Wednesday, March 28, 2012

தெரியுமா உங்களுக்கு ?


* ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன்.......
* 06 என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் ( International Mobile Equipment Identity ) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் . உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும் . மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக்கண்டுபிடிக்கலாம் .
* உங்கள் நெட் வொர்க்கினைத் தண்டி விட்டீர்களா ? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது . இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும் .
---- தினமலர் , 3 . 1 . 2012 .

' தீவிர ' வாதிகளுக்கு செக் ...


வந்துடுச்சு நவீன ரேடார் .
தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மீது சமீபத்தில் நவீன ' ரேடார் ' பொருத்தப்பட்டது . இந்த 'ரேடார் ' 30 கி.மீ., தொலைவு கடல் எல்லையைக் கண்காணிக்க முடியும் . அது மட்டுமல்ல அதிக வெப்பம், கனமழை, புயல் காலங்ககளில் கூட 24 மணி நேரமும் தன் கடமையை செவ்வனே நிறைவேற்றும் வல்லமை படைத்தது .
இந்த ' ரேடார் ' கடல் போக்குவரத்தையும் கண்காணிக்கிறது என்பது எஸ்க்ட்ரா பணி . எனவே சரக்கு கப்பலில் ஆயில் கசிவு இருந்தாலோ, கண்டெயினர் கடலில் விழுந்தாலோ இது துல்லியமாக கண்டுபிடித்துவிடும் .
மேலும் எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்கள், போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், தீவிரவாதிகள் ஊடுருவல், நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றையும் கண்டறிந்து உடனுக்குடன் கம்யூட்டரில் படங்களை தகவல் மையத்துக்கு அனுப்பிவிடும் . .அந்த வகையில் கடல் பகுதியில் 500 விதமான பொருட்களை கண்டுபிடிக்கும் திறமை கொண்டது இந்த ' ரேடார் '. இது தவிர கடலில் ஏற்படும் சில மாற்றங்களையும் ' மோப்பம் ' பிடித்து முன்னெச்சரிக்கை செய்யும் .
இந்தியாவில் பொருத்தப்படும் ' ரேடார் 'களை அரசுத்துறை நிறுவனமான ' பெல் ' தயாரித்துக் கொடுக்கிறது .
இந்தியாவில் 44 : ஆலப்புழை, கோவளம், கண்ணூர், கொச்சி, விசாகப்பட்டினம் உட்பட 44 கடற்கரை பகுதிகளில் ' ரேடார் ' வைக்கப்பட உள்ளன .
தமிழகத்தில் 8 : சென்னை, தவிர கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உட்பட 7 கடலோர பகுதிகளில் 'ரேடார் ' வைக்கப்படுகிறது .
--- தினமலர் . 8 . 1. 2012 .

Tuesday, March 27, 2012

மெட்ரோ ரயில் திட்டம் .

சென்னையை துளைக்கிறது மெட்ரோ ரயில் திட்டம் ..
பூமியை குடைந்து நம் காலுக்கு அடியில் ரயில் ஓடப்போகிறது . நினைத்தாலே பிரமிப்பாய் இருக்கிறது . விரைவில் நம் தலைநகர் சென்னையில் இது நடக்கப் போகிறது . சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது . சரி....இதெல்லாம் எப்படிச் சாத்தியம் ஆகிறது ! வீடு, கட்டடம் என்று சென்னையில் நிறைந்திருக்க, அவற்றுக்கு கீழே பள்ளம் தோண்டி, ரயில் விடப்போவது எப்படி ?
மெட்ரோ ரயில் பாதை சென்னையில் 2 வழித்தடங்களில் அமைக்கப்படுகிறது . முதலாவது பாதை, வண்னாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை 14.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைகிறது . 2 வது பாதை சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 9.7 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது .
இந்த வழித்தடங்களில் சில இடங்களில் சுரங்கப் பாதை தோண்டப்படுகிறது . அந்த சுரங்கப் பாதையில் ஒரு ரயில் போக, ஒரு ரயில் வர என்று 2 தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன . ஆக அந்த அளவுக்கு பெரிய குகை அது .
தரை மட்டத்தில் இருந்து 51 அடி கீழே இந்த சுரங்கப் பாதை இருக்கும் . 6.2 மீட்டர் அகலத்தில் இந்த வட்டப் பாதை அமையும் . வீடுகளுக்கு கீழே போர் வெல் தோண்டி குழாய்கள் இறங்கி இருக்கும் ; சில இடங்களில் கிணறு இருக்கும் . அவற்றையெல்லாம் அப்புறப்படுத்தி, மாற்று போர் வெல் போட நிவாரண பணம் தரப்பட்ட பிறகு, சுரங்கப் பாதை குடையும் வேலை ஆரம்பமாகும் .
இதற்காக 10 டனல் போரிங் மிஷின்கள் வருகின்றன . அந்த மிஷின்கள் பூமியை குடையும் போது மண் சரிவு இல்லாமல் எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது எல்லோரிடமும் இருக்கும் ஆச்சரியமான கேள்வி .
டனல் போரிங் மிஷின் : இது தான் பூமிக்கு அடியில் சுரங்கப் பாதை தோண்ட இருக்கும் மிஷின் . இதன் முகப்பு மட்டும் 170 டன் எடை கொண்டது . இதில் 62 கட்டிங் பிளேடுகள் உள்ளன . புள்ளி புள்ளியாகத் தெரியும் கட்டிங் பிளேடுகள் வெவ்வேறு திசையில் பொருத்தப்பட்டுள்ளன . இவை எவ்வளவு கடினமான பாறையையும் அறுத்தெடுக்கும் . பிரம்மாண்டமான இந்த மிஷினுக்கு கீழே வேலை ஆட்கள் நிறபார்கள் . அதை ஒப்பிட்டு மிஷினின் பிரம்மாண்டத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம் .
நீளம் : இதன் நீளம் 120 மீட்டர் . இந்த மிஷினுக்கு உள்ளேயே கம்யூட்டர் அறை, ஜெனரேட்டர், கேண்டின், ஓய்வு அறை என்று எல்லா வசதிகளும் உள்ளன . இந்த மிஷினுக்குள் மொத்தம் 100 பேர் வேலை செய்கின்றனர் . உள்ளே இது ஒரு அலுவலகம் மாதிரிதான் இருக்கும் .
உள்கடமைப்பு : இந்த மிஷின் துளை போட்டுகொண்டு போகும் போது தூளான பாறை, மணல், சகதி எல்லாம் கன்வேயர் பெல்ட் மூலம் வெளியேற்றப்படுகிறது .இந்த மிஷினின் முகப்பு, துளை போட்டுச் செல்லும் போதே, 0.4 மீட்டர் தடிமன் கொண்ட கான்கிரீட் சுற்றுச்சுவர் உடனடியாக போடப்படுகிறது.
ஒரு நாள் வேலை : இந்த மிஷின் 24 மணி நேரத்தில் 8 மீட்டரில் இருந்து 10 மீட்டர் தூரம் வரை சுரங்கப் பாதை ஏற்படுத்தும் .
காற்று வசதி : மிஷின் ஒரு கிலோ மீட்டர் தூரம் துளை போட்டதும், சுரங்கத்தின் உள்ளே வேலை செய்பவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் . இதனால் சுரங்கத்தின் மேற்பரப்பில் பெரிய குழாய் மூலம் ஆக்ஸிஜன் உள்ளே அனுப்படுகிறது . உபகரணங்கள், வேலை செய்பவர்களுக்கு உணவு, அடுத்த ஷிப்டுக்கு வேலை ஆட்கள் எல்லாவற்றையும் கொண்டு செல்ல, தற்காலிக மினி ரயில் போக்குவரத்தும் உள்ளே நடக்கும் .
மினி ரயில் : சுரங்கம் தோண்டும் போது, உள்ளே மின்சாரம், மினி ரயில், குடி நீர் சப்ளை என்று எல்லா வாதிகளும் இருக்கும் .
துளையிடும் போது, அடுத்து என்ன எதிர்படும் என்பதை துல்லியமாகச் சொல்ல மண்ணியல் துறை நிபுணர்கள் அந்த மிஷின் அலுவலத்துக்குள் இருப்பார்கள் . கடினமான பாறை, இளகிய மண் என்று வந்தால், அதற்கேற்றாற் போல் பிளேடு மாற்றப்படும் . தண்ணீர் எதிர்ப்பட்டால் அப்படியே உறிஞ்சி பின்பக்கமாக வெளியேற்றப்படும் .
14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டம் 2012 ம் ஆண்டு துவங்கி 2015 ம் ஆண்டு முடைவடைகிறது ..
--- தினமலர் , 18 . 12 . 2011 .

Monday, March 26, 2012

விண்வெளியில் ..


விண்வெளியில் ஒரு வைரச் சுரங்கம் !
முழுவதும் வைரங்களால் ஆன ஒரு கிரகத்தை வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிலையத்தில் ரேடியோ டெலஸ்கோப் மூலம் நட்சத்திரக கூட்டங்களை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர் . இதில், முழுவதும் வைரங்களால் ஆன ஒரு கிரகத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இது குறித்து ஆஸ்திரேலிய நிபுணர் டாக்டர் மைக்கேல் கீத் கூறியதாவது : ' செர்பென்ஸ் நட்சத்திர கூட்டத்தை ஆராய்ந்தபோது, அதில் பல்சார் எனப்படும் ஒரு குட்டி நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது . மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த அது சுருங்கி, இப்போது குட்டி நட்சத்திரமாக உருமாறியுள்ளது . எனினும் அது சூரியனைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது ஆகும் .
அந்த குட்டி நட்சத்திரம் வெளியிடும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்ததில், அதை ஒரு கிரகம் சுற்றி வருகிறது என்றும் தெரிந்தது . ஒரு காலத்தில் நட்சத்திரமாக இருந்து, வாயுக்கள் வெளியேறியதால் சுருங்கி, கிரகமாக அது மாறியுள்ளது . எனினும், பூமியைப் போல் 5 மடங்கு பெரியது அந்த கிரகம் . அதன் குறுக்களவு 65 ஆயிரம் கி.மீ. ஆகும் . குட்டி நட்சத்திரத்தை 6 லட்சம் கி.மீ. தூரத்தில், 2 மணி 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கிரகம் சுற்றி வருகிறது .
அந்த கிரகத்தில் கார்பன் மற்றும் ஆக்சிஜன் நிறைந்திருக்கிறது . அதில் இருந்த ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் வெளியேறிவிட்டன . இதனால் கிரகம் முழுவதும் கார்பன் படிமங்களால் நிறைந்துள்ளன . எனவே, பூமியைப் போல் 5 மடங்கு பெரிதான கிரகம் முழுவதும் வைரச்சுரங்கமாக இருக்கிறது . பிஎஸ் ஆர்ஜே 1719 -- 1438 என பெயரிடப்பட்டுள்ள குட்டி நட்சத்திரமும், அதன் கிரகமும் 4 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கின்றன . ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் 4 ஆயிரம் ஆண்டுகளில் வைர கிரகத்தை சென்றடைந்து விடலாம் . இவ்வாறு மைக்கேல் கீத் தெரிவித்தார் .
--- - தினமலர் 27 . 8 . 2011 .

Sunday, March 25, 2012

அட...இப்படியா சங்கதி ? !


' ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா... தன் பிள்ளை தானே வளரும் '
' மத்த குழந்தைங்களை ஊட்டி வளர்த்தா... தன் பிள்ளை தானே வளரும் 'னு இதைச் சொல்லிக்கலாம் . இதுகூட ஒருவிதத்துல சரிதான் . ஆனா, பழமொழியோட உண்மையான அர்த்தத்தைத் தேடினா... ' ஊரான் 'கிற சொல்லு மனைவியைக் குறிக்கும் . மனைவியா வர்ற ஒவ்வொரு பொண்ணும் யாரோ பெத்த பிள்ளைதானே . அதான் ஊரான் பிள்ளை . அப்படிப்பட்ட பிள்ளை கர்ப்பமா இருக்கிற நேரத்துல, சாப்பாடெல்லாம் சரியா கொடுத்து, சவரட்டனை செய்து கவனிச்சுகிட்டா, அவ வயித்துல வளர்ற தன் ( கணவன் ) பிள்ளை தானே நல்லா வளரும்கிதுக்காக சொல்லி வெச்சது !
---மெய்யழகன் , அவள் விகடன் . 15 .1 . 2010 .

Friday, March 23, 2012

டிவிடி !

டிவிடி ( Digital Versatile Disc ) என்பது சிடிக்களின் அடுத்த நிலை . சி.டி. களில் ( Compact Disk ) 600 எம்.பி. அளவுள்ள டேட்டாக்களை மட்டுமே பதிந்து கொள்ள முடியும் . ஆனால், டிவிடிக்களில் 4 ஜி.பி. அளவுள்ள டேட்டாக்கள் பதிந்து கொள்ள முடியும் . இது சிடியை காட்டிலும் 5 மடங்கிற்கு மேல் ஆகும் .

சிம்கார்டு !
செல்போன்களில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள சர்வீஸ் புரொவைடர்களால் வழங்கப்படும் ஒரு சிறிய அட்டைக்குப் பெயர் தான் சிம்கார்டு . சிம் என்பதன் விரிவாக்கம் Subscriber Identity Module ( SIM ) . முதல் சிம்கார்டு 1991 ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . அந்த சிம் கார்டை முனிஸ் ஸ்மார்ட் கார்டு தயாரிப்பாளர் கீய்செக்கே -- டெவ்ரியன்ட் உருவாக்கினார் .
--- தினமலர் 15 .12. 2011.

Thursday, March 22, 2012

மாட்டின் நிறம் !


மாட்டின் நிறத்தைப் பொறுத்தும் பாலின் பண்பு அமைகிறதாம் . சிவப்பு நிறம் உடைய பசுவின் பால் வாத ரோகத்தைப் போக்கும் . வெள்ளை நிறம் உடைய பசுவின் பால் பித்த ரோகத்தைப் போக்கும் . கபிலை நிறம் ( வெள்ளைப்புள்ளியும் கருஞ்சிவப்புபு நிறம் ) உள்ள பசுவின் பால் மூன்று ரோகங்களையும் நீக்குமாம் .
--- தினமலர் 15 .12. 2011.

Wednesday, March 21, 2012

பூஜைக்கு உரிய மலர்கள் !


பூஜைக்கு ஒவ்வொரு வேளைக்கும் ஒரு சில மலர்கள் விசேஷம் என்பார்கள் . அதிகாலை பூஜைக்கு உரியவை -- புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டம், நீலோற்பவம், அலரி, செந்தாமரை .
காலை பூஜைக்கு உரியவை -- அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவட்டம், தாமரை, பவளமல்லி .
உச்சிகாலத்துக்கு உரியவை -- பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, வன்னி, கத்திரி, மந்தாரை, சரக்கொன்றை, துர்மை .
மாலைக்கும் அர்த்த ஜாமத்திற்கும் உரியவை -- மல்லிகை, காட்டுமல்லி, மரமல்லி, மகிழ், கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மரிக்கொழுந்து .
--- தினமலர் 15 .12. 2011.

Tuesday, March 20, 2012

தெரியுமா ? தெரியுமே !


* நாம் எப்படி தானாக மூச்சு விடுகிறோமோ அதுபோல்தான் கண் இமைக்கிறது . பொதுவாக எல்லாருக்கும் ஆறு வினாடிக்கு ஏழு முறை என்ற விகிதத்தில் கண் இமைத்தல் செயல் நடைபெறும் .
* சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 2,50,000 கொட்டாவிகள் விடுவதாகக் கண்டுபிடித்த்து இருக்கிறார்கள் . தாயின் வயிற்றில் கரு உருவான 70 -வது நாளில் இருந்து கொட்டாவி விட ஆரம்பிக்கிறோம் .
* இறந்தவர்களின் உடலோடு உறவுகொள்வதற்கு ' நெக்ரோஃபிலியா ' என்று பெயர் . மனோதத்துவ நிபுணர்கள் இதை நர மாமிசம் தின்பதைவிட ( Cannibalism ) மோசமான நிலையாகக் கருதுகிறார்கள்
* டிகிரிக்கு ஒன்று வீதம் 360 திசைகள் உள்ளன . டிகிரிக்குள் புகுந்து பார்த்தால், இன்னும் பல்லாயிரக்கணக்கில் இருக்கும் !
* ட்ராய் என்றால், டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிடி ஆஃப் இந்தியா என்று பொருள் .
* இந்தியாவின் தேசிய விளையாட்டு., ஹாக்கி .
* சந்தன கடத்தல் வீரப்பன் மகள்களின் பெயர்கள் : வித்யாராணி, பிரபா விஜயலட்சுமி .
* ஒரு கருவுக்கு உள்ளே இன்னொரு கரு வளராது . ஆனால், ஒரு வகை ஈ இருக்கிறது . அதில் ஆண் வர்க்கமே கிடையாது .பிறப்பது பெண் ஈதான் . பிறக்கும்போதே அதன் வயிற்றுக்குள் பெண் கரு இருக்கும் . அதாவது உடலுறவே இல்லாமல் அம்மா, மகள், பேத்தி... இப்படி !
* ' சாட்டிஸ்ட் ' என்றால் -- பிறருக்குத் துன்பத்தைத் தந்து அதில் மகிழ்கிறவர்கள் . அதற்கென்று வார்த்தைகூட எந்த மொழியிலும் இல்லை . ஜெர்மன் மொழியில் மட்டுமே அதற்கென்று வார்த்தை உண்டு -- ஷாடன்ஃப்ராய்டு ( Schadenfreude ) .
* முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய இன்ஜினீயர் -- பென்னி குய்க் .
* ஆதார் அட்டை என்றால் -- மத்திய அரசால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படும் அடையாள அட்டை என்று பொருள் .

Monday, March 19, 2012

பறக்கும் கார் !


பறக்கும் கார் விரைவில் வருது !
பல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கற்பனையாக உலா வந்த பறக்கும் கார், நனவாகப் போகிறது . அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ராபுயுஜியா டிரான்சிசன் என்ற நிறுவனம், பறக்கும் கார்களை இந்த ஆண்டில் உற்பத்தி செய்ய உள்ளன . அந்தக் காரில், வானத்தில் பறக்கலாம், தரையில் ஓட்டலாம் . வானத்தில் பறக்கும்போது, மணிக்கு 115 மைல் வேகத்தில் செல்லலாம் . காராக அதை மாற்றிக் கொண்டு தரையில் ஓட்டினால், மணிக்கு 65 மைல் வேகத்தில் செல்லும் .
வானத்தில் பறக்கும்போது அதன் சிறகுகள் நீண்டிருக்கும் . தரையில் ஓடும்போது, சிறகுகள் உள்மடங்கிக் கொள்ளும்; கொஞ்சம் பெரிய சைஸ் லாரி போல காட்சியளிக்கும் . இந்தக் காரை, பறக்கும் கார் என்று சுருக்க்மாக அழைக்கப்பட்டாலும், இந்தக் காரின் உண்மையான பெயர், டிரான்சிசன் ரோடபிள் லைட்ஸ்போட் ஏர்கிராப்ட் ( டி.ஆர்.எல்.எஸ்.ஏ ..)
இந்தக் காரின் விலை, ஒரு கோடி ரூபாயில் இருந்து 1.25 கோடி ரூபாய் வரை இருக்கும் . இந்தக் காரில் ஒருமுறை பெட்ரோல் நிரப்பி, 400 -- 450 மைல் தூரம் செல்லமுடியும் . கார்கள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு விட்டன . இதுவரை, 28 முறை வெற்றிகரமாக பறந்து, தரையில் ஓடி சோதனையிடப்பட்டுள்ளது . இதில் எத்தனை பயணிகள் சீட் அமைக்கப்பட்டிருக்கும், ஒரு பைலட்டா, இரண்டு பைலட்டா என்பதெல்லாம் போகப்போகத்தான தெரியும் .பறந்துகொண்டிருக்கும்போது விமானம், தரையில் இறங்கியதும் 20 விநாடிகளில் காராக மாறிவிடும் .
--- தினமலர் 13 . 2. 2011.

Sunday, March 18, 2012

தெரியுமா உங்களுக்கு ?


* ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன்.......
* 06 என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் ( International Mobile Equipment Identity ) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் . உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும் . மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக்கண்டுபிடிக்கலாம் .
* உங்கள் நெட் வொர்க்கினைத் தண்டி விட்டீர்களா ? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது . இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும் .
---- தினமலர் , 3 . 1 . 2012 .

இது வாழ்க்கை கணக்கு !


நண்பரைக் கூட்டல்
வேண்டும் .

பகைவரைக் கழித்தல்
வேண்டும் .

இன்பத்தைப் பெருக்கல்
வேண்டும் .

துன்பத்தை வகுத்தல்
வேண்டும் .
--- கே.கஸ்தூரி கதிர்வேல், காட்பாடி .
---- தினமலர் , இணைப்பு . 5 .3. 2011 .

Saturday, March 17, 2012

டி.எம்.சி . தண்ணீர் !

டி.எம்.சி. என்பதன் விரிவாக்கம் தவுசண்ட் மில்லியன் கியூப் பீட். அதாவது ஆயிரம் மில்லியன் கியூப் அடி என்று பொருள் .
ஒரு எய்.எம்.சி அடி தண்ணீர் என்பது 28.3 மில்லியன் கியூப் மீட்டர் .
ஒரு கியூப் மீட்டர் என்பது ஆயிரம் லிட்டர் .
ஒரு டி.எம்.சி. என்பது 2800 . 317 கோடி லிட்டர் தண்ணீர். அதாவது 22 ஆயிரத்து 956.8 ஏக்கர் பரப்பளவில் ஒரு அடி உயரத்திற்கு நிரப்பக்கூடிய கொள்ளளவாக இருக்கும் .
--- தினமலர் , இணைப்பு . 11 .11. 2011 .

தெரியுமா ? தெரியுமே !

* சமீபத்திய டெபிட் / கிரெடிட் கார்டு கொள்ளைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு கார்டு உரிமையாளரும் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்சப் பாதுகாப்பு நடவடிக்கை -- கார்டு பின் நம்பரை உடனடியாக மாற்ற வேண்டும் !
* பெருங்காயத்தை ஆங்கிலத்தில் -- அசாபோடிடா ( asafoetida ) என்று குறிப்பிட வேண்டும் .
* மதுரை ஆதீனத்தின் முழுப் பெயர் -- மதுரை ஆதீனம் லோக குரு 292 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சார்ய ஸ்வாமிகள் !
* ஐஸ்வர்யா ராய்க்குப் பெண் குழந்தை பிறந்த மருத்துவமனையின் பெயர் -- செவன் ஹில்ஸ் .-- ஐந்தாவது தளம் .
* சசிகலா குடும்பத்தில், திவா' கரன் ' , தின ' கரன் ' , பாஸ் ' கரன் ' , சுதா ' கரன் ' என நான்கு ' கரன் ' கள் இருக்கிறார்கள்
* ஆரோக்கியமான மான்களுக்குத்தான் கொம்புகள் பெரிதாக வளரும் . மற்ற ஆண் மான்கள் அதைப் பார்த்துச் சற்று பின்வாங்கும் !
* தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 17 மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களால் ரசிகர்களை உருகவைத்திருக்கும் கே.ஜே.யேசுதாஸ் இசைத் துறையில் 50 வருடங்களைக் கடந்திருக்கிறார் . பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளோடு 7 தேசிய விருதுகளும் 17 மாநில விருதுகளும் இவரது பெயர் சொல்கிறது
* .இந்த நூற்றாண்டின் முதல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ், ' மக்களின் வாழ்க்கை மரங்களில்தான் இருக்கிறது ' என்று சொல்வார் . உண்மை... தண்ணீரைத் தேக்குவதற்கு அணைகள் தேவை இல்லை, இருக்கிற மரங்களைப் பாதுகாத்தாலே போதும் . பெய்கிற மழை நீரை மரங்கள் தேக்கிக்கொள்ளும் !
* ஒரு மரத்தை வெட்டினால் நமக்குக் கிடைக்கும் லாபம் 0.3 சதவிகிதம்; இழப்பு 99.7 சதவிகிதம் .
* 50 டன் எடையுடன், 50 வயதுடன் இருக்கும் மரத்தை மேலும் 50 வருடங்களுக்கு வாழ அனுமதித்தால் ( வெட்டாமல் இருந்தால் போதும் ! ) அந்த மரம் சம்பாதித்துக் கொடுக்கும் தொகை எவ்வளவு தெரியுமா ? 15 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் . ஒரு வருடத்துக்கு 1,000 கிலோ ஆக்ஸிஜனைத் தயாரிக்கிறது . ஒரு கிலோ ஆக்ஸிஜன் 5 ரூபாய் என்றால், 50 வருடங்களுக்கு அது தயாரிக்கும் ஆக்ஸிஜனின் விலை ரூ , 2 லட்சத்து 50 ஆயிரம் . .
-- ஆனந்தவிகடன் இதழ்களிலிருந்து .

Friday, March 16, 2012

சோப்பு !

சோப்புகளில் டிஎப் எம் 76 % என்று குறிப்பிட்டிருக்கிறதே, அதன் அர்த்தம் :
டோட்டல் பேட்டி மேட்டர் என்பதன் சுருக்கமே டிஎப்எம் . அதாவது குளியல் சோப்பில் இருக்கக்கூடிய கொழுப்பின் சதவீதத்தை குறிப்பதாகும் .
நல்ல தரமான, நீடித்து உழைக்கக்கூடிய, நன்கு அழுக்கு நீக்கக்கூடிய ஒரு குளியல் சோப்பின் தரம் அதில் அடங்கி உள்ள கொழுப்பு அளவு 76 % இருக்கவேண்டும் . இப்படி சோப்பில் டிஎப்எம் 76 % என்ற குறிப்பு இருந்தால் அது தரமான நம்பர் ஒன் சோப்பு என்று பொருள் கொள்ள வேண்டும் . சோப்பில் 60 % மற்றும் அதற்கு கீழ்க் கொழுப்பு சதவிகிதம் இருந்தால் அதன் கிரேடு 3 ஆகும் .
--- . -தினமலர் இணைப்பு . 18 - 11 - 2011 .

Thursday, March 15, 2012

மேஜிக் எழுத்து .

* ஒன்றிலிருந்து 99 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் ஏ, பி, சி, டி என்ற நான்கு எழுத்துக்கள் வராது .
* ஒன்றிலிருந்து 999 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் ஏ, பி, சி, என்ற மூன்று எழுத்துக்கள் வராது .
* ஆயிரம் என்ற எண் பெயரில் மட்டுமே ஏ என்ற எழுத்து வரும் .
* ஒன்றிலிருந்து 99, 999,999 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் பி, சி, என்ற எழுத்துக்கள் இடம் பெறாது .
* பில்லியன் என்று எழுதும் போது மட்டுமே பி எழுத்து வரும் .
---தினமலர் இணைப்பு . 18 - 11 - 2011 .

Wednesday, March 14, 2012

' மைக்ரோவேவ்

' மைக்ரோவேவ் அவன் ' ( அலை அடுப்பு )
அடுப்பு ஆபத்து ! மிரட்டும் மைக்ரோ வேவ் .
இரண்டாம் உலகப்போரின் போது வீரர்களுக்கு சமைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த அடுப்பு . காலப்போக்கில் பல்வேறு வடிவங்களில் மாறிவிட்டாலும், மின்காந்த அலைகள்தான் இந்த அடுப்பிற்கு அடிப்படை .
ஆரம்பத்தில் எதிரிகளின் விமானத்தை உளவு பார்க்கும் ' ரேடார் ' தொழில் நுட்பம்தான் இந்த அடுப்பில் பயன்படுத்தப்பட்டது . அப்போது இதன் பெயர் ' ரேடாரேஞ்ச் ! '.
உணவுப் பொருட்களை அடுப்பில் வைத்துச் சூடாக்கும்போது நுண்ணிய குழாய் வழியாக இந்த காந்த அலைகள் ( இஎம்டபிள்யூ ) வெளியேறும் . இந்த அலைகள்தான் உணவை சமைக்கும் . இதன் அளவு 2.45 ஜிகா ஹெட்ஸ் . அதாவது ஒரு ஆஸ்பிரின் மாத்திரை சுற்றளவுக்கு மட்டுமே இருக்கும் . ஆனால் சமைக்கும் திட உணவுப் பொருளின் எடையைப் பொறுத்து இந்த அளவு மாறும் ! உணவை சமைக்கத் துவங்கும் மின்காந்த அலைகள் அதன் அனைத்துப் பாகங்களிலும் சீராக சமைக்காமல், நடுவிலிருந்து தொடங்கி படிப்படியாக நுனிவரை சமைப்பதுதான் உணவின் தரத்தை கேள்விக்குறியாக்குகிறது . இருந்தாலும் இந்த எண்ணம் தவறானது .
அடுப்பின் உள்ளே வைக்கும் உணவுப் பொருட்கள் சூடாவதற்கு காந்தத்தால் செய்யப்பட்ட குழாய்கள்தான் முக்கிய காரணம் . அவற்றை ' பெரீலியம் ஆக்ஸைடு ' என்கிற ரசாயனக் கலவையால் செய்யப்பட்ட ' செராமிக் ' கொண்டு பூசியிருப்பார்கள் . வெப்பம் வெளியேறக் கூடாது என்பதுதான் இதன் நோக்கம் . இந்தப் ' பெரீலியம் ஆக்ஸைடு, உணவுப் பொருளோடு கலந்தால் போச்சு. இதனால் கேன்சர் ஆபத்து உண்டு ' .
பொதுவாக, மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும்போது உணவில் இருக்கும் வைட்டமின் -- பி12 அழிந்து போகும் . உடலுக்குத் தேவையான இந்த வைட்டமின் மட்டுமல்லாமல், கவனிக்காமல் விட்டால் ஒரு கட்டத்தில் விஷமாக மாறிவிடும் ஆபத்தையும் மறுப்பதற்கில்லை .
உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களை சமைக்கப் பயன்படுத்த முடியாது . மாறாக அதற்கென்றே ஸ்பெஷலாக செய்யப்பட்ட பிளாஸ்டிக் டப்பாகளை மட்டுமே பயன்படுத்த முடியும் . ஆனா அத்தகைய பிளாஸ்டிக் டப்பாக்கள் தரம் வாய்ந்தவையா என்பதை யோசித்துப் பார்ப்பது அவசியம் . இல்லையேல் ஆபத்துக்கள் அணிவகுப்பது நிச்சயம் !
--- குமுதம் 16 - 11 - 2011.

Tuesday, March 13, 2012

யூத்து கூத்து

தத்துவம் :
கண்ணா, மேலே
இருந்து கீழே வந்தா
அது அருவி
அதே கீழே இருந்து
மேலே போனா அது
குருவி ...

யோசனை :
ராக்கி கட்டி ரக்க்ஷா
பந்தன் கொண்டாடும்
போது
ஏன் தாலி கட்டி காதலர்
தினம் கொண்டாடக்
கூடாது ...?

பஞ்ச்:
அன்பே, பாசம் வைக்குற
வரைக்கும்தான் நான்
யோசிப்பேன்....
பாசம் வைச்சுட்டா உயிர்
இருக்குற வரைக்கும்
நேசிப்பேன்... இது சத்தி
யம் சிஸ்டர் . ( வேற வழி ...? )

உஷார் :
வாழக்கை ஒரு
பட்டாம்பூச்சி மாதிரி
லேசா பிடிச்சா பறந்துடும்
இறுக்கிப் பிடிச்சா
இறந்துடும்...
--- குமுதம் 16 - 11 - 2011.

Monday, March 12, 2012

கண்ணாடி !

ஒவ்வொரு கண்ணாடிக்கும் தேவையான மூலப்பொருட்கள் வேறுபட்டிருக்கும் . 75 சதவிகிதம் சிலிக்கா, சோடா என்ற சோடியம் பை கார்பனேட் மற்றும் லைம்ஸ்டோன் என்ற சுண்ணாம்புக் கல் ஆகியவற்றின் கலவைதான் கண்ணாடி .
இந்தக் கலவையை 2,500 டிகிரி பேரன்ஹீட் வெப்பத்தில் 24 மணிநேரம் வைத்தால் கண்னாடி கிடைத்துவிடும் . ஒரு பெரிய டிரேயில் கலவையை ஊற்றி சமப்படுத்துவார்கள் . வெப்பம் அதிகமாக இருப்பதால் ரொம்ப மிருதுவாகவும் இருக்கும் . வெப்பத்தை போக்க குளிரூட்டப்படும் . குளிர்ந்த பின் கண்ணாடி தடிமனாக மாறிவிடும் . வர்ணத்திற்கு மெட்டாலிக் ஆக்சைட் கலப்பார்கள் .
--- தினமலர் இணைப்பு . 25 - 11 - 2011 .

Sunday, March 11, 2012

' ஜீசஸ் '

ஆங்கிலத்தில் Jesus . தமிழில் அதே உச்சரிப்பில் ' ஜீசஸ் ' என்று அழைக்கலாம் . இயேசு என்று வேறு பெயரில் அழைப்பது எப்படி சரியாகும் ?
முதலில் இயேசு ஆங்கிலேயர் அல்ல ! ஆனால், ' ஜீசஸ் ' ஆங்கில வார்த்தைதான் . உண்மையில் ' ஜீசஸ் ' என்பதைவிட ' இயேசு ' சரியான வார்த்தை என்பேன் ! மத்தியக் கிழக்கு நாடுகளில் பேசப்பட்ட ( இயேசு பேசிய ) மொழி அரமெய்க் ( Aramaic ) . அந்த மொழியில் அவருடைய பெயர் -- இயேஷீவா ! ' ரட்சிக்க வந்தவர் ' என்று அர்த்தம் . கிறிஸ்து ( Christ ) என்பதும் கிரேக்க ' கிறிஸ்டோஸ் ( Christos ) ' என்பதில் இருந்து வந்ததே . அதாவது, ' சடங்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ( Anointed ) ' என்று பொருள் . ' அப்படி என்றால், அது ஒரு அடைமொழியா -- Title ? அவதரித்தபோது அவருக்கு வேறொரு பெயரும் இருந்திருக்குமா ? நம்மைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவர்களின் புனித வேதத்தில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அழைப்போம் !
--- ஹாய் மதன் , கேள்வி -- பதில் .
--- ஆனந்தவிகடன் , 4 . 1 . 2012 .

Friday, March 9, 2012

சந்திர தரிசனம் .

எல்லா நாட்களிலும் சூரிய நமஸ்காரம் செய்யலாம் . ஆனால் சந்திரனை வணங்குவதற்கு இரண்டு நாட்களை சாஸ்திரங்கள் சொல்லியுள்ளன . சங்கடஹர சதுர்த்தியில் சந்திரனை வணங்கவேண்டும் . ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்து வரும் துவிதியை திதியை அடுத்து மூன்றாம் பிறைச்சந்திரனை வணங்க வேண்டும் .
--- தின்மலர் இணைப்பு , ஏப்ரல் 14 , 2011 .
தெரியுமா ? தெரியுமே !
* எப்போதும் சந்திரனின் ஒரு பக்கம் மட்டுமே நமக்குத் தெரிகிறது . இந்த அறிவியல் நிகழ்வுக்கு, ' கேப்ச்சர்டு ரொட்டேஷன் ' என்று பெயர் . சராசரியாக 50 சதவீதப் பகுதிகளை நம்மால் பார்க்க முடிகிறது என்பது விஞ்ஞானிகளின் கணக்கு !

Thursday, March 8, 2012

' கிரீன்விச் '

இரு நாடுகளுக்கிடையிலான நேர வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது ?
பூமியின் இடங்களைத் துல்லியமாக அடையாளப்படுத்த, உலக உருண்டையின் மத்தியில் பூமத்திய ரேகை, கிடைமட்டமாக அட்சரேகைகள், செங்குத்தாக தீர்க்கரேகைகள் என கற்பனைக் கோடுகளை வரைந்துள்ளனர் . ஒவ்வொரு ரேகையும் ஒரு ' டிகிரி ' என்று கணக்கு .
தீர்க்கரேகை அடிப்படையில்தான் சர்வதேச நேரம் கணக்கிடப்படுகிறது . தீர்க்கரேகைகளின் ' 0 ' டிகிரி ரேகை, கிரீன்விச் சர்வதேச நேரக் கணக்கின் மையப்புள்ளியாக அமைத்துள்ளனர் !
சர்வதேச நேரக்கணக்கில், ஒவ்வொரு தீர்க்கரேகையும் 4 நிமிடங்களைக் குறிக்கும் . அதாவது, கிரீன்விச்சில் மதியம் 12 மணி என்றால் அதற்கு அடுத்த ஒன்றாவது டிகிரி ரேகையில் உள்ள இடங்களின் நேரம் 12 மணி 4 நிமிடம் .
கிரீன்விச்சிற்கும் பிற இடங்களுக்கும் உள்ள ரேகை டிகிரி வித்தியாச அடிப்படையில் நேர வித்தியாசம் தீர்மானிக்கப்படுகிறது .
உதாரணமாக, கிரீன்விச் நேரத்திற்கும் நமது இந்திய நேரத்திற்கும் ஐந்தரை மணிநேரம் வித்தியாசம் . ஏனென்றால், நமது நாட்டுக்குரிய நேரக்கணக்கு தீர்க்கரேகையின் குறியீடு 82.5 டிகிரி . ஒரு டிகிரியின் மதிப்பு 4 நிமிடங்கள் ; எனவே 82.5 டிகிரியின் மதிப்பு ( 82.5 பெருக்கல் 4 ) 330 நிமிடங்கள் ; அதாவது 5 மணி 30 நிமிடங்கள் .
--- தினமலர் இணைப்பு . ஜனவரி 21 , 2011 .

Wednesday, March 7, 2012

கும்பாபிஷேகம் .

மூலஸ்தானத்தைக் கருவறையிலிருந்து யாக சாலைக்கு சுவாமியை அழைத்து வருவதற்கு ஒரு சாதனமாக இருப்பது கலசமாகும் . இதற்கென ஒரு குடத்தை தெய்வத் திருமேனியாகவே அதாவது சராசரி உடல் போன்று எண்ணி அலங்கரிக்க வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன .
குடம், நமது உடலைப் போன்றது . அதன் மீது சுற்றப்படும் முப்புரி நூல், உடலின் நாடி நரம்புகள் . உள்ளே ஊற்றப்படும் புனித நீர், உடலின் உள் உறுப்புகள் மற்றும் ரத்தம் போன்றது . குடத்தின் உள்ளே போடப்படும் நவரத்தினக் கற்கள், தங்கம், வெள்ளி போன்றவை வீரிய சக்தியைக் குறிக்கிறது .
முப்பத்தாறு தர்ப்பைகளை ஒன்றாக முடிந்து குடத்தின் நடுவே வைக்க வேண்டும் . இதை முதுகெலும்பாகவும், மாவிலைக் கொத்தை கழுத்துப் பகுதியாகவும், தேங்காயை முகமாகவும் எண்ணி அவற்றிற்குரிய மந்திரங்களைச் சொல்லி அலங்கரிக்க வேண்டும் .
கும்பாபிஷேகத்தின் யாகசாலை முதற்காலத்திற்கு முன்பாக ' கும்பாலங்காரம் ' என இந்நிகழ்ச்சியை விரிவாகச் செய்வார்கள். எனவே, புனித நீர் என்பது இறைவன் திருமேனியின் உள்ளுறுப்புகள் மற்றும் ரத்தம் போன்றது . இதன் நடுவேதான் இறைவனின் தெய்வசக்தி எனப்படும் உயிர்ச்சக்தியை மூல மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும் .
--- தினமலர் இணைப்பு , ஜனவரி 13, 2011 .

Tuesday, March 6, 2012

' சதாபிஷேகம் '

' சதாபிஷேகம் செய்வதை 80 வயது முடிந்து 10 மாதங்கள் மற்றும் 27 நாட்களுக்குப் பிறகு செய்ய வேண்டும் ' என சாந்திரத்னாகரம் எனும் நூலும், ' ஆயிரம் பிறை கண்டவர்களுக்குச் சதாபிஷேகம் செய்ய வேண்டும் ' என சாமிகாகம் எனும் நூலும் கூறுகின்றன .இரண்டையும் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றாகவே உள்ளது .
அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் பிறையைத் தரிசிக்க வேண்டும் . இதனால் ஆயுள் விருத்தியடையும் .
ஒரு ஆண்டில் 13 முறை மூன்றாம் பிறை வரும் . ஆயிரம் முறை என்று கணக்கிட்டுப் பார்த்தால் 77 ஆண்டுகள் இடைவிடாது இந்தப் பிறையைக் காண வேண்டும் .
நமக்கு நினைவு தெரிந்து பிறை தரிசிப்பதற்கு நான்கு வயதாவது ஆக வேண்டும் . கூட்டிப் பார்த்தால், நினைவு தெரிந்து ஆயிரம் பிறை கண்டு முடிப்பதற்கு மேற்சொன்ன 80 வயது 10 மாதங்கள் 27 நாட்கள் முடிய வேண்டும் என்ற கணக்கு சரியாக வருகிறது .
' சதாபிஷேகத்தை ஜன்ம நட்சத்திரத்தில்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை . நல்ல முகூர்த்த நாள் பார்த்து செய்ய வேண்டும் ' எனவும் ஆகமங்கள் கூறுகின்றன .
--- தினமலர் இணைப்பு .பிப்ரவரி 3, 2011 .

ஜோக்கூ....


** கேட்கும் கேள்விகளுக்கு
பெண்கள்
சரியான பதிலைச் சொல்வது...
எக்ஸாம் பேப்பரில் மட்டுமே !
** கண்களில் தூக்கம் இல்லை
வாழ்வில் சந்தோஷம் இல்லை
முகத்தில் புன்னகை இல்லை
மனதில் நிம்மதி இல்லை
காரணம் ...
பக்கத்து வீட்டு ஃபிகர்
ஊரில் இல்லை .
--- குங்குமம் , 18 . 7. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Monday, March 5, 2012

ஆன்மிக முன்னேற்றம் .

ஆன்மிக முன்னேற்றத்திற்கான தர்ம வழிகளில் நான்கு வகைகள் !
முதல் வகையின் பெயர், ' சாமானிய தர்மம் '. அதாவது மாதா, பிதா, குடும்பத்தினர், சக மனிதர்கள், குரு ஆகியோரிடம் மதிப்பு மரியாதையோடு நடந்து கொள்ளுதல் . இதைத் தனது வாழ்க்கையால் அறிவுறுத்தினார், ஸ்ரீராமர் !
2 -வது வகையின் பெயர், ' சேஷ தர்மம் '. அதாவது, ' பூலோக உறவுகள் நிலையானவை அல்ல; தெய்வீக நெருக்கமே நிலையானது ' என்ற ஞானப் பக்குவத்துடன், தெய்வத்தின் பாதங்களைச் சரணடைதல்... வாழ்க்கை முழுவதும் ஸ்ரீராமரை நிழல் போலத் தொடர்ந்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் லட்சுமணன் !
3 - வது வகையின் பெயர், ' விசேஷ தர்மம் ' அதாவது, எப்போதும் தெய்வீக சிந்தனையோடு இருத்தல் ... ஸ்ரீராமரை விட்டு பிரிந்திருந்த வேளையிலும் மனம் முழுக்க அவரையே நிறைத்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் பரதன் !
4 -வது வகையின் பெயர், ' விசேஷர தர்மம் '. அதாவது, இறையடியார்க்குத் தொண்டு புரிவதற்கே வாழ்க்கையை அர்ப்பணித்தல்.. ஸ்ரீராமரின் பூரண பக்தரான பரதனை நிழல் போலத் தொடர்ந்து, அவருக்குத் தொண்டு செய்வதையே . வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் சத்ருக்கனன் !
நான்கு வகை தர்மங்களும் சிறப்பானவையே ; இருப்பினும், சரணாகதி தர்மமான ' சேஷ தர்ம ' முறை மிக மிகச் சிறப்பு .
--- தினமலர் இணைப்பு . மார்ச் 26 , 2011 . .

பிபியை குறைக்கணுமா ?

வாக்கிங், ஜாக்கிங் போகாம பிபியை குறைக்கணுமா ?
* ஒரு டென்னிஸ் பாலை எடுத்துக்கோங்க .
* இரண்டு நிமிஷத்துக்கு தொடர்ந்து அந்த பாலை கையில வெச்சுகிட்டு பிசையற மாதிரி அழுத்துங்க .
* கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு திரும்பவும் அதே மாதிரி செய்ங்க . 10 நிமிஷத்துக்குள்ள நாலு தடவை செய்யணும் .
* வாரத்துக்கு மூணு நாளு இதே மாதிரி செஞ்சுட்டு ஆறு வாரம் கழிச்சு பிபியை செக் பண்ணிப் பாருங்க . மாத்திரை போடாமலேயே பிபியை குறைஞ்சிருக்கும் .
--- தினமலர் இணைப்பு . மார்ச் 26 , 2011 . .

Sunday, March 4, 2012

மேஜிக் பெருக்கல் !

கீழே உள்ள பெருக்கல் கணக்குகளைக் கவனியுங்க :
4 X 1738 = 6952 .
4 x 1963 = 7852 .
12 x 483 = 5796 .
ஒவ்வொன்றிலும் 1 முதல் 9 வரையிலான எண்கள் வந்துள்ளன !
--- தினமலர் இணைப்பு . பிப்ரவரி 4 , 2011 .

Saturday, March 3, 2012

அட...அப்படியா சங்கதி ? !

' ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்...
பாடுற பாட்டை பாடி கறக்கணும் '.
மாடு பாடுறதா இருந்தா...... மனுஷ பயக அதுங்கள படுத்துற கொடுமையைத்தான் மொதல்ல சொல்லியிருக்கும் ! ஆனா, விஷயமே வேற... ஆடுற பாட்டா இருந்தா நிச்சயம் அதை ஆடித்தான் கத்துக்கணும் . அதேபோல பாடுறதுக்கு ஏத்த பாட்டா இருந்தா... நிச்சயம் பாடித்தான் கத்துக்கணும் . அதை, ' ஆடுற பாட்டை ஆடி கத்துக்கணும்... பாடுற பாட்டை பாடி கற்கணும் ' சொல்லிட்டு போயிருக்காங்க . நாம வேற மாதிரி சொல்லிகிட்டு திரியறோம் .
' அடுத்தவங்களோட தன்மைய தெரிஞ்சுகிட்டு, விஷயத்தை சாதிச்சுக்கணும் ' ங்கற அர்த்தத்துலயும் இதை எடுத்துக்கலாம் .
---மெய்யழகன் , அவள் விகடன் . ஜனவரி 15 , 2010 .

Friday, March 2, 2012

துணுக்கு !

ஒரு ஆங்கில நகைச்சுவைத் துணுக்கு...
ஒரு பணக்கார கஞ்சன், தன் மரணத்தறுவாயில் மனைவியை அழைத்து " என்னைப் புதைக்கும் போது நிர்வாணமாகப் புதைத்து விடு... கவனம்... அத்தனை விலை கூடிய கோட் சூட்டுடன் பிணத்தை மண்ணில் புதைக்கும் மடத்தனத்தைச் செய்யாதே " என்றான் . தலையில் அடித்துக் கொண்டாள் மனைவி . " உங்களுக்குக் குளிருமே...மேலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்..." என்றாள் . " உளராதே... எப்படியும் நரகம்தான் போவேன்... அங்கு நெருப்பில் குளிறாது " என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தான் . தலை எழுத்தே என்று நிர்வாணமாகப் புதைத்தாள் மனைவி .
ஒரு நாள் இரவு நேரம் கண்ணாடி ஜன்னலைத் தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் . கணவனது ஆவி ஆடிக்கொண்டிருந்தது ... " என் கம்பளி உடைகளைக் கொடு .. நரகத்தில் குளிருகிறது " என்றான் கணவன் . " நரக நெருப்பில் வெப்பமாக இல்லையா ? " என்று ஆச்சரியத்துடன் கெட்டாள் மனைவி . " ம்ஹும்...இப்போது நரகத்திற்கு நிறைய பணக்காரர்கள் வந்துவிட்டார்கள் ... அத்தனை பயலும் சேர்ந்து ஏஸி செய்து விட்டார்கள்... குளிர் தாங்க முடியவில்லை " என்றபடி கம்பளியை உருவிக்கொண்டு கணவன் ஆவி நகர்ந்தது .
கற்பனைதான்... ஆனால் அழகான கற்பனை இது . கஞ்சத்தனம்... நரகம் வரை கஞ்சத்தனம் .
--- 'எப்போதும் சந்தோஷம் ' .என்ற நூலில் , சுகி . சிவம்
---- நூல் உதவி : R. கந்தசாமி , அம்பகரத்தூர்

மதிப்பு கண்டுபிடிக்க ' X ' .

கணிதத்தில் மதிப்பு கண்டுபிடிக்க ' X ' -- ஐப் பயன்படுத்தக் காரணம் :
ஆங்கில எழுத்துக்களில் இருபத்திநாலாவது எழுத்து X , ரோமன் எண்களில் X என்றால் பத்து ( 10 ). X -- க்குத் தனி உச்சரிப்பு கிடையாது . உதாரணமாக, axe என்பதை உச்சரிக்கும்போது aks என்பதாகவே உச்சரிக்கிறோம் . தெரியாத, புரியாத ஒளிக் கதிர் என்பதால்தான், X -- ray என்று வைத்தார்கள் . எல்லாவற்றுக்கும் மேலாக, X இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் எழுத்து ( X mas ) . ' அல்ஜீப்ரா'வில் தெரியாத விஷயத்துக்கு ( unknown quantity ) X என்று வைத்துக்கொண்டது கிறிஸ்து பிறப்புக்குப் பிறகுதான் ! வைத்தது யார் என்று தெரியவில்லை !
--- ஹாய் மதன் , ஆனந்த விகடன் , 20 . 4 . 2011 .

Thursday, March 1, 2012

கத்தரிக்காய் !

கத்தரிக்காய், காயா அல்லது பழமா ?
பழம் என்றால் என்ன ? ' எது வித்துக்களைக் கொண்டிருக்கிறதோ அதுவே பழம் ' என்கிறது தாவரவியல் . எனவே, இந்த வரையறைப்படி கத்திரி பழம்தான் .... தக்காளி, வெள்ளரி ஆகியவையும் பழம்தான் !
அதேவேளையில் கத்தரிக்காய், தக்காளிக்காய், வெள்ளரிக்காய் என்று சொல்வதே பழக்கமாக இருப்பதால், இவற்றைப் பழம் என்று சொல்லாததைப் பெரிய தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை .
--- தினமலர் இணைப்பு , ஏப்ரல் 15 . 2011 .