Thursday, October 7, 2010

கோமாதா !

முழுமுதல் தெய்வங்கள் என பிரம்மா , விஷ்ணு , ருத்திரன் , மகேஸ்வரன் , சதாசிவன் ஆகியவர்களைச் சொல்வார்கள் . அதனை அடுத்து அமைபவர்கள் தேவர்கள் முப்பத்து மூன்று கோடி என்றும் சொல்வார்கள் . இந்த எல்லா தெய்வங்களும் பசுவில் இடம்பிடித்திருக்கின்றன என்று புராணங்கள் சொல்கின்றன .
பசுவின் உடலில் வலது கண்ணில் சூரியன், இடது கண்ணில் சந்திரன், இரண்டு கண்களுக்கும் இடையில் ( நடுவில் ) சிவபெருமான், மூக்கின் வலது பக்கம் முருகன், இடது பக்கம் விநாயகர், மண்டையில் தீர்த்தராஜன், வலது கொம்பில் எமன், இடது கொம்பில் இந்திரன், நெஞ்சில் மகாவிஷ்ணு, இடது முன் கழுத்தில் சரஸ்வதி, கீழ் பக்கம் ராகு, மேல் பக்கம் கேது, முன் கால் நடு முண்டுக்கு மேல் செவ்வாய், அதன் கீழ் சனி, அதன் மேல் சுக்கிரன், புதன், கொண்டையில் பிரம்மா, கொண்டையின் கீழ்ப்பக்கம் குரு, முன்பக்க வலது காலில் பைரவர், இடது காலில் அனுமன், நடு முதுகில் அக்னி, பின்பக்கம் முதுகில் வருணன், குபேரன், வாலின் கீழ் லட்சுமி, அதன்கீழ் கங்கை, வாலில் நாகராஜன் வாசம் செய்கிறார்கள் என்கிறது பக்தவிலாசம் என்னும் நூல் .
--- தினமலர் , ஏப்ரல் 1 , 2010.

Wednesday, October 6, 2010

மொபைல்

மொபைல் காணாமல் போகும் போது....
" ஒவ்வொரு மொபைலுக்கும் I M E I நம்பர் உண்டு . அதனைக் குறித்து வைத்துக் கொண்டால் , மொபைல் காணாமல் போகும் போது அந்த நம்பரைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம் . மொபைலில் #06# என்று டைப் செய்தால் நம்பர் தெரிந்துவிடும் ."
--- சுபா . தஞ்சை . மங்கையர் மலர் , ஜூன் 2010 .

Tuesday, October 5, 2010

பூமி :

* பூமியைச் சுற்றி வந்த முதல் செயற்கை கோள் -- ஸ்புட்னிக் .
* பூமியைச் சுற்றி வந்த விண்வெளி வீரர் -- ஜான் என் . ஹெலன் .
* பூமியைச் சுற்றி வந்த பெண் விண்வெளி வீராங்கனை -- வாலண்டினா .
* பூமிக்கும் , சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் -- 9 கோடியே 50 லட்சம் மைல்கள் .
* பூமி சூரியனுக்கு தூரத்தில் இருக்கும் நாள் -- ஜூலை 3 .
* பூமி சூரியனுக்கு அருகிலிருக்கும் நாள் -- ஜனவரி 3 .
* பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றவர் -- கோபர்நிக்கஸ் .
--- தினத்தந்தி , 24. 04. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Monday, October 4, 2010

மனிதன் மட்டும் !

விதைகளிலிருந்து
எழுந்திருக்கும் விருட்சம்
அடுத்த விருட்சங்களை நம்பி,
கிளைகளை விரிக்கவில்லை !
கிளைகளிலிருந்து
எழுந்திருக்கும் பறவை
அடுத்த பறவைகளை நம்பி
சிறகுகளை விரிக்கவில்லை !
சிறகுகளிலிருந்து
எழுந்திருக்கும் நம்பிக்கை
அடுத்த நம்பிக்கைகளை நம்பி
கரங்களை விரிக்கவில்லை !
தாயின் கருவறையிலிருந்து
எழுந்திருக்கும் மனிதன் மட்டும்
அடுத்தவர்களை நம்பி நம்பியே
வாழ்ந்து தோற்கிறானே.....?!
--- பொட்ட்ல்குழி ரா. ரெத்தினமணி, பாளை மத்தியச்சிறைச்சாலை. தினத்தந்தி , 09. 05. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Sunday, October 3, 2010

எல்லாமே நம்பர் 3 .

அயோத்தி தீர்ப்பில் எல்லாமே நம்பர் 3 .
அதன் விவரம் :
* அயோத்தி வழக்கை விசாரித்தது .3 நீதிபதிகள் .
* தீர்ப்பு அறிவித்த நீதிமன்ற அறை எண் 21 . அதாவது ( 2 + 1 ) = 3 .
* தீர்ப்பு வெளியான நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு .
* தீர்ப்பு வெளியான தேதி அக்டோபர் 30 .
* தீர்ப்பு எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதம் அவகாசம் .
* சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க தீர்ப்பு .
* எண் கணித ஜோதிடப்படி வியாழக்கிழமைக்கு ( தீர்ப்பு வெளியான நாள் ) வழங்கப்பட்டுள்ள எண் 3 .
* 60 ஆண்டுகளாக வழக்கு நடந்தாலும் , தீர்ப்பு வெளியான ஆண்டு 2010 . அதாவது ( 2 + 0 + 1 + 0 ) = 3 .
இன்னும் யோஜித்து நிறைய சொல்வார்கள் .
--- தினகரன் . 2 அக்டோபர் 2010 .

அட்சய திருதியை !

அட்சய திருதியை நாளில் நடந்தவை .
* பரசுராமர் அவதரித்ததும், கிருத யுகம் தோன்றியதும் அட்சய திருதியை நாளில்தான் .
* இந்தியாவின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்தது ஒரு அட்சய திருதியை அன்றுதான் .
* திரவுபதையின் மானம் காக்க கிருஷ்ண பரமாத்மா அவளுக்கு அட்சய வஸ்திரம் அளித்தது அட்சய திருதியை நாளில்தான் என்கிறார் மகாபாரதம் தந்த வியாசர் .
* மதுரை மீனாட்சியை, சுந்தரேஸ்வரர் மணந்த நாள், அட்சய திருதியை தான் .அதனால்தான் இந்த நாள் திருமணத்திற்கு உகந்தது என்று கூறுவோரும் உண்டு .
* பிரம்மதேவன் பூமியை படைத்ததும் இந்த நாளில்தான் .
* மகாபாரத காலத்தில் சூரியன் ஒரு அட்சய பாத்திரத்தை திரவுபதிக்குக் கொடுத்தான் . அதுவும் இதே நாளில்தான் !
* காசி அன்னபூரணி, சிவபெருமானுக்கு அன்ன பிட்சை அளித்ததும், ஐஸ்வரிய லட்சுமி உதயமானதும் இதே நாளில்தான் .
--- தினத்தந்தி , ஆன்மிகம் . 11. 05. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Saturday, October 2, 2010

தமிழை அப்படி வளர்த்தார் !

உ. வே. சாமிநாதய்யர் போன்ற மாமேதைகளுக்கு ஆசிரியராக இருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கவிதை பாடும் வேகத்தில் தனியானதோர் ஆற்றலைப் பெற்றிருந்தார் . ' நாகைபுராணம் ' என்பதை ஒரு நாளைக்கு 200 செய்யுட்கள் வீதம் இயற்றினார் . அந்தக் காலத்தில் அவர் பெற்றிருந்த செல்வாக்கிற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம் .லண்டனிலிருந்து அவருக்கு கடிதம் எழுதிய ஒருவர் ' மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இந்தியா ' என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார் . அந்தக் கடிதம் அவரிடம் வந்து சேர்ந்துவிட்டது .
இப்படிப்பட்ட பேரறிஞர், தமிழை முற்றிலும் கற்பதற்காக ஒரு பிச்சைக்காரப் பரதேசியுடன் நாள் முழுக்க, வாரக் கணக்கில் சுற்றினார் என்பதை அறியும்போது, நமக்கு உடம்பு என்னவோ செய்யும் ! எல்லாவற்றையும் திறம்படக் கற்ற அவர், அணியிலக்கணத்தைச் சரியாக கற்க விரும்பினார் . முறையாக அவருக்குப் பாடம் சொல்லித்தர யாரும் கிடைக்கவில்லை . திருச்சியில் ஒரு பரதேசிக்கு அணியிலக்கணம் நன்றாகத் தெரியும் என்று கேள்விப்பட்ட அவர், நேராக அந்தப் பரதேசியிடம் சென்றுவிட்டார் .
பரதேசி பல நாட்கள் அவர் பக்கமே திரும்பவில்லை . வீடு வீடாகப் பிச்சை கேட்க அந்தப் பரதேசி போகும்போது , பிள்ளை அவர்களும் , கூடவே வீடு வீடாகப் போயிருக்கிறார் ! கடைசியாகப் பரதேசியின் பலவீனம் ஒன்று , பிள்ளை அவர்களுக்குப் புரிந்து விட்டது . ' கஞ்சா ' குடிப்பது அந்தப் பரதேசியின் வழக்கம் ! பரதேசியின் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப ' கஞ்சா ' வைத் தன் கையால் எடுத்துத் தர ஆரம்பித்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ! பல நாட்கள் இப்படிக் கஞ்சா கொடுத்த பிறகு, ஒருநாள் பரதேசி மனம் இரங்கி பிள்ளை அவர்களிடம் பேசியிருக்கிறார் . அதைச் ' சிக் ' கெனப் பிடித்து, பாடத்தைக் ' கஞ்சா ' பரதேசியிடம் தெளிவாகக் கற்றார் மீனாட்சிசுந்தரம்பிள்ளை .
--- பொக்கிஷம் , ஆனந்த விகடன் . 14. 04. 2010 .