Sunday, December 15, 2013

' அண்ட் '


     உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடகங்கள் எழுதிய ஷேக்ஸ்பியரின் படைப்புக்களில், ' தி ' என்ற சொல் 27,457 முறையும், ' அண்ட் ' என்ற சொல் 25,285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மொழி.
    சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனியாக ஒரு மொழியும் கிடையாது.  அங்குள்ள மக்கள் ஜெர்மன், ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலிய மொழிகள் பேசுவார்கள்.
அதிர்ஷட ஆடு
    போலந்து நாட்டு மக்கள் ஆட்டு முகத்தில் விழிப்பதை அதிர்ஷ்டம் என்றும்,  காகம்,புறா இரண்டையும் பார்ப்பதை துரதிர்ஷ்டம் என்றும் கருதுகிறார்கள்.
' போனிக்ஸ் '
     காந்தியடிகள் முதலில் தொடங்கியது சபர்மதி ஆசிரமம் அல்ல.  தென்னாப்பிரிக்காவில்தான் முதல் ஆசிரமத்தை தொடங்கினார்.  அதன் பெயர்' போனிக்ஸ்
பார்ம் '.
-- தினமலர். பெண்கள்மலர். 14- 1- 2012. 

Saturday, December 14, 2013

எலிகள் கணக்கு !

எலிகள் மிக வேகமாக பெருகக்கூடியவை . வயதுக்கு வந்த ஒரு எலியால் ஒவ்வொரு மாதமும் ஒரு குட்டி எலியை பிரசவிக்க முடியும் . அந்த குட்டி எலி பிறந்து இரண்டே மாதத்தில் வயதுக்கு வந்து விட முடியும் .
கேள்வி இதுதான் : இன்றைக்குத்தான் பிறந்த ஒரு குட்டி எலியை- நீங்கள் வீட்டுக்கு வாங்கிக்கொண்டு வந்து வளர்க்கிறீர்கள் 10 மாதத்தில் உங்களிடம் எத்தனை எலி இருக்கும் ?
--- தினமலர் / 11 . 9 . 2010.
விடை : ஒரு எலிதான் .சரியான பதில் . ' துணையில்லாத ஒரு எலி எப்படி இனப்பெருக்கம் செய்யும் ? ' இதுதான் சரியன விளக்கம் .
--- தினமலர் / 25 . 9 . 2010.

புயல்.

  அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு,  புயலை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.  ஆங்கிலத்தில் ' ஹரிகேன் ' என்று சொல்லப்படுகிற புயல் அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு பசிபிக் பகுதியிலிருந்தும், ' சைக்கோலன் ' எனும் புயல் தென் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்தும், ' டைஃபூன் ' எனும் புயல் வடமேற்கு பசிபிக் பகுதியிலிருந்தும் மையல் கொள்கின்றன.
     அமெரிக்காவின் ' டைஃபூன் ' எச்சரிக்கை இணைவு மையம் வரையறுத்துள்ள படி,  புவிப்பரப்பில் ஒரு விநாடிக்கு 60 மைல் வேகம் கொண்டு சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்திருக்கும் புயல் வகைகளை ' சூப்பர் டைஃபூன் ' என்று அழைக்கிறார்கள்.
-- ந.வினோத் குமார்.
-- . ' தி இந்து' நாளிதழ்.  திங்கள், நவம்பர் 11, 2013.  

Friday, December 13, 2013

முக்தி தரும் நகரங்கள்

முக்தி தரும் நகரங்கள் ஏழு என்பர் . அயோத்யா , மதுரா , மாயா , காசி , காஞ்சி, அவந்திகா என்று சுலோகத்தில் அவந்திகா  எனப்படுவது  உச்சைனி நகரமாகும் .  பாரத  காலத்துக்கு மிக முற்பட்ட ஊர் இது .
-- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 12, 2013.

கணினி.

   உலக அளவில் தீங்கிழைக்கும் மென்பொருள் அதிகமாகக் கொண்டுள்ள கணினிகளை உடைய நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    கணினிகளில் பல்வேறு வகையான மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.  நம் கணினியில் உள்ள விவரங்களை நமக்கே தெரியாமல் பிறர் சேகரிக்க சமூக விரோதிகள் மற்றும் ' ஹேக்கர்கள் ' என்று அழைக்கப்படும் இணைய குறும்பர்களால் உருவாக்கப்படுபவைதான் இந்த தீங்கிழைக்கும் மென்பொருள்கள்.
இதனை ஆங்கிலத்தில் ' மால்வேர் ' என்று அழைப்பார்கள்.
-- ந.வினோத் குமார்.
--   ' தி இந்து ' நாளிதழ். வியாழன், டிசம்பர் 5, 2013.  

கிரீன் டீ.

   கிரீன் டீ என்பது ஒருவகைத் தேனீர்தான்.  பொதுவாக  தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் ஆக்சிடைசாக அனுமதிக்கப்படுகின்றன.  ( ஒரு துண்டு ஆப்பிளை காற்றுபடும் இடத்தில் வைத்தால், அது பழுப்பாக மாறத் தொடங்கும்.  அதன் சுவையும், அதிக இனிப்பாக இருக்கும்.  ஆக்சிஜனால் உண்டாகும் மாற்றம் இது).  இது போன்ற மாற்றம்தான் தேயிலைக்கு நிகழ்கிறது.  ஆனால், கிரீன் தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் வெப்பப்படுத்தப்படுகின்றன.  இதனால் அவை ஆக்சிஜனோடு எந்த வினையும் பிரிவதில்லை.  இதனால்தான், கிரீன் டீயின் சுவையும் (  அதில் விட்டமின் சத்துக்கள் நிறைய இருந்தும் ) வித்தியாசமாக, கொஞ்சம் துவர்ப்பாக இருக்கிறது.
--  - ஜி.எஸ்.எஸ். ,  குட்டீஸ் சந்தேக மேடை?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 29, 2013. 

Thursday, December 12, 2013

சபைகள்

திவாதிரைத் திருவிழா, நடராஜர் தலங்களில் விஷேசம். சிதம்பரம் (  கனகசபை ), திருவாலங்காடு ( ரத்தினசபை ), மதுரை ( வெள்ளியம்பலம் ), திரு நெல்வேலி ( தாமிரசபை ), திருக்குற்றாலம் ( சித்திரசபை ).
-- புலவர்.வே. மகாதேவன் .
-- தினமலர். பக்திமலர் . டிசம்பர் 12, 2013.