Friday, January 31, 2014

ஆன்மிகம்.

வார்த்தையிலும் வேண்டும் மங்கலம்!
    சென்ற தலைமுறையில் குழந்தைகளை ஏசுவதென்றால் கூட, மறந்துபோய்கூட அமங்கலமான வார்த்தைக்ளை பேசமாட்டார்கள்.
   ' நாசம் அற்று போக ' என்றுதான் கூறுவார்கள்.  அதாவது, தீங்கு இல்லாமல் போகட்டும் என்பதே அதன் பொருள்.
    அமங்கலமான வார்த்தைகளைப் பேசினால் அவை,  அப்போதே பலித்து விடும்.
-- ஸாந்த்ரானந்தா,  தினமலர். வாரமலர். நவம்பர், 10, 2013.   

Thursday, January 30, 2014

அறிவியல் அறிவோம்.

கோள்கள், நட்சத்திரங்கள் ஏன் கோள வடிவிலேயே உள்ளன ?
     பெரும்பாலான கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரிய விண்பொருள்கள் கோள வடிவிலேயே உள்ளன.  கோள்களும், நட்சத்திரங்களும் இப்படி இருப்பதற்குக் காரணமாக இருப்பது இரண்டு விசைகள்.  இந்த இரண்டு விசைகளில் ஒன்றாக இருக்கும் ஈர்ப்புவிசை, மற்றொரு விசையை சமநிலைப்படுத்துகிறது.
     நட்சத்திரங்களில் அடங்கியுள்ள பருப்பொருளை வெளிப்புறமாக இழுக்கும் வெப்ப அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் வகையில் ஈர்ப்புவிசை செயல்படுகிறது.  அதேநேரம் கோள்களில், ஈர்ப்பு விசைக்கு எதிராக சம்பந்தப்பட்ட பொருளில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு சக்தி, பருப்பொருள் ஒடுங்கிப் போகாமல் இருக்கும் வகையில் சமநிலையை உருவாக்குகிறது.  கோள்கள், நட்சத்திரங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள இந்த சக்திகள் எப்போதும் சம நிலையில் இருக்க முயற்சிப்பதால், அந்த இரண்டு விசைகளின் செயல்பாடுகளூக்கு ஈடுகொடுக்கும் வசதியான வடிவத்திலேயே சம்பந்தப்பட்ட பொருள் உருக்கொள்கிறது.  வடிவியல் ரீதியில் கோளம் மிகவும் சமநிலையான, உறுதியான வடிவமைப்பு.  எனவே, பெரும் கோள்களும், நட்சத்திரங்களும் கோள வடிவத்திலேயே உள்ளன.
     பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரங்கள் ஐந்து வால்களுடன் தோற்றம் தந்தாலும், உண்மையில் கோளவடிவத்திலேயே உள்ளன.  நமது பார்வைக்குத்தான், அவற்றின் வெளிச்சம் நட்சத்திர வடிவில் வால்களுடன் தோற்றம் தருகிறது.
-- உயிர் மூச்சு.  பசுமையின் சுவாசம். சிறப்புப்பகுதி.
-- ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் , நவம்பர் 5, 2013. 

Wednesday, January 29, 2014

பசும்பால்.

புற்றுநோயை குணப்படுத்தும் பசும்பால்.
     பெய்ஜிங் :  வயிற்றுப் புற்றுநோய்க்கு காரணமாக அமையும் செல்களை அழிக்கும் திறன் பசும்பாலுக்கு உண்டு என்று தைவானைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
     பசும்பாலில் லாக்டோபெரிசின் பி25 என்ற கூறு உள்ளது.  இது, மனிதர்களின் வயிற்றில் உருவாகும் புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அழித்துவிடும் திறனுடையது.
     வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் மீது லாக்டோபெரிசின் பி25 மூலக்கூறை வைத்து சோதனை நடத்தியபோது, 24 மணி நேரத்தில் அவை புற்றுநோய் செல்களை செயலிழப்பு செய்ய வைத்து அவற்றின் பரவும் திறனை முடக்குவது தெரியவந்தது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--   ' தி இந்து ' நாளிதழ்,  சனி , நவம்பர் 9, 2013. 

Tuesday, January 28, 2014

அறிவோம்! தெளிவோம் !

பாக்கெட் பாலை அபிஷேகத்திற்குப் பயன்படுத்தலாமா?
     காஞ்சி மகாபெரியவர் ஒருமுறை வடதேச யாத்திரை சென்றிருந்தார்.  அவர் தினமும் வழிபடும் சந்திர மவுளீஸ்வரர் பூஜைக்கு ஒரு வட இந்தியர் நிறைய பால் வாங்கிக் கொடுத்தார்.  பால் அபிஷேகம் செய்யத் துவங்கும் நேரம் பெரியவர் சுற்றும்முற்றும் பார்த்தார்.  ஒரு ஓரமாக முதியர் ஒருவர் சிறிய கூஜாவை வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.  பெரியவர், அம் முதியவரை அழைத்து கூஜாவை வாங்கித் திறந்து பார்த்தார்.  அதில் பால் இருந்தது.  அது மட்டும்  சந்திர மவுளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  பூஜைகள் முடிந்து பிரசாதம் பெறும் போது,  தான் கொண்டு வந்த பாலை அபிஷேகத்திற்கு சேர்த்துக் கொள்ளாததைப்பற்றி அந்த வடைந்தியர் வருத்தத்துடன் கேட்டார்.
    " இவ்வளவு பால் எப்படிக் கறக்கப்பட்டது? " என்று பெரியவர் வினவினார்.
    " மிஷின் மூலமாக " என்றார் வடைந்தியர்.
    " கன்றுக்குட்டிக்கு ஊட்டி, அதன் பிறகு கறக்கப்படும் பால்தான் அபிஷேகத்திற்கு உகந்தது.  நீர் கொண்டு வந்த பாலின் தரத்தை அறிந்துதான் அதை உபயோகிக்கவில்லை.  சிறிதளவு செய்தாலும், கன்று ஊட்டி கறந்த பசும் பால்தான் உயர்ந்தது" என்று கூறினார்.
     மிஷினில் கறக்கப்படும் பசும் பாலுக்கே இந்த கதி என்றால், பாக்கெட் பாலைப் பற்ரி நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன்.
-- ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்,  மயிலாடுதுறை.
-- தினமலர். பக்திமலர். நவம்பர் 7, 2013

Monday, January 27, 2014

தெரிஞ்சுகோங்க !

*  முனிவர்களின் தலைவர் என்றழைக்கப்படும் முனிவர் பெயர் என்ன ?
    துருவாச முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைவர்.
*  வெண்மையான மலர்களை பூஜைக்கு பொதுவாக அதிகம் பயன்படுத்துவதில்லை.  எனினும் நந்தியாவட்டை மட்டும் சிவபூஜையில் விசேஷமாக இடம்
    பெறும் மலராகும்.
*  கோயிலில் சுவாமிக்கு முன்னால் இருக்கும் காளை ( ரிஷப )  வடிவங்களை நந்தி என்கிறோம்.  நந்தி வேறு, ரிஷபம் வேறு என்பதனைக் காட்டும்.
    அஷ்டபரிவாரங்களில்  நந்தி தேவர் கிழக்கிலும், ரிஷபதேவர் மேற்கிலும் இருப்பர்.
*  ' நந்தி ' என்ற பெயர் சிவபெருமானுக்கு உரிய திருநாமமாகும்.  ' நந்தி நாமம் நமச்சிவாயவே ' என்பர் திருஞானசம்பந்தர்.  திருமூலர் திருமந்திரம் எடுத்த
    எடுப்பில், விநாயக வணக்கப்படலான ' ஐந்து கரத்தனை ' எனத் தொடங்கும் பாடலில், ' நந்தி மகன் ' என  விநாயகரைக் குறிக்கும்.
*   நந்தி என்ற சொல்லுக்கு அழிவு அற்றது; குற்றங்கள் இல்லாதது என்று பொருள்.  இத்தனமைகளுடைய சிவபெருமானே நந்தியாவார்.
-- தினமலர் இணைப்பு இதழ்களிலிருந்து.

Sunday, January 26, 2014

சிரிப்போ... சிரிப்பு !

*  ஆசிரியர் :  " இரு செல் உயிரிக்கு உதாரணம் சொல்லு பார்ப்போம் ...?"
    மாணவன் : " எங்க அப்பா... "
    ஆசிரியர் : " எப்படி ?"
    மாணவன் : " அவர்தான் ரெண்டு செல் ( போன் ) வெச்சிருக்காரே...!"
* " புலவரே... நீங்கள் எப்படி... மெட்டுக்கு பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா?"
  " இரண்டும் இல்லை மன்னா.  தாங்கள் கொடுக்கும் துட்டுக்கு பாட்டு."

Saturday, January 25, 2014

' டிரை கிளீனிங் '

   எந்த ஒரு திரவத்தையும் சேர்க்காமல் எப்படி ' டிரை கிளீனிங் ' ( Dry cleaning )  முறையில் துணிகளை சுத்தம் செய்கிறார்கள்?
     துணிகளைச் சுத்தம் செய்ய இந்த முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை.  இதனால் மட்டும்தான்,  அதை உலர் சலவை  அல்லது டிரை கிளீனுங் என்கிறோம்.  மற்றபடி மண்ணெண்ணெய், ஒரு வகை பெட்ரோல், பெர்க்ளோரோ எத்திலின் போன்ற திரவங்கள் பயன்படுத்தப்படுவதால் துணிகள் சுத்தம் அடைகின்றன.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை ?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 8, 2013. 

Friday, January 24, 2014

படிப்படியாக...

  அகிலத்தில் உள்ள அனைத்து உயிகளிலும் அம்பிகை இருக்கிறாள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் கொலு. படிகளை எப்படி அமைக்க வேண்டும் என்று தேவி பாகவதம், தேவி மகாத்மியம் நூல்களில் விளக்கப்பட்டுள்ளது.
கொலுப்படிகளை ஒற்றைப்படையில்தான் அமைக்க வேண்டும்.
*  முதல் படியில்,  ஓரறிவு உயிகளான செடி, கொடி, பூங்கா, தோட்டம் போன்றவற்றின் வடிவங்களை வைக்கலாம்.
*  இரண்டாவது படியில்,  ஈறறிவு உயிர்களான அட்டை, நத்தை, சங்கு, ஊறும் பூச்சியின் வடிவங்களை வைக்கலாம்.
*  மூன்றாவது படியில், மூவறிவு உயிர்களின் வடிவங்களை ( கரையான், எறும்பு ) வைக்க வேண்டும்.
*  நான்காம் படியில்,  நான்கறிவு உயிர்கள் ( சிறு வண்டு, பறவைகள் )  வைக்கலாம்.
*  ஐந்தாம் படியில் :  ஐந்தறிவு உயிர்கள் ( பசு, நாய், சிங்கம் போன்றவைகளை ) வைக்கல்லாம்.
*  ஆறாம் படியில் :  ஆறறிவு உயிர்கள் ( மனித வடிவிலான பொம்மைகள், வாத்தியக்குழு, செட்டியார் பொம்மை, திருமண கோஷ்டி போன்றவைகள் ).
*  ஞானிகளுக்கு ஏழாவது அறிவும் உண்டு என்று சொல்வார்கள்.( மகாங்கள், ஞானிகள், தபசிகளின் வடிவங்களை வைக்கலாம் ).
*  எட்டாம் படியில் :  தெய்வ அவதாரங்களை வைக்க வேண்டும்.
*  ஒன்பதாம் படிதான் முக்கியம்.  அதில் பூரண கும்பம் வைத்து நிறைவு செய்யலாம்.
-- பிருந்தா சீனிவாசன்.( ஆனந்த ஜோதி. உள்ளத்தின் உண்மை ஒளி. சிறப்புப் பகுதி. ஆன்மிகம் )
--   ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. 

அட்சய நவமி.

அள்ளிக்கொடுக்கும் அட்சய நவமி.
     பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களை எல்லா செயல்களை செய்வதற்கும் விலக்கி விடுகிறோம்.  அஷ்டமி, நவமி நாட்களில் தவிர்க்க வேண்டியவை நெடுந்தூர பயணம் மட்டுமே.
     ஜெகம் புகழும் ஸ்ரீராமபிரானின் அவதாரம் நிகழ்ந்தது சித்திரையில் அமைந்த நவமி நாள்.  யுகாதிக்கு ஒன்பதாம் நாள, ராம நவமி என்று போற்றப்படும் திரு நாள்.  கீதோபதேசம் செய்த கண்ணன் அவதரித்தது ஒரு அஷ்டமி நாள்.  இது கோகுலாஷ்டமி.
     சைவர்கள் விரதமிருந்து வழிபாடு செய்யும் நாட்கள் தேய்பிறை அஷ்டமி நாட்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு.
     தெய்வ வழிபாட்டுக்குரிய அஷ்டமி நாட்களில் சிறப்பிடம் பெறுவது சாந்திரமான வளர்பிறை அஷ்டமி நாளாகும்.  இதற்கு ' அட்சய நவமி ' என்று பெயர்.
     திரவுபதியிடமும், மணிமேகலையிடமும் அட்சய பாத்திரங்கள் இருந்தன.  இதில் உள்ள உணவு அள்ள அள்ள குறையாது.  எனவே, இந்த அமுதசுரபிகள் அட்சய பாத்திரங்களாயின.  ' அட்சயம் ' என்றால் வலரக்கூடியது என்று பொருள்.
-- தினமலர். 8-11-2013. 

Thursday, January 23, 2014

அழுகை

  உலகில் பிறக்கும் அனைத்து மனிதனின் வாழ்க்கையின் தொடக்கமும் அழுகைதான்.  அங்கே தொடங்கும் நமது வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது.
     குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சை செயல்;  அறியாமலே அழுதோம்.
     முதல் அழுகை மூச்சு விடுவதற்கு, நுரையீரல்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ள,  அடுத்தடுத்த அழுகைகள் பசியை அறிவிக்க,  குழந்தைகள் இவ்வுலகில் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கின்றன.  குழந்தை பிறந்து ஓராண்டு வரையில் அழுதுகொண்டேதான் இருக்கும்.  அதன் அழுகையை நிறுத்த வேண்டாம்.
     ஏனென்றால்,  குழந்தை பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரை அழுகின்ற அழுகையானது ' கலிமா ' ( இஸ்லாத்தின் மூலமந்திரம் ) ஆக இருக்கும்.  அடுத்த நான்கு மாத அழுகை நபிகள் நாயகம் ( ஷல் ) அவர்கள் கூறும் ' ஸ்லவாத் ' ( நபி புகழ் ) ஆக இருக்கும்.  அடுத்த நான்கு மாத அழுகை தனது பெற்றோருக்காக கேட்கும் ' துஆ' ( இறைஞ்சுதல் ) ஆக இருக்கும்.
-- நாகை ஜி.அஹ்மது.  ஆனந்த ஜோதி.  உள்ளத்தில் உண்மை ஒளி.
--  ' தி இந்து ' நாளிதழ்,  வியாழன் , நவம்பர் 7, 2013. 

Wednesday, January 22, 2014

சுட்டது நெட்டளவு.

   ஒரு பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது.  ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
     இளைஞன் அந்தச் சிறுவனை பக்கத்தில் அழைத்தார்.  அவன் தோளில் கைபோட்டு, " இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது " என்றான்.  சிறுவன் முகத்தில் வியப்பு.
    " உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?" என்று இளைஞன் கேட்டான்.
     அதற்கு சிறுவன் சொன்னான், " இல்லை !  அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன் ."
-- சிவகாசி சுரேஷ். ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ்,  வியாழன் , நவம்பர் 7, 2013. 

Tuesday, January 21, 2014

ஜில்ஜில் பிரேஸ்லெட்

வந்தாச்சு ஜில்ஜில் பிரேஸ்லெட் .  பிரேஸ்லெட்.:  அணிந்தால் உடம்பு கூலாகும்.
ஏ.சி., ஏர்கூலர் வேண்டாம்.  அமெரிக்க மாணவர்கள் சாதனை.
     அணிந்துகொண்டால் உடம்பையே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட பிரேஸ்லெட்டை அமெரிக்காவில் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.
     அவர்கள் உருவாக்கிய ரிஸ்ட்டிஃபை கருவி, வெப்ப மின்னோட்ட தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.  இயற்பியலில் பெல்டியர் விளைவு என்று ஒன்று உண்டு.  வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது உலோகங்களின் ஒரு இணைப்புப்பகுதி வெப்பத்தை வெளியேற்றும்,  இன்னொரு பகுதி வெப்பத்தை உள்ளிழுக்கும்.  அந்த தத்துவம்தான் அவர்கள் கண்டுபிடிப்புக்கு அடிப்படை.
      ரிஸ்ட்டிஃபை கருவி சற்று பெரிய வாட்ச் அளவில் இருக்கும்.  வாட்ச் போலவே மணிக்கட்டில் இதை அணிந்துகொள்ள வேண்டும்.  பெல்டியர் கூலர் எனப்படும் இரண்டு வெவ்வேறு வெப்பக் கடத்திகள் இதில் இருக்கின்றன.  தோல் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும்போது பெல்டியர் கூலருக்கு வேலை இல்லை.  தோல் வெப்பநிலை அதிகரித்தால், பெல்டியர் கூலர் வேலைசெய்யத் தொடங்கும்.  தோலில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, தோலுக்குக் குளிர்ச்சியை வழங்கும்.
     உடம்பில் ஏதாவது ஒரு பகுதியைக் குளிரச் செய்தாலே, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஒருசில வினாடிகளில் அந்த குளிர்ச்சி பரவிவிடும்.
     பனிப்பிரதேசங்களில் அதிககுளிரில் இருப்பவரின் உடல் வெப்பநிலை அதிகரித்து, உடலுக்கு சூட்டைக் கொடுக்கவும் ரிஸ்ட்ஃபை கருவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  சிறிய அளவு லித்தியம் பாலிமர் பேட்டரி உதவியுடன் இது செயல்படுகிறது.
     வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.  மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.  குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது.  தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும்.
-- எஸ்.ரவிகுமார்.  பூச்செண்டு
-- ' தி இந்து ' நாளிதழ்.  புதன், நவம்பர் 6, 2013.

Monday, January 20, 2014

தெரியுமா உங்களூக்கு !

*  வட இந்தியாவில்,  தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இடையிலான நாட்கள்,  பில்லி சூனியங்கள் செய்ய உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.  இந்த நாட்களில் பில்லி சூனியம் செய்பவர்களும்,  இராஜயோக பூஜை செய்பவர்களும் படுபிஸியாகி விடுகின்றனர்.
*  தீபாவளி நாளிலும் பட்டாசு இல்லை .  வவ்வால்களை நேசிக்கும் அதிசய கிராமம்.  வெடிக்கப்படும் பட்டாசுகளால் வவ்வால்கள் அச்சமடையும் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் உள்ள அரசமரம் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்விடமாக உள்ளது.  இந்த வவ்வால்களை கிராம மக்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்துவருவதால், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
*  பிரயண் என்ற பாரசீகச் சொல்லுக்கு வறுத்துச் சமைத்தது என்று அர்த்தம்.  இதுவே பிரியாணியின் மூலச் சொல்.  அது பாரசீகச் சொல் என்பதால், இந்த உணவு பெர்சியாவில் ( இன்றைய ஈரானில் ) தோன்றியிருக்க வேண்டும்.  முகலாயர் காலத்தில் அங்கிருந்து ஆப்கானிஸ்தான வழியாக வட இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
*  உலகிலேயே தொந்தி பெருத்த ஆண்கள் அதிகம் உள்ள நாடாகிவிட்டது மெக்ஸிகோ.  அமெரிக்காவை அவர்கள் மிஞ்சிவிட்டனர்.  மெக்ஸிகோவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 32.8% பேர் தொப்பையர்கள்.  எப்போதும் முன்னனியில் இருக்கும் அமெரிக்கரின் இந்த எண்ணிக்கை 31.8% ஆக உள்ளது.
--  ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி,சனி  நவம்பர் 1,2 ,2013.    

Sunday, January 19, 2014

'சிப்'பெனப் பிடித்தேன் சிவபெருமானே !

 அமெரிக்காவில் இருந்து பரதேசங்களுக்கு சப்ளையான சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தலா ஒரு ரகசிய 'சிப்' சொருகி அனுப்பியிருக்கும் சங்கதி இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.  இணையத் தொடர்பே இல்லாதிருக்கும் கம்ப்யூட்டர்களையும் இந்த திருட்டு வசதியின்மூலம் ஹேக் செய்ய இயலும்.  உள்ளே இருக்கிற சங்கதிகளை எடுத்துப் படித்துக் கள்ளத்தனம் செய்யலாம்...
      மேற்படி ஒரு லட்சம் கம்ப்யூட்டர்கள் சென்று சேர்ந்திருக்கும் இடங்களைப் பாருங்கள்.  பிரதானமாக சீன ராணுவம்.  அடுத்தபடியாக ரஷ்ய ராணுவம்.  மூன்றாவதாக ஐரோப்பியயூனியனைச் சேர்ந்த வர்த்தகக் குழுக்கள்.  கட்டக்கடைசியாக சயூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற தேசங்களைச் சேர்ந்த உளவுத்துறை அலுவலகங்கள்.  இதில் இந்தியாவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
     நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தி, ஏற்றுமதியாகும் கம்ப்யூட்டர்களுக்கு முன்னதாகவே தாலி கட்டி அனுப்பிவைக்கிற சங்கதி.  எந்தெந்தக் களவாணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள் இதில் உடந்தை என்று இனிமேல்தான் தெரியவரும்.
     இது இவ்வாறிருக்க, இந்தத் திருப்பணியை அமெரிக்காவுக்கு முன்பாகவே சீனா ஆரம்பித்துவிட்டது என்றும், அமெரிக்காவுக்கே அவர்கள் பலமுறை இவ்வித இனிய அல்வா கொடுத்ததன் விளைவாகவே அமெரிக்கா இந்த ரகசிய சிப் சொருகல் விவகாரத்தில் தீவிரமாக இறங்கியது என்றும் சொல்கிறார்கள்.
     எப்படியானாலும் இந்த அருவருக்கத்தக்க, அபாயகரமான அத்துமீரல் நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருப்பதை மறுக்க முடியாது.  டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடங்கி கம்ப்யூட்டர் ஹேக்கிங் வரை சகலமான சாத்தியங்களிலும் அமெரிக்கா தனது அழுகிய உளவுக் கரங்களை உலகெங்கும் நீட்டுவது தாங்க இயலாத அபாய எல்லையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
     எதைக் கேட்டாலும், என்ன கேட்டாலும் தேசிய பாதுகாப்பு என்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் ஒரே பாட்டை ஒரே சுருதியில் பாடிவிடுவார்கள்.  இல்லாவிட்டால் அப்படியொன்று நடக்கவேயில்லை என்று ஆத்ம சுத்தியுடன் பொய் சொல்லவும் ரெட்டை ரெடியாக நிற்பார்கள்.
     இந்த விவகாரத்திலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதைத்தான் செய்திருக்கிறது.  விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த மறுகணமே, அதெல்லாம் இல்லை; சுத்தப் பொய் என்று மறுத்துவிட்டார்கள்.  காசா பணமா?  ஒரு மறுப்பு.  தீர்ந்தது விஷயம்.
     ஆனால், அமெரிக்க அச்சு மீடியாவே இந்தா இந்தா என்று ஆதாரங்களை எடுத்து வீசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் NSA வின் மறுப்பு அர்த்தமற்றதாகவே உள்ளது.  ஒட்டுமொத்த உலக நாடுகளும் அமெரிக்காவின் இந்தத் தொடர் அத்துமீறல்களுக்கு எதிராக உடனடியாகத் திரண்டு எழாத பட்சத்தில், நாளைக்குக் கூடி உட்கார்ந்து ஒப்பாரி வைக்க நேர்ந்தால் அதுதான் கேலிக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும்.
--  GLOBE ஜாமூன்.  பா.ராகவன்.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி,, ஜனவரி 17, 2014. 

கருவிலேயே...

கருவிலேயே கற்றுக்கொள்ளும் குழந்தைகள்.
     லண்டன் :  கருவிலிருக்கும்போதே குழந்தைகள் தாயின் சுற்றுப்புறத்தில் எழும் ஒலிகளைக் கவனித்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்கின்றன என்பது அஷ்டவக்கிரர், அபிமன்யூ, பிகலாதன் பிராணக் கதைகள் தொட்டுச் சொல்லப்பட்டு வருகிறது.
     தற்போது, ஹெலிசின்கி பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில்,  கருவில் இருக்கும்போது தாலாட்டு அல்லது மெல்லிசைப் பாடல்களைக் கேட்கும் குழந்தைகள்,  பிறந்தவுடன் மற்ற குழந்தைகளோடு ஒபிடுகையில் விரைவில் பேசக் கற்றுக்கொள்க்ன்றன எனத் தெரியவந்துள்ளது.
     கர்ப்பத்தின் இறுதி நாள்களில் வாரத்துக்கு 5 முறை  ' டுவிங்கிள்  டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடலை கர்ப்பிணிகள் தொடர்ந்து கேட்டனர்.  இதனை அடிக்கடி கேட்டதால்,  இப்பாடல் ஒலிக்கப்படும் போதெல்லாம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகள் அதற்கு வேகமான எதிர்வினையைக் காட்டின.  பிறந்த நான்கு மாதங்களூக்குப் பிறகு அந்தப் பாடலைக் கேட்டபோதும் மற்ற குழந்தைகளை விட அந்தப் பாடலுக்கு எதிர்வினை புரிந்தன.
-- பி.டி.ஐ.   சர்வதேசம்.
-- ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி, நவம்பர் 1,2013.

Saturday, January 18, 2014

என் எண்ணெய், என் உரிமை !

  ( சிறப்பு )
     முன்னொரு காலத்தில் குவைத் என்னும் தேசமானது, தன்னிடம் எண்ணெய் வாங்கும் தேசங்களுக்கு அபாரமான விலைக் குறைப்பு செய்தது.  அதாவது பக்கத்து தேசமான இராக் விற்கிற விலையைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்த விலை.
     இதில் காண்டு பிடித்துத்தான் அப்போதைய இராக்கிய அதிபராக இருந்த சதாம் ஹுசைன் குவைத்தைத் தனது இன்னொரு
மாநிலம் என்று அறிவித்து ஓர் அதகள யுத்தத்தை ஆரம்பித்து வைத்தார்.
     இந்த பழைய சரித்திரம் இப்போது மீண்டும் திரும்புவதற்கான அபாய சாத்தியங்கள் அந்தப் பக்கம் உற்பத்தியாகத் தொடங்கியிருக்கின்றன.  அதே இராக்தான்.  ஆனால், குவைத்துக்குப் பதிலாகக் குர்திஸ்தான்.
     இந்த குர்திஸ்தான் என்பது தனி தேசமல்ல.  ஒரே தேசமும் அல்ல.  இரான், இராக், சிரியா, துருக்கி என்கிற நான்கு தேசங்கள் இனையும் இடத்தில் வசிக்கும் குர்த் இன மக்களின் மண்.  இதை குர்திஸ்தான் என்ற பேரில் தனிநாடாகப் பட்டா பண்ணி கொடுக்கச்சொல்லி ரொம்ப காலமாக அவர்கள் போராடி வந்தாலும் நாளது தேதி வரைக்கும் மேற்படி நாலு தேசங்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் அது இருக்கிறது.  தேசத்துக்கொரு நீதி, சட்ட திட்டங்கள், அந்தந்த ஊர்ப் பிரச்சனைகள், ஒரே இனமாக இருந்தும் நாலு தேசிய அடையாளங்களோடு இருக்கிறோமே என்று அவர்கள் சரித்திரக் கவலைப் பட்டுக்கொண்டிருப்பது பற்றிப் பிறகொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
     இப்போதைய கவலை, இராக்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் குர்திஸ்தான் பிராந்தியத்துக்கு வந்திருக்கிற சிக்கல்தான்.  ஏனெனில், இந்த இடத்தின் எண்ணெய் வளமென்பது ரொம்பப் பெரிது.  உலகின் ஆறாவது பெரிய உற்பத்தி ஸ்தானம்.
     இராக்கிய குர்திஸ்தான் மக்கள் வருஷக்கணக்கில் போராடி, சண்டை போட்டு ஒரு மாதிரி வரையறுக்கப்பட்ட மாநில சுயாட்சி உரிமை வாங்கிக்கொண்டு இப்போது இராக்கின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் தனியோரு கொடி கொண்ட பகுதியினராக உள்ளனர்.  அதற்குத் தனி ராணுவமெல்லாம்கூட உண்டு.  ஆனால், எண்ணெய் வளத்தில் பதினேழு பர்சண்ட் தான் ஷேர்.  இதில் மட்டும் தனியாவர்த்தனம் கூடாது என்பது நிபந்தனை.  அதாவது, எண்ணெய்க் காசில் ஷேர் உண்டு.  ஆனால், விற்பனை எல்லாம் மத்திய அரசு திட்டப்படிதான்.
     இதில்தான் இப்போது சிக்கல்.  குர்திஸ்தான் தன்னிச்சையாக துருக்கியுடன் ஒரு அக்ரிமெண்ட் போட்டு ஏற்றுமதியை ஆரம்பித்தது.  இது சட்டவிரோதம் என்று இராக் அலறத் தொடங்கியிருக்கிறது.
     சுயாட்சிப் பிராந்தியமே என்றாலும் இராக்கின் கட்டுப்பாட்டில் இருக்கிற மாநிலம் அல்லவா?  இதெல்லாம் அத்துமீறல் என்கிறார் அதிபர் நூரி அல் மாலிக்கி.  குர்திஸ்தானின் சுக சௌகர்யங்களில் கைவைக்க நேரிடும் என்று மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
     வெண்ணெய், நீ ஒரு அமெரிக்க பொம்மை.  சட்டம் பேச உனக்கென்ன யோக்கியதை?  உன் பைப் லைன் இல்லாவிட்டால் எனக்கு ஊர் முழுக்க சரக்கு லாரி இருக்கிறது.  உன்னால் என்ன செய்ய முடியும் பார்க்கலாம் என்று குர்திஸ்தான் அரசு ஏற்றுமதியை ஆரம்பித்துவிட்டது.
      இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.  எண்ணெய் என்பது எளிதில் தீபிடிக்கும் சங்கதி என்பதால் விரைவில் இந்த விவகாரம் பெரிதாவதற்கான சாத்தியங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
     அல் காயிதாவினரை அடக்கப் படையனுப்ப மாட்டேன் என்று நல்ல பிள்ளை வேஷம் போடுகிற அமெரிக்கா, குர்திஸ்தான் விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது என்று பார்க்கத்தான் போகிறோம்.
-- GLOBE ஜாமூன்.  பா.ராகவன்.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜனவரி 16, 2014. 

முருகா! முருகா11

*  செந்தமிழ்க் கடவுள் சேயோன் முருகனின் பெயரில் அமைந்த மூவெழுத்துக்களுமே தனிச் சிறப்பு உண்டு.  அது, மூன்றும் தமிழின் மூவினங்களில் அமைந்தவை என்பது தான்.  ( மு - மெல்லினம் ,  ரு - இடையினம்,  கு - வல்லினம் ).
*  சிவனாரின் நுதல் விழியில் இருந்து வெளிப்பட்ட அக்னிப் பிழம்பினை சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தவள் கங்கை.  அதனால் கங்கையின் மைந்தன் என்று பொருளில் காங்கேயன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு.
*  இருபத்து ஏழு நட்சத்திரங்களுக்குள் அதி உன்னதமானதாகவும், சிவபிரானுக்கு உரியதாகவும் போற்றப்படுவது திருவாதிரை நட்சத்திரம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  நவம்பர் 1 - 15 ,  2013.  

Friday, January 17, 2014

சாகித்தியம்

சாகித்தியம்
மைத்ரீம் பஜத அகிலஹ்ரு ஜேத்ரீம்
ஆத்மவதேவ் பரானமி பஸ்யத
யுத்தம் த்யஜத ஸ்பர்தாம் த்யஜத
த்யஜத பரேஷ்வ க்ரமமாக்ரமணம்
ஜனனி ப்ருதிவீ சாம துகாஸ்தே
ஜனகோ தேவஹ ஸகலதயாளுஹ
தாம்யத தத்த தயத்வம் ஜனதாஹ
ஸ்ரேயோ பூயாத் ஸகல ஜனானாம்

பொருள் :
நட்பை வளர்;
அது எல்லார் இதயங்களையும் வெல்லும்.
உன்னைப்போல் பிறரை நினை;
யுத்தம் தவிர்;  போட்டி மனப்பான்மை தவிர்.
பிறரை தாக்குவது தவறு;
நம் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
நம் தாய் பூமாதேவி இருக்கிறாள்;
நம் எல்லாருக்கும் தயவு செய்ய
நம் தந்தை இறைவன் இருக்கிறான்;
உலக மக்களே, மனதை அடக்கி,
பிறருக்கு கொடுத்து அன்பாக இருங்கள்;
எல்லாரும் எல்லாமே பெற வேண்டும்;

-- இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது,  காஞ்சி மகா பெரியவர் . அருளிய சாகித்யம்
-- எம்.எஸ்.சுப்புலட்சுமி,  ஐ.நா சபையில் பாடியது.
-- தினமலர் நாளிதழ் . தீபாவளி மலர். 02-11- 2013.
.   

Thursday, January 16, 2014


சவுதி பெண்கள்.

கார் ஓட்ட உரிமை கேட்கும் சவுதி பெண்கள்.
     உலகிலேயே பெண்கள் வாகங்களை ஓட்டுவதற்குத் தடை நிலவும் ஒரே நாடு அவுதி அரேபியா.  இந்தத் தடையை எதிர்த்து 60 க்கும் மேற்பட்ட பெண் வாகன ஓட்டிகள் சமீபத்தில் ட்தொடர்ந்த போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அவர்கள் தங்கள் எதிர்ப்பை சாலைகளில் வண்டியை ஓட்டிச்
செல்வதன் மூலம் வெளிப்படுத்தினார்கள்.  காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி கேள்விகளை எழுப்பினாலும், பிற வாகன ஓட்டிகள் பென் வாகன ஓட்டுனர்களை உற்சாகப்படுத்தியதாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    " எங்களைக் கடந்து சென்ற பல கார்களின் ஓட்டுனர்கள் எங்களைக் கண்டுகொள்ளவே யில்லை.  ஒரே ஒரு ஆண் ஓட்டுனர் மட்டும் எங்கள் காரை நிறுத்தச் சொல்லி ஹார்ன் எழுப்பினார்.  நான் பயந்தேன்.  ஆனால், அவர் எனக்கு கைகாட்டி எங்கள் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார்,  சவூதி அரேபியர்கள் எங்களை அங்கீகரிக்கத் தயாராகவே உள்ளனர்.  அச்சம் ஒன்றுதான் இங்குள்ள பெண்களைத் தடுக்கிறது" என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி ராணா.
     யூ டியூபில் வெளியான காரோட்டும் சவுதி அரேபிய பெண்ணின் படத்துக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டும் ஆதரவும் குவிந்தவண்ணம் இருக்கிறது.
-- ஷங்கர்.  பெண் இன்று. உலகம் இவள் வசம்.
--' தி இந்து' நாளிதழ். சனி, நவம்பர் 2, 2013.  

Wednesday, January 15, 2014

படிப்படியாக...

 அகிலத்தில் உள்ள அனைத்து உயிகளிலும் அம்பிகை இருக்கிறாள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் கொலு. படிகளை எப்படி அமைக்க வேண்டும் என்று தேவி பாகவதம், தேவி மகாத்மியம் நூல்களில் விளக்கப்பட்டுள்ளது.
கொலுப்படிகளை ஒற்றைப்படையில்தான் அமைக்க வேண்டும்.
*  முதல் படியில்,  ஓரறிவு உயிகளான செடி, கொடி, பூங்கா, தோட்டம் போன்றவற்றின் வடிவங்களை வைக்கலாம்.
*  இரண்டாவது படியில்,  ஈறறிவு உயிர்களான அட்டை, நத்தை, சங்கு, ஊறும் பூச்சியின் வடிவங்களை வைக்கலாம்.
*  மூன்றாவது படியில், மூவறிவு உயிர்களின் வடிவங்களை ( கரையான், எறும்பு ) வைக்க வேண்டும்.
*  நான்காம் படியில்,  நான்கறிவு உயிர்கள் ( சிறு வண்டு, பறவைகள் )  வைக்கலாம்.
*  ஐந்தாம் படியில் :  ஐந்தறிவு உயிர்கள் ( பசு, நாய், சிங்கம் போன்றவைகளை ) வைக்கல்லாம்.
*  ஆறாம் படியில் :  ஆறறிவு உயிர்கள் ( மனித வடிவிலான பொம்மைகள், வாத்தியக்குழு, செட்டியார் பொம்மை, திருமண கோஷ்டி போன்றவைகள் ).
*  ஞானிகளுக்கு ஏழாவது அறிவும் உண்டு என்று சொல்வார்கள்.( மகாங்கள், ஞானிகள், தபசிகளின் வடிவங்களை வைக்கலாம் ).
*  எட்டாம் படியில் :  தெய்வ அவதாரங்களை வைக்க வேண்டும்.
*  ஒன்பதாம் படிதான் முக்கியம்.  அதில் பூரண கும்பம் வைத்து நிறைவு செய்யலாம்.
-- பிருந்தா சீனிவாசன்.( ஆனந்த ஜோதி. உள்ளத்தின் உண்மை ஒளி. சிறப்புப் பகுதி. ஆன்மிகம் )
--   ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. 

பொருள் :

நட்பை வளர்;
அது எல்லார் இதயங்களையும் வெல்லும்.
உன்னைப்போல் பிறரை நினை;
யுத்தம் தவிர்;  போட்டி மனப்பான்மை தவிர்.
பிறரை தாக்குவது தவறு;
நம் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
நம் தாய் பூமாதேவி இருக்கிறாள்;
நம் எல்லாருக்கும் தயவு செய்ய
நம் தந்தை இறைவன் இருக்கிறான்;
உலக மக்களே, மனதை அடக்கி,
பிறருக்கு கொடுத்து அன்பாக இருங்கள்;
எல்லாரும் எல்லாமே பெற வேண்டும்;
-- இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது,  காஞ்சி மகா பெரியவர் . அருளிய சாகித்யம்
-- எம்.எஸ்.சுப்புலட்சுமி,  ஐ.நா சபையில் பாடியது.
-- தினமலர் நாளிதழ் . தீபாவளி மலர். 02-11- 2013.   

Tuesday, January 14, 2014

புயல் ?

புயலின் வகைகள்
     புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19 ஆம் நூற்றாண்டில் நினைத்தார்.  இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.
     இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது.  5 என்றால் மிதமான தென்றல் காற்று.  8 என்றால் ஓரளவு புயல் காற்று ( Gale ), மரக்கிளைகள் ஒடியலாம்.  10 என்றால் புயல் காற்று (Strom ).  11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள்.  இவை அனைத்துமே மனிக்கு 74 கி.மீ., வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.
     அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.  மேற்கிந்திய தீவுகளில் Humicane ( சூறாவளி ),  அமெரிக்காவில் Tomado  ( சுழன்றடிக்கும் சூறாவளி ),  சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon ( சூறாவளிப் புயல் ),  மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது.  இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone ( புயக் ) எனப்படுகிறது.  இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.
-- ஆதி வள்ளியப்பன்.  வெற்றிக்கொடி.
--   ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், டிசம்பர் 9, 2013. 

Monday, January 13, 2014

பிட்காயின் = நாணயமான நாணயமா?

பிட்காயின் என்றால் என்ன?
     பிட்காயின் ( Bitcoin ) ஒரு மெய்நிகர்  ( Virtual ) பணம்.  கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம்.  2009-ல் சந்தோஷி நகமோடோ என்ற புனைபெயரில் அடையாளம் தெரியாத ஒருவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது.  இதனை கணினியில் உள்ள அல்கோரிதம் ( algorithm )
வகை கணிதத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலூம் உருவாக்கலாம்.  இந்த வழிமுறையில் பிட்காயின் உருவாக்குவதை மைனிங் ( mining) என்று குறிப்பிடுகிறார்கள்.  ஒவ்வொரு கூடுதல் பிட்காயின் உருவாக்கும்போதும், இந்த கணக்கு முறை சிக்கலாகிக் கொண்டே போகும்.  இவ்வாறு தொடர்ந்து பிட்காயின் உருவாக்க முடியாது.  அதிக பட்சமாக 21 மில்லியன் பிட்காயின்தான் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
     பிட்காயின் வைத்திருப்போர் அதற்கென ஒரு மெய்நிகர் பணப்பையையும் உருவாக்கி அதில் பிட்காயினை வைத்திருப்பர்.  இந்த மெய்நிகர் பணப்பைக்கு நமது ஈமெயில்போல ஒரு முகவரியும் கடவுச்சொல்லும் ( password ) உண்டு.  இதில் பிட்காயின் போட ஒரு வழி, எடுக ஒரு வழி உண்டு.  நான் உங்களிடமிருந்து ஒரு பொருளை வாங்கி அதற்கென பிட்காயினை உங்களுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தி என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து உங்கள் மெய்நிகர் பணப்பைக்கு மாற்றிவிடுவேன்.  என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து பிட்காயினை எடுக்கும் வழிக்கான கடவுச்சொல் யாருக்கும் தெரியாத வரையில் என்னுடைய மெய்நிகர் பணப்பை பாதுகாப்பாக இருக்கும்.
    ஒவ்வொரு நாட்டின் பணமும் அந்தந்த நாட்டின் மைய வங்கியால் உருவாக்கப்பட்டு அதன் மாற்று விகிதங்கள் ஓரளவுக்கு நிலை நிறுத்தப்படும்.  பணத்தின் பயன்பாடு தொடர்பான சட்டங்களும் உண்டு.  ஆனால், எந்த நாட்டு மைய வங்கியும் உருவாக்காத பிட்காயின், எந்த நாட்டு சட்டத்துக்கும் கட்டுப்படாமல் இருக்கிறது.
-- இராம சீனுவாசன்.  பூச்செண்டு.
--   ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், டிசம்பர் 9, 2013. 

Sunday, January 12, 2014

ஃபீலிங்க்ஸ் பீட்ஸா !

*  முயன்றால் முடியும்
   யார் சொன்னது?
   முயன்றாலும் முடியவில்லை
   உன்னை மறக்க !
தத்துவம் மச்சி... தத்துவம் !
*  மரணம் ... ஒரு நொடியில்
   உயிர் போகும்.
   பிரிவு... ஒவ்வொரு நொடியும்
   உயிர் போகும்.
' பஞ் டயலாக் ' ஃப்ரெண்ட்ஸ் !
*  சிங்கத்தை யாராலயும் கொஞ்ச முடியாது...
   ஃப்ரெண்ட்ஷிப்பை எவனாலயும் மிஞ்ச முடியாது.
   தோஸ்த்துடா !
-- அவள் விகடன்.  30-8-2011.
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.

இன்றைய செய்திகள்!

*  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் தொடர்ந்து
   கவலைக் கிடமாக இருக்கிறார்.  அவருக்கு வயது 85.
*  தென் சீனக் கடல் பகுதிக்கு பிற நாட்டு மீன் பிடிப்படகுகள் வருவதற்கு தங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சீனா
   புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது பிற நாடுகளின் கோபத்தை தூண்டுவதாக உள்ளது.  -- ஜென் சாகி, அமெரிக்க வெளியுறவுத்
   துறை செய்தித் தொடர்பாளர்.
*  கியூபாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது.  கியூபா குறித்த ஐரோப்பிய
   யூனியனின் பார்வை மாறவேண்டும்.  --  கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நெதலாந்து வெளியுறவு அமைச்சர் பிரென்ஸ்
   திம்மர்மென்ஸ்.
-- 'தி இந்து'  சனி.11. 2014. 

Saturday, January 11, 2014

எந்திரன் - 11

   இன்னும் சில ஆண்டுகளில் ராணுவத்தில் மனித வீரர்களுக்குப் பதிலாக இயந்திர வீரர்களே அதிகம் இருப்பார்கள் என்கிறார் சிட்னியைச் சேர்ந்த ஆயுத நிபுணர் ஸ்காட் ஹார்ட்லி.  10 இயந்திர வீரர்களும் அவர்களை ஒரும்கிணைக்க ஒரு மனித வீரரும் ஒரு பிரிவில் இருப்பார்களாம்.  எல்லையை கண்காணிப்பது, கண்ணிவெடிகளை அகற்றுவது மட்டுமல்லாமல்... மீட்புப் பணிகளையும் இயந்திர வீரர்கள் மேற்கொள்வார்களாம்.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
--  ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், நவம்பர் 25, 2013.

இன்றைய செய்திகள்!

*  இந்தியா திரும்பினார் தேவயானி.  நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாடுகள் பதிவு.  இந்திய துணைத்தூதர் தேவயானிக்கு
    வழங்கப்பட்டுள்ள தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பை விலக்கிகொள்ளுமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது.
    இந்தியா மறுத்துவிட்டது.
*  மானிய விலை சிலிண்டர்கள் 12 ஆக உயர்த்த பரிசீலனை   மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தகவல்.
*  சபரிமலையில் மூச்சு திணரும் பக்தர்கள்.  கேரள போலீஸ் அலட்சியம்.
*  ஜல்லிக்கட்டுக் காளைகலுக்காக தயாராகும் வாகனம்.  திருச்சி பிராட்டியூரில் உள்ள டி.டி. என்ற வாகனங்களுக்கு பாடி கட்டும்
    நிறுவனத்தில் இந்த வாகனம் தற்போது தயாராகி, முடியும் தருவாயில் உள்ளது.  இந்த வேனின் பின்பகுதியில் ஒவ்வொரு
   காளையும் தனிதனியே பயணிக்கும் வகையில் 5 அறைகள், குளுகுளு வசதியுடன் , மின்வசதி வசதியுடன் செய்யப்பட்டுள்ளது.
*  பொதுநிகழ்ச்சியில் பிடல் காஸ்ட்ரோ.  9 மாதங்களுக்குப் பிறகு பங்கேற்பு.
*  பிரான்ஸ் அதிபருக்கு நடிகையுடன் தொடர்பு?  க்ளோசர் பத்திரிகையில் செய்தி.  அதிபர் பிராங்காய் ஹோலாந்த்துக்கு,
   நடிகை ஜூலி கெயட்டுடன் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது.
*  என் ஓட்டு மோடிக்கே.  டுவிட்டரில் கிரண் பேடி.
*  2017-ல் சந்திராயன் -2 : இஸ்ரோ தலைவர் தகவல்.  முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது இந்தியா.
-- 'தி இந்து'  சனி.11. 2014.
*  மலேரியாவுக்கு குட்பை.  இந்திய வம்சாவளி அமெரிக்க விஞ்ஞானி சாதனை.
*  களைப்பு மிகுதியால் கொட்டாவி விட்டபோது 26 வயது இளைஞருக்கு நுரையீரல் பாதிப்பு எற்பட்ட சம்பவம் சீனாவின்
    ஹுபேய் மாநிலம் உஹன் பகுதியை சேர்ந்தவர் ஓவ் . இவருக்கு நிரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
*  தேவயானி வெளியேற்றம்.  அதே ரேங்க் அமெரிக்க அதிகாரியை விரட்டியடித்து இந்தியா புது பதிலடி.
-- தினமலர். சனி.11. 2014. 

Friday, January 10, 2014

எது தரமான ஜரிகை?

   பட்டுநூல் மற்றும் செம்பு கம்பி ஆகிய இழைகள் மீது வெள்ளிக் கம்பி சுற்றப்பட்டு அதன் மீது தங்க முலாம் பூசப்படுகிறது.  இதை ஜரிகை என்கிறோம்.  இதில் கடந்த நவம்பர் 2011-க்கு பிறகு, 100 கிராம் ஜரிகையில் 40 கிராம் வெள்ளி, 0.5 கிராம் தங்கம், 24 கிராம் பட்டு நூல், 35.5 கிராம் செம்பு இருக்க வேம்டும் என்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வரையறுத்திருக்கிறது. 2011 -ம் ஆண்டுக்கு முன்பு வெள்ளி 57 கிராமும், தங்கம் 0.5 கிராமும் இருந்தது.  40 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளியின் அளவை 70 கிராமாக அரசு நிர்ணயித்திருக்கிறது.
-- ச.கார்த்திகேயன்.  பூச்செண்டு.
--   ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், நவம்பர் 25, 2013. 

Thursday, January 9, 2014

காட்சிப்பிழைதானோ?

   விமானங்களை வைத்தே உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த சம்பவத்தைத் தொடர்ந்து பல வதந்திகள் பரவின.  அந்த விமானங்களில் ஒன்றின் எண் Q33 NY என்றும் அந்த எண்ணை எம்.எஸ்-வேர்டில் ( MS- Word ) உள்ளிட்டு அதை விண்டிங்ஸ் ( Wingding ) என்ற எழுதுருவுக்கு மாற்றினால் ஒரு விமானம், இரண்டு கட்டடங்கள், ஒரு மண்டையோடு, இறுதியாக ஒரு நட்சத்திரம் தெரியும் என்றும் ஒரு வதந்தி பரவியது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவே இதுகுறித்து ஒருமுறை எழுதியிருந்தார்.  அந்த எண்ணை விண்டிங்ஸ் எழுத்துருவுக்கு மாற்றினால் விமானம், இரண்டு கட்டடங்கள், மண்டையோடு, நட்சத்திரம் தெரிவதெல்லாம் உண்மைதான்.  ஆனால், அந்த விமானங்களில் ஒன்றுக்குக்கூட Q33 NY என்ற எண் இல்லை என்பது பின்னால் தெரியவந்தது.  தற்போது, அதே 9/11 சம்பவத்தை வைத்து பரபரப்பூட்டும் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.  முதல் விமானம் மோதிய பின்னர், அந்தக் கட்டடத்தில் இருந்து கிடைத்த இரும்புத் தூண் ஒன்றில் மனித முகம் தெரிவதாக ஒரு செய்தி.  பயங்கரமான அந்த நிகழ்வைக் கண்டு துயரமும் பதற்றமும் அடைந்தது போன்ற முகபாவனையுடன் இருக்கும் அந்த முகத்தை ' 9/11 தேவதை ' என்று அழைக்கிறார்கள்.  எனினும், குறிப்பிட்ட கோணம் மற்றும் ஒளியமைப்பில் பார்த்தால்தான் அது மனித முகம் போல் தெரிகிறது என்று நிபுணர்கல் கூறுகின்றனர்.
-- வெ. சந்திரமோகன்.  தொடர்புக்கு : chandramohan.v@ Kslmedia.in. கருத்துப் பேழை.
--   ' தி இந்து ' நாளிதழ்.வெள்ளி, டிசம்பர் 6, 2013.  

Wednesday, January 8, 2014

கணினி.

   உலக அளவில் தீங்கிழைக்கும் மென்பொருள் அதிகமாகக் கொண்டுள்ள கணினிகளை உடைய நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    கணினிகளில் பல்வேறு வகையான மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.  நம் கணினியில் உள்ள விவரங்களை நமக்கே தெரியாமல் பிறர் சேகரிக்க சமூக விரோதிகள் மற்றும் ' ஹேக்கர்கள் ' என்று அழைக்கப்படும் இணைய குறும்பர்களால் உருவாக்கப்படுபவைதான் இந்த தீங்கிழைக்கும் மென்பொருள்கள்.
இதனை ஆங்கிலத்தில் ' மால்வேர் ' என்று அழைப்பார்கள்.
-- ந.வினோத் குமார்.
--   ' தி இந்து ' நாளிதழ். வியாழன், டிசம்பர் 5, 2013.  

Tuesday, January 7, 2014


*  ஆப்பிளில் உள்ள பெக்டின் ( PECTIN ) என்னும் வேதிப்பொருள் குடல் புண்னைக் குணமாக்கும் சக்தி கொண்டது.
*  சிலந்திகளில் மிகப் பெரியது டாரன்டுலா (  TARANTULA ).  இவை சரியாக 10 சென்டிமீட்டர் இருக்கும்!
*  வானில் பறந்து கொண்டிருக்கும்போதே போர் விமானங்களில் பெட்ரோல் நிரப்புவார்கள்.
*  கனடாவைச் சேர்ந்த ஜேம்ஸ் நைஸ்மித் (  JAMES NAISMITH )  என்ற விளையாட்டு ஆசிரியர் கூடைப் பந்தாட்டத்தை உருவாக்கினார் !
*  எர்னஸ்ட் வின்சென்ட்  " காட்ஸ்பை ' என்ற 50,000 வார்த்தைகள் கொண்ட ஆங்கில நாவலை எழுதினர்.  அதில் ' E ' என்ற எழுத்து ஒரே ஓர் இடத்தில்கூட
   பயன்படுத்தப்படவில்லை !
*  கடுமையான உறைபனி உள்ள இடங்களிலும் எரிமலைகள் இருக்கின்றன.  இவற்ரை டுயா ( DUA ) என்பார்கள் !
-- செ.நிபாஸத் ஃபாத்திமா, கீழக்கரை.
--   சுட்டி விகடன்.30 -09- 2013.
-- இதழ் உதவி : இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.

சூப்பர் 6.

*  ஆப்பிளில் உள்ள பெக்டின் ( PECTIN ) என்னும் வேதிப்பொருள் குடல் புண்னைக் குணமாக்கும் சக்தி கொண்டது.
*  சிலந்திகளில் மிகப் பெரியது டாரன்டுலா (  TARANTULA ).  இவை சரியாக 10 சென்டிமீட்டர் இருக்கும்!
*  வானில் பறந்து கொண்டிருக்கும்போதே போர் விமானங்களில் பெட்ரோல் நிரப்புவார்கள்.
*  கனடாவைச் சேர்ந்த ஜேம்ஸ் நைஸ்மித் (  JAMES NAISMITH )  என்ற விளையாட்டு ஆசிரியர் கூடைப் பந்தாட்டத்தை உருவாக்கினார் !
*  எர்னஸ்ட் வின்சென்ட்  " காட்ஸ்பை ' என்ற 50,000 வார்த்தைகள் கொண்ட ஆங்கில நாவலை எழுதினர்.  அதில் ' E ' என்ற எழுத்து ஒரே ஓர் இடத்தில்கூட
   பயன்படுத்தப்படவில்லை !
*  கடுமையான உறைபனி உள்ள இடங்களிலும் எரிமலைகள் இருக்கின்றன.  இவற்ரை டுயா ( DUA ) என்பார்கள் !
-- செ.நிபாஸத் ஃபாத்திமா, கீழக்கரை.
--   சுட்டி விகடன்.30 -09- 2013.
-- இதழ் உதவி : இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.

இதையும் தெரிஞ்சுக்குவோமே !

*  பணத்தாசை பிடித்து கருமியாய் வாழ்க்கை நடத்திய புரந்தரதாசரை, இசையும் பக்தியும் கைகோர்த்து நல்வழிப்பாதையில் அழைத்துச் சென்றது.
* ' தர்ப்பசு ரஜ்ஜுமாலாம் ' என்கிறது ஆகம சாஸ்திரம்.  கொடி மரத்தின் அங்கங்களில் முக்கியமானது தர்ப்பைக் கயிறு மாலை.  கோயிகளில் கொடியேற்றம்
   என்பது உயிரானது பாசங்களைக் கடந்து இறைவனைச் சென்று அடைவதைக் குறிப்பதாக சைவ சித்தாந்தம் கூறுகிறது.  கொடிமரத்தின் மேல்பாகம்
   இறைவன் இருக்கும் இடம்.  கொடி உயிர்களைக் குறிக்கிறது.  தர்ப்பை பாச பந்தங்களைக் குறிக்கிறது.
*  எருக்கு, கள்ளி போன்றவற்ரை வீட்டில் வளர்க்கக்கூடாது.  நந்தியாவட்டை, செம்பருத்தி, மல்லிகை போன்றவர்ரை வளர்க்கலாம்.
*  35 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு ஏற்பட்டிருக்கிறது, கடந்த ( 23 11.13.) சனிக்கிழமையன்று லோக் அதாலத் நிகழ்வில்.
*  அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின்
   பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
*  வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில்
   வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே புயலுக்கு பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
-- -  ' தி இந்து ' நாளிதழ்களிலிருந்து.

Monday, January 6, 2014

துறவு என்றால் என்ன?

 கங்கை நதியில் சீடர்களுடன் நீராடிக் கரையேறினார் குரு.  நித்ய கர்மங்கள் செய்யும் முன் நெற்றியில் அணிந்துகொள்ள சந்தனம் தேவைப்பட்டது.  குருஜி தன் சீடர்களைப் பார்த்து, யாராவது ஊருக்குள் போய் எந்த வீட்டிலாவது சிறிது சந்தனம் வாங்கிவாருங்கள் என்றார்.
     அவர் சீடர்களில் ஒருவன், " குருஜி, என்னிடம் சந்தனம் இருக்கிறது " என்றான்.
    " உன்னிடம் சந்தனம் எப்படி வந்தது? " என்று கேட்டார் குருஜி.
    " நான் நேற்று தங்கியிருந்தோமே அந்த வீட்டுக்காரர் கொடுத்தார்.  நெற்றிக்கு இட்டுக்கொண்டு மீதி இருந்ததை நாளைக்குத் தேவைப்படுமே என்று எடுத்துவைத்துக்கொண்டேன்."
      குருஜி புன்னகை புரிந்தார்.
    " நீ எப்போது துறவறத்தை விட்டு குடும்பஸ்தனானாய்?" என்று கேட்டார்.
      சீடனுக்கு அதிர்ச்சி,  குருஜி தொடர்ந்தார்.
    " ஒரு துறவி தனக்கென்று எதுவும் சேமித்துவைத்துக்கொள்ளக் கூடாது.  நாளைக்குத் தேவைப்படுமென்று சேமிதுவைத்துக்கொள்பவர் குடும்பஸ்தர்.  துறவி என்பவன் ஒவ்வொரு நாளும் தனக்குத் தேவையானதை யாசித்துப் பெற வேண்டும்." என்றார் குருஜி.
      சீடர் தலை கவிழ்ந்தார்.
-- குத்தாலம் ஆர். கோபாலகிருஷ்ணன்.  ஆனந்த ஜோதி.
--  ' தி இந்து ' நாளிதழ். வியாழன், டிசம்பர் 5, 2013.    

Sunday, January 5, 2014

டிப்ஸ்...டிப்ஸ்...

*  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் டப்பாவில் ஆப்பிள் போட்டு கொடுதனுப்புகிறீர்களா?  பழத்தை துண்டுகளாக நறுக்கியதும் சர்க்கரை நீரில் முக்கி, தண்ணீரை உதறிவிட்டு டப்பாவில் வைத்தால் சுவை கூடுதலாக இருப்பதோடு, பழங்கள் கறுத்துப் போகாமலும் இருக்கும்.
*  முறுக்கு வகைகளைச் செய்ய ஆரம்பிக்கும்போது, அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் காயவிடுங்கள்.  மாவு பிசைவதற்கும் எண்ணெய் காய்வதற்கும் சரியாக இருக்கும்.  காய்ந்த எண்ணெயில் இருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் ஊற்றி பிசைந்தால்,  முறுக்கு கரகரப்பாக இருப்பதோடு, கருகாமலும் இருக்கும்.
*  பச்சை மிளகாய்களை ஈரமில்லாமல் துடைத்து, ஒரு டப்பாவில் போட்டு, மேலே மஞ்சள் தூளை தூவி காற்று புகாமல் மூடி வையுங்கள்.  ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே பல நாட்கள் வரை பச்சை மிளகாய் ஃபிரெஷ்ஷாகவே இருக்கும்.
--- வாசகிகள் பக்கம்.  அவள் விகடன். 25 - 9 - 2012.                                                    
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால். 

Saturday, January 4, 2014

உதவிக்கு வரலாமா!

வரதட்சணை மற்றும் பாலியல் புகார் !
     பெண்களுக்கு ஏற்படுகின்ற வரதட்சணை கொடுமையில் இருந்து பாலியல் புகார் வரை, எந்தவிதமான பிரச்னைகளாக இருந்தாலும் அவற்றை அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகாராக கொடுக்கலாம்.  இல்லையென்றால், 98409 83832 என்ற எண்ணுக்கு அழைத்தோ அல்லது 95000 99100 இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியோ உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.  இந்த நம்பர்கள் எல்லாம் தமிழக அரசால் கொடுக்கப்பட்டவை.
இலவச முதியோர் இல்லம் !
     குடும்பத்தினரால் கைவிடப்பட்ட குழந்தைகள், முதியவர்களுக்காக, இலவச சேவையை வழங்கி வருகிறது ' ஹெல்பேஜ் இந்தியா ' அமைப்பு.  இதுதவிர சாலையோர முதியோர்கள் பற்றி இந்த இல்லத்துக்கு தெரியப்படுத்தினால் சம்பந்தப்பட்ட முதியோர்களுக்கு உதவிகல் கிடைக்கும்.  தொடர்புக்கு : ஹெல்பேஜ் இந்தியா, கீழ்பாக்கம், சென்னை - 10.  தொலைபேசி 044 - 2532 2149,  1800 - 180 - 1253.
--அவள் விகடன். 25 - 9 - 2012.                                                    
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.  

Friday, January 3, 2014

' பஞ்சேந்திரியம் '

  ' பஞ்சேந்திரியமும் பலத்துத் தெளிவையுரும் '  என்கிறது சித்த மருத்துவம்.  எள்ளின் நெய், ஆமணக்கு நெய், வேம்பு நெய், பசு நெய் இத்தனையும் அந்த நாளில் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்பட்ட எண்ணெய்.
       புனாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், கைக்குழந்தைகளுக்கு தைலம் தேய்த்து மசாஜ் செய்வதால், எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதை உறுதி செய்கிறது என ' Indian Paedatrics ' எனும் மருத்துவ பத்திரிகை தெரிவிக்கிறது.  உடல் எடை, சரும வனப்பு, குழந்தை நன்கு தூங்கி எழும் தன்மை ஆகிய பல நலக்கூறுகளை எண்ணெய் மசாஜ் குளியல் அதிகரிப்பதை சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் உறுதிபடுத்தியுள்ளன.
    ' தினமும் கொஞ்சமே கொஞ்சம் எண்ணெயை தலையில் தேய்த்துக் குளிக்க குளிக்க, தோல் வறட்சி நீங்கும்; உடல் வலி சோம்பல் தீரும்; அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும் சைனஸ் தொல்லை குறைவதோடு, பல் வியாதிகளைக்கூட கட்டுப்படுத்தும் என்கிறது ' பதார்த்த குண சிந்தாமணி ' எனும் மருத்துவ நூல்.
-- ஆறாம் திணை தொடரில்,  மருத்துவர் கு. சிவராமன்.
-- ஆனந்த விகடன். 30 - 10 - 2013.  

Thursday, January 2, 2014

உதவிக்கு வரலாமா!

குழந்தை தத்தெடுத்தல் !
     குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புவர்கள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மையங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளல்லாம். தொடர்புக்கு : இயக்குநர், சமூகநலத்துறை அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.  தொலைபேசி : 044 - 2845 4638.
website : httpp:// www.tn. gov.in/adoption
இலவசக் கல்வி !
     கிராமப்புரங்களில் உள்ள ஏழை மாணவ - மாணவியர்... முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு இலவசமாக கல்வி கிடைப்பதற்கான உதவிகளைச் செய்து வருகிறது சென்னையில் உள்ள ' யுரேகா கல்வி இயக்கம் '. கிராமங்களுக்கே நேரடியாக சென்று, தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு, 12 -ம் வகுப்பு வரை இலவச கல்வி பெறும் வகையில் தேவையான உதவிகளை அளிக்கிறார்கள் இந்த இயக்கத்தினர்.
தொடர்புக்கு யுரேகா கல்வி இயக்கம், ராயப்பேட்டை, சென்னை - 14. தொலைபேசி : 044 - 4263 6125 / 2835 0403.
--  அவள் விகடன். 25 - 9 - 2012.                                                    
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.  

Wednesday, January 1, 2014

' நெட் ' டாக்ஸ்!

*  Priya @ devaseema
   திருமணத்தின்போது மணப்பெண் குடும்பத்தை மட்டுமல்ல ... ஒரு டெடிபியரையும் விட்டு பிரிகிறாள்.
*  Sudha @ Jananis _ Mom
   ட்விட்டர் எந்து ஆசிரியரைவிட உயர்ந்தவன்.  அடிக்கடி ' You will have to be more clever 'னு அட்வைஸ் செஞ்சுட்டே இருக்கு!
*  பிரம்மன் @ altappu
   மனைவியிடம் விவாதம் செய்து ஜெயிப்பதை பற்றி யோசிப்பவன் எவ்வளவு பெரிய கற்பனாசக்தி கொண்டவன் ...?!
*  வந்தியதேவன் @ Kalasal
   ஆண்கலிடம் சுதந்திரம் கேட்டுக் கொண்டிருக்கும் வரை, பெண்கள் அடிமைகளாகத்தான் இருப்பார்கள்...!
--  அவள் விகடன். 25 - 9 - 2012.                                                    
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.