Monday, February 29, 2016

பிரபஞ்ச ரகசியங்கள்

*  சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடம், 20 விநாடிகள் ஆகிறது.
*  சூரியனின் ஒளிக்கு எடை உண்டு.  சதுர மைல் பரப்பில் விழும் சூரிய ஒளியின் எடை மூன்று பவுண்ட்.
*  சூரியனைப் பூமி சுற்றும் வேகம், துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டின் வேகத்தைப் போல் எட்டு மடங்கு.
*  சந்திரன் பூமியை நோக்கி, ஒவ்வொரு ஆண்டும் அரை அங்குலம் நகர்ந்துவருகிறது.
*  செவ்வாய் கோளின் வானம் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது.
*  வியாழன் கோளின் ஒரு சந்திரனின் பெயர், 'அயோ',
*  தொலைநோக்கி வசதியின்றி, வெற்றுக் கண்களால் பார்க்கக்கூடிய கோள், வீனஸ்.  வெள்ளி அல்லது சுக்கிரன் ( விடி வெள்ளி).
*  விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம், லைகா என்கிற நாய்.  அந்நாய், 1957 -ம் ஆண்டு, ரஷ்ய வெண்கலத்தில் பரிசோதனை
   முறையில் வெண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
*  மின்னலின் வேகம் விநாடிக்கு 1,90 லட்சம் மைல்.
*  ஒரு மழை மேகத்தில், சராசரியாக 6 டிரில்லியன் ( லட்சம் கோடி ) நீர்த்துளிகள் இருக்கும்.
-- இரா.நாகராஜன்.   நம்ப முடிகிறதா?
--  நாளைய உலகம்.
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 2, 2014.  

Sunday, February 28, 2016

பேஸ்புக்கின் புதியமொழி

    இதுவரை கிட்டத்தட்ட 70-க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பேஸ்புக், இனி ஒரு புது மொழியில் இயங்கவுள்ளது.  இது என்ன புது மொழி என்கிறீர்களா?  அது மனிதர்களுக்கான மொழியல்ல.  பேஸ்புக்கிற்கான இயக்க மொழி -- புரொகிராமிங் லாங்குவேஜ்.  இதுநாள் வரை PHP மொழியில் இயங்கி வந்த பேஸ்புக் இனி அதற்கு பதில் புதிய மொழி ஒன்றில் இயங்கவுள்ளது.
     ஹேம்கிங்கை தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவன பொறியாளர்கள் உருவாக்கியிருக்கும் அந்த மொழிக்கு 'ஹேக்' என்றே பெயர் சூட்டிவிட்டார்கள்.  ஹேக் மொழி பேஸ்புக் பக்கத்தை வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் பயன்படுத்த கைகொடுக்குமாம்.
--  நாளைய உலகம்.
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 2, 2014.    

Saturday, February 27, 2016

உஷாரான கூகுள்

   இனையத்தில் ஒரு முகவரியை கொடுக்கும்போது அதற்கு முன்பு http அல்லது https என்ற வார்த்தைகள் இருக்கும்.  இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுமென்றால் httpக்கு பதிலாக https ( hyper  text  transfer protocol  secure ) முறையை இயக்கத்ஹில் வைத்திருப்பது நல்லது.
     ஜிமெயில் போன்ற இணையதளங்களில் http முறை பயன்படுத்தினால் ஒருவர் கணக்கை அடுத்தவர் கைப்பற்றுகிற 'ஸ்னூப்பிங்' பிரச்னை எளிதில் நிகழ்ந்துவிடக்கூடும்.  இதை தடுப்பதற்காக கூகுள் தனது ஜிமெயில் இணையதளத்தை https முறையில் இயங்கும்படி மாற்றியுள்ளது.  அதேபோல் பயனருக்கும் கூகுள் செர்வருக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றங்களை மறையாக்க ( encryption ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
-- நாளைய உலகம்.
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 2, 2014.  

Friday, February 26, 2016

'சோலார் இம்பல்ஸ்'

   2015 - ல் இந்தியா வருகிறது 'சோலார் இம்பல்ஸ்'.
     2015 ஏப்ரல் மாதத்துக்காக  இந்திய பசுமை எரிசக்தி ஆர்வலர்கள் மற்றும் விமானத்துறை ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள்.  அன்றுதான் பகலிலும் இரவிலும் பறக்கும் திறனுடைய உலகின் முதல் சூரிய சக்தி விமானம்  'சோலார் இம்பல்ஸ்' இந்தியா வரவிருக்கிறது.  தன் முதுகில் 12 ஆயிரம் சோலார் பேனல்களைச் சுமந்திருக்கும் சோலார் இம்பல்ஸ் முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே இயங்கக்கூடியது.  முந்தைய சோலார் கண்டுபிடிப்புகளால் இரவில் பறப்பது சிரமம்.  அந்த தடையையும் தகர்த்து வெற்றிகரமாக வானில் உலா வரும் திறனை சோலார் இம்பல்ஸ் பெற்றிருக்கிறது.
     சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் தயாரித்த இவ்விமானத்துக்கும் நிறுவனத்தின் பெயரே இடப்பட்டிருக்கிறது.  "வான்வெளிகளில் கையொப்பம்" என்ற பெயரில் 2015 -ம் ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் பறந்து முடிக்கும் திட்டத்தை சோலார் இம்பல்ஸ் நிறுவனம் வகுத்துள்ளது.
     இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 2015 ஏப்ரலில் இந்தியாவுக்கு வரவிருக்கிறது சோலார் இம்பல்ஸ்.  இந்தியாவின் மேர்குக்கடற்கரை வழியாக ஆசியாவுக்குள் நுழையவிருக்கிறது சோலார் இம்பல்ஸ்.  எந்த இந்திய நகரத்தில் முதலில் தரையிறங்குவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.  இந்தியாவில் கூட்டாளிகளைத் தேடிக்கொண்டிருகிறோம்.  இந்தியாவிலிருந்து மியான்மர் செல்லும்முன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை விமானநிலையம் ஒன்றில் தரையிறங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
     புதிய தொழில்நுட்பத்தை உலகம் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பயணம் அமையும்.  விமானத்தின் எடை 2.740 கிலோ.  மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
     13.5 மைக்ரான் தடிமன் ( மனித மயிரிழையின் தடிமன் ) கொண்ட 12 ஆயிரம் சூரியசக்தித் தகடுகள் இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன.  144 பக்கவரிசைகளில் 50 செ.மீ. இடைவெளியில் நேர்த்தியாக இத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.  விமானத்தின் மேல்புறம் சூரியசக்தித் தகடுகளாலும், அடிப்பாகம் மிக இலகுவான செயற்கை இழையாலும் ( அல்ட்ரா லைட் பேப்ரிக் ) வடிவமைக்கப்பட்டுள்ளன.  விமானத்தின் இறகுப் பகுதி முழுக்க கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
    20 முதல் 25 இரவு மற்றும் பகல் என்ற அளவில் மொத்த பயண நால்கள் அமைந்திருக்கும்.  மத்திய கிழக்கு நாடுகளில் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து இப்பயணம் தொடங்கும்.  இவ்விமானத்தின் முதல் பயண நாடு இந்தியாதான்.  இந்தியாவில் இரு நகரங்களில் தரையிறங்கத் திட்டமிடிருக்கிறோம்.  பசிபிக் கடல்பகுதியில் பறக்கும் 5 பகல் 5 இரவுகள் என்பதுதான் இவ்விமானத்தின் நீண்ட பயண நாள்களாக இருக்கும்.
     தொழில்நுட்பத் திறனை அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி இளம் தலைமுறையை ஈர்ப்பதுதான் எங்கள் நோக்கம் என்றார் ஆந்ரே போர்ஸ்ச்பெர்க்.
-- சுஜய் மெதுதியா.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், பிப்ரவரி 19 , 2014.    

Thursday, February 25, 2016

நவீன சென்சார் கருவி

செல்போன் மூலம் உளவு பார்ப்பதை தடுக்கும் நவீன சென்சார் கருவி.
விலை ரூ.30 ஆயிரம் வரை.
     ரகசிய பேச்சுவார்த்தைகள், உரையாடல்கள் ஆகியவற்றை திருட்டுத்தனமாக செல்போன் மூலம் பதிவு செய்யும் மோசடிக்கு முடிவு கட்டும் வகையிலான அதிநவீன சென்சார் கருவி புழக்கத்துக்கு வந்துள்ளது.
     மனிதர்களின் ஆறாம்விரல் என்று சொல்லும் அளவுக்கு செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது.  ஆரம்பத்தில் பேச மட்டுமே பயன்பட்ட செல்போன்கள், இப்போது காட்சிகளை துல்லியமாக படம்பிடிக்க, பாடல் கேட்க, இணையத்தைப் பயன்படுத்த என்று பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.  குறிப்பாக, குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் செல்போன்களின் பங்கு மிக முக்கியமானதாக மாறிவருகிறது.
     சமீபத்தில் நடந்த பல்வேறு குற்றங்களுக்கு டிஜிட்டல் ஏவிடன்ஸாக இருந்த செல்போன்கள், குற்றவாளிகளைப் பிடிக்க பெரிதும் உதவின.  இது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு பக்கம் சென்போன்களால் சிறுசிறு பிரச்சினைகளும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.  செல்போன்களைப் பயன்படுத்தி உளவு பார்ப்பது என்பது இதில் முக்கியமான விஷயம்.  நான்கு சுவருக்குள் ரகசியமாக நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தைகள், உரையாடல்களை வெளியில் கசியவிடுவதற்கு உளவாளிகள் செல்போன்களையே முக்கிய சாதனமாகப் பயன்படுத்துகின்றனர்.  இது பாதுகாப்புத் துறை, காவல்துறைக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது.  செல்போன் உதவியோடு வேறொருவர் சொல்லச் சொல்ல கேட்டு தேர்வு எழுதும் குற்றங்களும் அவ்வப்போது நடக்கின்றன.
     கையடக்கமான இந்த சென்சார் கருவியின் பெயர்'செல்லுலர் போன் காலிங் டிடெக்டர்.' இதன் எடை வெறும் 110 கிராம்.  குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் சென்போனுக்கு ஏதேனும் அழைப்புகள் வருகிறதா என்பதை இக்கருவியின் உதவியுடன் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
    குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் செல்போனுக்கு அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வரும்போது அந்த சிக்னலை உணர்ந்துகொள்ளும் டிடெக்டர் கருவியில் சென்சார் உடனே அதிர்வலைகள் மூலம் டிரான்சிஸ்டருக்கு தெரியப் படுத்தும்.
     அந்த நொடியில் கருவியின் மேல் உள்ள எல்.இ.டி விளக்கு எரியும்.  உளவு பார்ப்பவர்களின் செல்போன் சைலன்ட் மோட் அல்லது வைப்ரேஷனில் இருந்தால்கூட , அதையும் இந்த கருவி கண்டுபிடித்துவிடும்.
     ஏற்கனவே செல்போனை ஆன் செய்துகொண்டு யாராவது மறைத்து எடுத்து வந்தால், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அவர்கள் நுழைந்ததுமே சென்சார் கருவி காட்டிக் கொடுத்துவிடும்.  தேர்வு அறைகள், முக்கியமான அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த கருவியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றங்களை முங்கூட்டியே தவிர்த்துவிடலாம்.
-- மா.மணிகண்டன்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், பிப்ரவரி 19, 2014. 

Wednesday, February 24, 2016

மென்பானம்

  மென்பானம் ( soft drink ) என்பது அதிக அளவில் 'ஃபிரக்டோஸ்' எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம்.  இதில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லை.  இதிக் குடிப்பதால் சக்தியும் கிடைப்பதில்லை.  இது ஆரோக்கியமும் அளிப்பதில்லை.
     மென்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காஃபீன் எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறார்கள்.  இனிப்பை நிலைப்படுத்துவதற்காகச் சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள்.  வண்ணமூட்டுவதற்காக கேராமல் மற்றும் பீட்டா சுரோட்டீனை பயன்படுத்துகிறார்கள்.  தவிர மென்பானங்களில் செயற்கைச் சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தப் பயன்படும் பொருள்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன.  இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தருகிறது.
-- டாக்டர் கு. கணேசன்.   நலம் வாழ.
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய், ஏப்ரல் 1, 2014. 

Tuesday, February 23, 2016

அவர் நிம்மதியாக உறங்கட்டும்!

ஆக்னஸ்  கோன்ஜா  போஜாஜியூ   என்றால்  யாருக்கும்  தெரியாது.  அன்னை  தெரசா  என்றால்  தெரியாதவர்  யாரும்  இருக்க  மாட்டார்கள்.  தெரசாவின்  இயற்பெயர்தான்  அது.  அல்போனியாவில்  பிறந்து,  இந்திய  குடியுரிமை  பெற்று,  கல்கத்தாவில்  ஆசிரமம்  அமைத்து  ஆதரவற்ற  ஏழைகளுக்கு  சேவை  செய்து  பெரும்  புகழ்  பெற்று  மறைந்தவர்.
     அல்போனிய  மொழியில்  கோன்ஜா  என்றால்  'ரோஜா  அரும்பு'  என்று  அர்த்தம்.  பெயரிலேயே  ரோஜா  இருந்ததாலோ  என்னவோ  அவரது  உள்ளத்தில்  சுரந்த  அன்புக்கும்  குறைவேயில்லை.  1910  ஆகஸ்ட்  26ல்  அவர்  பிறந்தாலும்,  அவர்  ஞானஸ்நானம்  பெற்ற  ஆகஸ்ட்  27ம்  தேதியையே  பிறந்த  நாளாக  கொண்டாடினார்.  அந்த  அளவுக்கு  கிறிஸ்தவம்  மீது  பற்று  கொண்டவர்.   

Monday, February 22, 2016

உடல் என்ற அற்புதம்

*  தலையில் சராசரியாக 1 லட்சம் முடிகள் இருக்கும்.
*  கண்ணிமைகள் ஒரு நாளைக்கு 20,000 முறை இமைக்கின்றன.
*  இதயம் ஒரு நாளைக்கு 1 லட்சம் முறை துடிக்கிறது.
*  நாம் சாப்பிட்ட உணவு மொத்தமாக செரிமானம் அடைய 12 மணி நேரம் ஆகும்.
*  நம் உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கிறது.
*  உடலில் 230 மூட்டு இணைப்புகள் இருக்கின்றன.
*  தும்மும்போது நமது மூக்கில் இருந்து 160 கி.மீ. வேகத்தில் காற்றை வெளியேற்றுகிறோம்.
*  உடலில் உள்ள மிகவும் வலுவான தசை மாசெட்டர் தசை.  இது தாடையில் இருக்கிறது.
*  வளர்ந்த ஒருவரது நுரையீரலில் 30 கோடி காற்றுப் பைகள் இருக்கின்றன.
*  உடலில் 70 சதவீதம் தண்ணீர் இருக்கிறது.
*  நமது நரம்புகள் அனைத்தையும் இணைத்தால் கிட்டத்தட்ட 10,000 கி.மீ.இருக்கும்.
-- நம்ப முடிகிறதா?  மாயாபஜார்.
-- - 'தி இந்து' நாளிதழ்.,   புதன், பிப்ரவரி 19, 2014.  

Sunday, February 21, 2016

தாய்மொழி வெறி வேண்டாம்.

   சிலேடையை மொழி பெயர்க்க முடியாது.  அதுதான் அதன் சிறப்பும் அதில் உள்ள குறையும்.  ஹிந்தியில் கயா என்ற சொல்லுக்கு 3 பொருள் உண்டு.  அதனை தமிழில் எப்படி மொழி பெயர்க்க இயலும்.  ஹிந்தி ஒழிக என்பது தவறு.  ஹிந்தி ஆதிக்கம் ஒழிக என்பது தான் சரி.  இத்தகைய போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும்.  மொழி வெறுப்புக்கூடாது.  தாய்மொழி வெறி வேண்டாம் பற்று இருந்தால் போதும்.
     பிள்ளைபெருமாள் ஐயங்கார் திருவேங்கடம்  அந்தாதி என்ற நூல் எழுதினார்.  அனைவரும் சிலேடைக்கு இரு பொருள் கொண்ட நிலையில், அவர் நான்கு பொருள் அளித்தார்.  சிலேடையில் கி.வா.ஜ சிறந்து விளங்கினார்.  சாவி, சோ, உள்ளிட்ட பலர் கேள்வி பதில்கள் மூலமும் சிலேடையை வளர்த்தனர்.  சொல்லிப் புரியவைப்பது ஒரு வகை, சொல்லாமலே புரியவைப்பது மற்றொரு வகை.
-- ஊர்வலம் .
--  'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஜனவரி 20, 2014.       

யுவான் சுவாங்.

   உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானித்திருக்கிறார்கள்.  அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன.  ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமனவர்தான் சீனப் பயணி யுவான் சுவாங்.
     நாட்டைவிட்டு இன்னொரு தேசத்துக்குச் செல்வது தேசக் குற்றம் என்று சீனாவில் கருதப்பட்ட காலம்.  அதையும் மீறி யுவான் சுவாங் இந்தியாவை நோக்கிப் பயணிக்கக் காரணம், தான் ஏற்றுக்கொண்ட புத்த மதம் தோன்றிய பூமியைப் பார்க்கும் ஆவல்.  புத்தர் ஞானம் அடைந்த புத்தகயாவைத் தரிசிக்கவும், போதி மரத்தின் நிழலில்தன் ஆன்மாவை இளைப்பாற்றவும், புத்தர் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதியில் நீராடவும், புத்த ஞானத்தைக் கற்பதும்தான்.  ஆனால், அதற்காக அவர் அடைந்த இன்னல்களும் சங்கடங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல.  கிட்டத்தட்ட 17 ஆண்டு கால அவரது பயணத்தில் குறுக்கே நின்றவை கொடும்பாலை, கடுங்குளிர், வெப்பக்காற்று, ஆழம் நிறைந்த ஆறுகள், வழிப்பறிகள், வானுயர்ந்த மலைகள், அரசர்களின் சுயநலம்... ஆகியவை.
     தன் 17 வருட ஆன்மிகப் பயணத்தில் இந்தியாவில் இருந்து யுவான் சுவாங் எடுத்துச் சென்றவை, 22 குதிரைகளில் 627 சமஸ்கிருத நூல்களும், 115 புனிதப் பொருட்களும், புத்தரின் பொற்சிலை ஒன்றும்தான்.  கடும்கட்டுப்பாட்டை மீறி சீனத் தேசத்தை விட்டு வெளியேறி வந்த யுவான் சுவாங், கி.பி.645-ம் ஆண்டு மீண்டும் சீனா வந்தபோது கோலாகலமாக வரவேற்கப்பட்டதும், சீன தேசத்தின் மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தபோது தான் வரித்துக்கொண்ட கொள்கைக்காக அதனை ஏற்க மறுத்ததும், இந்தியாவிலிருந்து கொண்டுவந்த சமஸ்கிருத நூல்களை சீனத்தில் மொழிபெயர்க்க ஆட்களை மட்டும் பெற்றுக்கொண்டு, அந்தப் பணியில் மட்டுமே தன்னை அர்ப்பணித்து 65-வது வயதில் இறப்பதுவும், யுவான் சுவாங்கின் வாழ்வு ஒரு கனவுபோல வாசகன் முன் விரிகிறது.
-- 'போதியின் நிழல்'  நூலில், அசோகன் நாகமுத்து.
-- ஆனந்த விகடன். 16-10-2013.  

Saturday, February 20, 2016

சிம்பன்ஸி வழிகாட்டும்!

வனத்தில் வழிதவறினால் சிம்பன்ஸி வழிகாட்டும்!
* நியூயார்க் *
     அடர்ந்த காட்டுக்குள் வழிதவறிவிட்டால், வழியைக் கண்டுபிடிக்க சிம்பன்ஸியிடம் உதவி கோரலாம்.  சிம்பன்ஸிகள் எளிதில் வழியைக் கண்டுபிடிப்பதுடன், உணவு இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துக் கொடுக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
     சிம்பன்ஸிகள் சைகை மூலம் வழியைக் காட்டிக் கொடுக்கின்றன என்பது தெரியவந்தது.  இதனை பரிசோதித்துப் பார்க்க, பரந்த வனப்பரப்பில் ஓரிடத்தில் உணவு மறைத்து வைக்கப்பட்டது.  காட்டுக்குள் விடப்பட்ட மனிதர் தானாக முயன்று அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை.  ஆனால், சிம்பன்ஸிகள் இருந்த இடத்தில் இருந்த மனிதரவற்றின் உதவியை சைகை மூலம் கோரவே, அவை உணவு இருந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்துக் கொடுத்தன.  இந்த ஆய்வு முடிவு மொழிகள் எப்படி உருப்பெற்றன என்பதற்கான ஆய்வில் மிகவும் உதவிகரமாகைருக்கும்.
     இதற்கு முந்தைய ஆய்வுகள் சிம்பன்ஸிகளின் சைகை மொழியில் நெகிழ்வுத் தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டின.  தர்போது, மிகவும் சிக்கலான சூழலில் அவற்றின் அறிவுத்திறனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரியவந்துள்ளது.
--- ஐ.ஏ.என்.எஸ்.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஜனவரி 20, 2014.   

Friday, February 19, 2016

மீட்டர் பேசுது.

*  நீண்ட காலத்துக்கு நிலவும் தட்பவெப்பத்தின் சராசரி அளவே ஒரு பகுதி அல்லது ஒரு நாட்டின் வானிலை ஆகும்.
   ஒரு பகுதியில் மழை பெய்யும் காலத்தை விட வெயில் காயும் காலம் அதிகமாக இருந்தால் அது வறண்ட வானிலை எனவும்,
   வெயிலை விட பனி அதிகமாக இருந்தால் அதை குளிர்ந்த வானிலை எனவும் கூறுகிறோம்.
*  அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1200 சுழற்காற்றுகள் வீசுகின்றன.  இது மற்ற நாடுகளை விட மிக
    அதிகமாகும்

பொது அறிவு.
*  முதுகுத் தண்டுவடம் மிகவும் முக்கியமானது.  நமது உடம்பில் உள்ள நரம்புகள் அனைத்தும் அதன் வழியாகவே முளையை
    அடைகின்றன. 

Thursday, February 18, 2016

இணைய வெளியிடையே...

* -- ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்தோம்.  இப்போது செல்போன் கொடுத்து கெடுக்கிறோம்.
      vanitaj@twitter.com
*  --வெண்பொங்கல்ல போடுற மிளகு எல்லாம் நமக்கே வரும்.  ஆனால், சர்க்கரை பொங்கல்ல போடுற முந்திரி திராட்சை ஒன்னு
      கூட நமக்கு வராது.  இதுதான் வாழ்க்கை...
      seeni@ twitter.com
*  --ஒரே சிலந்தியைப் போல இன்னொரு சிலந்தி வலை பின்னாது!
   -- பறப்பியல் விதிகளின்படி தேனீக்களால் பறக்கவே முடியாது!  அதன் உடல் அவ்வளவு குண்டு, இறக்கையோ ரொம்ப
      சின்னது.  ஆனாலும் தேனீக்கள் பறப்பது ஆச்சரியம்தான்!
   -- முத்தத்தைப் பற்றிப் படிக்கும் பிரத்யேக துறைக்கு பெயர் பிலிமடோலஜி!
* -- தாய்லாந்து ராமாயணம் என்றழைக்கப்படும் ராமாகெய்ன், தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியமாகும்!  இது வால்மீகியின்
      ராமாயணத்தை மூலமாகக் கொண்டது!
      tamilfacts@twitter.com
--சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர்.  30-3-2014. 

Wednesday, February 17, 2016

எரிபொருள்

சர்க்கரையிலிருந்து எரிபொருள் தயாரிக்க திட்டம்.
  *லண்டன்*
     பிளாஸ்டிக், காஸோலின், ரப்பர் என்று எதையெடுத்தாலும் திரவ எண்ணெயிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இப்போது இந்த எண்ணெய்க்கு தட்டுப்பாடு வரத் தொடங்கியிருக்கிறது.  எனவே ரசாயனத் தொழிலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஐசோபியூடேன் என்ற அடிப்படை வேதியியல் பொருளைத் தயாரிக்க சர்க்கரையைப் பயன்படுத்த அறிவியல் அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
     எரிபொருள்கள், கரைப்பான்கள் போன்ற பல பொருள்களைத் தயாரிக்க ஐசோபியூடேன்களைத்தான் பயன்படுத்துகின்றனர்.  எண்ணெய்க்குப் பதிலாக சர்க்கரையைப் பயன்படுத்துவதில் உள்ள வசதி, இதை எவ்வளவு வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம் என்பதுதான்.  சர்க்கரை என்றால் கரும்புச் சாறிலிருந்து எடுக்கப்படுவது மட்டுமல்ல, சாதாரண மரங்களிலிருந்தும், வைக்கோலிலிருந்தும்கூட எடுக்கப்படுவது.
     சர்க்கரையிலிருந்து எரிபொருள் தயாரிக்கப்படுவதால் மக்களுக்கு சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக வைக்கோல், மரம் போன்றவற்றிலிருந்தும் சர்க்கரையைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
-- ஐ.ஏ.என்.எஸ்.  தேசம்.
--  'தி இந்து' நாளிதழ். வியாழன்,மார்ச் 27 ,2014.  

Tuesday, February 16, 2016

ஸ்ரீரங்கம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்.
     சயன கோலத்தில் மூலவரான பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார்.  மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது.  பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான்.  முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11-வது தலமான திருச்சிறுபுலியூருமே அந்த திருத்தலங்கள்.  21 அடி நீளத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார்.  கருவறைக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் கருவறை மேல் தங்க விமானம் ஜொலிக்கிறது.
-- தரிசனம்.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன்,மார்ச் 27 ,2014.    

Monday, February 15, 2016

ஏடிஎம் கார்டு

இனி ஏடிஎம் கார்டு தேவயில்லை:  ஐஎம்டி மூலம் பணம் அனுப்பலாம்
     பொதுத்துறை வங்கிகளில் முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய சேவையில் பணம் அனுப்புபவர், ஒரு வங்கிக் கிளையில் இருந்து பெறுபவரின் மொபைல் எண், 4 இலக்க ரகசிய குறியீட்டு எண், தொகை மற்றும் ஏடிஎம் அல்லது இன்டர்நெட் வங்கிச் சேவை மூலமாகப் பணம் வழங்கப்பட வேண்டுமா என்பது உள்ளிட்ட தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.  மேலும் எஸ்எம்எஸ் அல்லது இன்டர்நெட் வங்கிச் சேவை மூலம் பெறுபவரின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்ணை வங்கியில் சமர்பிக்கவேண்டும்.  அதைத் தொடர்ந்து பணம் பெறுபவருக்கு ஒரு தனி குறியீட்டு எண்  எஸ்எம்எஸ் மூலமாக வந்து சேரும்.  அத்துடன் பணம் அனுப்புவரிடமிருந்து, அவர் பதிவு செய்த ரகசிய 4 இலக்க எண்ணையும் பெற்றுக்கொண்டு, அருகிலுள்ள ஐஎம்டி வசதிகொண்ட பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மில் மொபைல் எண், எஸ் எம் எஸ் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
     ஐஎம்டி சேவை மூலம் அனைத்து வங்கிக் கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பண பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.  இந்த வசதியைப் பெற தனியாக ஏடிஎம் கார்டு பயன்படுத்த தேவையில்லை.  நெறிமுறைகளின் படி ஒவ்வொரு மாதமும், ஐஎம்டி சேவை மூலம் ரூ.25 ஆயிரம் வரையும், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வரையும் பணம் அனுப்ப முடியும்.  இவ்வாறு பணம் அனுப்பியபின், 14 நாட்கள் வரை பெறுபவர் பணம் பெற்றுக்கொள்ளலாம்.  14 நாட்களில் இந்த பணத்தை எடுக்கவில்லையெனில், அந்த தொகை அனுப்பியவரின் வங்கிக்கணக்கில் மீண்டும் சேர்க்கப்படும்.  இவ்வாறு அனுப்பிய தொகையை வாடிக்கையாளர் விரும்பினால் திரும்பவும் பெற முடியும்.  ஒவ்வொரு முறையும் இவ்வாறு பணம் அனுப்ப ரூ.25 வசூலிக்கப்படுகிறது.
-- தினமலர்.  27- 3- 2014.      

Sunday, February 14, 2016

புதன் சுருங்குகிறது.

    சூரியனைச் சுற்றி வரும் ஒன்பது கிரகங்களில் மிகச் சிறியது புதன்.  ஏற்கனவே சிறியதான புதன் கிரகம், மேலும் சுருங்கி வருவதாகச் சொல்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.  அதாவது 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவுக்கு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.  புதன் கிரகம் முழுவதும் பாறைகளால் ஆனது.  அதில் 3 மாதம் பகலும் 3 மாதம் இரவும் இருக்கும்.  புதன் கிரகத்தின் வெயில் பூமியைவிடப் பல மடங்கு அதிகம்.  400 டிகிரி செல்சியஸ்.  அதுபோல இரவில் குளிரும் மிக அதிகம்.  மைனஸ் 173 டிகிரி.  அதன் இந்த இயல்பால் அங்கு உயிரினம் வாழக்கூடிய சூழ்நிலை இல்லை.
-- ஆர்.ஜெயகுமார்.  விந்தை உலகம்.  வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி,மார்ச் 29,2014.     

Saturday, February 13, 2016

அக்கினி சொரூபமே கோபுரம்!

கோயில்களின் நுழைவு வாயிலில் இருக்கும் உயர்ந்த கட்டடப் பகுதியைக் கோபுரம் என்று சொல்ல வேண்டும்.  கர்ப்பகிரகம் எனப்படும் கருவறையின் மேற்புறம் உள்ள உயர்ந்த கட்டடப் பகுதியை ஸ்ரீவிமானம் என்று சொல்லவேண்டும்.
     கோபுரம் அல்லது ஸ்ரீவிமானத்தில் இருக்கும் கலசத்தை சிகை ( தலைமுடி ) என்பார்கள்.  இவ்விரண்டும் அக்கினி சொரூபமாக, சிவாம்சமாக சொல்லப்படும்.  கருவறையில் உள்ள தெய்வத்தின் உடலாக - ஸ்தூலலிங்கமாக கோபுரத்தைச் சொல்வார்கள்.  யாக குண்டத்தில் நான்கு பக்கமும் இருக்கும் கல்லுக்கு 'வேசரம்' என்று பெயர்.
     கோபுரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் கட்டடப்பகுதிக்கும் 'வேசரம்' என்றே பெயர்.  யாகக் குண்டத்தின் நடுவில் யாகாக்னி வளர்கிறது.  அதுபோலவே வேசரம் என்ற கட்டடப் பகுதியின் நடுவில் கோபுரம் அமைகிறது.
     இறைவன் 'தழல்' உருவம் உள்ளவன்.  எனவே இறைவனின் வடிவமான கோபுரமும் 'தீச்சுடர்' என்றே சொல்வார்கள்.
     கோபுரத்தில் அதன் அளவுக்கேற்ப 3,5,7,9 கலசங்கள் இருக்கும்.  இந்த கலசங்களை ஞானச்சுடர் என்று சிற்ப சாஸ்திரங்கள் சொல்கின்றன.  இறைவனின் ஸ்தூலக உருவமான கோபுர தரிசனம் கோடி நன்மைகள் கொடுப்பதாகும்.
-- - தினமலர்.இணைப்பு . பக்திமலர். மார்ச் 27, 2014   

Friday, February 12, 2016

காலக் கணக்கு

   நிமிடம், முகூர்த்தம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு பழங்காலத்தில் நாளை கணக்கிட்டார்கள்.  அந்தக் காலக்கணக்கு விவரம்...
10 நிமிடம்    --    1 காஷ்டை,
30 காஷ்டை    --    1 கலை,
30 கலை    --    1 முகூர்த்தம்,
30 முகூர்த்தம்    --    1 நாள்,
15 நாள்    --    1 பட்சம்,
2 பட்சம்     --     1 மாதம்,
6 மாதம்    --    1 அயனம்,
2 அயனம்    --    1 வருடம்.
-- தினமலர்.இணைப்பு . பக்திமலர். மார்ச் 27, 2014    

Thursday, February 11, 2016

தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி!

   சான்சன் & சான்சன் ( Johnsaon & Johnsan ) நிறுவனத்தின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.  ஆனால், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு ஒவ்வாமை, இளைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தைக் கூட உண்டாக்கக் கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.
     கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த நிறுவனம் சிறிய கண்ணுக்குத் தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் அச்சிட்டுள்ளது.  இதைக் குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள்.  இதைக் குழந்தைகள் தெரியாமல் குடித்துவிட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாகும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
     குழந்தைகளுக்கான தயாரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளைத் தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
     இந்த நிறுவனத்தின் தயாரிப்ப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கப்படாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.  இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்களைப் புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.
     இதில் வேடிக்கை என்னவென்றால், இதன் தயாரிப்புகளைஉபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் ஒவ்வாமை மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துகளையும் தயாரித்து விற்கிறது.
     எப்படிக் கணினிகளை தயாரித்து விற்றுவிட்டு, அந்தக் கணினியை செயலிழக்கச் செய்யும் கிருமிகளை பரப்புவதும், அதை சரி செய்யேன்று எதிர்ப்புக் கிருமியை வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வது போன்ற அதே பன்னாட்டுக் கொள்ளைதான் மனித உயிகளிலும் விளையாடுகிறது.  அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்.
     பெற்றோர்களே!  எச்சரிக்கையாய் இருங்கள்.  இந்த நாசகார சான்சன் & சான்சன் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்!  நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!
( பின் குறிப்பு ) : ஜான்சன் & ஜான்சன் கம்பெனி லைசென்ஸ் ரத்து . செய்யப்பட்டது.
-- மருத்துவர் சாமிதுரை.
-- மூத்தகுடி  அரசியல்  மாத இதழ் . திசம்பர் 2013.
-- இதழ் உதவி : கனக.கண்ணன்.  செல்லூர்.  

Wednesday, February 10, 2016

வயதானால் தோலில் சுருக்கங்கள் தோன்றுவது ஏன்?

 நம் தோலில் முக்கியமாக இரண்டு படிமங்கள் உள்ளன.  மேற்புறம் இருப்பது எபிடெர்மிஸ், அதற்குக் கீழே இருப்பது டெர்மிஸ்.
     டெர்மிஸ் பகுதியில் கட்டமைப்புள்ள புரதங்கள் உள்ளன.  இவைதான் தோலுக்குத் தேவைப்படும் உறுதியையும், மீள்சக்தியையும் ( Elasticity ) அளிக்கின்றன.  இவை பெரும்பாலும் கொலாஜென் என்ற நார் இழைகளால் அமையப்படவை.  கூடவே எலாஸ்டின் என்ற பொருள் இதில் உள்ளது.  வயதாகி முதிய கட்டத்தை எட்டும்போது, கொலாஜென் குறைகிறது.  இதன் காரணமாக கொலாஜென், நார் இழைகள் தளர்வடைகின்றன.  சில இடங்களில் கடினமடைகின்றன.  இதன் காரணமாகத்தான் மூப்பின்போது சில இடங்களில் தோல் தொளதொள என்றும், சில இடங்களில் சுருக்கங்களோடும் காட்சியளிக்கின்றன.
-- குட்டீஸ் சந்தேக மேடை.  -- ஜி.எஸ்.எஸ்.
-- தின மலர். இணைப்பு சிறுவர் மலர்.  மார்ச் 28,2014.  

Tuesday, February 9, 2016

தெரிஞ்சுக்கோங்க!

*  இந்திய ரிசர்வ் வங்கி துவக்க நாள் !  ( ஏப்ரல் 1, 1935 ).  தனியாரால் துவக்கப்பட்ட இவ்வங்கி, 1949ம் ஆண்டு நாட்டுடடைமை                    ஆ    க்கப்பட்டது. இது, மத்திய அரசு வங்கி.  இது அரசின் கருவூலம் ஆகும்.
*  1940லிருந்து 1960 வரை உலகெங்கும் பெருமளவில் அதிகரிக்கப்பட்ட விவசாய      விளைச்சலைத்தான் பசுமைப் புரட்சி
    என்கிறோம்
*  குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது டார்வின் கோட்பாடு.  டார்வின் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கி விட்டது
    சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சி!  குரங்கு இனம் இருந்ததற்கு முன்னதாகவே மனித இனம் இருந்திருக்கிறது என்பதை
    மெய்பிக்கும் ஆதி மனிதனின் காலடி தடங்களை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.  எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    வாழந்த நம் மூதாதையர்களின் காலடித் தடங்கள், இங்கிலாந்தின் நார்போக்கில் உள்ள ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியின்
    கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
*  ஆன்மாக்கள் வடக்கு நோக்கிச் செல்வதை சரண யாத்திரை என்றும்,  தெற்கு நோக்கிப் போவதை மரண யாத்திரை என்றும்
   சாஸ்திர நூலகள் சொல்கின்றன.
*  ராம நவமியை முடிவு நாளாக கொண்டு முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடுவது கர்போற்சவம் எனப்படும்.
--  தின மலர். இணைப்பு சிறுவர் மலர்.  மார்ச் 28,2014.   

Monday, February 8, 2016

வங்கிக்கணக்கு இல்லாவிட்டாலும்...

வங்கிக்கணக்கு இல்லாவிட்டாலும் ஏடிஎம்மில் பனம் பெறலாம்.  ரிசர்வ் வங்கி அதிரடி.
     விரைவில், வங்கியில் கணக்கு இல்லையென்றாலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்.  இத்தகைய வசதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
     வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்த சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, பணம் அனுப்ப விரும்புவோர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்முக்கு சென்று தன் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை அனுப்ப கோரலாம்.  பின்னர், வங்கி சார்பில் பனம் பெறுவோரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறியீடு அனுப்பிவைக்கப்படும்.  அந்த குறியீட்டை அவர் அருகில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கியின் ஏடிஎம்முக்கு சென்று அந்த குறியீடை அழுத்தி பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
    பணம் அனுப்புவதில் ரொக்கம் கைக்கு கிடைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.  நம்நாட்டில் பணம் பெறுவோர் மிக அதிக அளவில் உள்ளனர்.  ஆனால், அவர்களில் குறிப்பிட்ட சிலருக்குத்தான் வங்கிக்கணக்கு உள்ளது.  இதனால் இந்த ஏற்பாடு.
    இதுபோன்ற புதுமையான முறையில் பணப்பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியில் செல்போன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
-- தினமலர்.  வியாழன் . பிப்ரவரி .13.  2014.  

Sunday, February 7, 2016

இதயம் பேசுகிறது

இதயத்தைப் பற்றிய முக்கியத் தகவல்கள்:
*  கருப்பையில் கரு உருவாகும்போது, முதலில் உருவாகும் உறுப்பு இதயம்.  இதயத் துடிப்பும் ஆரம்பமாகிறது.  இது
   பெரிதாகும்போது, நான்கு அறைகளாகப் பிரிகிறது.  வளர்ந்த ஒருவரின் இதயம் சராசரியாக 5 அங்குல நீளம், 3 அங்குல அகலம்
   இருக்கும்.
*  மனித உடலின் தசைகளிலேயே மிக உறுதியானது இதயத் தசை.  இதயத் தசைகள் பல ஆயிரக்கணக்கான தசைநார்களால்
   உருவாக்கப்பட்டவை.  ஆனால், அவை அனைதும் இணைந்து ஒரே தசைநாரைப் போலவே வேலை செய்கின்றன.
*  இதயம் சீராக ஒரு நாளைக்கு 1,00,000 முறைக்கு மேல் துடிக்கிறது.  அதாவது ஒரு நிமிடத்துக்கு 70 முறை, ஒரு மணிக்கு 4,200
   தடவை துடிக்கிறது.  இப்படியாக 24 மணி நேரத்தில் 1,00,800 தடவை துடிக்கிறது.
*  இதயம் ஒரு நாளில் மனித உடலில் இருக்கும் சுமார் 60,000 மைல் நீள அளவுள்ள ரத்த நாளங்களில் 7,200 லிட்டர் ரத்தத்தைச்
   செலுத்துகிறது.  அதாவது ஒரு நிமிடத்துக்கு 5 லிட்டர் வீதம், ஒரு மணி நேரத்தில் 300 லிட்டரைச் செலுத்துகிறது.  24 மணி
   நேரத்தில் இது 7,200 லிட்டராகிறது.
*  ஒரு நிமிடத்துக்குச் சுமார் 5 லிட்டர் ரத்தத்தை இதயம் 'பம்ப்' செய்கிறது.  அதாவது ஒரு நாளைக்குச் சுமார் ஒரு லட்சம் தடவை.
*  ஒருவர் வேலை செய்யாமல் இளைப்பாறும்போதும் இதயம் ஒரு நிமிடத்துக்கு 45 முதல் 80 முறை வரை ஒரே சீராகத் துடிக்கிறது.
   ஆனால், பளுவைத் தூக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும்போதோ, ஒரு நிமிடத்துக்கு 4 மடங்கு அதிகமான ரத்தத்தைச்
   செலுத்துகிறது.
*  ஒரு மனிதனின் சராசரி 70 வயது வாழ்க்கையில், இதயம் கிட்டத்தட்ட 25 கோடி முரை சுருங்கி விரிகிறது.
-- சரஸ்வதி பஞ்சு, அய்யப்பன் நகர், திருச்சி. 21.
--  'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 25,2014.   

Saturday, February 6, 2016

பொய்கையாழ்வார்.

பெருமாளின் சங்கு  பொய்கையாழ்வார்.
     பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் மூவருள் ஒருவர்.  காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா என்னும் ஊரிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலைச் சேர்ந்த பொய்கையில் பிறந்தவர்.  இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது.  முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.  பொற்றாமரைப் பொய்கையில் அதாவது திருக்குளத்தில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.
     ஆழ்வார்களில் சிலர் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைனவக் கொள்கை.  இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் பெருமாளின் சங்கின் அம்சம் ஆவார்.
     இவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்னும் ஆழ்வார்களுடன் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவராவார்.  இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள்.
-- ராஜேஸ்கரி ஐயர்.  ஆழ்வார்கள்.  ஆனந்த ஜோதி.
--  'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 20,2014.   

Friday, February 5, 2016

கீ - போர்டு

கீ - போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்
     நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்?  சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.
    அதேநேரம் கம்ப்யூட்டரையோ, செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா?  அதற்கும் சுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம்.  ஆனால், கழிபறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
     லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.  அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன.  பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.  அவற்றின் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும், கழிவறை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப்பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.  வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ வீடுகளிலோ பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
    குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும்.  கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உனவுத் துணுக்குகளையோ, சிறிய குப்பைகளையோ அகற்றலாம்.  மெல்லிய துணியின் மூலமிவற்ரைத் துடைத்தெடுக்கலாம்.  இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் கையைச் சுத்தம் செய்வது.  சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும்.
-- பிருந்தா.  சுத்தம் சுகாதாரம். நலம் வாழ.
--  'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 25,2014. 

Thursday, February 4, 2016

உங்களுக்குத் தெரியுமா?

   சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற்கான முதல் வேலை, அது பற்றி முறையாக அறிந்துகொள்வதுதான்.  நமது சுற்றுச்சூழல் பற்றி ஆக்கபூர்வமான, எதிர்மறையான சில விஷயங்களைப் பார்ப்போம்.
*   ஒரு விநாடி மின்சாரம் இல்லாவிட்டால்கூடத் தவித்துப் போய் விடுகிறோம்.  ஆனால், நாம் பயன்படுத்தும் ஒரு யூனிட்
    மின்சாரத்தை உருவாக்க 300 கிராம் நிலக்கரியும், 3 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறத்து.
*  வீட்டில் குடிப்பதற்கும் சமைக்கவும் நாம் பயன்படுத்தும் தண்ணீர், நமது மொத்தத் தண்ணீர் செலவில் வெறும் 10% மட்டுமே.
    பெரும்பாலான தண்ணீர் குளிக்க, தூய்மைப்படுத்த, கழுவ எனப் பெருமளவு வீணாகிறது.  ஒரு வெஸ்டர்ன் டாய்லெட் ஒரு
    முறைக்கு 8 முதல் 10 லிட்டர் தண்ணீரை வீனடிக்கிறது.
*   வீட்டுக்குள்ளும் அலுவலகத்திலும் வளர்க்கப்படும் தாவரங்கள் மதிப்புமிக்கவை என்கின்றன ஆராய்ச்சிகள்.  அவை
    கட்டடங்களுக்கும், மனிதர்களுக்கும் பல்வேறு வகைகளில் நன்மை தருகின்றன.  எப்படியென்றால், நமக்குத் தேவையான
    ஆக்சிஜனை அதிகரிக்கின்றன.  நமக்குத் தேவையில்லாத கார்பன் டை ஆக்சைடைக் குறைக்கின்றன.  ஈரப்பதத்தை
    அதிகரிக்கின்றன, காற்று ஆசுபாட்டைக் குறைக்கின்றன.  வெப்பநிலையைக் குறைக்கின்றன.  மன அழுத்தத்தையும்
    குறைக்கின்றனவாம்.
-- தொகுப்பு : ஆதி.    நன்றி: ஹேபிடட் அப்பல்லோ வழிகட்டி.  உயிர் மூச்சு.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 25,2014. 

Wednesday, February 3, 2016

சுட்டது நெட்டளவு

  "இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?"
     "5 வருஷமா இருக்கேங்க."
     "நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிகிட்டிருக்கேன்.  எவ்வளவு நெருக்கடியான நேரத்திலயும் பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்களை மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை."
    "தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிருக்கணும் சார்.  அமெரிக்காவில உள்ள 'நியூரோசைக்யாட் ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?"
    "என்ன சார் சொல்றாங்க?"
    "மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும்போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம்.  இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  இப்படிப்பட்டவங்கதான் அதிக நாள் ஆரோக்கியமாக வாழுறாங்களாம்.  அதுமட்டுமில்ல... பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுதினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது.  உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்."
    "அடேங்கப்பா...இவ்ளோ தெரிங்சு வச்சிருக்கிறதாலதான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யுறீங்க போல !"
    "ஆமாங்க !"
    " ஆனா உங்ககிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்"
    "ஏன் அப்படி சொல்றீங்க?"
    "இப்ப இந்த பஸ் எப்படி போய்கிட்டு இருக்குன்னு பாருங்களேன்.  தாறுமாறா தரிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது.  நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன்.  ப்ளீஸ் !"
    "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன்.  வர்ற வழியில தான் எங்கேயோ விழுந்திருக்குன்னு நினைக்கிறேன் !"
    "எது ...பிரேக்கா?"
    "இல்ல...டிரைவர் !"
-- முகமது ரிஸ்வான். ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், மார்ச் 10, 2014.  

Tuesday, February 2, 2016

இணைய வெளியிடையே...

*  ஒவ்வொரு பெண்னின் உயர்வுக்கு கீழே இரண்டு ஆண்கள் இருப்பர்.
    1.  தந்தை   2.  கணவன்.
*  தமிழர்களை கொல்லும் பொறுப்பை மற்றவர்கள் ஏற்று கொண்டு இருக்கிறார்கள்; தமிழைக் கொல்லும் பொறுப்பை
   தமிழர்களே ஏற்று கொண்டு இருக்கிறார்கள்.
   alexious@ twitter.com
*  கூட்டணியை விட்டு விலகியதைச் சொல்லி பிரதமர் வருத்தப்பட்டார் :  அழகிரி.
   வீட்டை விட்டே விலக்கிவிட்டார்கள்னு நீங்க சொல்லுங்க...
   sabasabas @ facebook.com
*  அப்போது பேனா!  இப்போது பென் ட்ரைவ்!  தொலைப்பதில் முன்னேறிவிட்டோம்!
   erodekathir@ twitter.com
*  சார்லி சாப்ளின் மாறுவேட போட்டியில் உண்மையான சார்லி சாப்ளினே கலந்து கொண்டாராம் !  ஆனால், அதில் அவருக்கு
   மூன்றாவது இடம்தான் கிடைத்தது !
*  அமெரிக்க டாலர் என்பதின் அடையாளமாக 's' இந்த சின்னம் பயன்படுத்தப்பட்டாலும் அமெரிக்க கரன்சிகளின் எந்த
    இடத்திலும் இந்த சின்னம் இருக்காது,
*  உலகத்தின் மொத்த மக்கள்தொகையை விடவும் அதிக பாக்டீரியாக்கள் நம் வாயில் இருக்கின்றன!
    tamilfacts@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர் நாளிதழ் .23-3-2014.  

Monday, February 1, 2016

யுரேனஸ் கோள்

   யுரேனஸ், சூரியக் குடும்பத்தில் ஏழாவது கோள்.  இது பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் இருக்கும்.  யுரேனஸ் கோள் கண்டுபிடிக்கப்பட்டுப் பல வருடங்கள் கழித்துதான் அதைச் சுற்றி குறுகிய வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அவை கண்டுபிடிக்கப்பட்டதும் சுவாரசியமான நிகழ்வுதான்.
     1977 ஆம் ஆண்டு இதே நாள் ( மார்ச் 10 )  வானியல் நிகழ்வுகளை வழக்கம்போல வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது யுரேனஸ் கோள், ஒரு நட்சத்திரத்தின் அருகே சென்று அதை மறைத்தது.  அப்போது நட்சத்திரத்தின் ஒளியில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.  இந்த ஏற்ற இறக்கங்கள், யுரேனஸ் கோளைச் சுற்றியிருக்கும் வளையங்களால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.  அது தொடர்பான ஆராய்ச்சியில் முதலில் ஐந்து வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  யுரேனஸ் கோளில் இருந்து அவை இருக்கும் தூரத்தை வைத்து அவற்றுக்கு ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, எப்சிலான் என்று பெயர் வைத்தார்கள்.
     பிறகு, 1986 ஆம் ஆண்டு வாயேஜர் 2 விண்கலத்தின் உதவியுடன் யுரேனஸைச் சுற்றி மொத்தம் 11 வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அதன் பிறகு மேலும் இரண்டு வெளி வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
வளையங்களின் நிலா
     இந்த வளையங்கள் அனைத்தும் மெல்லிய துகள்களைக் கொண்டவை.  கோள்களின் வயதோடு ஒப்பிடும்போது இவற்றின் வயது குறைவு.  வளையங்கள் தோன்றி 600 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.  யுரேனஸைச் சுற்றி இருந்த எண்ணற்ற நிலாக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்ததாலேயே இந்த வளையங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்பது அவர்களின் கணிப்பு.  உடைந்த நிலாக்கள் சிறு துகள்களாகச் சிதறி, ஒளிரும் ஆற்றலுடன் நிலைப்புத்தன்மை கொண்ட பகுதியில் வளையங்களாக நின்றிருக்கலாம் என்கிறார்கள்.
     இவை யூகங்களே தவிர வளையங்கள் தோன்றியதன் காரணத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை.  நிலாக்களின் மோதல் என்கிற கருத்துக்கு வலு சேர்ப்பது போல வாயேஜர் விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களில் யுரேனஸ் வளையங்களில் ஒளி மிகுந்த ஒரு வளையத்தின் உள்புறமும் வெளிப்புறமும் ஒரு நிலா இருப்பது தெரியவந்தது.
     ( மார்ச் 10 யுரேனஸ் வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தினம் ).
-- பிருந்தா. பொது அறிவு.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள், மார்ச் 10,2014.