Wednesday, August 31, 2016

ஸ்மார்ட் போன்

   ஸ்மார்ட் போனில் பேட்டரி டக் டக்கென்று தீர்ந்து விடுவது இப்போது எல்லாருக்குமான பொதுப் பிரச்சனையாகவே ஆகிவிட்டது.  முக்கியமான நேரங்களில் கரெக்டாக பேட்டரி டெட் ஆகி சொதப்பி பலரையும் சிரமத்திற்குள்ளாக்கும்.  இதற்கு தீர்வாக யோட்டா என்னும் ரஷிய நிறுவனம் ஒரு புது வகை டெக்னாலஜியை கண்டுபிடித்திருக்கிறது.  இது என்ன?  பொதுவாக மொபைல் ஃபோனின் பெரும்பாலான பேட்டரி பவர் அதன் டிஸ்பிளே, வைஃபை, மற்றும் பிரவுசிங்கில் தான் அதிகம் செலவாகிறது.  இதனால், 'இன்க் கேஸ் பிளஸ் என்னும் ஒரு கறுப்பு வெள்ளை டிஸ்ப்ளே கொண்ட ஒரு கேஸை மொபைலின் பின்னே பொருத்திவிட்டால் போதும் - பேட்டரி 20 சதவீதத்துக்கும் கீழே குறையும் போது போனில் மெயின் கலர் டிஸ்பிளேவை ஆப் செய்து பின்னால் உள்ள கறுப்பு வெள்ளை டிஸ்ப்பிளேயை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபலை கூடுதலாக 6 - 8 மணி நேரத்திற்கு உபயோகிக்க முடியும்.  ஆப்பிள் / சாம்சங் மொபைலுக்கு இன்க் பிளஸ் கேஸ் ஏற்கனவே ரெடி.  அனேக மொபைல் மாடல்களுக்கு இந்த கேஸை தயாரிக்க ஆரம்பித்து விட்டதாம் இந்த கம்பெனி.
-- ரவி நாகராஜன்.  டெக் மார்கெட் ( அறிவியல்...மருத்துவம்... தொழிநுட்பம் )
-- சண்டே ஸ்பெஷல். தினமலர். 20-7-2014. 

Tuesday, August 30, 2016

மார்பிள்

மார்பிள் கறையைப் போக்க...
     மார்பிள் தரையில் உள்ள கறைகளைப் போக்க சிறந்த முறை பேக்கிங் சோடாவைக் கொண்டு துடைப்பதுதான்.  வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து, மார்பிளில் உள்ள கறைகளை முற்றிலும் நீக்கிவிட முடியும்.  இன்னொரு முக்கியமான விஷயம் டூத் பேஸ்ட் மார்பிள் தரைகளில் உள்ள கறைகளைப் போக்க உதவுகிறது.  டூத் பிரஷ்ஷில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து, கறை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும்.  தேய்த்த பிறகு ஈரமான துணியை வைத்து அந்த இடத்தைத் துடைத்தால், கறைகள் எளிதில் போய்விடும்.  எலுமிச்சைப் பழத்தில் உள்ள சாறு கொண்டும் இதைச் சுத்தப்படுத்தலாம்.  பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் டிஷ் வாஷ் திரவத்தையும் மார்பிள் துடைக்கப் பயன்படுத்தலாம்.  ஆனால் கடினமான சோப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.  அது மார்பிள் தரைக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
-- சொந்த வீடு.  இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி. ஆகஸ்ட் 2. 2014.    

Monday, August 29, 2016

கொசுக்கள்

    உலகில் பாலைவனம் தவிர கொசுக்கள் இல்லாத இடங்களே இல்லை.  14 ஆயிரம் அடி உயரத்தில் மட்டுமல்ல ; ஆர்டிக் பிரதேசத்திலும்கூட கொசுக்களின் ரீங்காரம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
     இந்தக் கொசுவின் வாய் குழல் வடிவில் நீண்டு தையல் ஊசிபோல் அமைந்திருக்கும்.  முனியில் ஒரு சிறிய ரம்பமும் இருக்கிறது.
பெண் கொசுக்கள் நமது உடலில் மென்மையாய் அமர்ந்து, ரம்பத்தால் ஒரு நுண்ணிய துளையை போடுகிறது.  அதன்பின் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்ற ஊசியை உள்ளே நுழைக்கிறது.  ஒரு குழல் வழியே எச்சிலை உள்ளே செலுத்தி, மறுகுழல் வழியே ரத்தத்தை உறிஞ்சுகிறது.  இந்த எச்சில் நம் ரத்தத்தை உரிஞ்சும்போது உறைந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
     இப்படி தடையில்லாமல் ரத்தத்தைக் கொசு உறிஞ்சிக் கொண்டேயிருக்கும்.  வயிறு நிரம்பிய பிறகு உபரி ரத்தம் குதம் வழியே வீணாக வழிந்துகொண்டிருக்கும்.
      இதில் ஆச்சரியம் என்னவெனில், பெண் கொசுக்கள்தான் இப்படி ரத்தத்தை உறிஞ்சும் வேட்டைகளில் ஈடுபடுகின்றன.  ஆனால் ஆண் கொசுக்களுக்கு இத்தகைய போர்க்குனம் கிடையாது.  சுத்த சைவம்.  பூ, பழம் மற்றும் மொக்குகளில் கிடைக்கும் திரவம்தான் தினசரி உணவு.  ஆண் கொசுக்களுக்கு ரத்த வாடை என்றால் அலர்ஜி!
-- டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்.  ஆச்சரியங்கள் 1000.
--  தினமலர். சிறுவர்மலர். ஜூலை 25, 2014.   


Sunday, August 28, 2016

ரயில்

"ரயிலில் டூ டயர், த்ரீ டயர் என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன?"
     Tier என்றால் வரிசை என்று பொருள்.
     கார், ஸ்கூட்டர் போன்றவற்றில் சக்கரத்தில் உள்ளவை வேறு டயர் ( Tyre ).
     2&tier என்றால் கீழும் மேலுமாக இரண்டு வரிசைகள்தான் இருக்கும்.  ( அதாவது இரண்டு பேர் படுத்துக் கொள்ளும்படி ) .
எனவே ?டூ டயர் எனப்படும் ஒரு தடுப்பறைப் பிரிவில் மொத்தம் ஆறு பேருக்கான படுக்குமிடங்கள் இருக்கும்.
     3 டயர் என்றால் மேலும் கீழுமாக மூன்று பேர் படுக்கும்படியான ஏற்பாடு.  ஆக,எதிரும் புதிருமாக ஆறு பேரும், பக்க வாட்டில் இருவருமாக 3 டயர் தடுப்பறை பிரிவில் எட்டு பேருக்கான படுக்கும் இடம் இருக்கும்.
--  ஜி.எஸ்.எஸ். ?! குட்டீஸ்சந்தேக மேடை.
-- தினமலர். சிறுவர்மலர். ஜூலை 25, 2014.   

Saturday, August 27, 2016

வினா - விடை.

*  "இந்தியாவின் தேசிய மொழி எது ?"
   -- அப்படி ஒன்று இல்லவே இல்லை.  இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக
     இருக்கின்றனவே தவிர, பிரத்தியேக தேசிய மொழி என்று ஒன்று கிடையாது!"
*  "சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள அம்மா மருந்தகங்களில், மருந்து மாத்திரைகளுக்கு எத்தனை சதவிகிதம் தள்ளுபடி
     அளிக்கப்படுகிறது?"
    -- 10 சதவிகிதம்.
--  ஆனந்த விகடன்.  9-7-2014.

Thursday, August 25, 2016

"சமீபத்திய ஆச்சர்யம்"

"ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், இரண்டாம் உலகப் போரில் லட்சோப லட்சம் மனிதர்கள்  கொடூரமாக மரணம் அடையக் காரனமாக இருந்தவர்.  ஆனால், அவர் காலகட்டத்தில்தான் ஜெர்மனியில் மிருகவதைத் தடுப்புச் சட்டம் திருத்தமாக வடிவமைக்கப்பட்டு அமலாக்கப்பட்டதாம்.  ஹிட்லரின் நாஜி படைப் பிரிவின் உயர் பதவிகளில் இருந்த பலர், மிருகங்களின்பால் அளவில்லாத பாசமும் காதலும் கொண்டிருந்தார்களாம்.  இந்த வினோதத்தை என்னவென்று சொல்வது?"
-- அ.குணசேகரன், புவனகிரி.
"அண்ணா பெயரைச் சொல்லி இனி ஓட்டு வாங்க முடியாதா?"
"அந்தத் தலைமுறையின் விளிம்பில் இருக்கும் ஓர் உடன்பிரப்பு சொன்னது இது: 'அண்ணா அன்று எம் பலம்.  இன்று வெறும் எம்பளம்!"
-- தாமு, தஞ்சாவூர்.
-- நானே கேள்வி... நானே பதில்...!  ( தொடரில் இருந்து...)
-- ஆனந்த விகடன்.  9-7-2014. 

Wednesday, August 24, 2016

தெரிஞ்சுக்கோங்க!

ஹிரோஷிமா தினம்  (  ஆகஸ்ட் 6ம் தேதி ).
     இரோசிமா அல்லது ஹிரோஷிமா ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும்.  இது ஹோன்ஷு தீவில் உள்ளது.  இந்த நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது முதன்முதலில் அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது.  இந்த அணுகுண்டின் பெயர் சின்னப் பையன்.
      இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, அமெரிக்கா நாடு அணுகுண்டு வீசி தாக்கியது.
     முதல் அணுகுண்டு 'லிட்டில் பாய்' எனும் சின்னப் பையன் என்ற 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்தது 'பி - 29 ரக எலோலாகேய்' என்ற அமெரிக்க விமானம் ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் உலகின் முதல் அணுகுண்டை வீசியது.  இந்த அணுகுண்டு வெடிப்பால் ஏற்பட்ட அழிவு அப்பகுதியில் 4 சதுர மைல் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியது.  அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள் தொகை 3 லட்சத்து 59 ஆயிரம்.  ஏறத்தாழ 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர்.  அணுகுண்டின் கதிவீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப் பட்டனர்.
     குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார்.  ( அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா  இதனை செய்தது எனவும் கூறப்படுகிறது.
     இந்த கோரமான சோக நாளினை நினைவு கூர்வதற்காகவும், பலியான ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணுஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்துவதற்காகவும், இத்தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
-- தினமலர் . சிறுவர்மலர். ஆகஸ்ட் 1, 2014.                        1.8.14.  

Tuesday, August 23, 2016

சுகம் பெற சுலபமான வழி

தர்ப்பணம் புரிவோர் நதி அல்லது குளத்தில் நீராட வேண்டும்.  அதன்பின் இறந்துபோன முன்னோர்களை மனதால் நினைத்து இரண்டு கைப்பிடி நீர் எடுத்து தெற்குப் பார்த்து விடுதல்,  இரு கைகளையும் அகல விரித்து தெற்குப் பார்த்து முன்னோர்களை தியானித்தல்,  இறந்தவர் உருவப்படத்துக்கு படையல் இடுதல், புரோகிதருக்கு தானம் தருதல், முன்னோர் சுமங்கலியாக இறந்திருந்தால், வசதி இல்லாத ஏழைப் பெண்ணுக்கு புடவை - ரவிக்கை, தாம்பூலம் தந்து ஆசி பெருதல், ஏழைகளுக்கு உனவிடுதல் - துறவியர்களுக்கு உணவிடுதல் என்று பல வழிகளில் முன்னோர்களை நினைவு கூறலாம்.  சக்திக்கேற்ப செயல்பட்டு முன்னோர் அருள் பெறுவோமாக!
--   தினமலர். பக்திமலர். ஜூலை, 24, 2014.     

Monday, August 22, 2016

எள்ளின் மகிமை

  நீத்தார் வழிபாட்டில் எள் முக்கிய இடம் பெறுகிறது.  ஒரு முறை மகாவிஷ்ணு தன் தேவியரான லட்சுமியை தேடித் திரிய வேண்டியதாயிற்று.  அப்போது அவர் உடம்பில் வியர்வை பெருக்கெடுத்தது.  அந்த வியர்வைத் துளிகளிலிருந்து எள் உண்டாயிற்று என்று புராணங்கள் சொல்கின்றன.
     எள் இருக்குமிடத்தில் பூதம், பிசாசு முதலான தீய சக்திகள் விலகிவிடும்.  எள்தானம் செய்தால் எல்லா வகையான தோஷங்களும் விலகும்.  நவக்கிரக தோஷங்களில் சனீஸ்வர தோஷத்தை நீக்கும் சக்தி எள்ளுக்கு உண்டு.
     இப்படிப்பட்ட பலன்களை உடைய எள்ளினை திவசங்களிலும் தர்ப்பணங்களிலும் பயன்படுத்துவார்கள்.  திவசம் மற்றும் தர்ப்பணத்துக்கு கருப்பு எள்ளைத் தான் பயன்படுத்த வேண்டும்.  எள்ளைத் தண்ணீருடன் கலந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.  இதனால் முன்னோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
-- அர்த்தமுள்ள சாஸ்திரங்கள்.
--   தினமலர். பக்திமலர். ஜூலை, 24, 2014.   

Sunday, August 21, 2016

முன்னோரை வழிபடவும்

  வேதவேள்விகளைப் புரிவதை விடவும், கோயில், குளங்களுக்குச் சென்று சாமி கும்பிடுவதை விடவும், முன்னோர்களை வழிபடுவது மூக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
மாதுர் தேவோ பவ:  பிதுர் தேவோ பவ:
என்பது சாஸ்திரத் தொடர்.
முன்னோரின் ஆசை
     தென்புலத்தில் இருக்கும் முன்னோர்களின் எண்ணத்தில் சில ஆசைகள் உண்டு.  அவர்கள் இசைப்பதாக சொல்லப்பட்டுள்ள சில கீதங்கள் அவர்களின் அபிலாஷைகளை காட்டக்கூடியன.  புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச திரயோதசி அன்று, அதாவது, மாளய பட்சத்தில் செய்யப்படும் திவசம் மாசி அமாவாசையில் தரப்படும் தில தர்ப்பணம் அவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கக்கூடியது என்று ஒரு பாடல் சொல்கிறது.
-- தினமலர். பக்திமலர். ஜூலை, 24, 2014.

Saturday, August 20, 2016

வாசுகி தவம் செய்த இடம்

  தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைய மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினார்கள்.  வலி பொறுக்க முடியாத வாசுகி நஞ்சைக் கக்கியது.  நஞ்சைக் கண்டு அஞ்சிய ட்தேவரும் அசுரரும் சிவபெருமானை வேண்டினர்.  சிவபெருமானும் அந்த நஞ்சை எடுத்து உண்டார்.
     அமுதம் கிடைக்காத கோபத்தில் அசுரர்கள் வாசுகியைச் சுருட்டி பந்துபோல் எறிந்தனர்.  அது கடற்கரையில் அமைந்திருந்த ஒரு மூங்கில் காட்டில் விழுந்தது.  உடல் நைந்து உயிர் போகும் நிலையில் இருந்த அப்பாம்பின் வாயிலிலிருந்து உயிர் தலைக்கேறிப் பிழைத்துக்கொண்டது.  சிவன் தனது நஞ்சை உண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்று மனம் வருந்திய வாசுகி, சிவனிடம் மன்னிப்பு வேண்டித் தவம் இருந்தது.  சிவனும் அதன் தவத்திற்கு இரங்கிக் காட்சி தந்தார்.
     வாசுகி தன் பாவத்தைப் பொறுத்தருளியதற்கு சிவனிடம் நன்றி கூறியது.  தான் தவம் செய்த மூங்கில் காட்டிலேயே கோயில் கொண்டு வழிபட வருவோரின் கேது கிரகத் தொல்லைகளை நிவர்த்தி செய்யுமாறு வேண்டியது.  வாசுகி வழிபட்ட இந்த இடம் மூங்கில் தோப்பு என்று அழைக்கப்படுகிறது.  இதற்கு அருகில் உள்ள கேது பரிகாரத் தலம்தான் நாகை மாவட்டத்தில் உள்ள கீழப்பெரும்பள்ளம்.  இங்கு செல்பவர்கள் மூங்கில் தோப்பையும் தரிசனம் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
-- ஸ்ரீமதி.  பரிகாரத் தலம்.  ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை 24, 2014.  

Friday, August 19, 2016

டிப்ஸ்...டிப்ஸ்...

*   பெயின்ட் அடிக்கும்போது கைகளில் பட்டு விட்டால், சிறிது சமையல் எண்ணெயை கைகளில் நன்றாகத் தேய்த்துக்
    கொள்ளுங்கள்.  பிறகு, சோப்பு போட்டுக் கழுவினால் பெயின்ட் கறை நீங்கி கைகள் சுத்தமாகி விடும்.
*   கெட்டியாக இருக்கும் வெல்லத்தை எளிதாக பொடிக்க வேண்டுமா?  கேரட் துருவியுல் பெரிய துளைகள் உள்ள பக்கம்
     வெல்லக் கட்டியை துருவினால் பூப்பூவாக உதிர்ந்து விடும்.  ( வெல்லத்தை அளந்து எடுக்க வேண்டிய சமயங்களில் இப்படி
     துருவிக் கொள்ளலாம் ).
*   கடலை மாவில் பஜ்ஜி செய்வதைவிட கடலைப்பருப்பை கால் மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து கெட்டியாக அரைத்து பஜ்ஜி
     செய்தால் அருமையாக இருக்கும்.  பருப்புடன் நான்கு மிளகாய் வற்றலையையும் சேர்த்து ஊறவைத்து அரைத்துக் கொண்டால்
    மிளகாய் பொடி சேர்த்து செய்வதை விட சுவையாக இருக்கும்.
*  பிரெட்டில் தடவ வெண்ணையோ, ஜாமோ இல்லையா?  கவலை வேண்டாம்.  ஒரு பிரெட் துண்டின் ஒரு பக்கம் நெய்யையும்
    மற்றொரு துண்டின் மேல் பக்கம் தேனையும் தடவி, இரண்டையும் ஒட்டி ஃபிரிட்ஜில் சில நிமிடங்கள் வைத்து எடுத்து
    சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.  
*   காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைக்கும்போது பீட்ரூட் , கேரட் , கத்தரிக்காய் போன்ற காய்களை துளைகளுடன் இருக்கும்
    பைகளில் வைத்தால் இரண்டு நாட்களில் வாடிவிடும்.  இதைத் தவிர்க்க காய்களை வாங்கி வந்ததும் கழுவி, அந்த
    ஈரத்துடனேயே இந்தப் பைகளில் போட்டு வைத்தால் மேலும் சில நாட்களுக்கு ஃபிரெஷ்ஷாக இருக்கும்.  பூசணிக்காயைக்    
    கூட இப்படி கழுவி, தோல் சீவி, துண்டுகளாக்கி இந்த பைகளில் போட்டு வைத்தால் அழுகாமல் இருக்கும்.
-- அவள் விகடன். ஜனவரி 4, 2008. 

Thursday, August 18, 2016

நம்மாழ்வார்

புளியமரப் பொந்தில் நம்மாழ்வார் வசித்தது ஏன்?
   மகாவிஷ்ணு ராமராக அவதாரம் எடுத்தார். அந்த அவதாரத்தின் இறுதிக் கட்டம்.  ராமபிரான் இந்த பூவுலகத்தை விட்டுச் செல்ல இன்னும் 3 நாட்கள்தான் இருக்கிறது..  அப்போது ராமர் தன் தம்பியான லட்சுமணனை அழைத்து தான் தனிமையில் இருக்க விரும்புவதாகவும் தன்னை யாரையும் சந்திக்க அனுப்பதே என்றும் கூறினார்.  ஆனால், ராமபிரானை கடைசியாக பார்க்க வேண்டும் என்ற ஆசையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார்.  அவரை உள்ளே விடாவிட்டால் எங்கே அவரது சாபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்று லட்சுமணன் பயந்தார்.  எனவே ராமரை பார்க்க அனுமதித்து விட்டார்.
     ராமரை பார்த்து விட்டு துர்வாசர் சென்றபின், லட்சுமணனை ராமர் அழைத்தார்.  தான் சொன்ன சொல்லை மீறியதால் மரமாகப் போவாய் என்றார்.  இதனால் அதிர்சி அடைந்த லட்சுமணன் அண்ணா தங்களை பிரிந்து என்னால் எப்படி இருக்க முடியும் என்றார்.
     அதற்கு ராமபிரான் கவலைப்படாதே அங்கும் நான் உன்னோடு இணைந்திருப்பேன்.  நான் இந்த அவதாரத்தில் சீதையை காட்டிற்கு அழைத்துச் சென்ற பாவத்திற்கு 18 ஆண்டுகள் தியான சிந்தனையில் ஒரே இடத்தில் இருக்க வேண்டியுள்ளது.  அப்போது மரமாக வலரும் உனது பொந்தில் நான் வாழ்வேன் என்றார்.
     ராமாவதாரத்திற்கு முன்பு கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாக கிருஷ்ணர் பிறந்தார்.  அப்போது வசுதேவரும் தேவகியும் தங்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வேண்டினர்.  அதற்கு கிருஷ்ணர் கலியுகத்தில் மோட்சம் கிடைக்கும் என்றார்.
     இந்த விவரங்களை ராமபிரான் லட்சுமணனிடம் கூறினார்.  கலியுகத்தில் நான் அவர்களுக்கு மகனாகப் பிறந்து அவர்களுக்கு மோட்சம் கொடுத்து உன்னிடம் வந்து 16 ஆண்டுகள் இருப்பேன் என்றார்.  மேலும் ஒரு மோதிரத்தை எடுத்து அதை உருட்டி விட்டார்.  அது எங்கு போய் நிற்கிறதோ அங்கு மரமாக பிறப்பாய் என்றும் கூறினார்.  அது ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி நதியின் தென்புறம் நின்றது.  அங்கே லட்சுமணன் புளியமரமாக தோன்றினார்.  வசுதேவர் தேவகி தம்பதியர்  ஆழ்வார் திருநகரியில் காரி - உடைய நங்கை என்ற தம்பதியாக பிறந்தனர்.  காரி குறுநில மன்னராக இருந்தார்.
     ( வசுதேவர் ராமாயண காலத்தில் காசிப முனிவராக பிறந்தார்.  அவர்தான் அடுத்த பிறவியில் காரியாக பிறந்தார் ).  அவருக்கு மகனாக ராமபிரான் நம்மாழ்வாராகப் பிறந்தார்.  குழந்தை பருவத்தில் நம்மாழ்வார் தவழ்ந்து சென்று புளியமரத்தில் போய் அமர்ந்து கொண்டார்.  அங்கிருந்துதான் பல்வேறு திவ்யதேசத்தை பற்றி பாசுரங்கள் எழுதினார்.
-- பொன்மதி.  
-- உங்கள் வாழ்க்கை  வழிகாட்டி. ஆன்மிக மாத இதழ்.  ஜூன் - 2014.
--  இதழ் உதவி :  கனக.கண்ணன்,  செல்லூர்.                                .

Wednesday, August 17, 2016

ராமனின் தோஷம்

மூன்று தோஷங்கள்
     விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' ஏற்பட்டது.  இந்த தோஷத்தை அவர் போக்கிக்கொண்ட இடம்தான் ராமேஸ்வரம்.
     ராவணன் மாவீரனும்கூட !  கார்த்த வீர்யார்ஜுனனையும், வாலியையும் தவிர, தான் சண்டை போட்ட அனைவரையும் ஜெயித்தவன்.  இப்படிப்பட்டவனைக் கொன்றதால், ராமருக்கு 'வீரஹத்தி தோஷம்' உண்டாயிற்று.  இந்த தோஷத்திற்குப் பிராயச்சித்தமாகத்தான் வேதாரண்யத்திலே ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமர்.  ராவணன் சிவபக்தன்.  வீணை வாசிப்பதில் நிபுணன்.  சாம கானம் பாடுவதில் வல்லவன்.  இந்த மாதிரியான நல்ல அம்சங்களை 'சாயை' என்பார்கள்.  'சாயை' என்றால் ஒளி, நிழல் என்ற இரண்டு அர்த்தங்களும் உண்டு.  ஒளி என்ற பெருமை வாய்ந்த குணங்களை எல்லாம் குறிப்பிடும் 'சாயை' உடைய ராவணனை வதம் செய்ததால், ராமருக்கு 'சாயா ஹத்தி' தோஷம் உண்டாயிற்று.  இது தீர்வதற்காக பட்டீஸ்வரத்தில் ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமர்.
-- சிவ.அ.விஜய் பெரியசுவாமி.  ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை 24, 2014.                                  

Tuesday, August 16, 2016

சுட்டது நெட்டளவு

*   அகத்தின் அழகு அரியர்ஸில் தெரியும்!
*   கண்டது கற்க பைத்தியமாவான்!
*   ஹோட்டலுக்கு போனாலும் கூட்டுறவு ஆகாது!
*   மாதா ஊட்டாத சோற்றை பாஸ்ட் புட் கடை ஊட்டும்!
*   அடிமேல் அடி வைத்தால், ஆட்டோவும் நகரும்!
*   கையில் செல்லிருக்க, 'கேர்ள் பிரண்டு'க்கு அலைவானேன்?
*   பயந்தவன் கண்ணுக்கு, பார்ப்பவரெல்லாம் காதலியின் அப்பா!
*   நித்தியம் கிடைக்குமா ஓசி சமோசா!
*   மனைவியின் கோணல், மணிபர்சால் நிமிரும்!
-- கிரிஜா மணாளன்.   ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஜூலை 19, 2014.   

Monday, August 15, 2016

கோயில்கள்

   வட நாட்டுக் கோயில்களும், தென்னாட்டுக் கோயிகளும் அமைப்பில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது ஏன்?
     பாரதத்தின் உட்பரப்பை நாகரம், வேஸரம், திராவிடம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறது சிற்ப சாத்திரம்.  வட நாட்டுக் கோயில் அமைப்புகளுக்கு நாகரம் என்று பெயர்.  இதில் சிறந்த சுதை வேலைகள் இருக்காது.  மகாராஸ்டிரம், மத்திய பிரதேசம் போன்ற பாரதத்தின் நடுப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு வேஸரம் என்று பெயர்.  இதன் அமைப்பு சற்று நாகர விமானங்கள் போன்று இருந்தாலும், சிற்ப சுதை வேலைகளில் தென்னாட்டுக் கோயில்களை ஒத்து இருக்கும்.  தென்னிந்தியத் திருகோயில்களுக்கு திராவிடம் என்று பெயர்.  கலை சிற்ப சுதை வேலைப்பாட்டுடன் கண்ணைப் பறிக்கும் விமானங்களும் கோபுரங்களும் இதில் அடங்கும்.  அந்தந்த பகுதியைச் சார்ந்த சிற்ப சாத்திர வல்லுனர்களால் அமைக்கப்பட்ட மற்றும் எழுதப்பட்ட நூலகளின் அடிப்படை வேறுபாடுகள்தான் இவை.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.  ( அறிவோம் !  தெளிவோம் ! )
-- தினமலர். பக்திமலர். ஜூலை 10, 2014. 

Sunday, August 14, 2016

தெரியுமா?

*   சீனாவைச் சுற்றி மொத்தம் 11 நாடுகள் உள்ளன.
*   பிறந்த குழந்தை அழுதால் கண்ணீர் வராது.  ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்பட குறைந்தது 15 நாட்கள் ஆகும்.
*   காந்திஜி முதன் முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.
*   கைரேகையை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.
*   ஜூடோ கலையை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் ஜப்பானியர்கள்.
*   சூரியனை மிக வேகமாக ( மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.
*   காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் பழக்கம் நாய்க்கு உண்டு.
*   மனிதன் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டும்.
*   இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் சொந்த ஊர் திருச்சி.  அங்குள்ள திருவானைக்காவல் என்ற ஊரில்
     பிறந்தார்.
*   உலகிலேயே மிகச் சிறிய கண்டம் ஆஸ்திரேலியா.
-- மாயாபஜார். இனைப்பு.
--  'தி இந்து' நாளிதழ். புதன், ஜூலை 16,  2014.                            17.7.14.

Saturday, August 13, 2016

உயரமான ரயில் பாலம்


உலகிலேயே மிக உயரமான ரயில் பாலம்
     இமயமலையில் உள்ள செனாப் நதியின் மேலே இமயமலையின் நீண்ட மலைத்தொடரையும் காஷ்மீர் மாநிலத்தையும் இணைக்கும் இந்த இரும்பு பாலம் ஆர்ச் வடிவில் உருவாகி வருகிறது.  ஆயிரத்து 177 அடி உயரன் கொண்ட இந்த பாலம் 2016ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.  அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் இந்த பாலம் வேகமான சூறைக்காற்றையும், இயற்கை பேரிடர்களையும் தாங்கக்கூடியது.  ஜம்முவில் இருந்து பாரமுல்லாவுக்கு இப்போது இருக்கும் சாலையில் பயணித்தால் 6 மணி நேரம் ஆகும்.  இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் அரை மணி நேரத்தில் சென்று சேர முடியும்.  இந்த பாலத்தைக் கட்ட இந்திய ரயில்வேயின் கொங்கன் ரயில்வே 550 கோடி ரூபாயை செலவழித்துள்ளது.  பாலத்தின் முக்கிய பகுதியான மெயின் ஆர்ச் இரண்டு கேபிள் கிரேன்களால் இணைக்கப்பட்டு வருகிறது.  1315 மீட்டர்கள் நீளமுள்ள இந்த பாலத்தின் பாதையை அமைக்க 25 ஆயிரம் டன்கள் இரும்பு தேவைப்படுகிறது.  கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத இடங்களில் ஹெலிகாப்டர் மூலமாக எடுத்துச் செல்கின்றனர்.
-- மாநிலங்கள்.
-- தினமலர். 13-7-2014.  

Friday, August 12, 2016

நோய் எதிர்ப்பு சக்தி

சிசேரியன் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.
     சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.  எலிக்குஞ்சுகளை வைத்து சோதனை செய்ததில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
     அறுவை சிகிச்சை மூலம் பிறந்த எலிகுஞ்சுகளில் குறைந்த எண்ணிக்கையில் நோய் எதிர்ப்பு செல்கள் காணப்பட்டன.  அதே சுக்கபிரசவமாக, இயற்கையாக பிறந்த எலிக்குஞ்சுகளிடம் இந்த செல்கள் அதிக எண்ணிக்கையில் கானப்பட்டன.
     அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குட்டிகளைவிட இயற்கையான பிரசவத்தில் பிறந்த குட்டிகளுக்குத் தாயிடமிருந்து அதிக பாக்டீரியாக்கள் கிடைத்தன.  தங்களிடமே உள்ள ஆபத்தில்லாத மூலக்கூறுகளையும் மற்ற இடங்களில் இருந்து வந்த ஆபத்துள்ள மூலக்கூறுகளையும் உணரும் ஆற்றல் குட்டிகளுக்கு உள்ளன.
     நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு 'டைப் -1' ரக நீரிழிவு நோயும், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையும் அதிகம் காணப்படுவதை மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
     இம்யுனாலஜி ( நோய் எதிர்ப்பியல் ) என்ற மருத்துவப் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
     பிரசவ வலி என்பது கர்ப்பிணிக்குத் துயரத்தைத் தந்தாலும் அவருடைய குழந்தை நோயைத் தாங்கும் வலிமையைப் பெற இது அவசியம் என்று பாரம்பரிய வைத்தியர்கள் கூறுவார்கள்.  அதை இந்த ஆய்வும் வழிமொழிகிறது.
--சி.ஹரி.  சேதி புதிது.  நலம்வாழ இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய், ஜூலை 15,  2014. 

Thursday, August 11, 2016

படிக்க உதவும் மோதிரம்

பார்வையற்றோர் படிக்க உதவும் மோதிரம்
     பத்திரிகை, புத்தகம் ஆகியவற்றைப்  பார்வையற்றோர்களும் படிக்கும் விதமாக மோதிர வடிவிலான புதிய கருவியை அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உருவாக்கி உள்ளது.  இதில், 3டி பிரிண்டர், சிறிய கேமரா, சிந்தடிக் வாய்ஸ் ரீடர் ஆகியவை உள்ளன.  சற்றே பெரிய சைஸ் மோதிரம் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கருவியைப் பார்வையற்றவர் விரலில் மாட்டிக் கொண்டால் போதும்.
     புத்தகம், செய்தித்தாள், ஓட்டல் மெனு கார்டு என எதுவாக இருந்தாலும் அதன் மீது விரலை வைத்து வரிசையாகத் தடவிச் செல்ல வேண்டும்.   அப்போது விரல் அசைவு மூலமாக அந்த எழுத்துகள் ஸ்கேன் செய்யப்படும்.  பின்னர், அந்த எழுத்துகள் ஒலி வடிவமாக்கப்பட்டு  வைப்ரேட் இயந்திரங்கள் மூலமாக வாய்ஸ் சிஸ்டத்துக்கு அனுப்பப்படும்.  அங்கிருந்து அந்த வார்த்தைகள் அனைத்தும் ஒலி வடிவமாக வெளியேறுகின்றன.  அதைப் பார்வையற்றவர் கேட்டு எழுதியிருப்பதை அறிந்துகோள்ள முடியும் என இதை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் ராய் சில்கார்ட் செயல்முறை விளக்கம் அளிக்கிறார்.
     இந்த மோதிரக் கருவியின் விலையை இன்னும் நிர்ணயிக்கவில்லை.  விற்பனைக்கு அனுப்பும்போது அது குறித்து முடிவு செய்யப்படும் என்கிறார்.  அதே நேரத்தில் அமெரிக்காவில் இந்தக் கருவிக்குக் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புகின்றனர்.  ஏனெனில் அமெரிக்க மக்கள் தொகையில் 1 கோடி 12 லட்சம் பேர் பார்வையற்றவர்கள்
-- வை.ரவீந்திரன்.  வெற்றிக்கொடி. இணைப்பு.
--  'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஜூலை 14,  2014.

Wednesday, August 10, 2016

கடல்

 கடலைக் குறிப்பிட , தமிழில் 200 - க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாகச் சொல்கிறார் புத்தன் துறையைச் சேர்ந்த தாமஸ்.  அந்த சொற்களில் சில :  அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவு நீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு...
--சமஸ்.  ( நீர், நிலம், வானம். )  கருத்துப் பேழை.
--  'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஜூலை 14,  2014.  

Tuesday, August 9, 2016

தண்ணீர்

தண்ணீரில் என்னென்ன இருக்க வேண்டும்?
     குடிநீராக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைந்துள்ள மொத்த உப்பு 500 மி.கிராமிலிருந்து அதிகபட்சமாக 2,000 மி.கிராம் வரை இருக்கலாம்.  அதேபோல, கலங்கல் 1-5 மி.கிராமும், பிஎச் 6.5 - 8.5,  காரத்தன்மை, கடினத்தன்மை, சல்பேட் 200 - 600 மி.கிராம்,  கால்சியம் 30 -100 மி.கிராம், இரும்பு 0.3 மி.கிராம், மாங்கனீசு 0.1 - 0.3,  அமோனியா 0.5, நைட்ரேட் 45, குளோரைடு 250 - 1000,  புளோரைடு 1.0 - 1.5,  வீழ்படிவு 0.2 - 1.0 மி.கிராம் மற்றும் இதன் நிறம், மணமும் உரிய அளவில் இருந்தால் மட்டுமே அந்தத் தண்ணீர் குடிப்பதற்குத் தகுதியானதாக இருக்க முடியும்.
     இதேபோல கட்டுமானத்திற்கும் பிஎச் 6.0 மி.கிராம்,  காரத்தன்மை 250 மி.கிராம்,  அமிலத்தன்மை 50 மி.கிராம்,  கரிமம் 3000 மி.கிராம்,  படிந்திருக்கும் உப்பு 2000 மி.கிராம்,  குளோரைடு 2000 மி.கிராம்,  சல்பேட் 400 மி.கிராம் என்ற அளவில் உள்ள தண்ணீரை மட்டுமே கட்டுமானத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.  இதில் கான்கிரீட் போடும்போது குளோரைடு அதிகபட்சம் 500 மி.கிராம் உள்ள தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசு வரையறை விதித்துள்ளது.
-- கே சுரேஷ்.  சொந்தவீடு.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஜூலை 12,  2014. 

Monday, August 8, 2016

வியாழன் நிலவு

வியாழன் நிலவில் நீரூற்று !
     வியாழனின் துணைக்கோளான யூரோப்பாவில் நீர்நிலைகள் இருப்பதும், உறைந்து கிடக்கும் பனிப்பாறைகளில் இருந்து நீராவியானது நீரூற்றைப் போல் பீறிட்டு பாய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.  இதனால், வியாழனின் நிலவான யூரோப்பாவில் உயிரினங்கள் வாழும் சாதியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது.
     சூரிய குடும்பத்திலுள்ள வியாழன் கிரகத்தைப் பற்றி ஆராய அமெரிக்காவின்  புளோரிடா மாகாணத்திலிருந்து கடந்த 1990ம் ஆண்டு ஹப்பின் விண்வெளி தொலைநோக்கி செலுத்தப்பட்டது.
     வியாழனின் 67 துணைக்கிரகங்களில் ஒன்றான யூரோப்பாவில் இரண்டு பெரிய நீர்நிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
     பனிக்கட்டிகளால் மூடப்பட்ட யூரோப்பாவில், நீர்நிலைகள் இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், யூரோப்பாவின் தென் துருவத்தில் இரண்டு நீர்நிலைகளிலிருந்து 200 கி.மீ. தூரத்திற்கு நீராவி பீரிடுவது படமாக்கப்பட்டுள்ளது.
     இப்போது பெறப்பட்டுள்ள புகைப்படங்களின் மூலம் யூரோப்பாவின் தென் துருவதிலிருந்து மங்கலான புறஊதா ஒளி வெளியேறி, வியாழனின் காந்த சக்தியால் ஈர்க்கப்படுவது உறுதியாகியுள்ளது. அதிவேகமாக பாயும் கீற்றால் நீரின் மூலக்கூறுகள் பிளவடைந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அயனிகள் நீராவிகளாக மாறி 200 கி.மீ.உயரத்திற்கு பீரிடுவது தெரிய வந்துள்ளது.
--தினமலர்.  15-12-2013.                       

Sunday, August 7, 2016

தாய்மை

  மருத்துவ உலகம் ரொம்ப அட்வான்ஸாகி வந்தாலும் தாய்மை என்பது என்றுமே கடவுளின் அற்புதம்னு சில பேர் கூறினாலும் - டெஸ்ட் டியூப் குழந்தை சமாச்சாரம் இப்ப தெருவுக்கு தெரு ஃபெர்ட்டிலிட்டி கிளினிக் வடிவில் இந்தியா முழுவதும் உதயமாகிறது.  இப்ப அந்த அதிசயத்தை விட குழந்தை வேண்டும் வேண்டாம்னு ஒரு பட்டனை தட்டினா போதும் உங்க மனைவி கர்ப்பம் ஆகுறதும் வேண்டாம்ங்கிறதும் உங்க கையில்...
     இப்போது மைக்ரோ சிப்களை கண்டுபித்திருக்கிறார்கள்.  இதனை கீழ் வயிறு / கைகளின் மேல் பகுதி அல்லது பின்புற பகுதிகளில் ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி கொண்டால் எப்ப கருத்தரிக்க வேண்டாம்னு நினைக்கிறீங்களோ அப்பல்லாம் உடனே ஒரு பட்டனை தட்டினா போதும்.  இந்த மைக்ரோசிப் levonorgestrel என்னும் சுரப்பியை ரிலீஸ் செய்யும்.  உங்க உடம்பில் அப்ப கருத்தரிப்பு ஏற்படாது.  சரி குழந்தை பெற்று கொள்ளலாம்னு நினைக்கிறவங்க அன்னைக்கு பட்டனை அழுத்தாமல் இருந்தா குழந்தை பெற முடியும்.  இதை ஒருமுறை உடலில் பொருத்தி கொண்டால் 16 வருஷம் வேலை செய்யும்.  இதுக்கு தேவையான பேட்டரி அதுக்குள்ளேயே இருக்கு.  அதனால் ஒரு பிரச்னையும் இல்லையாம்.
-- - ரவி நாகராஜன்.  டெக் மார்க்கெட் ( அறிவியல்... மருத்துவம்...தொழில் நுட்பம்... )
-- சண்டே ஸ்பெஷல்.  தினமலர். 13-7-2014.

Saturday, August 6, 2016

புதிய ஹெல்மெட்

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்.  அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.
     போர்க் களத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து வீரர்களைக் காக்க இந்த கண்டுபிடிப்பு உதவும்.  மிகக் குறைந்த எடையுள்ள இந்த கருவி, ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.  இது காற்றின் தட்பவெப்பத்தை சீரான நிலையில் வைத்திருக்க உதவும்.  வீரர்கள் சுவாசிப்பதற்கான தூய்மையான காற்றை வடிகட்டி அனுப்பும் செயலையும் இந்த கருவி மேற்கொள்ளும்.  இதற்கு மின்சாரத்தை வழங்கும் பேட்டரியை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்.
     இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள ஹெல்மெட்டில் சுவாசத்திற்கான முகமூடி பொருத்தப்பட்டுள்ளது.  இதில் காற்றை குளிரூட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.  மிகக் குறைந்த எடையுடன் இருக்கும் இக்கருவி, குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும்.  அதை அணிந்திருப்பவருக்கு எந்தவிதமான அசவுகரியங்களும் ஏற்படாது.
     தகவல் தொடர்புக் கருவிகளை அந்த ஹெல்மெட்டிலேயே பொருத்துவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.  ரசாயனம், கதிர்வீச்சு, அணுக்கதிர் தாக்குதலில் இருந்து வீரர்களை இது காக்கும்.
--  சர்வதேசம்
--  'தி இந்து' நாளிதழ். வியாழன், மே, 22 , 2014. 

Friday, August 5, 2016

உலகின் மிகப்பெரிய டைனோசர்

உலகின் மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள் அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு.
     14 ஆப்பிரிக்க யானைகளுக்கு இணையானதும், 7 மாடி அளவுக்குப் பெரியதுமான இந்த டைனோசர்தான் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
     அர்ஜென்டினா, லா பிளெச்சாவுக்கு அருகிலுள்ள பாலைவனத்தில் விவசாயி ஒருவர் இந்த எலும்புகளை முதன்முதலாகப் பார்த்தார்.
     இதுவரை 150 எலும்புகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  இந்த டைனோசர் "டைட்டனோசர்" எனும் தாவர் உண்ணி வகையைச் சேர்ந்தது.  65 அடி உயரம், 130 அடி நீளம், 77 ஆயிரம் கிலோ எடையை உடையது.
     புதைபடிவங்களுடன் கிடைத்த பாறைகளின் வயதினைக் கணக்கிட்டுப் பார்த்தால், 9.5 கோடி அல்லது 100 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த உயிரினம் பாடகோனியா வனப்பகுதியில் வாழ்ந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்
--  'தி இந்து' நாளிதழ். திங்கள், மே, 19 , 2014.  

Thursday, August 4, 2016

வாழ்வை எளிதாக்கும் அப்ளிகேஷன்கள்

 மொபைல் நிறுவனங்கள் புதிது புதிதாக அநேக அப்ளிகேஷன்களை மொபைல் போங்களில் இணைத்து நுகர்வோரைத் தங்கள் வசமாக்க முயல்கின்றன.  அதில், தனி நபர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அப்ளிகேஷன்களுக்குப் பரவலான வரவேற்பு உள்ளது.
சீம்லெஸ்  ( Seamless ) :
      உணவுப் பிரியர்களுக்கு அவசியமான ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் இது.  உணவுக்கான சிரமத்தைத் துடைத்தெறிகிறது இந்த அப்ளிகேஷன்.  இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த ரெஸ்டாரெண்டின் பிரசித்தி பெற்ற உனவு வகையை ஆர்டர் செய்து கொள்ள முடியும்.  விரல்களால் ஆர்டர் செய்தால் அடுத்த அரை மணி நேரத்தில் சுடச்சுட உணவு உங்கள் முன் தயாராக இருக்கும்.
ஊபெர் ( Uber ) :
     தனிமையில் எங்கோ மாட்டிக்கொண்டீர்கள்.  உங்களை விடுவிக்கும் அப்ளிகேஷன் இது.  விரல்களின் மூலம் கால் டாக்ஸியை இந்த அப்ளிகேஷன்வரவழைக்கும்.  வரும் காரில் ஏறி நிம்மதியாக நீங்கள் விரும்பும் இடத்திற்குப் போய் சேரலாம்.
-- ராகு.  இளமை புதுமை .   வெற்றிக்கொடி.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள், மே, 19 , 2014.

Wednesday, August 3, 2016

ஆங்கிலம் அறிவோமே -- 6

'அசால்டா பேசாதீங்க '
     "நான் எப்பவுமே ரொம்ப plain" என்று பெருமை பொங்கச் சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.  அதாவது அவர் எதையும் மறைத்துப் பேசாதவராக, வெளிப்படையானவராக இருக்கிறாராம்.  ஆனால், plain என்ற ஆங்கில வார்த்தைக்குப் பொருள் 'வெளிப்படையான' என்பது அல்ல. 'எளிமையான அல்லது சாதாரணமான' என்றுதான் இதற்கு அர்த்தம்.  அதாவது ஸ்பெஷலாக எதுவுமில்லாத என்பது போன்ற அர்த்தத்தில், கொஞ்சம் இகழ்வாகக் கூறப்படும் வாக்கியம்.  இது, ( olain தோசை நினைவுக்கு வருகிறதா?).
      plain என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது.  கிட்டத்தட்ட மரங்களே இல்லாத பிரம்மாண்டமான, தட்டையான நிலப்பரப்பை plain என்று கூறுவதுண்டு.
     "அவன் அசால்டா ( assault ) பேசினான்" என்று கூறும்போது 'சரளமாக எந்த விதத் தடங்ககலுமின்றிப் பேசினான்' என்கிற அர்த்தத்தில் குறிப்பிடுகிறோம்.
      "அவன் ரொம்ப assault -டா செய்தான்" என்று உங்கள் நண்பரைப் பற்றி உரத்துச் சொல்லாதீர்கள்.  காவல் துறையினர் உங்கள் நண்பரைக் கைதுசெய்துவிடலாம்.  Assasult என்றால் தாக்குதல் என்று அர்த்தம்.  தாக்குதல் என்றால் வார்த்தைகளில் எதிர்கருத்தை அழுத்தமாகக் கூறுவது அல்ல.  உடலளவில் தாக்க வருவது.  சிலசமயம் தாக்குதல் பயத்தை உண்டாக்கும்படி கையசைவோடு வார்த்தைகளும் இருந்தால் அதுவும் assaultதான்.   இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 351-வது பிரிவின்படி இது ஒரு குற்றம்.  இதைப் படித்த பிறகும் "நீங்க சொன்னதை என்னாலே உணர முடியுது.  இது assault ஆன விஷயம் இல்லேன்னு தெரியுது" என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள் அல்லவா?
     ஆங்கிலத்தில் 'naive' என்று ஒரு வார்த்தை உண்டு.  இப்படி யாரையாவது நீங்கள் குறிப்பிட்டால் அவர் அதற்காகச் சந்தோஷப்படமாட்டார்.  எனென்றால் அனுபவமற்ற, அறிவுத் திறனற்ற ஒருவரைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள்.  ஆனால் இந்த வார்த்தை ஜப்பானில் எப்படியோ சிறப்பான அந்தஸ்தைப் பெற்று விட்டது.  Naive என்ற வார்த்தைக்குப் பொருள் 'மிருதுவான, சிறப்பான' என்றுதான் ஜப்பானியர்கள் கருதுகிறார்கள்.  சொல்லப்போனால் அங்கே தயாரிக்கப்படும் பல பொருட்களின் பெயர்களில் 'Naive' என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.
-- ஜி.எஸ். சுப்ரமணியன்.  வெற்றிக்கொடி.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள், மே, 19 , 2014.  

Tuesday, August 2, 2016

வாத்தியாரு பாட்டு !

பல்லாயிரம் உயிரினங்களில்
பேராசை பிடித்தவன் மனிதன் !

எல்லாம் தெரியும் என்கின்ற
இறுமாப்புக் கொண்டவன் மனிதன் !

தனக்குத்தான் பூமி என்ற
தன்னலமிக்கவன் மனிதன் !

தன்சுக வாழ்க்கைக்காகத்
தரணியைச் சிதைப்பவன் மனிதன் !

அடடா !  தன் தலையில் தானே
மண்ணைப் போடுகிறான் மனிதன் !
-- பச்சை பூமி. மாத இதழ்.  ஏப்ரல் - 2014.
-- இதழ் உதவி :  கனக.கண்ணன்,  செல்லூர். 

'b - Safe'

  பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு, மடியில் நெருப்பை கட்டி கொண்டு காத்திருக்கும் பெற்றோர்களின் நெஞ்சில் பால்வார்க்கும் என எதிர்பார்க்கப்படும் 'பி சேப்'  ஒரு ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் அப்ளிகேஷன்.  இதை இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் பிள்ளைகளின் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்துவிட்டால் கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் அல்லது நம் பாதுகாப்பில் உள்ளவர்களை உங்களால் துல்லியமாக கண்காணிக்க முடியும்.  அதாவது, அவர்கள் எங்கு இருக்கின்றனர், எங்கு செல்கின்றனர், ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறார்களா என்று கணினி முன் அமர்ந்து கொண்டு அவர்கள் இருக்கும் ஊர், தெரு, விலாசம் முதற்கொண்டு பார்க்கமுடியும்.
     மேலும், பிள்ளைகள் தங்களூக்கு ஏதாவது விபரீதம் ஏற்படுகிறது என உணர்ந்தால், இதில் உள்ள கார்டியன் அலர்ட் என்ற பொத்தானை அழுத்தினால் போதும்.  அவர்கள், ஆபத்தில் இருக்கிறார்கள் என்ற தகவல் உங்ககுக்கு இலவசமாக வந்து சேரும்.  இந்த அலர்ட் வசதி மூலம் பெற்றோர் மட்டுமல்லாமல் பல நண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தகவல் தெரிவிக்க இயலும்.  போனசாக 'பேக் கால் ' என்ற வசதியும் இதில் உண்டு.  அதாவது, நீங்கள் ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டீர்கள், அல்லது அங்கிருந்து யாரும் சந்தேகப்படாத வண்ணம் வெளியேற வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால், சும்மா மொபைலை நோண்டுவதைப்போல பேக் கால் பொத்தானை அழுத்தினால் உங்கள் போனுக்கு பொய்யாக ஒரு அழைப்பு வரும்.  அப்போது, உங்கள் போனில் சிக்னலே இல்லாவிட்டாலும் கூட , நீங்களும் எனக்கு கால் வந்திருக்கு எக்ஸ்கியூஸ் மீ ' என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம்.  செல்போன் வைத்திருக்காத வளர்ந்த பிள்ளைகளே இல்லை என்ற இன்றைய கால கட்டத்தில், இந்த வசதிகளின் மூலம் அவர்களை நீங்கள் கண்காணிக்க, தவறான வழியில் செல்லாமல் வழிநடத்த என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க முடியும்.
-- ரவி நாகராஜன்.  டெக் மார்க்கெட் ( அறிவியல்... மருத்துவம்...தொழில் நுட்பம்... )
-- சண்டே ஸ்பெஷல்.  தினமலர். 18-5-2014. 

Monday, August 1, 2016

தெரியாத விஷயங்கள்

*   நாகலாந்தில் ஆண் குழந்தைப் பிறந்தால், உடனேயே வெந்நீரில் குளிப்பாட்டுவார்களாம்.  இந்த சூட்டை தாங்கினால்தான்
    குழந்தை வீரனாக வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
*   கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க உதவிய ராணி எஸபெல்லா தன் வாழ்நாளில் இரண்டே  இரண்டு முறை
     மட்டும்தான் குளித்திருக்கிறாராம்.
*   இந்தையாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707ம் ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள தரங்கம்பாடியில்தான்
    ஆரம்பிக்கப்பட்டது.
*   பர்மாவில் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் ஆசி வேண்டி, உறவினர்கள் இறந்தவர் வீட்டில் ஒருவாரம் படுத்து
    தூங்குவார்களாம்.
-- ஆர்.சரஸ்வதி, பூனாம்பாளையம்.
-- தினமலர். பெண்கள்மலர். பிப்ரவரி 21, 2009  

இணைய வெளியிடையே...

*  உங்கள் மீது அதிகம் கல்லடி படுகின்றது என்றால், நீங்கள் காய்த்த மரமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.  சொறி
    நாயாகவும் இருக்கலாம்!
    evanoouvan @ twitter.com
*  மொகலாய மன்னர்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர் அக்பர்!  ஆனால் அவர் 24 நாலாயிரம் நூல்களைக் கொண்ட
    நூலகத்தை அமைத்து பிறர் படிப்பதை ஊக்குவித்தார்!
*   பார்வையால் அல்லது ஆழ்மனதின் சக்தியால் ஒரு பொருளைத் தொடாமலேயே நகர்த்தும், தூக்கும், வளைக்கும் ? சக்தி
    சைக்கோகைனசிஸ் ( Psychokinesis ) எனப்படும்.
    tamilfacts @ twitter.com
*  சத்தம் இடு... முத்தம் இடாதே!
   லாரியின் பின்னால் உள்ள வாசகம்.
   sappani @ twitter.com
*  உப்பில்லாத பண்டம் குப்பையிலே, உப்புள்ள பண்டம் தொப்பையிலே...
    sowmi @ twitter.com
*  சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் சிறு வேறுபாடுதான்.  முன்னது நாம் செய்வது; பின்னது பிறர் செய்வது!
    twitter @ twitter.com
---சண்டே ஸ்பெஷல்.  தினமலர். 18-5-2014.