Monday, March 5, 2012

ஆன்மிக முன்னேற்றம் .

ஆன்மிக முன்னேற்றத்திற்கான தர்ம வழிகளில் நான்கு வகைகள் !
முதல் வகையின் பெயர், ' சாமானிய தர்மம் '. அதாவது மாதா, பிதா, குடும்பத்தினர், சக மனிதர்கள், குரு ஆகியோரிடம் மதிப்பு மரியாதையோடு நடந்து கொள்ளுதல் . இதைத் தனது வாழ்க்கையால் அறிவுறுத்தினார், ஸ்ரீராமர் !
2 -வது வகையின் பெயர், ' சேஷ தர்மம் '. அதாவது, ' பூலோக உறவுகள் நிலையானவை அல்ல; தெய்வீக நெருக்கமே நிலையானது ' என்ற ஞானப் பக்குவத்துடன், தெய்வத்தின் பாதங்களைச் சரணடைதல்... வாழ்க்கை முழுவதும் ஸ்ரீராமரை நிழல் போலத் தொடர்ந்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் லட்சுமணன் !
3 - வது வகையின் பெயர், ' விசேஷ தர்மம் ' அதாவது, எப்போதும் தெய்வீக சிந்தனையோடு இருத்தல் ... ஸ்ரீராமரை விட்டு பிரிந்திருந்த வேளையிலும் மனம் முழுக்க அவரையே நிறைத்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் பரதன் !
4 -வது வகையின் பெயர், ' விசேஷர தர்மம் '. அதாவது, இறையடியார்க்குத் தொண்டு புரிவதற்கே வாழ்க்கையை அர்ப்பணித்தல்.. ஸ்ரீராமரின் பூரண பக்தரான பரதனை நிழல் போலத் தொடர்ந்து, அவருக்குத் தொண்டு செய்வதையே . வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் சத்ருக்கனன் !
நான்கு வகை தர்மங்களும் சிறப்பானவையே ; இருப்பினும், சரணாகதி தர்மமான ' சேஷ தர்ம ' முறை மிக மிகச் சிறப்பு .
--- தினமலர் இணைப்பு . மார்ச் 26 , 2011 . .

பிபியை குறைக்கணுமா ?

வாக்கிங், ஜாக்கிங் போகாம பிபியை குறைக்கணுமா ?
* ஒரு டென்னிஸ் பாலை எடுத்துக்கோங்க .
* இரண்டு நிமிஷத்துக்கு தொடர்ந்து அந்த பாலை கையில வெச்சுகிட்டு பிசையற மாதிரி அழுத்துங்க .
* கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு திரும்பவும் அதே மாதிரி செய்ங்க . 10 நிமிஷத்துக்குள்ள நாலு தடவை செய்யணும் .
* வாரத்துக்கு மூணு நாளு இதே மாதிரி செஞ்சுட்டு ஆறு வாரம் கழிச்சு பிபியை செக் பண்ணிப் பாருங்க . மாத்திரை போடாமலேயே பிபியை குறைஞ்சிருக்கும் .
--- தினமலர் இணைப்பு . மார்ச் 26 , 2011 . .

Sunday, March 4, 2012

மேஜிக் பெருக்கல் !

கீழே உள்ள பெருக்கல் கணக்குகளைக் கவனியுங்க :
4 X 1738 = 6952 .
4 x 1963 = 7852 .
12 x 483 = 5796 .
ஒவ்வொன்றிலும் 1 முதல் 9 வரையிலான எண்கள் வந்துள்ளன !
--- தினமலர் இணைப்பு . பிப்ரவரி 4 , 2011 .

Saturday, March 3, 2012

அட...அப்படியா சங்கதி ? !

' ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்...
பாடுற பாட்டை பாடி கறக்கணும் '.
மாடு பாடுறதா இருந்தா...... மனுஷ பயக அதுங்கள படுத்துற கொடுமையைத்தான் மொதல்ல சொல்லியிருக்கும் ! ஆனா, விஷயமே வேற... ஆடுற பாட்டா இருந்தா நிச்சயம் அதை ஆடித்தான் கத்துக்கணும் . அதேபோல பாடுறதுக்கு ஏத்த பாட்டா இருந்தா... நிச்சயம் பாடித்தான் கத்துக்கணும் . அதை, ' ஆடுற பாட்டை ஆடி கத்துக்கணும்... பாடுற பாட்டை பாடி கற்கணும் ' சொல்லிட்டு போயிருக்காங்க . நாம வேற மாதிரி சொல்லிகிட்டு திரியறோம் .
' அடுத்தவங்களோட தன்மைய தெரிஞ்சுகிட்டு, விஷயத்தை சாதிச்சுக்கணும் ' ங்கற அர்த்தத்துலயும் இதை எடுத்துக்கலாம் .
---மெய்யழகன் , அவள் விகடன் . ஜனவரி 15 , 2010 .

Friday, March 2, 2012

துணுக்கு !

ஒரு ஆங்கில நகைச்சுவைத் துணுக்கு...
ஒரு பணக்கார கஞ்சன், தன் மரணத்தறுவாயில் மனைவியை அழைத்து " என்னைப் புதைக்கும் போது நிர்வாணமாகப் புதைத்து விடு... கவனம்... அத்தனை விலை கூடிய கோட் சூட்டுடன் பிணத்தை மண்ணில் புதைக்கும் மடத்தனத்தைச் செய்யாதே " என்றான் . தலையில் அடித்துக் கொண்டாள் மனைவி . " உங்களுக்குக் குளிருமே...மேலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்..." என்றாள் . " உளராதே... எப்படியும் நரகம்தான் போவேன்... அங்கு நெருப்பில் குளிறாது " என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தான் . தலை எழுத்தே என்று நிர்வாணமாகப் புதைத்தாள் மனைவி .
ஒரு நாள் இரவு நேரம் கண்ணாடி ஜன்னலைத் தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் . கணவனது ஆவி ஆடிக்கொண்டிருந்தது ... " என் கம்பளி உடைகளைக் கொடு .. நரகத்தில் குளிருகிறது " என்றான் கணவன் . " நரக நெருப்பில் வெப்பமாக இல்லையா ? " என்று ஆச்சரியத்துடன் கெட்டாள் மனைவி . " ம்ஹும்...இப்போது நரகத்திற்கு நிறைய பணக்காரர்கள் வந்துவிட்டார்கள் ... அத்தனை பயலும் சேர்ந்து ஏஸி செய்து விட்டார்கள்... குளிர் தாங்க முடியவில்லை " என்றபடி கம்பளியை உருவிக்கொண்டு கணவன் ஆவி நகர்ந்தது .
கற்பனைதான்... ஆனால் அழகான கற்பனை இது . கஞ்சத்தனம்... நரகம் வரை கஞ்சத்தனம் .
--- 'எப்போதும் சந்தோஷம் ' .என்ற நூலில் , சுகி . சிவம்
---- நூல் உதவி : R. கந்தசாமி , அம்பகரத்தூர்

மதிப்பு கண்டுபிடிக்க ' X ' .

கணிதத்தில் மதிப்பு கண்டுபிடிக்க ' X ' -- ஐப் பயன்படுத்தக் காரணம் :
ஆங்கில எழுத்துக்களில் இருபத்திநாலாவது எழுத்து X , ரோமன் எண்களில் X என்றால் பத்து ( 10 ). X -- க்குத் தனி உச்சரிப்பு கிடையாது . உதாரணமாக, axe என்பதை உச்சரிக்கும்போது aks என்பதாகவே உச்சரிக்கிறோம் . தெரியாத, புரியாத ஒளிக் கதிர் என்பதால்தான், X -- ray என்று வைத்தார்கள் . எல்லாவற்றுக்கும் மேலாக, X இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் எழுத்து ( X mas ) . ' அல்ஜீப்ரா'வில் தெரியாத விஷயத்துக்கு ( unknown quantity ) X என்று வைத்துக்கொண்டது கிறிஸ்து பிறப்புக்குப் பிறகுதான் ! வைத்தது யார் என்று தெரியவில்லை !
--- ஹாய் மதன் , ஆனந்த விகடன் , 20 . 4 . 2011 .

Thursday, March 1, 2012

கத்தரிக்காய் !

கத்தரிக்காய், காயா அல்லது பழமா ?
பழம் என்றால் என்ன ? ' எது வித்துக்களைக் கொண்டிருக்கிறதோ அதுவே பழம் ' என்கிறது தாவரவியல் . எனவே, இந்த வரையறைப்படி கத்திரி பழம்தான் .... தக்காளி, வெள்ளரி ஆகியவையும் பழம்தான் !
அதேவேளையில் கத்தரிக்காய், தக்காளிக்காய், வெள்ளரிக்காய் என்று சொல்வதே பழக்கமாக இருப்பதால், இவற்றைப் பழம் என்று சொல்லாததைப் பெரிய தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை .
--- தினமலர் இணைப்பு , ஏப்ரல் 15 . 2011 .