Wednesday, June 13, 2012

தமாஷ் !


** டேக் கேர் டங்க் !
பேசும் வரை அந்த வார்த்தைகள் உனக்கு அடிமை... பேசிய பின்பு அந்த வார்த்தைகளுக்கு நீ அடிமை !
** சங்கப் பலகை !
கேலண்டரில் தேதி கிழிக்கிறது முக்கியம் இல்ல... அந்தத் தேதியில நாம என்ன கிழிச்சோம்கிறதுதான்
முக்கியம்.
** பவர்கட் புலம்பல்!
சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்... கரன்ட் கட் பார்த்து டைம் சொல்றது இந்தக் காலம்.
தேங்க்ஸ் டு தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு !
--- அவள் விகடன் , 27 . 3. 2012 .
--- இதழ் உதவி: N.கிரி , நியூஸ் ஏஜென்ட் , திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி ).

Tuesday, June 12, 2012

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் !


** ராமனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் -- புனர்பூசம்.
** 'திரு' என்ற அடையோடு கூடிய இரு நட்சத்திரங்கள் -- திருவாதிரை, திருவோணம்.
** ரோகிணி நாளில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் -- கிருஷ்ணர்.
** ஒவ்வொரு ராசியிலும் இடம்பெறும் நட்சத்திரம் -- இரண்டேகால்.
** சரஸ்வதிக்கும், அனுமனுக்கும் உரிய நட்சத்திரம் -- மூலம்.
** ஆண்டாள் பூவுலகில் அவதரித்த நன்னாள் -- ஆடிப்பூரம்.
** நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வந்தநாள் -- சதுர்த்தசி திதி, சுவாதி நட்சத்திரம்.
** முருகப்பெருமானுக்கு உகந்த இரு நட்சத்திரங்கள் -- கார்த்திகை, விசாகம்.
** சுப நிகழ்ச்சிகள் செய்ய ---- நட்சத்திரத்தன்று நாள் நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பர். -- ரோகிணி.
** நட்சத்திர மண்டலத்தில் முதல் நட்சத்திரமாக திகழ்வது -- அசுபதி.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

Monday, June 11, 2012

காசி.


காசிக்கு தம்பதியராகப் போவதுதான் விசேஷம். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு. ஒன்று மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நீராட வேண்டும். இருவரும் இல்லாத பட்சத்தில் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என சாத்திரங்கள் கூறுகின்றன.
-- ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார் , மயிலாடுதுறை.
'ஓம்'
போற்றி பாடும் போது ' ஓம்' என்பது ஏன்?
108 போற்றி, 1008 போற்றி சொல்லும்போது, சுவாமியின் பெயரின் முன்னால் 'ஓம்' சேர்க்கிறோம். முடியும் இடத்தில் 'போற்றி' என்கிறோம். உதாரணத்துக்கு 'ஓம் முருகா போற்றி'. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று :
" ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், ' என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் 'ஓம்' என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை அழைக்கிறோம். அப்படி சொல்லும்போது, அந்தந்த தெய்வங்களிடம் ' என்னை உன்னோடு சேர்த்துக்கொள்' என்று பொருள். தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறொம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குறிய பலன் உறுதியாக கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமாந்தமும் ஏற்படும்.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

Sunday, June 10, 2012

ரீடர்ஸ் பேட்டை,


** மயிலுக்கும் கிளிக்கும் என்ன வித்தியாசம் ...?
யோசிங்க... யோசிங்க... மயில் தேசியப் பறவை. கிளி ஜோசியப் பறவை ! எப்பூடி...?
** சிவன் கோயிலுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்...
அங்கே நந்தி இருக்கும்;
இங்கே தொந்தி இருக்கும் !
** மேனேஜர் : இப்ப சுத்தறதைவிட உலகம் 30 மடங்கு வேகமா சுத்தினா என்னாகும்...?
கிளார்க் : எனக்கு தினமும் சம்பளம் கிடைக்கும் சார் ...!
--- குங்குமம் 29 . 11 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

Saturday, June 9, 2012

தெரிந்து கொள்வோம் !


** பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் கால்வாய் பனாமா. இது வட, தென்
அமெரிக்காக்களை இணைக்கிறது. கால்வாய் அமைக்கப்படுவதற்கு முன்னர் கப்பல்கள் தென்மெரிக்கக் கண்டத்தைச்
சுற்றியே செல்ல வேண்டி இருந்தது. 1914ம் ஆண்டு கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. அதன் நீளம் 82 கி.மீ, அகலம் 1000
அடி, ஆழம் 45 அடி.
** பேஸ்புக் 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு, 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின்
பெயரைப் பதிவு செய்து கொண்டு பேஸ்புக்கில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கி கொண்டு தங்கள் கருத்துகளை
பரிமாறிக் கொள்ளலாம். பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்கள் புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்புகொள்ளும்
விவரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம்.
** கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக்கூடிய ஒரு அனைத்துண்ணி இனம். இதன் உடலில் ஓடும் ரத்தத்தில்
ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும்.

Friday, June 8, 2012

ஜோக்ஸ்.


** " நம்ம தலைவருக்கு பிடிச்ச போலீஸ்காரங்க நிறைய இருக்காங்க..."
" சரியா சொல்லு... தலைவருக்குப் பிடிச்சவங்களா... இல்ல, தலைவரைப் பிடிச்சவங்களா...?"
** " டூவீலர்ல போகும்போது ' 60 ' க்கு மேல போகாதேன்னு அப்பவே அவன்கிட்ட நான் சொன்னேன்! கேட்டானா ? "
" ஏன் ? என்ன ஆச்சு ? "
" இப்ப ' 108 ' ல் போயிட்டிருக்கான் ."
** " டாக்டர் என் வலது காது சரியா கேட்க மாட்டேங்குது..."
" பயப்பாடாதீங்க ! வயசாகுதில்லையா ?"
" என்னை ஏமாத்துறீங்களா ? ரெண்டு காதுக்கும் ஒரே வயசுதானய்யா ஆகுது ?"
** " திருமணமான புதிதில் நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தா நாய் குரைக்கும். அப்போ மனைவி அன்பா வந்து முத்தம்
தருவா."
" இப்ப எப்படி நடக்குது ?"
" இப்போ வீட்டுக்கு வந்தா, நாய் அன்பா ஓடி வந்து முத்தம் கொடுக்குது. மனைவி குரைக்கிறா."

Thursday, June 7, 2012

தண்டனை .


தண்டனைகள் அளிப்பதில் இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, தவறு செய்தவர் வருந்த வேண்டும் என்பது. இன்னொன்று, அவருக்கு அளிக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து குற்றங்கள் குறைய வேண்டும் என்பது.
ஆன்மிகத்திலும் ஏறக்குறைய அனைத்துக் கடவுளர்களும் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கியிருப்பதைப் பார்க்கலாம். தவறு செய்தால் நரகம் போக வேண்டும் என்பது பல மதங்களிலும் சுட்டிக்காட்டப்படும் அல்டிமேட் தண்டனை.
தண்டனைகளிலேயே அதிக பட்சம் மரண தண்டனைதான். மனித உரிமை அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் முயற்சியாக, பல நாடுகளில் மரண தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் rare among the rarest குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது .
மரண தண்டனையை நிறைவேற்றுவதிலும் நாட்டுக்கு நாடு வேறு வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஜப்பானிய மக்களில் சிலர் தங்கள் மன்னர் இறந்துவிட்டால் துக்கம் தாங்காமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு மண்டியிட்ட நிலையில் அமைதியாக உயிர் துறப்பார்களாம். இதை ஹராக்கி என்பார்கள்.
சிலர் தங்களுக்குத் தாங்களே சுயதண்டனைகள் கொடுத்துக் கொள்வர். மகாத்மா காந்தி இதுபோல தமக்குத் தாமே தண்டனைகள் வழங்கிக் கொண்டதுண்டு.
திருவள்ளுவர் கொடுக்கச் சொல்லும் தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்! தவறு செய்பவர்களூக்குக் கொடுக்கும் பெரிய தண்டனை அவர்களை மன்னிப்பது என்கிறார்.
' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.'
--- லதானந்த், குங்குமம் 18 . 10 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.