Wednesday, November 30, 2016

வேதம் -- ஜோதிடம்

வேதபுருஷனின் ஆறு அங்கங்கள்:
1. சிக்ஷா என்பது நாசி என்றும்
2. கல்பம் என்பது கரங்கள் என்றும்
3. வியாகரணம் என்பது வாக்கு என்றும்
4. நிருத்தம் என்பது செவி என்றும்
5. சந்தஸ் என்பது பாதம் என்றும்
6. ஜோதிடம் என்பது நேத்திரம் ( கண்கள் ) என்றும் கூறப்படுகின்றது.
வேதத்தின் கண்கள் என்று கூறப்படுகின்ற ஜோதிடம்,
ரிக்வேதத்தில் 'ஆர்ச்ச' என்றும்
யஜுர் வேதத்தில் 'ஜ்யோதிஷம்' என்றும்
அதர்வண வேதத்தில் 'ஆதர்வண' என்றும் குறிப்பிடப்படுகிறது.
சாம வேதத்தின் 'ஜோதிடம்' இப்போது நம்மிடம் இல்லை.
ஜோதிட சாஸ்திரத்தை சிவபெருமானாகப்பட்டவர் உமா மகேஸ்வரியாகிய பார்வதிக்கு உபதேசித்தும், பார்வதி சுப்ரமண்ய ஸ்வாமிக்கும், சுரமண்யர் குரு முனிக்கும், அவர் தனது சிஷ்யர்களுக்கும் உரைத்தார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் ஜோதிடக்கலையானது
1. அத்திரி 2. ஆங்கிரஸ 3. வசிஷ்டர் 4. நாரதர் 5. கஸ்யபர் 6. அகஸ்தியர் 7. போகர் 8. புலிப்பாணி 9. வியாசர் 10 . பராசரர்
11. ரோமர் 12. கர்கர் 13. புகர் 14. சௌனகர் 15. கௌசிகர் 16. ஜனகர் 17. நந்தி 18. ஜெயமுனி ஆகிய 18 சிதர்களாலும் வழிவழியே வளர்க்கப்பட்டுவந்தது.
-- ( ஜோதிடம் தெளிவோம் ) பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று . ஞாயிறு , நவம்பர் 16, 2014.

Tuesday, November 29, 2016

இறப்பு தேதி

உங்களின் இறப்பு தேதி தெரிய வேண்டுமா?
வாஷிங்டன், நவ, 4 -
ஒருவரின் உயரம், எடை, வாழ்க்கைமுறை போன்றவற்றின் மூலமாக, அவரின் இறப்பு தேதியை அறிந்து கொள்ளும் வசதியுடைய செயலியை ( ஆப்ஸ் ), அமெரிகாவில் உருவாக்கியுள்ளனர்.
'டெட்லைன்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், ஒருவரின் உயரம், எடை, ரத்த அழுத்தம், தூக்கம், உடல் தொடர்பான நடவடிக்கைகளை பதிவு செய்தால், அவரின் இறப்பு தேதியை மதிப்பீடு செய்து தெரிந்து கொள்ளும் மென்பொருள் வசதி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
'ஐ-போன்'களில் உள்ள ஹெல்த் கிட் மூலமாக இந்த வசதியை, அமெரிக்காவில் உள்ளவர்கள் பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தினமலர் சென்னை. செவ்வாய், 4-11-2014
-- இதழ் உதவி : S.B.மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Monday, November 28, 2016


கூகுள்

கூகுள் குரல் வழி தேடலில் தமிழ் மொழி.
இணைய தள தேடு பொறியில் முன்னணியில் உள்ள, கூகுள் நிறுவனம், குரல் வழி மூலமாக, தகவல்களை தேடும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது, ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில், இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதை அடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில், இந்தி மொழி மூலமாக குரல் வழி தேடுதல் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
கூகுள் இந்தியா நிறுவனத்தின், மேலாண்மை இயக்குனர் ராஜன் ஆனந்தன் கூறியதாவது :
இந்தியாவில் 20 கோடி பேர் இணையத்தை பயன்படுதுகின்றனர். ஒவ்வொரு மாதமும், 50 லட்சம் பேர், புதிதாக இந்த பட்டியலில் இணைகின்றனர்.
இவர்களுக்கு உதவுவதற்காகவே, தற்போது, குரல் வழி தேடுதலில் இந்தி மொழியை இணைத்து உள்ளோம். அடுத்தகட்டமாக தமிழ், மராத்தி ஆகிய மொழிகளையும் இணைக்கும் திட்டம் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
-- தினமலர் சென்னை. செவ்வாய், 4-11-2014
-- இதழ் உதவி : S.B.மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Sunday, November 27, 2016

அந்தக் கால கணக்கு

ஏற்கனவே புழங்கிட்டு இருந்த 'பனம்' 'துட்டு' 'காசு' 'தம்பிடி' 'சல்லி'ங்கிற சிறு நாணயங்கள் காலப்போக்கில் வட இந்திய அரசர்
ஷெர்ஷா சூரி 1540 -ல் அறிவித்த அந்தக் கால ரூபாயோடு இணைந்தன.
அந்தக் கால 1 ரூபாய்க்கு 192 தம்பிடிகள். 12 தம்பிடி = 1 அணா, 16 அனா = 1 ரூபாய்.
ஒரு அணா -- ஆறுபைசா
ஒரு பணம் -- ரெண்டு அணா
ஒரு அணா -- மூணு துட்டு
ஒரு துட்டு -- ரெண்டு பைசா
ஒரு சல்லி -- கால் துட்டு
காலணா -- முக்கால் துட்டு
அரையணா -- ஒன்றரைத் துட்டு
ஒரு அணா -- நான்கு காலணா ( அ ) மாகாணி ரூபாய்
இரண்டு அணா -- அரைக்கால் ரூபாய்
நாலணா -- கால் ரூபாய்
எட்டு அணா -- அரை ரூபாய்
கழஞ்சு -- ஒரு பொற்காசு ( வராகன் )
வராகன் எடை -- 3.63 கிராம்
சக்கரம் -- ஒரு வெள்ளிக் காசு
பதினாறு சக்கரம் -- ஒரு வராகன்
சக்கரம் -- பதினாறு காசு ( செப்பு ) என மக்கள் பலவிதமாக நாணயக் கணக்கை கையாண்டனர். இன்று நாம் கையாளும் ரூபாய் கணக்கு 1957 முதல் நடைமுறைக்கு வந்தது.
--- வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், நவம்பர் 17, 2014.

Saturday, November 26, 2016

'டெங்கு டேஞ்சர்'

கொலைகார கொசுக்கள்.
டெங்கு... பத்து ஆண்டுகளுக்கு முன்பு தலைநகர் தில்லியை புரட்டிப் போட்ட இந்த காய்ச்சலுக்கு வைரஸ் கிருமிகள்தான் அடிப்படை. அதன் பின்னர் நாடு முழுவதும் அவை ஏற்படுத்தி வரும் பாதிப்பின் தாக்கம் 'பகீர்' ரகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி பதம் பார்க்கும் டெங்குவின் தாய் வீடு கொசுக்கள்...
இந்தக் கொலைகார கொசுக்கள் நான்கு வகை. அவற்றில் 'ஏடிஸ் இஜிப்டை' என்கிற கொசுதான் டெங்கு பரவக் காரணம். புலியின் உடலில் தெரியும் வெள்ளை நிறப் புள்ளிகள் மாதிரி, 'ஏடிஸ்' வகை கொசுக்களின் உடல் மீதும் புள்ளிகள் இருக்கும். அதனால் இதற்கு 'டைகர் கொசு' (!) என்கிற செல்லப் பெயரும் உண்டு.
பெரும்பாலும் மாலை நேரத்தில் வீடுகளுக்குப் படையெடுக்கும் குணம் கொசுக்களுக்கு உண்டு. என்றாலும், ஏடிஸ் காலை நேரத்தில் ரீங்கார மிட்டபடி உலவும். அப்போது மனிதர்களைக் கடிக்கும். அடுத்த இரண்டு நாட்களில் பாதிப்பின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
கடித்த இடத்தில் சிவப்பு நிற தடிப்புகள் உருவாகும். தொடர்ந்து தேய்க்கும் போது அந்த இடம் வீங்கும். திடீரென காய்ச்சல் வரும். காய்ச்சல் 103 டிகிரி வரை உயரும். பாதிக்கப்பட்டவர் சுருண்டு படுத்து விடுவார். தலைவலியோடு சுரப்பிகள் சுரப்பதில் சுணக்கம் வரும்.
விழிகள் அசையும் போது கண்களின் உள்ளே வலி வரும். பொதுவாக, இது மற்ற நோய் பாதிப்பின் போது வருவதில்லை. பாதிக்கப்பட்டவர் வாந்தி எடுப்பதால் உடலில் இருக்கும் நீர்ச் சத்து விரைவாக வெளியேறும். நோயாளி துவண்டு போவார்.
இதனால் உயிருக்கு ஆபத்து வருமா? என்பது குறித்து மருத்துவத் துறை வட்டாரத்தில் கேட்டபோது, ரத்தக் குழாய்களிலிருந்து வெளியேறும் ரத்தம் அதன் சுவர்களுக்கு வெளியே சென்று தங்கிவிடும். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு முக்கியமான உறுப்புகள் செயலிழக்கும். ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமல் கட்டுப்படுத்தினாலே டெங்குவை எளிதில் தடுத்துவிட முடியும். நோய் பாதித்தவர்களுக்கு சாதாரண 'பாராசிட்டமால்' மாத்திரைகள் கொடுத்தால் போதும் காய்ச்சல் குறைந்துவிடும் என்கின்றனர்.
-- எஸ்.அன்வர்.
-- குமுதம் வார இதழ். 13-11-2014.
-- இதழ் உதவி : P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Friday, November 25, 2016

தாமோதர மாதம்.

பொதுவாக கிருஷ்ண பக்தர்கள், வைணவ பாரம்பரியத்தின் அடிப்படையில் அனைது மாதங்களையும் கிருஷ்ணரின் பெய்ரைக் கொண்டே அழைக்கின்றனர். அக்டோபர், நவம்பர் ., 'தாமோதர மாதம்' என்று அழைக்கப்படுகிறது.
தாமோதரர் என்றால் கிருஷ்ணரை குறிக்கும். 'தாம' என்றால் கயிறு என்றும் , 'உதர' என்றால் வயிறு என்றும் அர்த்தம். குழந்தை கண்ணனை தாய் யசோதை, கயிற்றால் உரலில் கட்டியதால், அவருக்கு அந்த திருநாமம் வந்தது.
தாமோதர மாதங்களில் கிருஷ்ணரின் புகழை எடுத்துச் சொல்வதன் மூலம், இறைவனின் திருவடியில், மோட்ச நிலை அடையலாம் என்பர்.
-- தினமலர். ஞாயிறு. நவம்பர். 2014. கோவை பதிப்பு.

Thursday, November 24, 2016

அக்னிதீர்த்தம்.

ரிக் வேதத்தில், அக்னி வழிபாடு பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. தூய்மையின் அடையாளமான அக்னியை சாட்சியாக வைத்து புதுமண மக்களுக்கு சட்ங்கு நடத்தப்படுகிறது. எந்த கடவுளுக்கு யாகம், ஹோமம் நடந்தாலும் அதை அந்தக் கடவுளிடம் சேர்ப்பவர் இவரே. புனிதமானது மட்டுமில்லாமல், தன்னைத் தீண்டியவர் யாராக இருந்தாலும் அவர்களையும் தன் வசமாக்கும் சக்தி இவருக்கு உண்டு. கற்பு நெறி தவறாத பெண்களை அக்னியின் பெயரோடு சேர்த்து 'கற்புக்கனல்' என்று குறிப்பிடுவர். கனல் என்றால் நெருப்பு. அசோகவனத்தில் இருந்து வந்தபோது, கற்புக்கரசியான சீதையை அக்னி சூழ வேண்டி நேர்ந்தது. இதனால் தனக்கு பாவம் ஏற்பட்டதாக கருதிய அக்னி, ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இக்கடலுக்கு 'அக்னிதீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. இங்கு நீராடினால் எத்தகைய கொடிய பாவமும் தீரும் என்பது ஐதீகம்.
-- பக்திமாலை. கோவை பதிப்பு .
-- தினமலர் ஆன்மிக மலர். நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).

Wednesday, November 23, 2016

படியளக்கும் பரமசிவம்.

சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை, எறும்பு போன்ற ஜீவராசிகள் தாமாகவே வந்து எடுத்துக் கொள்ளும். பின், அந்த அன்னத்தின் ஒரு பகுதியை மேள தாளத்துடன் அப்பகுதியிலுள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று, அதில் கரைப்பர். இவ்வேளையில், நீரில் வாழும் ஜீவராசிகளுக்கும் சிவனுக்கு படைத்த உணவு கிடைக்கும். அன்னாபிஷேக அன்னத்தில் தயிர்
சேர்த்து கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவர். எல்லா உயிர்களுக்கும் பரமசிவனே படியளப்பதாக ஐதீகம். அன்று தரிசிப்பவர்களுக்கு உணவுக்கு குறைவிருக்காது.
சிந்தாமல் சாப்பிடணும்!
இறைவனே அன்னத்தின் வடிவமாக இருக்கிறார். எனவே, சாப்பிடும் உணவை தரையில் சிந்தக்கூடாது. இதனால், பெரியவர்கள் குழந்தைகளைச் சிறுவயது முதலே அரிசி, உணவைக் கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்குவர். அன்னத்தை வீண்டிப்பது, இறைவனையே அவமதிப்பது போலாகும். உணவின் பெருமையை 'அன்னம் பரப்பிரம்மம் சொரூபம்' என்ற ஸ்லோகம் உனர்த்துகிறது. 'உண்ணும் உணவு கடவுளின் வடிவம்' என்பது இதன் பொருள். நல்ல உணவின் மூலம் நல்ல உணர்வும் உண்டாகிறது.
-- பக்திமாலை. கோவை பதிப்பு .
-- தினமலர் ஆன்மிக மலர். நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).

Tuesday, November 22, 2016

வெளிநாட்டுக் கோயில்கள்.

டேடன் இந்துக் கோயில், ஓஹியோ.
ஆலய வரலாறு : ஓஹியோ மாகாணத்தின் டேடன் பகுதியில் அமைந்துள்ளது இந்த அழகிய இந்து ஆலயம். இக்கோயில் டேடன் பகுதியில் வாழ்ந்த இந்து சமூக மக்களால் 1976ம் ஆண்டு இந்து மதத்தின் அடையாளமாக கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் 2 புரோகிதர்களைக் கொண்டு இந்து சமய வழிபாட்டு முறைகளின்படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை திருவுருவங்கள் உள்ளன. இது தவிர சில தெய்வங்களுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது லாப நோக்கமற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. இவ்வாலயத்தில் 2013ம் ஆண்டு மே 12ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆலய நேரம் : திங்கள் - வெள்ளி. காலை 9 மணி - 11 மணி.
மாலை 5 மணி - 8 மணி.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்,
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
ஆலய முகவரி :
Hindu Temple of Dayton
2615 Temple Lane
Beavercreek, Oh 45431.
தொலைப்பேசி : ( 937 ) 429 4455.
இணையதளம் : http : // daytontemple.com/
-- தினமலர் பக்திமலர். 13 -11- 2014.

Monday, November 21, 2016

ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த வேளையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி, 44 ஆண்டுகளுக்கு முன், 1970ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி சென்னையில் 'நேரு கண்ட ஜனநாயகம்' என்ற தலைப்பில் இயற்றிப் படித்த கவிதை.
கவிஞர்கள் எஸ்.டி.சோமசுந்திரம், கொத்தமங்கலம் சுப்பு, முருகு சுந்தரம், அப்துல்ரகுமான், கண்ணதாசன் ஆகியோர் கலந்துகொண்ட கவியரங்கில் தலைமை வகித்த படித்த கவிதை வரிகளில் இருந்து ...
'புன்னை மரம் நிழல் விரிக்கத் - தமிழ்
அன்னை மடி சுகம் அளிக்க
சென்னை நகர் ஒளி தெளிக்க
முன்னை இருள் விலகுவதற்கு
முயல்கின்ற தமிழ் அரசு
முதுபெரியோன் காந்தியாரின்
மூத்த பிள்ளை நேருவுக்கு
முதமிழால் கவி தொடுக்கும்.
பணமலைக்கிடையே பிறந்தார்
எனினும் ஏழையை அணைக்கும்
குணமலையாய் திகழ்ந்தார் என்போம்!
நீதிக்கு எதிரானவற்றையெல்லாம்
நேர் நின்று எதிர்த்ததாலே நேருவானார். இந்திய
நீள் எல்லைக்கோடு தன்னைப் பெரும்பகைவர்
கடந்த போது என்ன
நேருமோ என்றெங்கி இருந்த மக்கள் நெஞ்சின்
துயர் துடைத்து, எதுவும்
நேராது நான் இருக்கின்றேன் எனச் சொல்லி
நேருவானார்.
கண்ணிய அரசியலைப் போற்றிடும் நாட்டில்
கண் நிகர் நேருவைப் புகழ்வோம் பாட்டில்!
-- தினமலர். 16-11-2014.

Sunday, November 20, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

* வடுகநம்பியால் எழுதப்பட்ட ராமானுஜரின் வரலாறு... யதிராஜ வைபவம்.
* கூரத்தாழ்வானுக்கு பெற்றோர் இட்ட பெயர்.. .. திருமறுமார்பன்.
* ஆதிசேஷனின் அவதாரமாக அவதரித்த மகான் ... ராமானுஜர்.
* வைகுண்டத்தில் திருமாலுக்கு சேவை செய்பவர்கள் ... நித்தியசூரிகள்.
* பெருமாளின் படைக்கு தலைவராக இருப்பவர் ... விஷ்வக்சேனர்.
* அரபிக்கடல் ஓரத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் ... திருக்கோகர்ணம் ( கர்நாடகா ).
* பாம்பன் சுவாமிகளின் சமாதிக் கோவில் உள்ள தலம் ... திருவான்மியூர் ( சென்னை ).
* சூரபத்மன் பயில் வடிவில் முருகனை பூஜித்த தலம் ... மயிலம் ( விழுப்புரம் ).
* திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதால் உயிர் பெற்றவள் ... பூம்பாவை.
* ஆரோக்கியத்துடன் வாழ அமுத கலசத்துடன் அருள்புரிபவர் ... தன்வந்திரி.
--- அர்ச்சனைப்பூக்கள். பக்திமாலை. கோவை பதிப்பு .
-- தினமலர் ஆன்மிக மலர். நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).

Saturday, November 19, 2016

தத்துவமயமான தாமோதரன்!

நாராயணனின் திருவுருவமே தத்துவமயமானது. பெருமாளுடைய திருமார்பை கவுஸ்துப மணி அலங்கரிக்கிறது. இவர் ஜெகத்தின் ஆத்ம சொரூபமாக இருப்பவர் என்பதை இது காட்டுகிறது. மார்பில் திருமறு இருக்கிறது. இதை 'ஸ்ரீவஸ்தம்' என்பார்கள். பிரதானமாக இருக்கக் கூடிய மூல பிரக்ருதியை காட்டும் அடையாளம் இது.
பெருமாளின் கையில் இருக்கும் சங்கு, ஐம்பூத தத்துவங்களுக்கு காரணமாக இருக்கக் கூடிய தாமச அகங்கார தத்துவத்தை உணர்த்துகிறது.
அவர் கையில் இருக்கும் சாரங்கம் என்னும் வில் இந்திரியங்களுக்கு காரணமாக இருக்கும் ராஜ அகங்கார தத்துவத்தைக் காட்டுகிறது. நாராயணனின் கையில் உள்ள சக்கரம், வாயுவை விட வேகமாகச் செல்லும் மனஸ் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது.
அவர் முத்து, மாணிக்கம், மரகதம், நீலம், வைரம் என்னும் பஞ்ச ரத்தினங்களான வைஜயந்தி மாலையை அணிந்திருக்கிறார்.
இது பஞ்சபூத தத்துவத்தையும், பஞ்ச தன்மாத்திரை தத்துவத்தையும் காட்டக் கூடியது. ஞானேந்திரியங்களையும், தந்தேமந்திரியங்களையும் அவர் கைகளில் உள்ள பாணங்கள் காட்டுகின்றன.
உறையில் இடப்பட்டு அவர் இடுப்பை அலங்கரிக்கும் கத்தியானது அவித்யா தத்துவத்தால் மூடப்பட்டு உள்ள வித்யாமயமான ஞானத்தைக் காட்டுகிறது. இப்படி அவர் எல்லாமாக இருக்கிறார். தத்துவமயமானவர் என்கிறது விஷ்ணு புராணம்.
-- தினமலர் .பக்திமலர்.13-11-2014.

Friday, November 18, 2016

ராக்கெட்டும் பஞ்சாங்கமும்

அமெரிக்காவில் விஞ்ஞான ஆய்வு மையத்தில் இருந்து கொண்டு ராக்கெட் ஏவுபவன்கூட நம்மூர் பஞ்சாங்கக் கணக்குகளைத்தான் பின்பற்றுகிறான். பூமியில் இருக்கும் வரைதான் இரவு, பகல் எல்லாம். பூமியில் தான் கடிகாரங்களுக்கு வேலை இருக்கும். வான மண்டலத்தைக் கடந்துவிட்டால் இரவேது பகலேது? அந்த நிலையில் பூமியிலிருந்து ராக்கெட் எந்த இடத்தில் எந்த டிகிரியில் இருக்கிறது ... ராக்கெட்டிலிருந்து எந்தெந்தக் கிரகம் எந்தெந்த டிகிரியில் இருக்கின்றன என்ற கணக்குதான் நேரம் அறிய துணை செய்யும். விஞ்ஞான பூர்வமான இந்த விஷயங்களை நம்மூர் ஜோதிடக்காரன் காவிரிக் கரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு சோழிகளை உருட்டியே சொல்லி விடுகிறான் என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம்.
-- தினமலர் .பக்திமலர்.13-11-2014.

Thursday, November 17, 2016

f இணைய வெளியிடையே t

* பொறுத்தார் பூமி ஆள்வார். குனிந்தார் தமிழகம் ஆள்வார்.
g for guru@ twitter.com
* குடித்து விட்டு வீட்டிற்கு வந்தான் அவன்... ஆனால் தள்லாடியது அவன் குடும்பம் .
mil45v @twitter.com
* எங்கே மடிய வேண்டும் எனத்தெரிந்தே வைத்திருக்கிறது உன் இடை.
thalabathe@twitter.com
* ஊழல்வாதிகளுக்கு தண்டனை அளித்தால் ஒப்பாரி வைக்க ஆளிருக்கிறது. மீன் பிடித்ததற்காக தண்டனை கொடுத்தால்
ஏறிட்டுப் பார்க்க கூட நாதியில்லை.
udanpirappe@twitter.com
* ஒருவர் உங்களை வெறுக்க காரணம், உங்களை போல ஆகமுடியவில்லையே என்பதாக கூட இருக்கலாம்.
vignasuresh@twitter.com
* நாய் வளர்ப்பதை ஒரு கவுரவமா பார்க்கும் இந்த சமூகம், மரம் வளர்ப்பதில் பார்ப்பதில்லை.
karunaimalar@twitter.com
* பேசிக்கிட்டு இருக்கும் போதும் நடுவுல கொஞ்சம் திட்டுனா அது காதலி. திட்டிகிட்டு இருக்கும்போது நடுவுல கொஞ்சம்
பேசுனா அது மனைவி.
venkytwitts@twitter.com
* சுவிஸ் பேங்க்ல அக்கவுன்ட் வெச்சவன் வரிகூட கட்டமாட்டான். அவனை விட்டுருங்க. ஸ்டேட் பேங்க்ல அக்கவுன்ட்
வெச்சவங்கிட்ட வந்து இருபது இருபதா புடுங்குங்க.
su bass2@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர் . 9 - 11 - 2014.

Wednesday, November 16, 2016

நம்ப முடிகிறதா?


* இசை ஒலித்தால் பூக்கள் வேகமாக வளரும்.
* உலகில் விற்பனை செய்யப்படும் மிகப்
பெரிய உணவு ஒட்டகம்.
* இரட்டையர் ஒட்டிப் பிறப்பது 2 லட்சம்
பிரசவங்களில் ஒரு முறைதான் நிகழ்கிறது.
* அமெரிக்காவில் ஒவ்வொரு 5 விநாடிகளுக்கும்
60 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
* சராசரி மனிதனால் 150 நபர்களை மட்டுமே நன்றாக நினைவில் வைத்திருக்க
முடியும்.
* ஹிட்லரை கொல்ல 42 முறை முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டார்.
* முழுவதும் இரும்பால் செய்யப்பட்ட ஈபிள் கோபுரத்தின் மொத்த எடை பத்தாயிரம் டன்.
* சனி கிரகத்தின் வளையங்கள் பனியால் ஆனவை.
-- தொகுப்பு : மிது கார்த்தி.
--மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், நவம்பர் 12, 2014.

Tuesday, November 15, 2016

பஞ்சபூதங்கள்.

மேற்கத்திய மரபில் ஐம்பூதங்கள் கிடையாது. ஆகாயம் நீங்கலாக, அங்கே நான்கு பூதங்கள்தான் ( எலிமன்ட்ஸ் - elements ). ஆகாயம் என்று அழைக்கப்படும் வெளியையும் ஒரு அடிப்படை இயற்கைப் பொருளாக வைத்திருப்பது இந்திய மரபின் சிறப்பு. பிரபஞ்சம் முதல் நம் உடல் வரை ஐம்பூதங்களின் சேர்க்கைதான் என்று இங்கே நம்பப்படுகிறது. பௌதிகம் என்ற சொல்லுக்கு ஐம்பூதங்களால் ஆனது என்பது பொருள். உயிரற்ற நமது உடலை பூதவுடல் என்று மரியாதையாகச் சொல்வதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அதேபோல், பஞ்சதம் என்ற ஒரு சொல் மரணத்தைக் குறிக்க முன்பு பயன்பட்டிருக்கிறது. பஞ்ச பூதங்களும் பிரிந்து தனிதனியாவதால் மரணம் ஏற்படும் என்பது இதன் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களின் சேர்க்கை இயற்கையாக நடைபெற்றதேயொழிய கடவுளின் முயற்சியால் அல்ல என்று நம்பும் உலகாயதவாதத் தத்துவம்தான் பூதவாதம்.
-- ஆசைத்தம்பி. ( அறிவோம் நம் மொழியை ).
-- கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 13, 2014.

Monday, November 14, 2016

வட்டாரச் சொல்

ஆள்காட்டிப் பறவையில் செம்மூக்கு ஆள்காட்டி ( Red - wattled lapwing ) என்றொரு வகை இருக்கிறது. இந்தப் பறவையை வேலூரை ஒட்டிய பகுதிகளில் 'தித்தித்தூ குருவி' என்று அழைப்பார்கள். வயல் வெளிகளிலும் திரிந்துகொண்டிருக்கும் இந்தப் பறவை ஆளரவம் கேட்டாலோ, ஆபத்து நேரிடுவதுபோல் தோன்றினாலோ 'தித்தித்தூ...தித்தித்தூ' என்று அலறியபடி அங்கு மிங்கும் பறந்துகொண்டிருக்கும். அந்தப் பறவையின் ஒலியை ஆங்கிலத்தில் 'டிட் ஹி டூ இட்' ( Did- he- do- it? ) 'அவனா செய்தான்?' என்று பொருள் வரும்படி ஒலிபெயர்ப்பு செய்வார்கள். அதனாலேயே அந்தப் பறவைக்கு ஆங்கிலத்தில் 'டிட்-ஹி-டூ-இட் பேர்ட்' என்ற பெயர் உண்டு. அதைப் போன்றே தமிழிலும் ஒரு பெயர் இருக்கிறது என்று அறிந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி!.
-- ஆசைத்தம்பி. ( அறிவோம் நம் மொழியை ).
-- கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 13, 2014.

Sunday, November 13, 2016

நேரு.

சீரிய நெற்றி எங்கே சிவந்த நல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே குறுநகை போனதெங்கே
நேரிய பார்வை எங்கே நிமிர்ந்தநன் நடைதானங்கே
நிலமெலாம் வணங்கும் தோற்றம் நெருப்பினில் வீழ்ந்ததிங்கே
ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?
எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட.
-- கவிஞர் கண்ணதாசன், நேரு இறந்தபோது எழுதிய இரங்கற்பாவிலிருந்து...
-- கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 14, 2014.

Saturday, November 12, 2016

வேதங்கள்

வேதங்கள் இந்து சமயத்தின் அடிப்படை. இந்து சமயத்தின் பழக்க வழக்கங்கள், இயல்புகள், சடங்குகள், பரிகாரங்கள் இவற்றை விளக்கக்கூடிய அற்புத பொக்கிஷங்களாக வேதங்கள் விளங்குகின்றன.
சதுர் வேதங்கள்:
'வேதார்த்த பிரகாசிகா' என்ற நூலே முதன் முதலில் எழுத்து வடிவில் தோன்றிய வேத நூல். இது 14ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதற்கு முன்பாக வேதங்கள் வாய்வழியே சொல்லி மனப்பாடம் செய்தே நினைவில் கொள்ளப்பட்டன.
ரிக் வேதம் :
வேதங்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டவை. ரிக் வேதமே காலத்தால் முற்பட்டது. இது கி,மு.1500 -க்கும் முன்பே உருவானது. காலம் கி.மு. 2200 முதல் கி.மு. 1600 வரை. ரிக் வேதத்தில் 10,000 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக்வேதிகள் இந்திரனையும், அக்னியையும் வழிபட்டுவந்தனர். மேய்ச்சல், விவசாயம், தச்சு வேலை, மண் வேலைகள், பருத்தி, கம்பளி நூற்றல், சிற்ப வேலைகள், அறுசுவை உணவுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர்.
பிந்தைய வேதங்கள் :
யஜுர் வேதம் கி,மு.1400 முதல் கி.மு. 1000 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது. பிந்தைய காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளியை விட்டுக் கிழக்கு நோக்கி நகர்ந்துவிட்டனர். அதனால் பழக்கவழக்கங்களும், வாழ்வியல் நடைமுறைகளும், தெய்வ வழிபாடுகளும் மாறிவிட்டன. முதலில் இயற்கையை வணங்கியவர்கள் பிறகு சிவன், பிரம்மா, விஷ்ணுவை வழிபட்டனர்.
சாம வேதம் சடங்குகளின்போது இசைப்பதற்காக படைக்கப்பட்டது. இதிலிருந்துதான் இந்தைய இசை தோன்றியது.
அதர்வணம்தான் இறுதியான வேதம். இதுவும் சடங்குகளைப் பற்றியே பேசுகிறது. நல்லவை, அல்லவை ( மந்திரம், மாந்திரீகம் ) இரண்டையும் கொண்டுள்ளது.
வேதங்களின் நான்கு பாகங்கள்:
சம்ஹிதை என்பவை தொகுப்பு மந்திரங்களாக உள்ளன. இவை தெய்வங்களால் தரப்பட்ட பாடல்கள் என அழைக்கப்படுகின்றன.
பிரமாணங்கள் என்பவை உரை அல்லது சடங்குகளின் வழிமுறைகள் பற்றிக் கூறுகின்றன.
ஆரண்யகம் என்பவை காட்டில் வாழ்கின்ற முனிவர்கள் நமக்குத் தந்த உரைகள்.
வேதத்தில் கூறப்பட்ட தத்துவ உரைகள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள், தத்துவ விவாதங்கள் ஆகியவை வேதத்தின் அந்தமாக வருவதை 'வேதாந்தம்' என்று கூறுகிறார்கள்.
வேதத்தின் அங்கங்கள் :
சிக்ஷா, சந்தஸ், நிருத்தம், வியாகரணம், கல்பம், ஜொதிஷம் ஆகிய ஆறும் வேதத்தின் அங்கங்களாகும். இதில் ஜோதிஷம் வேதத்தின் கண்கள் என்று சொல்லப்படுகிறது. நாம் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஜோதிடம் முக்கியக் காரணியாக விளங்குகிறது.
-- (ஜோதிடம் தெளிவோம் ) ஜோதிட ரத்னா வி. அகிலாண்டேஸ்வரி.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று இணைப்பு. ஞாயிறு, நவம்பர் 9, 2014.

Friday, November 11, 2016

கண்ணீர் வராத வெங்காயம்.

* ஊறுகாய் பாட்டிலில் சில்வர் ஸ்பூன் போட்டு வைக்கக்கூடாது. அப்படிப் போட்டு வைத்தால், ஊறுகாய் விரைவில்
கெட்டுப் போய்விடும்.
* ரஸ்னா, சர்பத் கலக்கும்போது இரண்டு ஸ்பூன் தேன் விட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* பழைய வெள்ளி ஆபரணங்களைச் சில மணி நேரம் மோரில் போட்டுவைத்தால், பளிச்சென மாறிவிடும்.
* கண்ணாடி மேஜை கறையாக உள்ளதா? கடலை மாவு அல்லது டால்கம் பவுடரைத் தூவிப் பிறகு நன்றாகத்
துடைத்துவிடுங்கள். கறை நீங்கிவிடும்.
* வாஷ்பேஸினில் கறை படிந்துள்ளதா? கொஞ்சம் வினிகரைத் தெளித்து சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் கழுவினால்
பளபளக்கும்.
* பருப்புப் பொடியுடன் சிறிது கசகசாவையும் வறுத்துப் பொடி செய்து சேர்த்தால் குழம்பு, கூட்டு கெட்டியாக இருக்கும்.
* பொரியல் செய்யும்போது காரப்பொடிக்குப் பதிலாகத் தேங்காய்ப் பொடி சேர்த்தால் பொரியலின் சுவை கூடுதலாக
இருக்கும்.
* வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை
நறுக்கும்போது கண்களில் கண்ணீர் வராது. தோலையும் எளிதில் உரிக்கமுடியும்.
-- குறிப்புகள் பலவிதம் பகுதியில் , எஸ்.மேகலா, சென்னை.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று இணைப்பு. ஞாயிறு, நவம்பர் 9, 2014.

Thursday, November 10, 2016

தகவல் பலகை.

* ஆப்பிள் பழம் ரோஜாப்பூ குடும்பத்தைச் சேர்ந்தது என்றால், நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
* நிலவாழ் உயிரினங்களில் யானை, காண்டாமிருகத்திற்கு அடுத்த 3 வது பெரிய உயிரினம் நீர்யானை. குதிக்கத் தெரியாத
நீர்யானைகளால் நிலத்தில் மணிக்கு 30 கிமீ வேகத்தில் ஓடவும், நீரில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நீந்தவும் முடியும்.
* இயற்கையாக கிடைக்கும் வேர், பூ, இலை, காய்களை பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவத்திற்கு அரோமா தெரபி
என்று பெயர் .
* சீனாவில் வெள்ளையும், துரிக்கியில் நீலமும், எகிப்தில் மஞ்சளும், நம் நாட்டில் கறுப்பும் துக்கத்தை குறிக்கும் நிறங்களாக
கடைபிடிக்கப்படுகிறது.
* உலகிலேயே இலங்கையில் உள்ள கண்டி கதிர்காமம் முருகன் பெயருக்கு மட்டுமே காசோலை எழுதி உண்டியலில்
செலுத்தினால் அது செல்லுபடியாகும்.
* வலி நிவாரணியாக பயன்படுத்தும் அமிர்தாஞ்சன் தைலம், ஆந்திராவைச் சேர்ந்த காசிநாத்துனி நாகேஸ்வரராவ் என்பவரால்
1894ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
-- தினமலர் நாளிதழ்களிலிருந்து.

Wednesday, November 9, 2016

பூணூல்

பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?
வேதம் படிக்கவும், வேதநெறி நிற்பதற்கும் வழங்கப்படுகின்ற அதிகார அடையாளமே பூணூல். இது பற்றி இரு இடங்களில் ட்திருமூலர், திருமந்திரத்தில் கூறியுள்ளார். பூணூலிம், குடுமியும் வேதாந்தத்தையும், ஞானத்தையும் உணர்த்தும் அடையாளங்களாக அந்தணர்களுக்கு உரியது என 'அந்தணர் ஒழுக்கம்' என்னும் பகுதியிலும், ஆறாம் தந்திரத்தில் 'திருநீறு' அதிகாரத்தில்,
'நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூலது வேதந்தம் நுண்சிகை ஞானமாம்'
எனவும் இதன் மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.
-- கேளூங்க சொல்கிறோம்! -- பகுதியில் , மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
-- தினமலர் ஆன்மிக மலர் .இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Tuesday, November 8, 2016

மகிழ்ச்சி

மரத்தைச் சுற்றினால் மகிழ்ச்சி.
தெய்வீக மரமான அரசமரம், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக கருதப்படுகிறது. இதற்கு, அஸ்வத்த மரம்' என்றும் பெயருண்டு. இதற்கான புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. எந்த தெய்வத்தைக் குறித்து ஹோமம் நடத்தினாலும், அதில் இடப்படும் ஹவிஸை ( ஆகுதி ) அந்த தெய்வத்திடம் சேர்ப்பவர் அக்னி. இந்த பணியையே தொடர்ந்து செய்ததால், அவருக்கு சலிப்பு ஏற்பட்டது. தேவலோகத்தை விட்டு கிளம்பிய அவர், குதிரை வடிவெடுத்து மறைந்து வாழ்ந்தார். தேவர்கள் அவரை தேடிய போது, அரசமரமாக மாறி நின்றார். குதிரையை சமஸ்கிருதத்தில் 'அஸ்வம்' என்பதால், அரசமரத்திற்கும் 'அஸ்வத்த மரம்' என்று பெயர் வந்தது.
அக்னியின் அம்சமான அரசமரத்தின் குச்சிகளேயாக குண்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதையே 'போதி மரம்' என்பர். புத்தருக்கு போதி மரத்தடியில் தான், 'ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்' என்ற ஞானம் கிடைத்தது. போதி என்ற பாலி மொழி சொல்லுக்கு 'அரச மரம்' என்று அர்த்தம். அரசமரம் அதிகமான ஆக்சிஜனை வெளியிடும் என்பதால், விநாயகர், நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தனர். திங்கட்கிழமையும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ( பஞ்சாங்கம், காலண்டரில் அமா சோமவாரம் என குறிப்பிட்டுள்ள நாட்கள் ) அரசமரத்தை வலம் வந்து வழிபட்டால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர் .இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Monday, November 7, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

* திருமாலுக்குரிய வைணவ ஆகமம்ங்கள் ... பாஞ்சராத்ரம், வைகானசம்.
* மகாபாரதத்தை வியாசர் விருந்து என்னும் பெயரில் எழுதியவர் ... ராஜாஜி.
* இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் ... ராமசரித மானஸ்.
* ராமர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார் எழுதியது ... பெருமாள் திருமொழி.
* திருமாலுக்கு விரதம் இருக்க உகந்த நட்சத்திரங்கள் ... திருவோணம், ரோகிணி.
* எத்திசை நோக்கி நின்று திருநீறு பூச வேண்டும் ... கிழக்கு, வடக்கு.
* ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று பாடிய தலம் ... மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்.
* விபூதி என்பதன் பொருள் .... மேலான செல்வம்.
* 'தாசமார்க்கம்' என்னும் அடிமை நெறியில் சிவனை அடைந்தவர் ... திருநாவுக்கரசர்.
* அக்னியைப் பற்றிக் கூறும் நூல் ... ஆக்னேய புராணம்.
-- பக்திமலர். அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Sunday, November 6, 2016

பாவம் நீக்கும் பஞ்சபுராணம்.

சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், 'பஞ்ச புராணங்கள்' எனப்படுகின்றன. அவற்றின் ஆசிரியர்கள் :
தேவாரம்...................................திருஞானசம்பந்தர்.
................................. திருநாவுக்கரசர்.
..................................சுந்தரர்.
திருவாசகம் .............. ...............மாணிக்கவாசகர்.
திருவிசைப்பா .........................கருவூர்த்தேவர்.
திருப்பல்லாண்டு ....................சேந்தனார்.
திருத்தொண்டர் புராணம்......சேக்கிழார்.
சிவனை வணங்கும்போது, இப்புராணங்களைப் படித்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர் .இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Saturday, November 5, 2016

ரிஷபாந்திகர்

ரிஷப வாகனத்தின் மீது சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்தால், அவர் ரிஷபாரூடர். ரிஷபவாகனத்திற்கு அருகில் நிற்பதுபோல் காட்சி தந்தால் ரிஷபாந்திகர் என்று சொல்வார்கள்.
-- எஸ்.மதுமிதா, பெருந்துறை.
கிருஷ்ணன் வணங்கும் ஆறு பேர்!
'நான் ஆறுபேரை வணங்குகிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். யார் அந்த ஆறு பேர் தெரியுமா?
ப்ராதஸ்நாதி ( அதிகாலையில் குளிப்பவர் ). அச்வத்வசேவி ( அரசமரத்தை வணங்குபவர்). த்ருணாக்னிஹோத்ரி ( மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன்). நித்யான்னதாதா ( நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன் ). சதாபிஷேகி ( நூற்றாண்டு விழா செய்துகொண்டவர் ). பிரம்மஞானி ( இறைவனை உணர்ந்தவர் ).
-- பைரவி, பெருந்துறை.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜுன் 16- 30, 2014.

Friday, November 4, 2016

ஒரு வரிச் செய்திகள்

* காசியில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன.
* சிவன், விஷ்ணு, ஆஞ்சநேயர் மூவர் சகஸ்ரநாமத்திலும் வரும் பெயர் சுந்தரர்.
* வில்லிப்புத்தூரார் தவிர ராமாயணம் எழுதியவர் பெருந்தேவனார்.
* காயத்ரி மந்திரத்தை கண்டறிந்தவர் விசுவாமித்திரர்.
* மதங்க முனிவரின் மாணவி சபரி.
* மகான்களின் திருஅவதார நாட்களை வர்தந்தி என்று குறிப்பிடுவார்கள்.
* அரசர்களாக இருந்து ஆழ்வார்களாக மாறியவர்கள் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார்.
* தொண்டர் சீர் பரவுவார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் சேக்கிழார்.
* திருவெண்பாவை பாடல்கள் 20 இயர்றியவர் மாணிக்கவாசகர்.
* பாசரப்படி ராமாயணத்தைத் தொகுத்தவர் பெரியவாச்சான் பிள்ளை.
* விஷ்ணு சகஸ்ரநாமத்தை இயற்றியவர் சனகாத்யர். மகாபாரதத்தில் இதை இணைத்தவர் பீஷ்மர். கேட்டவர் தருமபுத்திரர்.
* ஜடாயுவின் சகோதரன் சம்பாதி.
* விப்ரநாராயணர் தொண்டரடிப் பொடியாழவார் என அழைக்கப்பட்டார்.
* மதுரையில் உள்ள கூடலழகர் கோயிலில் நவக்கிரகங்களும் இருக்கின்றன.
* இந்தியாவிலேயே மிக நீளமான சன்னதித் தெரு உள்ள இடம் திருநெல்வேலி.
* கர்னாடகாவிலுள்ள மூலுபாகுல் என்னும் இடத்தில் உள்ள ஆஞ்சனேயருக்கு தாழம்பூ அணிவிக்கிறார்கள்.
* பூதங்குடி என்னும் ஊரில் சீதாதேவிக்கு கோயில் உள்ளது.
* தாலி பாக்கியம் நிலைக்க காண வேண்டிய விழா சுசீந்திரம் ஆருத்ரா தரிசன விழாவாகும்.
-- பத்மா வெங்கற்றாமன், ரெட்டிப்பாளயம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜுன் 16- 30, 2014.

Thursday, November 3, 2016

f இணைய வெளியிடையே...t

* முதியோர் இல்லத்திற்கு பணம் கொடு, பொருள் கொடு, உணவு கொடு உன் பெற்றோரை கொடுத்து விடாதே!!!
hasinabanu@ twitter,com
* வாகனம் ஓட்டும்போது ஐம்புலன்ஸும் சரியாக இருந்தால் ஆம்புலன்ஸில் ஏறாமல் தவிர்க்கலாம்.
Kavitha@twitter.com
* ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்தப் பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது.
jebz4@twitter.com
* யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீர்கள் ... துணிக்கடைகளில் பல மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட ஓர் ஆடை
யாரோ ஒருவரால் விரும்பி அணியப்படுகிறது.
Urs- priya@twitter.com
* மழை இரவில் நான்கு டாஸ்மாக் கடைகளை தாண்டிவந்த பின்பே கண்டுபிடிக்க முடிந்தது, அவசரத்துக்குத்தேடிய மருந்து
கடையை!
Indiavasan@ twitter.com
* தாத்தா பாட்டியுடன் சேர்ந்து வாழும் குடும்பங்களில், குழந்தைகளுக்கு இரண்டு பெற்றோர். பெற்றோருக்கு நான்கு
குழந்தைகள்.
priyakathiravan @twitter,com
* பஸ் ஸ்டாண்டில் பார்க்கிங் காண்ட் ராக்ட் எடுப்பவர்கள், அமெரிக்கர்களை விட ஆபத்தானவர்கள்... கொஞ்சம் பெட்ரோல்
இருந்தாலும் விடமாட்றாய்ங்க.
boopathy@@twitter.com
-- தினமலர். சண்டே ஸ்பெஷல். 02-11-2014.

Wednesday, November 2, 2016

தெரியுமா?

* "குஷ்பு, தி.மு.க - வில் இருந்து என்ன காரணம் சொல்லி விலகினார்?"
பதில் : 'என் உழைப்பு ஒருவழிப் பாதையாக இருக்கிறது' என்று சொல்லி விலகினார்.
* "L.K.G. , U.K.G. -- விரிவாக்கம் என்ன?"
பதில் : L.K.G. -- LOWER KINDERGARDEN.
U.K..G. -- UPPER KINDERGARDEN. ஜெர்மன் மொழியில் KJNDERGARDEN என்றால், 'குழந்தைகளின்
தோட்டம்' என்று பொருள் !
* "ட்விட்டர் வலைதளத்தின் சின்னமான நீல நிறப் பறவையின் பெயர் என்ன"
பதில் : மவுன்டேய்ன் ப்ளூ பேர்ட் ( Mountain Blue Bird).
* "சமையலறைகளில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்கள் என்னென்ன>"
பதில் : கடுகு, மிளகு, வெந்தயம், சீரகம், துவரம்பருப்பு.
-- நா.சிபிச்சக்கரவர்த்தி.
-- ஆனந்த விகடன். 02-07-2014.

Tuesday, November 1, 2016

'எனக்கு எதுக்குடா வாங்கின?"

"காதலி, மனைவி, அம்மா -- என்ன வித்தியசம்?"
" 'எனக்கு என்ன வாங்கிக் குடுப்ப?" -- காதலி.
'எனக்கு என்னதான வாங்கிக் குடுத்துக் கிழிச்சீங்க' -- மனைவி.
"எனக்கு எதுக்குடா வாங்கின?" -- அம்மா.
-- ஆ.சிவமணி, பிளியம்பட்டி.
"20 ஆயிரம் கோடி ஏமற்றிய 'சகாரா'வின் சட்ட ஆலோசகர் ரவி சங்கர் பிரசாத். நீதித் துறைக்கே அமைச்சராகிவிட்டாரே?"
" 'சிலம்பை உடைத்து
என்ன பயன்?
அரியணையிலும் அதே கொல்லன்'
என்ற ஈரோடு தமிழன்பனின் இந்த ஹைக்கூ , உங்களுக்கே உங்களுக்காக!"
-- தாமு,தஞ்சாவூர்.
"சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது என்றால் என்ன?"
" 'வீரன் ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான்' என்பதை கலைஞர் இப்படிச் சொன்னார்: 'வீரன் சாவதே இல்லை;
கோழை வாழ்வதே இல்லை'!"
-- அ.யாழினி பர்வதம், சென்னை -78.
--( நானே கேள்வி... நானே பதில்! பகுதியில்... )
-- ஆனந்த விகடன். 02-07-2014.