Wednesday, April 30, 2014

வாயைத் திறக்காதீங்க.

 மவுன விரதம் இருப்பது மிகவும் விசேஷமான வழிபாட்டு முறை.  இது உடம்புக்கு ஆரோக்கியம் தரும் உபாயமும்கூட.  எந்தக் கிழமையில் மவுன விரதம் இருப்பதாக நேர்ந்து கொள்கிறோமோ, அன்று சூரியனின் உதயம் முதல் பேசாமல் இருக்க வேண்டும்.  மவுன விரதத்தில் காஷ்ட மௌனம் என்பது மிகவும் சிரமமானது.  சைகைகூடக் காட்டாமல்,  எழுதிக்காட்டாமல் மவுன விரதம் இருப்பது காஷ்டமம்.  அன்று முற்றிலும் பேசாமல் இருப்பதோடு, அளவாக உணவு உட்கொள்ள வேண்டும்.  பால், பழம் முதலியவற்றை மட்டும் சாப்பிடுவதும், சமைத்ததை உண்ணாமல் இருப்பதும் மிகவும் விசேஷம்.
தலையை கட்டாதீங்க.
      வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் தலை முழுகி, அந்தத் துண்டுடன் பூஜா காரியங்களைச் செய்வதுண்டு.  பூஜை செய்யும்போது தலையில் வஸ்திரம் இருக்கக்கூடாது.  தலையைத் துணீயால் கட்டிக்கொண்டு பூஜைகள் செய்வது வடநாட்டு சம்பிரதாயம்.  தென்னக வழக்கப்படித் தலையில் துணி இருத்தல் கூடது.
--- தினமலர். பக்திமலர். அக்டோபர் 10, 2013. 

Tuesday, April 29, 2014

பல தகவல்...

*  எறும்புகள் தூங்குவதே இல்லை.
*  மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
*  கரப்பான் பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.
*  பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.
*  ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.
*  யானை,  விலங்கினத்தில் மிக நீண்ட காலம் நினைவாற்றல் பெற்ற விலங்கினம்.  பல ஆண்டுகளுக்குப் பிறகும் தன் குட்டி அல்லது குழுவைச் சேர்ந்த
   யானை மரணமடைந்த இடத்திற்குச் சென்று அது நினைவஞ்சலி செய்யும்.
*  சிறுத்தையால் அரிமாவைப் போல் ஒலி எழுப்ப ( கர்ஜிக்க ) முடியாது.  பூனையைப் போல ' மியாவ் ' என்ற ஒலியைத்தான் எழுப்ப இயலும்.
-- ரிலாக்ஸ் , தி இந்து.  செப்டம்பர் 24, 2013.

இரவாடி, பகலாடி, பொழுதாடி?

 இரவில் மட்டும் தன் இருப்பிடத்தை விட்டு வெளிவந்து இரைதேடும் உயிரினங்களுக்கு இரவாடி என்று பெயர். ஆங்கிலத்தில் நாக்டர்னல் கிரீச்சர்
 ( nocturnl  creature ).  பெரும்பாலான ஆந்தைகள், வௌவால்கள் போன்றவை இரவாடிகளாகும்.  இரவாடிகளுக்கு மற்ற விலங்குகளைவிட மோப்ப உணர்வு, செவியுணர்வு போன்றவை நுட்பமாக இருக்கும்.  இருட்டிலும் பார்க்கும் விதத்தில் அவற்றின் கண்கள் நுட்பமாக அமைந்திருக்கும்.
     இதேபோல பகலில் நடமாடி, இரைதேடி வாழும் உயிரினங்களுக்குப் ' பகலாடிகள்'  என்று பெயர்.  ஆங்கிலத்தில் டயர்னல் ( diurnel ).
     அந்திப் பொழுதிலும், விடியற்பொழுதிலும் நடமாடு, இரைதேடி வாழும் உயிரினங்களுக்கு ' பொழுதாடிகள் ' என்று பெயர். ஆங்கிலத்தில் கிரிஸ்கிலர
( crepuscular )  தங்களுக்குத் தகுந்தாற்போல், பகல்,இரவு ஆகிய இரு நேரங்களிலும் நடமாடி, இரைதேடி வாழும் உயிரினங்களுக்கு ' இருபொழுதாடிகள் ' என்று பெயர்.  ஆங்கிலத்தில் கேதிமரல் ( cathemeral ) என்று பெயர்.
     இரவாடிக்கு ' இரவு வாழ்வி ' என்ற சொல்லும்,  பகலாடிக்கு ' பகல் வாழ்வி ' என்ற சொல்லும் புழக்கத்தில் உள்ளபோதிலும், தமிழில் எழுதும் சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள் இரவாடி, பகலாடி என்ற சொற்களே பொருத்தமானது என்று கருதுகிறார்கள்.
-- சந்தனார். அறிவோம் நம் மொழியை. கருத்துப் பேழை.
--   ' தி இந்து 'நாளிதழ். புதன். அக்டோபர் 9, 2013.

Monday, April 28, 2014

ரத்த அழுத்தம் !

ரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும் யானைகள்.
     மரபணுக்கள், உயரம், எடை ஆகிய அம்சங்கள்தான் ரத்த அழுத்தத்தை நிர்ணயம் செய்கின்றன.  ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்பட்டால்தான், உயிரினங்களின் மிகவும் மென்மையான ரத்த நாளங்கள் வெடித்துவிடாமல் இருக்கும்.  யானைகளின் ரத்த அழுத்தம் மற்ற உயிரினங்களைவிட அதிகம்.  அதற்கு மேலே கூறப்பட்ட அம்சங்கள்தான் காரணம்.  யானைகளின் ரத்த நாளங்களும் முகப் பெரியவை.  மனிதர்களைப் போலவே, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் யானைகளும் கஷ்டப்படும்.  இந்தப் பிரச்சினையைத் தடுக்க, யானைகள் தங்கள் இதயத் துடிப்பைக் குறைத்துக்கொண்டு சமாளிக்கின்றன.  அப்படி இல்லையென்றால் யானைகளால் சீராக இயங்க முடியாது.  இதேபோல மனிதர்களும் இதயத் துடிப்பை சீராக வைத்துக்கொண்டால் நல்லது.  குறிப்பிட்ட சில சுவாசப் பயிற்சிகள் மூலம் இதயத் துடிப்பு விகிதத்தை மனிதர்கள் சீராகப் பராமரிக்க முடியும்.
--  உயிர் மூச்சு பசுமையின் சுவாசம். சிறப்புப் பகுதி.
--   ' தி இந்து 'நாளிதழ். செவ்வாய். அக்டோபர் 8, 2013. 

Sunday, April 27, 2014

கொசுக்கள் ?

கொசுக்கள் ஏன் சிலரை அதிகமாகக் கடிக்கின்றன ?
     சாதாரணமாக நம்மைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான்.  அவை யாரைக் கடிக்க வேண்டும் என்பதைப் பார்வை , மோப்பசக்தி மூலம் கண்டறிகின்றன.  அவற்றின் உணர்கொம்புகள் மூலம் 72 வகையான மணங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும்.  இதில் 27 வேதிப்பொருள்கள் நமது வியர்வையிலேயே இருப்பவை.
     நமது வியர்வையில் இருக்கும் அப்படிப்பட்ட வேதிப்பொருள்களில் கார்பன் டை ஆக்ஸைடு, ஆக்டனால், நோனால் போன்றவை அடங்கும்.  ஒருவரது வியர்வையில் இந்த வேதிப்பொருள்களின் அடர்த்தி அதிகமாக இருந்தால், கொசுக்கள் அவர்களைக் குறி வைத்துக் கடிக்கின்றன.  எனவே, இனிமேல் கொசு உங்களை அதிகமாகக் கடித்தால், அதற்குக் காரணம் உங்கள் வியர்வைதான்.
    வியர்வை வருவதை தடுத்து நிறுத்த முடியாது என்பதால், மேலே சொன்ன வேதிப்பொருள்கள் வெளியே தெரியாமல் மறைக்கும் வகையில் கொசுத் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது.  சீக்கிரம் கண்டுபிடித்தால், கொசுக் கடியில் இருந்து நாமும் சீக்கிரமாகத் தப்பிக்கல்லாம்.
-- ஆதி. உயிர் மூச்சு பசுமையின் சுவாசம். சிறப்புப் பகுதி.
--   ' தி இந்து 'நாளிதழ். செவ்வாய். அக்டோபர் 8, 2013.  

Saturday, April 26, 2014

" நம்பிக்கை.

   ஒரு துறவி காட்டில் கடும் தவம் இருந்துவந்தார்.  ' அவனின்றி ஓர் அணுவும் அசையாது ' என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.  ஒரு நாள் திடீரென பல்வலி ஏற்பட்டு கடும் அவதிப்பட்டார்.  பல் வலி தீர கடவுளை வேண்டினார்.
     கடவுளூம் நேரில் தோன்றி ஒரு பச்சிலையை அடையாளம் காட்டி அதை பல்லில் வைக்கச் சொன்னார்.  கடவுள் சொல் பொய்க்குமா என்ன?  பல் வலி போயே போச்சு.
     ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் அதே பாழாய்போன பல் வலி . துறவி அதே பச்சிலை வைத்தியத்தை கையாண்டார்.  எந்தப் பயனும் இல்லை.  கடவுளிடம் மீண்டும் முறையிட்டார்.  கடவுளும் தோன்றினார்.
    " கடவுளே மீண்டும் எனக்கு பல் வலி வந்தது.  நான் கடந்த முறை நீங்கள் சொன்ன பச்சிலையை வைத்துப் பார்த்தேன் பலன் இல்லை."  என்று கூறினார்.  அதற்கு கடவுள், " முதலில் என்னை நம்பினாய்.  இப்போது பச்சிலையை நம்பிவிட்டாய்.  அதுதான் பிரச்சனை" என்றார்.
-- அ.முகமது ஹுமாயூன்.  ரிலாக்ஸ்.
--  ' தி இந்து 'நாளிதழ்.   திங்கள். அக்டோபர் 7, 2013.  

Friday, April 25, 2014

திக் திக் பயணம் !

 பைக்கில் வேகமாக போய்க்கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன்.  சிக்னல் ஒன்றை கடந்து சென்றபோது, டிராஃபிக் போலீஸ்காரர் நடுரோட்டில் நின்றபடி வண்டியை நிறுத்தச் சொல்லி, சைகை காட்டினார்.
     காலையிலேயே அம்மா சொல்லி அனுப்பியிருந்தாள், ' வேகமா ஓட்டாதேடா...' என்று.
    ' ஹெல்மெட்டை போட்டுட்டுதான் போயேண்டா..'. என்று அப்பா வருத்தப்பட்டதும் நினைவுக்கு வந்தது...
     அவசரமாக வந்ததில் பர்ஸில் பணமும் இல்லை.  பத்து ரூபாய் இருக்கல்லாம்.  அவ்வளவுதான்...
     இப்படி பல சிந்தனைகள் மின்னலாக வந்து மறைய, போலீஸ் அருகே வண்டியை நிறுத்தினான் ராதாகிருஷ்ணன்.
     போலீஸ்காரர் கேட்டார்.
   " சிக்னல் தாண்டி கொஞ்சம் ட்ராப் பண்ணிடறீங்களா தம்பி ? "
-- சிவகாசி சுரேஷ்.  ரிலாக்ஸ்.
--  ' தி இந்து ' நாளிதழ்.  திங்கள். அக்டோபர் 7, 2013.  

ஹெலிபேடில் திருமணம்.

 ( சிறப்பு ).
696 அடி உயரத்தில் ஹெலிபேடில் திருமணம்.
புர்ஜ் அல் அரப் தங்கும் விடுதி ஏற்பாடு.
     வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்பை அளிதுள்ளது துபையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான புர்ஜ் அல் அரப் தங்கும் விடுதி.
     துபையின் பிரபல தங்கும் விடுதியான புர்ஜ் அல் அரப் 60 மாடிகளைக் கொண்டது.  இங்கு மொத்தம் 202 அதி நவீன சொகுசு அறைகள் உள்ளன.  அதிக அளவில் புகைப்படம் எடுக்கப்பட்ட கட்டிடங்களுள் ஒன்று.
     இந்த விடுதியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு கடல் மட்டத்தில் இருந்து 212 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.  கட்டிடத்திலிருந்து சற்றே வெளியே நீட்டியபடி வட்டவடிவத்திலிருக்கும் இந்த ஹெலிகாப்டர் இறங்குதளம் மிகவும் புகழ்பெற்றது.
    இங்கு ஆடம்பர திருமணத்தை நடத்த விரும்புபவர்களூக்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர புர்ஜ் அல் அரப் முன்வந்துள்ளது.
     இங்கு திருமணத்தை நடத்த குறைந்தபட்சம் 55,000 அமெரிக்க டாலர்கள் ( சுமார் ரூ.33 லட்சம் ) தேவை.  மணமகன் அல்லது மணப்பெண் ஆகியோரின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப கட்டணம் அதிகரித்துக் கொண்டே போகும்.
     இந்த ஹெலிபேடில் திருமணத்தை நடத்த விருப்பமுள்ள மணமக்கள் 'அகஸ்டா 109' ரக ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாகவோ அல்லது தரைவழியாகவோ புர்ஜ் அல் அரப் விடுதிக்கு அழைத்து வரப்படுவர்.
     அந்த விடுதியில் இருக்கும் 202 சொகுசு அறைகளில் ஏதேனும் ஒன்றில் மணமக்கள் தங்கிக் கொள்ளலாம்.  மேலும், அந்த விடுதியின் சமையல் கலைஞர்களின் உதவியுடன் தங்களுக்கு விருப்பமான உணவு வகைகள், கேக் வகைகளையும் தேர்வு செய்து கொள்ளல்லாம் என புர்ஜ் அல் அரப் அறிவித்துள்ளது.
-- பி.டி.ஐ.  தேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  வெள்ளி, ஏப்ரல் 25,  2014.  

Thursday, April 24, 2014

ஹா...ஹா...

*  "  வேலைக்காரனுக்கு உங்க சட்டையை குடுக்காதீங்கன்னு சொன்னாக் கேக்குறீங்களா? "
   "  என்ன ஆச்சு ?"
   "  இன்னைக்கு நீங்கதான்னு நினைச்சு..."
   "  அய்யய்யோ!  என்ன ஆச்சு ? "
   "  அவனை பூரிக்கட்டையால அடிச்சிட்டேன் ."
*  " மூட்டு வலி அதிகமாயிடுச்சு டாக்டர் !"
   " ஒவ்வொரு கட்சியா தாவிட்டு இருந்தா இப்படித்தான்
*    ஆஸ்பத்திரி பெட்டில் இருக்கும் தலைவரிடம் உதவியாளர் :
   " சாத்துக்குடிக்கு பதிலா அம்பது ரூபா வசூல் பண்ணனும்னு சொன்னீங்கள்ளே ... மலர் வளையம் வைக்க வர்றவங்ககிட்ட எவ்வளவு வாங்கணும்
     தலைவரே?"
--  ' தி இந்து '  நாளிதழ் .

Wednesday, April 23, 2014

சுப விசேஷங்கள்!

சுப விஷயங்களை வளர்பிறையில் தொடங்குகிறார்களே!  இது ஆன்மிகமா? அறிவியலா?
     அமாவாசைக்கு மறுநாள் முதல் வளர்பிறை தொடங்கும்.  ஒவ்வொரு நாளும் சந்திர ஒளி சிறிது சிறிதாக அதிகரித்து இரவுப் பொழுது நிலவெளியில் வெண்மையாக இருக்கும் நாட்களே வளர்பிறை நாட்கள்.
     இதனை சுக்ல பட்சம் நாட்களில் சுபகாரியங்கள் தொடங்கினால் நல்லபடியாக முடியும் என்பது ஆன்மிகம்.  வளர்பிறை நாட்களில் நிகழும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியானது மன இறுக்கம் போன்ற நோய்களைக் குறைத்து தெளிவான சிந்தனைகளைத் தூண்டவல்லது என்பது அறிவியல் .
     இன்னொரு விஷயம் பௌர்ணமியின் மறுநாள் முதல் தேய்பிறை துவங்குகிறது.  இந்த நாட்களில் சுபகாரியங்களே செய்யக் கூடாது எனத் தவறாகக் கூறுகிறார்கள். " சப்தமி அந்தம் சுபம் " என்பது ஆகம சாஸ்திரம் வாக்கியம்.  தேய்பிறை ஏழாம் நாள் வரை அதாவது கிருஷ்ண பட்ச சப்தமி வரை முன்னிரவில் நிலவெளி இருக்கும் காலமாதலால் வளர்பிறை போன்றே சுபகாரியங்கள் செய்யலாம் என்பது இதன் பொருள்.
--   அறிவோம்!  தெளிவோம்! .  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். ஏப்ரல் 21, . 2011.

கேளுங்கள் கொடுக்கப்படும் !

  ( சிறப்பு ).
     நரேந்திர மோடி, அரவிந்த் கேஜ்ரிவால், ராகுல் காந்தி இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
     நீங்கள் ஏன் என்னை சிக்கலில் மாட்டிவிட விரும்புகிறீர்கள்?   நரேந்திர மோடியின் பின்னணியில் வெற்றிக் கதை இருக்கிறது.  இந்த நாட்டிற்கு அது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.    அரவிந்த் கேஜ்ரிவால், மிகவும் அற்புதமான சில விஷயங்கள் செய்திருக்கிறார்.  யாரும் பேசத் துணியாத விஷயங்களை அவர் பேசினார். அவர் போன்ற நபர்கள் நமது பாராளுமன்றத்தில் அதிகம் இருக்க வேண்டும்.  ஆனால் அவர் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் எனக்கு அவ்வளவாக ஒப்புதல் இல்லை.  அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமானால் தேசம் அழிவுப்பாதைக்குச் செல்லும்.  இலவசங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைகளைத்தான் ஏற்படுத்தும்.  மோடி முன்னேற்றம் பற்றி பேசுகிறார்.  கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார்.  ஆனால், ராகுல் காந்தி எது பற்றி பேசுகிறார் என்பது இன்னமும் எனக்கு தெளிவாக இல்லை.
-- சத்குரு ஜக்கி வாசுதேவ்., ( கேளுங்கள் கொடுக்கப்படும் ! வினா விடை ,  தொடரில் )
-- ஈஷா காட்டுப்பூ.  பிப்ரவரி 2014.

Tuesday, April 22, 2014

விடை தேடும் பயணம்.

*  ஜெயகாந்தன் எழுதிய எந்த நூலுக்காக அவருக்கு ' ஞானபீட விருது ' வழங்கப்பட்டது?
   குறிப்பிடத்தக்க இலக்கிய பங்களிப்பு செய்ததற்காக இது வழங்கப்பட்டது.  எனவே, ஒரு குறிப்பிட்ட நூலுக்காக என்று, இந்த விருது வழங்கப்படவில்லை.
*  தமிழ் இயக்கியங்களில் ஆடகம் என்று குறிப்பிடப்படுவது எது?
   ஆடகம் என்பது பசும்பொன்.  அதாவது 24 காரட் தங்கம் எனலாம். அரண்மனை யானைகளைக் கட்டிவைக்கும் மைதானத்தைத் தமுக்கம் என்பர்.
*  ஜவகர்லால் நேருவின் தாயார் பெயர் என்ன?
   நேருவின் அம்மாவின் பெயர் சொரூபராணி.  மகாத்மா காந்தியின் அம்மா புத்லீபாய்.  நேருவின் மனைவி பெயர் கமலா.
*  சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் சர்க்கரையின் அறிவியல் பெயர் என்ன?
   லாக்டோஸ் என்பது பாலில் காணப்படும் சர்க்கரை வடிவம்.  குளுக்கோஸ் என்பது தாவரங்களில் காணப்படும் சர்க்கரை வடிவம்.  இதை அருந்தினால்
   உடனடியாக ரத்தத்தில் கலந்து ஜீரணமாகிறது என்பதால், உடனடி சக்தி பெற இதைப் பயன்படுத்துகிறார்கள்.  மற்றபடி நாம் சமையல் அறையில்
   பயன்படுத்தும் சின்ன சின்னப் படிகங்களாக அமைந்த சர்க்கரை சுக்ரோஸ்தான்.
*  திரிசடை என்பவள் யார்?
   ராவணனின் தம்பி விபீஷணனுக்கும், ஷரமாவுக்கும் பிறந்தவள் திரிசடை.  அஸோகவனத்தில் சீதைக்கு ஆறுதல் கூறியவள் இவள்.
*  ராஜ்புத், ராணா, ரஞ்சித், ரன்வீர் -- யார் அல்லது என்ன?
   இவையெல்லாமே ராஜபுதன மன்னர் குலப் பெயர்கள்தான்.  வீரத்துக்குப் பெயர் போன இவர்களின் பெயர்கள் இந்திய கடற்படையிலுள்ள போர்க்
   கப்பல்களுக்கு பெயராக வைக்கப்பட்டுள்ளன.
* ' எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் '  -- இது எந்த நூலில் இடம் பெற்றது?
    ' எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் '  என்பது கொன்றைவேந்தன் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
-- ஜி.எஸ்.எஸ். வெற்றிக்கொடி. சிறப்புப்பகுதி.
--  ' தி இந்து '  நாளிதழ் . திங்கள். அக்டோபர் 7, 2013.

பெரிய கிரகம்...

பெரிய கிரகம்...குறைந்த அடர்த்தி !
     சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகம் என்ற பெருமையைப் பெற்றது வியாழன்.  ரோமானிய ஆட்சி கடவுளான  ஜூபிடரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
     சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள கிரகம், விண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடுத்தபடியாக பிரகாசமாகத் தெரியும் கிரகம்.  வியாழனின் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு அதிகம்.  இதன் துணைக் கிரகங்களில் இதுவரை 28 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
     இந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது.  இந்த வாயுக்களின் பிரதிபலிப்பால்தான் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது.  ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால், பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது.
     கடந்த 1995 ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய கலீலியோ விண்கலத்தில் இருந்த சென்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது.
---தினமலர் சிறுவர்மலர். ஜூலை 12, 2013.  

Monday, April 21, 2014

'நோட்டா ஓட்டு முறை'

  ( சிறப்பு )
இனி அழுத்திச் சொல்லாம் 'நீங்கள் வேண்டாம் என்று !
    " இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவருக்கும் என் வாக்கு இல்லை என்று சொல்ல வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது.  இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த நல்ல நிர்வாகத்தின் திறவுகோலாக இது பிருக்கும்.  உலகின் 13 நாடுகளில் இந்த முறை உள்ளது.  நாடாளுமன்ற வாக்கெடுப்புகளில்கூட யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்ற ஓட்டுரிமை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும்போது வாக்காளர்களுக்கும் அந்த உரிமையை வழங்க வேண்டும்!" --
49ஓ என்று பரவலாக அறியப்படும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை அதிகாரபூர்வமாக அமல்படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
      அமெரிக்கா தொடங்கி நமது அண்டை நாடான பங்களாதேஷ் வரை 13 நாடுகளில், 'யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' என்பதைப் பதிவு செய்யும் நடைமூறை உள்ளது.  வாக்களிக்கும் உரிமை எப்படி ரகசியமாக உள்ளதோ, அதேபோல வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற நடைமுறையும் ரகசியமாக இருக்கும்.
அந்த 24,591 பேர்...
     கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழகம் முழுக்க 24,501 பேர் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற 49 ஓ - படிவத்தைப் பயன்படுத்த, அவர்களில் சிலரை க்யூ பிராஞ்ச் போலீசார் விசாரித்து இருக்கிறார்கள்.  தேர்தல் ஆணையம், 'வாக்களிக்க விரும்பாதோர் விவரத்தை எப்படி போலீசிடம் க்கொடுக்கலாம்' என்று சத்தியச்சந்திரன் என்கிற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்தார்.  அதை விசாரித்த உயர் நீதிமனறம், 49 ஓ-வைப் பயன்படுத்தியவர்களை, க்யூ பிரிவு போலீசார் விசாரிக்கத் தடை விதித்தது.  தமிழகத்தில் 49-ஓ பரவலாக வெற்றி அளிக்காமல் போனதன் பின்னணி இதுதான்!
-- டி.அருள் எழிலன்.
-- ஆனந்த விகடன்.  9-10-2013. 

ப்ரதோஷ வேளை !

ப்ரதோஷ வேளையில் அவதரித்த நரசிம்மரையும் வழிபடுவது விசேஷம் என்று பலர் கூறுகிறார்கள்.  உண்மைதானா?
     பொதுவாக ப்ரதோஷ காலத்தில் பெருமாளுக்கு ஆராதனை கிடையாது.  ' நிருசிம்மம் ராகவம் விநா ' என்பது சாஸ்திரம்.  அதாவது ப்ரதோஷ வேளையில் நரசிம்மரையும், ஸ்ரீராமபிரானையும் தவிர மற்ற கோலங்களில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணுவை வணங்கக் கூடாது என்பது பொருள்.  மற்றபடி வழிபடுவதால் விசேஷம் என்றும் கூறப்படவில்லை.  வைணவ சம்பிரதாயத்தில் வழக்கிலும் இல்லை.
--  அறிவோம்!  தெளிவோம்! .  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். ஏப்ரல் 21, . 2011.

Sunday, April 20, 2014

இதுவும் ஒரு பிழைப்பா?

    சீன அரசு 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது.  எதற்கு என்று கேட்கிறீர்களா?  இணையதளங்களை கண்காணிக்க!  இணையதளங்களில் என்ன தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பதைக் கண்காணிக்க.  இவர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள்.  அதன்படி யார்
யாரைக் கட்டம் கட்டவேண்டுமோ.  கட்டும் அரசு.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்  திங்கள். அக்டோபர்7, 2013.

Saturday, April 19, 2014

காசிக்கு போவோர்!

காசிக்கு போவோர் தம்பதியராகத்தான் போக வேண்டுமா?
     தம்பதியராகப் போவதுதான் விசேஷம்.  கங்கை முதலான புண்ணீய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு.  ஒன்று மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டும்.  அல்லது மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நீராட வேண்டும்.  இருவரும் இல்லாத பட்சத்தில் பசுமாட்டின் வாலைப்பிடித்துக் கொண்டாவது நீராட வேண்டும்.  இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
-- அறிவோம்!  தெளிவோம்! .  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். ஜூன் 2, . 2011. 

Friday, April 18, 2014

இணைய வெளியிடையே...

*  சின்னதாய்ப் பரிசென்ன வேண்டுமென்றேன்... அடுக்குமாடி வீடு என்றாய்... இது உனக்கே அடுக்குமாடி...?
   arivucs@ twitter.com
*  என் பர்ஸ்ல எவ்வளவு பணமிருக்குதுன்னு துல்லியமா கணிப்பதில் என் மனைவிக்கு இரண்டாமிடம்.  முதலிடம் டிராபிக் போலீசுக்கு...!
   bommaiya @ twitter.com.
*  நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை அவருக்கே விளக்க வேண்டிய நிலை வரவே கூடாது!
   csk @ twitter.com.
*  எங்க்குத் தெரிஞ்சு ரொம்ப நளா கவர்ன்மென்ட் ஜாப் தேடிட்டு இருக்கிறதுல முக்கியமான பையன் ராகுல் காந்திதான்!
   minimeens @ twitter.com.
*  மோடி பிரதமரானால் இந்தியா பல துண்டுகளாக உடையும் : தா.பாண்டியன்.
   ' பனிமூட்டமா இருக்குதா? பங்குனி வெயிலு பல்ல இளிச்சுகிட்டு இருக்கு...'
    vaalu @ facebook.com.
-- வலைவாசி. சண்டே ஸ்பெஷல் .
-- தினமலர். 6-10-2013.  

ஏழு வாசகங்கள்

   ( சிறப்பு )
சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்.
     2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை 'புனித வெள்ளி' என்று கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகிறார்கள்.  புனித வெள்ளி அன்று கிறிஸ்துவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன ஏழு வாசகங்களைல் லுறித்து பிரசங்கிப்பது வழக்கமாக இருந்து வருகிரது.  அந்த ஏழு வாசகங்கள்ளைக் கவனிப்போம்.
1.   "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிரிக்கிறார்களே"  ( லூக்கா 23:34 )
2.   "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்"  ( லுக்கா 23:43 ).
3.   "இயேசு தம்முடைய தாயை நோக்கி:  ஸ்திரியே, அதோ, உன் மகன் என்றார்.  பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன்
       தாய் என்றார்"  ( யோவான் 19:26 - 27 ).
4.   "ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்"  ( மத்தேயு  27:46 ).
5.   "தாகமாயிருக்கிறேன்"  ( யோவான்  19:28 ).
6.   "முடிந்தது"  ( யோவான்  19: 30 ).
7.   "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்"  ( லூக்கா 23:46 ).
--சாம்.செல்லதுரை.   ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஏப்ரல் 17,2014.  

Thursday, April 17, 2014

இந்திய இசை!

  இந்திய இசை ரசிகர்களுக்கு அது நிச்சயம் அதிர்ச்சியான செய்தி!  13 வயதில் பாடத் துவங்கி 70 வருடங்களாகப் பாடிக்கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கர் இனி பாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.  " இசையுலகில் நிறைய மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.  இது வரவேற்கப்பட ஒன்று என்றாலும், என்னால் அந்த மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொள்ள முடியவில்லை.  அதனால், இனி பாடுவதை நிறுத்திக்கொள்ளப்போகிறேன் " என்று பாலீஷாகக் குட்பை சொல்லியிருக்கிறார் லதா மங்கேஷ்கர் .- மிஸ் யூ மேடம்!
--  இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 24-4-2013   


சுட்டது நெட்டளவு

  ( சிறப்பு )
     வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது.
     தந்தை தன் நெருங்கிய நண்பரை அழைத்து தான் மகனுக்காக ஒதுக்கிய அறையைக் காட்டி, அவன் எந்த துறைக்கு ஏற்றவன் என்பதைத் தான் தேர்வு செய்யப்போவதாகக் கூறினார்.
     மேஜை மீது நான்கு பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய தந்தை, "என் மகன் பணத்தை எடுத்துக் கொண்டால் வியாபாரத்துறைக்கு ஏற்றவன்.  பைபிளை எடுத்துக் கொண்டால் மத சேவைக்கு ஏற்றவன்.  மது புட்டிய எடுத்துக் கொண்டால் உதவாக்கரை ஆவான்.  துப்பாக்கியை எடுத்துக் கொண்டால் அவன் கொள்ளைக்காரனாவான்" என்றார்.
     அந்த அறைக்குள் வந்த மகன் என்ன செய்யப் போகிறான் என்பதை இருவரும் மறைவிலிருந்து ஆவலுடன் கவனித்தார்கள்.  அவர் மகன் அறைக்குள் நுழைந்து அங்கு இருக்கும் பொருட்களை நோட்டம் விட்டான்.  மதுப் புட்டியைத் திறந்து வாயில் ஊற்றிக்கொண்டான்.  பின் பணத்தை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டான்.  ஒரு கையில் பைபிளையும் இன்னொரு கையில் துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டான்.  தந்தை உற்சாகத்தில் கத்தினார், "என் மகன் மந்திரியாகப் போகிறான்".
-- குஷ்வந்த் சிங்.
-- டி.எஸ். உஷாராணி,  ரிலாக்ஸ்.
-- - 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, ஏப்ரல் 11, 2014.  

Wednesday, April 16, 2014

Polyglotism

  Polyglotism என்றால் என்ன?  ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் வல்லமைகொண்ட மனிதனை இப்படி அழைப்பார்கள்.  சரி...ஒரு மனிதனால் அதிகபட்சம் எத்தனை மொழிகள் பேச முடியும்?  ஆறு அல்லது ஏழு?  ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி டோனர் என்ற 17 வயது இளைஞர் இந்தி, ஆங்கிலம், பாரசீகம், ஹீப்ரு, ரஷ்யன், ஸ்பானிஷ் உள்ளிட்ட 23 உலக மொழிகள் பேசி அசத்துகிறார்.  ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட இவர், முதலில் ஹீப்ரு மொழியைக் கற்றிருக்கிறார்.  அந்த மொழி பேசுபவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி, அதில் சரளமாகப் பேசத் துவங்கி இருக்கிறார்.  பிறகு, அதீத ஆர்வத்தில் ஒவ்வொரு மொழியாக 23 மொழிகளைப் பேச, வாசிக்கக் கற்றுக்கொண்டு விட்டார்.  ஒரு மொழியைப் பேச கற்றுக்கொள்ள இரண்டு வாரங்கள்தான் ஆகின்றனவாம்  திமோதிக்கு. இது எப்படிச் சாத்தியம்?  " ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் புரிந்துகொண்டாலே, அதைப் பேசுவதர்கு எளிதாக இருக்கும்.  குறைந்தது ஒரு நாளைக்கு 8 முதல் 10 மொழியைச் சேர்ந்த செய்தித்தாள்களைப் படிப்பதும் உதவுகிறது !" என்கிறார். - மொய் பைன் ( ஸ்பானிஷ் மொழியில் ' வெரி குட்' )!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 24-4-2013 

Tuesday, April 15, 2014

சுட்டது நெட்டளவு.

   இறந்த பின் ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு சென்றான்.  சொர்க்கத்தின் வாசலில் ஒரு பெரிய சுவரில் பல கடிகாரங்கள் தொங்கிக்கொண்டிருந்தன .  இது
 எதற்கு என்று அங்கிருந்த காவலாளி ஒருவரிடம் கேட்டான்.
     அதற்கு அந்த காவலாளி இது ஒரு " பொய் கடிகாரம்.  அதாவது பூமியில் நீங்கள் ஒரு பொய் சொன்னால் உங்களூகுரிய கடிகாரத்திலுள்ள முள் ஒரு தடவை நகரும்.  இங்கே பாருங்கள் " என்று ஒரு கடிகாரத்தை காட்டினான்.
    " இது அன்னை தெரசாவிற்குரியது.  இதுவரை இந்த கடிகாரத்தின் முள் நகரவேயில்லை.  அதாவது அன்னை தெரசா இதுவரை போய் எதுவும் சொன்னதில்லை என்று அர்த்தம் " என்று விளக்கமலித்தான்.  இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  மேலும் இன்னுமொரு கடிகாரத்தை காட்டி, இது ஆபிரகாம் லிங்கனுடையது. இந்த கடிகாரத்தின் முள் இதுவரை இருமுறை நகர்ந்துள்ளது.  அதாவது ஆபிரகாம் லிங்கன் தம் வாழ்க்கையில் இருமுறை பொய் சொல்லியுள்ளார்" என்றும் விளக்கமளித்தான்.
     இதைக் கேட்ட அந்த மனிதனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  உடனே அந்த மனிதன், " எங்கள் ஊரிலுள்ள அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே உள்ளன, நான் பார்க்க வேண்டும் " என்று கேட்டான்.
     அதற்கு அந்த காவலாளி, " மன்னிக்கணும்... அந்த கடிகாரங்கள் அனைத்தையும் இங்கே நாங்கள் மின் விசிரியாக உபயோகித்து வருகிறோம் " என்றான்.
-- பி.ஆறுமுகநயினார்.  ரிலாக்ஸ்.
--   ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. .

Monday, April 14, 2014

என்னாச்சு ?

என்னாச்சு புத்தாயிரமாண்டு சபதங்கள்?
     இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் சர்வதேச அளவிலான கழிப்பிட வசதி தொடர்பான உச்சி மாநாடு அதிர்ச்சியான தகவலைத் தந்து, தொடங்கியிருக்கிற்து.  உலகம் முழுவதும் 205 கோடிப் பேருக்குக் கழிப்பிட வசதி இல்லை.  வயிற்றுப்போக்கு, அம்மை, மலேரியா போன்ற நோய்களால் ஆண்டுதோறும் 10 லட்சம் குழந்தைகள் இறப்பதற்குக் கழிப்பிட வசதியின்மையும் ஒரு காரணம்.
-- எத்திசையும்...  கருத்துப் பேழை.
--  ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. . 

Sunday, April 13, 2014

மரபணு அறிவியல்.

மரக்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மரபணு அறிவியல்!  ' ஓசை ' கருதரங்கில் தகவல்.
     கடைகளில் வாங்கும் பொருட்களின் பார் கோட் மூலம்,  அவற்றின் அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்வதுபோல யாராவது மரத்தை வெட்டி எடுத்துச் சென்றால் மரத்துண்டு மூலம் மரத்தின் அத்தனைத் தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.
    நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வன வளங்களை நன்றாக அறிந்து வைத்திருந்தனர்.  அதன் பன்முகத்தனமை அவர்களுக்கு பெரும் வியப்பாக இருந்தது.  அதனாலேயே இங்கிருந்து அதிகமான வனம் சார்ந்த பொருட்களை அவர்கள் ஏற்றுமதி செய்தனர்.  ஆனால், நாம் காடுகளை அணுகும் போதும், அதுகுறித்து அறியும் போதும் உணர்வுப்பூர்வமான தேடலையே தேர்வு செய்கிறோம். இது நிச்சயம் பிரச்சினைகளையே வெளிப்படுத்தும்..
    தொழினுட்பம் மூலம் சீனாவில் ஒவ்வொரு மரத்திற்கும் குறியீடு ( பார் கோட் ) வழங்கப்பட்டுள்ளது.  நாம் கடைகளில் வாங்கும் பொருட்களின் பார் கோட் மூலம், அவற்றின் அந்த மரத்துண்டை பரிசோதித்து , அது எந்த வகை மரம், எங்கிருந்து , எப்போது வெட்டப்பட்டது என்பதையும் அறியலாம்.  மரபணு அறிவியல் இதற்கு கைக்கொடுக்கிறது.
-- ஆர்.கிருபாகரன்.
-- - ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. 

முதுமை.

   ( சிறப்பு ).
     முதுமையின் பிரச்சினை தனிமை.  அது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முதுமையை அதிகரிக்கச் செய்கிறது.  முதுமையின் அடிப்படை இலக்கணங்கள் இவை.
     சென்னையில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உங்கள் பெயர், முகவரி, வயது, தொடர்பு எண், அருகில் உள்ள காவல் நிலையம் உள்ளிட்ட விவரங்களைப் பதிந்துவிட்டீர்களா? இல்லை எனில் உடனே செய்யுங்கள்.  அது மிக எளிது. பாதுகாப்பும்கூட.  காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை 044  -23452320 எங்கிர தொலைபேசி எண்ணுக்கு பேசி உங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம்.  தொலைநகல் ( ஃபேக்ஸ் ) மூலம் பதிவு செய்ய விரும்புவோர் 044 - 25615028  என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.  இதன்மூலம் அடிக்கடி உங்கள் முகவரிக்கு வந்து உங்கள் உடல் நலம், பாதுகாப்பு குறித்து விசாரித்து செல்வார்கள்.  ஏதேனும் பிரச்சினை எனில் நடவடிக்கை எடுப்பார்கள்.  எனவே, சென்னையில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் 'யாரும் இல்லையே' என்று கவலைப்படாதீர்கள்.  காவல்துறை உங்களுகு கைகொடுக்கிறது.
_  'தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஏப்ரல் 13,2014.  

Saturday, April 12, 2014

இரண்டும் ஒன்றல்ல.

 ஒரே மாதிரி இருக்கிறவங்களை இரட்டையர்கள்னு சொல்வோம்.  விலங்குகளிலும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டுள்ளவை உண்டு.  ஆனால், அவை இரட்டையர் வகையறா இல்லை.  இரண்டுக்கும் பேர், குணம், வாழிடம், பழக்கவழக்கம்னு நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
சீலும் கடல் சிங்கமும்.
     சீல், கடல் சிங்கம் இரண்டையும் பார்க்கறவங்க, ரெண்டும் ஒரே விலங்குகள்தான்னு நினைக்கலாம்.  ஆனா, உத்துப் பார்த்தா சின்னச்  சின்ன வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கலாம்.
1.  கடல் சிங்கத்துக்குக் காது மடல்கள் உண்டு.  சீலுக்கு காது துளைகள் மட்டுமே உண்டு.
2.  கடல் சிங்கத்துக்கு நீளமான முன் துடுப்புகள் இருக்கும்.  சீலுடைய முன் தடுப்புகள் குட்டையாக, மயிரிழைகளுடன் இருக்கும்.
3.  கடல் சிங்கம் நிலத்துல துடுப்பின் மூலமா நடக்கும்.  சீல் தன்னோட துடுப்பைப் பயன்படுத்தாம உடலைத் தரையில் தேய்த்து நடக்கும்.
4.  கடல் சிங்கம் நீந்தும்போது தன்னோட முன் துடுப்புகளை பறவையோட றெக்கை மாதிரி விரித்து நீந்தும்.  சீல், முன் தடுப்புகளைவிட பின் தடுப்புகளைப்  பயன்படுத்தி நீந்தும்.
-- பிருந்தா.  மாயாபஜார்.  குழந்தைகளின் குதூகல உலகம்.
-- ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. 

பங்குனி உத்திரம்.

     ( சிறப்பு )
     இன்று ( 12- 4- 2014 )  பங்குனி உத்திரம்.  பங்குனி உத்திரத்தன்று 1. முருகன் தெய்வானை,  2. மீனாட்சி சுந்தரேஸ்வரர்,  3. ஸ்ரீராமர் சீதை,  4. ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார்,  5. சாவித்திரி சத்யவான்,  6. மயிலை கற்பகாம்பாள் கபாலீவரர் போன்ற தெய்வ திருமணங்கள் நடந்தது.  அர்ஜுனன் பிறந்த நாள்.  ஸ்ரீதர்ம சாஸ்தா அவதரித்த நாள், ஹாஹா, ஹீஹீ என்ற இரு கந்தர்வர்கள் ஸ்ரீசாஸ்தாவிற்கு கட்டியம் கூறும்போது, "உத்தர நக்ஷத்ர ஜாதன், சித்ரமோஹன ரூபன், அகஸ்த்ய முனிபூஜிதன், ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரனம் ஐயப்பா" என்று கூறியதாக உள்ளது.
    சிவபெருமான் மன்மதனை தனது நெற்றிக் கண்ணினால் எரித்து விட்டார்.  மன்மதனின் மனைவியான ரதிதேவி இறந்த மன்மதனை உயிர்ப்பிக்குமாறு வேண்டினாள்.  இப்படி இறந்த மன்மதனை பார்வதிதேவி ஸ்ரீசிவனின் அனுமதியுடன் உயிர் எழச் செய்த நாள் பங்குனி உத்திரம்.  பரம்பொருள் ஒன்றுதான், இந்த பரம்பொருள் விநாயகர், சிவன், விஷ்ணு, மாரியம்மன், ஐயனார் போன்ற பல உருவங்களாகத் தோன்றி நமக்கு நன்மை செய்கின்றன.
    எந்த தெய்வத்தை வணங்கினாலும் பரம்பொருள் அந்த தெய்வத்தின் வடிவில் வந்து நமக்கு அருள்புரிவார்.  இதனை கீதையில், "யோ யோ யாம் யாம் தனும், பக்த ச்ரத்தயா அர்ச்சிலும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாமி அஹம்" என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.  இதன் மூலம் எவர் எவர் எனது சரீர பூதமான எந்தெந்த தேவதையை சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அவரவருடைய தேவதர்ச்சனா விஷயமான அந்த சிரமத்தையே நான் நிலை நிறுத்துகிறேன்.
-- எஸ்.குஞ்சிதபாதம், திருச்சி -1.
-- தினமலர்.  12-4-2014.   

Friday, April 11, 2014

நட்சத்திரம் நிவேதனம்.

பரணி  --  அப்பம்.
கார்த்திகை  --  வடை.
ரோகிணி  --  ஜிலேபி.
மிருகசீரிஷம்  --  அல்வா.
திருவாதிரை  --  பொரி.
புனர்பூசம்  --  பாயசம்.
பூசம்  --  பாயசம்.
ஆயில்யம்  --  லட்டு.
மகம்  --  அதிரசம் .
பூரம்  --  தயிர்க்கட்டி.
உத்திரம்  --  இலை வடகம்.
அஸ்தம்  --  தேங்கூட்டு.
சித்திரை  --  பழரசம்.
சுவாதி  --  தயிரேடு.
விசாகம்  --  வெண்ணை.
அனுஷம்  --  பாஸந்தி.
கேட்டை  --  திரட்டுப்பால்.
மூலம்  --  மிளகு வடை .
பூராடம்  --  பேரீச்சம் பழம்.
உத்திராடம்  --  கொழுக்கடை.
திருவோணம்  --  இட்லி.
அவிட்டம்  --  தோசை.
சதயம்  --  அவியல்.
பூரட்டாதி  --  வறுவல்.
உத்திரட்டாதி  --  அவல்.
ரேவதி  --  கருப்பஞ்சாறு.
--  தினமலர். பக்திமலர். அக்டோபர் 3,2013.  

Thursday, April 10, 2014

சூப்பர் 6.

*  ஆப்பிளில் உள்ள பெக்டின் ( PECTIN ) என்னும் வேதிப்பொருள் குடல் புண்னைக் குணமாக்கும் சக்தி கொண்டது.
*  சிலந்திகளில் மிகப் பெரியது டாரன்டுலா (  TARANTULA ).  இவை சரியாக 10 சென்டிமீட்டர் இருக்கும்!
*  வானில் பறந்து கொண்டிருக்கும்போதே போர் விமானங்களில் பெட்ரோல் நிரப்புவார்கள்.
*  கனடாவைச் சேர்ந்த ஜேம்ஸ் நைஸ்மித் (  JAMES NAISMITH )  என்ற விளையாட்டு ஆசிரியர் கூடைப் பந்தாட்டத்தை உருவாக்கினார் !
*  எர்னஸ்ட் வின்சென்ட்  " காட்ஸ்பை ' என்ற 50,000 வார்த்தைகள் கொண்ட ஆங்கில நாவலை எழுதினர்.  அதில் ' E ' என்ற எழுத்து ஒரே ஓர் இடத்தில்கூட
   பயன்படுத்தப்படவில்லை !
*  கடுமையான உறைபனி உள்ள இடங்களிலும் எரிமலைகள் இருக்கின்றன.  இவற்ரை டுயா ( DUA ) என்பார்கள் !
-- செ.நிபாஸத் ஃபாத்திமா, கீழக்கரை.
--   சுட்டி விகடன்.30 -09- 2013.
-- இதழ் உதவி : இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.  

Wednesday, April 9, 2014

குபேரன் !

 1,00,00, 000,000,00,00,000  இந்த எண்ணுக்கு என்ன பெயர் தெரியுமா?
 தமிழில் சொல்ல வேண்டுமானால் ' சதாமரை ' , வட மொழியில்  ' பத்மம் '.  அளவிட முடியாத பேரெண்களாக மூன்று எண்களைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர். ' தாமரை,  வெள்ளம்,  ஆம்பல் ' எனவரும் மாபெரும் தானையர் என்பது தொல்காப்பியம்.  குபேரனிடமுள்ள செல்வத்தை ' தாமரை ' மூலம் அளக்க முடியும்.  இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான செல்வங்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறான் குபேரன்.  அவனுக்கு அவற்றை வழங்கியவர் எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமான்.
குபேரனின் பயோடேட்டா :
     குபேரன் திசை  --  வடக்கு. (  வடக்கு திசையில்தான் குபேர மலை இருக்கிறது.  இமயமலையில் ஒரு பகுதியில் இருக்கும் குபேர பட்டணத்தின் பெயர் அழகாபுரி ).
மனைவி  -  சித்ரரேகை.
வாகனம்  -  குதிரை,  கிளி,  நரன்.
ஆயுதம்  -  வாள் ( கட்கம் ).
விமானம்  -  புஷ்பக விமானம்.
புதல்வன்  -  நளகூபன்,  மணிக்ரீவன்.
ஒற்றைக்கண் கொண்டவன்.  வேதங்களால் போற்றப்பட்டவன்.  பிரம்மதேவனின் நிழலுருவில் இருந்து அவதரித்தவர்கள், தேவ கணத்தைச் சேர்ந்தவர்கள் கின்னர்கள்,  இவர்கள் மனித உடலும், குதிரை முகமும் உடையவர்கள்.
-- புலவர். வெ.மகாதேவன்.
-- தினமலர். பக்திமலர். அக்டோபர்  31, 2013.  

சுவை உணர்ந்து சாப்பிடுவோம்.

  ( சிறப்பு )
     என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.  சாப்பிடுவதற்கும் சில இலக்கணங்கள் இருக்கின்றன.  உணவை முதலில் மனத்தால் நுகர்ந்து ஒவ்வொரு கவளத்தையும் அனுபவித்துச் சாப்பிட வேண்டும்.
     நிதானமாக மென்று சாப்பிடும்போது உணவு உமிழ்நீரில் கலந்து எளிதாகச் செரிமானம் ஆகும்.  இல்லாவிட்டால் சாப்பிடும்போதே தாகம் ஏற்படும்.  செரிமானம் ஆக நீண்ட நேரம் பிடிக்கும்.  அதனால் பசியின்மை ஏற்படும்.
     சாப்பிடுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக நோறுக்குத் தின்பண்டம், பானங்கள் எதுவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.  தண்ணீர்கூடத் தவிர்க்கப்பட வேண்டும்.
     உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்குப் பழங்கள், நொறுக்குத் தின்பண்டம், பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது.  தண்ணீரும் குடிக்கக் கூடாது.
    உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும்.  காலையிலும் இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட இட்லி போன்ற மென்மையான உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியமானது.
    காலையில் சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்கள் அதற்குச் சேர்த்து மதியம் சாப்பிடுவார்கள்.  அது உடலுக்கு நல்லதல்ல.  காலை உணவைத் தவிர்ப்பதால் பலவிதமான  வயிற்றுப் பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது.
    சாப்பிடும் இடை வேளையில் தண்ணீர் குடிக்கக் கூடாது எனச் சொல்வார்கள்.  ஆனால் சாப்பிடும்போது அளவாகத் தண்ணீர் குடிக்கலாம்.
--சுந்தர லட்சுமி.  உடல் நலம்.   வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஏப்ரல் 5, 2014. 

Tuesday, April 8, 2014

டிப்ஸ்...டிப்ஸ்...

   டி.வி,  ஏ.சி. போன்றவற்றுக்கு உபயோகிக்கும் ரிமோட்,  கை பட்டுப்பட்டு சீக்கிரம் அழுக்காகிவிடும்.  வினிகரில் காட்டன் பட்ஸை சிறிது நனைத்து,  மெதுவாக ரிமோட்டை துடைத்தால் ... பளிச் பளீச்தான் !  சுவிட்சையும்கூட இதே முறையில் துடைக்கலாம்... மின்சாரத்தை துண்டித்துவிட்டு !
*      பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, இஞ்சி போன்ற பொருட்களை,  ஈரமில்லாத பிரெட் பாக்கெட் கவர்களில் வைத்து,  உச்சியில் முடிச்சு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால்... 10 நாட்கள் வரை ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
*     உங்கள் கைக்குட்டை , பவுடர் தடவாமலே எப்போதும் வாசனையாக இருக்க வேண்டுமா?  குளியல் சோப்பை கவரில் இருந்து எடுத்த பிறகு,    அந்தக் கவரின் உள்ளே உங்கள் கைக்குட்டைகளை மடித்து வையுங்கள்.  உபயோகிக்கும்போது வாசனையாக இருக்கும்.  உங்கள் கைக்குட்டை உறையில் உள்ள வாசனை போகும் வரை அதைப் பயன்படுத்தலாம்.
*    வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை நறுக்கிய பிறகு கறுக்காமல் இருக்க, மோரில் போடுவது வழக்கம்.  மோர் கிடைக்காவிட்டால், எலுமிச்சை சாறு பிழிந்த தண்ணீரில் போடுங்கள்.  அப்போதும் நிறம் கறுக்காமல் இருக்கும்.
*    சப்பாத்திக்கு மாவு பிசையும்போது,  மாவின் மீது வெந்தீர் அல்லது சூடான பாலைப் பரவலாக ஊற்றி,  அப்படியே ஐந்து நிமிடங்கள் வைத்து விடுங்கள்.
அதன் பிறகு மாவை முள்கரண்டியால் கிளறி, பின்பு பிசைந்து சப்பாத்தி சுட்டால்... மிகவும் மிருதுவாக இருக்கும்.
-- அவள் விகடன். 30-08-2011. 

குபேரன் !

 1,00,00, 000,000,00,00,000  இந்த எண்ணுக்கு என்ன பெயர் தெரியுமா?
 தமிழில் சொல்ல வேண்டுமானால் ' சதாமரை ' , வட மொழியில்  ' பத்மம் '.  அளவிட முடியாத பேரெண்களாக மூன்று எண்களைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர். ' தாமரை,  வெள்ளம்,  ஆம்பல் ' எனவரும் மாபெரும் தானையர் என்பது தொல்காப்பியம்.  குபேரனிடமுள்ள செல்வத்தை ' தாமரை ' மூலம் அளக்க முடியும்.  இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான செல்வங்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறான் குபேரன்.  அவனுக்கு அவற்றை வழங்கியவர் எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமான்.
குபேரனின் பயோடேட்டா :
     குபேரன் திசை  --  வடக்கு. (  வடக்கு திசையில்தான் குபேர மலை இருக்கிறது.  இமயமலையில் ஒரு பகுதியில் இருக்கும் குபேர பட்டணத்தின் பெயர் அழகாபுரி ).
மனைவி  -  சித்ரரேகை.
வாகனம்  -  குதிரை,  கிளி,  நரன்.
ஆயுதம்  -  வாள் ( கட்கம் ).
விமானம்  -  புஷ்பக விமானம்.
புதல்வன்  -  நளகூபன்,  மணிக்ரீவன்.
ஒற்றைக்கண் கொண்டவன்.  வேதங்களால் போற்றப்பட்டவன்.  பிரம்மதேவனின் நிழலுருவில் இருந்து அவதரித்தவர்கள், தேவ கணத்தைச் சேர்ந்தவர்கள் கின்னர்கள்,  இவர்கள் மனித உடலும், குதிரை முகமும் உடையவர்கள்.
-- புலவர். வெ.மகாதேவன்.
-- தினமலர். பக்திமலர். அக்டோபர்  31, 2013.  

கடவுள் பாதி... மிருகம் பாதி.

" கடவுள் பாதி... மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான மனிதன் ?"
     " லியானார்டோ டாவின்ஸி தன்னுடைய ' லாஸ்ட் சப்பர் ' ஓவியத்தில்,  யேசுவின் படம் வரைவதற்கு மாடல் தேடிக்கொண்டிருந்தார்.  வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு சர்ச்சில் வசீகரமும், தேஜஸும் நிறைந்த அழகுடன் கூடிய பீட்ரோ பெண்டினம்லி என்ற இளைஞரைப் பார்த்தார்.  மிகவும் அகமகிழ்ந்து அவரை மாதிரியாகவைத்து யேசுவை வரைந்து முடித்தார்.  ஆனால், யேசு உள்ளிட்ட அனைத்துச் சீடர்களையும் வரைந்து முடித்த பிறகு,  அந்த ஓவியத்தில் இடம் பெறவேண்டிய பாவங்களால் இறுகிப்போயிருக்கும் முகத்துடன் கூடிய யூதாஸ் பாத்திரத்துக்கு உரிய முகத்தை அதனால் ஓவியம் முழுமை அடையாமலேயே இருந்தது.  வெகுநாட்களுக்குப் பிறகு,  ரோம் நகரில் டாவின்ஸி எதிர்பார்த்த அதே தோற்றத்தோடு ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தார்.  உடனே அவனுக்குப் பணம் கொடுத்து அழைத்துவந்து அமர்த்தி,  ஓவியத்தை வரையத் தொடங்கினார்.  அப்போது அவனிடம் ' உன் பெயர் என்ன ? ' என்று கேட்டார் டாவின்ஸி.
' நான் பீட்ரோ பெண்டினம்லி,  பல வருடங்களுக்கு முன்னால் உங்களின் ஓர் ஓவியத்துக்கு யேசுவாக நாந்தான் மாடலாக இருந்தேன் ' என்றான் அவன்.  ஒவ்வொரு மனிதனுமே கடவுளும் மிடுகமும் கலந்து செய்த கலவை என்பதை உணர்கிறீர்கலா?"
-- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.
-- .( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 24 .7.2013.   

Monday, April 7, 2014

கால்வாய்...கால்வாய்...

  நீர்வழித் தடமான,  ' கால்வாய் ' என்பது  ஆங்கிலத்தில்  CANAL,  மற்றும்  CHANNEL  என்ற வார்த்தைகளால்  அழைக்கப்படுகின்றன.  இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா ?  CHANNEL என்பது இயற்கையாக உருவான கால்வாயைக் குறிக்கும்.  உதாரணத்திற்கு, ஆங்கிலக் கால்வாய் மற்றும் மொசாம்பிக் கால்வாய்.( Mozambique Channel ).  CANAL  என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாயைக் குறிக்கும்.  உதாரணத்திற்கு, பனாமா கால்வாய் ( Banama Canal ).
-- க.ஓவியா, சாரம், புதுச்சேரி.
பரபரப்பான விமான நிலையம் !
      உலகில்,  மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில்,  சிக்காகோவின் ' ஓ 'ஹரே பன்னாட்டு விமான நிலையம்  ( O' Hare International  Airport ) முக்கியமானது.  இங்கே, ஒவ்வொரு 42 நொடிகளுக்கும் விமானங்கள் பறந்து செல்வதும்,  இறங்கி வருவதுமாக இருக்கின்றன.  ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2,000 விமானங்கள்.  2012 -ம் ஆண்டு கணக்கின்படி,  ஆறு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கே வந்து சென்றுள்ளனார்கள்.
-- ஆ.சு.ஜீஜீ, சென்னை - 11.
-- சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்.  சுட்டி விகடன்.30 -09- 2013.
--  இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.  

'நெட்'டுக்குத்து

   ( சிறப்பு )
செய்தி :  ஆகாய வழியாக வருபவருக்கு மத்திய அரசின் சாதனைகள் எப்படி தெரியும்?  --  ப,சிதம்பரம்.
குத்து :    நீங்க டெல்லியில் இருந்து வரும்போது எப்படி நடைபயிற்சியா சார்?  --  படிக்காதவன்.

செய்தி :  கட்சியில் இருந்து மட்டும்தான் நீக்க முடியும்.  மகன் இல்லையென நீக்க முடியுமா?  --  அழகிரி.
குத்து :    இவரை யாராவது கடத்தி எலக்சன் முடியற வரை ஒளிச்சு வைங்கப்பா.  --  சி.பி.செந்தில்குமார்.

செய்தி :  கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறென்.  --  கருணாநிதி.
குத்து :    தலைவா ! எப்போ பாரூ உங்க குடும்பத்தையே பார்த்துட்டிருந்தா எப்படி?  --   சி.பி.செந்தில்குமார்.

செய்தி :  அன்புமணி ராமதாஸ், விஜய்காந்தை விருந்துக்கு அழைத்தார்.
குத்து :    தேர்தல் முடிஞ்சி சண்டை போடும்போது பேச டயலாக் ரெடி 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துவிட்டார்'.  --  ரோபல்
                காந்த்.

செய்தி :  காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.  --  மோடி.
குத்து :    சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி, மேனகாகாந்தி எல்லாம் பாதுகாப்பாத்தானே இருக்காங்க?  --    சி.பி.செந்தில்குமார்.

செய்தி :  அம்மாவிடம் எதை வேண்டுமானாலும் பெறலாம்.  --  நாஞ்சில் சம்பத்'
குத்து :    அண்ணனோட அடுத்த டார்கெட் ஹெலிகாப்ற்ற் போல!  நீ, அடிச்சு ஆடுண்ணே.  --  ட்விட்டர் எம்.ஜி.ஆர்
--- 'தி இந்து' நாளிதழ்களிலில் இருந்து... 

Sunday, April 6, 2014

பட் பட் பட்டாசு !

 சீனர்கள்தான் முதன்முதலில் வெடி மருந்தையும் பட்டாசுகளையும் கண்டுபிடித்தார்கள்.  கி.பி.960 - 1279 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவை ஆட்சி செய்த லிங் வம்ச காலத்தில்தான் காகிதக் குப்பையில் வெடிமருந்தைத் திணித்து வெடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    பட்டாசுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு ' பைரோடெக்னிக்ஸ் ' என்று பெயர்.  டபாஸ் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்துதான் பட்டாசு என்ற பெயர் தோன்றியது.  டபாஸ் என்றால் உரத்த ஒலி என்று அர்த்தம்.  இதேபோல் ஒலி என்ற பொருள் தரும் மஹதாப் என்ற சொல்லில் இருந்தே மத்தாப்பு என்ற பெயர் வந்தது.
    பட்டாசுகள் பல வண்னங்களில் ஜொலிக்கவும் காரணங்கள் உண்டு.  பட்டாசு மருந்துக் கலவையில்,  பேரியம் கலக்கப்பட்டால் பச்சை நிறமாக எரியும்.  ஸ்டான்சியம் கலந்தால் சிவப்பு நிறமாக எரியும்.  சோடியம் கலந்தால் மஞ்சள் நிறமாக எரியும்.
-- டி.கார்த்திக். மாயாபஜார்.  குழந்தைகளின் குதூகல உலகம். சிறப்புப் பகுதி.
-- ' தி இந்து ' நாளிதழ்.  புதன், அக்டோபர் 30, 2013.  

Saturday, April 5, 2014

தமாஷ்...தமாஷ்...

*  ராமு :  " எனக்குச் சின்ன வயசுலேயே காது குத்திட்டாங்ககடா ! "
   சோமு : " எந்த இயர்லடா ? ! "
   ராமு :  " ரெண்டு இயர்லயும்தான் ! "
* ஆசிரியர் :  " முகலாயர் ஆட்சி எதிலிருந்து எது வரை இருந்துச்சு சொலுங்க பார்க்கலம் ! "
   மாணவன் : " நான்காம்  பக்கத்தில் இருந்து எட்டாம் பக்கம் வரைக்கும் சார் ! "
*  ராமு : " பாட்டி பேச்சைக் கேட்டதால் பரீட்சை ஹாலில் மாட்டிகிட்டியா ? ! "
   சோமு : " ஆமாம், வீட்ல இருந்து கிளம்பும்போது,  ' பார்த்து எழுதுடா'னு பாட்டிதான் சொல்லிச்சு ! "
* ரமேஷ் : " எங்க ஸ்கூல்ல சுற்றுலாக் கூட்டிட்டுப்போறாங்க பாட்டி !"
  பாட்டி : " அங்கே இங்கே வெளியில சுத்தி அலையாம, ஒழுங்கா ஒரே இடத்தில் உட்கார்ந்துப் பார்த்துட்டு வா !"
--    சுட்டி விகடன். 30-04-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.   

இயற்கையின் அருட்கொடை

  ( சிறப்பு )
     கோடை காலம் தொடங்கிவிட்டது.  வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கோடே இருக்கிறது.  வெயிலுக்கு ஏற்ப நம் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  அதற்கு இயற்கை பலவிதமான அற்புத்தங்களை நமக்கு வழங்கியிருக்கிறது.  அவற்றுள் முக்கியமானது இளநீர்.  இது தென்னையின் அருட்கொடை.  இளநீர் குளுமையான தித்திப்பான பானம் ஆகும்.  இதில் சோடியம், கால்ஷியம், குளுக்கோஸ், புரதம், பொட்டாஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.  நூறு கிராம் இளநீரில் 17.4 சதவீதம் உள்ளது.
இளநீரின் நன்மைகள்:
     இளநீர் தாகத்தைப் போக்கிப் புத்துணர்ச்சியை அளிக்கும் குளுமையான பானம்.  இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.  பசியைத் தூண்டும்.  பித்தவாதத்தைக் குணப்படுத்தும்.  அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும்.  ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன.  இதன் மூலம் இளநீர் உடல்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும்.  இளநீர்குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.  இளநீர் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை கொண்ட பானமாகும்.  அதனால் காலரா நோயாளிகளுக்கு இது ஏற்ற பானம்.  ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரி செய்கிறது.  சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது.  சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது.  சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.  உடல் எடையைக் குறைக்க ஏற்ற பானம்.  மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
-- குமார்.  வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஏப்ரல் 5, 2014. 

Friday, April 4, 2014

ஐ.எஸ்.ஐ.

  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழ்தான் ஐ.எஸ்.ஐ. என்பது.  இப்போது இந்திய தர நிர்ணயக் கழகத்தின் பெயர்
' Bureau of Indian Standards' ( BIS ).
     இந்த அமைப்பின் முந்தைய பெயர் ' Indian Standards Institute ' - அதாவது சுருக்கமாக ISI  ( ஐ.எஸ்.ஐ. ).  இந்த அமைப்பு குறிப்பிடும் தரத்தை ஒரு பொருள் பெற்றிருந்தால்தான் அதன் மீது ஐஎஸ்ஐ முத்திரை பதிக்கப்படும்.
      சில வகைப் பொருள்களுக்கு ஐஎஸ்ஐ முத்திரை கட்டாயம்.  முக்கியமாக சுவிட்ச், மின்சார மோட்டார், மின்சாதனப் பொருட்களுக்கு ஐஎஸ்ஐ முத்திரை இருந்தாக வேண்டும்.  சமையல் வாயு சிலிண்டர்கள், அவற்றின் வால்வுகள், வாகன டயர்கள் போன்றவையும் ஐஎஸ்ஐ. தரம் கொண்டவையாக இருக்க வேண்டும்.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை.
--   தினமலர். சிறுவர்மலர். அக்டோபர் 25, 2013.  

Thursday, April 3, 2014

யுர்நோ ரூபிக்.

   1974 ம் ஆண்டு ஹங்கேரி நாட்டினைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் யுர்நோ ரூபிக்  என்பவரால், உலகப் புகழ் பெற்ற ' ரூபிக் ' எனும் பொழுதுபோக்கு விளையாட்டு கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
    உலக மக்களை எர்த்துவிட்ட ரூபிக் பற்றிய சுவையான தகவல்கள் :
    பல்கலைக்கழகத்தில் முப்பரிமாண கற்பித்தல் தேவைக்கு வடிவமைக்கப்பட்ட மாதிரி காட்சிபொருள்தான் ரூபிக்.
    ரூபிக் கட்டையானது, 9 சிறு சதுரங்களைக் கொண்ட, 6 வித்தியாசமான வர்ணங்களினாலான முப்பரிமாண சதுர குற்றியாகும்.
    ஆரம்பத்தில் ' மஜிக் கியூப் ' என அழைக்கப்பட்ட போதிலும், 1980ம் ஆண்டிலிருந்து ' ரூபிக்ஸ் கியூப் ' ( Rebik's Cube )  எனும் பெயர் மாற்றம் பெற்றது..
    1982ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அகராதியில் RUBIK எனும் சொல் முதன் முதலாக சேர்க்கப்பட்டது.
    ஹங்கேரிய நாட்டில் 1982ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மின்தய் 22.95 வினாடியில் ரூபிக் தீர்வு கண்டதன் மூலம் முதலாவது உலக சாதனை பதிவு செய்தார்.
-- தினமலர். சிறுவர்மலர். அக்டோபர் 25, 2013.  

எம்.பி.க்கு சலுகைகள்.?

   ( சிறப்பு )
     உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன.  இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுறது.  இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.
     மக்களவை உறுப்பினருக்கு மாதச்சம்பளம் ரூ.16,000.  மாதத் தொகுதிப்படி ரூ.22,000.  மாத அலுவலகப்படி ரூ.4,000.  மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000.   உதவியாளர் ஊதியம் ரூ.14,000.  ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000. இது மட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும்,4,000 கிலோ.லிட்டர் தண்ணீரும், ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர் நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இண்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வடகை மற்றும் இணைப்புக்கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.
     இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகின்றது.  தொகுதியிலிருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.  முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், ஷோபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன.  ஆனால், இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி. நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை.
-- திண்டுக்கல்,  ஆம் ஆத்மி வேட்பாளர். எஸ்.இளஞ்செழியன்.
-- 'தி இந்து' நாளிதழ், செவ்வாய், ஏப்ரல் 1,2014. 

Wednesday, April 2, 2014

ஃப்ரீசர் !

  " எல்லா குளிசாதனப் பெட்டியிலும் மேல் பகுதியில்தான் ஃப்ரீசர் இருக்கிறது.  அதற்கான காரணம் என்ன? "
     "  மிகவும் எளிமையான காரணம்தான்.  குளிர்ந்த காற்று எப்போது கீழ் நோக்கிச் செல்லும் தன்மைகொண்டது.  எனவே,  குளிர்சாதனப் பெட்டியில் காற்றைக் குளிர்விக்கும் குழாய்ச் சுருளை மேல் பகுதியில் வைத்து, அதற்கு அடுத்ததாக ஃப்ரீசரை வைக்கிறார்கள்.  இதனால், குளிர்ந்த காற்று முதலில் ஃப்ரீசர் பகுதிக்கும் பிறகு, கீழ் நோக்கிச் சென்று மற்ற இடங்களிலும் பரவும்."
-- மை டியர் ஜீபா !   ஹாசிப்கான் .  சுட்டி விகடன். 30-04-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.      

Tuesday, April 1, 2014

' ஈஸி ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் "

   பள்ளிகளில் இருந்து திரும்பும் குழந்தைகள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிய,  புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார், சூரப்பேட்டை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் அர்ஜுன்.
     இவரது கண்டுபிடிப்பு, அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. என்ற கல்வி நிறுவனம் நடத்திய சர்வதேசப் போட்டியில் (  MIT App Contest ) முதல் பரிசை வென்று இருக்கிறது. " பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வீட்டுக்கு வர தாமதமானால், இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்,  பேருந்து இன்னும் எவ்வளவு மணி நேரத்தில் வந்தடையும் என்பது போன்ற விஷயங்களை அறியலாம் " என்கிறார் அர்ஜுன்.
     இந்தப் பஸ் லொக்கேட்டரை ( Ex School Bus Locator ) வடிவமைக்க ' கூகுள் ஆப்ஸ்'களில் ஒன்றான ' கூகுள் டிஸ்டன்ஸ் மேடன் க்யூ,ஆர் கோடு, விஷுவல் பேஸிக், ஜி.பி.ஆர்.எஸ்.' ஆகியவற்றைப் பயன்படுத்தினேன்.  பள்ளிப் பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் ஐ.டி. கார்டில் க்யூ,ஆர். கோடு மூலம் அவர்களது தகவல்களைச் சேமித்துவைக்க வேண்டும்.  பேருந்து நடத்துனரிடம் ஆண்ட்ராய்ட் போன் இருக்க வேண்டும்.  பேருந்தில் மாணவர்கள் வீட்டுக்கு வரும்போது, அவர்களது க்யூ.,ஆர். கோடு அட்டையை நடத்துனர் ஸ்கேன் செய்வார்.  இது லாக் இன் ஆகும்.  பஸ் கிளம்பிய பிறகு,  பெற்றோர்கள் தங்களது போனில் இருந்து  WMC ( Where is My Child  என்பதன் சுருக்கம் ) என்று டைப் செய்து நடத்துனரின் போனுக்கு அனுப்பினால், அவரது மொபைலில் இருந்து தானியங்கி முறையில் அந்த மாணவர் எங்கே இருக்கிறார், இன்னும் எவ்வளவு நேரத்தில் இறங்கும் இடத்துக்கு வந்துசேருவார் என்பது போன்ற தகவல்களை அனுப்பிவிடும்.  பெற்றோரிடம் ஆண்ட்ராய்ட் போன் இருந்தால், மேலே சொன்ன தகவல்களுடன் பேருந்து இருக்கும் இடத்தின் வரைபடமும் கிடைக்கும். என்கிறார் அர்ஜுன்.
-- கே.தீபிகா..  சுட்டி விகடன். 30-04-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால். 

நாகூர் ஆண்டவர் தர்கா.

  ( சிறப்பு )  
     நாகப்பட்டினம் நகரத்தை ஒட்டி அமைந்திருக்கும் நாகூர் நகரில் உள்ள இந்த நாகூர் ஆண்டவர் தர்கா இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாது சர்வ மதத்தினருக்குமான ஒரு பிரார்த்தனை தலம் என்றே கூறலாம்.
     வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வரும் கிறிஸ்தவர்களுக்கும், இப்பகுதியிலுள்ள பிற கோயில்களுக்கு வரும் இந்துக்களும் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு வந்து வணங்காமல் செல்வதில்லை.  வருகிறவர்களின் வாட்டங்களைப் போக்கி நன்மை பயக்கிறார் இங்கு அடங்கியிருக்கும் நாகூர் ஆண்டவர்.
நாகூர் ஆண்டவர் என்பவர் யார்?
      உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு அருகில் உள்ள மாணிக்கப்பூர் என்ற ஊரில் சையது ஹசன் குத்தாஸ் - பாத்திமா ஆகியோரின் மகனாக 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தவராகக் கருதப்படும் ஷாகுல் ஹமீது ஒலியுல்லா என்பவர் தான் தற்போது நாகூர் ஆண்டவராக வழிபடப்படுகிறார்.  வாலிப பருவத்தில் மாணிக்காப்பூரிலிருந்து குவாலியர் சென்று முகம்மது ஹைஸிடம் ஞானதீட்சை பெற்ற ஷாகுல் ஹமீது ஒலியுல்லா பிறகு லாகூர், அரேபியா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று இறை ஒளி பெற்றார்.
      பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று இறைப்பிரசங்கம் செய்து தனது இறுதி நாட்களில் தஞ்சை வழியாக நாகூர் வந்தடைந்தவர் பின்னர் இங்கேயே தங்கி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி 1558-ம் ஆண்டில் மறைந்தார்.  அதன்பிறகு 1559-ம் ஆண்டில் அவர் நினைவாக முதல் கந்தூரி விழா கொண்டாடப்பட்டதாக தர்காவின் வரலாறு கூறுகிறது.
சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்படும் கொடி.
     தர்காவில் போர்த்தப்படும் சால்வை மற்றும் மலர்போர்வை பழநியில் உள்ள ஒரு இந்துகுடும்பத்தினரால் கொண்டு வரப்படுவது என்பதிலிருந்தே மதங்களைக் கடந்த மகோன்னதமான இடம் நாகூர் ஆண்டவர் தர்கா என்பதை உணரமுடியும்.
     பாதுஷா நாயகம் மினாராவில் ஏற்றப்படும் கொடி ஆண்டுதோறும் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக கொடியை யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.
    நாகூர் தர்காவின் 5 மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து பெரிய ரதம், சிறிய ரதம், செட்டிப் பல்லக்கு, கப்பல் போன்ற 2 வாகனம் ஆகியவற்றில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு எடுத்துச் செல்லப்படும்.
கந்தூரி விழா...
     நாகூர் ஆண்டவர் தர்காவின் வருடாந்திர பெரிய கந்தூரி விழா ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.  கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வைபவம் 11-ம் தேதி அதிகாலை 4-30 மணிக்கு, சந்தனம் பூசும் வைபவமும், கடற்கரைக்கு பீர் ஏகுதலும் நடைபெறும்.  14-ம் தேதி கொடியிறங்குதலுடன் கந்தூரி நிறைவு பெறுகிறது.
-- - 'தி இந்து' நாளிதழ்., திங்கள், மார்ச் 31,2014.