Monday, August 31, 2015

ஆன் லைன் காதல் !

பெண் :  அப்பா நான் லவ் பண்றேன்...
அப்பா : பையன் எந்த ஊரு...?
பெண் :  அமெரிக்காவில இருக்கான்...
அப்பா :  நீ இங்க இருக்கே, அவன் அங்கே. ...எப்படி?
பெண் : ' பேஸ் புக் ' மூலமா நண்பர்கள் ஆனோம்.  ' வெப்சைட் ' மூலமா நானும் அவனும் டெட்டிங் கூட போய் இருக்கோம்.  ' வாட்ஸ் அப் 'ல ரொம்ப நாளா
              சாட் பண்றோம்.  நாங்க லவ்வை ஷேர் பண்ணினது 'ஸ்கைப் 'ல.  அப்புறம் ' வைபர் 'மூலமா கணவன் மனைவியா வாழ்றோம்.  அப்பா, எங்களுக்கு
              உங்க ஆசீர்வாதம் வேண்டும்...
அப்பா :  அப்புறம் என்ன... ' டு விட்டர் ' மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க... ' ஆன் லைன் 'ல ஜாலியா இருங்க... ' இ பே'ல குழந்தைகளை வாங்கிகோங்க
              ... ' ஜிமெயில்'ல அவனுக்கு அனுப்பு... எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை ' ஓஎல்எக்ஸ்' மூலமா வித்துடு.  அவ்வளவுதான்...
பெண் :  !!!!!!
--  சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 15-12-2013. 

Sunday, August 30, 2015

ஆந்தைகள் !

  எல்லா ஆந்தைகளுமே இரவில் நடமாடும் வேட்டையாடிகள்.  மற்ற பறவைகளைப் போலல்லாமல் ஆந்தையின் இரு கண்களும் மனிதர்களின் கண்கலைப்போல முன்புறம் நோக்கி அமைந்திருக்கின்றன.  ஆந்தையால் தன் தலையை முழுவதுமாகப் பின்புறம் திருப்பமுடியும். சக்தி வாய்ந்த செவிகளின் மூலம், ஒலி வரும் தூரத்தை வைத்தே இரை இருக்கும் இடத்தைத் துல்லியமாக கணிக்க இப்பறவையால் முடியும்.  குறைந்த வெளிச்சத்திலும் பார்க்கக்கூடிய பார்வைத் திறன், மெல்லிய இறகுகள் புசுபுசுவென்று நிறைந்திருப்பதால் ஓசையின்றிப் பறக்கக்கூடிய ஆற்றல், கூரிய, வலிமையான நகங்கள், வளைந்த கூர்மையான அலகு ஆகியவற்றைக் கொண்டு ஆந்தைகள் திறமைமிக்க இரைகொல்லிகளாக இயங்குகின்றன.
     நம் நாட்டில் உணவு தானியங்களைச் சேதம் செய்வதில் முதலிடம் வகிக்கும் எலிகளைக் கொன்று இந்த ஆந்தைகள் விவசாயிகளுக்குப் பெரும் உதவி செய்கின்றன. உலகின் பல இடங்களில் தோட்டங்களில் வெண்ணாந்தைகளை ஈர்க்கச் சிறிய மரப்பெட்டிகளை மரத்தில் கட்டி விடுகிறார்கள்.  இனப்பெருக்கக் காலத்தில் ஓர் ஆந்தை ஒரே இரவில் ஐந்தாறு எலிகளைக் கொன்றுவிடும்.
     செல்வத்தின் கடவுளான லட்சுமியின் வாகனம் என்றாலும்கூட , ஆந்தை என்றதுமே அச்சமும் அருவருப்புமே மக்கள் மனதில் உருவாகிறது. நாட்டு மருத்துவதுக்காகவும் ஆந்தைகள் கொல்லப்படுகின்றன.  ஆந்தைக் கூடுகளைக் கண்டுபிடித்து குஞ்சுகளைப் பிரித்துவிடுகிறார்கள்.  அல்லது கீழே தரையில் கிடக்கும் எச்சத்தின் மூலம் ஆந்தை அடிக்கடி வந்தமரும் கிளையை அறிந்து, அதில் ஃபெவிகால் போன்ற பசைகளைத் தடவி இவற்றை எளிதாகப் பிடித்துவிடுகிறார்கள்.  அதிகமாகப் பிடிபடுபவை புள்ளி ஆந்தைகளும் வெண்ணாந்தைகளும்தான்.  ஆனால் அதிக விலைக்குப் போவது உருவில் பெரிய கோட்டான்.  ரூபாய் ஐந்தாயிரம்வரை போகிறது என்கின்றனர் வனத்துறையினர். வீட்டில் குடியிருப்பவரை காலி செய்யக் கால்கள், தேர்தலில் வெற்றி பெறத் தலை, எதிர்காலத்தைக் கணிக்க ஈரல், வேகமாகப் பயணிக்க எலும்புகள் என ஆந்தையின் ஒவ்வொரு உடற்பாகமும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.
-- தியடோர் பாஸ்கரன்.  உயிர் மூச்சு.
--  ' தி இந்து ' நாளிதழ்.செவ்வாய், டிசம்பர் 17, 2013. 

Saturday, August 29, 2015

இணைய வெளியிடையே...


*  விதைத்துக்கொண்டே இருங்கள்...
   முளைத்தால் மரம், மக்கினால் உரம்!
   kirukan @ twitter.com
*  மற்ற பெண்களெல்லாம்
   அழகாய்தான் உடுத்திக் கொள்வார்கள்.
   நீ மட்டும் தானடி
   அழகை உடுத்திக் கொண்டிருக்கிறாய்!
   alexious @ twitter.com
*  உன் கோபத்தை என்னிடம் காட்டிக்கொள்ளாமல்
   இருந்ததுதான் நீ என்னிடம் காண்பித்த அதிகபட்சகோபம்.
   navin @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 15-12-2013.                                                               

Friday, August 28, 2015

நாமும் தெரிஞ்சுக்கலாம் !

*  வெள்ளியை உருக்கி ஊற்றியது போல அழகாக இருக்கும் பாதரசம், பூமியில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் அளவிட முடியாதவை.  வெறும் 0.6 கிராம்
   பாதரசம், சுமார் 20 ஏக்கர் அளவுள்ள ஏரியை மாசுபடுத்தும் தன்மை கொண்டது.  இதனால் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள்
   ஏற்படுகின்றன.
*  மருத்துவ கருவிகளான தெர்மாமீட்ட , ரத்த அழுத்தம் அறியும் கருவிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.  இந்தக் கருவிகள் பழுதடையும்போது கழிவாகத்
   தூக்கி எறியப்படுகின்றன.
*  இன்றைய தேதியில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது அனல் மின்நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படுவதன் மூலம்தான்.  உலகின் மிக
   முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்துக்கு நிலக்கரியை எரிப்பது முக்கியக் காரணம்.
--  ந.வினோத் குமார். சூழல் சீர்கேடு. உயிர் மூச்சு.
--  ' தி இந்து ' நாளிதழ்.செவ்வாய், டிசம்பர் 17, 2013.  

Thursday, August 27, 2015

பாதரசம் !


     கருவில் இருக்கும் குழந்தைகள், மனஅழுத்தம், தற்கொலை எண்ணம், முடக்கு வாதம், சிறுநீரகம் செயலிழப்பு, அல்ஸெய்மர் நோய், பார்வை, பேச்சுத்திறன் பாதிப்பு, ஒவ்வாமை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பாதரச மாசுபாட்டால் ஏற்படும்.  எனவே, பாதரசத்தைக்கொண்ட மருத்துவக் கருவிகளுக்கு மாற்றாக வேறு கருவிகளைப் பயன்படுத்த உலகமெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
     ஜப்பான் நகரமான மினமாட்டாவில் 1956 -ம் ஆண்டு முதன்முதலாகப் பாதரசத்தால் ஏற்படும் நோய் கண்டறியப்பட்டது.  இதனால் பாதரசம் மூலம் உருவாகும் நோய்கள் ' மினமாட்டா நோய் ' எனப்படுகின்றன.
-- ந.வினோத் குமார். சூழல் சீர்கேடு. உயிர் மூச்சு.
--  ' தி இந்து ' நாளிதழ்.செவ்வாய், டிசம்பர் 17, 2013.                            

Wednesday, August 26, 2015

' நெட்'டுக்குத்து.

*  செய்தி :  இடவசதி செய்து தராததால் சட்டமன்றத்துக்கு செல்ல முடியவில்லை.  -- கருணாநிதி.
   குத்து :    முதல்வர் இருக்கைதான் வேணும்னா எப்படி தலைவரே !
*  செய்தி : காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது .  -- ஞானதேசிகன்.
   குத்து :   திரும்புன பக்கமெல்லாம் அடி பலமா உள்ளதுன்னு சொல்லுங்கண்ணா. -- சி.பி.செந்தில்குமார்.
*  செய்தி : மாட்டுத் தீவன ஊழல் வழக்கு; லாலுவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்!
   குத்து :   வீட்டுக்கு வந்து இதுவரை செஞ்ச ஊழலை அசை போட்டுப்பாருங்க. --  சி.பி.செந்தில்குமார்.
--   ' தி இந்து ' நாளிதழ்களிலிருந்து.  

Tuesday, August 25, 2015

டயானா சாவு.

டயானா சாவு.கொலையில்லை : ஸ்காட்லாந்து யார்டு.
     பிரிட்டிஷ் இளவரசி டயானா கொலை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் நிராகரித்துள்ளனர்.
     பாரீசில் 1997-ம் ஆண்டு கார் விபத்துஒன்றில் உயிரிழந்தார்.  ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று குற்றச்சாட்டு எழுந்தது..  இதில் பிரிட்டன் சிறப்பு விமானப் படையினருக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது.  அப்படையில் பணியாற்றிய வீரர் ஒருவரின் மனைவி இதற்கான ஆதாரத்தை ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்தார்.
     அந்த ஆதாரங்களை ஆய்வு செய்த போலீசார், அவை வலுவானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் இல்லை என்று கூறி டயானா கொலை செய்யப்பட்டாரென்ற குற்றச்சாட்டை நிராகரித்தனர்.
     டயானாவுடன் காரில் சென்ற எகிப்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் டோடி அல் பயதும் உயிரிழந்தார்.
     பிரிட்டிஷ் இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோரின் தாயாரான டயானா, இளவரசர் சார்லஸிடம் இருந்து 1996-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
-- பி.டி.ஐ. சர்வதேசம்.
--  ' தி இந்து ' நாளிதழ்.புதன், டிசம்பர் 18, 2013.   

Monday, August 24, 2015

' மறை நீர் '!

   மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம்.  மொத்த உள்னாட்டு உற்பத்தியை ( Gross domestic product ) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிபிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது.  இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன்.  இந்த கண்டுபிடிப்புக்காக 'ஸ்டாக்கோம் வாட்டர் - 2008 ' விருது பெற்றவர்.
     ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர்.  இது ஒரு தத்துவம்.  பொருளாதாரம்.  ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம்.  மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், " கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை.  ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை.  ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது.  இதுவே மறை நீர் கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது " என்கிறார் ஆலன்.
-- டி.எஸ். சஞ்சீவிகுமார்.
-- ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 16, 2013.  

Sunday, August 23, 2015

சிறுநீர் சிகிச்சை அமைப்பு.

 ( சிறப்பு )
   சீனாவில்  இயங்கி  வருகிறது சிறுநீர்  சிகிச்சை  அமைப்பு.  இதில்  1000  உறுப்பினர்கள்  இருக்கிறார்கள்.  தினமும்  அவரவர்  சிறுநீரை  ஒரு  தம்ளரில்  பிடித்து, குடித்து  வருகிறார்கள்.  சீன  சுகாதாரத்துறை  அமைச்சகம்  இதை  அங்கீகரித்திருக்கிறது.  தினமும்  சிறுநீர்  பருகுவதால்  உடல்  ஆரோக்கியம்  அதிகரித்திருக்கிறது,  புற்றுநோய்  கூட  குணமாகிறது  என்கிறார்கள்.  79  வயது  பாவோ  யாஃபு  இந்த  அமைப்பின்  தலைவராக  இருக்கிறார்.  இவரது  தந்தை  நோயால்  துன்புற்று  வந்தார்.  அவர்   சிறுநீர்  குடிக்க  ஆரம்பித்த  பிறகு  நோயிலிருந்து  மீண்டுவிட்டார்.  அதிலிருந்து  பாவோவும்  சிறுநீர்  குடிக்க  ஆரம்பித்துவிட்டார்.  "முதல்முறை   சிறுநீர்  குடிப்பது  கடினமான  செயல்தான்.  ஆனால்  ஒருமுறை  குடித்துவிட்டால்  பழகிவிடும்.  சில  சீன  மருந்துகளை  விட   சிறுநீர்  சுவையானது.  ஆரம்பத்தில்  100  மி.லி.தான்  குடித்தேன்.  இன்று  300  மி.லி.  சாப்பிடுகிறேன்.  குடிக்க  ஆரம்பித்த  ஆறே  மாதங்களில்  என்  வழுக்கைத்  தலையில்  முடிகள்  முளைக்க  ஆரம்பித்துவிட்டன.  கடந்த  22  வருடங்களில்  ஒருமுறை  கூட  ஜலதோஷம்  பிடித்ததில்லை.  என்  பார்வை  சக்தி  அதிகரித்திருக்கிறது"  என்கிறார்  பாவோ.  மருத்துவர்கள்   சிறுநீர்  குடிப்பதை  கடுமையாக  எதிர்க்கிறார்கள்.  உடலுக்குத்  தேவையில்லாத  கழிவுகள்தான்   சிறுநீர்  மூலம்  வெளியேறுகின்றன.  கழிவுகளை  மீண்டும்  குடிப்பதால்  எப்படி  ஆரோக்கியம்  திரும்பும்  என்று  கேட்கிறார்கள்.  ஆனால்  குடிப்பவர்களோ  கை உடைந்தபோது  தொடர்ந்து   சிறுநீர்  ஊற்றி  வந்ததில், எலும்பு  தானாகச்  சேர்ந்துவிட்டது.  தைராய்டு  பிரச்சினை  சரியாகிறது என்று  சொல்லிவருகிறார்கள்.  பாவோ  ஆண்டுக்  கணக்கில் சிறுநீரைச்  சேமித்து  வருகிறார்.  பரிசோதனைகள்  செய்கிறார்.  பழைய சிறுநீருக்குக்  கூடுதல்  சக்தி  இருக்கிறது.  அதன்மூலமே  தினமும்  முகம், கண்கள், காதுகளைச்  சுத்தம்  செய்வதாகக்  கூறுகிறார். சிறுநீர்  குடிப்பதால்  120  ஆண்டுகள்  வாழக்கூடிய  சாத்தியமும்  இருக்கிறது  என்கிறார். - ஐயோ ... என்ன  சொல்றதுன்னே  தெரியலையே...
--உலக  மசாலா.  ( தேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஆகஸ்ட்  22, 2015. 

சூரியனின் பெயர்கள்.

கிரீஸ் ......... .................அப்பல்லோ
எகிப்து ......  .................ரா.
ஜப்பான்....................... அமட்டோசு.
ஆப்பிரிக்கா ................. லிஸா.
கிரீன்லாந்து ................. மலினா.
போலினேசியா ............. மாய்.
அமேசான் நதி .............. குவாட்.
மத்திய அமெரிக்கா ....... ஹிட்ஸிலோபோக்டிலி.
-- ஆதி வள்ளியப்பன்.  பொது அறிவு . வெற்றிக்கொடி.
--  ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 16, 2013.  

Saturday, August 22, 2015

சூரியக் கடிகாரம்.

  18 -ம் நூற்றாண்டில் வான் ஆராய்ச்சித் தகவல்களைச் சேகரிக்க ஜெய்ப்பூரில் பல கட்டடங்கள் அமைக்கப்பட்டன.  அவற்றில் ஒன்றுதான் சாம்ராட் இயந்திரம் எனப்படும் மிகப் பெரிய சூரியக் கடிகாரம்.  புது டில்லியில் " ஜந்தர் மந்தர் " என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள வான் ஆராய்ச்சி மையமும் இப்படிப்பட்ட ஒன்றே.
     பூமிப் பந்து 22 அரை டிகிரி சாய்ந்து இருப்பதால் நிலநடுக்கோடு,  நிலநடுக்கோட்டுக்குத் தெற்கேயுள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் பகல் முழுக்க நல்ல வெளிச்சம் கிடைக்கிறது.  இதன் காரணமாக நம்மைப் போன்றவர்களுக்கு இயல்பாகவே தோல் கறுத்து விடுகிறது அல்லது மாநிறத்தில் உள்ளது. இது பல்வேறு தோல் நோய்களை அண்டவிடாதவாறு செய்கிறது.  அதேநேரம் மேற்கு நாடுகளில் பகலில்கூடச் சூரியன் தோன்றாத ஊர்கள் உண்டு.  அண்டார்டிக்காவில் ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு என்றிருக்கும்.  அதனுடன் ஒப்பிடும்போது பகலில் நமக்குக் கிடைக்கும் சூரிய வெளிச்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  அதன் மூலமே நமது உற்பத்தி நடவடிக்கைகளில் பெறும்பாலானவை நடக்கின்றன.
     இப்படிச் சூரியன் எவ்வளவோ நன்மைகளை நமக்கு வழங்கிவந்தாலும், சக்திமிக்கதாக இருந்தாலும், அதுவும் ஒருநாள் அழியப் போகிறது தெரியுமா?
     சூரியப் பந்துக்குள் உள்ள ஹீலியம் வாயு தொடர்ந்து எரிவதால்தான் இவ்வளவு வெளிச்சமும், வெப்பமும் நமக்குக் கிடைக்கின்றன.  ஹீலியம் வாயு தீர்ந்து போய் சூரியன் அழியலாம் என்கிறார்கள் ஒரு தரப்பு விஞ்ஞானிகள்.  மற்றொரு தரப்பினரோ சூரியன் வெடித்துச் சிதறிப் பூமியைப் பாதிக்கலாம் என்கிறார்கள்.  ஆனால், இது குறித்து இப்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  இதெல்லாம் குறைந்த பட்சம் 50 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடக்க வாய்ப்பு உண்டாம்.
-- ஆதி வள்ளியப்பன்.  பொது அறிவு . வெற்றிக்கொடி.
--  ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 16, 2013. 

Friday, August 21, 2015

எல்.இ.டி. விளக்கு.

எல்.இ.டி. விளக்குகளால் கண் பார்வை பறிபோகும். ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்.
     விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.  இதற்கு மாற்றாக எல்.இ.டி. எனப்படும், ' லைட் எமிட்டிங் டையோடு ' விளக்குகள் அறிமுகம் ஆனது.
     இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5 ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.  இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
     இந்நிலையில், செல்போன்கள், டிவி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்.இ.டி. பயன்பாடு அதிகரித்துவிட்டது.  எல்.இ.டி பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.
     ஆனால், எல்.இ.டி. பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு  ஆராய்ச்சியாளர் தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
     எல்.இ.டி பல்புகள் சுற்றுச் சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல ( வயலட் ) கதிர்கள் வெளியாகின்றன.  இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய்ந்த கதிர்கள்.  இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்து கொண்டிருக்க முடியும்.  இதுபோன்று எல்.இ.டி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும்.
     கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது.  மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்ககூடியது அல்ல.  எல்.இ .டி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம்.
-- தினகரன். 16 மே 2013. 

Thursday, August 20, 2015

சுட்டது நெட்டளவு.

  "புத்தம் புது நவீன கார் விற்பனைக்கு.  விலை ரூ.10,000 " என்ற விளம்பரம் பத்திரிகைகளில் வந்திருந்தது.
     வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட காரை விற்கமாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.
     ஒருவர் மட்டும் " வந்தால் மலை " என்ற முடியோடு அணுகினார்.  விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஓட்டிப் பார்க்கச் சொன்னாள்.  ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.
     வெறும் 500 கி.மீ., மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.  பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம், கார் முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.
    " அம்மணி, இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா...? "
      அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.  அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்.
     " அன்பே என்னை மன்னித்துக் கொள்.  இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு நம் வீட்டை நீ எடுத்துக் கொள்.  நானும் முனியம்மாவும் புது வாழ்க்கையை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் புதுக் காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்றுவிடு.  பணத்தை என் அக்கவுண்டில் போட்டுவிடு."
-- பகிர்ந்து கொண்டவர் : டி.எஸ்.உமாராணி.  ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 16, 2013. 

Wednesday, August 19, 2015

எத்தனை பழங்கள்?

  பழ வியாபாரி ஒருவர் கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை வைத்திருந்தார்.  முதலில் பழம் வாங்க வந்தவர்,  கூடையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களில் சரி பாதியும், அரை அரஞ்சுப் பழத்தையும் வாங்கிச் சென்றார்.
      அடுத்து வந்தவர் மீதியிருந்த பழங்களில் சரி பாதியும், அரைப் பழத்தையும் வாங்கிச் சென்றார்.
      கடைசியாக வந்தவர் கூடையில் மீதியிருந்த ஆரஞ்சுப் பழங்களில் சரி பாதியும், அரைப் பழமும் வாங்கிச்சென்றார்.  கூடை காலியாகிவிட்டது.  பழம் வாங்கியவர்களுக்கு வியாபாரி எந்தப் பழத்தையும் பாதியாக அறுத்துத் தரவில்லை.
     இப்போது சொல்லுங்கள்.  பழ வியாபாரி தன் கூடையில் மொத்தம் எத்தனைப் பழங்கள் வைத்திருந்தார்?
விடை :  7 ஆரஞ்சுப் பழங்கள்.  ஏழில் சரிபாதி மூன்றரை.  அதோடு பாதிப் பழத்தைச் சேர்த்தால் 4 பழங்கள்.  இதை எதற்காக வெட்ட வேண்டும்?
      முதலில் வந்தவர் வாங்கிச் சென்றது 4.  மீதி 3 .  அடுத்து வந்தவர் மூன்றில் சரிபாதியும் ( ஒன்றரை )  பாதிப் பழம் ( அரை ) சேர்த்து 2 பழங்கள்  வாங்கினார்.  இதையும் வெட்ட வேண்டாம் அல்லவா?
      மீதி ஒன்று.  அதில் சரி பாதி அரை,  அதோடு அரை பழம் என்றால் ஒன்று.  மீதி பூஜ்ஜியம்.
-- மாயாபஜார். குழந்தைகளின் குதூகல உலகம்.  சிறப்புப் பகுதி.
--    ' தி இந்து ' . புதன், அக்டோபர் 16,2013.  

Tuesday, August 18, 2015

சில டாக்டர்கள்

சில டாக்டர்கள் ஊசிபோடுவதற்கு முன்னால், ஊசி போடப்போகும் உடல் பகுதியை பஞ்சினால் வேகமாக துடைத்துவிட்டு ஊசி போடுகிறார்களே, என்ன காரணம்?
     அந்த திரவம் ஆல்கஹால்.  அந்த ஆல்கஹாலை ஊசிபோடும் இடத்தில் தடவும்போது,  அங்குள்ள சின்னஞ்சிறிய கிருமிகள் இறந்துவிடுகின்றன.   இப்படிச் செய்யாவிட்டால் ஊசி போதும்போது, அந்த ஊசியின் பக்கவாட்டில் நம் தோலில் உள்ள நுண்ணுயிர்கள் ஒட்டிக்கொண்டு நம் உடலுக்குள் சென்றுவிடலாம்.  இதைத் தவிர்க்கத்தான் டாக்டர்கள் அப்படிச் செய்கிறார்கள்.
--குட்டீஸ் சந்தேக மேடை ?!  -- ஜி.என்.எஸ்.
-- தினமலர். சிறுவர் மலர். அக்டோபர் 18, 2013.   

Monday, August 17, 2015

யாசர் அராபத்

   யாசர் அராபத்துக்கு விஷம்?
     பாரீஸ் :  பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலிவடைந்துள்ளது.
     அராபத்தின் உள்ளாடை, தலைப்பாகை, டூத் பிரஷ், ஆஸ்பத்திரியில் அவர் பயன்படுத்திய துணிகள் உள்ளிட்டவற்றை ஸ்விட்சர்லந்தின் லாவ்சேனில் உள்ள கதிரியக்க இயற்பியல் துறை மற்றும் சட்ட மருத்துவ பல்கலைக்கழக மையத்தில் 8 விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
     அதில்,  போலோனியம் 210 என்ற கதிரியக்கப் பொருள் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.  அவரின் உடலின் எஞ்சிய பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் போலோனியம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.  எனினும்,  அராபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமான இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
      அராபத், 2004-ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிரான்ஸில் உயிரிழந்தார்.  அப்போது அவருக்கு வயது 75.  அப்போது அவர் இறந்ததற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.  அவரின் மனைவியின் வேண்டுகோளை ஏற்று, பிரேதப் பரிசோதனையும் நடத்தப்படவில்லை.
      அவர் விஷம் வைத்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் 2012 ம் ஆண்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.  இதையடுத்து 2012 ம் ஆண்டு நவம்பரில் அராபத்தின் உடல் தோண்டி யெடுக்கப்பட்டு ,  உடைகள், எஞ்சிய உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டன.  அதை பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தனித்தனியே ஆய்வு செய்து வருகின்றனர்.
-- பி.டி.இ.  சர்வதேசம்.
--  ' தி இந்து ' . புதன், அக்டோபர் 16,2013. 

Sunday, August 16, 2015

திக் திக் பயணம் !

 பைக்கில் வேகமாக போய்க்கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன்.  சிக்னல் ஒன்றை கடந்து சென்றபோது, டிராஃபிக் போலீஸ்காரர் நடுரோட்டில் நின்றபடி வண்டியை நிறுத்தச் சொல்லி, சைகை காட்டினார்.
     காலையிலேயே அம்மா சொல்லி அனுப்பியிருந்தாள், ' வேகமா ஓட்டாதேடா...' என்று.
    ' ஹெல்மெட்டை போட்டுட்டுதான் போயேண்டா..'. என்று அப்பா வருத்தப்பட்டதும் நினைவுக்கு வந்தது...
     அவசரமாக வந்ததில் பர்ஸில் பணமும் இல்லை.  பத்து ரூபாய் இருக்கல்ல.  அவ்வளவுதான்...
     இப்படி பல சிந்தனைகள் மின்னலாக வந்து மறைய, போலீஸ் அருகே வண்டியை நிறுத்தினான் ராதாகிருஷ்ணன்.
     போலீஸ்காரர் கேட்டார்.
   " சிக்னல் தாண்டி கொஞ்சம் ட்ராப் பண்ணிடறீங்களா தம்பி ? "
-- சிவகாசி சுரேஷ்.  ரிலாக்ஸ்.
--  ' தி இந்து ' நாளிதழ்.  திங்கள். அக்டோபர் 7, 2013.  

Saturday, August 15, 2015

ஹா...ஹா...

*  "  வேலைக்காரனுக்கு உங்க சட்டையை குடுக்காதீங்கன்னு சொன்னாக் கேக்குறீங்களா? "
   "  என்ன ஆச்சு ?"
   "  இன்னைக்கு நீங்கதான்னு நினைச்சு..."
   "  அய்யய்யோ!  என்ன ஆச்சு ? "
   "  அவனை பூரிக்கட்டையால அடிச்சிட்டேன் ."
*  " மூட்டு வலி அதிகமாயிடுச்சு டாக்டர் !"
   " ஒவ்வொரு கட்சியா தாவிட்டு இருந்தா இப்படித்தான்
*    ஆஸ்பத்திரி பெட்டில் இருக்கும் தலைவரிடம் உதவியாளர் :
   " சாத்துக்குடிக்கு பதிலா அம்பது ரூபா வசூல் பண்ணனும்னு சொன்னீங்களே ... மலர் வளையம் வைக்க வர்றவங்ககிட்ட எவ்வளவு வாங்கணும்
     தலைவரே?"
--  ' தி இந்து '  நாளிதழ் .

Friday, August 14, 2015

விடை தேடும் பயணம்.

*  ஜெயகாந்தன் எழுதிய எந்த நூலுக்காக அவருக்கு ' ஞானபீட விருது ' வழங்கப்பட்டது?
   குறிப்பிடத்தக்க இலக்கிய பங்களிப்பு செய்ததற்காக இது வழங்கப்பட்டது.  எனவே, ஒரு குறிப்பிட்ட நூலுக்காக என்று, இந்த விருது வழங்கப்படவில்லை.
*  தமிழ் இயக்கியங்களில் ஆடகம் என்று குறிப்பிடப்படுவது எது?
   ஆடகம் என்பது பசும்பொன்.  அதாவது 24 காரட் தங்கம் எனலாம். அரண்மனை யானைகளைக் கட்டிவைக்கும் மைதானத்தைத் தமுக்கம் என்பர்.
*  ஜவகர்லால் நேருவின் தாயார் பெயர் என்ன?
   நேருவின் அம்மாவின் பெயர் சொரூபராணி.  மகாத்மா காந்தியின் அம்மா புத்லீபாய்.  நேருவின் மனைவி பெயர் கமலா.
*  சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் சர்க்கரையின் அறிவியல் பெயர் என்ன?
   லாக்டோஸ் என்பது பாலில் காணப்படும் சர்க்கரை வடிவம்.  குளுக்கோஸ் என்பது தாவரங்களில் காணப்படும் சர்க்கரை வடிவம்.  இதை அருந்தினால்
   உடனடியாக ரத்தத்தில் கலந்து ஜீரணமாகிறது என்பதால், உடனடி சக்தி பெற இதைப் பயன்படுத்துகிறார்கள்.  மற்றபடி நாம் சமையல் அறையில்
   பயன்படுத்தும் சின்ன சின்னப் படிகங்களாக அமைந்த சர்க்கரை சுக்ரோஸ்தான்.
*  திரிசடை என்பவள் யார்?
   ராவணனின் தம்பி விபீஷணனுக்கும், ஷரமாவுக்கும் பிறந்தவள் திரிசடை.  அஸோகவனத்தில் சீதைக்கு ஆறுதல் கூறியவள் இவள்.
*  ராஜ்புத், ராணா, ரஞ்சித், ரன்வீர் -- யார் அல்லது என்ன?
   இவையெல்லாமே ராஜபுதன மன்னர் குலப் பெயர்கள்தான்.  வீரத்துக்குப் பெயர் போன இவர்களின் பெயர்கள் இந்திய கடற்படையிலுள்ள போர்க்
   கப்பல்களுக்கு பெயராக வைக்கப்பட்டுள்ளன.
* ' எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் '  -- இது எந்த நூலில் இடம் பெற்றது?
    ' எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் '  என்பது கொன்றைவேந்தன் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
-- ஜி.எஸ்.எஸ். வெற்றிக்கொடி. சிறப்புப்பகுதி.
--  ' தி இந்து '  நாளிதழ் . திங்கள். அக்டோபர் 7, 2013. 

'வாக் கார்'

  ( சிறப்பு )
  பையில்  வைத்து  எடுத்துச்  செல்லும்  அளவுக்கு  ஒரு  காரைக்  கண்டுபிடித்திருக்கிறார்  ஜப்பானைச்  சேர்ந்த  என்சினியர்  குனைகோ  சைட்டோ.  இது  அமர்ந்து  செல்லும்  கார்  அல்ல.  நின்றுகொண்டே  பயணிக்கும்  கார்.  இதற்கு 'வாக்  கார்'  என்று  பெயரிட்டிருக்கிறார்.  லேப்டாப்  அளவுக்கு  இருக்கிறது  இந்த  வாக்  கார்.  ஸ்கேட்  போர்ட்  போலவே  வேலை  செய்கிறது.  ஆனால்  இதன்  மீது  நின்றுகொண்டே  நாம்  எந்த  விசையையும்  செலுத்த  வேண்டியதில்லை.  மிக  வேகமாக  பயணிக்கலாம்.  படிகள்  குறுக்கிட்டால்,  வாக்  கார்  நின்றுவிடும்.  மீண்டும்  சமதளத்தில்  வைத்தால்  வேகமாக  ஓட  ஆரம்பித்துவிடும்.  இறக்கத்தில்  மட்டுமல்ல, செங்குத்தான  இடங்களில்  ஏறிச்செல்லவும்  முடியும்.  எந்தப்  பகுதியில்  திரும்ப  வேண்டுமோ, அந்தப்  பகுதியை  நோக்கி  உடல்  எடையை  அழுத்தினால்  போதும்.  தானாக  சென்றுவிடும்.  கோகோ  மோட்டார்ஸ்  நிறுவனம்  இவருடன்  கைகோர்த்திருக்கிறது.  வாக்  காரை  இன்னும்  எப்படியெல்லாம்  மேம்படுத்த  முடியும்  என்பதை  ஆய்வு  செய்துவருகிறார்கள்.  லித்தியம்  பேட்டரிகளால்  இந்த  வாக்  காருக்கு  வேண்டிய  சக்தி  கிடைக்கிறது.  3  மணி  நேரம்  சார்ஜ்  செய்தால்,  7.4  மைல்  தூரம்  செல்ல  முடியும்.  120  கிலோ  எடையைத்  தாங்கக்  கூடியது.  வாக்  காரில்  நின்றுகொண்டு  எடை  சுமந்த  டிராலிகள், சக்கர  வண்டிகள்  போன்றவற்றை  கைகளால்  பிடித்துக்கொண்டால், எளிதில்  அவற்றையும்  எடுத்துச்  சென்றுவிடலாம்  என்பது  கூடுதல்  சிறப்பு.  இந்த  ஆண்டு  அக்டோபரில்  இருந்து  முன்பதிவு  செய்யலாம். ஒரு  வாக்  காரின்  விலை  சுமார்  50  ஆயிரம்  ரூபாய். - நம்ம  சாலைகளுக்கு  இந்த  காரை  யோசிக்கவே  முடியாது ...
-- உலக  மசாலா.  ( சர்வதேசம் ).
--'தி இந்து'  நாளிதழ்.  வெள்ளி, ஆகஸ்ட்  14, 2015. 

Thursday, August 13, 2015

இதுவும் ஒரு பிழைப்பா?

  சீன அரசு 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது.  எதற்கு என்று கேட்கிறீர்களா?  இணையதளங்களை கண்காணிக்க!  இணையதளங்களில் என்ன தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பதைக் கண்காணிக்க.  இவர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள்.  அதன்படி யார்
யாரைக் கட்டம் கட்டவேண்டுமோ.  கட்டும் அரசு.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்  திங்கள். அக்டோபர்7, 2013. 

Wednesday, August 12, 2015

சுப விசேஷங்கள்!

சுப விஷயங்களை வளர்பிறையில் தொடங்குகிறார்களே!  இது ஆன்மிகமா? அறிவியலா?
     அமாவாசைக்கு மறுநாள் முதல் வளர்பிறை தொடங்கும்.  ஒவ்வொரு நாளும் சந்திர ஒளி சிறிது சிறிதாக அதிகரித்து இரவுப் பொழுது நிலவெளியில் வெண்மையாக இருக்கும் நாட்களே வளர்பிறை நாட்கள்.
     இதனை சுக்ல பட்சம் நாட்களில் சுபகாரியங்கள் தொடங்கினால் நல்லபடியாக முடியும் என்பது ஆன்மிகம்.  வளர்பிறை நாட்களில் நிகழும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியானது மன இறுக்கம் போன்ற நோய்களைக் குறைத்து தெளிவான சிந்தனைகளைத் தூண்டவல்லது என்பது அறிவியல் .
     இன்னொரு விஷயம் பௌர்ணமியின் மறுநாள் முதல் தேய்பிறை துவங்குகிறது.  இந்த நாட்களில் சுபகாரியங்களே செய்யக் கூடாது எனத் தவறாகக் கூறுகிறார்கள். " சப்தமி அந்தம் சுபம் " என்பது ஆகம சாஸ்திரம் வாக்கியம்.  தேய்பிறை ஏழாம் நாள் வரை அதாவது கிருஷ்ண பட்ச சப்தமி வரை முன்னிரவில் நிலவெளி இருக்கும் காலமாதலால் வளர்பிறை போன்றே சுபகாரியங்கள் செய்யலாம் என்பது இதன் பொருள்.
--   அறிவோம்!  தெளிவோம்! .  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். ஏப்ரல் 21, . 2011

Tuesday, August 11, 2015

ப்ரதோஷ வேளை !

ப்ரதோஷ வேளையில் அவதரித்த நரசிம்மரையும் வழிபடுவது விசேஷம் என்று பலர் கூறுகிறார்கள்.  உண்மைதானா?
     பொதுவாக ப்ரதோஷ காலத்தில் பெருமாளுக்கு ஆராதனை கிடையாது.  ' நிருசிம்மம் ராகவம் விநா ' என்பது சாஸ்திரம்.  அதாவது ப்ரதோஷ வேளையில் நரசிம்மரையும், ஸ்ரீராமபிரானையும் தவிர மற்ற கோலங்களில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணுவை வணங்கக் கூடாது என்பது பொருள்.  மற்றபடி வழிபடுவதால் விசேஷம் என்றும் கூறப்படவில்லை.  வைணவ சம்பிரதாயத்தில் வழக்கிலும் இல்லை.
--  அறிவோம்!  தெளிவோம்! .  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். ஏப்ரல் 21, . 2011.

Monday, August 10, 2015

காசிக்கு போவோர்!

காசிக்கு போவோர் தம்பதியராகத்தான் போக வேண்டுமா?
     தம்பதியராகப் போவதுதான் விசேஷம்.  கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு.  ஒன்று மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டும்.  அல்லது மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நீராட வேண்டும்.  இருவரும் இல்லாத பட்சத்தில் பசுமாட்டின் வாலைப்பிடித்துக் கொண்டாவது நீராட வேண்டும்.  இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
-- அறிவோம்!  தெளிவோம்! .  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். ஜூன் 2, . 2011.

Sunday, August 9, 2015

இணைய வெளியிடையே...

*  சின்னதாய்ப் பரிசென்ன வேண்டுமென்றேன்... அடுக்குமாடி வீடு என்றாய்... இது உனக்கே அடுக்குமாடி...?
   arivucs@ twitter.com
*  என் பர்ஸ்ல எவ்வளவு பணமிருக்குதுன்னு துல்லியமா கணிப்பதில் என் மனைவிக்கு இரண்டாமிடம்.  முதலிடம் டிராபிக் போலீசுக்கு...!
   bommaiya @ twitter.com.
*  நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை அவருக்கே விளக்க வேண்டிய நிலை வரவே கூடாது!
   csk @ twitter.com.
*  எனக்குத் தெரிஞ்சு ரொம்ப நளா கவர்ன்மென்ட் ஜாப் தேடிட்டு இருக்கிறதுல முக்கியமான பையன் ராகுல் காந்திதான்!
   minimeens @ twitter.com.
*  மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும் : தா.பாண்டியன்.
   ' பனிமூட்டமா இருக்குதா? பங்குனி வெயிலு பல்ல இளிச்சுகிட்டு இருக்கு...'
    vaalu @ facebook.com.
-- வலைவாசி. சண்டே ஸ்பெஷல் .
-- தினமலர். 6-10-2013.

Saturday, August 8, 2015

செவ்வாய் கிரகம்

 (  சிறப்பு )
செவ்வாய்  கிரகத்தை  இனி  ஆப்  மூலம்  பார்க்கலாம்.
     செவ்வாய்  கிரகத்தை  புதிய  அப்ளிகேஷன்கள்  (  ஆப் )  மூலம்  பார்க்கும்  வசதியையும், செவ்வாய்  கிரகத்தில்  பயணிக்கும்  அனுபவத்தையும்  நாசா  அறிமுகப்படுத்தியுள்ளது.
     அமெரிக்க  வான்வெளி  ஆய்வு  மையமான  நாசா, செவ்வாய்  கிரகத்தை  ஆராய்ச்சி  செய்வதற்காக  விண்வெளிக்கு  அனுப்பப்பட்ட  'கியூரியோசிட்டி  ரோவர்'  விண்கலம்  தனது  3வது  ஆண்டில்  காலடி  எடுத்து  வைத்துள்ளது.  இதைக்  கொண்டாடும்  வகையில்  நாசா  2  புதிய  அப்ளிகேஷன்களை  உருவாக்கியுள்ளது.
     அதன்படி, , 'மார்ஸ்  டிரெக்'  என்ற  இலவச  இணைய  ஆப்  மூலமாக  இனி  செவ்வாய்  கிரகத்தின்  படங்களை  பார்க்க  முடியும்.  மற்றொன்று  'கியூரியோசிட்டி  எக்ஸ்பீரியன்ஸ்'  அப்ளிகேஷன்.  இதன்மூலம்  ரோவர்  விண்கலத்துடன்  செவ்வாய்  கிரகத்தில்  பயணிக்கும்  அனுபவத்தை  நாசா  நமக்கு  வழங்கியுள்ளது.
-- தினமலர். திருச்சி. 8-8-2015.  

இந்திய இசை!

  இந்திய இசை ரசிகர்களுக்கு அது நிச்சயம் அதிர்ச்சியான செய்தி!  13 வயதில் பாடத் துவங்கி 70 வருடங்களாகப் பாடிக்கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கர் இனி பாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.  " இசையுலகில் நிறைய மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.  இது வரவேற்கப்பட்ட ஒன்று என்றாலும், என்னால் அந்த மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொள்ள முடியவில்லை.  அதனால், இனி பாடுவதை நிறுத்திக்கொள்ளப்போகிறேன் " என்று பாலீஷாகக் குட்பை சொல்லியிருக்கிறார் லதா மங்கேஷ்கர் .- மிஸ் யூ மேடம்!
--  இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 24-4-2013   

Friday, August 7, 2015

நிலவின் இருண்ட பக்கம்

  (  சிறப்பு )
   பூமியில்  இருந்து  பார்த்தால்  தெரியாத  நிலவின்  இருண்ட  பக்கத்தை, நாசா  செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது.
   நாசாவின் 'டீப்  ஸ்பேஸ்  க்ளைமேட்  அப்சர்வேட்டரி'  செயற்கைக்கோள், 10  லட்சம்  மைல்  தூரத்தில்  இருந்துகொண்டு, கடந்த  மாதம்  நிலவின்  இருண்ட  பக்கத்தை  புகைப்படம்  எடுத்துள்ளது.
   சூரிய  ஒளி  வீசும்  பூமியின்  பக்கமாக  நிலவு  நகர்ந்தபோது  இப்படிப்  படம்  எடுக்கப்பட்டுள்ளது.
   இந்தச்  சாதனையை  மேற்கொள்ள, அந்த  செயற்கைக்கோளில்  பொருத்தப்பட்டிருக்கும்  'எர்த்  பாலிக்ரோமேடிக்  இமேஜிங்  கேமரா'  முக்கியமான  ஆதரவாக  இருந்தது  என்பது  குறிப்பிடத்தக்கது.
   இந்தச்  செயற்கைக்கோள்  நிலவைச்  சுற்றி  வரும்  போது  ஆண்டுக்கு  இரண்டு  முறை  நிலவு  மற்றும்  பூமி  இரண்டையும்  ஒரே  சமயத்தில்  புகைப்படம்  எடுத்து  அனுப்பிவைக்கும்.
-- பிடிஐ.  ( தேசம் ).
--'தி இந்து'  நாளிதழ்.  வெள்ளி, ஆகஸ்ட்  7, 2015.  

Polyglotism

   Polyglotism என்றால் என்ன?  ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் வல்லமைகொண்ட மனிதனை இப்படி அழைப்பார்கள்.  சரி...ஒரு மனிதனால் அதிகபட்சம் எத்தனை மொழிகள் பேச முடியும்?  ஆறு அல்லது ஏழு?  ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி டோனர் என்ற 17 வயது இளைஞர் இந்தி, ஆங்கிலம், பாரசீகம், ஹீப்ரு, ரஷ்யன், ஸ்பானிஷ் உள்ளிட்ட 23 உலக மொழிகள் பேசி அசத்துகிறார்.  ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட இவர், முதலில் ஹீப்ரு மொழியைக் கற்றிருக்கிறார்.  அந்த மொழி பேசுபவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி, அதில் சரளமாகப் பேசத் துவங்கி இருக்கிறார்.  பிறகு, அதீத ஆர்வத்தில் ஒவ்வொரு மொழியாக 23 மொழிகளைப் பேச, வாசிக்கக் கற்றுக்கொண்டு விட்டார்.  ஒரு மொழியைப் பேச கற்றுக்கொள்ள இரண்டு வாரங்கள்தான் ஆகின்றனவாம்  திமோதிக்கு. இது எப்படிச் சாத்தியம்?  " ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் புரிந்துகொண்டாலே, அதைப் பேசுவதர்கு எளிதாக இருக்கும்.  குறைந்தது ஒரு நாளைக்கு 8 முதல் 10 மொழியைச் சேர்ந்த செய்தித்தாள்களைப் படிப்பதும் உதவுகிறது !" என்கிறார். - மொய் பைன் ( ஸ்பானிஷ் மொழியில் ' வெரி குட்' )!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 24-4-2013   

Thursday, August 6, 2015

சுட்டது நெட்டளவு.

 இறந்த பின் ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு சென்றான்.  சொர்க்கத்தின் வாசலில் ஒரு பெரிய சுவரில் பல கடிகாரங்கள் தொங்கிக்கொண்டிருந்தன .  இது
 எதற்கு என்று அங்கிருந்த காவலாளி ஒருவரிடம் கேட்டான்.
     அதற்கு அந்த காவலாளி இது ஒரு " பொய் கடிகாரம்.  அதாவது பூமியில் நீங்கள் ஒரு பொய் சொன்னால் உங்களூகுரிய கடிகாரத்திலுள்ள முள் ஒரு தடவை நகரும்.  இங்கே பாருங்கள் " என்று ஒரு கடிகாரத்தை காட்டினான்.
    " இது அன்னை தெரசாவிற்குரியது.  இதுவரை இந்த கடிகாரத்தின் முள் நகரவேயில்லை.  அதாவது அன்னை தெரசா இதுவரை போய் எதுவும் சொன்னதில்லை என்று அர்த்தம் " என்று விளக்கமளித்தான்.  இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  மேலும் இன்னுமொரு கடிகாரத்தை காட்டி, இது ஆபிரகாம் லிங்கனுடையது. இந்த கடிகாரத்தின் முள் இதுவரை இருமுறை நகர்ந்துள்ளது.  அதாவது ஆபிரகாம் லிங்கன் தம் வாழ்க்கையில் இருமுறை பொய் சொல்லியுள்ளார்" என்றும் விளக்கமளித்தான்.
     இதைக் கேட்ட அந்த மனிதனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  உடனே அந்த மனிதன், " எங்கள் ஊரிலுள்ள அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே உள்ளன, நான் பார்க்க வேண்டும் " என்று கேட்டான்.
     அதற்கு அந்த காவலாளி, " மன்னிக்கணும்... அந்த கடிகாரங்கள் அனைத்தையும் இங்கே நாங்கள் மின் விசிரியாக உபயோகித்து வருகிறோம் " என்றான்.
-- பி.ஆறுமுகநயினார்.  ரிலாக்ஸ்.
--   ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. 

Wednesday, August 5, 2015

படிப்படியாக..

 அகிலத்தில் உள்ள அனைத்து உயிகளிலும் அம்பிகை இருக்கிறாள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் கொலு. படிகளை எப்படி அமைக்க வேண்டும் என்று தேவி பாகவதம், தேவி மகாத்மியம் நூல்களில் விளக்கப்பட்டுள்ளது.
கொலுப்படிகளை ஒற்றைப்படையில்தான் அமைக்க வேண்டும்.
*  முதல் படியில்,  ஓரறிவு உயிகளான செடி, கொடி, பூங்கா, தோட்டம் போன்றவற்றின் வடிவங்களை வைக்கலாம்.
*  இரண்டாவது படியில்,  ஈறறிவு உயிர்களான அட்டை, நத்தை, சங்கு, ஊறும் பூச்சியின் வடிவங்களை வைக்கலாம்.
*  மூன்றாவது படியில், மூவறிவு உயிர்களின் வடிவங்களை ( கரையான், எறும்பு ) வைக்க வேண்டும்.
*  நான்காம் படியில்,  நான்கறிவு உயிர்கள் ( சிறு வண்டு, பறவைகள் )  வைக்கலாம்.
*  ஐந்தாம் படியில் :  ஐந்தறிவு உயிர்கள் ( பசு, நாய், சிங்கம் போன்றவைகளை ) வைக்கலாம்.
*  ஆறாம் படியில் :  ஆறறிவு உயிர்கள் ( மனித வடிவிலான பொம்மைகள், வாத்தியக்குழு, செட்டியார் பொம்மை, திருமண கோஷ்டி போன்றவைகள் ).
*  ஞானிகளுக்கு ஏழாவது அறிவும் உண்டு என்று சொல்வார்கள்.( மகான்கள், ஞானிகள், தபசிகளின் வடிவங்களை வைக்கலாம் ).
*  எட்டாம் படியில் :  தெய்வ அவதாரங்களை வைக்க வேண்டும்.
*  ஒன்பதாம் படிதான் முக்கியம்.  அதில் பூரண கும்பம் வைத்து நிறைவு செய்யலாம்.
-- பிருந்தா சீனிவாசன்.( ஆனந்த ஜோதி. உள்ளத்தின் உண்மை ஒளி. சிறப்புப் பகுதி. ஆன்மிகம் )
--   ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. .

Tuesday, August 4, 2015

என்னாச்சு ?

என்னாச்சு புத்தாயிரமாண்டு சபதங்கள்?
     இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் சர்வதேச அளவிலான கழிப்பிட வசதி தொடர்பான உச்சி மாநாடு அதிர்ச்சியான தகவலைத் தந்து தொடங்கியிருக்கிற்து.  உலகம் முழுவதும் 205 கோடிப் பேருக்குக் கழிப்பிட வசதி இல்லை.  வயிற்றுப்போக்கு, அம்மை, மலேரியா போன்ற நோய்களால் ஆண்டுதோறும் 10 லட்சம் குழந்தைகள் இறப்பதற்குக் கழிப்பிட வசதியின்மையும் ஒரு காரணம்.
-- எத்திசையும்...  கருத்துப் பேழை.
--  ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. 

Monday, August 3, 2015

மரபணு அறிவியல்.

மரக்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மரபணு அறிவியல்!  ' ஓசை ' கருதரங்கில் தகவல்.
     கடைகளில் வாங்கும் பொருட்களின் பார் கோட் மூலம்,  அவற்றின் அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்வதுபோல யாராவது மரத்தை வெட்டி எடுத்துச் சென்றால் மரத்துண்டு மூலம் மரத்தின் அத்தனைத் தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.
    நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வன வளங்களை நன்றாக அறிந்து வைத்திருந்தனர்.  அதன் பன்முகத்தனமை அவர்களுக்கு பெரும் வியப்பாக இருந்தது.  அதனாலேயே இங்கிருந்து அதிகமான வனம் சார்ந்த பொருட்களை அவர்கள் ஏற்றுமதி செய்தனர்.  ஆனால், நாம் காடுகளை அணுகும் போதும், அதுகுறித்து அறியும் போதும் உணர்வுப்பூர்வமான தேடலையே தேர்வு செய்கிறோம். இது நிச்சயம் பிரச்சினைகளையே வெளிப்படுத்தும்..
    தொழினுட்பம் மூலம் சீனாவில் ஒவ்வொரு மரத்திற்கும் குறியீடு ( பார் கோட் ) வழங்கப்பட்டுள்ளது.  நாம் கடைகளில் வாங்கும் பொருட்களின் பார் கோட் மூலம், அவற்றின் அந்த மரத்துண்டை பரிசோதித்து , அது எந்த வகை மரம், எங்கிருந்து , எப்போது வெட்டப்பட்டது என்பதையும் அறியலாம்.  மரபணு அறிவியல் இதற்கு கைக்கொடுக்கிறது.
-- ஆர்.கிருபாகரன்.
-- - ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013.

Sunday, August 2, 2015

இரண்டும் ஒன்றல்ல.

 ஒரே மாதிரி இருக்கிறவங்களை இரட்டையர்கள்னு சொல்வோம்.  விலங்குகளிலும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டுள்ளவை உண்டு.  ஆனால், அவை இரட்டையர் வகையறா இல்லை.  இரண்டுக்கும் பேர், குணம், வாழிடம், பழக்கவழக்கம்னு நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
சீலும் கடல் சிங்கமும்.
     சீல், கடல் சிங்கம் இரண்டையும் பார்க்கறவங்க, ரெண்டும் ஒரே விலங்குகள்தான்னு நினைக்கலாம்.  ஆனா, உத்துப் பார்த்தா சின்னச்  சின்ன வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கலாம்.
1.  கடல் சிங்கத்துக்குக் காது மடல்கள் உண்டு.  சீலுக்கு காது துளைகள் மட்டுமே உண்டு.
2.  கடல் சிங்கத்துக்கு நீளமான முன் துடுப்புகள் இருக்கும்.  சீலுடைய முன் தடுப்புகள் குட்டையாக, மயிரிழைகளுடன் இருக்கும்.
3.  கடல் சிங்கம் நிலத்துல துடுப்பின் மூலமா நடக்கும்.  சீல் தன்னோட துடுப்பைப் பயன்படுத்தாம உடலைத் தரையில் தேய்த்து நடக்கும்.
4.  கடல் சிங்கம் நீந்தும்போது தன்னோட முன் துடுப்புகளை பறவையோட றெக்கை மாதிரி விரித்து நீந்தும்.  சீல், முன் தடுப்புகளைவிட பின் தடுப்புகளைப்
     பயன்படுத்தி நீந்தும்.
-- பிருந்தா.  மாயாபஜார்.  குழந்தைகளின் குதூகல உலகம்.
-- ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. .

Saturday, August 1, 2015

நட்சத்திரம் நிவேதனம்.

அஸ்வதி  --  முறுக்கு.
பரணி  --  அப்பம்.
கார்த்திகை  --  வடை.
ரோகிணி  --  ஜிலேபி.
மிருகசீரிஷம்  --  அல்வா.
திருவாதிரை  --  பொரி.
புனர்பூசம்  --  பாயசம்.
பூசம்  --  பாயசம்.
ஆயில்யம்  --  லட்டு.
மகம்  --  அதிரசம் .
பூரம்  --  தயிர்க்கட்டி.
உத்திரம்  --  இலை வடகம்.
அஸ்தம்  --  தேங்கூட்டு.
சித்திரை  --  பழரசம்.
சுவாதி  --  தயிரேடு.
விசாகம்  --  வெண்ணை.
அனுஷம்  --  பாஸந்தி.
கேட்டை  --  திரட்டுப்பால்.
மூலம்  --  மிளகு வடை .
பூராடம்  --  பேரீச்சம் பழம்.
உத்திராடம்  --  கொழுக்கடை.
திருவோணம்  --  இட்லி.
அவிட்டம்  --  தோசை.
சதயம்  --  அவியல்.
பூரட்டாதி  --  வறுவல்.
உத்திரட்டாதி  --  அவல்.
ரேவதி  --  கருப்பஞ்சாறு.
--  தினமலர். பக்திமலர். அக்டோபர் 3,2013.