Wednesday, June 20, 2012

'ஓம்'


போற்றி பாடும் போது ' ஓம்' என்பது ஏன்?
108 போற்றி, 1008 போற்றி சொல்லும்போது, சுவாமியின் பெயரின் முன்னால் 'ஓம்' சேர்க்கிறோம். முடியும் இடத்தில் 'போற்றி' என்கிறோம். உதாரணத்துக்கு 'ஓம் முருகா போற்றி'. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று :
" ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், ' என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் 'ஓம்' என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை அழைக்கிறோம். அப்படி சொல்லும்போது, அந்தந்த தெய்வங்களிடம் ' என்னை உன்னோடு சேர்த்துக்கொள்' என்று பொருள். தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறொம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குறிய பலன் உறுதியாக கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமாந்தமும் ஏற்படும்.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

Tuesday, June 19, 2012

பொது அறிவு .


** அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்? -- ஜார்ஜ் வாஷிங்டன்.
** சாலிஸ்பரி என்று முன்னர் அழைக்கப்பட்ட நகரம் எது ? -- ஹராரே.
** ஒரு மைல் எத்தனை மீட்டர்? -- 1609.344.
** எந்த நாட்டின் தபால்தலையில் ஹெல்வெடியா என இருக்கும்? -- சுவிட்சர்லாந்து.
** யென் எந்த நாட்டின் கரன்சி? -- ஜ்ப்பான்.
** ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் எது? -- கோல்டன் வாட்டில்.
** பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் குளிர்கால தலைநகரம் எது? -- சிம்லா.
** செஸ் போர்டில் எத்தனை சதுரங்கள் இருக்கும்? -- 64.
** ஐந்து வரி வடிவங்களில் எழுதப்ப்படும் மொழி எது? -- கொங்கனி.
** பின்கண்டவற்றில் எது உலோகம் இல்லை? -- வைரம்.
--- தினமலர் , 12 . 3 . 2012.

Monday, June 18, 2012

தெரிந்து கொள்வோம்...


தேசிய நெடுஞ்சாலைகள்.
என் எச் 4 -- சென்னை -- மும்பை
என் எச் 5 -- சென்னை -- கோல்கத்தா
என் எச் 7 -- சென்னை -- வாரணாசி
என் எச் 45 -- சென்னை -- திண்டுக்கல்
என் எச் 47 -- சேலம் -- கன்னியாகுமரி
என் எச் 49 -- மதுரை -- ராமேஸ்வரம்
என் எச் 220 -- கொல்லம் -- தேனி
--- தினமலர் , 12 . 3 . 2012.

Sunday, June 17, 2012

வேத மரம் !


காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலின் மிகப் பழமையான மாமரம் காய்த்திருப்பதில் பக்தர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!
'ஏகம்' என்றால் ஒன்று, ' ஆம்பரம்' என்றால் மரம். 'மரமாய் உருவாகி நின்றவர் ஏகாம்பரநாதர்' என்பது இம்மரத்தைப் பின்னணியாய்க்கொண்ட புராணச் செய்தி. இதன் ஒவ்வொரு மரக் கிளையில் இருந்து உருவாகும் ஒவ்வொரு காயும் தனித் தனி சுவைகொண்டது என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு வேதத்திற்கும் ஒரு கிளை. ரிக் வேதக் கிளையில் காய்க்கும் காய்கள் புளிப்பும், யஜுர் வேதக் கிளையில் காய்க்கும் காய்கள் இனிப்பும், சாம வேதக் கிளையில் கசப்பும், அதர்வண வேதக் கிளையில் உவர்ப்புச் சுவையும் என நான்கு வித சுவைகொண்ட காய்களை ஒரே மரத்தில் காண முடியும் என்பது சிறப்பு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இம்மரம் வேரோடு சாய, பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். பிறகு மரத்தின் பழங்களை, கோவை வேளாண் பல்கலைக் கழகத்துக்குக் கொண்டுசென்று, ஆய்வு செய்து, அப்பழ விதையை அறிவியல்பூர்வமாக மீட்டுருவாக்கம் செய்து, மீண்டும் மரத்தைத் துளிர்க்கச் செய்து உள்ளனர். இப்படி அறிவியலும் ஆன்மிகமும் சேர்ந்த ஒரு அற்புத மரம், இந்த வேத மரம்!
--- எஸ். கிருபாகரன். ஆனந்தவிகடன் இணைப்பு , 11 . 5 . 2011.

Saturday, June 16, 2012

ஓம் !


இவ்வளவு நேரம்தான் ஒலிக்க வேண்டும்.
எழுத்துகளை உச்சரிக்கும் கால அளவை மாத்திரை என்று சொல்லுவார்கள். ஒரு நொடிப்பொழுது அல்லது இயல்பாக கண் இமைக்கும் நேரத்தை ஒரு மாத்திரை என்று இலக்கண நூல்கள் சொல்கின்றன.
ஓம் என்கின்ற மூல மந்திரத்தை எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. மூல மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் பெரியாழ்வார்.
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்எழ வாங்கு என்பது ஆழ்வார் வாக்கு. மந்திர சாஸ்திர நூல்கள் இம்மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் அல்லது இரண்டரை மாத்திரை நேரம் ஒலிக்கலாம் என்று சொல்கின்றன.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. இரண்டரை மாத்திரை நேரம் ஒலித்தால் இவ்வுலக இன்பங்களை எளிமையாக, முழுமையாக பெறலாம். மூன்று மாத்திரை நேரம் ஒலித்தால் இறை ஞானம் விரைவில் கிட்டும்.
--- தினமலர் இணைப்பு . 15 . 3 . 2012 .

Friday, June 15, 2012

தகுதி !


எதற்குமே தகுதி என்ற ஒன்று வேண்டும். வாழும்போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தகுதி வேண்டும்.
பரிணாமவியல் பிதாமகர் சார்லஸ் டார்வினின் முக்கிய கோட்பாடு, ' Survival of the fittest. ' எந்த உயிரினம் சூழலுக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறதோ, அதுவே வாழத் தகுதியானதாக இருக்கும். தாக்குப்பிடிக்க முடியாதவை அழிந்து போய்விடும். அரிதான எத்தனை உயிரினங்கள் அழிந்துகொண்டிருப்பதாக தினசரி செய்திகள் படிக்கிறோம்! ஆனால், எல்லாவற்றையும் அழித்துவிட்டு, அவற்றைத் தாண்டி ஜீவித்திருக்கும் சாமர்த்தியத்தை மனிதன் பெற்றிருக்கிறான்.
' எலிஜிபிள் பேச்சிலர் ' என்னும் சொல்லாடலைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். திருமண மாப்பிள்ளைக்கு இருக்க வேண்டிய அதிமுக்கிய தகுதியை, நாவிதர் மூலம் திருமணத்திற்கு முந்தைய நாள் பரிசோதிக்கும் வழக்கம் இன்னும் சில கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது.
வாழ்வில் வெற்றிபெறச் சில அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என 60 வகையான தகுதிகளைச் சில சுய முன்னேற்றப் பயிற்சிகளில் வலியுறுத்துவார்கள். இதை Soft skills என்பார்கள். நம்பகத்தன்மை, வளைந்துகொடுத்துப் பேசுவது, கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது, கூட்டுமுயற்சியில் ஒத்துழைப்பது, அனுபவம், கண்ணியம் என நீளும் அந்த லிஸ்ட்...
' இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். '
என்ற திருக்குறளில் திருவள்ளுவர் ஆராயச் சொன்னது தகுதியைத்தான் !
--- லதானந்த், குங்குமம் 29 . 11 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

Thursday, June 14, 2012

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் !


** ராமனின் மனைவி சீதை, மற்ற சகோதரர்களின் மனைவியர் யார்? -- லட்சுமணன் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி,
சத்ருக்கனன் - சுருதகீர்த்தி.
** சூரியனின் நட்பு கிரகங்கள் எவை ? -- செவ்வாய், குரு, சந்திரன்.
** குற்றாலநாதரின் அம்பாள் பெயர் -- குழல்வாய்மொழி நாயகி.
** நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய தலம் எது? -- திங்களூர் ( தஞ்சாவூர் மாவட்டம் ).
** காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்? -- ஜுரகேஸ்வரர்.
** தன்வந்திரியின் கையில் இருக்கும் பூச்சி -- அட்டை.
** ' பக்தவத்சலன்' என்று அழைப்பது யாரை? -- நரசிம்மர்.
** ' பக்தவத்சலன்' என்பதன் பொருள் என்ன? -- பக்தர்களிடம் கருணை உள்ளவன் ( வத்சலம் - கருணை ).
** இறைவன் நமது உள்ளத்தில் கட்டை விரலளவு உள்ளான் என்று கூறும் நூல் எது? -- ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்/
** ' நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக கருதி பாடிய சிவபக்தர் யார்? -- மாணிக்கவாசகர்.
--- -தினமலர் இணைப்பு. 7 . 5 . 2011. ( சென்னை பதிப்பு )