Monday, October 31, 2016

"மறக்க முடியாத வாசகம் ?"

"மறக்க முடியாத வாசகம் ?"
" குடலில் ஒரு அவுன்ஸ் மலமும், மூளையில் ஒரு அவுன்ஸ் அவமானமும் மிச்சம் இல்லாத மனிதன் எவனும் இல்லை!"
"புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்போது என்ன எழுதித் தருவீர்கள்?"
"சிறகிருந்தால் போதும்
சிறியதுதான் வானம்!"
"நீங்கள் ரசித்துக்கேட்ட அனுபவ மொழி?"
"முஸ்லீம் பெரியவர் ஒருவர் சொன்னது. 'நீ ராஜாவோ... பிச்சைக்காரனோ... உண்டது, உடுத்தது, கொண்டது, கொடுத்தது...
இந்த நாலும்தான் மிச்சம்'!"
"மனிதனின் உண்மை முகம் எது?"
"எந்தத் துறையில் ஒருவன் பொருள் ஈட்டினானோ அல்லது புகழ் ஈட்டினானோ, அந்தத் துறையைக் கழித்துவிட்டு மிச்சப்படுவது எதுவோ அது!"
"ஒரு குறுங்கதை சொல்ல முடியுமா?"
"பார்வையற்ற பெண்ணைக் காதலித்தான் ஒருவன். 'பார்வை கொடுத்தால் உன்னையே மணப்பேன்' என்றாள் அவள். அவனும் பார்வை கொடுத்தான். கண்திறந்து பார்த்தவள் தன் காதலன் கண் இல்லாதவன் என்பதை கண்டு, 'நான் உன்னை மணக்க மாட்டேன்' என்று மறுத்துவிட்டாள். காதலன் கண்ணீரோடு முணுமுணுத்தான், 'என்னை நிராகரித்தவளே... என் கண்ணை நிராகரிக்க முடியாதல்லவா!"
"உங்கள் வர்ணனையில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?"
" 'சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்.
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்!"
-- வைரமுத்து 60 கேள்விகள்.
-- ஆனந்த விகடன், 18-07-2014.

Sunday, October 30, 2016

'மெனோபாஸ்'

ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்த்தியதில் இருந்து, தோராயமாக 35 வருடங்களாகவது, மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்களை கொஞ்சம் பயம், கொஞ்சம் சுகவீனம் கலந்தே நகர்த்தி வருகிறார்கள். 47-51 வயதை எட்டும்போது மாதவிடாய் நின்று, 'இனிமேல் இது இல்லை,' என்ற விடுதலையைத்தான் 'மெனோபாஸ்' என்கிறார்கள். இது நல்ல உடல்வாகைப் பெற்றிருக்கும் 35 சதவிகிததுக்கும் குறைவான பெண்களுக்குத்தான், மீதமுள்ள 65 சதவிகிதத்தினர் இந்த நாட்களில் படும் அவஸ்தைகள், அனுபவித்தால் மட்டுமே புரியும். சாதாரண ரத்தசோகையில் இருந்து, வாந்தி, தலைவலி, பிழியும் வயிற்று வலி, வயிற்று உப்புசம் ... என உபாதைகள் அவஸ்தையாக, 'சனியன் ... இது எப்போ ஒழியும்?' என்று உதிரத்துக்கு முன்னதாகவே கண்ணீர் ஊற்று எடுக்க, இறுதி யுத்தத்துக்குக் காத்திருப்பார்கள். உடலும் மனமும் வதைபடும் இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும், எதைச் சாப்பிட்டால் மீண்டும் புத்துணர்வு பெறலாம், இது நோயா... அல்லது வெறும் பயமா? ஏராளமான சந்தேகங்கள் மெனோபாஸ் பருவப் பெண்களை அலைக்கழிக்கும். ஆங்கிலத்தில் இதனை Empty nest syndrome என்பார்கள்.
-- மருத்துவர் கு. சிவராமன். ( நலம் 360 0 தொடரில் ) .
-- ஆனந்த விகடன், 18-07-2014.

Saturday, October 29, 2016

வெளிநாட்டுக் கோயில்கள்.

வெல்லிங்டன் ஸ்ரீ குறிஞ்சிக் குமரன் ஆலயம்.
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்வது வழக்கம். குன்றுகள் கடந்து, கடல் கடந்து அயல் தேசங்களிலும் குமரன் குடிகொண்டு அருள்பாலிக்கிறான்.
நியூசிலாந்து தலைநகரம் வெல்லிங்டன். இந்த நகருக்கு அருகில் உள்ளது நியூலாண்ட்ஸ் பகுதி. இங்கே வசிக்கும் தமிழ் பக்தர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது ஸ்ரீ குறிஞ்சிக் குமரன் ஆலயம்.
இங்கே குமரன், வள்ளி மற்றும் தேவயானியுடன் அருள்பாலிக்கிறார்.
ஆலய வரலாறு : முதன்முதலாக அக்டோபர் 1992ல் கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 1993ல் நியூசிலாந்து இந்து அசோசியேஷன் இக்கோயிலைப் பதிவு செய்தது. கோயில் கட்டப்பட்டு மார்ச் 1999 -ம் ஆண்டு வழிபாட்டுக்கு தொடங்கப்பட்டது.
ஆலய முகவரி : Kurinchi Kumaran Temple.
3 Batchelor st Newlands.
Wellington 6037, New zealand.
இணைய தளம் : http:// hinduterm-ple.co.nz/
-- தினமலர் பக்திமலர். 16-10-2014.

Friday, October 28, 2016

ஓணம் கொண்டாடக் காரணம்.

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் தலைமையில், 'விஸ்வஜித்' என்னும் யாகத்தை மலைநாட்டு மன்னன் மகாபலி நடத்தினான். அந்த யாக குண்டத்தில் இருந்து வில், அம்பு, அம்புராத்துணி, கவசம் என ஆயுதங்கள் வெளிப்பட்டன. அவற்றை மகாபலிடம் வழங்கிய சுக்ராச்சாரியார், இவற்றின் மூலம் தேவர்களை வென்று, உலகையே ஆளும்படி வாழ்த்தினார். இதன்பின் தேவலோகம் மகாபலியின் வசம் வந்தது. மகாபலி நல்லவனாயினும், வெற்றி மமதையில் தனக்கு நிகர் தானே என்ற ஆணவமும் கொண்டிருந்தான்.
இதனிடையே, தேவர்களின் தாயான அதீதி, தன் பிள்ளைகள் தேவர் உலகை இழந்தது கண்டு தவித்தாள். மகாபலியின்
ஆணவத்தை ஒடுக்கி, தங்கள் உலகை மீட்டுத்தர வேண்டுமென்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தாள். அவளது வேண்டுகோளை ஏற்ற மகாவிஷ்ணு, வாமன மூர்த்தியாக ( குள்ள வடிவ அந்தணர்) ஆவணி மாதம் திருவோணத்தன்று அவதாரம் செய்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, உலகையே அளந்தார். எல்லாம் அவர் வசம் வந்தது. மகாபலியை ஆட்கொண்டு பாதாள லோகத்திற்கு அனுப்ப்னார். தேவர்கள் மகிழ்ந்தனர். தான் ஆட்கொள்ளப்பட்ட நாளை, விழாவாகக் கொண்டாட வேண்டுமென அவன் மகாவிஷ்ணுவிடம் கோரிக்கை வைத்தான். அவனால் பல நன்மைகளைப் பெற்ற மக்கள், இன்று வரை திருவோணத் திருநாளன்று வரவேற்று மகிழ்கின்றனர். அந்த நாளே ஓணம் பண்டிகையாக மக்களால் கொண்டாடப்படுகிறது.
--- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இனைப்பு . சென்னை . செப்டம்பர் 2, 2014.
-- இதழ் உதவி : SB.மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.

Thursday, October 27, 2016

ஒரு ரோமத்துக்கு,

ஒரு வருஷம் சொர்க்கம்.
யாகம் நடத்தும் அந்தணர்களுக்கு, தட்சிணை கொடுக்காவிட்டால் யாக பலன் பூர்த்தியாகாது என்கிறது சாஸ்திரம். யாகம் நடத்துவதற்கு முன்பே தட்சிணையின் ஒரு பகுதியை கொடுத்து, அந்தணரை அழைக்க வேண்டும். யாகம் நடத்தும் முறை பற்றி கூறும் ஆபஸ்தம்பர் என்ற மகான், குள்ளப்பசுவைக் கன்றோடு அந்தணர்களுக்கு தட்சிணையாகக் கொடுப்பது நல்லது என்கிறார். விஷ்ணு வாமனராக குள்ளவடிவில் வந்து தானம் பெற்றதை நினைவூட்டும் விதமாக குள்ளப்பசுவைத்தேர்ந்தெடுத்து கன்றுடன் தருவது மரபு. இதன்மூலம் அந்த பசுவின் உடம்பில் எத்தனை ரோமம் இருக்கிறதோ, அத்தனை ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழும் பாக்கியத்தை தானம் கொடுத்தவர் பெறுகிறார்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இனைப்பு . சென்னை . செப்டம்பர் 2, 2014.
-- இதழ் உதவி : SB.மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.

'எனக்கு எதுக்குடா வாங்கின?"


Wednesday, October 26, 2016

சூரிய சக்தி விமானம்

* பெயெர்னெ *
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் தயாரித்த முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே இயங்கும் விமானத்துக்கு 'சோலார் இம்பல்ஸ்' என்றே பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் சோலார் பேனல்கள் மூலம் இவ்விமானம் பறப்பதற்கான எரிசக்தி பெறப்படுகிறது. முந்தைய சோலார் கண்டுபிடிப்புகளால் இரவில் பறப்பது சிரமம். அந்தத் தடையையும் தகர்த்து இரவிலும் பறக்கும் திறனை 'சோலார் இம்பல்ஸ்' பெற்றிருக்கிறது.
வரும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அபுதாபியில் தன் பயணத்தைத் தொடங்கும் 'சோலார் இம்பல்ஸ்' - முதல் நாடாக இந்தியாவுக்குப் பயணிக்கிறது.
இந்தியாவில், ஆமதாபாத், வாரணாசி ஆகிய இரு இடங்களில் 'சோலார் இம்பல்ஸ்' தரையிறங்க அனுமதி கோரப்பட்டுள்ள இது, ஒற்றை விமானியால் இயக்கப்படவுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இப்பயணம் அமையும். விமானத்தின் எடை 2.750 கிலோ. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
135 மைக்ரான் தடிமன் ( மனித மயிரிழையில் தடிமன் ) கொண்ட 12 ஆயிரம் சூரிய சக்தித் தகடுகள் இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. 144 பக்கவரிசைகளில் 50 செ.மீ. இடைவெளியில் நேர்த்தியாக இத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் மேற்புறம் சூரியசக்தித் தகடுகளாலும், அடிப்பாகம் மின் இலகுவான செயற்கை இழைகளாலும் ( அல்ட்ரா லைட் பேப்ரிக் ) வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இறகுப் பகுதி முழுக்க கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பகலில் சூரிய சக்தி மூலம் பறந்தபடி , உபரி மின்சாரம் பேட்டரிகளில் சேமிக்கப்படும். அந்த பேட்டரி மூலம் இரவில் தொடர்ந்து பறக்கும். இவ்விமானத்தின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு பேட்டரிகளாகும். 'சோலார் இம்பல்ஸ்' தொடர்ந்து 120 மனி நேரம் இயக்கலாம்.
-- பிடி ஐ. ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். புதன், அக்டோபர் 29, 2014.

Tuesday, October 25, 2016

* பெயெர்னெ *

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் தயாரித்த முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே இயங்கும் விமானத்துக்கு 'சோலார் இம்பல்ஸ்' என்றே பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் சோலார் பேனல்கள் மூலம் இவ்விமானம் பறப்பதற்கான எரிசக்தி பெறப்படுகிறது. முந்தைய சோலார் கண்டுபிடிப்புகளால் இரவில் பறப்பது சிரமம். அந்தத் தடையையும் தகர்த்து இரவிலும் பறக்கும் திறனை 'சோலார் இம்பல்ஸ்' பெற்றிருக்கிறது.
வரும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அபுதாபியில் தன் பயணத்தைத் தொடங்கும் 'சோலார் இம்பல்ஸ்' - முதல் நாடாக இந்தியாவுக்குப் பயணிக்கிறது.
இந்தியாவில், ஆமதாபாத், வாரணாசி ஆகிய இரு இடங்களில் 'சோலார் இம்பல்ஸ்' தரையிறங்க அனுமதி கோரப்பட்டுள்ள இது, ஒற்றை விமானியால் இயக்கப்படவுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இப்பயணம் அமையும். விமானத்தின் எடை 2.750 கிலோ. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
135 மைக்ரான் தடிமன் ( மனித மயிரிழையில் தடிமன் ) கொண்ட 12 ஆயிரம் சூரிய சக்தித் தகடுகள் இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. 144 பக்கவரிசைகளில் 50 செ.மீ. இடைவெளியில் நேர்த்தியாக இத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் மேற்புறம் சூரியசக்தித் தகடுகளாலும், அடிப்பாகம் மின் இலகுவான செயற்கை இழைகளாலும் ( அல்ட்ரா லைட் பேப்ரிக் ) வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இறகுப் பகுதி முழுக்க கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பகலில் சூரிய சக்தி மூலம் பறந்தபடி , உபரி மின்சாரம் பேட்டரிகளில் சேமிக்கப்படும். அந்த பேட்டரி மூலம் இரவில் தொடர்ந்து பறக்கும். இவ்விமானத்தின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு பேட்டரிகளாகும். 'சோலார் இம்பல்ஸ்' தொடர்ந்து 120 மனி நேரம் இயக்கலாம்.
-- பிடி ஐ. ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். புதன், அக்டோபர் 29, 2014.
* கார்களுக்குப் பதிவு எண் வழங்குவதை அறிமுகப்பட்டுத்தியது சுவீடன்.
* கண்ணாடியில் சாலைகள் போட்டுள்ள நாடு ஜெர்மனி.
* பிளங் பால் என்ற பறவை ஓய்வெடுக்காமல் ஒரே மூச்சில் 3,600 கி.மீ. தூரத்தைக் கடந்துவிடும்.
* ஒரு கிலோ குங்குமப்பூவைச் சேகரிக்க ஒரு லட்சத்து 40 ஆயிரம் செடிகள் வேண்டும்.
* ஒரு மயிலிறகில் ஒன்பது வண்ணங்கள் இருக்கின்றன.
* உலகில் அதிகத் தொலைக்காட்சி நிலையங்கள் இருக்கும் நாடு அமெரிக்கா.
* தான் பிறந்த நாட்டை தந்தையர் நாடு என்று சொல்பவர்கள் ஐரோப்பியர்கள்.
* வங்கிகளில் டிராப்ட் தரும் முறையை அறிமுகப்படுத்திய நாடு சீனா.
* உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் ஜப்பானில் உள்ள ஸ்டீல் டவர்.
* மனித உடம்பில் இருக்கும் நரம்பின் சராசரி நீளம் 72.4 கி.மீ.,
* கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு இடப்பட்ட பெயர் அனாலிட்டிக்கா இன்ஜின்.
-- தொகுப்பு : சரஸ்வதி பஞ்சு.
-- 'தி இந்து' நாளிதழ். மாயாபஜார் . இணைப்பு . புதன், அக்டோபர் 29, 2014.

Monday, October 24, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

1. வாமனரின் பெற்றோர்... காஸ்யபர், அதிதி.
2. மகாபலியின் கொள்ளுத்தாத்தா... பிரகலாதன்.
3. பிரகலாதனின் மகன் ... விரோசனன்.
4. விரோசனனின் மகன் ... வைரோசனன்.
5. வைரோசனின் மகன் ... மகாபலி.
6. மகாபலி யாகம் நடத்திய நதிக்கரை ... நர்மதை.
7. விந்தியாவளி என்பவள்ன் ... மகாபலியின் மனைவி.
8. கிருஷ்ணாஜினம் என்பது ... வாமனர் அணிந்திருந்த மேலாடை.
9. வாமனருக்கு தானம் அளிப்பதை தடுக்க முயன்றவர் ... சுக்ராச்சாரியார்.
10. தர்ப்பைப் புல்லால் யாருடைய கண்ணை வாமனர் குத்தினார் ... சுக்கிராசாரியார்.
11. வாமனர் மூன்றடி நிலத்தை அளக்க எடுத்த வடிவம் ... திரிவிக்ரமன் ( உலகளந்த பெருமாள் ).
12. திருப்பாவையில் திரிவிக்ரம அவதாரம் பற்றி எத்தனை பாடல்கள் வருகிறது ... மூன்று.
-- பக்திமாலை . அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இனைப்பு . சென்னை . செப்டம்பர் 2, 2014.
-- இதழ் உதவி : SB.மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.

Sunday, October 23, 2016

பஞ்ச 'வ' காரங்கள்.

வாழ்வில் 'வ'காரப் பண்புகள் மிகவும் முக்கியம் வேண்டியவை. அவை :
1. வஸ்த்ரா ( நல்ல உடை அணிதல் ).
2. வபுஷா ( சிறந்த உடல்கட்டுடன் இருத்தல் ).
3. வாசா ( நல்ல பேச்சுத் தன்மையுடன் இருத்தல் ).
4. வித்யா ( கல்வி, படிப்பறிவுடன் இருத்தல் ).
5. விநயம் ( பணிவும், அடக்கத்துடனும் இருத்தல் ).
-- சித்ரா நாராயணன். ( நல்ல வார்த்தை நாலஞ்சு! தொடரில்... )
-- தினமலர் ஆன்மிக மலர். இனைப்பு . சென்னை . செப்டம்பர் 2, 2014.
-- இதழ் உதவி : SB.மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.

Saturday, October 22, 2016

பிறப்பு - இறப்பு.

ஒவ்வொரு பிறப்பும் கற்றுக்கொள்ள
வருகிறது;
ஒவ்வோர் இறப்பும் கற்றுத்தந்து
போகிறது.
இயல்பான மரணம் மூன்று நிலை
களைத் தாண்டுகிறது.
உறுப்புகள் தாமாகவே இயங்குவது
ஒரு நிலை.
உறுப்புகள் மருத்துவர்களால் இயங்குவது
இரண்டாம் நிலை.
உறுப்புகள் எந்திரங்களால் இயங்குவது
மூன்றாம் நிலை.
உறுப்புகள் எந்திரங்களால் இயங்கத் தொடங்கிவிட்டால், மரணம் பெரும்பாலும் வார்டுக்கு வெளியே வராண்டாவில் நிற்கிறது என்று பொருள்.
சிறுநீரகம் செய்த வேலையை எந்திரங்கள் செய்யத் தொடங்கியபோதே, நம்பிக்கையில் பாதி நசிந்துபோனது.
-- கவிப்பேரரசு வைரமுத்து. ( தனது தந்தையார் ராமசாமி அவர்கள் மரணமடைந்தபோது எழுதியது... ).
-- ஆனந்த விகடன்.03-04-2013.

Friday, October 21, 2016

சர்.சி.வி.ராமன்..

" 'கம்பெனி கொடுப்பதற்காக மது அருந்தினேண்' -- 'நட்புக்காக குடித்தேன்' என்றெல்லாம் கூறுபவர்களுக்கு ஓர் அறிவுரை...?"
" பிரபல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் மேலை நாட்டுக்குச் சென்றபோது விருந்து ஒன்றில் ஒயின் குடிக்க அன்புடன் வற்புறுத்தப்பட்டார். அப்போது ராமன், "I want to see Raman's effect in Raman" என்று கூறி அன்புடன், அதே சமயம் உறுதியாக மறுத்தார். ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, மறுப்பதும் ஒரு கலை. அதை அவசியமானபோது அவசியம் பயன்படுத்துங்கள்!"
-- கே.சரஸ்வதி, ஈரோடு.
"மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு உள்ள சிறப்பு என்ன ?"
" நீர் - நீர்மூழ்கிக் கப்பல் ஊழல்
நிலம் -- விவசாயிகள் நிவாரண ஊழல்
காற்று -- 2ஜி அலைக்கற்றை ஊழல்
ஆகாயம் -- ஹெலிகாப்டர் பேர ஊழல்
நெருப்பு -- நிலக்கரி பேர ஊழல்
ஆக, பஞ்சபூத ஊழல் அரசு என்று மன்மோகன் சிங் அரசைக் குறிப்பிடலாம்!"
-- ( நானே கேள்வி... நானே பதில்! ) பகுதியில்.
-- ஆனந்த விகடன்.03-04-2013.

Thursday, October 20, 2016

எது நல்ல கொழுப்பு?

ரத்தத்தில் உள்ள மொத்தக் கொலஸ்ட்ரால் அளவு 200 மில்லி கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம்வரை 'நல்லகொழுப்பாக' அமைய வேண்டும். அதாவது 40-45 மில்லி கிராம் அளவுக்காவது நல்ல கொழுப்பு இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஹெச்.டி.எல். கொழுப்பு ( High - density lipoprotein -- HDL ) என்கிறார்கள். இயல்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு, அவர்களுடய உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் காரணமாக, சரியான விகிதத்தில் ஹெச்.டி.எல். அமைவதால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
ஹெச்.டி. எல். கொழுப்பு ஒரு போலீஸ்காரரைப் போல் செயல்பட்டு ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே படிந்த கெட்ட கொழுப்பை ( இதை low - density lipoprotein -- HDL என்கிறார்கள் ) கல்லீரலுக்கு இழுத்து வந்து பித்த நீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. பொதுவாக ஹெச்.டி.எல். கொழுப்பு 35 மில்லி கிராமுக்குக் கீழே இருப்பது உடலுக்கு நல்லதல்ல.
நல்ல கொழுப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் முடிந்தவரை மாமிச உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். முட்டையில் மஞ்சள் கரு, கோழிக்கறியின் தோல், மூளை , ஈரல் முதலியவற்றைச் சாப்பிடக் கூடாது. நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் நின்ற பெண்கள் ஹார்மோன் மாத்திரை ( HRT) சாப்பிடுவதன்மூலம் ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
-- 'நலம் தரும் மருத்துவம்' என்ற நூலிலிருந்து, சி. பன்னீர்செல்வன்.
-- 'தி இந்து' நாளிதழ்.( நலம் வாழ - இணைப்பு.) செவ்வாய், அக்டோபர் 28, 2014.

Wednesday, October 19, 2016

ஜன்னல் இல்லாத விமானம்

உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்.
பயணிகள் வான்வெளியை ரசிக்க முடியும்.
விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக்கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முதலாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விமானம், அதில் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுமிட்டுள்ளார்கள். இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமாவதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு ( ஓஎல்இடி) தொழில்நுட்பத்தின் மூலம் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் இன்டர்நெட்டில் உலவிக்கொண்டே வான்வெளியில் என்ன நடக்கிறது என்பதை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்கிரீன் ஆன், ஆப் வசதி கொண்டதாக இருக்கும். இதன்மூலம் விரும்பும்போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனினும் வர்த்தக ரீதியாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
-- தி.கார்டியன். ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 28, 2014.

Tuesday, October 18, 2016

தில்லையும் திருப்பெருந்துறையும்.

நாம் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விடுகிறோம். 1 மணிக்கு 900 மூச்சுகள் ஒரு நாளைக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுகள் விட்டுக் கொண்டிருக்கிறோம்.
தில்லையம்பலத்திலே ஸ்ரீ நடராஜர் கருவறைக்கு மேல் உள்ள பொன் வேய்ந்த அந்தத் தகடுகளிலே அடிக்கப் பெற்றுள்ள தங்க ஆணிகள் 21 ஆயிரத்து 600. இது போல திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் அருவமாகத் தகழும் ஆத்ம லிங்கத்திற்கு மேல் தளத்திலே அடிக்கப் பெற்றுள்ள ஆணிகள் 21 ஆயிரத்து 600.
-- தினமலர். பக்திமலர். மார்ச் 24, 2011 .இணைப்பு.

Monday, October 17, 2016

பூசைகளில் சிறந்த தலங்கள்

திருவனந்தல் -- திருக்குற்றாலம்.
காலை பூசை -- ராமேஸ்வரம்.
மத்தியான பூசை -- திருவானைக்கால்.
சாயங்கால பூசை -- திருவாரூர்.
ராக்கால பூசை -- மதுரை.
அர்த்தசாம பூசை -- சிதம்பரம்.
-- தினமலர். பக்திமலர். மார்ச் 24, 2011 .இணைப்பு.

Sunday, October 16, 2016

தெரியுமா? தெரியுமே1

* மகாபலியின் மகனின் பெயர் -- நமுசி.
* அத்திரி மகரிஷியின் மனைவி பெயர் -- அனுசூயா தேவி.
* சடாயு இறக்கைகளை இழந்த இடத்தின் பெயர் -- சிறகிழந்தநல்லூர்.
* ராமன், சீதையை தொலைத்த இடம் -- கோதாவரி நதிக்கரையில் உள்ள பஞ்சவடி.
* சங்கரலிங்க கோமதி அம்மன் ஸ்தலம் உள்ள ஊர் -- திருநெல்வேலிக்கு மேற்கே 35 மைல் தொலைவில் உள்ள சங்கரன்
கோவில்
* நாகதோஷம் நீக்கும் ஸ்தலம் -- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள திருப்புத்தகை எனும் புத்தகளூர் எனும்
ஸ்தலம்.
* கோபுரத்தின் நடுவே தெரியும் கூண்டு அமைப்பிற்கு தளம் என்று பெயர். எத்தனை தளங்கள் கொண்டதாக கோபுரம்
அமைகிறதோ அதற்கு ஏற்றாற்போல் கலசங்களும் 5, 7, 9, 11 என்ற கணக்கில் வைக்கப்படுகின்றன.

Saturday, October 15, 2016

சதாசிவ மூர்த்திகள்.

முகங்கள் -- திசை -- தொழில்
-----------------------------------------------------------------
சத்யோனாதம் மேற்கு அருளல்
வாமதேவன் வடக்கு மறைத்தல்
அகோரம் தெற்கு அழித்தல்
தத்புருஷம் கிழக்கு காத்தல்
ஈசானம் உச்சி படைத்தல்.
-- தினமலர். பக்திமலர். மார்ச் 31, 2011 .இணைப்பு.

Friday, October 14, 2016

அம்பிகையின் அங்கங்கள்

அம்பிகையின் அங்கங்களாக விளங்கும் அட்சரங்கள்!
1. அ - நெற்றிக்கு மேல் தலை உச்சி.
2. ஆ - நெற்றி.
3. இ - வலது கண்.
4. ஈ - இடது கண்.
5. உ - வலது காது.
6. ஊ - இடது காது.
7. ரு - வலது கபோலம்.
8. ரூ - இடது கபோலம்.
9. லு - வலது நாசித்துவாரம்.
10. லூ - இடது நாசித்துவாரம்.
11. ஏ - மேல் உதடு.
12. ஐ - கீழ் உதடு.
13. ஓ - மேல்பல் வரிசை.
14. ஔ- கீழ்ப்பல் வரிசை.
15. அம் - வலது தாடை.
16. அ: - இடது தாடை.
17 - 21. க1, க2. க3. க4, நு - இவை ஐந்தும் வலது கை.
22 - 26. ச.1, ச2, ஜ, ஜ்ஜ, ஞ -- இவை ஐந்தும் இடது கை.
27 - 31. ட1, ட2, ட3, ட4, ண -- இவை ஐந்தும் வலது கால்.
32 - 36. த1, த2, த3, த4, ந -- இவை ஐந்தும் இடது கால்.
37. ப1 -- வயிறு.
38. ப2 -- வலது ஸ்தனம்.
39 . ப3 -- இடது ஸ்தனம்.
40. ப4 -- கழுத்து.
41. ம -- ஹ்ருதயம்.
42 - 48 -- ய, ர, ல, வ, ச, ஷ, ஸ -- ஏழும் தோல், எலும்பு, ரத்தம், மாமிசம், மஞ்ஞை, மேதஸ், சுக்லம் என்னும் சப்த
தாதுக்களாகும்.
49. ஹ் -- நாபி ( தொப்புள் ).
50 , 51 -- எ, க்ஷ: -- உபசாரங்கள்.
-- தினமலர். பக்திமலர். மார்ச் 31, 2011 .இணைப்பு.

Thursday, October 13, 2016

வயிற்று வலி

வயிற்று வலிக்கான காரணங்கள்!
* நடுவயிற்றிலும், வலதுபக்க விலாவுக்குக் கீழ்கும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தக்கல் வலியாகவோ,
கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.
* இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலி உண்டாக்கலாம்.
* நடுவயிற்றில் எரிச்சலுடங்கூடிய வலி, வயிற்றுப்புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.
* விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின்
வலியா இருக்கலாம்.
* பெண்களுக்கு அடிவயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடிவயிற்றின்
மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.
இதைத் தண்டி அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வலிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிக்கும் 'ஒரு சோடா குடிச்சா, சரியாப் போயிடப்போகுது' என்ற அலட்சியமும், 'ஓ பகவான் கூப்பிட்டுட்டார்' என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம் !
-- மருத்துவர் கு.சிவராமன். ( நலம் 3600 ).
-- ஆனந்த விகடன். 6-8-2014.

Wednesday, October 12, 2016

"உயிர்க்கொலை"


"உயிர்க்கொலை செய்து உணவாக அருந்துவது பாவம் இல்லையா?"
"தர்ம வியாதர்னு ஒரு துறவியை கௌசிக முனிவர் சந்திச்சு பல தத்துவ விளக்கங்கள் கேட்கிறார். அதே தர்ம வியாதர் காலையில் சந்தையில் மாட்டு இறைச்சி விக்கிறார். 'அய்யா, உயிர்க்கொலை பாவம் இல்லையா?னு கௌசிக முனிவர் கேட்டார். 'எங்க பரம்பரைத் தொழிலை நான் செய்கிறேன். இதில் தப்பு இல்லை. இந்த உலகத்தில் வலிமையான உயிர்கள், பலவீனமான உயிர்களை அடிச்சுச் சாப்பிடுகிறது இயற்கை நியதி. எலியை பூனையும், பூனையை நாயும், நாயை ஓனாயும், மானைப் புலியும் அடிச்சு சாப்பிடுது. ஒரு ஆட்டைக் கொலை பண்ணா, ஒரு உயிர்தான் போகுது. ஒரு கை சாதத்துல உயிருள்ள சுமார் 500 நெல் வெந்து அரிசியாகியிருக்கு. ஒரு நெல்லும் உயிருள்ளதுதான்; ஒரு ஆடும் உயிருள்ளதுதான். நெல்லுக்கு உயிர் இருக்குனு, நாம சாப்பிடாம இருக்க முடியுமா? 500 வருஷ ஆலமரம் கீழே விழுந்து மண்ணோட மக்கிப்போகும்போது, அந்த ஆலமரத்தின் சாற்றை உண்டுதான் புதுச் செடி முளைக்கிறது. ஆக, உயிர்க்கொலை தவிர்க்க முடியாது'னு சொன்னாராம். இது மகாபாரதக் கூற்று.
என்னைக் கேட்டா, 40 வயசு வரைக்கும் உடல் பலத்துக்கு அசைவம் சாப்பிடுங்க. அப்புறம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சைவத்துக்கு மாறிடுங்க!"
-- விகடன் மேடை. ( வாசகர் கேள்விகள்... சிவகுமார் பதில்கள்.)
-- ஆனந்த விகடன். 6-8-2014.

Tuesday, October 11, 2016

நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு

பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு
எதிர்காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்ப்பதற்குத் தேவையான நீர் ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள், பூமிக்கு உள்ளே, உலகின் மிகப் பெரிய, கடலைப் போன்று மூன்று மடங்கு அதிகமான நீர் ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
பிரேசிலில் உள்ள ஒரு எரிமலையில் இருந்து வெளியேறிய கற்களில், ஒரு சதவீதத்துக்கு, தண்ணீர் இருந்ததை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து, வட அமெரிக்காவின் நிலப்பரப்பிற்குக் கீழ், எரிமலைக் குழம்புகளாலான பாறைகள் நிறைந்துள்ளதையும், அப்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் கண்டுபிடித்தனர். பூமிக்கடியில், 640 கி.மீ., ஆழத்தில், பாறை இடுக்குகளில், தனிம மூலக்கூறு வடிவில் தண்ணீர் நிறைந்துள்ளது.
இதன் மூலம், பூமிக்கடியில் பரந்த அளவில் தண்ணீர் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய முழுக் கடலளவை விட மூன்று மடங்கு அதிக தண்ணீரைக் கொண்டதாக உள்ளது.
-- தினமலர் சென்னை. ஞாயிறு 15-6-2014.

Monday, October 10, 2016

துளசி செடி

உலகில் நாள் முழுவதும் ஆக்ஸிஜனைத் தரும் தாவரங்கள் அரசமரம், மூங்கில் மற்றும் துளசி ஆகியவை. இதில் அரசமரம் வளந்து பயன்தர குறைந்தது 10 வருடங்கள் ஆகும். மூங்கில் வளர்ந்து பலன்தர 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், துளசிச் செடி 2 மாதங்களில் வளர்ந்து சுவாசப்பலன் தரத் துவங்கிவிடும். வீட்டு மொட்டை மாடியில் கூட துளசிச்செடிகளை வளர்க்கலாம். மற்ற எந்த செடிக்கும் இல்லாத அறிவியல் தன்மை துளசிச் செடிக்கு உண்டு என்பதை அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.
பிற செடிகளில் நாள் ஒன்றுக்கு 0.06 லிட்டர் வரை மட்டுமே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யமுடியும். ஆனால், துளசிச்செடி ஒரு குறு மரத்திற்கு இணையாக ஒரு லிட்டருக்கு மேலும் கூட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது. இதனால்தான் தமிழர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வீடுகளில் துளசிச் செடிகளை வளர்த்து வந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் உயரிய மருத்துவ குணமும் துளசிக்கு உண்டு. தினமும் 4 துளசி இலைகளை உட்கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்துள்ள உண்மை. ஒரு மனிதன் சராசரியாக நாள் ஒன்றுக்கு 16 லிட்டர் கார்பன் -டை- ஆக்ஸைடை வெளிவிடுகிறான். வளர்ந்த மரம் 3 முதல் 8 லிட்டர் வரை ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. துளசிச்செடியோ 24 மணினேரத்தில் ஒரு லிட்டர் ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. ஒரு வீட்டில் 16 துளசிச் செடிகளை வளர்த்தால் வளி மண்டலத்தில் வெளிவிடப்படும் கரியமில வாயு மாசுவை ஓரளவிற்காவது ஈடு செய்ய முடியும். எனவே வீடுகளில் துளசிச் செடிகளை வளர்ப்போம், காற்றில் 'பிராணவாயு' எனப்படும் ஆக்ஸிஜன் அளவை நிலை நிறுத்துவோம்.
--தினமலர். திருச்சி 26-10-2014.

Sunday, October 9, 2016

காஷ்மீர்


காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தேவையா?
இப்போதைய சிறப்பு அந்தஸ்துப்படி, ஜம்மு - காஷ்மீர், ஒரு மாநிலமாக இருந்தாலும், தனி நாடு போன்றே, அதிகாரங்களை பெற்றுள்ளது. வெளிமாநிலத்தவர் யாரும், அங்கு நிலம் வாங்க முடியாது.
மத்திய அரசின், ராணுவம், உள்துறை போன்ற சில துறைகளின் செயல்பாடுகள்தான், இந்த மாநிலத்தை கட்டுப்படுத்தும். மத்திய அரசின் பல சட்டத்திட்டங்கள், இங்கு செல்லுபடியாகாது. உதாரணமாக, கல்வி உரிமை சட்டம், சிறுபான்மையினருக்கான சலுகைகள், பஞ்சாயத்துக்கள், மாநகராட்சிகளுக்கான அதிகாரங்கள் இந்த மாநிலத்தில் செயல்படாது.
இந்திய அதிகார சட்டங்கள், குற்ற ஒழுங்குமுறை சட்டம், மனித உரிமைகள் சட்டம், சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள் போன்றவையும், இந்த மாநிலத்திற்கு பொருந்தாது. மத்திய அரசின் விசாரணை கமிஷன்கள், இங்கு விசாரணை நடத்த இயலாது.
பார்லிமென்ட் வழியாக, மற்ற மாநிலங்களூக்கு சட்டம் இயற்றும், ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள் பிரதிநிதிகள், அந்த சட்டத்தை, இங்கு செயல்படுத்த முடியாது. இங்கு தேசியக் கொடியோடு, காஷ்மீருக்கான கொடியும் உள்ளது. இங்கு பதவி ஏற்கும் மக்கள் பிரதிநிதிகள், இந்தைய அரசியல் சட்டத்தின்படி பதவியேற்பது இல்லை.
இங்குள்ள மக்கள், வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால், காஷ்மீர் குடிமகன் என்ற அந்தஸ்தை இழப்பர். இது குடிமகனின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
மற்ற மாநிலங்களில், சட்டசபையின் பதவிக் காலம், ஐந்து ஆண்டுகள் என்றால், இங்கு ஆறு ஆண்டுகள். இந்த மாநிலத்தில், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே, மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க முடியும். மற்றவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட ஆக முடியாது. ஆனால், லோக்சபா தேர்தலில், இங்கு வசிப்பவர்கள் ஓட்டளிக்கலாம்.
இப்படி, அரசியல் சட்டத்தின் படி , ஏராளமான சலுகைகள் தரப்பட்டு உள்ளன. இது தேவையா?
-- கே.ஆர். ஆல்பர்ட், , சென்னை.
-- தினமலர் சென்னை. ஞாயிறு 15-6-2014.

Saturday, October 8, 2016

சூரியகாந்த புயல்

பூமியை நோக்கி வரும் சூரியகாந்த புயல்
பல ஆண்டுகளுக்குஒரு முறை, சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால், கொந்தளிப்பு ஏற்பட்டு, சூரியப்புயல் தோன்றும்.
மூன்று விதங்களில் சூரியகாந்தப் புயல் தோன்றும். முதலில், மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டவதாக, புரோட்டன்கள் நிறைந்த அதிர்வலை கதிவீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்னும் மேற்பரப்பில் தோன்றும், பிளாஸ்மா கதிர்வீச்சும் நிகழும்.
இந்த கதிவீச்சுக்கள், பூமியை நோக்கி வந்தாலும், பூமிக்கு எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படாது.
ஆனால், உலக நாடுகள் அனைத்தும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பல செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளன.
இந்த செயர்கைக் கோள்களின் உதவியால்தான், பூமியில் தகவல் மற்றும் தொலைத்தொடர்புகள் இயங்குகின்றன. இந்திலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், சூரியனின் வலது மேற்புறத்தில், பிளாஸ்மா புயல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட காந்த அலைகள் பூமிய நோக்கி வருவதை, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த அலைகள், செயற்கைக்கோள்களைக் கடந்து வரும்போது, அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த அலைகள், பூமியின் எந்தப் பகுதியை தாக்கும் என்பது தெரியவில்லை என்றும், இந்த புயலுக்கு, 'எக்ஸ்' என்று பெயரிட்டுள்ளதாகவும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-- தினமலர் சென்னை. ஞாயிறு 15-6-2014.

Friday, October 7, 2016

வெளிநாட்டுக் கோயில்கள்.

மகா கைலேஸ்வர் மந்திர்
இந்தியாவில் சில சிவன் கோயில்களில் சகஸ்ரலிங்கம் உள்ளது. உதாரணத்திற்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சகஸ்ரலிங்கம் உள்ளது. சகஸ்ரலிங்கம் ஆயிரம் லிங்கங்களால் ஆன லிங்கம் என்று பொருள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சண்டா கிளாரா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா கைலேஸ்வர் ஆலயம். அமெரிக்காவின் முதல் ஜோதிர்லிங்க சிவ ஆலயம் இதுவே ஆகும்.
இந்த ஆலயத்தில் 2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காளிகாம்பாள் ஆலயக் குருக்களான சுவாமி சதாசிவத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள சகஸ்ரலிங்கம், 2 டன் எடை கொண்டது. கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே லிங்கத்தில் 1116 சிறிய சிவலிங்கங்களை கொண்ட சகஸ்ரலிங்கம் இந்த ஆலயத்தில் மூலவராக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் இந்துக்களின் பாரம்பரிய முறையிலான உடைகளை அணிந்து வர அனுமதிக்கப்படுகிறது.
ஆலய முகவரி :
Sri Maha Kaleswar mandir
2344 A Walsh Avenue ( Bldg. F. Santa Clara Commerce Park )
Santa Clara, CA 95051
இமெயில் : info@ srimahakalmandir. org.
இணையதளம் :
http:// srimahaka- lmandir.org/
-- தினமலர். பக்திமலர். 9-10-2014.

Thursday, October 6, 2016

Wednesday, October 5, 2016

பஞ்சபூதங்கள்.

மேற்கத்திய மரபில் ஐம்பூதங்கள் கிடையாது. ஆகாயம் நீங்கலாக, அங்கே நான்கு பூதங்கள்தான் ( எலிமண்ட்ஸ் -- elements ). ஆகாயம் என்று அழைக்கப்படும் வெளியையும் ஒரு அடிப்படை இயற்கைப் பொருளாக வைத்திருப்பது இந்திய மரபின் சிறப்பு. பிரபஞ்சம் முதல் நம் உடல் வரை ஐம்பூதங்களின் சேர்க்கைதான் என்று இங்கே நம்பப்படுகிறது. பௌதிகம் என்ற சொல்லுக்கு ஐம்பூதங்களால் ஆனது என்பது பொருள். உயிரற்ற நமது உடலை பூதவுடல் என்று மரியாதையாகச் சொல்வதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அதேபோல், பஞ்சதம் என்ற ஒரு சொல் மரணத்தைக் குறிக்க முன்பு பயன்பட்டிருக்கிறது. பஞ்சபூதங்களும் பிரிந்து தனித்தனியாவதால் மரணம் ஏற்படும் என்பது இதன் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களின் சேர்க்கை இயற்கையாக நடைபெற்றதேயொழிய கடவுளின் முயற்சியால் அல்ல என்று நம்பும் உலகாயவாதத் தத்துவம்தான் பூதவாதம்.
-- ஆசைத்தம்பி. ( அறிவோம் நம் மொழியை ).
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், செப்டம்பர் 13, 2014.

Tuesday, October 4, 2016

பாரதியின் நினைவு நாள்!

தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை வலியுறுத்தல்
மகாகவியாக இன்றும் போற்றப்படும் பாரதியாரின் நினைவு நாளில் குழப்பம் உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி டி.பி. கோவில் தெருவில் வாழ்ந்தபோதுதான் பாரதியாருக்கு மரணம் ஏற்பட்டது. இதுகுறித்து செப்-21-ல் சென்னை மாநகராட்சிப் படிவேட்டில் பாரதி மறைந்த நாள் செப்.12, 1921- என்று பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில் பாரதியின் பாடல்களை ஆய்வுப் பதிப்பாக ம.ரா.போ. குருசாமியை பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலில் 1921 நாள் செப்டம்பர் 12, 1.30 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
1996-ல் பாரதி வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான சீனி. விசுவநாதன் வெளியிட்ட 'மகாகவி பாரதி வரலாறு' என்ற நூலில், தென்னாட்டுக்கவி சிரேஷ்டர் எனப் போற்றப்பட்ட வரகவி பாரதி 1921 செப்.12-ம் தேதியில் இந்த உலக வாழ்வைத் துறந்து விண்ணவர்க்கு விருந்தாகிவிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வானதி பதிப்பகத்தார் வெளியிட்ட மகாகவி பாரதியார் கட்டுரைகள் என்னும் பெயரில் வெளியிடப்பட்ட நூலில் 1921 செப் 12-ம் நாள் யாமம் 1.30 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசும், புதுவை அரசும் செப்-11 ம் தேதியை பாரதியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கின்றன. இதற்கு காரணம் பாரதி மறைந்தது செப்-11ம் தேதி பின்னிரவு 1.30 ( அதாவது செப்-12ம் தேதி அதிகாலை 1.30 ) என்பதுதான். எனவே, தமிழக மற்றும் புதுவை அரசுகள் இந்த ஆண்டிலிருந்து பாரதியாரின் நினைவு நாளை செப்- 12-ல் கடைப்பிடிக்க வேண்டும்.
-- ( மாநிலம் ).
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், செப்டம்பர் 4, 2014.

Monday, October 3, 2016

'1950 டிஏ' விண்கல்

'1950 டிஏ' என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல், 44,800 டன் எடையும், ஒரு கி.மீ. அகலத்தோடும் இருக்கிறதாம். இது விநாடிக்கு ஒன்பது மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 2880 -ம் ஆண்டில், இது மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமி மீது மோதலாம் என்று பயமுறுத்துகிறார்கள் விஞ்ஞானிகள். 'அப்படி மோதினால், பூமி அதிபயங்கர சத்ததுடன் வெடித்து, தட்பவெப்ப நிலையில் மாற்றம், சுனாமி, நிலநடுக்கம்... என அடுக்கடுக்கான பாதிப்புகளால் பேரழிவு ஏற்படும். அதனால், மனித குலம் முற்றிலுமாக அழிந்தேவிடும்!' என்கிறார்கள். இன்னொரு தரப்பு விஞ்ஞானிகளோ, 'அது பூமியை நோக்கி வருவது உண்மைதான். ஆனால், அது பூமியில் மோத 300-ல் ஒரு பங்குதான் வாய்ப்பு இருக்கிறது!' என்கிறார்கள். -- இப்பவே பயமுறுத்துற மாதிரி ஆராய்ச்சி பண்ணுங்கப்பா!
வெனிசுலா
வெனிசுலா நாட்டில் ஒரு பாக்கெட் பால் வாங்க உங்கள் கைரேகையைப் பதிக்க வேண்டும். காரணம், அந்த அளவுக்கு உணவுப் பஞ்சம். ஒரே நபர் அதிகப் பொருட்களைப் பெறுவது, கள்ளச்சந்தை உருவாக்குவது போன்ற செயல்களைத் தடுக்கவே இந்த நடைமுறை. -- ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் இருக்கு... பால் இல்லையா?
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 3-9-2014.

Sunday, October 2, 2016

கழுகுகள்

இன்று சர்வதேச கழுகுகள் தினம்!
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் வனப்பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள் உள்ளன. இவற்றில் பிணம் தின்னி கழுகுகள் மிக முக்கியமானது. இந்தியாவில் ஒன்பது வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன.
தமிழகத்தில் வெண் முதுகு பிணம் தின்னி, இந்தியன் பிணம் தின்னி, செந்தனை பிணம் தின்னி, எகிப்திய பிணம் தின்னி ஆகிய நான்கு வகை பறவைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் தற்போது எகிப்திய பிணம் தின்னியை தவிர மற்ற இனங்கள் அழிந்து வருகின்றன. தமிழகத்தில் பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 250 முதல் 300 வரை மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
'டைகுனோபினாக்' எனும் கால்நடை மருந்துதான், பிணம் தின்னி கழுகுகள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
'டைகுனோபினாக்' மருந்தை சாப்பிட்ட கால்நடைகள், இறந்தபின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்த கால்நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடும். இந்த மருந்து 1990-ம் ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனவே, அந்த ஆண்டு முதல் இந்த கழுகுகள் இனம் அழியத் தொடங்கியது.
-- ஒய்.ஆண்டனி செல்வராஜ். ( மாநிலம் ).
-- 'தி இந்து' நாளிதழ். சனி, செப்டம்பர் 6, 2014.

Saturday, October 1, 2016

ஐம்புலன்கள்

அஞ்சும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே
( திருமந்திரம் - 2033 )
ஐம்புலன்களை அடக்க நினப்பவர்களை திருமூலர் இப்படி விமர்சிக்கிறார். தன்னுடைய தமிழில் அவர் கூறியதை நம்முடைய தமிழில் பார்ப்போம்.
ஐம்புலன்களை அடக்கு என்பவர்கள் அறிவில்லாதவர்கள்.
ஐம்புலன்களை அடக்கியவர்கள் தேவலோகத்தில் கூட இல்லை.
ஐம்புலன்களை அடக்கினால் மதிகெட்டு போகும்.
அவற்றை அடக்காது நெறிப்படுத்தும் அறிவை அறிந்தேன்.
-- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. ( Business Line பக்கம் ) வணிகம்.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, செப்டம்பர் 6, 2014.