Thursday, June 30, 2016

புதிய ஸ்மார்ட் போன்

இரண்டு சிம் வசதி கோண்ட புதிய ஸ்மார்ட் போன்
     இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா மொபைல்கள் தனக்கென தனி இடம் பிடித்துள்ளன.  பயன்படுத்துவோருக்கு எந்தச் சிரமமும் அளிக்காத வகையில் யூஸர் ஃபிரண்ட்லி மொபைல்களைச் சந்தையில் புழக்கத்தில் விடுவதே நோக்கியா நிறுவனத்தின் வழக்கம்.  இதனால் எளிதில் வாடிக்கையாளர்களைத் தம் பக்கம் திருப்பிவிடுகிறது அந்நிறுவனம் என்கிறார்கள் தகவல் தொடர்புத் துறையினர்.  இந்நிலையில் நோக்கியாவின் புதுவரவான டூயல் சிம் லூமியா 630 மொபைல் அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கிறது.
    விரைவு, துல்லியம், ஆற்றல் ஆகிய மூன்று பண்புகள் இந்த லூமியா 630 மொபைலைத் தனித்துக் காட்டும் என்கிறது நோக்கியா நிறுவனம். விண்டோஸ் போன் 8.1 மென்பொருள் இந்த மொபைலை இயக்குகிறது.  இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இரண்டு சிம் மொபைல்களுக்கு பெரிய வரவேற்பு இருப்பதால் லூமியா 630 மொபைலும் நுகர்வோரைக் கவரும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
    இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் சந்தையில் அடுத்த வாரம் அறிமுகமாகும் லூமியா 630.  சிங்கிள் சிம் செட்டின் அடிப்படை விலை 9,500 ரூபாய் என்றும், டூயல் சிம் செட்டின் அடிப்படை விலை 10,000 என்றும் தெரிகிறது.
    4.5 அங்குல அகலம் கொண்ட திரை கொண்ட லூமியா 630 -ன் சேமிப்புத் திறனை 8 ஜிகாபைட் வரை விஸ்தரித்துக்கொள்ள இயலும்.  512 மெகாபைட் வேகத்தில் இயங்கும் ராம் கொண்ட இதில் 5 மெகா பிக்ஸல் திறனுடைய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒளிரும் பச்சை, அட்டகாச ஆரஞ்சு, கவர்ச்சிமிகு கறுப்பு, பளிச்சிடும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது.  தொடுதிரை கொண்ட இந்த ஸ்மார்ட் போனைத் தொட்டுப் பார்க்கத் துடிக்கும் விரல்களும் மனமும் அடுத்த வாரம் வரை பொறுமை காக்க வேண்டும்.
-- ராகு.  இளமை புதுமை.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், மே 12, 2014. 

Wednesday, June 29, 2016

ஆங்கிலம் அறிவோமே - 5

சுருங்கச் சொல்லுதல்
     Abbreviation என்றால் ஆங்கிலத்தில் சுருக்கம் என்பது நமக்குத் தெரியும்.  இப்படிச் சுருக்கப்பட்ட சொற்களுக்குப் பின்னால் கட்டாயம் ஒரு புள்ளியை வைத்தாக வேண்டும். ( திருமண அழைப்பிதழில், சௌபாக்கியவதி என்பதை ஆங்கிலத்தில் Sow.
என்றும்,  சிரஞ்சீவி என்பதை ஆங்கிலத்தில் Chi. என்றும் சுருக்கிக் குறிப்பிடுவார்கள்.  இவற்றிற்குப் புள்ளி வைக்காவிட்டால்,மணமகளை நன்கு வளர்ந்த பெண்பன்றி என்று குறிபிட்டதுபோல் ஆகிவிடும். ஏனென்றால் sow என்ற வார்த்தைக்கு அதுதான் அர்த்தம்.  அதேபோல chi என்றால் சீ என்று மணமகனை அலட்சியப் படுத்துவதுபோல் ஆகிவிடும்.  இது ஓர் உதாரணம் தான்.  எனவே புள்ளி அவசியம் ).
     ஆனால் சிலர் Abbreviation என்பதையும் acronym என்பதையும் குழப்பிக் கொள்கிறார்கள்.
     Examination என்பதை exam என்றோ et cetera என்பதை etc. என்றோ சுருக்கிக் குறிப்பிடும்போது அவை abbreviations.
( et cetera என்பது ஒரு லத்தீன் வார்த்தை.  அதற்குப் பொருள் 'மற்றும் பிற'என்பதாகும்).
     ஆனால் World Health Organisation என்பதைச் சுருக்கி WHO என்கிறோம் ( இந்த எழுத்துகளுக்கு நடுவே புள்ளி வைப்பதில்லை).  அதேபோல Acquired Immuno Deficiency Syndrome என்பதை AIDS என்கிறோம்.  இவையெல்லாம் abbreviations அல்ல acronyms.  அதாவது சொற்களின் முதல் எழுத்துகளைஸ் சேர்த்து ஒரு சொல்போலக் குறிப்பிட்டால் அது acronyms.
      Abbreviations ஐப் பொறுத்தவரை எழுதும்போது அவற்ரைச் சுருக்கினாலும் அவற்றைப் படிக்கும்போது முழுமையாகத்தான் படிப்போம்.  அதாவது Mister என்று எழுதினாலும் Mr என்று எழுதினாலும் படிக்கும்போது மிஸ்டர் என்றுதான் படிக்க வேண்டும்.  ஆனால்  acronyms.- களைப் பொறுத்தவரை அவை புதிய சொற்களைப் போல.
     Peofile
    வேலை தேடும்போது உங்கள் profileஐ அனுப்புங்கள் என்று யாராவது சொன்னால் உங்களைப் பற்றிய - வேலைவாய்ப்புக்குத் தொடர்பான விவரங்கள் என்று பொருள்.  profile என்பதைச் சிறு வாழக்கைக் குறிப்பு என்றும் குறிப்பிடலாம்.
    ஆனால் புகைப்படம் எடுப்பவர்கள் யாராவது "உங்களை profile ஒரு photo எடுக்கணும்"என்று சொன்னால் உங்க பயோ-டேடோவை நீட்டி எடுத்துக்கொள்ளுங்கள் என்று தாராளம் காட்டக்கூடாது.  அதே சமயம் அர்த்தம் புரியாமல் கேமராவுக்கு நேரே முகத்தைக் காட்டிக்கொண்டு அதிகமாகச் சிரிக்கவும் கூடாது.  பக்கவாட்டிலே எடுக்கப்படும் புகைப்படம்தான் profile.
    Keep a low profile என்றால் பிறர் கவனத்தை ஈர்க்கும்படி எதுவும் செய்ய வேண்டாம், கட்டுப்பாடு தேவை என்று பொருள்.  நாகரிகமின்றிச் சொன்னால் வாயைப் பொத்திக்கொண்டு கையைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டுமென்று அர்த்தம்.
    Her high profile - என்றால் பிறர் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு ஏதோ ஆற்றலோ தன்மையோ அந்தப் பெண்ணிடம் இருக்கிறது என்று பொருள்.
-- ஜி.எஸ்.சுப்ரமணியன். ( தொடர்புக்கு: aruncharanya@ gmail.com ).
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், மே 12, 2014.  

Tuesday, June 28, 2016

புற்றுநோய்

புற்றுநோய் உயிரிழப்புக்குக் காரணமாகும் உறுப்புகள் :
ஆண்கள் :
உதடு, வாய்க்குழி..  -  36,436  -  10.2 %
தொண்டைக்குழி...   -  15,805  -   2.4 %
நுரையீரல் ............   -  48,697  -   13.7 %
வயிறு ..................    -  40,721  -    11.4 %
பெண்கள் :
மார்பகம் ............. -  70,218  -   21.5 %
வயிறு.................. -  18,320  -  5.6 %
கருப்பைப் பகுதி... -  67,477  -  20.7 %
-- அசார் உசேன்.  பிருந்தா.  நலம் வாழ.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், மே 13, 2014.   

Monday, June 27, 2016

இணைய வெளியிடையே...


*   பறவை 'இறக்கையும்', மனிதன் 'சரக்கையும்' பறக்க பயன்படுத்துகிறார்கள்.
     -- sappadu @ titter.com
*   ஒரு வீடு குதூகலாமாக இருக்கிறது என்றால் குழந்தை இருக்கணும் அல்லது கொழுந்தியாள் வந்திருக்கணும்.
     -- sappaani @ twitter.com
*   நட்சத்திரங்களற்ற வானம், நிர்'வானம்'.
     -- arattagirl @ twitter.com
*   கப்பலில் பயன்படுத்தப்படும் திசைகாட்டும் காம்பஸ் கருவியில் 32 திசைகள் உள்ளன!
   
     அண்டார்டிகாவில் படிந்துள்ள பனிக்கட்டிகள் முழுவதும் உருகினால் அது உலகில் 60 ஆண்டுகளுக்குப் பெய்யும் மழைக்குச்
     சமமாக இருக்குமாம் !!

     வட மொழியில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் இருப்பதைப்போல தமிழில் அறம், பொருள், இன்பம்,
     வீடு என்ற 'நான் மறைகள்' உள்ளது.
   
     இந்தியாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707ம் ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள தரங்கம்பாடியில்தான்
     ஆரம்பிக்கப்பட்டது!!

      கண்களை சிமிட்டாமல் தவளையால் உணவை விழுங்கவே முடியாது!  ஏனெனில் அதன் தொண்டைக்கான திறவுகோல்
      கண்ணில்தான் உள்ளதாம்!
      -- tamilfacts @ twitter.com
--  தினமலர். சண்டே ஸ்பெஷல்.  ஞாயிறு, மே 11,  2014.                                     

Sunday, June 26, 2016

ரொம்ப பிசியா? இனி, சாப்பாட்டை குடிக்கலாம். இன்றைய வேகமான உலகில், சிலர் எப்போதும் அலுவல், பணி என்றிருப்பர். சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அவர்களுக்காகவே வாகனத்தில் பயணித்துக் கொண்டே குட்டிக்கக்கூடிய உணவை பின்லாந்து நாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. ஹெல்சின்கியை சேர்ந்த இந்நிறுவனம் இந்த குடிக்கும் சாப்பாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. மனிதனுக்கு அன்றாட தேவையான சத்துக்கள் இதில் அடங்கியிருக்குமாம். அம்பரானைட் என்ற பெயரில் ஒரு பவுடராக இது அறிமுகமாகி உள்ளது. இதை குடிநீருடன் கலந்து பருகலாம். அல்லது மில்க் ஷேக் போல மீல் ஷேக் ஆகவும் பிளண்டரில் போட்டு எடுத்து குடிக்கலாம். இதில் ஓட்ஸ், ஸ்பினாக் உள்ளிட்ட பல சத்துக்கள் கொண்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மிக்கோலோ ஐகோலா கூறுகையில், "ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அதே சமயம் சாப்பிடக்கூட நேரம் இல்லாத அளவுக்கு பிசியாக இருக்கும் நபர்களுக்கு வசதியாக இந்த டிரிங்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் செயற்கையான சேர்ப்பு பொருள் எதுவும் சேர்க்கப்படவில்லை" என்றார். போகிற போக்கை பார்த்தால் காலை டிபன் முதல் இரவு உணவு வரை அனைத்துமே பாட்டிலில் விற்பனைக்கு வந்துவிடும்போல ! -- தினமலர். ஞாயிறு, மே 11, 2014. இனி, சாப்பாட்டை குடிக்கலாம். இன்றைய வேகமான உலகில், சிலர் எப்போதும் அலுவல், பணி என்றிருப்பர். சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அவர்களுக்காகவே வாகனத்தில் பயணித்துக் கொண்டே குட்டிக்கக்கூடிய உணவை பின்லாந்து நாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. ஹெல்சின்கியை சேர்ந்த இந்நிறுவனம் இந்த குடிக்கும் சாப்பாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. மனிதனுக்கு அன்றாட தேவையான சத்துக்கள் இதில் அடங்கியிருக்குமாம். அம்பரானைட் என்ற பெயரில் ஒரு பவுடராக இது அறிமுகமாகி உள்ளது. இதை குடிநீருடன் கலந்து பருகலாம். அல்லது மில்க் ஷேக் போல மீல் ஷேக் ஆகவும் பிளண்டரில் போட்டு எடுத்து குடிக்கலாம். இதில் ஓட்ஸ், ஸ்பினாக் உள்ளிட்ட பல சத்துக்கள் கொண்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மிக்கோலோ ஐகோலா கூறுகையில், "ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அதே சமயம் சாப்பிடக்கூட நேரம் இல்லாத அளவுக்கு பிசியாக இருக்கும் நபர்களுக்கு வசதியாக இந்த டிரிங்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் செயற்கையான சேர்ப்பு பொருள் எதுவும் சேர்க்கப்படவில்லை" என்றார். போகிற போக்கை பார்த்தால் காலை டிபன் முதல் இரவு உணவு வரை அனைத்துமே பாட்டிலில் விற்பனைக்கு வந்துவிடும்போல ! -- தினமலர். ஞாயிறு, மே 11, 2014.


இனி, சாப்பாட்டை குடிக்கலாம்.
     இன்றைய வேகமான உலகில், சிலர் எப்போதும் அலுவல், பணி என்றிருப்பர்.  சாப்பிடக்கூட நேரம் இருக்காது.  அவர்களுக்காகவே வாகனத்தில் பயணித்துக் கொண்டே குட்டிக்கக்கூடிய உணவை பின்லாந்து நாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
     ஹெல்சின்கியை சேர்ந்த இந்நிறுவனம் இந்த குடிக்கும் சாப்பாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.  மனிதனுக்கு அன்றாட தேவையான சத்துக்கள் இதில் அடங்கியிருக்குமாம்.  அம்பரானைட் என்ற பெயரில் ஒரு பவுடராக இது அறிமுகமாகி உள்ளது.  இதை குடிநீருடன் கலந்து பருகலாம்.  அல்லது மில்க் ஷேக் போல மீல் ஷேக் ஆகவும் பிளண்டரில் போட்டு எடுத்து குடிக்கலாம்.  இதில் ஓட்ஸ், ஸ்பினாக் உள்ளிட்ட பல சத்துக்கள் கொண்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாம்.  இதுகுறித்து  இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மிக்கோலோ ஐகோலா கூறுகையில், "ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட  அதே சமயம் சாப்பிடக்கூட  நேரம் இல்லாத அளவுக்கு பிசியாக இருக்கும் நபர்களுக்கு வசதியாக இந்த டிரிங்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதில் செயற்கையான சேர்ப்பு பொருள் எதுவும் சேர்க்கப்படவில்லை" என்றார்.
     போகிற போக்கை பார்த்தால் காலை டிபன் முதல் இரவு உணவு வரை அனைத்துமே பாட்டிலில் விற்பனைக்கு வந்துவிடும்போல !
-- தினமலர்.  ஞாயிறு, மே 11,  2014.                                     

Saturday, June 25, 2016

முதிர்கன்னி !

கன்னி கழியாமல்
மனைவியே ஆகாமல்
தாயும் ஆகாமல்
தாலாட்டும் பாடாமல்
மாமியார் ஆகாமல்
பாட்டியாகி விட்டேன் !
வயது முதிர்ந்த ஒரே
காரணத்திற்காக !
-- ஆர்.ஜனனி, ஏரகுடி.
பூ!
விற்பதற்குள்
வாடிப் போய்
விட்டது பூ
விற்பவளின் முகம்.

குடி !
கடுகையும்
மிளகையும் -
பீரோவில் வைத்துவிட்டு
காசையும்
நகையையும்
கடுகு டப்பாவில் வைத்தாள்
திருடனுக்கு பயந்து அல்ல
குடிகார கணவனுக்கு பயந்து !
-- தேவிகோகிலன், ஜோலார்பேட்டை.
-- தினமலர். பெண்கள்மலர் இணைப்பு.  மே 10, 2014.  

Friday, June 24, 2016

அமெரிக்காவுக்கு புல்லட் ரயில்

அமெரிக்காவுக்கு புல்லட் ரயில் இயக்க சீனா திட்டம்.  13,000 கி.மீ. நீளத்துக்கு ரயில் பாதை.
     அமெரிக்காவுக்கு புல்லட் ரயில் இயக்குவதற்காக ரஷியா, கனடா வழியாக 13,000 கி.மீ. நீளத்துக்கு ரயில் பாதை கட்டமைப்பை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.  இது செயல்பாட்டுக்கு வந்தால் உலகின் மிக நீளமான ரயில் பாதை   என்ற சாதனை படைக்கும்.
     சீனா - அமெரிக்கா இடையே புல்லட் ரயில் இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.  இந்தத் திட்டத்துக்கு 'சீனா - ரஷியா பிளஸ் அமேரிக்கா லைன்' என பெயரிடப்பட்டுள்ளது.  இது சீனாவின் வடகிழக்கில் தொடங்கி ரஷியாவின் கிழக்கு சைபீரியா, தி பெரிங் ஜலசந்தி, அலாஸ்கா, கனடா வழியாக அமெரிக்காவைச் சென்றடையும்.
     ரஷியா அலாஸ்கா இடையிலான பெரிங் ஜலசந்தியைக் கடப்பதற்காக சுமார் 200 கி.மீ. தூரத்துக்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டியிருக்கும்.  இந்த ரயில் மணிக்கு சராசரியாக 350 கி.மீ. தூரம் பயணிக்கும்.  இதன்படி சீனாவிலிருந்து 2 நாளில் அமெரிக்காவுக்கு சென்றடையலாம்.  அதிக அளவில் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள ரஷியாவும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
     சுமார் 10,000 கி.மீ. தொலைவு கொண்டது டிரான்ஸ் சைபீரியா ரயில்வே இணைப்பு திட்டம்.  அடுத மாதம் தொடங்க உள்ள இந்த திட்டம் சீனாவை மியான்மர், லாவோஸ், வியட்நாம், கம்பொடியா, ஹாய்லாந்து, மலேஷியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.  இதைவிட 3,000 கி.மீ. கூடுதல் தூரம் கொண்டது சீனாவின் புதிய திட்டம்.
     இதற்கிடையே, ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் இதுபோன்ற மெகா திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் என இத்துறை சார்ந்த சில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-- பி.டி.ஐ.
--   'தி இந்து' நாளிதழ்.  சனி,  மே 10,  2014.     

Thursday, June 23, 2016

"சமீபத்திய ஆச்சர்யம்"


ஆன்மிகம்

*    பிருஹன்னளை என்பது தலைமறைவாக இருந்த காலத்தில் பெண் உருவில் இருந்த அர்ஜுனனின் பெயர்.
*    ராமாயணத்தில் வரும் மந்தாரையை கூனி என்றும் சொல்வார்கள்.
*    வானப்பிரஸ்தம் என்பது வாழ்வின் நான்கு கட்டங்களில் மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ளது.  குடும்ப வாழ்க்கையின் பந்தங்க்ளிலிருந்து விலகி, ஒட்டாமல் வாழம் கட்டம்.
*   சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்விகம் நிறைந்த கல் ஆகும்.  இது  நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்னங்களில்
    கிடைக்கிறது.
*   தாயுமானவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார்.
*   கந்தர் அனுபூதியை எழுதியவர் அருணகிரிநாதர்.
*   அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும்போது பல்வேறு தெய்வங்கள் தோன்றின.  கற்பகவிருட்சம் போலக்   கேட்டதைத் தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது
    என்கிறது புராணம்.
*   விஷ்ணு வாமன அவதாரம் எடுத்தபோது தன் பாதங்களால் இந்த உலகை அளந்தார் என்கிறது தசாவதாரக் கதை.
*   பித்தா பிறைசூடி என்பது சுந்தரரின் பாசுரம்.
*   சமண மகரிஷி பிறந்த ஊர் மதுரையை அடுத்த திருச்சுழி.
-- ஆனந்த ஜோதி.
--  'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  மே 8,  2014.    

Wednesday, June 22, 2016

அதிசய உலகம்


காற்று தந்த வளைவுப் பாறைகள்!
     அமெரிக்காவில் யூட்டா என்ற ஒரு மாகாணம் உள்ளது.  இங்கு 'ஆர்ச்சஸ் நேஷனல் பூங்கா'  மிகப் பிரபலம்.  கொலராடோ ஆறு அமைந்துள்ள இடத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இப்பூங்கா.  இந்தப் பூங்காவில் அமைந்துள்ள பாறைகள் இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கபுரி.  இந்த இடத்தைப் பாறை வளைவு தேசம் என்றே அவர்கள் அழைக்கிறார்கள்.  இங்கு அப்படிஎன்ன சிறப்பு என்றுதானே நினைக்கிறீர்கள்?
     ஓங்கி உயர்ந்த பிரமாண்ட மலைகள் உள்ளன.  இங்கு திரும்பிய திசையெல்லாம் பாறை வளைவுகள்தான்.  சுமார் 2000 பாறை வளைவுகள் இங்கு அழகாக அமைந்துள்ளன.  ரெயின்போ வளைவு, டெலிகேட் வளைவு, மோப் வளைவு, புரூக்கன் வளைவு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்.  இவற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே ஆர்ச்சஸ் நேஷனல் பூங்கா.
     சரி, இந்தப் பாறை வளைவுகள் எப்படி உருவாகின?  இவையெல்லாம் செயற்கையாக உருவாக்கப்பட்டவை அல்ல.  இயற்கையாகவே அமைந்தவை.  அதாவது, இப்பகுதியில் எப்போதும் காற்று பலமாகவே வீசும்.  இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகள் வளைவுகளாக மாறிவிட்டதாகக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
     விதவிதமாகப் பாறை வளைவுகள் இருந்தாலும், அனைவரது மனதையும் கொள்ளை கொண்டது என்னவோ டெலிகேட் வளைவுதான்.  இதற்கு 'எண்டிராடா' என்று இன்னொரு பெயரும் உண்டு.  52 அடி உயரமுள்ள இந்த வளைவு, மலையின் உச்சியில் அமைந்துள்ளது.  அந்த வளைவில் இருந்து பள்ளத்தாக்கைப் பார்த்தால் பரவசமான அனுபவம் கிடைக்குமாம்.
     இந்தப் பாறை வளைவுகளை 'த சாப்ஸ்' என்று செல்லமாக அழைக்கின்றனர் அமெரிக்கர்கள்.  காற்று வேகம் காரணமாக, பாறை வளைவுகள் மண் அரிப்பால் பாதிக்கப்படலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் எச்சரிக்கை மணி அடித்தனர்.  உடனே அவற்றைப் பாதுகாக்க பிளாஸ்டிக் கோட்டிங் கொடுத்து விட்டது பூங்கா நிர்வாகம்.
-- டி. கர்த்திக்.  மாயா பஜார்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன்,  மே 7,  2014.                               

Tuesday, June 21, 2016

நம்ப முடிகிறதா?

விந்தைப் பறவைகள்
*   உலகில் மிக நீளமான இறக்கை உடைய பறவை,  'ஆல்பட்ராஸ்'.  இறக்கையின் நீளம் 11 அடி.
*   பின்பக்கமாகப் பறக்கும் சக்தி உடைய பறவை,  'ஹம்மிங்பேர்ட்'.
*   பறவைகளில் மிக வேகமாக நீந்தக் கூடியது,  'ஜென் டூ பெங்குவின்',  இது மணிக்கு 40 கீ.மீ. வேகத்தில் நீந்தும்.
*   புறாக்களால் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பறக்க முடியும்.
*   வாத்துகள் அதிகாலையில்தான் முட்டையிடும்.
*   நெருப்புக் கோழி மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் ஓடும்.
*   நெருப்புக் கோழியின் ஒரு முட்டை , 24 கோழி முட்டைகளுக்கு சமம்.
*   கூர்த்தோல் பருந்து, சிறு பறவைகளைப் பிடித்து உண்ணும் போது, முதலில் அவற்றின் இறகுகளைப் பிய்த்து எறிந்து விடும்.
*   சூரியனை நேருக்கு நேராகப் பார்க்கக்கூடிய ஒரே பறவை,  'கடல்கழுகு'.
-- இரா.நாகராஜன்.   மாயா பஜார்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன்,  மே 7,  2014.  

Monday, June 20, 2016

மனக் கணக்கு

பிடித்த எண் எது?
     சுனில் குட்டிக்கு சில எண்கள் மீது தனி விருப்பம்.  121,  132,  154,  165 எண்கள் அவனுக்குப் பிடிக்கும்.  இப்போது கீழே உள்ள எண்களில் எந்த எண் சுனிலுக்கு பிடிக்கும்?
     176,  198,  231,  187.
     -- விடை : 231 ( சுனில் விரும்பும் எல்லா எண்களையும் 11 ஆல் வகுக்க முடியும் ).
-- மாயா பஜார்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன்,  மே 7,  2014.  

Sunday, June 19, 2016


ஜோக்ஸ்

*   ஆசிரியர் : எங்கே !  பாரதியார் பாடல் ஒன்றை பாடு !
     அரசியல்வாதி மகன் : காலி நிலம் வேண்டும் பராசக்தி, காலி நிலம் வேண்டும் !
*  "எங்க தலைவர் தனி ஆளா நின்னு ஒரு கட்சியையே தோற்றுவித்தவர்.  உங்க தலைவர்...?"
    "தோற்று, கட்சியையே வித்தவர்."
*   "ஆச்சர்யமா இருக்கு... தனி ஆளா எப்படி ஒரே ராத்திரில பத்து வீடுகள்ல திருடின?"
     "யுவர் ஆனர்... தேங்க்யூ ஃபார் யுவர் ஹானர் !"
*   "அந்த ஹோட்டல்ல சாப்பிட்டா, வீட்ல சாப்பிட ஃபீலிங் வரும் !"
    "அது எப்படி?"
    "திட்டிக்கிட்டே சாப்பாடு போடுவாங்க !"   

Saturday, June 18, 2016

தெரியுமா ? தெரியுமே! ஒரு துணுக்கு.

*   ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஒருவர் ஒரு நாளில் 10,000 அடிகள் நடக்க வேண்டுமாம்.  ஒரு நாள் குறைந்தாலும், மறு
     நாளில் அதைச் சமன் செய்யும்படி அதிகமாக நடக்க முயன்றுகொண்டு இருக்க வேண்டுமாம்.
ஒரு துணுக்கு.
"அண்மையில் நீங்கள் படித்ததில் அதிரச் செய்தது?"
     "அது ஒரு துணுக்கு,
      ஒரு குடும்பமே தற்கொலைக்குத் தயாராகிறது.  வாழ்வில்தான் தோற்றுப்போனோம்.  தற்கொலையிலும் தோற்றுவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் தந்தை, சாவுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்.
      தூக்கில் தொங்கலாம்;  ஒருவேளை கயிறு அறுந்துவிட்டால்...? விஷம் அருந்தலாம்;  ஒருவேளை அது கலப்படமாயிருந்தால்...?  கிணற்றில் குதிக்கலாம்;  ஒருவேளை நீர்மட்டம் குறைவாயிருந்தால்...?  தீயிட்டுக் கொள்ளலாம்;  பாதியில் அணைந்துபோனால்...?
      தகப்பன் குழம்பிக்கொண்டிருக்கும்போது, கடைசிக் குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது:
     "அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது, பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?"
      உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி அது !"
-- எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.   ( நானே கேள்வி... நானே பதில் ! ,  பகுதியில் ).
--   ஆனந்த விகடன். 26 -12 - 2012.                                              6 .5.14.

Friday, June 17, 2016

உண்மையின் நிலை

"இன்றைய வாழ்க்கையில் உண்மையின் நிலை என்ன?"
     "கவிஞர் தாராபாரதியின் கவிதை இது....
     'அரிச்சந்திரா !
     "உனக்கு ஆன கதி பார்த்தாயா?
      ஒரு சந்தியில்கூட
      உனக்குச் சிலை இல்லை!' "
-- டி.என்.போஜன், ஊட்டி.
--   ஆனந்த விகடன். 26 -12 - 2012. 

ஃபிரிட்ஜ் விபத்து

விபத்தை தடுக்க என்ன வழி?
     வீடுகளில் தற்போது உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ்கள் அனைத்தும் பொதுவாக இரண்டு அடுக்குகளை கொண்டது.  ஒன்று ரெப்ரிஜிரேட்டர் ( Refrigerator).  மற்றொன்று ப்ரீசர் ( Freezer ).  இரண்டுமே வெவ்வேறு வெப்பநிலைகளை கொண்டவை.  இதில் ரெப்ரிஜிரேட்ட்டர் என்பது நீரின் உறைநிலைக்கு மேல் ( 3 to 5 டிகிரி C ) வெப்பநிலையை கொண்டது.  நீரின் உறைநிலைக்கு கீழே ( 0 to 18 டிகிரி C ) வெப்பநிலையை கொண்டது ப்ரீசர்.  முன்பெல்லாம் குளிருக்காக அமோனியா ( anhydnous Ammonia ) வாயு பயன்படுத்தப்பட்டது.  இது விஷத்தன்மை கொண்டது என்பதால் சல்பர் டை ஆக்ஸைடு ( Sulfur dioxide ) பயன்படுத்தப்பட்டது.  இதுவும் பாதுகாப்பற்றது என கருதப்பட்டதால் CFC - 12  எனப்படும் டை குளோரைடை புளூரோ மீத்தேன் ( Di - chloro - di - fluoro - methane ) என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.
     குளிர்சாதன பெட்டியை காற்றோட்டமான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.  சமையல் அறைகளில் அடுப்பு அருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து கசியும் வாயு மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியாகும் சிறு தீப்பொறி ஆகியவை சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.  அதுபோல, சூரிய ஒளி படும் இடத்தில் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது.  ப்ரிட்ஜுக்கு நில இணைப்புகள் ( Earth ) கொடுக்க வேண்டும்.  ஃபிரிட்ஜ் வித்தியாசமான ஓசை வந்தால் மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
-- ஃபிரிட்ஜ் மெக்கானிக் எம்.சரவணன்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன் ஜூலை 2, 2014. 

Thursday, June 16, 2016

அரசியல்வாதி வீட்டில் திருடன்

"அரசியல்வாதிகளின் வீடுகளில் திருடர்கள் புகுந்த சம்பவங்கள் நடந்திருகின்றனவா?"
    "கேரள முன்னாள் முதல்வர் இ.எஸ்.எஸ். நம்பூதிரிபாட் இறப்பதற்குச் சில காலம் முன்பு, அவர் குடியிருந்த வாடகை வீட்டில் ஒரு திருடன் புகுந்து, பீரோவில் இருந்த 3,500 ரூபாயைத் திருடிச் சென்றுவிட்டதாக ஒரு செய்தி படித்தேன்.  ஒரு முன்னாள் முதல்வர் வீட்டில் இருந்தது 3,500 ரூபாய் தானா என்ற ஆச்சரியம் ஒரு பக்கம்.  ஒரு முன்னாள் முதல்வர் ஏன் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற ஆச்சர்யம் இன்னொரு பக்கம்.  விசாரித்தபோது, பாரம்பரிய பணக்கார நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பிறகு, தன் வீடு, தோட்டம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கட்சிக்கே கொடுத்து விட்டு, வாடகை வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார்.  அவர் அளித்த சொத்தின் மதிப்பு இன்று 10 கோடியைத் தாண்டும்.  இப்படியும் சில அரசியல்வாதிகள் சில காலம் முன்பு நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள்!".
-- உஷா நாதன், பாளையங்கோட்டை.  ( நானே கேள்வி... நானே பதில் ! ,  பகுதியில் ).
--   ஆனந்த விகடன். 26 -12 - 2012. 

Wednesday, June 15, 2016

கூகுளின் கான்டாக்ட் அலென்ஸ்!

  கூகுள் நிறுவனம் காமிராவுடன் கூடிய கான்டாக்ட் லென்ஸை தயாரித்துள்ளது.  காமிரா பார்வைக்குக் குறுக்கே நிற்காமல், லாவகமாக லென்ஸின் ஓரத்தில் உள்ளது.  நமது மூளைஒரு பொருளை அறிவதற்கு முன்பாகவே இந்த லென்ஸ் அறிந்து கொண்டு மூலைக்குத் தகவலை அனுப்பி வைக்கும்.  மனித முகங்களைஅங்கீகரித்தல், இரவு நேரப் பார்வை என எல்லா அம்சங்களும் இந்த லென்ஸ் மூலம் ஒருவர் பெற முடியும்.  முன்னால் இருக்கும் வாகன, மனிதப் போக்குவரத்துகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும்.  அதனால், பார்வை குறைபாடுள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தச் சூட்டிகை லென்ஸ் ஒரு பொக்கிஷமாகும்.
      இதை ஒரு காவலர் மாட்டிக் கொண்டால், கூட்டத்தில் இருக்கும் முகத்தில் எது திருடனின் முகம் என்று அடையாளம் காணமுடியும்.  அதேபோல், ஆயுதங்கள், கத்திகபடாக்களையும் காட்டிக் கொடுத்துவிடும்.  இராணுவ வீரர்களுக்கும் தீ அருகில் வர இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.  காட்டுத்தீயாக இருந்தாலும் அதனூடே பார்ப்பதற்கும் வழிவகை செய்யும்.  கண்ணுக்குள் வயர்லெஸ் கருவி வைத்துக் கொள்வது சரியா என்றும் ஆராய்ந்து கொண்டுருக்கிறார்கள்.  இது பொது மக்கள் உபயோகத்திற்கு எப்பொழுது வரும் என்று இப்பொழுது சொல்ல முடியா விட்டாலும், மனித இனம் நினைத்துப் பார்க்க முடியாத தொழில்நுட்ப வளர்ச்சி இதோ பிறந்துவிட்டது.!
-- தி.சு.பா.  தொழில் நுட்பம்.
--  கல்கி இதழ்.  மே 2014.
-- இதழ் உதவி : கனக. கண்ணன்,  செல்லூர். திருநள்ளாறு. 

Tuesday, June 14, 2016

ஆங்கிலம் அறிவோமே - 4.


ஒருமை பன்மை குழப்பமா?
     அலம்னி என்றால் முன்னாள் மாணவன் என்று பொருள்.
     Alummni என்றால் பன்மை.  முன்னாள் மாணவர்கள் என்றுதான் அர்த்தம்.  அதன் ஒருமை alumnus என்பதுதான்.
     பல் என்றால் tooth.  பற்கள் என்றால் teeth.  ஓஹோ tooth னா ஒரே ஒரு பல்தானா?  அப்படியானால்
-- ஜி.எஸ்.சுப்ரமணியன்.  வெற்றிக் கொடி.
--  'தி இந்து' நாளிதழ், திங்கள், மே 5, 2014.                                

Monday, June 13, 2016

பசிப் பிணி போக்க.

   வேட்டையாடிப் பெறும் இரையை புலியும் சிறுத்தையும் வீணாக்குவது இல்லை.  ஒவ்வொரு கவளத்தையும் கவர்ந்து வந்து சாப்பிடும் காக்கையும் பூனையும் எப்போதும் உணவை அழிப்பது இல்லை.  குருவியும் புறாவும் தான் கொத்தும் தானியத்தின் அழகைப் பார்ப்பது இல்லை.  ஆனால், மனிதன் மட்டுமே தன் சக பயணிக்குக் கிடைக்காத உணவைச் சகட்டுமேனிக்குப் பாழடித்துவிட்டு நிற்கிறான்.  தண்ணீரைப் வீணடிக்காத சிறுதானிய உணவு, மண்ணைப் பாழாக்காத மரபு வேளாண்மை, ஸூழலைக் கெடுக்காத உள்ளூர் காய்கனி, உடலைப் பாழாக்காத பாரம்பரியப் பக்குவம், அளவாகச் சமைத்து, அன்பாக அதைப் பரிமாறும் அக்கரை, எதையும் வீணாக்காமல் பகிர்ந்துண்ணும் கலாசாரம்... இதை மீண்டும் மீட்டெடுப்பது மட்டுமே பசிப் பிணி போக்கும் பயிற்சி...முயற்சி!
-- மருத்துவர் கு.சிவராமன்.  ( ஆறாம் திணை , தொடரில் ).
--  ஆனந்த விகடன். 12-6-2013.   

Sunday, June 12, 2016

பந்தபாசம்.

   "பந்தபாசம் என்பது மனித இனத்துக்கே சொந்தமானதா?"
     "அப்படியும் சொல்ல முடியாது.  அது அனைத்து ஜீவராசிகளுக்கும் சொந்தமானது.  கடந்த வாரம் பெண் யானை ஒன்று குண்டேரி பள்ளம் அணையில் தண்ணீர் குடித்துவிட்டுச் சென்றபோது சுருண்டுவிழுந்து இறந்தது.  மருத்துவர்கள் வரத் தாமதமானதால் பிரேதப் பரிசோதனைக்காக இலை தழைகளைக் கொண்டு மூடிவிட்டு, அருகில் உள்ள காவல் கோபுரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர் வனத் துறையினர்.  இரவு கூட்டம் கூட்டமாக குண்டேரி பள்ளம் பகுதிக்கு யானைகள் வந்து, இறந்துகிடந்த யானை மீது இருந்த இலை தழைகளை அகற்றிவிட்டு, அதைத் தட்டியெழுப்ப முயற்சித்தன.  கண்ணீர்விட்டன.  இந்தப் பாசப் போராட்டம் விடிய விடிய நடந்தது.  விடிந்ததும் அருகில் புதர்களில் மறைந்து நின்று பிரேதப் பரிசோதனை நடைமுறைகள், பொது மக்கள் அஞ்சலி, அடக்கம் வரையில் அனைத்து சம்பவங்களும் அரங்கேறும் வரை பார்த்துக் கண்ணீர்விட்டன!  இதை எப்படி எடுத்துக் கொள்வது?"
-- சுப்பு வேதையா சித்திரவேலு,  கருப்பம்புலம்.  ( நானே கேள்வி... நானே பதில்! ) பகுதியில்.
-- ஆனந்த விகடன். 12-6-2013.  

Saturday, June 11, 2016

மன்மோகன் சிங்.

 "நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தனிச் சிறப்புகளைப் பட்டியல் இடுங்களேன்...?"
     "ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன்.  அதற்கே அசந்துபோவீர்கள்.  2007 தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவருடைய வயது 74 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ( பிறந்த தேதி, 1932 செப்டம்பர் 26 ).  இப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவருடைய வயது 82 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.  பின்னர், கூடுதலாக ஒரு அஃபிடவிட்  தாக்கல் செய்து தவறாகக் குறிப்பிடப்பட்ட வயதைத் திருத்தியிருக்கிறார்கள்.  நாட்டின் பிரதமர் தாக்கல் செய்யும் மனு எந்த லட்சணத்தில் தாக்கல் செய்யப்பட்டிருகிறது என்று பார்த்தீர்களா?  அதுதான் மன்மோகன் சிங்!"
-- கே.சரஸ்வதி, ஈரோடு. ( நானே கேள்வி... நானே பதில்! ) பகுதியில்.
-- ஆனந்த விகடன். 12-6-2013.      

Friday, June 10, 2016

இணைய வெளியிடையே...

*   ஏதென்சில் அகடமஸ் என்றொரு தோட்டம்.  அங்குதான் பிளாட்டோ போன்றோர் தம் மாணவர்களுக்கு
     பாடமெடுப்பார்களாம்.   இந்த தோட்டத்தின் பெயரே 'அகடனி' ஆனது.
*   ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பெரிய போட்டி நிறுவனம் மைக்ரோசாப்ட் .  எனினும், அது ஸ்டீல் ஜாப்ஸ் மரணத்திற்கு தன்
     கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் போற்றியது.
*   தமிழ் எழுத்துகளில் ஒன்பதாவது எழுத்து 'ஐ'.  ஆங்கில எழுத்துகளிலும் ஒன்பதாவது எழுத்து 'ஐ' தான்.
*   தமிழ், ஆங்கிலம், லத்தீன், பிரஞ்சு, உருது மற்றும் சமஸ்கிருத மொழிகளின் முதல் எழுத்து 'அ' ஆகும்.
*   உலகம் முழுவதும் தன் நாட்டை தாய்நாடு என்று அழைக்கிறார்கள்.  ஆனால், ஜெர்மானியர்கள் மட்டும் தங்கள் நாட்டை
    தந்தை நாடு எங்கின்றனர்.
*  டபாஸ் என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து 'பட்டாசு' என்ற வார்த்தை தோன்றியது.  டபாஸ் என்றால் உரத்த ஒலி என்று
    பொருள்.                        
    -- tamilfacts @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.  தினமலர். 04-05-2014. 

Thursday, June 9, 2016

மண்ணெண்ணெய்

சூரிய ஒளியில் இருந்து மண்ணெண்ணெய்
     சில மாதங்களாகவே ஜெர்மன் விண்வெளி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஜெட் எரிபொருளைத் தயாரிக்க முயன்று வந்தனர்.  இதைத் தொடர்ந்து பல கட்டங்களாக நடந்த சோதனைகளின் முடிவில்தான் இந்த அற்புதம் நடந்துள்ளது.  ஆம் வெறும் தண்ணீர், சூரிய ஒளி, கார்பன் -டை- ஆக்சைடைக் கொண்டு தயாரிக்கப்படும் மண்ணெண்ணெயைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இது பாதுகாப்பான எரிபொருள் என்று சோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.  மேலும் டீசல், பெட்ரோல் அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றையும் இதே முறையில் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
--விந்தை உலகம்.  வாழ்வு இனிது.
--  'தி இந்து' நாளிதழ், சனி, மே 3, 2014.  

Wednesday, June 8, 2016

மின்னல் தாக்குதல்.

  வழக்கமாக நிற்கிற, நடக்கிற மனிதனை மின்சாரம் தாக்குகிறபோது, தோள்பட்டை வழியாக மின்சாரம் பாய்ந்து ஒரு நொடிக்குள் இதயத்தை நிறுத்திவிட்டு கால், பாதம் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி விடும்.  மின்சாரம் அல்லது மின்னல் தாக்கி இறந்தவர்கள் அத்தனை பேரின் உடலிலும் இன்லெட், அவுட் லெட்  துவாரங்கள் ஏற்பட்டிருக்கும்.  குறைந்த பட்சம் உடலில் உள்ள ரோமங்களாவது கருகியிருக்கும்.
     மின்னல் தாக்கினால், முதலில் இதயம்தான் செயல் இழக்கும் என்பதால் இதயத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பிவிடுவார்கள்.
     கோடை மழை என்றாலே, இடியும் மின்னலும் இல்லாமல் பெய்யாது என்பார்கள்.  எளிதான வார்த்தையில் சொல்வதானால், மின்னல் என்பது மின்சாரம்தான்.  இது பெரும்பாலும் கோடை மழைக்காலங்களில்தான் ஏற்படும்.  காரணம், வெப்பம் அதிகமுள்ள காலங்களில்தான், வெப்பக் காற்றானது கருந்திரள் மேகங்களை உருவாக்கும்.  காற்று வீசும்போது, இந்த மேகத்துக்குள் இருக்கிற நீர்த்துகள்களும், பனிக்கட்டித் துகள்களும் உரசும்போது மேகத்துக்குள் எதிர்மின்சுமை அதிகமாகிவிடும்.
     நம் பூமியின் மேற்பரப்பில் நேர்மின்சுமை அதிகம் இருக்கும்.  எனவே, அந்த எதிர்மின்சுமைகள் பூமியால் ஈர்க்கப்படுகிறது.  பூமியை நோக்கி வேகமாக வரும் எதிர்மின்சுமை நேர்மின்சுமையை தொட்டவுடன், ( பூமியில் இறங்கியவுடன் ) மின்னல் ஏற்படுகிறது.  அந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான வெப்பம் உருவாவதால், ஏற்படுகிற வெடிப்பு சப்தமே இடி.  இடியும் மின்னலும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும்கூட , ஒலி,ஒளி இரண்டின் வேகமும் வெவ்வேறானவை என்பதால், மின்னலைப் பார்த்த பிறகுதான் நம்மால் இடியைக் கேட்க முடிகிறது.
--- கே.கே.மகேஷ்.     தேசம்.
-- 'தி இந்து' நாளிதழ், வெள்ளி, மே 2. 2014. 

Tuesday, June 7, 2016

காத்திருப்பு !

அமாவாசைக்கு
இறந்து விடுவாள் என
எதிர்பார்த்த அனைவரையும்
ஏமாற்றி காக்க வைத்து
தாமதமாய் இறந்தாள் பாட்டி.

நெய் பந்தம் பிடிக்கும்
இரு பேரன்களும்
மும்பையிலிருந்து வரும்வரை
குளிரூட்டப்பட்ட பெட்டியில்
காத்திருக்கிறாள்

ஆரம், கோடி போர்த்தப்பட்ட
பூத உடல்
அமரர் ஊர்தியில் புறப்பட்டு
போக்குவரத்து நெரிசல்
ரயில்வே லெவல் கிராசிங்கை
சிரமப்பட்டு கடந்தாள்

இறுதியில்
மின்மயானம் சென்றவள்
அங்கும் எரியூட்ட காத்திருக்கிறாள்
அறிவிக்கப்படாத மின்வெட்டினால்...
-- இரா.கமலா, சித்தோடு.
-- தினமலர். இணைப்பு. பெண்கள்மலர். மே 3, 2014.   

Monday, June 6, 2016

ஹைக்கூ ஒன்று...!

"தேர்தல் ஹைகூ ஒன்று...!?"
"தலைநிமிர்ந்தனர்
 அமைச்சர்கள்
 ஹெலிகாப்டரில் அம்மா..."
-- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.  ( நானே கேள்வி... நானே பதில்! ).
-- ஆனந்த விகடன்.  07-05-2014.  

Sunday, June 5, 2016

களைக்கொல்லி

 "இப்போ களைல்கொல்லி மெஷின், களைல்கொல்லி மருந்துன்னு விவசாயத்தில் களைகளுக்கு செலவு செய்யுறோம்.  உண்மையில் இங்கு இருப்பதெல்லாம் நம்முடைய களைகள் இல்லை.  வெளி நாட்டிலிருந்து வந்த களைகள்தான்.  குறிப்பா தோல் அரிப்பு, ஆஸ்துமா அலர்ஜியை உண்டாக்கும் வெட்ட வெட்ட வளரும் பார்த்தீனிய செடி நம் நாட்டுக்கானது அல்ல.  அதை ஒழிக்க எளிய வழி நாம் துத்திச் செடியை வளர்த்தாலே போதும்.  அந்தப் பகுதியில் பார்த்தீனியம் தலைக்காட்டாது.
     மேற்கு தொடர்ச்சி மலை மீது இருந்த தமிழ் தாவரங்களை அழித்து சவுக்கும் தைலமரமும், சீமை கருவேலமும் வளர நாம் வழிவகுத்ததால்தான் நமக்கு மழை பொய்த்துப் போனது.  இதை நான் சொல்லல, அமெரிக்க விவசாயக் கழகம் சொல்கிறது.
     ஊஞ்சலூர் என்ற பெயருக்குப் பின்னால் குறிஞ்சால் என்ற தாவரம் இருக்கு.  இந்த மரத்திலிருந்து பெறப்படும் மரக்கரி சக்திவாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது குறிஞ்சால் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட கரியைக்கொண்டுதான் தென்னிந்திய ரயில்வேயின் வண்டிகள் ஓடின.  இப்போ அதை யாரும் கண்டுக்கவேயில்லை."
-- ஆர்.கண்ணன், படிவீரன் பட்டி.
-- கல்கி இதழ்.  மே 2014.
-- இதழ் உதவி : கனக. கண்ணன்,  செல்லூர். திருநள்ளாறு.

Saturday, June 4, 2016

ஆபத்தான வார்த்தை.

  "புள்ளி விவரங்களில் சராசரி என்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம் ?"
     "சராசரி என்பதே ஒரு ஆபத்தான வார்த்தை !"
     "ஒரு மனிதன் தம்முடைய ஒரு காலை நெருப்பிலும் மற்றொரு காலை பனிக்கட்டியிலும் வைத்திருந்தான் என்றால் சராசரியக அவன் சௌக்கியமாக இருக்கிறான் என்று முடிவு செய்வது புள்ளி விவரம் !
-- 'தெங்கச்சி' கோ. சுவாமிநாதன்.
-- கல்கி இதழ்.  மே 2014.
-- இதழ் உதவி : கனக. கண்ணன்,  செல்லூர். திருநள்ளாறு.  

Friday, June 3, 2016

ஆன்மிகம்.

*  சாரங்கம் என்பது மகாவிஷ்ணுவின் வில்லின் பெயர்.
*  நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்பது சிவவாக்கியர் பாடல்.
*  நைமிசாரண்யம், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
*  விவேக சூடாமணி, ஆதிசங்கரர் இயற்றிய நூல்.
*  அருணகிரிநாதர் இயற்றிய நூல் கந்தர் அலங்காரம்.
*  மாயை என்பது அத்வைத தத்துவத்தின் முக்கியமான கருத்தாக்கம்.
*  ஸ்ரீராமானுஜர் கீதைக்கு எழுதிய உரையின் பெயர் கீதா பாஷ்யம்.
*  தேவதத்தம் என்பது அர்ஜுனனின் சங்கின் பெயர்.
*  அயமாத்மா பிரம்மம் என்பது வேதமகா வாக்கியங்களில் ஒன்று.
*  யமம், நியமம் என்பவை அஷ்டாங்க யோகம் எனப்படும் எட்டு அங்கங்கள் கொண்ட யோக சாஸ்திரத்தின் முதல் இரு
   அங்கங்கள்.
-- ஆனந்த ஜோதி.
--   'தி இந்து' நாளிதழ். வியாழன், மே  1, 2014.                          

Thursday, June 2, 2016

அறுவை சிகிச்சைக்கு புதிய கருவி.

காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்கு புதிய கருவி.
     காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் வாய்ப்பகுதி திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக வாய்ப் பகுதியில் வைக்கப்படும் மவுத் ஹேக் எனும் கருவியை அசையாமல் பொருத்துவதற்காக 3 கம்பிகளால் இணைக்கப்பட்ட ஸ்டாண்ட் ( ஹோல்டர் ) பயன்படுத்தப்படும்.  நோயாளி அசையும்போதோ அல்லது ஏதாவது ஒரு அசைவின்போதோ ஸ்டாண்ட் விலகிவிடும்.  அப்போது, நோயாளியின் வாய்ப் பகுதி திடீரென மூடிக்கொண்டு அறுவை சிகிச்சை செய்வதில் சிரமம் ஏற்படும்.
     இத்தகைய சிரமத்தைப் போக்கும் விதமாக புதுக்கோட்டை முத்து லெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் எம்.பெரியசாமி கண்டுபிடித்துள்ள மவுத் ஹேக் ஹோல்டர் எனும் கருவிக்கு அவரது பெயரைச் சேர்த்து பெரிஸ் மவுத் ஹேக் ஹோல்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
    "காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சைக்கு என தற்போதுள்ள கருவியைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.   இந்தக் கருவியை வயது பேதமில்லாமல் 1 எம்.எம். அளவுக்கு துல்லியமாக நகர்த்தலாம்.  பக்கவாட்டில் இருக்கும் இரண்டு ஸ்குரூ மூலம் இறுக்கி வைத்தால் விலகாது.  அச்சமின்றி அறுவைச் சிகிச்சை செய்யலாம்.  மருத்துவர்களுக்கும் , நோயாளிகளுக்கும் சிரமம் இருக்காது.  தற்போது பயன்படுத்தப்படும் கருவியின் விலை ரூ.1000.  நான் வடிவமைத்துள்ள பெரிஸ் கருவி ரூ. 500-க்கு கிடைக்கும்.  இக்கருவி தொடர்பான தகவல்களுக்கு 97509 69955 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றும் கூறினார் எம். பெரியசாமி.
-- கே.சுரேஷ்.  பூச்செண்டு.
--   'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 30,  2014.      

Wednesday, June 1, 2016

திருமலை புஷ்கரணி திருக்குளம்.

புண்ணிய தீர்த்தங்கள் சங்கமம் கண்டுபிடிப்பு.
     நம்நாட்டில் புண்ணிய தீர்த்தங்களில் திருப்பதி மலை ஏழுமலையான் கோயில் திருக்குளமான சுவாமி புஷ்கரணி முக்கியமானது.   சுவாமி புஷ்கரணியின் பெருமைகளை 'புஷ்கர ஸ்நானம், வராக, வெங்கண்ண தரிசனம், ஜென்ம தன்யம்' என புராணங்கள் கூறுகின்றன.
     பலவிதமான பிரச்னை பிரச்னைகளுக்கு தீர்வு காண திருப்பதி மலைக்கு பக்தர்கள் வந்தால் போதும் என்றும், திருமலை சுவாமி புஷ்கரணியில் புனித நீராடி , அருகில் அமைந்துள்ள வராக சுவாமியை முதலில் தரிசித்து, பின்னர் வெங்கடேஸ்வர சுவாமியை தரிசித்து கர்ம வினைகளிலிருந்து விடுதலை பெறலாம் என்பது இதன் பொருள்.
     திருப்பதி மலையில் 66 ஆயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  எல்லா தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராட இயலாது.  எனவே, இறைவனின் ஆணைக்கு உட்பட்டும், கலியுகத்தில் பக்தர்களின் பாவங்களைப் போக்குவதற்காகவும், ஏழுமலையான் கோயில் அருகில் அமைந்துள்ள திருக்குளமான சுவாமி புஷ்கரணியில் எல்லா தீர்த்தங்களும் சங்கமம் ஆகின்றன என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
     இது குறித்து ஆய்வு செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு எடுத்து, சமீபத்தில் திருக்குளத்தை சுத்தம் செய்தது.  அப்போது, புஷ்கரணியில் ஏராளமான புண்ணிய தீர்த்தங்கள் சங்கமிப்பதை நிபுணர்களின் உதவியுடன் தேவஸ்தானம் கண்டுபிடித்தது.  மேலும், தீவிர முயற்சி செய்து, புண்ணிய தீர்த்தங்கள் சங்கமம் ஆவது தொடர்பான புகைப்படங்களை வெளியிடவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
-- தினமலர்.  30-4-2014.
-- இதழ் உதவி : M.மணிகணட குருக்கள்,  அம்பகரத்தூர்