Friday, September 30, 2016

கவனம் !

* நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.
* 'குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தையின்மையைக் கொடுக்கும்' என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச்
சென்றிருக்கிறார்கள்.
* உடல் எடை அதிகரிப்பில் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் ( Buried Penis ) கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும்
ஆண்மைக்குறைவும் ( Erectile Dysfunction ) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும் நோய்ச் சிக்கல்கள். இரண்டுமே முறையான
சிகிச்சையால் சரிசெய்யலாம்.
* நல்லெண்ணைக் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும் பாரம்பரிய உத்தி !
-- மருத்துவர் கு. சிவராமன். ( நலம் 3600. தொடரில்...)
-- ஆனந்த விகடன். 3- 8- 2014.

Thursday, September 29, 2016

எஸ்.எம்.எஸ்.

"சமீபத்தில் ரசித்த ஒரு எஸ்.எம்.எஸ்.!"
"பர்ஸில் இருக்கும் பணத்தை எல்லாம் பிடுங்கிக்கொண்டு, புது பர்ஸை இலவசமாகத் தருகிறார்கள் நகைக்கடைக்காரர்கள்!"
-- கா.முத்துச்சாமி, ராமநாதபுரம்.
" முட்டை உடைந்தால் ஜனனமா... மரணமா?"
"உள்ளிருந்து உடைந்தால் ஜனனம், வெளியிலிருந்து உடைந்தால் மரணம்!"
-- தீ,அசோகன், சென்னை.
"மேம்போக்கான புத்திசாலித்தனம் பிரயோஜனப்படாது என்பது உண்மையா?"
"ஆமாம்... ஆமாம்! குளிர்ப் பிரதேசங்களில் வசிக்கும் எஸ்கிமோக்களுக்கு ஃபிரிட்ஜ் விற்க முடியாது; சிரபுஞ்சியில் குடிதண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது என்று சொன்னால், 'ஆமாம்... அங்கே ஏற்கனவே குளிராக இருக்கும். இங்கே வருஷம் முழுக்க மழை அடிச்சு ஊத்துதே! என்றுதான் மேம்போக்காக யோசிக்க வைக்கும். ஆனால், அவை இரண்டுமே சாத்தியம். எப்படி? எஸ்கிமோக்கள் உணவுப் பொருட்கள் உறைந்து விடாமல் இருக்க, அவற்றை ஃபிரிட்ஜில் வைக்கத்தான் செய்வார்கள். சிரபுஞ்சி உயரமான பாறைகளில் அமைந்திருக்கும் ஊர். அங்கு அடித்துப் பெய்யும் மழை அனைத்தும் வடிந்து பக்கத்தில் உள்ள பங்களாதேஷுக்குப் போய் விடும். ஆகையால் அங்கும் குடிநீருக்குப் பஞ்சம்தான். இதைத் தெரிந்துகொள்ள நுனிப்புல் மேய்ச்சல் சாத்தியம் இல்லைதானே!"
-- அ.ஷண்முக சுந்தரம், பெங்களூர்.
-- நானே கேள்வி...நானே பதில் !
-- ஆனந்த விகடன். 3- 8- 2014.

Wednesday, September 28, 2016

மீட்புப் பணி ?

"சமீபத்தில் படித்ததில் உங்களின் மனதை உலுக்கிய செய்தி?"
"கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் சூழிக்கெரே கிராமத்தில் அனுமந்தா கட்டி என்கிற விவசாயியின் ஆறு வயது மகன் திம்மண்ணா, வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது 300 அடி ஆழ்குழாய்க் கிணற்றில் விழுந்துவிட்டான். 160 வது அடியில் திம்மண்ணா சிக்கிக்கொள்ள, பெற்றோர் பதறித் துடித்தனர். தீயணைப்புப் பிரிவினரும், ஆழ்குழாய்க் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்பதற்கான சிறப்பு நிபுணர்களும் வந்து இரவுபகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றின் பக்கவாட்டில் பெரும் பள்ளம் தோண்டப்பட்டு வேலை. ஒன்று, இரண்டு, மூன்று... என நாட்கள் கடந்தன. இனியும் மகனை உயிரோடு மீட்க முடியாது என்பது அனுமந்தா கட்டிக்குப் புரிந்தது.
'அய்யா... தயவுசெய்து தோண்டுவதை நிறுத்துங்கள். இதுவரை தோண்டியதே பெரும் குளம்போல ஆகிவிட்டது. நான் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருக்கிறேன். இந்த நிலத்தில் விவசாயம் செய்துதான் அவர்களைக் காப்பாற்ற
வேண்டும். இப்படித் தோண்டிக்கொண்டே போனால் நிலத்தைச் சமப்படுத்த மேலும் பல லட்சங்கள் செலவாகும். ஏற்கனவே இந்த விவசாயத்தை நம்பி நான் நிறையக் கடன் வாங்கிவிட்டேன். கரும்புப் பயிருக்கு அதிகத் தண்ணீர் தேவை. அடுத்தடுத்து ஆறு போர்வெல்கள் போட்டேன். எதிலுமே தண்ணீர் இல்லை. 17 லட்சம் ரூபாய் கடன் ஆனதுதான் மிச்சம். இப்போது இந்தக் குழியை அடைக்க மேலும் கடன் வாங்க வேண்டும். என் பையன் உயிரோடு வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இதற்கு மேலும் அவனை உயிருடன் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது. இருக்கும் பிள்ளைகளைக் காப்பாற்ற, தோண்டுவதை உடனே நிறுத்துங்கள்' என்று அவர் விடுத்த வேண்டுகோள், கேட்போரின் நெஞ்சத்தை உருக வைத்தது. ஆனால், மீட்புப் பணியை இடையில் நிறுத்த முடியாது என்பதால், தீயணைப்புத் துறையினர் முழுமையாகத் தோண்டித்தான் முடித்தனர்.
180 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, பையனின் சடலம் அனுமந்தா கட்டியிடம் தரப்பட்டது. இப்போது அவரது தோட்டத்தில் பெரும் மண் மேடும், குளம் போன்ற பள்ளமும் காணப்படுகின்றன. நிர்க்கதியில் நிற்கிறார் அனுமந்தா கட்டி !"
-- சம்பத்குமாரி, திருச்சி.
-- நானே கேள்வி...நானே பதில் !
-- ஆனந்த விகடன். 3- 8- 2014.

Tuesday, September 27, 2016

மூளைக்கு டானிக்

1. உலகின் மிக உயரமான அருவி எந்த நாட்டில் உள்ளது?
-- நயாகரா ஒரு மிக அகலமான அருவியே தவிர, உயரமான அருவி அல்ல. தவிர அது மூன்று அருவிகளின் தொகுப்பு.
மேலும் அது அமெரிக்காவில் மட்டும் இல்லை. ஒன்டாரியோ, நியூயார்க் ஆகிய இரு நகரங்களுக்கும் நடுவ்ற் உள்ளது.
அதாவது கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ளது. நயாகராவின் உயரம் 51 மீட்டர். இந்தியாவின்
மிகப் பெரும் அருவியான ஜோக் ( JOG ) நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இதன் உயரம் 253 மீட்டர். ஆனால்
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி வெனிசுலாவிலுள்ள ஏஞ்ஜல்ஸ் அருவிதான். 978 மீட்டர் உயரம் கொண்டது.
2. விண்வெளிவீரரை எப்படிக் குறிப்பிடுவார்கள்?
--- மூன்று விதமாகவும் குறிப்பிடுவார்கள். அமெரிக்க விண்வெளி வீரர் என்றால் அஸ்ட்ரநாட் என்று அழைக்கிறார்கள்.
ரஷ்யாவில் காஸ்மோநாட் என்றும், சீனாவில் டைகோநாட் என்றும் அழைக்கிறார்கள்.
3. பண்டரிபுரத்திலுள்ள இறைவனை எப்படி அழைக்கிறார்கள்?
-- பாண்டுரங்கன் என்றும் விட்டலன் என்றும் அழைக்கிறார்கள். மராத்தி மொழியில் விட் என்ரால் செங்கல் என்று பொருள்.
செங்கல்மீது நின்றபடி காட்சியளிப்பதால், விட்டலன். அச்சுதன், பத்மநாபன் என்றும் குறிப்பிடுவர். அச்சுதன் என்றால்
அழிக்க முடியாதவன், நிரந்தரமானவன் என்றும், பத்மநாபன் என்றால் தன் தொப்புளில் தாமரையைக் கொண்டவன் என்று
அர்த்தம். இந்த தாமரையில்தான் பிரம்மன் தோன்றினான் என்பது நம்பிக்கை.
4. ஜுராசிக் என்றால் என்ன பொருள்?
-- சுமார் 145லிருந்து 200 கோடி வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை ஜுராசிக் யுகம் என்று குறிப்பிடுவார்கள். ஆக
ஜுராசிக் என்பது ஒரு காலகட்டத்தைத்தான் குறிப்பிடுகிறது.
5. கலிங்கம் என்பது இந்தியாவின் எந்தப் பகுதி?
-- இன்றைய பீகார் அன்றைய மகதத்தின் ஒரு பகுதி. மகத நாட்டின் சக்ரவர்த்திதான் அசோகர். ஆனால் அவர் படையெடுத்த
கலிங்க நாடு என்பது இப்போதைய ஒடிஸா.
-- ஜி.எஸ்.எஸ். ( 1 பார்வை 3 கோணங்கள் )
-- தினமலர். சிறுவர்மலர். ஆகஸ்ட் 15, 2014.

Monday, September 26, 2016

கேள்வி - பதில்!

* "2014 -ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி முடிவுகள் பற்றி ஆரூடம் சொல்லவிருக்கும் விலங்கு எது?"
-- ஜெர்மனியைச் சேர்ந்த நெல்லி என்ற யானை. இரு நாட்டுக் கொடிகள் கட்டப்பட்ட இரண்டு கோல் கம்பங்களில் எதற்குள்
யானை பந்தை உதைக்கிறதோ, அந்த நாடு வெற்றி பெறும் என்பது ஆரூடம்!
* "நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தவர்கள் யார்...யார்?"
-- இருவர். அருண் ஜெட்லி மற்றும் ஸ்மிர்தி இரானி.
* "கார்த்தி சிதம்பரம் மீது சமீபத்தில் என்ன வழக்கு பதிவுசெய்யப்பட்டது?"
-- ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில், மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக்
கெலாட் , கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது!
* "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு மாதச் சம்பளம் எவ்வளவு?"
-- 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்!
* "பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது?"
-- 17 ஆண்டுகள்!
-- நா.சிபிச்சக்ரவர்த்தி.
-- ஆனந்த விகடன், 25-6-2014.

Sunday, September 25, 2016

திருட முடியாத சைக்கிள்

யாரும் திருட முடியாத சைக்கிள். சிலி மாணவர்கள் கண்டுபிடிப்பு.
தென் அமெரிக்க நாடான சிலியைச் சேர்ந்த 3 பொறியியல் மாணவர்கள் யாராலும் திருட முடியாத சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அழகுடன் காட்சியளிக்கும் இந்த சைக்கிளை 3 எளிய நடைகள் மூலம் 20 வினாடிகளில் அதன் ஃபிரேம்களைக் கொண்டே ஒரு கம்பத்தில் பூட்டிவிட முடியும்.
மற்ற சைக்கிள்களில் உள்ள பூட்டை திருடர்கள் உடைத்துவிட முடியும். ஆனால் இந்த சைக்கிளில் ஃபிரேம் களே பூட்டாக இருப்பதால் ஃபிரேம்களை உடைத்தால் மட்டுமே சைக்கிளை திருட முடியும்.
ஃபிரேமை உடைத்தால் அந்த சைக்கிளை பயன்படுத்த முடியாது என்பதால் இதை யாரும் திருட மாட்டார்கள் என்கிறார்கள் இந்த மாணவர்கள்.
-- ஐஏஎன்எஸ். ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஆகஸ்ட் 28, 2014.

Saturday, September 24, 2016

"மனப்பாடச் சக்தி"

"மனப்பாடச் சக்தியும் ஒரு திறமைதானே...ஏன் அதைப் பற்றி துச்சமாக விவாதிக்கிறீர்கள்? செயல்வழிக் கல்விக்கும், மனப்பாடக் கல்விக்கும் அப்படியென்ன வித்தியாசம்?"
"மருத்துவக் கல்லூரி வகுப்பில், பேராசிரியர் ஒரு மாணவரிடம் ஒரு நோயாளியின் நோயையும் அவரது மோசமான நிலையையும் விளக்கிவிட்டு, 'இந்த நிலையில் இந்த மருந்து என்ன அளவில் கொடுக்கப்பட வேண்டும்/' என்று கேட்டார். 'உடல் எடை , வயது ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஐந்து கிராம் அளவில்' என்று கூறிய மாணவர், சிறிது நேரம் யோசித்த பிறகு, 'நான் என் பதிலை மாற்றிக்கொள்ள விருமுகிறேன். அனுமதிப்பீர்களா>' என்று கேட்டார். அதற்கு பேராசிரியர், 'கவலைப் படாதே ... நோயாளி இறந்து 30 நொடிகள் ஆகிவிட்டன' என்றார். இதுதான் நீங்கள் கேட்ட வித்தியாசம் !"
-- கே.சரஸ்வதி, ஈரோடு.
"இயற்கை மீது நமக்கு பரிவு உண்டா?"
"எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வருகிறதே...
'காடுகளை
வேட்டையாடும்
ஒரே மிருகம்
மனிதன்'!"
-- முத்தூஸ், தொண்டி. ( நானே கேள்வி... நானே பதில்! ) தொடர்.
-- ஆனந்த விகடன், 25-6-2014.

Friday, September 23, 2016

சிகரெட் பழக்கம்

"சிகரெட் பிடிப்பவர்கள், அந்தப் பழக்கத்தை விட்டுவிடும் அளவுக்கு நல்ல அறிவுரை ஒன்று சொல்லுங்களேன்?"
"சிகரெட்டில் என்னென்ன உள்ளன என்பதை மட்டும் சொல்கிறேன்...
1. பற்றவைக்க உறைந்த நிலையில் திரவம்.
2. பேட்டரியில் பயன்படுத்தப்படும் கேட்மியம்.
3. உணவில் ருசியூட்டும் வினிகரில் உள்ள அசிடிக் அமிலம்.
4. சாக்கடையில் எழும் மீத்தேன் வாயு.
5. அர்செனிக் என்ற விஷம்.
6. நச்சான கார்பன் மோனாக்ஸைட்.
7. ராக்கெட் எரிபொருள் கலவைகளுள் ஒன்றான மெத்தனால்.
8. மெழுகுவர்த்தி தயாரிக்கப் பயன்படும் ஸ்டீரிக் ஆசிட்.
9. சிகரெட்டை , தொடர்ந்து எரியவைக்கும் ஹெக்சாமைன்.
10. ஆலைகளில் பயன்படும் கரைப்பான்.
11. பூச்சிக்கொல்லி ரசாயனமான நிக்கோட்டின்.
12. கழிப்பறையைச் சுத்திகரிக்கப் பயன்படும் அமோனியா.
13. வண்ணம் தரும் பெயின்ட்.
இவையெல்லாம் சேர்த்து செய்த உருளைதான் சிகரெட் . இதைப் படித்த டென்ஷனில் சிகரெட் பற்றவைக்கத் தோணுகிறதா? மீண்டும் முதலில் இருந்து இந்தப் பட்டியலைப் படியுங்கள்!."
-- ஜி.குப்புசுவாமி, சங்கராபுரம். ( நானே கேள்வி... நானே பதில்! ) தொடர்.
-- ஆனந்த விகடன், 25-6-2014.

Thursday, September 22, 2016

சாயா மரம்!

ராமநாதபுரம் வழிவிடும் முருகன் கோயிலில் 'சாயா' என்றொரு மரம் உள்ளது. சனீஸ்வரனின் தாயார் பெயர் கொண்ட இம்மரத்தை வழிபட்டால் துயர் நீங்கும் ; பாவம் விலகும்.
முப்பத்து முக்கோடி தேவர்கள்!
குருவாயூர் கோயிலில் சாயங்காலம் மட்டுமே தீபாராதனை செய்யப்படுகிறது. ஏழு அடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத்திரி விளக்கு என்று பல விளக்குகளை ஏற்றி ஆராதிக்கிறார்கள். இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் குருவாயூரப்பனை வழிபடுவதாக ஐதீகம்.
ஐம்பெரும் தெய்வம்!
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் வள்ளி நாயகியுடனும், ஒரு நாள் தெய்வானையுடனும் முருகப் பெருமான் பள்ளியறைக்கு எழுந்தருளுகிறார். இது வேறெங்குமே இல்லாத தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜூன் 1 - 15, 2014.

Wednesday, September 21, 2016

மந்திரமாவது என்ன?

ஒரே அட்சரம் உள்ள மந்திரங்கள் 'பிண்டம்' எனப்படும். இரு அட்சரம் உள்ளவை 'கர்த்தரீ' எனப்படும். மூன்று முதல் ஒன்பது வரை உள்ளவை 'பீஜம்' எனப்படும். பத்து முதல் இருபது அட்சரங்கள் உள்ளது 'மந்திரம்' எனப்படும். இருபது அட்சரங்களுக்கு மேல் உள்ளது 'காயத்ரீ' எனப்படும். நாம் விடுகின்ற மூச்சுக்கூட ஒரு மந்திரமாகும். இது 'அஜபா மந்திரம் எனப்படும். பஞ்சபூதங்களால் இயங்குவதே பஞ்சாட்சர மந்திரத்தின் தத்துவமாகும்.
லிங்கோத்பவ மூர்த்தி
பிள்ளையார்பட்டி குடைவரை கோயிலில் லிங்கோத்பவ மூர்த்தியின் சிற்பம் இடுப்பு வரை தூண் போன்ற அமைப்புடனும், மேல்பகுதி மனித உடலாகவும் காணப்படுகிறது. ஆறாம் நூற்றண்டைச் சார்ந்த சிற்பம் இது.
நவ பாஷாணங்கள்
திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், லவண பாஷாணம், பவளப்புற்று பாஷாணம், கௌரிபாஷாணம், ரக்த பாஷாணம், அஞ்சண பாஷாணம் ஆகியவையே நவ பாஷாணங்கள்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜூன் 1 - 15, 2014.

Tuesday, September 20, 2016

அதிசய உலகம்

பெரிய்ய ரயில் பாலம்.
உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் என்ற சிறப்பைப் பெற உள்ளது ஒரு ரயில் பாலம். மலைகளுக்கு இடையே ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றின் மேலே பிரமாண்டமான வளைவுடன் உருவாகி வரும் இந்தப் பாலம், நம் நாட்டில் காஷ்மீர் மாநிலத்தில்தான் கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பாலத்தின் பெயர் சீனாப்பாலம். ரியாசி என்ற மாவட்டத்தில் கவுரி - பக்கல் பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. முழுவதும் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால், தரை மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்தில், 1,315 மீட்டர் நீலத்தில் இந்த ரயில்வே பாலம் கட்டப்படுகிறது.
அதுவும் இந்த பாலம் கட்டப்படும் பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதி. சில சமயங்களில் இங்கு மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில்கூட காற்று பலமாக வீசுமாம். இயற்கைச் சீற்றங்களால் பாலம் பாதிக்கப்படாமல் இருக்க அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கவனத்துடன் பாலத்தை அமைத்து வருகிறார்கள்.
இரு மலைகளுக்கு இடையே பாலம் 480 மீட்டர் அகலத்தில் இரும்பு வளைவுகளுடன் உருபாக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள குதுப்பினாரைவிட இப்பாலம் 5 மடங்கு உயரம். உலகிலேயே உயரமான பாலமாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் மில்லவ் பாலத்தைவிட 17 மீட்டர் உயரம் அதிகம். இப்பாலத்தின் உயரம் 342 மீட்டர்.
2016-ம் ஆண்டு இறுதியில் இந்த மெகா ரயில் பாலத்தில் ரயில் ஓடும் என்று கூறுகிறார்கள்.
-- டி.கார்த்திக். ( மாயாபஜார் , இணைப்பு ).
-- 'தி இந்து' நாளிதழ், புதன், ஆகஸ்ட் 20, 2014.

Monday, September 19, 2016

உயிர்காத்த காற்புள்ளி

ஆங்கிலத்திலிருந்து பெறப்பட்ட நிறுத்தற்குறியீடுகள் வாசிப்பையும் புரிந்துகொள்வதையும் மேம்படுத்த உதவுபவை. ஒரு தேசத்தின் உணவு மானியக் கொள்கையில் இன்று பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு காற்புள்ளிக்கு, உயிரைக் காத்த வரலாறும் உண்டு. சைப்பீரியாவை மரண தண்டனையை நிறைவேற்றும் பகுதியாக வைத்திருந்த காலத்தில், அரசரின் கருணை வேண்டி வந்த ஒரு விண்ணப்பத்தின் கீழ் அரசர், 'Pardon imposible, send to Siberia _ மன்னிக்க முடியாது. சைபீரியாவுக்கு அனுப்புக' என்று எழுதி ஆணை பிறப்பித்தார். அந்த மரண தண்டனைக் கைதியைக் காப்பாற்ற நினைத்த அரசியோ, அந்த ஆணையில் அரசருக்குத் தெரியாமல் imposible என்ற சொல்லை அடுத்திருந்த காற்புள்ளியை அழித்துவிட்டு,Pardon என்ற சொல்லை அடுத்து காற்புள்ளியை இட்டு, 'Pardon, imposible send to Siberia _ மன்னிக்கவும், சைபீரியாவுக்கு அனுப்ப முடியாது' என்று ஆணையை... அதன் பொருளையும்தான் மாற்றிச் சிறை அலுவலருக்கு அனுப்பிவிட்டார். அதனால், மரண தண்டனையிலிருந்து ஒருவர் தப்பினார். இந்தச் செய்தி வெளிப்பட்டபோது காற்புள்ளிக்கு வரலாற்றில் ஓர் இடம் கிடைத்தது.
-- ஏம்பல் தஜம்முல், சென்னை - 68. ( t f. இப்படிக்கு இவர்கள் ). கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ், திங்கள் , ஆகஸ்ட் 18, 2014.

Sunday, September 18, 2016

'பேராபிலியா'

'பேராபிலியா' என்றால் என்ன?
இயற்கைக்கு மாறாக இல்லற சுகம் அடைவது 'பேராபிலியா நோய்' என்று அழைக்கப்படுகிறது. இதில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் ஒன்று வாவூரிசம் என்ற வகை பாலியல் சார்ந்த நோய். இந்த நோய் உடையவர்கள், மற்றவர்கள் நிர்வாண நிலையில் இருக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பார்த்து ரசிக்கும் இயல்பு உடையவர்கள். இவ்வாறு செய்யும்போது, அவர்களுக்கு ஒரு வித சந்தோஷம் ஏற்பட்டு, முழுமையான இல்லறசுகம் அடைந்த திருப்தி அடைவார்கள். ரகசியமாக பார்க்கும்போது அவர்களே உறவில் ஈடுபடுவது போன்று கற்பனை செய்துகொள்வார்கள். இச்செயல்களில் ஈடுபடும் பெண்கள், அவர்களின் கணவரிடம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில், இதுபோன்ற பாலியல் சார்ந்த நோய்க்கு ஆளாகிறார்கள்.
-- உளவியல் மருத்துவர் சச்சிதானந்தம், சென்னை. ( தேசம்).
-- - 'தி இந்து' நாளிதழ், புதன், ஆகஸ்ட் 20, 2014.

Saturday, September 17, 2016

பயணத்தின்போது !

1. நீங்கள் பயணத்தின்போது ரயில், பஸ், கார் செல்லும் திசையை நோக்கி உட்காருங்கள்'
2. அடிவானத்தைக் கூர்ந்து நோக்குங்கள்.
3. பயணத்தின்போது படிக்காதீர்கள்.
4. விமானம், படகில் சென்றால் மையமாக வந்து உட்கார்ந்து பயணித்தால் வாந்தி, குமட்டல் இருக்காது.
-- குமுதம். 11- 6 - 2014.

Friday, September 16, 2016

புதிர்

ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்பட்ட ரொம்ப எளிமையான ஆனால் குழப்பமான ஒரு கேள்வியைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஒரு பெண் பழக்கடையில் 200 ரூபாய்க்கு ஆப்பிள் வாங்கினாள். அது ஒரு அடக்க விலைக் கடை. பழம் வாங்கியதும் அந்தப் பெண் ஆயிரம் நோட்டு ஒன்றை கடைகாரரிடம் தந்தாள்.
அவரிடம் சில்லரை இல்லாததால், பக்கத்துக் கடைகாரரிடம் மாற்றி , 800 ரூபாயை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, 200 ரூபாயைக் கல்லாவில் போட்டுக் கொண்டார்.
கொஞ்ச நேரம் கழித்து, பக்கத்துக் கடைக்காரர், 'அந்தப் பெண் கொடுத்தது, கள்ள நோட்டு என்று சொல்லி, பழக்கடைக்காரரிடம் அந்த 1000 ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு வேறு நோட்டை வாங்கிச் சென்றுவிட்டார்.
கேள்வி இதுதான் : பழக்கடைக்காரருக்கு எத்தனை ரூபாய் நஷ்டம்?
1. 200 2. 800 3. 1000 4. 1200 5. 1800 6. 2000 7. எதுவும் இல்லை.
சரியான விடைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!
-- அரசு பதில்கள்.
-- குமுதம். 11- 6 - 2014.

Thursday, September 15, 2016

ரத்தக் கொதிப்பு

ரத்தக் கொதிப்பு நோயாளிகள் அவசியம் பின்பற்றவேண்டியவை !
* 45 நிமிடங்களில் 3 கி.மீ. நடைப்பயிற்சி.
* 30 நிமிட உடற்பயிற்சி / சைக்கிள் ஓட்டல்.
* 25 நிமிடங்கள், யோகாவில் சூரிய வணக்கமும் ஆசனங்களும்.
* 15 நிமிடங்கள் பிராணாயாமம், அதிலும் குறிப்பாக, சீதளி பிராணாயாமம்.
* 20 நிமிடங்கள் தியானம்.
* 6 - 7 மணி நேரத் தூக்கம்.
மேலே சொன்னவற்றில் கடைசி பாயின்ட் கட்டாயம், சாய்ஸில் விடவே கூடாது. முந்தைய பயிற்சிகளில் நீங்கள் எத்தனை பின்பற்ற முடியுமோ, அத்தனை நல்லது.
-- நலம் 3600. மருத்துவர் கு. சிவராமன்.
-- ஆனந்த விகடன். 30-7-2014.

Wednesday, September 14, 2016

ஆட்டோ வாசகங்கள்

"மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?"
"இதோ...
* உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட , உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு !
* முதுகுக்குப் பின்னால் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகைத் தட்டிக்கொடுப்பதுதான் !
* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகமாக ஆசைப்படுபவனே ஏழை !
* உங்கள் கௌரவம் வேறு எங்கும் இல்லை; உங்கள் நாக்கு நுனியில்தான் இருக்கிறது!
* கடவுளின் பெயரை உச்சரிக்கும் உதடுகளைக் காட்டிலும், ஓர் ஏழைக்கு உதவும் கைகளே புனிதமானவை !
* கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள் !
-- மூ.சித்திரக்குமாரன், சென்னை.
"வாழ்க்கையின் தத்துவம் என்ன?"
" 'நீயாகப் பிறந்தாய், நீயாக வாழ்ந்து, நீயாகச் சாகிறாய். இதில் யாருக்கு என்ன பொறுப்பு?" ( நாலடியார் பாடல் ஒன்றின்
பொழிப்புரை இது!"
-- அ.யாழினி பர்வதம், சென்னை -78.
-- நானே கேள்வி... நானே பதில்...!
-- ஆனந்த விகடன். 30-7-2014.

Tuesday, September 13, 2016

வினா - விடை !

* "டயானா மரியம் குரியன் - இது எந்த நடிகையின் இயற்பெயர்?"
-- நடிகை நயந்தாரா.
* "புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க- வின் அகில இந்தியத் தலைவர் யார்?"
-- அமித்ஷா.
* "நடிகர் சரத்குமார் நடிக்கும் கம்பி விளம்பரம், எந்த நிறுவனத்தின் விளம்பரம்?"
-- அம்மன் டி.ஆர்.ஒய்.டி.எம்.ஏ.பார்ஸ்.
* "புதிதாக சினிமா பள்ளி தொடங்கவிருக்கும் தமிழ் இயக்குநர் யார்?"
-- இயக்குநர் பாரதிராஜா.
* "திரைப்பட இசை வெளியீட்டு விழாவொன்றில், 'நான் ஏழாம் வகுப்பில் ஃபெயிலானவன்' என்று மனம்திறந்து பேசிய
ஹீரோ யார்?"
" நடிகர் சூர்யா.
-- ஆனந்த விகடன். 23-7-2014.

Monday, September 12, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் !

ஒளியாண்டு = 9,46,073,04,580 கிலோ மீட்டர். நாம் அனுப்பும் ரேடியோ சமிக்ஞைகளாக இருந்தாலும், நட்சத்திரங்களில்
ஏதேனும் ஒன்றிலிருந்து வெளியிடப்படும் ரேடியோ சமிக்ஞையாக இருந்தாலும், போய்ச் சேரவும் வந்து சேரவும் குறைந்த
பட்சம் நான்கு ஆண்டுகளாகின்றன.
* தகவல் பலகை : ரயிலில் பயணம் செய்யும்போது தீ பிடித்தல், பொருட்கள் இழப்பு, விபத்து, இயற்கை பேரழிவு, உயிர் காத்தல் ஆகிய காரணங்களுக்குக்காக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படுவது இல்லை.
* 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையிலானே ' என்பது பவனந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம்.
* தகவல் பலகை : யானை இனங்களில் 'மாக்னா' என்று ஒருவகை உண்டு. இவை மனித இனத்தில் காணப்படும் திருநங்கை
போன்ற குணாதிசயங்களை பெற்றிருக்கும்.
* தகவல் பலகை: பெருங்காயச் செடியின் பச்சைத் தண்டையும், வேரையும் கீறினால் ஒரு பிசின் கசியும். இது காய்ந்து பின்
கெட்டியாகிவிடும். அதுதான் பெருங்காயம்.

Sunday, September 11, 2016

கணபதி ஹோமம்!


தடை ஏதும் இல்லாமல் நாம் நினைத்தது நிறைவேற கணபதி ஹோமம் செய்கிறோம். கணபதி ஹோம மந்திரங்களை இயற்றியவர் கனகரிஷி. முதன் முதலாக கணபதி ஹோமம் செய்தவரும் அவரே.
தம்பதி கோயில் !
திருவையாறு அருகே திருக்கண்டியூர் தலத்தில் உள்ள சிவன் கோயிலில் மூலவருக்கு அருகில் பிரம்மாவும், சரஸ்வதியும் தம்பதி சமேதராக தரிசனம் தருகிறார்கள்.
ஆகமக் கோயில் !
சிவபெருமான் அருளிய ஆகமங்கள் 28. விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் ஆலயத்தில் உள்ள கைலாய பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் மேற்கண்ட 28 ஆகமங்களும் லிங்கமூர்த்திகளாக எழிலுற அமைக்கப்பட்டுள்ளனர். இந்த 28 ஆகமங்களையும் முருகப்பெருமான் பூஜித்து வந்ததாக தல புராணம் கூறுகிறது.
நட்சத்திர மண்டபம் !
கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் நட்சத்திர மண்டபம் உள்ளது. ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு.
ஆறு கிணருகள் !
மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊரிலுள்ள முருகன் கோயிலில் ஆறு கினறுகள் உள்ளன. இவற்றில் உள்ள தண்ணீர் உப்பு, கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு வகை சுவைகளைக் கொண்டுள்ளது சிரப்பு.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். மே 16 - 31, 2014.

Saturday, September 10, 2016

வலைபாயுதே

* அவ்வளவு சொல்லியும் அவனுக்குப் புரியவில்லை. அவ்வளவையும் சொல்லியிருக்க வேண்டாம் என எனக்கும் புரியவில்லை!
-- twitter.com/ dhanalakshmirs:.
* எங்கள் ஊர் ஆற்றில் வருடத்துக்கு ஒரு முறை அழகரும், வருடம் முழுவதும் லாரிகளும் இறங்குகின்றன!
--- twitter.com -- ashoker:
* பேசாம இலங்கையில பூமிக்கு அடியில பெட்ரோல் கிடைக்குதுன்னு லேசாக் கிளப்பிவிட்டுட்டா போதும், # மிச்சத்தை
அமெரிக்காக்காரன் பாத்துக்குவான்.
-- twitter.com / chithra 52291 :
* வேலை இல்லாத பட்டதாரிகளைவிட , வேலை தெரியாத பட்டதாரிகளே அதிகம் # இதச் சொன்னா நம்மள...
-- twitter.com / l_ rajtuty:
-- சைபர் ஸ்பைடர்
-- ஆனந்த விகடன். 13-8-2014.

Friday, September 9, 2016

நடந்தது என்ன?

மனிதப் பெரழிவின் சாட்சியம். ( ஆகஸ்ட் 6, 9: ஹிரோஷிமா, நாகசாகி நினைவு நாள் ).
ஹிரோஷிமா அணுவெடிப்பு.
நாள் : ஆகஸ்ட் 6, 1945.
குண்டின் பெயர் : லிட்டில் பாய்.
வெடிபொருள் : யுரேனியம்.
பாதிக்கப்பட்ட பரப்பு : 10 சதுர கி.மீ. பரப்பில் இருந்த அணைத்து உயிர்களையும் துடைத்து அழித்தது. மக்கள், புல், பூண்டு உட்பட அனைதும் பஸ்பமாகின. நகரத்தின் 69 சதவீதக் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
பலியானவர்கள் எண்ணிக்கை : 1.45 லட்சம் பேர் ( உடனடியாக 90,000 பேர் ).

நாகசாகி அணுவெடிப்பு.
நாள் : ஆகஸ்ட் 9, 1945.
குண்டின் பெயர் : ஃபேட் மேன்.
வெடிபொருள் : புளுடோனியம்.
பாதிக்கப்பட்ட பரப்பு : ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும்.
பலியானவர்கள் எண்ணிக்கை : 75,000 பேர் ( உடனடியாக 40,000 பேர் ).
இரண்டு அணுகுண்டு வீச்சுக்களால் உடனடியாகவும் காலப்போக்கிலும் பலியானவர்களின் எண்ணிக்கை : 3,50,000 பேர்.
-- கோ.சுந்தரராஜன், உயிர் மூச்சு.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஆகஸ்ட் 5,2014.

Thursday, September 8, 2016

ஏன் வேண்டாம்?

பார்வையைப் பறிக்கும் குறைந்த விலை கண்னாடி.
சூரிய வெளிச்சத்தில் இருந்தும், கண் எரிச்சலில் இருந்தும் பாதுகாக்கத்தான் குளிர் கண்னாடிகளை அணிவதாக நினைக்கிறோம். ஆனால், தரமான குளிர் கண்ணாடிகள் செய்யும் வேலையே வேறு. அவை, புறஊதா எனப்படும் யு.வி.கதிர்களில் இருந்து பாதுகாக்கின்றன. கடுமையான வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கின்றன. கண்ணைக் கூசும் வெளிச்சத்தைத் தடுக்கின்றன. பார்வையைப் பாதிக்கும் சில ஒளி அலைவரிசைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் பணிகள் எதையும் குறைந்த விலையில் வாங்கும் கண்ணாடிகள் செய்வதில்லை. மேலும், பாதிப்புகளை மோசமாகவே செய்யும்.
-- ஜெ.ஞானசேகர். நலம் வாழ.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஆகஸ்ட் 5,2014.

Wednesday, September 7, 2016


ஏன் வேண்டாம்?

பார்வையைப் பறிக்கும் குறைந்த விலை கண்னாடி.
சூரிய வெளிச்சத்தில் இருந்தும், கண் எரிச்சலில் இருந்தும் பாதுகாக்கத்தான் குளிர் கண்னாடிகளை அணிவதாக நினைக்கிறோம். ஆனால், தரமான குளிர் கண்ணாடிகள் செய்யும் வேலையே வேறு. அவை, புறஊதா எனப்படும் யு.வி.கதிர்களில் இருந்து பாதுகாக்கின்றன. கடுமையான வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கின்றன. கண்ணைக் கூசும் வெளிச்சத்தைத் தடுக்கின்றன. பார்வையைப் பாதிக்கும் சில ஒளி அலைவரிசைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் பணிகள் எதையும் குறைந்த விலையில் வாங்கும் கண்ணாடிகள் செய்வதில்லை. மேலும், பாதிப்புகளை மோசமாகவே செய்யும்.
-- ஜெ.ஞானசேகர். நலம் வாழ.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஆகஸ்ட் 5,2014.

Tuesday, September 6, 2016

தாய்ப்பால்

உலகிலேயே சிறந்த உணவு.
உலக தாய்ப்பால் வாரம் ( ஆகஸ்ட் 1 - 7 )
தாய்ப்பால்தான் குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவு. இதில் ஒப்பிட இயலாத பல பண்புகள் உள்ளன. அது குழந்தைக்கு முற்றிலும் பாதுகாப்பானது. தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் மற்றக் கிருமிகளும் அதில் சேரவே முடியாது. இருமல், சளி, மார்பு நோய் போன்ற சில நோய்த் தொற்றுக்களில் இருந்து குழந்தைக்கு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியைத் தாய்ப்பால் அளிக்கிறது. குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் அதில் அடங்கியிருக்கின்றன. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும். வயிற்றுப் பிரச்னை எதுவும் ஏற்படாது. ஆஸ்துமா, எக்சியா போன்ற ஒவ்வாமைகளினால் பாதிக்கப்படுவது மிகக் குறைவு. அனைத்துக்கும் மேலாகக் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பிரத்யேகமான பாசப் பிணைப்பைத் தாய்ப்பால் ஏற்படுத்துகிறது. இது குழந்தையின் மனநிலையில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
-- டி.கார்த்திக். நலம் வாழ.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஆகஸ்ட் 5,2014.

Monday, September 5, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. தினைப்புனத்தில் முருகன், வேங்கை மரமாக மாறி நின்றார்.
2. வயிற்று நோய் தீர ஆதிசங்கரர் முருகன் மீது பாடியது, சுப்ரமணிய புஜங்கம்.
3. திருப்பதியில் கோயிலுக்கு அருகிலுள்ள தீர்த்தம், சுவாமி புஷ்கரணி.
4. சிவாலயத்தில் தியானத்தில் லயித்திருப்பவர், சண்டிகேஸ்வரர்.
5. வள்ளிமலை சுவாமிக்கு அருள் புரிந்தவர், திருத்தணி முருகன்.
6. திருநீற்றுப்பதிகம் பாடப்பட்ட சிவத்தலம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்.
7. சங்கரநாராயணர் கோலத்தைப் பாடிய ஆழ்வார், பேயாழ்வார்.
8. திருப்பதி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ள காப்பியம், சிலப்பதிகாரம்.
9. தொண்டைமானுக்கு சக்ராயுதம் கொடுத்து உதவியவர், திருப்பதி ஏழுமலயான்.
10.சூரியனின் மனைவியர், உஷா, பிரத்யுஷா.
--அர்ச்சனைப்பூக்கள். பக்திமாலை.
-- தினமலர் ஆன்மிக மலர். சென்னை பதிப்பு . ஜூன் 24, 2014.

Sunday, September 4, 2016

மனதில் தோன்றிய ஏரி

இமயமலையிலுள்ள கயிலாயம் அருகிலுள்ளது மானசரோவர் ஏரி. 'மானசரோவர்' என்றால் 'மனதில் இருந்து தோன்றிய தடாகம்' என பொருள். சுத்தமான நீர் கொண்ட இந்த ஏரி, பார்வதியின் அம்சமாகும். வசிஷ்டர், மரீசி உள்ளிட்ட முனிவர்கள் பிரம்மாவிடம், சிவ வழிபாட்டுக்காக நீர் நிலை ஒன்றை அருளும்படி வேண்டினர். பிரம்மாவும் தன் மனதில் இருந்து இந்த தெய்வீக ஏரியை உருவாக்கினார். ஏரியின் நடுவில் சுவர்ணலிங்கமாக ( தங்கலிங்கம் ) சிவன், முனிவர்களுக்கு காட்சியளித்தார். இந்த குளத்து நீரே, பூமிக்கடியில் சென்று, கங்கையாக உற்பத்தியாவதாக கருதுகின்றனர். புனித நதிகளின் தாயாக போற்றப்படும் மானசரோவரை திபெத்தியர்கள் 'மகா சரோவர்' என்கின்றனர். 412 ச.கி.மீ.,பரப்பும், 300 அடி ஆழமும் கொண்ட இந்த ஏரி கடல்போல காட்சியளிக்கிறது.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர். சென்னை பதிப்பு . ஜூன் 24, 2014.

Saturday, September 3, 2016

வலம் வரும் முறை

திருவிழா காலத்தில் வலம் வரும் முறை
திருவிழா காலத்தில் சுவாமி வீதியில் பவனி வரும் போது, மூலவரின் எல்லா சக்தியையும் தன்னுடன் எடுத்துச் செல்வதாக ஐதீகம். அந்த சமயத்தில் கோயிலுக்குள் மூலவருக்கு அர்ச்சனை செய்தல், வலம் வருதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்கிறது 'சிவயோகி ஸம்வாதம்' என்ற நூலிலுள்ள ஸ்லோகம். ஏனெனில், கோயிலுக்குள் மூலவரும், உற்சவரும் ( பவன் வரும் சுவாமி ) ஒன்றாக இருக்கும் சமயத்தில் மட்டுமே வலம் வர வேண்டும் என்பது மரபு. இந்த நடைமுறை கொடிமரம், உற்சவர் அமைந்துள்ள கோயில்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மூன்று தடவை தீர்த்தம் வாங்குங்க !
பெருமாள் கோயிலில் தரிசனம் முடிந்ததும், துளசி தீர்த்தம் வழங்குவது வழக்கம். அதை ஒருமுறை வாங்கியே பருகுகிறோம். ஆனால், தீர்த்தத்தை பயபக்தியுடன், இருகைகளாலும் மூன்று முறை தனித்தனியாகப் பெற்று, தனித்தனியாகவே பருக வேண்டும் என்று ஸம்ருதி ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ம்முறை தீர்த்தம் பருக்கினால்தான், உடல், உள்ளம், வாக்கு ஆகிய மூன்றாலும்செய்த காயிகம், மாதஸம், வாசிகம் என்னும் மூன்று வித பாவங்களும் நீங்கும். பெருமாளின் தீர்த்தம் மட்டுமல்லாமல், கலசம் வைத்து பூஜிக்கப்பட்டு தரும் தீர்த்ததிற்கும் இது பொருந்தும்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர். சென்னை பதிப்பு . ஜூன் 24, 2014.

Friday, September 2, 2016

டிப்ஸ்...டிப்ஸ்...

* வித்தியாசமாக பஜ்ஜி செய்ய ஒரு ஐடியா... பீன்ஸ்களை ஒரு அங்குல நீளத்துக்கு வெட்டி, உப்பு, மிளகாய்த்தூள் கலந்த சூடான
தண்ணீரில் போட்டு வையுங்கள். வெந்நீர் ஆறியதும், பீன்ஸ் துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்துப்
பொரித்தெடுங்கள். டேஸ்ட் அருமையாக இருக்கும்.
* உங்களிடம் உள்ள அரிசியில் சாதம் வடித்தால் நிறம் மங்கலாக இருக்கிறதா? அரிசி வேக வைக்கும்போது தண்ணீருடன்
சிறிது கெட்டியான மோர் அல்லது பால் கலந்து விடுங்கள். சாதம் வெண்மையாகக் கிடைக்கும்.
* இட்லி மாவு புளித்து விட்டாலோ அல்லது மாவு குறைவாக இருந்தாலோ, ஒன்றிரண்டு பிடி வடித்த சாதத்துடன் பால் சேர்த்து
மிக்ஸியில் மசியுங்கள். இதை இட்லி மாவுடன் கலந்து, மிதமான தீயில் தோசை வார்த்துப் பாருங்கள். பேப்பர் ரோஸ்ட்
போல பிரமாதமாக இருக்கும்.
* இஞ்சி டீ தயாரிக்கும்போது, இஞ்சியை நசுக்கிப் போட கஷ்டமாக இருக்கிறதா...? கடையில் கிடைக்கும் இஞ்சி முரப்பாவை
வாங்கி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். டீ தயாரிக்கும்போது, இதில் ஒரு துண்டை சேர்த்தால் போதும்.
சர்க்கரையை சிறிது குறைவாகச் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான இஞ்சி டீ சுலபத்தில் தயார்.
-- வாசலிகள் பக்கம். விஜயலட்சுமி ராமாமிர்தம்.
-- அவள் விகடன். 26-2-2010.

Thursday, September 1, 2016

தெரியாத விஷயங்கள்

* நாகலாந்தில் ஆண் குழந்தைப் பிறந்தால், உடனேயே வெந்நீரில் குளிப்பாட்டுவார்களாம். இந்த சூட்டை தாங்கினால்தான்
குழந்தை வீரனாக வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
* கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க உதவிய ராணி எஸபெல்லா தன் வாழ்நாளில் இரண்டே இரண்டு முறை
மட்டும்தான் குளித்திருக்கிறாராம்.
* இந்தையாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707ம் ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள தரங்கம்பாடியில்தான்
ஆரம்பிக்கப்பட்டது.
* பர்மாவில் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் ஆசி வேண்டி, உறவினர்கள் இறந்தவர் வீட்டில் ஒருவாரம் படுத்து
தூங்குவார்களாம்.
-- ஆர்.சரஸ்வதி, பூனாம்பாளையம்.
-- தினமலர். பெண்கள்மலர். பிப்ரவரி 21, 2009