனைப் பாட்டு, ஸ்ரீ ஹரிமந்திர் சாஹிப் பொற்கோயிலின் கதவு திறந்ததிலிருந்து, இரவு மூடும் வரை இடைவிடாது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது . சீக்கியர்களின் வேதப் புத்தகமான ' ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்' பை சகல மரியாதைகளுடன் பல்லக்கில் வைத்து, எல்லோரும் புடைசூழ, ' அகாலி தக்த் ' என்ற மேடையை சுத்தம் செய்து, விரிப்புகள் விரித்து சிறிய கட்டிலில் அமர்த்தி வைக்கிறார்கள் . பின்னணியில், குர்பானி பாட்டு, பஜனை ஒலிக்கிறது . ஒரு சீக்கியர், நாம் தரும் காணிக்கை பணத்தை வாங்கிக் கொண்டு
நமக்கு சர்க்கரைக் கட்டி, படம், புத்தகம் ஆகியவைகளை பிரசாதமாக அளிக்கிறார் . படி ஏறி மேலே செல்லும்போது, ஆண் பெண் அனைவரும் கட்டாயம் தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும் . நுழையும்போதே மஞ்சள் கைக்குட்டைத் துணிகள் ஆண்களுக்கு அளிக்கப்படுகிறது . பெண்கள் புடவைத் தலைப்பாலோ, துப்பட்டாவினாலோ தலையை முக்காடு போட்டு மூடிக் கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும் .
அங்கு,ஏழை, பணக்காரன் எல்லோரும் சரிசமமாக அமர்ந்து சாப்பிடும் ' குரு கா லங்கர் ' என்ற லங்கரில் ( சமையற்கூடத்தில் ) சராசரியாக 50,000 பேருக்கு மேல் ஒவ்வொரு நாளும் உணவருந்துகிறார்கள் . தட்டுகள், கிண்ணங்கள், சாப்பிடும் இடம் எல்லாமே மிக மிக சுத்தமாக இருக்கிறது . இத்தனை ஆயிரம் மக்கள் சாப்பிட்ட சுவடே தெரியாமல் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது . எல்லாமே ஃப்ரீதான் . முகலாய மன்னர் அக்பர் பாதுஷாவே இந்த லங்கரில் மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவருந்தி இருக்கிறாராம் .
--- சாருஸ்ரீ , குமுதம் சிநேகிதி . டிசம்பர் 1 - 15 , 2010 . இதழ் உதவி : N. கிரி , நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

Sunday, September 11, 2011

கர்ப்பப் பை .

நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளுக்கு கர்ப்பப் பை மல்லாந்த நிலையில் இருக்கும் . அதனால், புவி ஈர்ப்பு சக்தியின் பாதிப்பு இருக்காது . இப்படிப் படிந்துகிடக்கும் கர்ப்பப் பையினுள் மரபணுக்களைச் செலுத்தினால், அப்படியே பத்திரமாக இருக்கும், வெளியேறாது . ஆனால், மனிதப் பெண்ணோ இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்கிறாள் . இதனால் அவள் கர்ப்பப் பையும் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு செங்குத்தாகவே இருக்கிறது . இந்த நிலையில், பெண் உடலில் மரபணுக்களை முதலீடு செய்தால், அவை தங்காமல் வெளியேறிவிடும் . அப்புறம் எப்படி இனம் விருத்தியாவது ?
ஆனால், இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்பதால் மனித குலத்துக்கு ஏகப்பட்ட ஆதாயங்கள் இருந்தன . கைகளை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்த முடிந்தது . இதனால் மற்ற மிருகங்களைவிட மிக வேகமாக முன்னேற முடிந்தது . ஆனால், கலவியின்போது இப்படி இரண்டு காலில் நிற்பது அனுகூலமாக இல்லை . அந்தச் சமயத்துக்கு மட்டுமாவது பெண் தன் செங்குத்தான நிலையை விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது . அதுவும் விந்தணுக்கள் போய் கருமுட்டையோடு கூடும் அந்தப் பல நிமிடங்களுக்கு அவள் அப்படியே கிடந்தாக வேண்டும் . ' அவ்வளவு நேரத்துக்கு எல்லாம் சும்மா படுத்துக்கிடக்க முடியாது .... சுத்த போர் ! ' என்று பெண் முரண்டு பண்ணினால், மொத்த மரபணு ஆட்டமும் குளோஸ் ! ஆக, பெண்ணை எப்படியாவது மதி மயங்கி சும்மாகிடக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக்கினால் ஒழிய, மனித மரபணுக்கள் பரவ வாய்ப்பு இல்லை .
மனித இனத்துக்கு மட்டும் இப்படி ஒரு விநோதத் தேவை இருந்ததால்தான், இயற்கை மனிதர்களுக்கு மட்டும் சில பிரத்தியேக மாற்றங்களைச் செய்துள்ளது . உதாரணத்துக்கு, உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்களேன் . எலி, பூனை, நாய், சிங்கம், புலி என்று எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றின் தோலில் இருக்கும் ரோமம் இரண்டு பாலினத்திற்குமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் . ஆண் எலிக்கு எவ்வளவு தோல் ரோமமோ, அதே அளவுதான் பெண் எலிக்கும் . ஆனால், மனிதர்களில் மட்டும் அப்படி இருப்பது இல்லை . பருவம் அடைந்த பிறகு, மனித ஆணுக்கு பெண்ணைக் காட்டிலும் அதிகமான ரோமம் முளைத்துவிடுகிறது . ஆக, மனிதர்களை பொறுத்தவரையில், பெண்ணுக்கு உடம்பில் முடி மிகக் குறைவு . ஏன் இந்த வித்தியாசம் ? நம் நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பன்சியில்கூட இந்த ரோம வித்தியாசம் கிடையாது . பெண், ஆண் இருவருக்குமே ஒரே மாதிரியான தோல்முடிதான் . மனிதர்களில் மட்டும், அதிலும் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசம் ?
ரோமம் அடர்த்தியாக இருந்தால், தொடுதல் உணர்வைத் துல்லியமாகக் கிரகிக்க முடியாது . இதுவே ரோமம் குறைவாக இருந்தால், தொடுகை உணர்வு சுகமாகத் தோன்ற ஆரம்பிக்கும் . ரோமம் குறைவான மனிதப் பெண்ணின் தோலைத் தொட்டுத் தடவி, வருடி, மென்மையாக உரசினால் போதும் . அவளது நரம்புகளில் மின்சாரம் அதிகமாகப் பாய்ந்து, மூளை கிளர்ச்சிக்கு உள்ளாகும் . அவள் மதி மயங்கி நீண்ட நேரத்துக்கு அரைத் தூக்கத்தில் படுத்தேகிடப்பாள் . இந்த அவகாசத்துக்குள் அவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்துவிட்டால், நிச்சயம் வம்சம் விருத்தியாகுமே !
---' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 1 . 12 . 2010 .

Saturday, September 10, 2011

ஜோக்ஸ் ...

* குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது....
கண்ட்க்டர் விசிலடிச்சா
சோறு வேகாது ....
* யானை மேல நாம
உட்கார்ந்தா அது சவாரி...
நம்ம மேல யானை
உட்கார்ந்தா அது ஒப்பாரி ,,,
* ஆசிரியர் : மாணவர்களே நீங்கள் எல்லாம் வைரம் மாதிரி .
மாணவர் : நீங்களூம் வைரம் மாதிரிதான் சார் .
ஆசிரியர் : என்மேல அவ்வளவு மரியாதையா ?
மாணவர் : அப்படியில்ல ; வைரத்தை வைரத்தால தான் அறுக்க முடியும்னு நீங்கதானே சொன்னீங்க
* " இந்த துணி சூப்பர் குவாலிட்டி சார் ... கிழியவே கிழியாது ."
" அப்புறம் எப்படி எனக்கு ஒன்றரை மீட்டர் கிழிச்சுத் தரப்போற ?! "
* " மச்சீ.. இறந்து போன மனைவி மும்தாஜ் ஞாபகார்த்தமா தாஜ்மஹாலையே கட்டியிருக்கார் ஷாஜஹான்... நீயெல்லாம் என்ன பண்ணியிருப்பே..?"
" நானாயிருந்தா.... அவ தங்கச்சிய கட்டி இருப்பேன்.... ".
* " ஹேமா , காதலுக்கு கண் இல்லங்கறது உண்மையா ? "
" ஹண்ட்ரட் பர்சன்ட் உண்மைதான் ! ஆனா, உன்னையெல்லாம் எவனாவது காதலிச்சான்னா , அவனுக்கு மூளையே இல்லங்கறதும் உண்மை ".

ராவணன் உருவாக்கிய கிணறுகள் .

ராவணன் உருவாக்கிய கிணறுகள் புத்தமத சின்னமாக்குவதா ? இந்து மக்கள் கட்சி கண்டணம் .
இலங்கையில் தமிழர்களின் பூர்வீகப் பகுதியான திரிகோணமலையில் திருக்கோனேச்சுரர் கோயில் அருகில் கன்னியா கிராமத்தில் ராவணனால் உருவாக்கப்பட்ட 7 சுடுநீர் ஊற்றுக்கள் உள்ளது . ஆன்மிக உலகின் அதிசயங்களில் ஒன்றான இக்கிணறுகள், ராவணன் தன் தாயாரின் ஈமச்சடங்குகளை செய்வதர்காக உருவாக்கியவை என்று புராணங்களும், ராமாயணமும் குறிப்பிடுகிறது .
இந்த சுடுநீர் கிணறுகளை புத்தமத சின்னமாக மாற்றியமைக்கும் முயற்சிக்கு இந்து மக்கள் கட்சி கண்டணம் தெரிவித்தது .
--- தினமலர் , 29 , அக்டோபர் 2010 .

Friday, September 9, 2011

காதலில் விழ வைப்பது...

காதலில் விழ வைப்பது. இதயம் அல்ல , மூளையாம் . இனி , உங்க ஆளை பார்த்தால், என் இதயம் கவர்ந்தவள் / ன் என்று சொல்லாதீங்க , மூளை கவர்ந்தவள் / ன் என்று சொல்லுங்க . ஏனெனில் மனிதனை காதலில் விழ வைப்பது இதயம் அல்ல, மூளைதான் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது
ஆராய்ச்சியில் ஈடுபட்ட சைராக்யூஸ் பல்கலைக்கழக ஸ்டெபானி ஆர்டிக் கூறியிருப்பதாவது :
காதலில் விழும்போது போதை அருந்தியது போன்ற உணர்வு மட்டும் ஏற்படுவதில்லை . மூளையின் அறிவுசார்ந்த பகுதிகள் தூண்டப்படுகின்றன . ஒருவர் காதல் வயப்படும்போது, உணர்வுகளை வெளிப்படுத்த ' டோபாமைன் ', ' ஆக்சிடாசின் ', ' அட்ரினலைன் ', ' வாசோபிரசன் ' ரசாயனங்களை தூண்ட, மூளையின் 12 பகுதிகள் இயங்குகின்றன . இவைகள்தான் காதல் போதையில் உளற வைப்பது, உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது போன்றவற்றை செய்ய வைக்கின்றன , காதல் கை கூடாத போது, மன அழுத்தம், உணர்வு ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன . நாம் நம்பிக்கொண்டு இருப்பதுபோல இதயம் உடைவதில்லை . காதலால் தூண்டப்படும் மூளையின் பகுதி எது என்பது தெரிந்துவிட்டதால், காதலால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை டாக்டர்களால் உனரமுடியும் . காதலிப்பவர்களின் நாளங்களில் ரத்த ஓட்டமும் அதிகமாக இருக்கும் . இதுதான் காதலில் விழ வைக்கிறது . பார்த்ததும் காதல் வரவழைப்பது ரத்த மூலக்கூறுகள் தான் .
காதலுக்கு மூளைதான் காரணம் என்றாலும், அதற்கேற்ப லப்டப் என்று வேகமாக துடிப்பதில் இதயமும் கொஞ்சம் தொடர்பு கொண்டுள்ளது . காதல் அறிவியல் ரீதியிலான அடிப்படை ஆதாரம் கொண்டது என்பதை, இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது . இனி, காதலுக்கு பரிசளிப்பதாக இருந்தால் கீ செயின் முதல் நைட் லாம்ப் வரை இதயத்தை தேடாதீங்க . உங்க மூளையை பரிசா அளியுங்க .
--- தினகரன் ,26 , அக்டோபர் 2010 .
அழகான ஒரு பெண், ' நான் உன்னைக் காதலிக்கிறேன் ' என்று ஒரு வாலிபனிடம் சொல்லும்போதும், இளம்பெண்ணிடம் காதலை இளைஞன் சொல்லும்போதும் இதயத்தைவிட மூளை 12 முறை தூண்டப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் . இதயம் பயத்தில்தான் துடிக்கிறது அல்லது உனர்ச்சிவசப்பட்டு அதிகம் துடிக்கிறது அல்லது காதல் வயப்படும்போது அதிகம் துடிப்பதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .
இப்படி அரும்பாடு பட்டு காதலுக்கு எது முக்கியம் என்பதை கண்டுபிடித்த ஆய்வாளர்களின் தலைவர் ஸ்டீபன் ஆர்ட்டிக் காதல் வயப்பட்ட 5 நொடிகளுக்குள் மூளை உற்சாகமடைந்துவிடுகிறது என்று சொல்லியிருக்கிறார் . இதன் காரணமாகத்தான் உடம்பில் ஒரு ரசாயனம் சுரக்கிறது . இது ஒருவகையில் ந்றுமணம் என்று சொல்லலாம் . அதற்கு யுபொர்பியா என்று பெயர் என்றும், இத்தனை வேலைகளையும் இதயம் செய்வதில்லை, மூளையே செய்கிறது என்றும் மேலும் ஒரு ஆதாரத்தை அவர் போட்டு உடைக்கிறார் .
--- தினமலர் , 29 , அக்டோபர் 2010 .

Thursday, September 8, 2011

எக்சல் ஆல்ட் + ஷிப்ட்...

இங்கே எஸெல் தொகுப்பில் ஆல்ட் + ஷிப்ட் கீகளுடன் பங்ஷன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பார்க்கலாம் .
F1 + ALT + SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும் .
F2 + ALT + SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும் .
F3 + ALT + SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம் .
F6 + ALT + SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும் .
F9 + ALT + SHIFT : திறந்திருக்கும் அனைத்து ஒர்க் ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும் .
F10 + ALt + SHIFT : ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும் . ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும் .
F11 + ALT + SHIFT : மைக்ரோசாப்ட் ஸ்கிரிப்ட் எடிட்டர் திறக்கப்படும் .
F12 + ALT + SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும் .
--- தினமலர் , அக்டோபர் 25 . 2010 .

Wednesday, September 7, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...

* மாடர்ன் கிச்சன் வைத்திருப்பவர்கள், சிம்னியை ஆறு மாதத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் . இல்லாவிடில் சிம்னியில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கு எளிதில் தீப்பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு .
* தலைவலி அதிகமாக இருக்கும்போது, ஒரு பென்சிலை எடுத்து மேல்வரிசை பற்களுக்கும், கீழ் வரிசை பற்களுக்கும் இடையில் வைத்து பிடித்துக் கொண்டால், தலைவலி குறையும் , பென்சிலை அழுத்த வேண்டாம் .
* பச்சையாக இருக்கும் ஒருவகைப் பூச்சி நம்மீது பட்டாலோ, நம்மையும் அறியாமல் தொட்டாலோ அருவருக்கத்தக்க ஒரு நாற்றம் அடிக்கும் . அதைப் போக்க சிறிது விபூதியை எடுத்து தடவிக் கொண்டால் போதும் . நாற்றம் மறைந்து விடும் .
* மாவடு செய்தால், சில நாட்களிலேயே பூஞ்சை பிடித்து விடுகிறது . வடுமாங்காய் தயாரித்து ஒரு வாரம் கடந்தபின், அந்த நீரை வடிகட்டி கல் சட்டியில் விட்டு, சுண்டக் காய்ச்சி மீண்டும் ஜாடியில் ஊற்றி, வடுமாங்காய்களைப் போட்டு வைத்தால் பூஞ்சை பிடிக்காது .
* சின்ன வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு மூன்று மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து, பிறகு நறுக்கினால் கண்ணில் எரிச்சல் வராது .
* குளிர்க்காலத்தில் ஸ்வெட்டர்களைக் கையால் துவைக்கும்போது, ஷாம்பு போட்ட நீரில் ஊறவைத்துத் துவைத்தால் பளிச்சென்று இருப்பதுடன், கரையில்லாமல் வாசனையாகவும் இருக்கும் .
* ஃப்ளாஸ்க் அழுக்கடைந்து காணப்படுகிறதா ? வெந்நீரில் சிறிது உப்பைக் கரைத்து அதை ஃப்ளாஸ்கில் ஊற்றி, அரைமணி நேரம் ஊறவிடவும் . பிறகு வேறு நீரால் கழுவினால் ஃப்ளாஸ்க் சுத்தமாகி பளிச்சென இருக்கும் .
* இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா ? தலையனை, மெத்தை எதுவும் இல்லாமல் உடம்பைத் தளர்வாக வைத்துக் கொண்டு தரையில் 20 நிமிடம் படுத்திருங்கள் . இதனால் இடுப்பு வலியும் வராது , கூன் முதுகும் விழாது .
* இரவில் தூக்கமில்லையா ? ஒரு வாழைப்பழத்தை உரித்து, ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகத்தை தொட்டுக் கொண்டு இரவு சாப்பிட்டு வர ஆனந்தமான தூக்கம் வரும் .
* மிக்ஸி ஜார்களை அரைத்தவுடன் அதிக நேரம் சிங்கில் போடக் கூடாது . அரைத்ததும் ஜார்களை உடனே அலசி தனித்தனியே கவிழத்து வைத்து உலரவிட வேண்டும் . அப்படிச் செய்தால் நீண்ட நாள் உழைக்கும் .
* தேனை, மண், பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்களில் வைப்பதே சிறந்தது
* இருமல் பாடாய்படுத்துகிறதா ? இலுப்பக் கரண்டியில் நெய்விட்டு உருகியவுடன் சில மிளகுகளைப் பொடி செய்து அதில் பொரித்துச் சாப்பிட்டால் இருமல் போய்விடும் .
--- மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி ..

ராஜராஜனுக்கு 11 மனைவியர்கள் .

ராஜராஜ சோழனின் பட்டத்தரசி லோகமாதேவி என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் . இவர் தவிர மேலும் 10 மனைவிகள் ராஜராஜனுக்கு உண்டு .
1 . சோழமாதேவி
2 . திரைலோக்கிய மாதேவி
3 . பஞ்சவன் மாதேவி
4 . அபிமானவல்லி
5 . இலாடமாதேவி
6 . பிருத்விமாதேவி
7 . மீனவன்மாதேவி
8 . வீரநாராயணி
9 . வில்லவன் மாதேவி
10. வானவன் மாதேவி
ஆகியோர் அவர்கள் . அத்தனை பேரும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டும்போது, தங்களிடமிருந்த அத்தனை நகைகளையும் திருப்பணிக்குத் தந்து பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள் .
--- ப்ரியா கல்யாணராமன் , குமுதம் தீபாவளி மலர் . 27 . 10 . 10 .

Tuesday, September 6, 2011

பயம்

* உலகின் முதல் விண்வெளிப் பயணி ' லைக்கா ' என்கிற நாய் . 1957 -ம் வருடம் நவம்பர் மூன்றாம் தேதி ரஷ்யாவின் ஸ்புட்னிக் விண்கலத்தில் பறந்தது லைக்கா . இது சுற்றுப் பாதையில் நான்கு நாட்கள் உயிரோடு இருந்ததாக ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்தார்கள் . உண்மையில் ராக்கெட் கிளம்பும்போது பயத்திலேயே உயிரை விட்டுவிட்டது லைக்கா . இந்த உண்மை கிட்டத்தட்ட 45 வருடங்கள் கழித்து 2003 -ம் ஆண்டுதான் தெரிய வந்தது !
* ' நிலவிலே கால் பதித்தவர் ' என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருபவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் . ஆனால், அவரோடு நிலவுக்குச் சென்ற பஸ் ஆல்ட்ரினை நம்மில் பலருக்குத் தெரியாது . உண்மையில் நிலவில் முதலில் காலடி வைக்க அனுப்பப்பட்டவர் ஆல்ட்ரின்தான் . அவரைப் புகைப்படம் எடுக்க அனுப்பப்பட்டவர்தான் ஆம்ஸ்ட்ராங் . அமெரிக்க விண்கலம் நிலவில் இறங்கிய கொஞ்சநேரத்துக்கு தூசு மண்டலம் தரையை மறைக்க, புதைகுழியில் இறங்குவது போன்ற பயம் ஆல்ட்ரினுக்கு வந்துவிட்டது . எனவே அவர் இறங்கவில்லை .
இதை கவனிக்காமல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிவிட்டார் . இந்த குற்ற உணர்ச்சியாலோ என்னவோ ஆம்ஸ்ட்ராங் நிலாவில் தன்னை ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ள வில்லை . ஆல்ட்ரினை மட்டுமே புகைப்படம் எடுத்தார் . பூமி திரும்பிய ஆல்ட்ரின் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததில் ரொம்பவே நொந்து போனார் . தன் காரில் ' Moon First ' என்று எழுதிக்கொண்டு முழு போதையில் விரக்தியோடு வெகுகாலம் திரிந்தார் !
* சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பயம் ' காஸ்மோஃபோபியா ' ! சுண்டெலியில் இருந்து சுனாமி வரை எதிப் பார்த்தாலும் உயிர் பதறினால், அதுதான் காஸ்மோஃபோபியா . இவர்களால் நிம்மதியாகச் சாப்பிட முடியாது தூங்க முடியாது .
* பயத்தைப்பற்றிய முதல் மருத்துவ ஆய்வுக்கு ' லிட்டில் ஆல்பர்ட் பரிசோதனை ' என்று பெயர் . அதிகச் சத்தங்களைக் குழந்தைகள் கேட்கும்போது அவர்களுக்கு ஏற்படும் முதல் உணர்ச்சியே பயம்தான் என்பதையும், மற்ற குழந்தைகள் பயப்படாத ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு ஒரு குழந்தையைப் பயமுறுத்தவும் முடியும் என்பதையும் இந்தப் பரிசோதனையின் மூலம் நிரூபித்தார் ஜான். பி. வாட்ஸன் என்ற ஆய்வாளர் .
* 100 மீட்டர் தூரத்துக்குள் ஒரு குண்டூசி விழுந்தால்கூட அதைத் துல்லியமாக உணரும் திறனுள்ள உலகின் புத்திசாலி நாய் இனம் டாபர்மேன் . அனால், அவைகளுக்கு தன் பின்னால் இருப்பது தன் வால்தான் என்று பயத்தினால் தெரியாமல் போகிறது !
--- பயம் விகடன் , 7 . 4 . 10 .

Monday, September 5, 2011

' ஃபோபியா '

' ஃபோபியா '
அர்த்தமின்றி ஒரு விஷயத்துக்குப் பயப்படுவதற்குப் பெயர் தான் ஃபோபியா . ஒரு சர்வேயில் 91 சதவிகித இளைஞர்கள் ' ஏதாவது ஒன்றின் மேல் பயம் இருக்கிறது ' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள் . மனிதர்களுக்கு விநோதமான, வேடிக்கையான, விந்தையான ஃபோபியாக்கள் உண்டு . அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் . திறந்தவெளி, பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களைக் கண்டு பயந்தால், அதற்கு அகோரஃபோபியா என்று பெயர் . இவர்கள் அறையைவிட்டு வெளியே வரவே மாட்டார்கள் . சமூகத்தில் மற்றவர்களோடு கலந்து பழக அஞ்சினால், அது சோஷியல் ஃபோபியா . இவர்கள் அறிமுகம் இல்லாதவர்களோடு கை கொடுக்கவே தயங்குவார்கள் . குறிப்பிட்ட பொருட்கள், சூழ்நிலைகள், செயல்பாடுகள் போன்றவற்றைக் கண்டு பயப்படுபவர்களைப் பலவகையான ஃபோபியாக்கள் பிடித்து ஆட்டும் . நாயைக் கண்டு நடுங்குவதில் இருந்து உணவைக் கண்டு உதறுவது வரை தொட்டதற்கெல்லாம் ஃபோபியா உண்டு . அதற்குப் பெயர் சிம்பிள் ஃபோபியா . படுக்கைக்குச் செல்வதற்கே சிலர் பயப்படுவார்கள் . காரணம், கெட்ட கனவு . சிரிப்பதற்கே சிலர் சீரியஸாக யோசிப்பார்கல் . காரணம், ஹார்ட் அட்டாக் பயம் .
--- பா. முருகானந்தம் . பயம் விகடன் , 7 . 4 . 10 .

Sunday, September 4, 2011

மேஜிக் எண் !

இந்த எண்ணை 10 -ஆல் வகுத்தால் மீதி 9 வரும் ; 9 -ஆல் வகுத்தால் மீதி 8 ; 8 -ஆல் வகுத்தால் மீதி 7 ; 7 -ஆல் வகுத்தால் 6 ; 6 -ஆல் வகுத்தால் மீது 5 ; 5 -ஆல் வகுத்தால் 4 ; 4 -ஆல் வகுத்தால் 3 ; 3 -ஆல் வகுத்தால் 2 ; 2-ஆல் அகுத்தால் மீதி 1 வரும் .
இப்படிப்பட்ட சூப்பர் மேஜிக் எண் எது தெரியுமா ? 2519 தான் அது .
----- தினமலர் .அக்டோபர் 22 . 2010 ..

Saturday, September 3, 2011

கொலு காட்சி !.

கொலு காட்சியில் 9 படிகள் வைக்கிறார்கள் .
முதல் படியில் ஓரறிவு உயிர்ப்பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகளை வைக்க வேண்டும் .
2 வது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும் .
3 வது படியில் மூவறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றன்றவைகளையும்,
4 வது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களான நண்டு, வண்டு போன்ற பொம்மைகளையும்,
5 வது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவைகள் போன்றவைகளையும் ,
6 வது படியில் ஆறறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களின் பொம்மைகளையும்,
7 வது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகள் பொம்மைகளையும்,
8 வது படியில் நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்ட திக்கு பாலகர்களின் பொம்மைகளையும்,
9 வது படியில் பிர்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளையும் அவர்களின் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியொருடன் ஆதிபராசக்தியை நடு நாயகமாக வைக்க வேண்டும் .
--- தினமலர் .அக்டோபர் 22 . 2010 ..

Friday, September 2, 2011

' யூரின் டெஸ்ட் '

" நிறையப் பேர் பீரியட்ஸ் நின்னதுமே கர்ப்பம்னு நினைச்சுகிறாங்க . அப்படி இருக்கணுமுன்னு அவசியம் இல்லை . கர்ப்பத்தை உறுதிப்படுத்த ரொம்ப எளிமையான முறை யூரின் டெஸ்ட் . அந்த டெஸ்ட் முடிவில் 11 மாதிரி ரெண்டு கோடு வரும் . அப்படி வந்தா, ஒரு கோடு அம்மாவுக்கு, இன்னொரு கோடு குழந்தைக்கு . அவங்க கர்ப்பமா இருக்காங்கன்னு அர்த்தம் . அப்படி இல்லாம, ஒரு கோடு மட்டும் வந்தா அவங்க கர்ப்பமா இல்லைன்னு அர்த்தம் ".
பெண் கர்ப்பம் ஆவதை வைத்து எத்தனை தமிழ் சினிமா கதைகள் பார்த்திருப்போம் ? ஆனால், இரு கோடுகளுக்குள் இதை அடக்கிவிட்டது அறிவியல் .
--- பாரதி தம்பி . ம.கா.செந்தில்குமார் . ஆனந்த விகடன் , 27 . 10 . 10 .

Thursday, September 1, 2011

ஐஸ்வர்யா ராய் .

ஐஸ்வர்யா ராய் பச்சன்... அபார அழகு தேவதை ! தகுதியும் திறமையும் அழகாகச் சங்கமித்த ஹைக்கூ கவிதை . பசையாக இழுக்கும் பச்சைக்கண்கள்தான் இன்று உலக அழகின் உச்சம் !
* மங்களூரில் 1973 - ம் வருடம் நவம்பர் 1 - ம் தேதி பிறந்தார் . பெற்றோர்கள் கிருஷ்ணராஜ் ராய் மற்றும் விருந்தா ராய் . ஒரு ஒரு அண்ணன் ஆதித்யா ராய் !
* தேர்ந்த ஆர்க்கிடெக்ட் ஆக வேண்டும் என்பது தான் ஐஸ்வர்யாவின் லட்சியம் . ஆனால், ஆர்க்கிடெக்ட் படிக்கும்போதே, மாடலிங் வாய்ப்புகள் குவிய, அழகு புயல் அப்படியே திசை திரும்பிவிட்டது .
* 1994 ' மிஸ் இந்தியா ' போட்டியில் சுஷ்மிதா சென் அழகிப் பட்டம் வென்றார் . அதில் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது இடம் . அதே வருடத்தில், உலக அழகிப் போட்டியில் இன்னும் தைரியம், நம்பிக்கை சேர்த்து கலந்துகொண்டார் ஐஸ் . உலக அழகிப் பட்டத்தோடு மிஸ் போட்டோஜெனிக் பட்டமும் ஐஸ் வசம் !
* ஐஸ்வர்யாவின் 21 - வது பிறந்த நாள் பரிசாகக் கிடைத்தது ' உலக அழகிப் பட்டம் '! அழகி கிரீடம் சூடிய உடன், அரங்கில் இருந்து அனைவரும் தத்தமது மொழிகளில் ' பிறந்த நாள் வாழ்த்து ' பாடிய பெருமை இவரைத் தவிர, வேறு அழகிகளுக்குக் கிடைக்கவில்லை !
* ' மற்ற நாட்டுப் போட்டியாளர்கள் ' இந்தியர்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள் . துளியும் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் ' என்று மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்கள் . அதைப் பொய்யாக்கும் வேகம்தான் உலக அழகிப் பட்டம் பெற எனக்கு உத்வேகம் ஏற்படுத்தியது !' என போட்டிகளில் அடிக்கடி குறிப்பிடுவார் ஐஸ்வர்யா !
* மாடலிங் நாட்களில் இருந்தே ஐஸ்கிரீம் தவிர்ப்பவர் . நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர், கொஞ்சம் உடற்பயிற்சி, காய்கறி மற்றும் பழங்கள்தான் ஐஸின் ஃபிட்னெஸ் ரகசியம் !
* இளவரசி டயானாவுக்குப் பிறகு காதல், திருமணச் செய்திகளுக்காக பத்திரிகையாளர்கள் அதிகமாகப் பின் தொடர்ந்தது ஐஸ்வர்யாவை என்கிறார்கள் !
* கர்னாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை முறையாகக் கற்றவர் தொடர்ந்து பரத நாட்டியமும் கற்றுக்கொண்டார் . சினிமாக்களில் ஐஸ்வர்யாவின் பரத அசைவுகள் அனைத்தும் சொந்த் முனைப்புதான் !.
* 17 ஆயிரம் வெப்சைட்டுகள் ஐஸ்வர்யாவுக்காகத் தங்கள் தலத்தில் பிரத்யேக இடம் ஒதுக்கி இருக்கிறது . இவருக்கு அடுத்தபடியாக அதிக பக்கங்களை ஆக்கிரமித்து இருப்பவர் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் !
* 2004 -ல் ' டைம்ஸ் ' பத்திரிகை, உலக அளவில் மக்களை ஈர்த்த 100 அழகுப் பெண்களில் ஐஸ்வர்யாவையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது !
* 2005 - ல் பர்பி நிறுவனம், இங்கிலாந்தில் ஐஸ்வர்யா ராயைப் போல் தோற்றம்கொண்ட பர்பி பொம்மைகளை விற்பனைக்கு வெளியிட்டது . ஒரே நாளில் எல்லா பொம்மைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன . இன்றும் அந்த கலெக் ஷன் பொம்மைகளுக்கு ஏக டிமாண்ட் உண்டு !
* லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் மெழுகு மியூசியத்தில் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண் மெழுகு சிலை, அழகுச் சிலை ஐஸ்வர்யாவினுடையதுதான் !
* ' குரு ' பட ஷூட்டிங் சமயம், ஹோட்டல் லாபியில் ஐஸ் நின்றுகொண்டு இருந்தார் . கையில் ஒற்றை ரோஜாவோடு வந்து அப்போது காதலைச் சொன்னார் அபிஷேக் பச்சன் .தன்னைவிட, மூன்று வயது இளையவரான அபிஷேக் பச்சனுக்கு உடனே ஓ. கே . சொல்லிவிட்டார் ஐஸ்வர்யா ராய் !
* எத்தனையோ விளம்பரங்கள், சினிமாக்களில் உடல் மறைக்கும் நகைகள் அணிந்து நடித்து இருந்தாலும், தங்கத்தின் மீது ஒரு துளிகூட விருப்பம் இல்லாதவர் !
* தன் நீலம் கலந்த பச்சை விழிகளே தனது இத்தனை புகழுக்கும் காரணம் என்று நம்புகிறார் ஐஸ்வர்யா !
---இர.. ப்ரீத்தி . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .