Thursday, January 7, 2010

3 குரங்கு பொம்மை !

தீயவைகளைப் பார்க்காதே , தீயவைகளை கேட்காதே , தீயவைகளைப் பேசாதே!
இந்த குரங்குப் பொம்மைகளைப் பார்த்திருக்கலாம் . சரி , இந்தப் பொம்மைகளுடைய பெயர் என்னன்னு தெரியுமா ?
தீயவைகளை பார்க்காதே ( கண்களை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : மிஷாரு .
தீயவைகளை கேட்காதே ( காதுகளை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : கிகஷாரு .
தீயவைகளை பேசாதே ( வாயை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : இவஷாரு .
--- தினமலர் சண்டே ஸ்பெஷல் , 23 - 08 - 2009 .

Wednesday, January 6, 2010

தெரிந்து கொள்வோம் !

* பெருங்காய வாசனையை ஆங்கிலேயர்கள் , ' சாத்தானின் சாணம் ' என்று அழைக்கிறார்கள் .
* உருளைக் கிழங்கு பற்றி பைபிளில் எந்தக் குறிப்பும் இல்லை என்பதால் , அதைச் சாப்பிடக்கூடாது என்று பல நூறு வருஷம் ஐரோப்பாவில் தடுத்து வைத்திருந்தார்கள் . பின்பு ரஷ்யாவிலும் , இங்கிலாந்திலும் அது அடிமைகளுக்கும் , ஆடு , மாடுகளுக்கும் போடப்படும் உணவாக இருந்தது .
* மனைவியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு , கணவன் அனுசரித்துப் போவதற்கு Seduction என்று பெயர் .
* உலக மக்கள் தொகையில் 7 முதல் 10 சதவிகிதம் பேர் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் . ' இது நோய் இல்லை , அதனால் , உங்கள் பிள்ளைகள் இடது கையைப் பயன்படுத்தினால் அதைத் திருத்துகிறேன் என்று முயற்சிக்க வேண்டாம் . அது குழந்தைகளின் இயல்பான திறமைகளைப் பாதிக்கும் ' என்கிறார்கள் மருத்துவர்கள்
* ஆண்களைப் போல பெண்களுக்கும் மீசை , தாடி , உடல் பாகங்களில் முடி வளர்வதை Hirsutism என்போம் .
* ஒவ்வொரு தலைமை தபால் நிலையத்திலும் Philatelic Bureau என்று இருக்கும் . அங்கு புதிதாக வெளியிடப்படும் ஸ்டாம்புகளை வாங்கிக்கொள்ளலாம் . அரிய வகை ஸ்டாம்புகளை விற்பதற்காகவே அங்கீகாரம் பெற்ற பிரத்யேக டீலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பார்கள் . Phila India. 2009 கேட்லாக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் . அந்த ஸ்டாம்பின் மார்க்கெட் ரேட்டைக் காட்டிலும் குறைந்த விலைக்கு அந்த டீலர்களிடம் வாங்கிக்கொள்ளலாம்
* வயது அதிகமுள்ள பெண்ணுக்கும் வயது குறைவான ஆணுக்கும் உள்ள உறவுக்கு ' மே- டிசம்பர்- ரிலேஷன்ஷிப் ' என்று பெயர் . .
--- ஆனந்தவிகடன் , 26 - 08 - 2009 .-- 02 - 09 - 2009 -- 09 - 09 - 2009 ..

Tuesday, January 5, 2010

அலர்ஜி ?

நாம் உண்ணும் பொருளோ அல்லது வெளியில் உள்ள ஒரு பொருளோ நம் உடலுக்குள் போகும்போது , சில ரசாயனப் பொருட்களை வெளியிடும் . அதை எதிர்த்துப் போராட நம் உடலும் நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் சில ரசாயனங்களை உண்டாக்கும் . இந்த இரண்டு ரசாயனங்களும் ஒத்துப்போய்விட்டால் பிரச்னை இல்லை . ஒன்றுக்கொன்று எதிர்த்துப் போரிடும்போதுதான் உடலில் அலர்ஜி ஏற்படுகிறது .
---இலையரவி . தகவல் தமயந்தி , குமுதம் , 26 - 08 - 2009 .

Monday, January 4, 2010

Highlights of year 2009 .

Highlights of year 2009 .
09 - 09 - 09 ...... This day comes only in a 100 year .
22 - 07 - 09 ...... The biggest Suryagrahanam in 100 years .
2009 started and ended on Thursdays .
2009 had 5 Saturdays and 5 Sundays in just one month . This happens once in 723 years .
7 th August 2009 at 12 hrs 34 minutes 56 seconds , The time was mentioned as 12 : 34 : 56 07 - 08 - 09 . This 123456789 may come only once in a lifetime .
--- Message from Mr . Karthikesan from Puducherry .
SMS to selloor Kannan from M . Karthikesan , Puducherry .

எரிபொருள் செலவு !

விமானங்களைப் பொறுத்தவரை எரிபொருள் செலவு என்பது அதன் எஞ்சினின் திறன் , ஏற்றிச்செல்லும் பயணிகளின் எண்ணிக்கை , பறக்கும் வேகம் என பலவற்றைப் பொறுத்தது .
சுமார் 900 கி. மீ . வேகம் வரை பறக்கக்கூடிய போயிங் 74ஏ விமானம் ஒன்று 400 பயணிகளுடன் பறக்க நேர்ந்தால் , மணிக்கு 12, 788 லிட்டர் பெட்ரோல் செலவாகும் என்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் . கொஞ்சம் தலைசுற்ற வைக்கும் இந்தக் கணக்கை இன்னொரு வகையில் எளிமையாகக் கணக்கிடுகிறார்கள் .
75 சதவிகித பயணிகளுடன் பறக்கும் ஒரு விமானத்தில் ஒரு பயணி 1 லிட்டர் எரிபொருள் செலவில் 22. 2 கி. மீ. தூரம் பயணம் செய்ய முடியுமாம் . அதாவது ஒரு காரில் டிரைவர் மட்டும் அதை ஓட்டிச் செல்லும் போது ஏற்படும் எரிபொருள் விரயத்தைவிட இது சிக்கனமானது என்றும் சொல்லப்படுகிறது .
எரிபொருள் விலையை பொறுத்தவரை இந்தியாவில் ஒரு கிலோலிட்டர் விமான எரிபொருள் சுமார் 35,000 ரூ முதல் 45,000 ரூ வரை இருக்கிறதாம் .
--- இளையரவி . தகவல் தமயந்தி , குமுதம் 26 - 08 - 2009 .

Saturday, January 2, 2010

அசத்தல் ஐடியா .

* வெள்ளைப்பூண்டு சில நேரங்களில் அவசரமாக தேவைப்படும் . அச்சமயங்களில் பூண்டை உரித்து உபயோகப்படுத்த நேரம் பிடிக்கும் . இதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட அலவு பூண்டை வாங்கி தோலுரித்து நல்லெண்ணையில் போட்டு வைத்து விடலாம் . பூண்டு தேவைப்படும் சமயத்தில் ஒரு ஸ்பூன் அளவு அந்த எண்ணையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் . வெள்ளைப்பூண்டு போட வேண்டிய அவசியம் இல்லை .
* ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசி கலர் மங்கி போயிருந்தால் , சிலர் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்வது உண்டு . அப்படி செய்த பின்னும் அரிசி வெள்ளை வெளேர் என்று மாறவில்லையென்றால் , கவலைப்பட வேண்டாம் . அதாவது ... அரிசியை அடுப்பில் வைத்தவுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச் சாற்றை ஊற்றுங்கள் . பின்பு சொறு வெள்ளை வெளேர் என்று காட்சியளிக்கும் . குழைந்தும் போகாது .
* முட்டைகோஸ் பொரியல் நல்ல நறுமணத்துடன் இருக்கும் . ஆனால் , முட்டைகோஸ் சமைத்த ஓரிரு மணி நேரத்தில் அந்த நறுமணம் குறைந்து விடும் . அப்படி நறுமணம் குறையாமல் இருக்க , பொரியல் செய்யும்பொழுது சிறிதளவு இஞ்சி சேர்த்துச் கொள்ள வேண்டும் . நறுமணம் குறையவே குறையாது .
--- பாக்யா இதழ் . ஜூம் 26 - ஜூலை 2 ; 2009 .

கல்லணை !

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால் , அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும் . அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதயும் . இதைத்தான் டெக்னாலஜியாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள் .
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு , படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை . ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
--- தினமலர் . நவம்பர் 6 , 2009 .