Saturday, May 3, 2014

பெரிய கோள் கண்டுபிடிப்பு

வியாழனை விட பெரிய கோள் கண்டுபிடிப்பு
     வியாழன் கிரகத்தை விட பெரிய அதே சமயம் மிக இளவயதுடைய கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.  நமது சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள இந்தக் கோள் பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
     பிஎஸ்ஓஜே 318.5 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கிரகம் 1.2 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இந்த கிரகம் குறிப்பிட்ட எந்த நட்சத்திர மண்டலத்தையும் சார்ந்தது இல்லை.
     இது தொடர்பாக ஹவாய் பல்கலைக்கழக வானியல் பிரிவு தலைவர் மைக்கேல் லியூ கூறுகையில், " விண்வெளியில் இது போன்று நட்சத்திரங்களின்றி தனித்து மிதக்கும் கோள் எதையும் இதுவரை நாங்கள் கண்டதில்லை.  இந்தக் கிரகம் எந்த நட்சத்திரத்தையும் சுற்றி வரவில்லை " என்றார்.
-- பி.டி.இ.  சர்வதேசம்  GLOBE ஜாமூன்.
--   ' தி இந்து 'நாளிதழ்  வெள்ளி,. அக்டோபர் 11, 2013.

புதிய வகை காசோலைகள்

 ( சிறப்பு )
புதிய வகை காசோலைகள் ஜனவரி முதல் கட்டாயமாகிறது.
    வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன்படுத்துவது ஜனவரி முதல் கட்டாயமாகிறது.  காசோலைகளை பணமாக மாற்றுவதில் தற்போது ஏற்பட்டு வரும் தாமதத்தைத் தவிர்க்க ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
     இத்திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அமலாவதில் தாமதம் ஏற்பட்டது.  வங்கிகளில் புதிய காசோலை முறையை 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது.  அதன்படி, "சி.டி.எஸ்" என்ற இந்த திட்டத்தின் கீழ், அனைத்து வங்கிகளும் சி.டி.எஸ்.- 2010 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட காசோலைகலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  இவை "ஸ்கேன் செய்யப்பட்டு, ஆன்-லைன் வாயிலாகவே, மற்றொரு வங்கிக் கிளைக்கு அனுப்பி வைக்கப்படும்.  அதன் பிறகு, காசோலையில் குறிப்பிட்டுள்ளபடி வாடிக்கையாளருக்கு பணம் உடனடியாக வழங்கப்படும்.
     இந்த புதிய வகை காசோலைகளை, முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு, அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களிடம் உள்ள பழைய காசோலைகளைத் திரும்பப் பெற்று வருகின்றன.
     வங்கிகள், சேமிப்புகணக்கு வாடிக்கையாளர்களுக்கு, முதன் முறையாக வழங்கும் புதிய வகை காசோலைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
     தற்போது, வங்கி வட்டாரத்தில், பழைய காசோலைகளின் புழக்கம் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, புதிய காசோலைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலக் கெடு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.  2013-ல் ஜூலை மாதம், பின்னர் ஆகஸ்டு 1-ம் தேதி என காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
     இந்நிலையில் தற்போது இந்த காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதிக்கு நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  வரும் ஜனவரி முதல் பழைய காசோலைகளை வங்கிகள் ஏற்காது என்றும், சி.டி.எஸ்.- 2010  தொழில்நுட்ப வசதி கொண்ட காசோலைகளை மட்டுமே ஏற்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தகவல் அனுப்பியுள்ளது.
பழைய காசோலைகள் பணமாவதில் கூடுதல் தாமதம் :
     வாடிக்கையாளரின் பெயர் உள்பட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிடிஎஸ் காசோலைகளை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.  எனினும், சிடிஎஸ் காசோலை பெறாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  அவர்களது பழைய காசோலைகளை வங்கிகள் தொடர்ந்து பெற்று வருகின்றன.  எனினும், அவற்றை பணமாக மாற்றுவதற்கான "கிளியரிங்" வசதி வாரத்துக்கு 3 முறை என்பதை மாற்றி ஜூன் முதல் 2 முறையாகவும், அக்டோபரில் இருந்து மாதம் ஒரு முறை என்றும் குறைக்கப்பட்டுள்ளது.  இதனால், காசோலைகளை பணமாக்குவதில் கூடுதல் தாமதம் ஏற்படக்கூடும்.  எனினும், டிசம்பருக்கு பிறகு, புதிய காசோலைகள் மட்டுமே பெறப்படும் என்பதால் அப்பிரச்சினை இருக்காது என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
-- வணிகம்.  Business Line பக்கம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  வெள்ளி,  மே 2, 2014.

Friday, May 2, 2014

டைப்ரைட்டர்.

Vடைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!
லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு !
     ஹென்றி மில் 1714ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார்.  அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது.
நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம்.  மனிதனுக்கு குரங்கு எப்படி முன்னோடியோ அதுபோன்று ... இன்று நம் மடிவரை வந்துவிட்ட கம்ப்யூட்டர்களூக்கு டைப்ரைட்டர்கள் தான் மூலாதாரம்.
     இன்ஸ்டிடியூடுகளில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் டைப்ரைட்டர்கள் உள்ள வரை தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளுக்கு செல்லமுடியும்.  பழுதாகும் டைப்ரைட்டர்களுக்கு இப்போதே உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை.  ஏற்கனவே பழுதாகிக் கிடக்கும் டைப்ரைட்டர்களில் நல்ல நிலையில் உள்ள பாகங்களை எடுத்து ஸ்பேராக பயன்படுத்தி வருகிறார்கள்.  இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ?
     டைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!
     அரசாங்க ரகசியங்கள் வெளியில் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகப் பணிகளில் கம்ப்யூட்டர்கள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் தட்டச்சு எந்திரங்கள் பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது ரஷ்யா.  இதற்காக புதிதாக தட்டச்சு எந்திரங்கள் வாங்குவதற்கான அரசாணையில் கடந்த ஜூலையில் கையெழுத்திட்டார் அதிபர் புடின் !
-- குள.சண்முகசுந்தரம். பூச்செண்டு.
--   ' தி இந்து 'நாளிதழ்.வியாழன். அக்டோபர் 10, 2013.  

Thursday, May 1, 2014

கிரகப்பிரவேசம்.

கிரகப்பிரவேசத்தை அதிகாலை தான் நடத்த வேண்டுமா?
        கிரகப்பிரவேசம் செய்ய விடியற்காலை நேரமே உகந்தது.  வாசல் நிலையில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம்.  எனவே, லட்சுமிகடாட்சம் பெற விடியற்காலையில் வாசல் நிலை பூஜை செய்து, பசு கன்று, சீர்வரிசைகளுடன் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும்.
--  அறிவோம்!  தெளிவோம்! . மயிலாடுதுறை.  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். அக்டொபர் 10, . 2013. 

ஸ்ரீ மடத்தில்...

 ஸ்ரீ மடத்தில்  பெரியவர்  முன்னிலையில்  தினமும்  காலையில்  பஞ்சாங்க  படனம்  நடைபெறும்.  நாள்தோறும் திதி- வார- நஷத்ர-யோக  கரணங்களை  அறிந்து  கொண்டாலே  மகத்தான  புண்ணியம்  என்பது  சாஸ்திர  வாக்கியம்.  ஒரு  அமாவாஸ்யை  திதியன்று  செவ்வாய்கிழமையும்  கேட்டை  நட்சத்திரமும்  கூடியிருந்தன.  " இன்னைக்கு  கேட்டை  மூட்டை  செவ்வாய்க்கிழமை  எல்லாம்  சேர்ந்திருக்கு,  அதை  ஒரு  தோஷம்  என்பார்கள்.  பரிகாரம்  செய்யணும்"  என்றார்கள்  பெரியவர்.  " அப்பாகுட்டி  சாஸ்திரிகளுக்குச்  சொல்லியனுப்பு,  லோகஷேமத்துக்காக  ஹோமங்கள்  செய்யச்  சொல்லு..."
      பரிகார  ஹோமம்  நடந்துகொண்டிருக்கும்போது  பெரியவர்  அங்கே  வந்து  பார்த்தார்கள்.  " கேட்டை,  மூட்டை,  செவ்வாய்க்கிழமை  என்றால்  என்ன  அர்த்தம்?  கேட்டை  என்பது  நட்சத்திரம்,  செவ்வாய்  என்பது  கிழமை,  மூட்டை  என்றால்  என்ன?  என்று  கேட்டார்கள்.  எவருக்கும்  பதில்  சொல்லத்  தெரியவில்லை.
      பெரியவர்களே  சொன்னார்கள்:
     " அது  மூட்டை  இல்லை.  மூட்டம்.  மூட்டம்  என்றால்  அமாவாஸ்யை.  பேச்சு  வழக்கில்  மூட்டை,  மூட்டை  என்று  மோனை  முறியாமல்  வந்துடுத்து"
       தொண்டர்களுக்கெல்லாமே  ஆச்சரியமாக  இருந்தது. " பெரியவா  இம்மாதிரி  நுட்பமான  விஷயங்களை  எங்கிருந்து  தெரிந்துகொண்டார்கள்?"
-- ( 'மகா  பெரியவாள்  தரிசன  அனுபவங்கள் ( 3-ம்  தொகுதி)  தொகுப்பாசிரியர்:  பி.எஸ்.கோதண்டராமசர்மா.)
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.     

சித்திர குப்தனின் பிறந்தநாள்

  சித்திரா பவுர்ணமி -- சித்திரகுப்தனின் பிறந்த நாள்.  உயிர்களின் புண்ணிய பாவக் கணக்குகளை எழுதுவதற்காகச் சிவனால் படைக்கப்பட்டவன் சித்திரகுப்தன்.
     கணக்கு எழுதும் தெய்வங்கள்
     சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் உயிகளின் புண்ணிய பாவக் கணக்கு எழுதுகிறார்கள் .  ஏழுவகையான பிறவிகள், 84 லட்சம் யோனி பேதங்கள், உணவு, உறக்கம் இல்லாவிட்டால் உடல் இளைக்கும். உயிரும் இளைப்பதுண்டு எப்படி தெரியுமா?
     ' புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
       பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
       கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
       வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
       செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
       எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்...' என்கிறார் மாணிக்கவாசகர்.
-- தினமலர் . பக்திமலர் . ஏப்ரல் 18, 2013.