Wednesday, March 5, 2014

நோய் பரவல்.

நோய் பரவலைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்.
ஒரே நாளில் தெரிந்துகொள்ளலாம்.  இந்தியாவில் முதல்முறை.
     பொதுவாக எந்த ஊரில் என்ன நோய் தாக்குகிறது என்பதை அறிய, இப்போதுள்ள நடைமுறைகளின் படி சுமார் 6 மாத காலம் ஆகும்.  அதற்குப் பிறகே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ஆனால் அதற்குள்ளாகப் பல உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.  இவற்றைக் கருத்தில் கொண்டு
' கணினி தொழில்நுட்ப முன் கணிப்பு மேலாண்மை ' எனும் பெயருள்ள மென்பொருள் ஒன்றை சென்னை கிங்ஸ் நோய்த் தடுப்பு நிறுவனத்திடம்
வழங்கப்பட்டது.
     இன்று நாட்டில் எந்த மூலையில் என்ன நோய் தாக்குகிறது என்பது உடனடியாகத் தெரியாது.  அது மற்ற பகுதிகளுக்கும் பரவுவதற்கு முன்னால் அதன் பாதிப்பை முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களூக்குச் சிகிச்சையளிக்க வேண்டும்.  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     கால விரயத்தைத் தடுக்க இந்த மென்பொருளில் சில படிவங்களை மின்னணு முறையில் நிரப்பும்படி வடிவமைத்துள்ளோம்.  தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள களப் பணியாளர்களுக்கு இந்த மென்பொருளை சாதாரண செல்போனில் பதிவு செய்து கொடுத்துவிட்டால் குறுஞ்செய்தி மூலமாக அவர்கள் அந்தப் படிவங்களை நிரப்பி தலைமைக் கணினிக்கு அனுப்பிவிட்டால் போதும்.
     ஆரம்ப சுகாதர நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிகப்பட்ட ஒரு வரைபடமும் இந்த மென்பொருளில் உண்டு. இதில் நோய் பரவல் உள்ள இடங்களை பச்சை, நீலம், மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் காட்டும்.  அதனால் எந்த இடத்தில் மிகக் குறைவாக, ஓரளவு அதிகமாக மற்றும் மிக அதிகமாக நோய்பரவல் உள்ளது என்பதை ஒரே நாளில் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசு வீண் செலவுகளைத் தவிர்க்க முடியும்.
     இந்த மென்பொருள் மூலம் சுமார் 250 நோய்ப் பரவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.  ஒவ்வொரு நாளும் என்ன நோய் எந்த இடங்களில் பரவியுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இந்த மென்பொருளை அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று அவர்களின் வழிகாட்டுதல்படி இது நடைமூறைப்படுத்தப்படும்.
-- தேசம்.
--   ' தி இந்து ' . நாளிதழ் . சனி, அக்டோபர் 19 ,2013.    . 

Tuesday, March 4, 2014

' ஞாங் ஞாங் நவ்யு '

  நாய்களுக்கான பிரத்யேக பீர் ஐட்டங்களை சில வெளிநாட்டு நிறுவனங்கள் சில ஆண்டுகளாகத் தயாரித்து வருகின்றன.  பேருதான் சரக்கு, அதில் ஒப்புக்குக்கூட ஆல்கஹால் கிடையாது.  நாய்கள் சப்புக்கொட்டி சாப்பிடட்டுமே என்று இறைச்சி வாசனையை மட்டும் சேர்ப்பார்கள்.
     ஜப்பானில் செல்லப் பிராணிகளூக்கான ஆகாரங்கள் தயாரிக்கும் பி அண்ட் ஹெச் லைப்ஸ் என்ற நிறுவனம் தற்போது பூனைகளுக்கான ஒயினைத் தயாரித்திருக்கிறது.  ' ஞாங் ஞாங் நவ்யு ' என்று பெயர்.  ஜப்பான் மொழியில் மியாவ் மியாவ் என்று அர்த்தமாம்.  நாய்  பீர் போலவே இதிலும் ஆல்கஹால் கிடையவே கிடையாது. நொதிக்காகத் திராட்சை ஜூஸ் மட்டும் பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.  முதல் கட்டமாக ஆயிரம் பாட்டில்கள் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள்.  பூனைகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து எலி வாசனை, பால் வாசனை, மீன் வாசனை என மேலும் பல நறுமணங்களில் வரக்கூடும்.  இப்போதைக்கு பாட்டில் விலை 245 ரூபாய் !
--   ' தி இந்து ' . நாளிதழ் . சனி, அக்டோபர் 19 ,2013.   

Monday, March 3, 2014

ஜீரா மீந்துவிட்டதா?

*  தீபாவளியன்று உப்பு வாங்கினால், லஷ்மியே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.  இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
*  பீட்ரூட் அல்வா,  பீட் ரூட் பூரி, பீட்ரூட் திரட்டுப் பால் சிவப்பு நிறம் மாறாமல் இருக்க வினிகரில் முக்கி எடுத்து, நீரை வடிகட்டி நறுக்கினால், கலர் அப்படியே இருக்கும்.
*  கேரட் அல்வா செய்வதாக இருந்தால், கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்து பிறகு தோலைச் சீவினால் மிகச் சுலபமாக
    தோலை நீக்கிவிட முடியும்.
*   குலோப்ஜாமூன் செய்த ஜீரா மீந்துவிட்டதா?  கவலை வேண்டாம்.  ஸ்பெஷல் ' ஷாயி துக்கடா ' செய்து ஜமாய்த்து விடலாம்.  ஆறு அல்லது ஏழு பிரெட் ஸ்லைஸ்களை
     முக்கோண வடிவில் கட் செய்து,  டால்டா அல்லது ரிபைண்ட் ஆயிலில் பொரித்து,  ஜீராவுக்குள் பொடவும்.  இரண்டு நிமிடம் கழித்து எதுத்து, வடிதட்டில் போட்டு
     ஆறவைக்கவும்.  டப்பாவில் போட்டு சில நாட்கள் வைத்துச் சாப்பிடலாம்.  ருசியாக இருக்கும்.  ஜீராவும் மீதமாகாது.
-- அவள் விகடன்.  அக்டோபர் 24 , 2003.       

Sunday, March 2, 2014


டிப்ஸ்...டிப்ஸ்

*  பக்கோடா செய்ய பெரும்பாலும் கடலைமாவுதான் உபயொகிக்கிறோம்.  அவசரத்துக்கு சரி.  அதையே கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து
    பிறகு மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்துக்கொண்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து செய்தால் பக்கோடா மொரமொரப்பாக அதிக
   ருசியுடன் இருக்கும்.
* கோதுமை ரவை உப்புமா என்றாலே யாருக்கும் பிடிக்கவில்லை எங்கள் வீட்டில்.  ரவையை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிளகய், பெருங்காயம், வெங்காயம்
  போட்டு அரைத்து தோசை வார்த்தேன்.  எல்லோருமே சூப்பர் என்றார்கள்.  மிளகாய் சட்னி இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்.
* மதியம் வடித்த சாதம் மீந்து விட்டால், அதை ஃபிரிட்ஜில் வைத்து, மறுநாள் காலை பொங்கலாக மாற்றலாம்.  பாசிப்பருப்பு வேகவைத்து மிளகு, சீரகம், மிளகாய், இஞ்சி,
   முந்திரியை வறுத்து, தேவையான உப்பு, மஞ்சள் தூளுடன் சாதத்தில் கலந்து இரண்டு விசில் வந்தவுடன் நெய் கலந்தால், மனக்கும் ஈஸி பொங்கல் தயார்.  சாம்பார்  
   போதும்.
*  பிரியாணி மற்றும் ஃப்ரைட் ரைஸ் வகைகள் செய்யும்போது,  அடிபிடிக்காமல் இருக்க அடியில் பிரியாணி இலைகளை பரப்பி தம் போடுங்கள்.
-- அவள் விகடன். ஏப்ரல் 11 , 2003.    

Saturday, March 1, 2014

நாய்க்கறி சாப்பிடுங்கள்!

  இறைவன் பேரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த விலங்கினத்தையும் உண்ணக்கூடாது.  தாமாக இறந்த விலங்கினங்களைப் புசிக்கக்கூடாது.  ( கடல்வாழ் உயிரினங்கள் விலக்கு )  எந்த விலங்கினத்தின் ரத்தமும் உண்னக்கூடியதில்லை.  பன்றிக்கறியைத் தொடக்கூடது.  இது குரான் சொல்வது ( சூராபகரா 2.173 ).  எனவே நாய், பூனை, குரங்கு மட்டுமல்ல,  வழக்கமாக மாமிச உணவாகும் மிருகங்கள் தவிர மற்ற அனைத்துமே இஸ்லாத்தின் ஹராம்தான்.
     இப்போ என்ன அதுக்கு என்று கேட்டுவிடாதீர்கள்.  பக்ரீத்துக்கு உலகெங்கும் எத்தனை லட்சம் ஆடுகள் வெட்டப்பட்டிருக்கும்.  எத்தனை ஒட்டகங்கள் பிரியாணி யாகியிருக்கும்.  எத்தனை சந்தோஷமாக , திருப்தியாகம் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள். மகா ஜனங்கள்!  ஆனால், இந்த வருஷ பக்ரீத்துக்கு சிரியா மக்களுக்கு பிரியாணியல்ல, வெறும் சோறே பிரச்சினைக்குக்குறியதாகிவிட்டது.  யுத்த களேபரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் வீட்டைத் துறந்து, ஊரைத் துறந்து எங்கெங்கோ ஓடிப் போய் பதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  தொழுகைக்குக் கூட  மசூதிப் பக்கம் போக முடியாத சூழ்நிலை.  பெருநகரங்கள் நீங்கலாக மற்ற இடங்களில் கடைகண்ணியெல்லாம் சுத்தமாக இழுத்து மூடப்பட்டுவிட்ட நிலையில் சப்பாட்டுக்கு வழியே இல்லாமல், குடிக்க நீர் கூட இல்லாமல் ஒரு மாபெரும் மனிதக்கூட்டம் சின்னாபின்னமாகிக்கொண்டிருகிறது.
--பா.ராகவன்.  சர்வதேசம்.
--  ' தி இந்து ' . வெள்ளி, அக்டோபர் 18,2013.