Saturday, October 25, 2014
ஸ்னோ கிரீம்,
ஸ்னோ கிரீம் செய்வது எப்படி?
10 கிராம் ஸ்பெர்மாசிட்டி, 1 கிராம் சுத்தமான மெழுகு, 500 கிராம் ஆயில் ஆப் சுவீட் ஆமண்ட், 50 கிராம் பன்னீர் போன்றவை போதும்.
ஒரு பாத்திரத்தில் ஸ்பெர்மாசிட்டி, மெழுகு போன்றவற்றை போட்டு உருக்க வேண்டும். நன்றாக உருகிய பிறகு, ஆயில் ஆப் ஸ்வீட் ஆமண்ட், பன்னீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கிளறிக்கொண்டே இருந்தால் கெட்டிப்படும். அப்போது கலவையை கீழே இறக்கி நன்றாக கிளறிக்கொண்டே இருந்தால் ஆறிவிடும். இப்போது ஸ்னோ க்ரீம் ரெடி.
---தினமலர் தொழில் மலர். 23 - அக்டோபர் 2012.

' அசர்' போடும் கல்விக் குண்டு !
Annual Status of Educatin Report என்பதன் சுருக்கமே அசர் ( ASER ).
கடந்த ஜனவரி மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு வெளியிட்ட அசர் அறிக்கை, ' தமிழகத்தில் 35 சதவிகிதம் 5 - ம் வகுப்பு மாணவர்களாலும் 13 சதவிகிதம் 8 - ம் வகுப்பு மாணவர்களாலும் 1 - ம் வகுப்பு, 2 - ம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல்களைக்கூடப் படிக்க முடியவில்ல' என்கிறது. 8 - ம் வகுப்பைச் சேர்ந்த 17 சதவிகித மாணவர்களால் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகளை ( smaall letters ) படிக்க முடியவில்லை. 62 சதவிகித மாணவர்களால் மூவிலக்க எண்களை ஓரிலக்க எண்ணால் வகுத்துக் கூற முடியவில்லை என்றெல்லாம் கல்விக் குண்டுகளைத் தூக்கிபோடுகிறது அசர். தமிழகம் மட்டுமல்ல, முழு இந்தியாவின் கதியும் இதுதான்.
--டி.அருள் எழிலன், ஆனந்த விகடன். 1. 5 .2013.

Friday, October 24, 2014
அறிவோம்! தெளிவோம்!
கோயிலில் பின்னமான உருவம் கொண்ட தெய்வ சிலையை வணங்கலாமா?
தெய்வ சிலையின் உருவத்தை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். 1. அங்கம், 2. உபாங்கம், 3. பிரத்யங்கம்.
கை, கால், விரல்கள், ஆயுதங்கள், கிரீடம் போன்றவை பிரத்யங்கங்களாகும். இவற்றில், பின்னம் இருந்தால் தோஷமில்லை. தொடர்ந்து வழிபாடுகள் செய்து கும்பாபிஷேகத்தின் போது சரி செய்து கொள்ளலாம். கை, கால், தலை முதலியன உபாங்களாகும். இவற்றில் பின்னம் ஏற்பட்டால் உடன் சரிசெய்து , பிராயசித்த கும்பாபிஷேகம் செய்து வழிபாட்டைத் துவங்கலாம்.
முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, தொடை முதலியன முக்கிய அங்கங்களாகும். இவற்றில் சரிசெய்ய முடியாத பின்னம் ஏற்பட்டால், வேறு விக்கிரகம் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இந்த விதிகள் பொதுவானவை. எவ்வளவு பின்னம் ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு வழியில் சரிசெய்து பூஜை வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் பக்திமலர். ஜூலை 18, 2013.

Thursday, October 23, 2014
வடக்கு வாழ்கிறது!
இந்த உலகம் வடகோளம், தென்கோளம் எனப் புவியியல்ரீதியாக மட்டும் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. வடகோள நாடுகள், தென்கோள நாடுகளைப் புவியியல்ரீதியாகச் சுரண்டி வாழ்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், தென்கோள நாடுகளின் நீர்வளத்தைக் கணக்கில்லாத வகையில் உறிஞ்சி எடுக்கின்றன. வடகோளத்தில் பிறந்த ஒரு குழந்தை தென்கோளத்தில் பிறந்த குழந்தையைவிட, 40 முதல் 70 மடங்கு அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துகிறது. உலகம் முழுவதுமே வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!
-- மாட் விக்டோரியா பார்லோ ( தமிழில்: சா.சுரேஷ் ) எழுதிய ' நீராதிபத்தியம் நூலிலிலிருந்து .
-- ஆனந்த விகடன், 17. 7.2013 .

Wednesday, October 22, 2014
" பொதுநலம் "
" பொதுநலம் என்றால் என்ன?"
" ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரிகியூரி அம்மையாரிடம், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் ' உங்களுக்கு வேண்டியதைக் கேட்கச் சொன்னால் என்ன கேட்பீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு மேரிகியூரி ' எனது ஆராய்ச்சியைத் தொடர ஒரு கிராம் ரேடியம் தேவைப்படுகிறது; ஆனால், அது ஒரு லட்சம் டாலர் விலை என்பதால் என்னால் வாங்க முடியவில்லை ' என்றார் ஏக்கத்துடன். அந்த பத்திரிகை ஆசிரியை அமெரிக்கா சென்று ஒரு குழு அமைத்து, பொதுமக்களிடம் நிதி திரட்டினார். அந்தப் பணத்தில் ஒரு கிராம் ரேடியம் வாங்கி அமெரிக்க ஜனாதிபதி கையால் மேரிகியூரிக்கு அளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் ரேடியத்தை வழங்கும் பத்திரத்தைப் படித்துப் பார்த்த மேரிகியூரி தனது பெயருக்கு எழுதப்பட்டிருப்பதைக் கண்டார். அதைத் தனது ஆராய்ச்சி நிறுவனப் பெயருக்கு மாற்றி எழுதச் சொன்னார் மேரிகியூரி. அந்த ரேடியம் தனக்குப் பின் தம் சந்ததியினரின் உடமை ஆகிவிடக் கூடாது என்பதில் மேரி கவனமாக இருந்தார். அந்தக் கவனம் தான் பொதுநலம் !"
-- ஹெச்.பாஷா, சென்னை - 106.
-- நானே கேள்வி... நானே பதில் ! ஆனந்த விகடன் . 10 . 7 . 2013.

Subscribe to:
Posts (Atom)