Sunday, December 6, 2009

ஐ. எஸ். எஸ்.!-

விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ( ஐ. எஸ். எஸ். ) கடந்த 30 ம் தேதி மாலையில் ஏராளமானோர் பார்த்தனர் .
விண்ணில் இருந்தபடி விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா , ரஷ்யா , கனடா , ஜப்பான் , மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து 98 ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன . இதற்கான கட்டுமானப்பணிகள் வரும் 2010 வரை நடைபெறுகிறது . தற்போது பூமியில் இருந்து 336 முதல் 346 கி. மீ உயர சுற்று வட்டப்பாதையில் விண்ணில் இந்த நிலையம் மணிக்கு 27 ஆயிரத்து 724 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது .
தமிழகத்தில் 30 ம் தேதி மாலை 6 . 24 மணிக்கு வட மேற்கு அடிவானத்தில் தோன்றி தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 6 .35 மணிக்கு தென்கிழக்கு அடிவானத்தில் மறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் 4 நிமிடங்களுக்கு மேல் காணமுடியவில்லை . பிரகாசமான நட்சத்திரம் வேகமாக நகர்வதைப்போல தோற்றம் தந்தது . தொலைநோக்கி ஏதுமில்லாமல் வெறும் கண்ணாலேயே பார்க்கமுடிந்தது .
--- தினகரன் . 1 டிசம்பர் 2009 .
மேலும் , நேற்று 5 ம் தேதி காலை 5 . 53 மணிக்கு தென்மேற்கு அடிவானத்தில் தோன்றி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 5 . 59 மணிக்கு வடகிழக்கு அடிவானத்தில் மறைந்தது .

மூனறு புத்தகம் !

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்கள் மூன்று .
முதலாவது இறைவன் மனிதனுக்குச் சொன்னது . அது , கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த நூல் பகவத் கீதை .
இரண்டாவது , அறியவர் இறைவனுக்கு சொன்னது . மணிவாசகர் மகேசனுக்குப் பாடியது . அது திருவாசகம் .
மூன்றாவது , மனிதன் மனிதனுக்கு சொன்ன நூல் . வாழ்வாங்கு வாழ வள்ளுவர் வகுத்து தந்த திருக்குறள்தான் அது .
இந்த மூன்று நூல்களும் எல்லா இல்லங்களிலும் இருக்க வேண்டியவை . உயரும்போதெல்லாம் படிக்க வேண்டியவை .
--- கி. ஆ . பெ . விஸ்வநாதன் . .

Saturday, December 5, 2009

அப்பா . அடேங்கப்பா !

அப்பா : நான் உனக்கு கல்யானம் செய்து வைக்கலாம்னு இருக்கேன் . பொண்ணு பார்க்க ஆரம்பிக்கவா ?
மகன் : எனக்கேத்த பொண்ண நானே தேர்ந்தெடுக்கலாம்னு இருகேம்பா .
அப்பா : ஓகே ! ஆனால் நான் சொல்ற பொண்ணு மாதிரி உன்னாலேசெலக்ட் பண்ணவே முடியாது .
மகன் : அப்படிப்பட்ட பொண்ணு யாருப்பா அது ?
அப்பா : பில்கேட்ஸோட பொண்ணை உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கேன்... உனக்கு சம்மதமா ?
மகன் ! : அப்படியா ! டபுள் ஓகே.ப்பா !
இடம் : பில்கேட்ஸ் மாளிகை .!
அப்பா : மிஸ்டர் பில்கேட்ஸ் , உங்க பொண்ணு வாழ்க்கை மேலும் பிரகாசமா இருக்க ஒரு நல்ல செய்தியோட வந்திருக்கேன் !
பில்கேட்ஸ் : ஓ... ரோம்ப சந்தோஷம் ... சொல்லுங்க .
அப்பா : நல்ல குணமுள்ள , ஒரு அருமையான மாப்பிள்ளையை , உங்க பொண்ணுக்காக பார்த்து வெச்சிருக்கேன் !
பில்கேட்ஸ் : அவளோட கல்யாணத்தை பத்தி நான் இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவில்லை .
அப்பா : உங்க பொண்ணுக்கு பார்த்து வைத்திருக்கிற மாப்பிள்ளை உலக வங்கியோட வைஸ்பிரசிடென்ட்டா இருந்தா ஓகேவா ? !
பில்கேட்ஸ் : உலக வங்கியோட வைஸ்பிரசிடென்ட்டா ! அப்ப , டபுள் ஓகே .
இடம் : உலக வங்கி பிரசிடென்ட் இல்லம் .
அப்பா : உலக வங்கிக்கு ஒரு நல்ல பையனை வைஸ் பிரஸிடென்ட்டா ரெக்கமென்ட் பண்ண வந்திருக்கேன் .
பிரசிடென் ட் : ஏற்கனவே எங்க வங்கியில தேவைக்கு அதிகமான விஸ்பிரசிடென் ட் இருக்காங்களே !
அப்பா : நான் சொல்ற பையனை நீங்க வைஸ் பிரசிடென் ட்டா சேத்துகிட்டா உலக வங்கியோட அந்த்ஸ்து இன்னும் ஒரு படி உயரும் .
பிரசிடென் ட் : ரியலி ! யாரந்த பையன் ?
அப்பா : உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் பில்கேட்ஸோட மாப்பைள்ளைதான் அந்தப்பையன் .
பிரசிடென் ட் : அப்படியா , வெரி குட் ! நீங்க ரெக்கமென் ட் செய்த பையனை வைஸ் பிரசிடென் ட்டாக்க எனக்கு முழு சம்மதம் ! !
தத்துவம் : வாயுள்ள அப்பாவோட புள்ள பொழைச்சுக்கும் !
--- தினமலர் , 02 - 08 - 2009 .

உடல் இயக்கம் !

நமது உடலை மூலாதாரம் , சுவாதிஸ்தானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆக்ஞா , சகஸ்ரஹாரம் ஆகிய ஏழு சக்கரங்கள் இயக்குகின்றன . சக்கர செயல்பாடு பாதிக்கப்பட்டால் அவற்றால் கட்டுப்படுத்தப்படும் உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டு ஆரோக்கிய குறைபாடு வரும் .
இந்த சக்கரங்கள் சரியாக இயங்க , அவற்றுக்கு ' பிராணா ' ( உயிர்மூச்சு ) சக்தி முழுஅளவில் கிடைக்கவேண்டும் .
மூலாதாரம் சரிவர செயல்பட , அதற்கு ஒரு நாளில் 600 மூச்சு கிடைக்க வேண்டும் . இதுபோல் , சுவாதிஸ்தானம் , மணிபூரகம் மற்றும் அநாகதம் சரிவர செயல்பட ஒரு நாளுக்கு தலா 6 ஆயிரம் மூச்சுக்களும் , விசுத்தி , ஆக்ஞா மற்றும் சகஸ்ரஹாரம் சரிவர செயல்பட ஒரு நாளுக்கு தலா ஆயிரம் மூச்சுக்களும் தேவை . ஆக , உடல் இயக்கம் சரிவர நடக்க , ஒரு நாளுக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுக்கள் தேவை . அதாவது , ஒரு நிமிடத்துக்கு நாம் 15 முறை சுவாசிக்கவேண்டும் .
ஆனால் , மன படபடப்புகளால் இந்த சரியான அளவில் நாம் சுவாசிப்பதில்லை . ஒன்று , மிக அதிகமாக சுவாசிக்கிறோம் அல்லது மிகக் குறைவாக சுவாசிக்கிறோம் .
ஒரு நிமிடத்திற்கு 3 முறை மட்டுமே சுவாசிப்பதால் ஆமையின் ஆயுள் அதிகம் ( சராசரியாக 300 ஆண்டுகள் ) ; ஒரு நிமிடத்திற்கு 20 முறைக்கு மேல் சுவாசிப்பதால்தான் நாய் , குதிரை போன்ற விலங்குகளின் ஆயுள் மிகக் குறைவு . மூச்சு குறையக் குறைய ஆயுள் அதிகரிக்கும் .இதற்கு , ' மூச்சை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தி விட்டால் ஆயுள் அதிகரிக்கும் ' என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் . மூச்சை வலுக்கட்டாயமாக அடக்குவது , பெரும் ஆபத்து .
சராசரி மனிதர்களின் உடலுக்கு ஒரு நாளுக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுகள் அவசியம் . இதற்காக ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் என்ற அளவுப்படி சுவாசத்தை நிதானமாக , ஆழமானதாக மாற்ற பயிற்சி செய்வதே பாதுகாப்பான , சரியான பிராணாயாம முறை .
--- தினமலர் , பக்திமலர் . ஜூலை 30 . 2009 .

Friday, December 4, 2009

ஒட்டகச் சிவிங்கி !

நாலுகால் பிராணிகளிலேயே ரொம்பவும் உயரமுள்ளப் பிராணி ஆங்கிலத்தில் ' ஜிராஃப் ' எனப்படும் ஒட்டகச் சிவிங்கியே ஆகும் . தாய் ஒட்டகச் சிவிங்கி , குட்டியை ஈனும்போது என்ன நடக்கிறது தெரியுமா ? தாயின் இதமான , பாதுகாப்பான வயிற்றிலிருந்து குட்டி வெளியே வந்ததும் வராததுமாக , ரொம்பவும் உயரத்திலிருந்து ' பொத் ' தென்று தரையில் விழுகிறது .
அந்த மோதலிலிருந்தும் அதிர்ச்சியிலிலிருந்தும் அது மீளுவதற்குள் இன்னொரு அதிர்ச்சி அதற்காக காத்திருக்கிறது ! கீழே விழுந்தபின் , அது எழுந்து நிற்கும் முயற்சியில் , இன்னும் முழங்கால்களைத் தரையில் உறுதியாகப் பதிக்கக் கூட இயலாத நிலையில் , தன் பலங்கொண்ட மட்டும் தன் கால்களால் தாய் அதை எட்டி உதைக்கிறது . புதிதாகப் பிறந்த குட்டியைத் தாய் இப்படித் திருப்பித் திருப்பிப் பலமுறை எட்டி உதைப்பது நமக்குப் பார்ப்பதற்கு ஒரு கொடுமை போலத்தான் தோன்றும் ! ஆனால் , தன் குட்டி பிழைத்திருக்க வேண்டும் . அது நெடு நாள் உயிருடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தாய் , தன் உள்ளூணர்வால் உந்தப்பட்டு அது இழைக்கும் கொடுமையிலும் அதன் தாய்ப்பாசம்தான் வெளியாகிறது . அதாவது குட்டி தன் நாலுகால்களையும் ஊன்றிச் சீக்கிரம் ஓட ஆரம்பிக்கவில்லையென்றால் கொடிய காட்டு மிருகங்கள் அதைக் குதறித் தின்றுவிடும் என்று தாய்க்கு நன்றாகத் தெரியும் .
--- பாக்யா , ஜூலை 31 - ஆக 6 ; 2009 .

Thursday, December 3, 2009

மரம் - 1 , இலைகள்விதம் 5 .

பஞ்ச பாண்டவர்கள் மீண்டும் தங்களுக்கு பதவி வேண்டி பூஜை செய்த தலம் என்பதால் ' ஐவர் பாடி ' என்றழைக்கப்பட்ட பெயர் மருவி இப்போது அய்யாவாடியாக அழைக்கப்படுகிறது . கும்பகோண்த்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர் . இங்குள்ள தர்ம சம்வர்த்தினி அம்பாள் சமேத அகத்தீஸ்வர சுவாமி கோயிலின் வடக்கு பிரகாரத்தில் மகா பிரத்யங்கராதேவி அதர்வன காளியாக அருள்பாலிக்கிறாள் . இழந்த பதவியையும் , சிறப்பையும் மீண்டும் பெற இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் அனைத்தும் மீண்டும் கிடைத்து விடும் என்பது நம்பிக்கை. 18 சித்தர்களும் இங்கு வந்து பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது .
இக்கோயிலின் தலவிருட்சம் ஆலமரம் . இம்மரத்தில் உள்ள ஒவ்வொரு இலைக் கொத்திலும் 5 இலைகள் உள்ளன.
ஒவ்வொரு இலையும் வெவ்வேறு வடிவத்தில் உள்ளன . அதில் ஆல் , அரசு , புரசு , இச்சி , மா என்ற 5 வடிவங்களில் இலைகள் இருக்கின்றன . வேறு எந்த தலத்திலும் இதுபோன்று வெவ்வேறு வடிவ இலைகள் ஒரே மரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் , 27 - 07 - 2009 .

Wednesday, December 2, 2009

உஷ் ! பேசாதே !

வணக்கம் . 21 - 02 - 1965 இதழ் ஆனந்தவிகடனில் ' பட உலகில் ' பகுதியில் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பைப் படித்தேன் . அவர் அறிந்து கொள்ள முடியாமல் போன சுலோகத்தை நான் எழுதி அனுப்பியிருக்கிறேன் . இதை நான் எனது 85 வயதான தாத்தாவிடமிருந்து தெரிந்துகொண்டு அனுப்புவதால் , சரியாகவே இருக்குமென்று நினைக்கிறேன் .
அந்த சுலோகம் ...
ஆயுர்விருத்தம் , க்ருஹசித்ரம் , மந்த்ரமெளஷதமைதுனே
தானம் மர்னாபமாநெள ச நவ கோப்யானி காரவேத் .
இந்த சுலோகத்தின் கருத்தாவது :
தனது வயது , சொத்து , வீட்டில் நடந்த சண்டை , சிறந்த மந்திரம் , நல்ல மருந்து , கணவன் மனைவியின் பிரியம் , தானம் , தனக்கேற்பட்ட புகழ் , அவமானம் ஆகிய இந்த ஒன்பது விஷயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது என்பதாம் .
( ஸூபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற புத்தகத்திலிருந்து ).
--- வி. கே. கௌஸல்யா, சின்ன காஞ்சிபுரம் . ( 07 - 03 - 1965 ).
--- ஆனந்தவிகடன் , 22 - 07 - 2009 .