Thursday, April 7, 2011

கதை கேளு...கதை கேளு...

ஒரு ராஜா தன் மந்திரியிடம், . தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் ? சொல்லுங்கள் ' என்று கேட்டார் .
மந்திரி உடனே அதற்கு பதில் சொல்லாமல், கொஞ்சம் களிமண், பஞ்சு, சர்க்கரை மூன்றையும் எடுத்து வந்தார் . ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தண்ணீரில் போட்டார் . களிமண்ணோடு கலந்த தண்ணீர், கலங்கி சேறானது . பஞ்சு முடிந்த அளவு தண்ணீரை உறிஞ்சியது . சர்க்கரை தன்னைக் கரைத்துக்கொண்டு நீரையும் இனிப்பாக்கியது .
இதைக் கவனித்துக் கொண்டிருந்த அரசனிடம், ' மன்னா... தானும் கெட்டு சமூகத்தையும் கெடுக்கிறவன் களிமண் . தான் மட்டும் கெட்டுப் போகிறவன் பஞ்சு . தன்னையே கரைத்து, தான் சேரும் பொருளையும் சுவையுள்ளதாக்கும் சர்க்கரை போன்று சமூகத்தை வாழ வைக்கிறவந்தான் நல்ல தலைவன் ...' என்றார் மந்திரி .
ஆம் ! தன்னலம் துறத்தல்தானே தலைவனுக்கு அழகு !
--- சாரதாநம்பி ஆரூரன் . சொற்பொழிவாளர் . அவள் விகடன் , ஜனவரி 30 , 2004 .

Wednesday, April 6, 2011

காலேஜ் கலாட்டா !

* என்ன கொடுமை இது ?
பெருமாள் செஞ்சா ' பெருமை '
சிவன் செஞ்சா ' திருவிளையாடல் '
கண்ணன் செஞ்சா ' லீலை '
ஆனா, நாம செஞ்சா மட்டும் ' ஈவ் டீசிங் ' கா
என்ன கொடுமை சார் இது ?
* தத்துவம்
வாழ்க்கை என்பது
பனைமரம் மாதிரி
ஏறினா நொங்கு
விழுந்தா சங்கு !
* ஒரு பையன் முதல் நாள் ஒரு
பொண்ணோட கடற்கரையில்
உட்கார்ந்திருந்தான் , மறுநாள்
வேறொரு பெண்ணோட , மறுநாள்
இன்னொரு பெண்ணோட
இதுலேர்ந்து என்ன தெரியுது ?
பொண்ணுங்க மாறிகிட்டே
இருப்பாங்க , பசங்க மாறவே
மாட்டாங்க .
* மொக்க...
பஸ்ல நாம ' பிரேக் டான்ஸ் '
ஆடினா ' ஜாலி 'ன்னு அர்த்தம்
பஸ்சோட ' பிரேக்கே டான்ஸ் '
ஆடினா ' காலி 'ன்னு அர்த்தம் !
* "சாப்ட்வேர் , ஹார்ட்வேர் என்ன
வித்தியாசம் ? "
"செடியோட வேர் சாப்ட்வேர் ,
மரத்தோட வேர் ஹார்ட் வேர் ! "
----தினமலர் , பல இதழ்கள் வாயிலாம .

Tuesday, April 5, 2011

டானிக் !

' உடம்புக்கும் சரியில்லை, மனசுக்கும் முடியல ...' னு புலம்பல் அலம்பல்ஸா இருக்கறவங்களா நீங்க ? பைசா செலவில்லாம மனசையும் உடலையும் மெயின்டெய்ன் பண்ண, இலவசமா மருந்துச் சீட்டு தர்றோம் இந்தாங்க ...
ஆரோக்கியமான உணவு ........................ 1 - 1 - 1
உடலை வலுப்படுத்த உடற் பயிற்சி....1 - 0 - 1
தியானம் .......................................................1 - 0 - 0
மனம்விட்டுப் பேசுதல் .............................0 - 0 - 1
பழவகைகள் சாப்பிடுதல் ......................... 0 - 1 - 0
இதெல்லாம் டாக்டர்ஸ் எழுதித் கொடுத்தது இல்லைங்க ... நம்ம ஊர்ல வாழ்ந்த முன்னோர்களே எழுதி வச்சுட்டுப் போனது . அப்படியே புடிச்சுகுங்க . ஆரோக்கியமா இருங்க !
--- ச. கார்த்திகேயன் . அவள் விகடன் , டிசம்பர் 7 , 2007 .

Monday, April 4, 2011

என்ன ஒற்றுமை !

ஒரு ஓட்டலுக்குச் சென்ற ஓர் இளம்பெண் பாஸந்திக்கு ஆர்டர் கொடுத்தாள் . எதிரே அமர்ந்திருந்த ஆள், " அட... என்ன ஒற்றுமை . நானும் பாஸந்திதான் ஆர்டர் கொடுத்தேன் " என்றான் .
" நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் " என்றாள் பெண் .
" அட... என்ன ஒற்றுமை . நானும் சந்தோஷமா இருக்கேன் " என்றான் அந்த ஆள் .
" நான் கர்ப்பமா இருக்கேன்னு டாக்டர் இன்னிக்கு கன்பர்ம் பண்ணார் " என்றாள் பெண் .
" அட... என்ன ஒற்றுமை . என்னோட கோழிப்பண்ணைல முட்டை போடாம இருந்த கோழிகள் இப்பதான் முட்டை போட ஆரம்பிச்சிருக்கு " என்றான் அந்த ஆள் .
" என்ன செய்ததால இப்படி ஆச்சு ? " என்று கேட்டாள் பெண் .
" சேவலை மாத்திட்டேன் " என்றான் அந்த ஆள் .
" அட....என்ன ஒற்றுமை " என்றாள் பெண் .
--- தினகரன் . 29/8/2010 /

Sunday, April 3, 2011

வட்டமிட்ட எண்களை சட்டென சொல்லலாம் !

ஒரு பேப்பரில் 1 முதல் 31 வரையிலான எண்களை எழுதுங்கள் . உங்கள் நண்பரிடம் அதைக் காண்பித்துவிட்டு, திரும்பி நின்று கொள்ளுங்கள் .
நண்பரிடம், " இதில் அடுத்தடுத்து எண்களாக ஏதாவது 3 எண்களை வட்டமிட்டுக் கொள் . அந்த எண்களை என்னிடம் கூற வேண்டாம் . அந்த எண்களைக் கூட்டிவரும் தொகையை மட்டும் என்னிடம் சொல் . நீ வட்டமிட்ட எண்களை நான் சொல்கிறேன் ! " என்று ' பில்டெப் ' கொடுங்கள் .
நண்பர் ஒரு எண்ணைச் சொல்வார் .
அதன்பின், அவர் வட்டமிட்ட எண்களை நீங்கள் கண்டுபிடித்து சொல்வது எப்படி ?
ஒரு உதாரணம் :
உங்கள் நண்பர் 16, 17, 18 ஆகிய எண்களை வட்டமிட்டுள்ளார் என்று வைத்துக் கொள்வோம் . இவற்றின் கூட்டுத்தொகை 51 . இதை அவர் உங்களிடம் சொல்வார் .
இந்த எண்ணை நீங்கள் 3--ஆல் வகுக்க வேண்டும் . அதில் கிடைக்கும் விடைதான் அவர் வட்டமிட்ட எண்களில் மத்தியில் உள்ள எண் . அதன் முன்னும் பின்னும் உள்ள எண்கள்தான், அவர் வட்டமிட்ட பிற 2 எண்கள் .
இந்த உதாரணத்தில் 51 ஐ 3 ஆல் வகுத்தால் 17; அதன் முன்னும் பின்னும் உள்ள எண்கள் 16, 18 ; எனவே அவரிடம், " நீ வட்டமிட்ட எண்கள் 16, 17, 18 " என்று சொல்லி அசத்திவிடலாம் !
-- தினமலர் , ஆகஸ்ட் , 27 , 2010.

Saturday, April 2, 2011

6 பருவங்கள் !

இறைவழிபாடு மிகுந்த மார்கழி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக கணக்கிட்டு பின்வரும் பருவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன .
1 ) மார்கழி -- தை ( ஹேமந்த ருது ) -- முன் பனிப்பருவம் .
2 ) மாசி -- பங்குனி ( சிசிர ருது ) -- பின் பனிப்பருவம் .
3 ) சித்திரை -- வைகாசி ( வசந்த ருது ) -- கோடைப் பருவம் .
4 ) ஆனி -- ஆடி ( கிரீஷ்ம ருது ) -- காற்றடிப் பருவம் .
5 ) ஆவனி -- புரட்டாசி ( வர்ஷா ருது ) -- முன் மழைப் பருவம் .
6 ) ஐப்பசி -- கார்த்திகை ( சரத் ருது ) -- பின் மழைப் பருவம் .
-- தினமலர் , ஆகஸ்ட் , 28 , 2010.

Friday, April 1, 2011

தெரியுமா ? தெரியுமே !

* பால் வழக்கத்தை விட கெட்டியா தெரியறதுக்காக யூரியா நியூட்ரலைசர்ங்கிற ரசாயனத்தைக் கலக்குறாங்க .
* தொலைதூர ஊர்கள்லருந்து பால் விநியோகம் நடக்குறதால, பால் திரியறதைத் தள்ளிப்போட சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுகிறது .
* துவரம் பருப்பில் கலக்கிறதுக்காகவே வட இந்தியாவிலேர்ந்து கேசரி பருப்புங்கிற ரகத்தை வரவழைக்குறாங்க .
--- குமுதம் , 1. 9. 2010.
* இப்போது ஒரு சிரிய வீடு கட்டவே முறுக்கு கம்பிகள் தொடங்கி சிமென்ட் வரை பயன்படுத்துகிறோம் .ஆனால், தஞ்சை பெரிய கோயிலோ, பாறைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியே கட்டப்பட்டிருக்கிறது . பூசுவதற்கு சாந்து பயன்படுத்தப்படவே இல்லை . புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை, குன்றாண்டார் கோயில் ஆகிய இரண்டு ஊர்களில் இருந்த மலைகலை உடைத்து பெயர்த்துக் கொண்டுவந்து கட்டப்பட்டதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் .
--- தினமலர், ஆகஸ்ட் 29 , 2010.
* சோப் தாயாரிக்க தாவர் எண்ணெய் மாதிரியான இயற்கையான பொருள்களைத்தான் பயன்படுத்துவாங்க . ஆனா, டிட்டர்ஜென்ட் அப்படியில்லை . பெட்ரோலியம், செயற்கைக் கொழுப்பு, தார்... இப்படி செயற்கைப் பொருள்களால் ஆனது .
--- அவள் விகடன் , ஜனவரி 30 , 2004 .