கரி நியாயம் ( அங்கார நியாயம் ) :
கரியைக் கையிலெடுத்தால் அது சூடுடையதாய் இருக்கும் போது சுட்டுப் புண்ணாக்குகின்றது . குளிர்ந்திருக்கும் போது சுடாவிடினும் கையை மாசுபடுத்துகிறது . எனவே , அது எந்நிலையிலிருப்பினும் அதன் கூட்டுறவால் தீமையே விளைகிறது . தீயோர் கூட்டுறவும் அத்தகையதே .
கழுதைக் குரல் ( ராய பருத நியாயம் ) :
கழுதையின் குரல் தொடக்கத்தில் பெரிதாகவே தொடங்கி உச்சத்துக்குச் சென்று பின் இறங்கி மத்யமமாகிப் படிப்படியே இறங்கி அடங்கிவிடும் . கீழோர் அன்பும் பெரிதாகவே தொடங்கி வளர்ந்து பின் படிப்படியாய்த் தேய்ந்து பின் இல்லயாகும் .
கற்பகத்தின் பழம் உடனே பயன்படுகின்றது என்னும் நியாயம் :
கற்பக மரத்தின் காய் தோன்றியவுடனே பழுத்துவிடுமாம் . ஏனைய மரங்களின் காய்கள் தோன்றிப் பன்னாளைக்குப் பின்னர் மலர்வது போல அன்று . அதுபோலவே புண்ணியவான் விருப்பம் உடனே இறைவேறும் . ( கர்பக மரமும் பருவத்தில்தான் பழந்தருமெனில் ஏனைய மரங்களைவிட அதற்கு என்ன சிறப்பு உள்ளது ) .
--- கவியரசு கு. நடேசகவுண்டர் . நியாயக்களஞ்சியம் . என்ற நூலில் .. 15 . 8 . 1985
Saturday, May 7, 2011
Friday, May 6, 2011
எத்தனை புத்தகம் ?
நண்பரிடம் இப்படி சொல்லுங்கள் :
1 . உன் பையில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை 3 -ஆல் பெருக்கு .
2 . வரும் விடையுடன் 1 -ஐ கூட்டு .
3 . வரும் விடையை 3 -ஆல் பெருக்கு .
4 . வரும் விடையுடன் உன் பையில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைக் கூட்டு .
இப்படி சொல்லிவிட்டு, " என் மேஜிக்கைப் பார் இப்போது ! " என்று ' பில்டெப் ' கொடுத்துவிட்டு, " விடையில் முதல் இரு இலக்கங்கள்தான் உன் புத்தகங்களின் எண்ணிக்கை ! விடையின் கடைசி இலக்கம் 3 ! " என்று அசத்துங்கள் . அது நூறு சதவீதம் சரியாக இருக்கும் !
ஒரு உதாரணம் : நண்பரின் பையில் 12 புத்தகங்கள் என்று வைத்துக்கொள்வோம் . அவருக்கு கடைசி விடையாக 123 வரும் . ( 12 பெருக்கல் 3 = 36 , கூட்டல் 1 = 37, பெருக்கல் 3 = 111 ; 111 கூட்டல் 12 = 123 ). இதன் முதல் இரு இலக்கங்கள் புத்தகங்களின் எண்ணிக்கையான 12 ; கடைசி இலக்கம் 3 ! .
--- தினமலர் . செப்டம்பர் 3 , 2010 ..

Thursday, May 5, 2011
நியாயக்களஞ்சியம் .
எவ்வெச் சமயத்தில் பெண்டிரைப் பிறர் காண்பது குற்றமாகாது : நியாயம் .
இராமன் , சீதை இலக்குமணனுடன் காட்டிற்குச் செல்ல அயோத்தி வீதியில் நடக்கும்போது , நகர மக்கள் நீர் பொழியும் கண்ணீனராய் வழியை அடைத்து நின்றனர் . அப்போது இராமன் சீதையை நோக்கி , " மைதிலி உன் முக்காட்டினை நீக்குக " என்று பணித்தான் . அவளும் அங்ஙனமே செய்தாள் . பின் , நகர மக்களை நோக்கிப் , " பெருமக்களே என் மனைவியை , நீர் நிறைந்த உமது விழிகளால் தடையின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் ; மகளிரை வேள்வியிலும் , திருமணத்திலும் , ஆபத்திலும் , காட்டிலும் பார்ப்பது குற்றமாகாது " என்றான் .
ஒட்டகமுள் செடி நியாயம் ( உஷ்ட்ர கண்டக நியாயம் ) :
ஒட்டகம் வன்னி முதலிய முள் நிறைந்த தழைகளையும், வேம்பு முதலிய கசப்புத் தழைகளையும் அவற்றால் விளையும் துன்பம் கருதாமல் விரும்பித் தின்னும் . கீழ்மக்கள் நல்லனவிருக்கவும் தீயவைகளினாலுண்டாகும் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வாரகள் .
ஒருவன் உண்டு ஒருவன் கக்கின நியாயம் :
ஒரு நூல் விக்கின மின்றி முடியும் பொருட்டு முதலில் மங்கள வாழ்த்துப் பாட வேண்டும் என்பாரை மறுத்து இந்நியாயத்தைக் கூறுவர் . மங்கள வாழ்த்துடன் தொடங்கிய நன்னூல் நிறைவுபெறாமல் நின்றது . அஃதின்றித் தொடங்கிய தொல்காப்பியம் இனிது நிறைவேறி வழங்குகிறது .
--- கவியரசு கு. நடேசகவுண்டர் . நியாயக்களஞ்சியம் . என்ற நூலில் . 15 . 8 . 1985

Wednesday, May 4, 2011
ஆச்சர்யமான வரலாறு !
வரலாறு ஆச்சர்யங்களால் நிரம்பியது . ஜீன் பால் முல்டர்ஸ் என்கிற பத்திரிகையாளர் , தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஹிட்லரின் தம்பி , ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹிட்லரின் மாமா இருவரிடமும் மரபணுப் பரிசோதனை செய்தார் . ஹிட்லரின் முன்னோர்கள் யூத மற்றும் ஆப்பிரிக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்க , ஆச்சர்யத்தில் வாய் பிளந்தது உலகம் . லட்சக் கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர் , ஒரு யூத வம்சத்தவர் என்றால் என்ன சொல்வது ?
என்ன கொடுமை ஹிட்லர் !
--- இன்பாக்ஸ் , ஆனந்தவிகடன் 8 / 9 / 2010 .

Tuesday, May 3, 2011
டிப்ஸ்...டிப்ஸ்...
டிப்ஸ்...டிப்ஸ்...
* பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும் . எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை ! அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம் . அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் , மோர் பாத்திரத்தில் தோசை மாவையும் வைக்கலாம்
* பாகற்காயின் கசப்பை நீக்குவதற்காக காயை வேகவைத்து நீரை வடித்தால் காயின் கசப்போடு சத்துகளும் போய்விடும் . எனவே பாகற்காயை நறுக்கி உப்பு , மஞ்சள் பொடி , வெல்லத்தூள் , எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி அரைமணி வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும் .
* பெரிய அளவில் காபி தயாரிக்கும் போது டிகாஷன் சீக்கிரம் இறங்க வேண்டுமா ? காய்கறி வடிகட்டும் வடிதட்டை, ஒரு அகலமான பாத்திரத்தின் மேல் வைத்து, தட்டின்மீது ஒரு சுத்தமான, மெல்லிய வெள்ளைத் துணியைப் போடுங்கள் . கால் கிலோ காப்பிப் பொடி போட்டு லேசாக அழுத்தி, கொதிக்கும் வெந்நீரைக் கரண்டியால் ஊற்றுங்கள் . ஒத்தாற்போல ஸ்டிராங்கான டிகாஷன் விரைவில் தயார் .
* மாறுதலாக தயிர் பச்சடி செய்ய வேண்டுமா ? ஜவ்வரிசியை சிறிது நெய்யில் வறுத்து ஆறியதும் தயிர், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, கீறிய மிளகாய் சேர்த்துக் கடுகு தாளியுங்கள் .ஜவ்வரிசி சற்று ஊறிய பின் சூப்பர் பச்சடி தயார் .
* என்ன ' ஃபிரிட்ஜ்' ஜில் வைத்த சப்பாத்தி மாவு கறுத்து விட்டதா ? அடுத்தமுறை சப்பாத்தி மாவை பிசந்து எவர்சிவர் பாத்திரத்தில் வைப்பதற்குப் பதிலாக பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துப் பாருங்களேன் . நேற்று வைத்தாற்போல மாவு வெளுப்பாக இருக்கும் !
* கொசுவை விரட்ட உபயோகிக்கும் மேட் தீர்ந்து விட்டதா ? முதல் நாள் உபயோகித்த மேட்டின் மேல் சில துளிகள் வேப்பெண்ணெயை விட்டு, மறுபடி மிஷினில் வைத்து விடுங்கள் .கொசு வராது .
* மண் தொட்டிகளில் செடி வளர்ப்பதானால் இரண்டு வாரங்களுக்கு முன் தொட்டியில் காய்கறி, பழத் தோல்களை போட்டுக் கொண்டே வாருங்கள் . பாதி தொட்டி நிரம்பியதும் தேவையான அளவு மண், பிடி ஆம்பல் கலந்து விட்டு செடி நட்டால் தள தளவென வளரும் . தோல்களின் மேல் மண்ணைப் போட்டு மூடவும் . இல்லையென்றால் ' நாற்றம் ' எனக் கத்துவார்கள், வீட்டிலுள்ளோர் !
* வீடு பெருக்கும் துடைப்பம் கட்டையாகிப் போனால், நாம் உடனே தூர எறிந்து விடுவோம் . அப்படிச் செய்யாமல் அவற்றை ஒரே அளவு சீராக வெட்டி ( ஹேர் -- கட் செய்வது போல ) வைத்துக் கொண்டால், வீட்டு ஜன்னல், அலமாரி போன்ற இடங்களைச் சுத்தம் செய்ய உபயோகமாக இருக்கும் .
-- மங்கையர் மலர் / நவம்பர் 2000 .

Monday, May 2, 2011
மரணப் படுக்கை .
சமஸ்கிருதத்தில் இப்படிச் சொல்வார்கள். ' நீ அழுதுகொண்டே பிறந்தபோது, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாகச் சிரித்திருப்பார்கள். ஆனால், இறக்கும்போது நீ சந்தோஷமாகக் கண் மூட வேண்டும். அப்போது உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன் பிரிவால் கண்ணீர் சிந்த வேண்டும். இதுதான் வாழ்க்கையின் இலக்கணம்.'
மரணப் படுக்கையில் இருந்த ஜார்ஜ் பெர்னாட்ஷாவிடம் , ' நீங்கள் மீண்டும் உங்கள் வாழ்நாளைக் கழிக்க முடியும் என்றால், அதனை எப்படிக் கழிப்பீர்கள் ?' என்று கேட்டார்கள். நீண்ட பெருமூச்சுடன் பெர்னாட்ஷா இப்படிப் பதிலளித்தார். ' இப்படி எல்லாம் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு , எப்படி எல்லாம் வாழாமல் இருந்தேனோ... அப்படி எல்லாம் வாழ்வேன் !'
சமஸ்கிருத வாக்கியத்துக்கும் பெர்னாட்ஷாவின் கூற்றுக்கும் இடையே ஏதோ ஓர் ஒற்றுமை இழை ஒளிந்திருக்கிறது. அது என்னவென்று கண்டுகொண்டால்... அதுதான் வாழ்க்கைக்கான மந்திரம்.
--- கி. கார்த்திகேயன். ஆ. விகடன் , 14. 04. 2010.

Sunday, May 1, 2011
கணக்கு மேஜிக் !
உங்கள் நண்பர், ஒரு மிகப் பெரிய எண்ணை சொல்லி அது 4-ஆல் மீதியின்றி வகுபடுமா என்று சட்டெனக் கண்டுபிடிக்க சவால் விடுக்கிறார்...
அது ஒற்றை எண்ணாக இருந்தால், வகுபடாது என்று சட்டென சொல்லிவிடலாம். இரட்டை எண்ணாக இருந்தால் கஷ்டம் ? ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் பதில் சொல்லமுடிந்தால் எப்படியிருக்கும்? சந்தோஷம் பொங்குமே ! அப்படி சந்தோஷப்பட இதோ ஒரு ஈஸி டெக்னிக்...
ஒரு எண் : 1234567890. இதன் கடைசி இலக்கத்தின் முந்தைய இலக்கம் 9 . இதை 2ஆல் பெருக்கினால் 18. இதோடு கடைசி இலக்கமான 0-ஐ கூட்டினால் 18. இது , 4ஆல் வகுபடாது . ஆகவே, இந்த எண்ணும் 4-ஆல் வகுபடாது .
இன்னொருஎண் : 12345678930156 . இதன் கடைசி இலக்கத்தின் முந்தைய இலக்கம் 5. இதை 2ஆல் பெருக்கினால் 10 . இதோடு கடைசி இலக்கமான 6-ஐ கூட்டினால் 16. இது நான்கால் வகுபடும் என்பதால் இந்த எண்ணும் 4-ஆல் மீதியின்றி வகுபடும் .
ஈஸி டெக்னிக் : ஒரு எண்ணின் கடைசி இலக்கத்தின் முந்தைய எண்ணை இரண்டால் பெருக்கிவரும் விடையையும் கடைசி இலக்கத்தையும் கூட்டி அந்த கூட்டல் தொகை நான்கால் வகுபடுமா என்று பார்த்தால் போதும் !
--- தினமலர் , மே 21 , 2010 .

Subscribe to:
Posts (Atom)