Wednesday, June 6, 2012

அர்த்தப் புதையல் .


சூர்பகர்ணாயே
நமஹ:
சூர்பம் -- முறம்;
கர்ணம் -- காது.
முறம் போன்று இருக்கும் யானையின் காது, அரிசியை புடைக்கும்போது, முறம் தூசிகளை கீழேதள்ளி விடுகிறது. தூசியில்லா அரிசிதான் முறத்தில் எஞ்சியிருக்கும். அதுபோல், காதில் விழும் வார்த்தைகளில் நல்லதை தேர்ந்தெடுத்து, தீயதை தள்ள வேண்டும் என்று விநாயக அஷ்டோத்தரத்தில் வருகிறது.
-- அனகா, சென்னை. தீபம். அக்டோபர் 5, 2011 .
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Tuesday, June 5, 2012

' மாயா '


உடல் இருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு அது இல்லை என்பதும் உண்மை. சற்று ஆழமாகப் பார்த்தால் உடல், மனம் இரண்டும் வேறு வேறு பொருளல்ல. கண்ணுக்குத் தெரியும் மனமே உடல், கண்ணுக்குத் தெரியாத உடலே மனம் என்கிறார் ஓஷோ. விஞ்ஞானமும் அப்படித்தான் சொல்கிறது. இதைத்தான் ஐன்ஸ்டீன் E = MC 2 என்று கூறினார். உயிரணுக்களின் அமைப்பின், இயக்கத்தின் வேக தாளத்தைப் பொறுத்து ஒன்று கண்ணுக்குத் தெரியும், இன்னொன்று தெரியாது. வேகம் கூடக்கூட ஐம்புலன்களுக்குப் புலப்படாது. அப்படியானால் எல்லாமே வெறும் தோற்றம்தான். இந்த உண்மையைத் தான் நமது மரபு ' மாயா ' என்று கூறியது. நமக்கு ' சாயா ' குடிப்பதில் உள்ள ஆர்வம் கூட மாயா பற்றி இல்லை .
--- நாகூர் ரூமி , கல்கி . 26 . 2 . 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Monday, June 4, 2012

ஒற்றுமை !


ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஹனுமனுக்கும் உள்ள ஒற்றுமை :
** இருவருமே தூது போனார்கள். தூது பலிக்காமல் மாபெரும் யுத்தம் நடந்தது .
** இருவருமே விஸ்வரூபம் எடுத்தார்கள்.
** இருவருமே மலையைத் தூக்கினார்கள். கோவர்த்தனம். சஞ்சீவி.
** இருவருக்குமே வெண்ணெய் பிடிக்கும்.
** இருவருமே பாரிஜாத மரத்தினடியில் இருப்பார்கள். ' ச்யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம சிம்மாஸனோ பரி ' --
ஸகஸ்ரநாமத்தில் வரும் வரிகள். ஹனுமன் பாரிஜாத மரத்தினடியில் ராமத்யானம் செய்து கொண்டிருப்பார்.
** இருவருமே தானாக கட்டுண்டார்கள். கண்ணன் -- யசோதைக்காக, உரலில் கட்டுண்டார். ஹனுமன் பிரம்மாஸ்திரத்துக்கு
கட்டுப்பட்டார்.
** பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். கொடியில் இருந்து ஜெயிக்க வைத்தார் ஹனுமன்.
-- லக்ஷ்மி ஸந்தானம், ஸ்ரீரங்கம். தீபம். அக்டோபர் 5, 2011 .
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Sunday, June 3, 2012

காது குத்த...


குழந்தைகளுக்கு காது குத்த கனிவான நாள் :
குழந்தை பிறந்து 6, 7, 8 வது நாளில் அல்லது முதல் பிறந்த நாளில் காது குத்தும் விழா செய்யலாம். இரண்டு திதி அல்லது இரண்டு நட்சத்திரம் வராத நாளாக அது இருக்க வேண்டும் . திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 கிழமைகளும், வளர்பிறை, த்விதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய 6 திதிகளும், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சித்திரை, திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் சிம்மம், விருச்சிகம், கும்பம் தவிர மற்ற 8 லக்னங்களும், கர்ணவேதை ( காது குத்ததல் ) செய்ய உகந்தவை . லக்னத்துக்கு 8 -ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது .குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கக்கூடாது . குழந்தையின் தாய் மாமாவின் மடியில் அமர்த்தி காது குத்தல் செய்ய வேண்டும் .
--- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், கல்கி . 26 . 2 . 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Saturday, June 2, 2012

தத்துவம் மச்சி தத்துவம் .


**" பர்சனல் லோன் கேக்கறீங்களே...எதுக்குன்னு சொல்லமுடியுமா ? "
" அதான் பர்சனலாச்சே... எப்படி சார் சொல்ல முடியும் ..?"
** " இந்த வீடு எங்கப்பா எம்.எல்.ஏ -வா இருக்கும்போது, ஒவ்வொரு கல்லா..."
" பார்த்துப் பார்த்து கட்டினாரா ...? "
" இல்லை... மேடையில வந்து விழுந்ததை வச்சு கட்டினது .."
--- குங்குமம் , 18 . 7. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Friday, June 1, 2012

ஜோக்கூ....


** கேட்கும் கேள்விகளுக்கு
பெண்கள்
சரியான பதிலைச் சொல்வது...
எக்ஸாம் பேப்பரில் மட்டுமே !
** கண்களில் தூக்கம் இல்லை
வாழ்வில் சந்தோஷம் இல்லை
முகத்தில் புன்னகை இல்லை
மனதில் நிம்மதி இல்லை
காரணம் ...
பக்கத்து வீட்டு ஃபிகர்
ஊரில் இல்லை .
--- குங்குமம் , 18 . 7. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

காந்திஜி -- கோட்சே !


காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது . கோட்சே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு மனம் வருந்தியவனாக ' எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக்கூடாது. காந்திஜி உயிரோடு இருந்தால் இதை அனுமதிக்க மாட்டார் ' என்று கெஞ்சினான .
அதனை ஒரு கருணை மனுவாகவும் எழுதிக் கொடுத்தான் . அந்தக் கருணை மனு அப்போது இந்தியாவின் கவர்னல் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு ராஜாஜி அளித்த பதில் : ' உண்மைதான் காந்திஜி உயிரோடு இருந்தால் கோட்சேவுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்குமா ? '
--- இலக்கியப்பீடம், பிப்ரவரி , 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .