Tuesday, December 31, 2013

பூக்காத மரம்... பூக்கும்!

  முன்பு எங்கள் வீட்டில் பங்கனப்பள்ளி வாழை, செழிப்பாக வளர்ந்து காய்க்காமல் இருந்தது.  கோவையிலிருந்து வந்த விவசாய நிபுணர் ஒருவர் கூறியது போல,  அடிமரத்தின் நடுப்பாகத்தில் சுமார் 6, 7 செ.மீ. அல்லது 5 விரற்கிடை அளவுக்கு கத்தி அல்லது அரிவாள் கொண்டு சுற்றிலும் தோல் பகுதியை மட்டும் செதுக்கினோம்.  பிறகு, பாத்தி கட்டி தினமும் தண்ணீர் விட்டோம்.  என்ன ஆச்சர்யம் மறு வருடமே மரம் பூத்து, காய்த்து பழம் தந்தது.  நீங்களும் இப்படி செய்து பாருங்கள்.
-- சி.எஸ். ஜலஜா, கே.கே.புதூர்.  ரீடர்ஸ்.
--  அவள் விகடன்.  21-05-2013    
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.  

Monday, December 30, 2013

இனியெல்லாம் ருசியே!

*  ஹோட்டலில் செய்யும் கிரேவி போன்று வீட்டிலும் ருசியாக வருவதர்கு என்ன செய்ய வேண்டும்?
    --  கிரேவியை அடுப்பிலிருந்து எடுப்பதற்கு முன்பு சிறிது முந்திரியுடன் தேங்காய்ப் பால் சேர்த்து அரைத்து கிரேவியில் விட்டு கொதிக்கவிட்டு எடுக்கவும்.  
*  தோசை மெல்லியதாகவும், மொறுமொறுவென்றும் வர என்ன செய்ய வேண்டும்?
   --  அரிசி, பருப்பு ஊறவைக்கும் போதே அதனுடன் ஒரு டீஸ்பூன் ஜவ்வரிசியை ஊறவைத்து அரைத்தால்... மொறுமொறுவென்று வரும்.
*  திடீர் சட்னி செய்வது எப்படி?
   --  வீட்டில் உள்ள காய்கறிகளை சிறிது எடுத்து வதக்கி, அதனுடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சிறிது புளி, உப்பு சேர்த்து அரைத்தால்... திடீர் சட்னி
       ரெடி.
*  வெளியில் எடுத்துச் செல்லும் தயிர் சாதம் பிளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
   --  அரிசியை வேக வைக்கும்போது ஒரு கப் அரிசிக்கு 3 கப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து, நன்றாகக் கலந்து ஆறியவுடன் ஒரு டீஸ்பூன்
       தயிர் சேர்த்து கலந்தால் ... நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.
*   ஜவ்வரிசி வற்றல் போடும்போது, ஜவ்வரிசி வேக அதிக நேரம் எடுக்கிறதே... அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
   --  ஜவ்வரிசி வங்கும்போது மாவு ஜவ்வரிசி என கேட்டு வாங்க வேண்டும்.  இரவே ஜவ்வரிசியை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை தண்ணீர்
       கொதித்ததும் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டுக் கிளரினால்... சீக்கிரமாக வெந்துவிடும்.
-- சாந்தி விஜயகிருஷ்ணன், ( சந்தேகங்களும்... தீர்வுகளும் ).
-- அவள் விகடன்.  21-05-2013  
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால். 

Sunday, December 29, 2013

டிப்ஸ்...டிப்ஸ்...

*  ஸ்டாம்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு விட்டதா?  அல்லது, உங்களுக்கு வரும் தபால் உறையில் ஒட்டி இருக்கும் ஸ்டாம்புகளைப் பிரித்தெடுத்து
   சேகரிக்க விரும்புகிறீர்களா?  அந்த ஸ்டாம்புகளின் மேல் ஒரு மெல்லிய துணியை விரித்து சில விநாடிகள் இஸ்திரி செய்துவிட்டுப் பிரித்தால்...சுலபமாக
   பிரிந்து வந்துவிடும்.
*  பேனாவில் மை நிரப்ப உபயோகிக்கும் இங்க் ஃபில்லர் ஒன்றிரண்டு வாங்கி சமையலறையில் வைத்துக் கொள்ளுங்கள்.  எசன்ஸ் வகைகள்,  சோயா சாஸ்
   போன்றவற்றை சரியான அளவுகளில் சமையலில் சேர்க்க வசதியாக இருக்கும்.
*  தோசைகக்கல்லின் ஓரம் எண்ணெய்க் கறை படிந்து இறுகிப் போய்விட்டதா?  அடுப்பை ஏற்றி தோசைக்கல்லின் விளிம்புப் பகுதியை மட்டும் எரியும்
   ஜுவாலையில் வட்டமாக சூடேற்றி, உடனே ஒரு மரக்கரண்டியால் சுரண்டினால், இறுகியுள்ள பிசுக்குப் பகுதி இளகி, உதிர்ந்து விடும்.
--  அவள் விகடன்.  21-05-2013    
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.  

Saturday, December 28, 2013

' பின் நம்பர் ' மறையுங்கள் !

 ஏ.டி.ஏம் -மில் பணம் எடுக்கும்போது,  ரகசிய எண்களை ( பின் நம்பர் ) அழுத்துவீர்கள் அல்லவா?  அப்போது இயன்ற வரை ஒரு கையால் அழுத்துப் பலகையை மறைத்துக்கொண்டு, இன்னொரு கையால் அழுத்துங்கள்.  சில இடங்களில் உங்கள் ரகசிய எண்ணைக் கேமிரா மூலம் படம் எடுத்து மோசடி செய்பவர்களூம் இருக்கிறார்கள்.  வெளியில் இருந்து பார்ப்பவர்களூக்கும் தெரியாமல்,  உங்கள் உடம்பையே ஒரு கேடயமாக உபயோகித்தும் ரகசிய எண் அழுத்துவதை மறைக்கலாம்.
-- அவள் விகடன்.  21-05-2013  
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.      

Friday, December 27, 2013

வானவில்.

   வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை.  பனிமூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தூசு, காற்றில் நிறந்திருக்கும் நீர்த்துளிகள் ஆகியவற்றுக்கும் வானவில் தோன்றுவதில் பங்கு இருக்கிறது.  நம் கண்களுக்குத் தெரிவதுபோல உண்மையில் வானவில் அரைவட்டமாக இருக்காது.  முழுவட்ட வடிவில்தான் வானவில் தோன்றும்.  நம் கண்களுக்கு வளிமண்டலத்தின் மேற்பகுதியில் இருக்கும் அரை வட்டம் மட்டுமே தெரியும்.  உண்மையில் நம் கையால் தொடமுடிகிற அளவுக்கு வானவில்,  ஒரு பொருள் அல்ல.  கானல் நீர் போல ஒளிச்சிதரல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பொம்பம் மட்டுமே.
     வானத்தில் உள்ள நீர்த்துளிகளில் ( அதுதான் மழையாகப் பொழிகிறது) சூரிய ஒளி ஊடுருவி, அது சிதலமடைந்து, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் உருவாகும் நிகழ்வே வானவில்.  ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே வானவில் நம் கண்கலுக்குத் தெரியும்.
    வானவில்லில் நீலம், கருநீலம், ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்கள் இருக்கும்.  ஆங்கிலத்தில் VIBGYOR என்ற வார்த்தையின் மூலம் இந்த வண்ணங்கலை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.  அதாவது ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒவ்வொரு நிறத்தின் முதல் எழுத்தைக் குறிக்கும். v - violet,  i - indigo,  b - blue,  g - green,  y - yellow,  o - orange,  r - red.
     வானவில்லில் இரண்டு வகை உண்டு.  முதன்மை வானவில்லில் வெளிப்பக்கம் சிவப்பு நிறமும், உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும்.  இரண்டாம் நிலை வானவில்லில் ( அதாவது நீர்த்துளிகளுக்குள் சூரிய ஒளி இரண்டுமுறை சிதறடிக்கப்படும்போது தோன்றுவது )  இந்த வண்ண அமைப்பு அப்படியே தலைகீழாக இருக்கும்.
-- பிருந்தா  மாயாபஜார். சிறப்புப்பகுதி.
-- ' தி இந்து ' நாளிதழ். புதன் 13, 2013. 

Thursday, December 26, 2013

கிரீன் டீ.

   கிரீன் டீ என்பது ஒருவகைத் தேனீர்தான்.  பொதுவாக  தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் ஆக்சிடைசாக அனுமதிக்கப்படுகின்றன.  ( ஒரு துண்டு ஆப்பிளை காற்றுபடும் இடத்தில் வைத்தால், அது பழுப்பாக மாறத் தொடங்கும்.  அதன் சுவையும், அதிக இனிப்பாக இருக்கும்.  ஆக்சிஜனால் உண்டாகும் மாற்றம் இது).  இது போன்ற மாற்றம்தான் தேயிலைக்கு நிகழ்கிறது.  ஆனால், கிரீன் தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் வெப்பப்படுத்தப்படுகின்றன.  இதனால் அவை ஆக்சிஜனோடு எந்த வினையும் பிரிவதில்லை.  இதனால்தான், கிரீன் டீயின் சுவையும் (  அதில் விட்டமின் சத்துக்கள் நிறைய இருந்தும் ) வித்தியாசமாக, கொஞ்சம் துவர்ப்பாக இருக்கிறது.
--  - ஜி.எஸ்.எஸ். ,  குட்டீஸ் சந்தேக மேடை?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 29, 2013. 

Wednesday, December 25, 2013

சூரியனின் ஆயுட்காலம்.

சூரியனின் ஆயுட்காலம் இன்னும் எவ்வளாவு காலம் உள்ளது>
    இப்போதிலிருந்து 2.8 பில்லியன் ( ஒரு பில்லியன் என்பது 100 கோடிக்குஸ் சமம் )  ஆண்டுகளுக்குப் பிறகு,  சூரியன் மடிந்து விடும் என்கிறார்கள்.
    காலம் செல்லச் செல்ல, சூரியன் மேலும் வெப்பமடையும் என்றும்,  சூரியன் தன்னிடமுள்ள கதிரியக்க எரிபொருளை முழுவதுமாக பயன்படுத்தித் தீர்த்துவிட்டு, ஒரு சிகப்பு ராட்சஸன் போல பெரிதாகி உலகையே சுற்றிக் கொள்ளலாம் என்றெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
-- ஜி.எஸ்.எஸ். ,  குட்டீஸ் சந்தேக மேடை?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 29, 2013. 

Tuesday, December 24, 2013

தெரிஞ்சுக்கோங்க!

*  ஒரு சொத்துக்கு சொந்தக்காரரின் விருப்பத்துக்கு எதிராக,  யாரேனும் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்தால் அச்சொத்து தனக்கே உரியது
   என வாதாட முடியும்.
*  பொருள் தரும் ஒரு எழுத்துகள் :  சோ - அரண், மதில்.  ஏ - அம்பு.  ஐ - தலைவன், அழகு.  மீ - மேலே.  சே - எருது.  ஊ - இறைச்சி.  ஓ - மதகு.
   தே - தெய்வம்.  நை - வருந்து.  கூ - பூமி.  வௌ - கவ்வுதல்.  நொ - துன்பம்.  யா - ஒரு மரம்.  து - உண்.  மூ - மூப்பு.  வீ - மலர்.
*  உலகின் எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஒரு வார்த்தை உண்டா என்று மொழியாளர்கள் ஆராய்ந்துபார்க்கிறார்கள்.  இப்போதைக்கு அவர்கள்
   அடையாளம் கண்ட ஒரே வார்த்தை ' ஹ ' ( HUH ).  ஆம், உலகில் உள்ள எல்லா மொழிக்காரர்களும் அன்றாடம் ஒரு முறையாவது இந்த ' ஹ ' வைப்
   பயன்படுத்துகிறார்கள்.

Monday, December 23, 2013

டப்பா உணவு .

ராணுவம் தந்த டப்பா உனவு.
     18 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் தகரக்குவளைகளில் உணவை அடைத்துப் பதப்படுத்தும் முறை கண்டறியப்பட்டது.  மாவீரன் நெப்போலியனின் ராணுவத்தினர் போரில் சண்டையிட்டு இறந்ததைவிட,  பசி, ஊட்டக்சத்து குறைபாட்டால் அதிக அளவில் இறந்தனர்.  வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்க்ர்வி நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டனர்.  புண்கள் ஏற்படுதல், மஞ்சள்காமாலை காய்ச்சல், நரம்புக் கோளாறு, இறப்பு போன்றவற்றை அது ஏற்படுத்தக்கூடும்.
     அப்போது ஃபிரெஞ்சு அரசாங்கம், ராணுவ வீரர்களுக்காக உணவைப் பதப்படுத்தும் முறையை கண்டறிபவர்களுக்கு 12,000 பிராங்க் பரிசாக அளிப்பதாக அறிவித்தது.  நிக்கோலஸ் அப்பேர்ட் என்பவர்,  பாதி சமைக்கப்பட்ட உணவை இதற்குத் தீர்வாகப் பயன்படுதலாம் என்று தெரிவித்தார்.  அவர் ஒரு பார்சி.  உணவை பாட்டில்களில் சேமித்து, அவற்றை கார்க்கால் அடைத்து அவற்றின் உள்ளே உள்ள காற்றை வெளியேற்ற கொதிக்கும் தண்ணீரில் போட்டார்.  ஏனென்றால், காற்றுதான் உணவைக் கெட்டுப் போகச் செய்கிறது என்று அவர் நம்பினார்.  ஃபிரெஞ்சு ராணுவ வீரர்கள் வெளிநாட்டுக்குப் போனபோது, அப்பேர்ட் பதப்படுத்திய கோழி, காய்கறி, குழம்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.  நான்கு மாதங்களுக்குப் பிறகும்கூட சாப்பிடக்கூடியதாக அவை இருந்தன என்று தெரிவித்தனர்.  இப்படியாக உணவைப் பதப்படுத்தம் செயல்பாடு, ரணுவத் தேவைகளுக்காகவே முதலில் கண்டறியப்பட்டத்து.
     ஆனால், கொதிக்கும் தண்ணீரில் உள்ள வெப்பம் காற்றை நீக்குவதற்கு பதிலாக நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது என்பதை அரை நூற்றாண்டுக்குப் பிறகே லூயி பாஸ்டர் கண்டுபிடித்தார்,  நுண்ணுயிரிகளே உணவைக் கெட்டுப் போக வைத்தன, நோயகளை உருவாக்குகின்றன என்று அவர் கண்டுபிடித்தார்.
     உணவைப் பதப்படுத்துவது என்பது பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுப்ப்பதுதான்.  அத்துடன் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அடைவதால் சிக்குப் பிடித்துப் போவதைத் தடுப்பதும் ஆகும்.  உணவுப் பதப்படுத்தும் நுட்பம் மூலம் சுவையான பல புதிய உணவுப் பொருள்களும் கண்டறீயப்பட்டுள்ளன.  தயிர், சீஸ் போன்ரவை எடுத்துக்காட்டு.
-- ஆதி வள்ளியப்பன் .   வெற்றிக்கொடி.  அறிவு உயர்வு தரும். சிறப்புப் பகுதி .
--  ' தி இந்து ' நாளிதழ்.  திங்கள், நவம்பர் 18, 2013.  

Sunday, December 22, 2013

சமாதிகள்.

முக்கிய தலைவர்களின் சமாதி அமைந்துள்ள இடங்கள்:
மகாத்மா காந்தி.................... ராஜ்காட்
ஜவகர்லால் நேரு ................  சாந்திபவன்
அம்பேத்கர் .........................  சைத்ரபூமி
இந்திரா காந்தி ..................... சக்திஸ்தல்
ஜெயில்சிங்........................... ஏக்தாஸ்தல்
ராஜிவ் காந்தி ....................... வீர் பூமி
மொரார்ஜி தேசாய் ...............  அபய்காட்
குல்சாரிலால் நந்தா ..............  நாராயண்காட்
ஜகஜீவன்ராம் ......................  சமதா ஸ்தல்
லால்பகதூர் சாஸ்திரி ...........  விஜய்காட்.
--துணிக்குத் தோரணம்.
--  தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 22, 2013.

Friday, December 20, 2013

பாம்புகள்.

பாம்புகள் மனிதர்களைக் கடிக்குமா?  கொத்துமா?
     பெரும்பாலான பாம்புகள் கொத்திவிட்டு நம்மை விடுவித்துவிடும்.  ஆனால், சிலவகைப் பாம்புகள் கடிக்கும்.  அப்படிக் கடிக்கும்போது விலுக்கென்று வேகமாக கையையோ, காலையோ உதறிக் கொள்ள கூடாது.  காரணம், பாம்புகளின் பற்கள் அவற்றின் வாயின் பின்புறத்தைப் பார்த்தபடி அமைந்திருக்கும்.  அனவே கடிபடும் பகுதியை வேகமாக இழுத்தால் பாதிப்பு அதிகம் உண்டாகும்.  எதையாவது ( வெந்நீர் போல ) பாம்பின்மீது ஊற்றினால்,  அது தானாக வாயைத் திறந்து கொள்ளும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ( நடைமுறையில் இதெல்லாம் கஷ்டம் ).
-- குட்டீஸ் சந்தேக மேடை ?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 22, 2013.    

Thursday, December 19, 2013

விடை தேடும் பயணம்.

*  மாகாபாரத சகுனி காந்தார நாட்டைச் சேர்ந்தவர் என்பார்கள்.  அந்த காந்தாரம் இப்போது எங்கே உள்ளது ?
    -- அன்றைய காந்தாரம்தான் இன்றைய காந்தகார்,  ஆப்கானிஸ்தானில் உள்ளது.  இன்றைய பீகார் முன்பு மகதநாடாக விளங்கியது.  மகதத்தின்
    தலைநகரான  பாடலிபுத்திரம் இன்றைய பாட்னா.  ஒடிசா பகுதி கலிங்கம் என்று அழைக்கப்பட்டது.
*  லாக்ரிமல் சுரப்பி அதிகம் வேலை செய்தால் என்னவாகும் ?
    --- உடல்  பருமனாதல் தைராய்டு சுரப்பி குறைபாட்டால் உண்டாகலாம்.  அதிர்ச்சி அடைய வைக்கும் நிகழ்வுகலின்போது அட்ரினலின் அதிகமாகச்
    சுரக்கும்.  லாக்ரிமல் சுரப்பிகள் கண்களில் உள்ளன.  இவர்றின் இயக்கத்தால்தான் கண்ணீர் உண்டாகிறது.
*  வெள்ளைப் பூண்டின் தாவரயியல் பெயர் என்ன?
   ---  அலியம் சடைவம்.  வெங்காயமும் பூண்டின் குடும்பம்தான்.  வெங்காயத்தின் தாவர்வியல் பெயர் அலியம் சீபா.  மகாத்மா காந்திக்கும் ந்மக்கும் பிடித்த
   வேர்க்கடலையின் தாவர்வியல் பெயர்தான் அராகிஸ் ஹைபோகியா.
*  டைகோனாட் ( Tyconaut ) என்றால் என்ன?
   --- அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ரனாட் என்று அழைக்கப்படுகிறார்.  ரஷ்ய விண்வெளி வீரர் காஸ்மோனாட் என்று அழைக்கப்படுகிறார்.  சீன
    விண்வெளி வீரர் டைகோனாட் ( TYCONAUT ) என்று அழைக்கப்படுகிறார்.
-- ஜி.எஸ்.எஸ்.  வெற்றிக்கொடி.  அறிவு உயர்வு தரும். சிறப்புப் பகுதி .
--  ' தி இந்து ' நாளிதழ்.  திங்கள், நவம்பர் 18, 2013.

Wednesday, December 18, 2013

நவீன சுவிட்ச்.

தொடாமலே மின்சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்ச்.
     கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்ச்சை கண்டுபிடித்துள்ளார், பிராமத்து பொறியாலர் ஹரிராம்சந்தர்.  இவர் வடிவமைத்துள்ள இந்த டச்லெஸ் சுவிட்ச், இன்பிராரெட் ( அகச்சிவப்பு கதிர் ) தொழில்னுட்பத்தில் இயங்குகிறது.
     தண்டவாளத்தில் விரிசலை கண்டுபிடிக்கும் நவீன கருவியை இவர் உருவாக்கினார்.  தண்டவாளத்தில் எங்கேயாவது விரிசல் இருந்தால் ரயிலின் டிரைவருக்கும்,  தகவல் மையத்துக்கும் எச்சரிக்கை அனுப்பக் கூடியது என்பது இந்த நவீன சாதனை.
     ஈரக்கையோடு மின்விளக்கு, மின்விசிறி, மிக்சி போன்ற மின்சாதனங்களுக்கான சுவிட்ச்களை போடும்போது சில நேரம் ஷாக் அடிக்கலாம்.  அப்போது அந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியே  கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்ச்சை கண்டுபிடித்தது என்கிறார்   ஹரிராம்சந்தர்.  இந்த சுவிட்சின் மேல்புறம் 2 செ.மீ. அல்லது 5 செ.மீ. தூரத்தில் இரு விரல்களை காட்டினால் போதும், சுவிட்ச் ஆன் ஆகிவிடும்.
     சுவிட்சில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டரில் இருந்து வெளிவரும் அகச்சிவப்பு கதிர்கள் விரல் பகுதி வரை வந்து பின்னர் கீழே திரும்பும்.  அதை அங்கு உள்ள ரிசீவர் பெற்றுக்கொண்டு சுவிட்சை இயக்கிவிடும்.  பயோ-மெட்ரிக் போன்று முங்கூட்டியே விரல்பதிவை பதிவு செய்யத் தேவையில்லை.  யாருடைய விரல்களைக் காட்டினாலும் சுவிட்ஸ் இயங்கும்.
-- ஜெ.கு. லிஸ்பன் குமார்.  மாநிலம்.
--  ' தி இந்து ' நாளிதழ்.  சனி, நவம்பர் 16, 2013. 

Tuesday, December 17, 2013

மூளைக்காரன்பேட்டை

 ஒரு பிரபலத்தைப் பற்றிய எட்டு குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.  யார் என்று கண்டுபிடியுங்கள்.
1.  தத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்.
2.  வெளிநாட்டில் புனைப்பெயரில் படித்தவர்.
3.  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனது பெண் நண்பர், வெனிசுலாவில் இருப்பதாக இவர் கூறியது பரபரப்புச் செய்தியானது.
4.  ஒரு கட்சியின் துணைத் தலைவர்.
5.  வசிப்பது 12, துக்ளக் சந்து.
6. ' முஸ்லீம் பயங்கரவாதிகளைவிட இந்து தீவிரவாதிகள் நாட்டுக்கு மேலும் அபாயம் விளைவிக்கக் கூடியவர்கள் '. என்று இந்தியாவுக்கான அமெரிக்கத்
     தூதரிடம் இவர் கூறியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
7.  இவரது தந்தை, பாட்டி இருவருமே படுகொலை செய்யப்பட்டவர்கள்.
8.  இவரது தாய் வேற்று நாட்டில் பிறந்தவர்.
    புதிருக்கான விடை :  ராகுல் காந்தி.
-- ஜி.எஸ்.எஸ்.    ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி, நவம்பர் 15, 2013.    

Monday, December 16, 2013

சுட்டது நெட்டளவு

  அது ஒரு மனநல மருத்துவமனை....
     அங்கே சிகிச்சை பெற்று வந்தார் ஒரு பட்டதாரி வாலிபர்.  ஒரு நாள் சக நோயாளி ஒருவன் கிணற்றில்    குதித்துவிட , தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார்.
     அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது.  அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் அந்த பட்டதாரி வாலிபரை அழைத்து,
" உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப்போகிறேன்" என்றார்.
    " சொல்லுங்க டாக்டர் ."
    " நீ உனது நண்பனைக் காப்பாற்றியபடியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன்.  நீ வீடு செல்லலாம்.  இது நல்ல செய்தி."
    " ........"
    " துக்கமான செய்தி... நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான்."
      அப்போது இடைமறித்த பட்டதாரி வாலிபர் சொன்னார், " டாக்டர் ... அந்த நோயாளி சாகவில்லை.  கிணற்றில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றினைக் கட்டி மரத்தில் தொங்க விட்டிருக்கிறேன்.  ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான்."
-- சிவகாசி சுரேஷ்.  ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி, நவம்பர் 15, 2013.  

Sunday, December 15, 2013

' அண்ட் '


     உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடகங்கள் எழுதிய ஷேக்ஸ்பியரின் படைப்புக்களில், ' தி ' என்ற சொல் 27,457 முறையும், ' அண்ட் ' என்ற சொல் 25,285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மொழி.
    சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனியாக ஒரு மொழியும் கிடையாது.  அங்குள்ள மக்கள் ஜெர்மன், ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலிய மொழிகள் பேசுவார்கள்.
அதிர்ஷட ஆடு
    போலந்து நாட்டு மக்கள் ஆட்டு முகத்தில் விழிப்பதை அதிர்ஷ்டம் என்றும்,  காகம்,புறா இரண்டையும் பார்ப்பதை துரதிர்ஷ்டம் என்றும் கருதுகிறார்கள்.
' போனிக்ஸ் '
     காந்தியடிகள் முதலில் தொடங்கியது சபர்மதி ஆசிரமம் அல்ல.  தென்னாப்பிரிக்காவில்தான் முதல் ஆசிரமத்தை தொடங்கினார்.  அதன் பெயர்' போனிக்ஸ்
பார்ம் '.
-- தினமலர். பெண்கள்மலர். 14- 1- 2012. 

Saturday, December 14, 2013

எலிகள் கணக்கு !

எலிகள் மிக வேகமாக பெருகக்கூடியவை . வயதுக்கு வந்த ஒரு எலியால் ஒவ்வொரு மாதமும் ஒரு குட்டி எலியை பிரசவிக்க முடியும் . அந்த குட்டி எலி பிறந்து இரண்டே மாதத்தில் வயதுக்கு வந்து விட முடியும் .
கேள்வி இதுதான் : இன்றைக்குத்தான் பிறந்த ஒரு குட்டி எலியை- நீங்கள் வீட்டுக்கு வாங்கிக்கொண்டு வந்து வளர்க்கிறீர்கள் 10 மாதத்தில் உங்களிடம் எத்தனை எலி இருக்கும் ?
--- தினமலர் / 11 . 9 . 2010.
விடை : ஒரு எலிதான் .சரியான பதில் . ' துணையில்லாத ஒரு எலி எப்படி இனப்பெருக்கம் செய்யும் ? ' இதுதான் சரியன விளக்கம் .
--- தினமலர் / 25 . 9 . 2010.

புயல்.

  அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு,  புயலை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.  ஆங்கிலத்தில் ' ஹரிகேன் ' என்று சொல்லப்படுகிற புயல் அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு பசிபிக் பகுதியிலிருந்தும், ' சைக்கோலன் ' எனும் புயல் தென் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்தும், ' டைஃபூன் ' எனும் புயல் வடமேற்கு பசிபிக் பகுதியிலிருந்தும் மையல் கொள்கின்றன.
     அமெரிக்காவின் ' டைஃபூன் ' எச்சரிக்கை இணைவு மையம் வரையறுத்துள்ள படி,  புவிப்பரப்பில் ஒரு விநாடிக்கு 60 மைல் வேகம் கொண்டு சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்திருக்கும் புயல் வகைகளை ' சூப்பர் டைஃபூன் ' என்று அழைக்கிறார்கள்.
-- ந.வினோத் குமார்.
-- . ' தி இந்து' நாளிதழ்.  திங்கள், நவம்பர் 11, 2013.  

Friday, December 13, 2013

முக்தி தரும் நகரங்கள்

முக்தி தரும் நகரங்கள் ஏழு என்பர் . அயோத்யா , மதுரா , மாயா , காசி , காஞ்சி, அவந்திகா என்று சுலோகத்தில் அவந்திகா  எனப்படுவது  உச்சைனி நகரமாகும் .  பாரத  காலத்துக்கு மிக முற்பட்ட ஊர் இது .
-- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 12, 2013.

கணினி.

   உலக அளவில் தீங்கிழைக்கும் மென்பொருள் அதிகமாகக் கொண்டுள்ள கணினிகளை உடைய நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    கணினிகளில் பல்வேறு வகையான மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.  நம் கணினியில் உள்ள விவரங்களை நமக்கே தெரியாமல் பிறர் சேகரிக்க சமூக விரோதிகள் மற்றும் ' ஹேக்கர்கள் ' என்று அழைக்கப்படும் இணைய குறும்பர்களால் உருவாக்கப்படுபவைதான் இந்த தீங்கிழைக்கும் மென்பொருள்கள்.
இதனை ஆங்கிலத்தில் ' மால்வேர் ' என்று அழைப்பார்கள்.
-- ந.வினோத் குமார்.
--   ' தி இந்து ' நாளிதழ். வியாழன், டிசம்பர் 5, 2013.  

கிரீன் டீ.

   கிரீன் டீ என்பது ஒருவகைத் தேனீர்தான்.  பொதுவாக  தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் ஆக்சிடைசாக அனுமதிக்கப்படுகின்றன.  ( ஒரு துண்டு ஆப்பிளை காற்றுபடும் இடத்தில் வைத்தால், அது பழுப்பாக மாறத் தொடங்கும்.  அதன் சுவையும், அதிக இனிப்பாக இருக்கும்.  ஆக்சிஜனால் உண்டாகும் மாற்றம் இது).  இது போன்ற மாற்றம்தான் தேயிலைக்கு நிகழ்கிறது.  ஆனால், கிரீன் தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் வெப்பப்படுத்தப்படுகின்றன.  இதனால் அவை ஆக்சிஜனோடு எந்த வினையும் பிரிவதில்லை.  இதனால்தான், கிரீன் டீயின் சுவையும் (  அதில் விட்டமின் சத்துக்கள் நிறைய இருந்தும் ) வித்தியாசமாக, கொஞ்சம் துவர்ப்பாக இருக்கிறது.
--  - ஜி.எஸ்.எஸ். ,  குட்டீஸ் சந்தேக மேடை?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 29, 2013. 

Thursday, December 12, 2013

சபைகள்

திவாதிரைத் திருவிழா, நடராஜர் தலங்களில் விஷேசம். சிதம்பரம் (  கனகசபை ), திருவாலங்காடு ( ரத்தினசபை ), மதுரை ( வெள்ளியம்பலம் ), திரு நெல்வேலி ( தாமிரசபை ), திருக்குற்றாலம் ( சித்திரசபை ).
-- புலவர்.வே. மகாதேவன் .
-- தினமலர். பக்திமலர் . டிசம்பர் 12, 2013.