Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts
Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts

Friday, August 29, 2008

கண்ணகி !

சிலப்பதிகார கதையை இசுலாமியக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், ஜ்னாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் அழகாக , இரண்டு வரியில் கூறுகின்றார்:
"பால் நகையாள், வெண்முத்துப் பல் நகையாள், கண்ணகியாள் கால் நகையால் வாய் நகைபோய்க், கழுத்து நகை இழந்த கதை ".
விளக்கம்:பால் நகையாள்--பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்கமாட்டாள்;
வெண்முத்துப் பல் நகையாள்--முத்துப் போன்ற பற்களை உடையவள்,
கால் நகையாள்-- கால் சிலம்பினால்;
வாய் நகை போய்-- புன் சிரிப்பு மறைந்து;
கழுத்து நகை-- தாலி.

Tuesday, July 1, 2008

தங்கம் ,சிலப்பதிகாரம் !

தெய்வீகப் பெருமையும், மந்திரசக்தியும், மருத்துவ வீர்யமும் பெற்றுள்ள தங்கத்தைப் பற்றி ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான்சிலப்பதிகாரம் போற்றியுள்ளது. தற்காலத்தில் தங்கத்தின் தரத்தை 'காரட்' என்று நிர்ணயிப்பது போல் சங்க காலத்தில் தங்கத்தை 'ஆடகம்'(பத்தரை மாற்றுத் தங்கம்) 'கிளிச்சிறை' (கொங்கு நாட்டுத் தங்கம், ) 'சம்பூநதம்'(ஹரிதம்), 'அபரஞ்சி' (தூய-
தங்கம்- Pure Gold) என்று சிறப்பிதுக் கூறுகிறது சிலப்பதிகாரம்.
நன்றி: -குமுதம் (10-01-2007).