Tuesday, April 6, 2010

உங்களுக்குத் தெரியுமா ? வைரமுத்து !

உங்களுக்குத் தெரியுமா ?
உங்களுக்கு ஒன்று தெரியுமா ? மாவீரன் நெப்போலியன் , ஜூலியஸ் சீஸர் , ஹனிபால் , பதினான்காம் லூயி ... இன்னும் பல மாவீரர்கள் எல்லாம் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தவர்கள் .
--- ஆனந்தவிகடன் . 26 . 09. 1999 .
வைரமுத்து !
கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார் வைரமுத்து . நாளை அணையே தூர்ந்துபோனாலும் , அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம் .
பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியிட்ட ' வைகறை மேகங்கள் ' என்ற முதல் கவிதைத் தொகுதி , இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக இருக்கும் பெருமை பெற்றதாம் . இப்போது விற்பனையாகிக்கொண்டு இருப்பது வைகறை மேகங்களின் 29 -ம் பதிப்பு .
' அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் ' இவரது கவிதைகளை , இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து , உலக இலக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாஷிங்க்டன் டி. சி- யில் பாதுகாத்து வருகிறது .
கனடா நாட்டு அரசாங்கத்தோடு இணைந்து ஒரு தமிழ் அமைப்பு , இவர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது . இவரது அஞ்சல் தலை ஒட்டப்பட்டு , இவருக்கு வந்த தபாலை இவரே பிரித்தார் .
--- ஆனந்தவிகடன் , 18 . 11 . 2009 .

எடை !உயரம் !தலைச் சுற்றளவு !

குழந்தையின் எடை !
உங்கள் குழந்தை எவ்வளவு எடை இருக்க வேண்டும் ? ஒரு சின்ன ஃபார்முலா ...
குழந்தையின் வயதுடன் மூன்றைக் கூட்டி ஐந்தால் பெருக்குங்கள் . அத்தனை பவுண்டு எடை உங்கள் குழந்தை இருந்தால் டபுள் ஓகே . அதாவது உங்கள் குழந்தைக்கு நான்கு வயது என்றால் அதன் எடை ( 4 + 3 ) x 5 = 35 பவுண்டு இருக்க வேண்டும் . 2 1/2 பவுண்டு என்பது 1 கிலோ .
இந்த ஃபார்முலா இரண்டு வயதிலிருந்து பன்னிரெண்டு வயது வரை மட்டுமே செல்லுபடியாகும் .
குழந்தையின் உயரம் !
குழந்தையின் வயதை இரண்டால் பெருக்கி 32 - ஐக் கூட்டுங்கள் . வருகிற விடை என்னவோ அத்தனை அங்குலம் இருக்க வேண்டும் அதன் உயரம் . நான்கு வயதுக் குழந்தையின் சரியான உயரம் 4 X 2 + 32 = 40 அங்குலம் . இந்த ஃபார்முலாவும் இரண்டு வயது முதல் பன்னிரெண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கே .
குழந்தையின் தலைச் சுற்றளவு !
பிறந்த குழந்தைக்கு 13 . 8 அங்குலம் தலைச் சுற்றளவு இருக்கும் . இது மாதத்துக்கு 1 / 2 அங்குலம் வீதம் முதல் நான்கு மாதமும் , பின்பு மாதத்துக்கு 1 / 4 அங்குலம் வீதம் அடுத்த எட்டு மாதமும் அதிகரிக்கும் . ஒரு வயது குழந்தையின் தலைச் சுற்றளவு 17 . 8 அங்குலம் இருக்க வேண்டும் . இந்த அளவிலிருந்து கூடுதலாகவோ , குறைவாகவோ இருந்தால் மருத்துவரை அணுகுங்கள் .
--- ஆனந்தவிகடன் , 12 . 09 . 1999 .

Sunday, April 4, 2010

படிகள் !

தத்துவம் சொல்லும் படிகள் !
ஐயப்பன் சந்நிதானத்தில் உள்ள பதினெட்டு படிகள் மிகவும் விஷேஷமானவை . இந்த பதினெட்டு படிகளும் ஒரே கல்லால் ஆனவை . பல வழிகள் ஒருங்கிணைந்து ஒரே லட்சிய ஈடுபாட்டில் மனிதனைச் செலுத்தும் தன்மையை இது வெளிப்படுத்துகிறது . ஐயப்பனை பூஜிப்பது போல பதினெட்டு படிகளையும் பூஜிக்கும் பழக்கம் சபரிமலையில் உண்டு . இதற்குப் ' படி பூஜை ' என்று பெயர் . சென்ற நூற்றாண்டுகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்த இந்தப் பூஜை இப்போது அடிக்கடி நடைபெறுகிறது .
இந்து மதத்தில் பதினெட்டு என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் அதிகம் . இந்த பதினெட்டுப் படிக்கட்டுகள் பதினெட்டு தத்துவங்களைக் குறிக்கிறது .
சபரிமலையின் பதினெட்டுப் படிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் இருக்கிறது . காண்பது , கேட்பது , மணம் , ரசனை , ஸ்பரிசம் என்னும் புலன்கள் -- ஐந்து . காமம் , ஆசை , குரோதம் , லோபம் , மோகம் , மதம் , மாச்சர்யம் , தான் என்னும் அகந்தை ஆகிய அராகங்கள் -- எட்டு . ரரோஜ குணம் ( ராட்சஸ ) , தமோகுணம் ( மந்தம் ) , சாத்வீகம் ( தெய்வீகம் ) என்ற குணங்கள் -- மூன்று . வித்யை ( அறிவு நிலை ) , அவித்தைய ( அறியாமை ) என்பன இரண்டு என்பவை அவை .
சபரிமலையைச் சுற்றி 17 மலைகள் இருக்கின்றன .சபரி மலையையும் சேர்த்து 18 மலைகளை 18 படிகல் குறிக்கின்றன என்ற ஒரு கருத்தும் உண்டு . பொன்னம்பல மேடு , கவுதென்மலை , நாகமலை , சுந்தரமலை , சிற்றம்பல மலை , கல்கி மலை , மாதங்க மலை , மயிலாடும் மேடு , ஸ்ரீபாத மலை , தேவர் மலை , நீலக்கல் மலை , தாலப்பாற மலை , நீலி மலை , கரி மலை , புதுச்சேரி மலை , காளக்கெட்டி மலை , இஞ்சிப்பாறை மலை , சபரிமலை என்பவை அந்தப் பதினெட்டு மலைகள் .
இந்தப் பதினெட்டு மலைகலைத் தாண்டிச் சென்றால் சாஸ்தாவின் தரிசனம் பெறலாம் . 18 தத்துவங்களைக் கடந்தால் சந்நிதானத்தின் திருவருள் பெறலாம் என்பதே 18ம் படியின் தத்துவம் .
--- தினமலர் . பக்தி மலர் . நவம்பர் 12 , 2009 .

Saturday, April 3, 2010

ஜோக் !

ஒரு ஊர்வலம் . இரண்டு சவப்பெட்டிகள் . அதன் பின்னால் ஒரு நாய் . அதன் பின்னால் ஒரு மனிதன் . அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள் . இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க , முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன் . அதற்கு அவன் , ' முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி . இரண்டாவதில் என் மாமியார் . அவர்களுக்கான ஊர்வலம் இது ' என்றான் .
' ஐய்யய்யோ ! அப்படியா ! இந்த நாய் ? ' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன் .
' ஓ , அதுவா ? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது '
வந்தவன் சற்று யோஜித்தான் . ' அந்த நாய் எனக்குக் கிடைக்குமா ?'
' உனக்கும் வேணுமா , அப்போ பின்னாடி வர க்யூவுல போய் நில்லு ' என்றான் மனைவியை பறிகொடுத்தவன் .
இந்த ஜோக் நம்ம ஊர் சரக்கல்ல , இங்கிலாந்துக்குரியது .
--- அரசு பதில்கள் . குமுதம் , 11 . 11 . 2009 .

ஆனந்தம் !

வீடு ஆனந்தம் !
எல்லோரும் தத்தமது வீடுகளில் அவசியம் வளர்க்க வேண்டிய 5 வகையான பச்சிலைகள் உண்டு . அவை மருத்துவச் செலவைக் குறைத்து , ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்துபவை .
வெட்டுக்காயப் பச்சிலை :
உடம்பில் ஏற்படும் காயத்தின் மீது இந்த இலையின் சாறைப் பிழிந்துவிட்டால் , ஓரிரு நாட்களில் காயம் இருந்த இடம் தையல்போட்டது போல ஒட்டிக்கொள்ளும் .
அம்மான் பச்சரிசிப் பச்சிலை :
வயிற்று வலிக்கு மிகச் சிறந்த மருந்து . பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் , சாதாரண வயிற்று வலிக்கும் இந்தப் பச்சிலைச் சாறு உடனடி நிவாரணத்தைத் தரும் .
ஆவாரம்பூ :
' ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ' என்பது சித்தர் பாட்டு . ஆவாரம் பூவை தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு ஓடிவிடும் . இதன் பூவை வெந்நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் சர்க்கரை போட்டுக் குடித்தால் வயிறு தொடர்பான நோய்கள் விலகிவிடும் .
கீழா நெல்லி :
மஞ்சள் காமாலைக்கு இதைவிடச் சிறந்த மருந்து இல்லை .
கார்த்திகைப் பூ :
வேரோடு பிடுங்கிக் காயவைத்து கஷாயம் வைத்துக் குடித்தால் , சிறுநீரகக் கல் கரைந்தோடி விடும் . ' லட்ச ரூபாய் செடி ' என்பது இதன் செல்லப் பெயர் . ' வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு !'
--- பாரதி தம்பி . ஆனந்தவிகடன் , 04 . 11 . 2009 .

Friday, April 2, 2010

செல்லே கதியா ?

தொடர்ந்து 10 ஆண்டுக்கு மேல செல்போன் பயன்படுத்தறவங்களுக்கு பிரெய்ன் டியூமர் வர்றதுக்கு வாய்ப்புள்ளதுன்னு எச்சரிச்சுள்ளது உலக சுகாதார நிறுவனம் . இந்த ஆராய்ச்சியைப் பார்த்து பயந்து போன பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அரசுகள் செல்போனால் ஏற்படும் தீங்குகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் செஞ்சுட்டிருக்கு . செல்லுலேயே வாழ்க்கை நடத்தும் இளைஞிகள் உஷாரா இருப்பது நல்லது .
--- தினமலர் , பெண்கள் மலர் . நவம்பர் , 7 , 2009 .

Thursday, April 1, 2010

அதிர்ஷ்டம் .

அது + இஷ்டம் = அதிர்ஷ்டம் .
அதிஷ்டத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா ?
' எதிர்பாராத , எதேச்சையான நிகழ்வு ( chance ) ' என்பதில் நம்பிக்கை உண்டு . அதை ' அதிர்ஷ்டம் ' என்று நீங்கள் அழைத்தால் , எனக்கு ஆட்சேபனை இல்லை !
சுமார் 40 லட்சம் ' உயிரணுக்கள் ' அப்பாவிடம் இருந்து அம்மாவுக்குள் நுழைந்து நீந்துகின்றன . அதில் ஒரே ஒரு உயிரணு -- நீங்கள் ! இந்த நீச்சல் போட்டியில் ஜெயித்து , முட்டையை ' நீங்கள் ' துளைக்கும் சமயம்... அம்மா லேசாக நகர்ந்து படுத்தாலோ , இருமினாலோகூட , ' நீங்கள் ' என்கிற உயிரணுவின் குறி தவறி , இன்னொரு உயிரணு முட்டைக்குள் நுழைந்திருகும் . அதாவது ' வேறு ஒருவர் ' கருவாகிப் பிறந்திருப்பார் ! நுழைந்தது நீங்களாக இருந்தது அதிர்ஷ்டமா ? யதேச்சையான நிகழ்வா ?! ( ' என் திறமை ' என்றெல்லாம் சொல்லக் கூடாது ! ).
-- ஹாய் மதன் . 28 . 10 . 2009 .