Friday, February 6, 2009

வாரியார்.

கிருபானந்த வாரியார்.
( 25-08-1906 -- 07-11-1993 )
பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்க்கைச் சரித்திரத்தை வாரியார் சுவாமிகள் ஒரு நூலாக வெளியிட்டார்.'வாரியார் வாழ்க்கை வரலாறு' என்ற அந்த நூலில் அவர் கூறியுள்ள சில அனுபவங்களில் ஒன்று:
அஜீரணம் என்பது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது. காரணம், அரசர் வீட்டு விருந்தானாலும் அளவோடு உண்பவன்.ஒரு முஸ்லீம் அன்[ப )வர் என்னிடம், " பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசியடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான் " என்று கூறினார். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.
--ஆனந்த விகடன். 27-08-2008.

Thursday, February 5, 2009

அன்னை தெரஸா.

( 27-08-1910-- 05-09-1997 ).
அன்னை தெரஸாவுக்கு இப்போது 98 வயது ஆகிறது. யூகோஸ்லேவியாவில்,வசதியான அல்பேனியக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ,18 வயதில் கன்னிமாடத்தில் சேர்ந்து கல்கத்தா வந்தார்.ஒன்பது ஆண்டு பயிற்சிக்குப் பின், புனித மேரிக் கல்லூரியில் ஆசிரியராகவும்,பின்பு பிரின்ஸ்பாலாகவும் பணிபுரிந்திருக்கிறார்.
"ஏழைகளையும், நோயாளிகளையும் வறுமை ஒரு பக்கம் தாக்கினாலும், அவர்களைச் சமூகம் ஒதுக்கும் அந்தப் புறக்கணிப்பு உணர்ச்சிதான் அவர்களை மிகவும் பாதிக்கிறது" என்கிறார் அன்னை.
அன்னை தெரஸா புது டில்லியில் குழந்தைகள் இல்லத்தை நிருவியபோது, அதைத் துவக்க நேரு வந்திருந்தார்.அன்னை தன்னுடைய பணிகளை விளக்க முன் வந்தபோது ," மதர்...நீங்கள் சொல்லவே வேண்டாம். நீங்கள் ஆற்றி வரும் அத்தனைப் பணிகளும் எனக்குத் தெரியும். உங்கள் பணியினால் கவரப்பட்டுத்தான் நானே இங்கு வந்திருக்கிறேன்" என்று புன்முறுவலோடு சொன்னார் நேரு.
"ஏழைகளுக்கான சேவையே கடவுள் சேவை" என்கிறார் அன்னை தெரஸா.

Wednesday, February 4, 2009

வானொலி !

உலகப் புகழ்பெற்ற வானொலி சேவை அமைப்பான பிபிசி, 1922--ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி தனது ஒலிபரப்பை தொடங்கியது. வானொலி ஒலிபரப்பு முயற்சிகள் முதலில் அமெரிக்காவில் தொடங்கியது.இங்கிலாந்தில் அரசு கெடுபிடி கடுமையாக இருந்ததால் வானொலி சேவை தொடங்க முடியாத நிலை இருந்தது.எனினும அமெரிக்காவில் வானொலிக்கு கிடைத்த வரவேற்பு இங்கிலாந்து மக்கள் ஆசையை தூண்டியது.இதன் பிறகு' பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்' (பிபிசி) சேவை படுவேகமாக வளர்ந்து ,உலகம் முழுவதும் பரவியது.
பிபிசி தமிழ்.
பிபிசி நிறுவன நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மட்டுமின்றி உலகின் 43 மொழிகளில் ஒலிபரப்பாகிறது.தமிழ் ஒலிபரப்பு இதில் முக்கியமானது.தெற்காசிய மொழிகளில் முதன்முறையாக தமிழ் ஒலிபரப்பு 1941-ம் ஆண்டு மே , 31-ம் தேதி தொடங்கியது.தினந்தோரும் இரவு 9.15 மணியில் இருந்து 9.45 மணி வரை (அரை மணி நேரம் ) தமிழ் செய்தியும், செய்தி அலசலுமிடம் பெறுகின்றன. 49 எம், 41 எம், 31 எம் என்ற மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் பிபிசி தமிழ் ஒலிபரப்பை வானொலியில் கேட்கலாம்.

Tuesday, February 3, 2009

நேரு-நிலா- கொடி !

நேருவின் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நேருவின் தோற்றம்: கி.பி. 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 - ம் தேதி. மறைவு: 1964 - ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி.
இந்தியாவில் 17 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்த ஒரே தலைவர்.மரணம் சம்பவிப்பதற்கு முன்பு,' நான் இறந்த பின்பு, மத சடங்குகளையோ, சம்பிரதாயங்களையோ பின்பற்றக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தாராம். அதன்படியே அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்தது.
சந்திராயன் -- 1 ...
கவிஞனுக்கு கருப்பொருளாய்,ஓவியனுக்கு வரைபொருளாய், காதலருக்கு கனவுப்பொருளாய், குழந்தைக்கு கதைப்பொருளாய்,எட்ட மிதந்து களிப்பூட்டிய நிலவை ...நிஜத்தில் இந்தியா தீண்டிப் பார்க்கும் நாள் வந்தேவிட்டது !
நிலவுக்கு இந்தியாவின் முதல் விண்கலம் சந்திராயன் - 1 கடந்த மாதம் (2008 -ம் ஆண்டு ) 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.அடுத்த கட்டமாக இன்று ' மூன் இம்பேக்ட் புரோப்' (எம்.ஐ.பி.) என்ற கருவி நிலவில் இறங்குகிறது.நான் கு புறமும் பெயிண்ட் அடிக்கப்பட்ட மினியேச்சர் போன்ற சிறிய அளவிலான 'தேசியக்கொடி'யையும் இந்த விண்கலத்தில் அனுப்பப்பட்டிருக்கிறது.இந்த கொடியை எம்.ஐ. பி. கருவி தன்னுடன் எடுத்து சென்று, நிலவின் மேற்பரப்பில் ஊன்றுகிறது. நிலவுக்கு இ தியா அனுப்பிய முதல் அங்கு சென்றதற்கான சரித்திர அடையாளத்தை அழுத்தமாக பதிக்கும் விதமாக நிலவின் மேற்பரப்பில் நமது தேசியக்கொடி ஊன்றப்படுகிறது.

Monday, February 2, 2009

லட்சுமி - பணம்.

திருமால், லட்சுமியை மார்பகத்தே வைத்திருக்கிறார் என்று புராணம் சொல்கிறது. இது தெரிந்தோ, தெரியாமலோ வெள்ளைக்காரர்கள் கூட சட்டையின் மார்புப் பகுதியில் பை வைத்து அதில் லட்சுமியை -- பணத்தை வைத்திருந்தார்கள். இப்போது கண்ட கண்ட இடங்களில் வைப்பதால்தான் பெரும்பாலும் பர்ஸில் பணம் தங்குவதில்லை.
--ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா ஹரிகதையில் கேட்டது.

அண்டார்டிகா.

வருஷத்தில் 4 மாதங்கள் இருட்டாகவே இருக்கும் பகுதி அண்டார்டிகா. அண்டார்டிகாவில் படிந்துள்ள பனிக்கட்டிகள் முழுவதும் உருகினால் அது உலகில் 60 ஆண்டுகளுக்குப் பெய்யும் மழைக்குச் சமமாக இருக்குமாம்.
-- கல்கண்டு. 16-12-1982.

Sunday, February 1, 2009

பாராட்டு.

"ஈஸ்வரனையும் குருவையும் மட்டுமே நேரில் துதிக்கலாம். பந்து மித்திரர்களை நேரில் புகழாமல் மற்றவர்களிடமே போற்றிப் பேச வேண்டும். வேலையை முடித்த பின்னரே ஊழியரைப் பாராட்டலாம். பிள்ளையை ஒரு போதும் புகழக் கூடாது.
--ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்.
"நேசரைக் காணாவிடத்து நெஞ்சாரவே புகழ்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே -- வாச
மனையாளைப் பஞ்சனையின் மேல் மைந்தர் தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில் "
-- S.கோதண்டராமன். P.G.T.கூறக்கேட்டது.