Wednesday, July 2, 2008

நாய் கடி !

நாய்க் கடியில் 'புரவோக்ட்' , 'அன்புரவோக்ட்' என்று இரண்டு வகை உண்டு. மனிதர்களின் செயல்பாட்டைப் பொறுத்து நாய்கள் கடிப்பது 'புரவோக்ட்' வகை. உதாரணமாக நாய்கள் மீது கல்லெறிவது, துரத்துவது இப்படி. 'அன்புரவோக்ட்' சற்று வித்தியாசமானது. சைக்கிள் அல்லது டூவீலரில் போய்க்கொண்டிருக்கும் போது, அவை எழுப்பும் சத்தம் காரணமாக துரத்தி வந்து கடிப்பது. நாய் கடித்து விட்டதே என்ற பயம் தேவையில்லை. முதல், இரண்டு, ஏழு, பதிநாலு, முப்பது, தொண்ணூறாவது நாள் என்று கைகளில் ஆறு ஊசிகள் போட வேண்டும்.
நன்றி: -குமுதம் (15-11-2006).

ஜப்பான் !

ஜப்பானில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் விதம் மிகஸ் சிறப்பானது. "If you can't, Japan can't.If Japan can't, the World can't." (உன்னால் முடியாதெனில் ஜப்பானால் முடியாது. ஜப்பானால் முடியாதெனின் உலகத்தாலேயே முடியாது).என்ற தன்னம்பிக்கையூட்டும் வாக்கியத்தை மாணவர்களின் சிந்தையில் வளர்க்கிறார்கள்.
-நன்றி: குமுதம் . (20-12-2006).

Tuesday, July 1, 2008

ஜுன் -௨௨.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற குதுப்மினார் கோபுரத்தின் நிழல் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் -22ஆம் தேதி மட்டும் தரையில் படுவது இல்லை. அக்கால கட்டிடக்கலை நிபுணர்களின் கைத்திறனையே இது காட்டுகிறது.
-நன்றி: தினமலர் - வாரமலர் (29-12-2006).

மழை,புழுக்கம் !

சாதாரணமாக மழை பெய்வதற்கு முன்னர் நாம் அதிக புழுக்கத்தை உணர்கிறோம்.அது ஏன் தெரியுமா? கரு மேகங்கள் உதயமான உடனடியாகவே, சுற்றுப்புறம் முழுமையாக நீர் ஆவியால் நிரம்பிவிடும்.! இதனால் நம்முடைய உடலில் உண்டாகும் வியர்வை எளிதில்ஆவியாகாமல் உடலிலேயே தங்கிவிடும். அதனால்தான் ஒருவகை புழுக்கம் ஏற்படுகிறது

கண்டங்கள் ,ஆங்கிலம் !

நம் உலகில் இருக்கும் கண்டங்களின் பெயர்கள் எந்த எழுத்தில் ஆரம்பிக்கிறதோ அதே
எழுத்தில் முடிகிறது. உதாரணமாக America, Asia, Africa, Andartica.
Almost என்ற ஆங்கில வார்த்தையில் மட்டும்தான் எழுத்துக்கள் அல்ஃபபெட்டிகல் ஆர்டரில் வரும்.
Listen என்ற ஆங்கில வார்த்தையில் Silent என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்கள் இருக்கின்றன.

கருக்கல்!

காலை என்பதே கருக்கல் தான்.
எந்த ஜீவராசியும் சூரிய உதயத்திற்குப் பிறகு உறங்குவதில்லை மனிதன் மட்டும் தான் சூரிய உதயத்திற்குபிறகும் உறங்குகிறான் அதிகாலை 4:30 க்கும் 5:30 க்கும் இடைப்பட்ட நேரம் 'கருக்கல்' ஆகும்.
இந்த நேரத்தில் தான் பகலின் வெளிச்சக்காற்று தோன்றி மறைந்து சற்று இருட்டாக இருக்கும். இந்த நேரத்தில் எழுந்து சுவாசித்தால் நெஞ்சில் உள்ள கெட்டக் காற்று நீங்கி அப்பழுக்கற்ற காற்று கிடைக்கும்.அது ஆரோக்கியத்தை அளிக்கும்.
நன்றி: -தினமலர் (26-12-2006).

தங்கம் ,சிலப்பதிகாரம் !

தெய்வீகப் பெருமையும், மந்திரசக்தியும், மருத்துவ வீர்யமும் பெற்றுள்ள தங்கத்தைப் பற்றி ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான்சிலப்பதிகாரம் போற்றியுள்ளது. தற்காலத்தில் தங்கத்தின் தரத்தை 'காரட்' என்று நிர்ணயிப்பது போல் சங்க காலத்தில் தங்கத்தை 'ஆடகம்'(பத்தரை மாற்றுத் தங்கம்) 'கிளிச்சிறை' (கொங்கு நாட்டுத் தங்கம், ) 'சம்பூநதம்'(ஹரிதம்), 'அபரஞ்சி' (தூய-
தங்கம்- Pure Gold) என்று சிறப்பிதுக் கூறுகிறது சிலப்பதிகாரம்.
நன்றி: -குமுதம் (10-01-2007).