Saturday, March 7, 2015

முன்னோர் கடன்.

 அக்னிதத்தர்,  அக்னிஷ்,  அனக்னிதத்தர்,  கவ்யர்,  சௌம்யர்,  பர்ஹ்ஷிதர்,  வர்த்தர்  முதலானோர்  பிராமணரின்  முன்னோர்.  பிராமணர்கலின்  முன்னோர்  --  சோமபர்;  அவர்  பிருகுவின்  மகன்.  சத்திரியரின்  முன்னோர்  --  ஹவிஷ்மத்தர்;  அவர்  ஆங்கிரகரின்  மகன்.  வைசியர்களின்  முன்னோர்  --  ஆஜ்யபர்;  அவர்  புலஸ்தியரின்  மகன்.  சூத்திரர்களின்  முன்னோர்  --  சுகாலிகர்;  அவர்  வசிஷ்டரின்  மகன்.  மரீசி  முதலானமவர்களால்  பிறந்த  இம்முன்னோரும்,  இவர்  பிள்ளைகளும்,  பிள்ளைகளின்  பிள்ளைகளுமே  இவ்வுலகம்  விரிவடைவதற்குக்  காரணம்.
      தேவர்களுக்கு  உணவு  படைத்தல்  முதலானவற்றை  விட  முன்னோர்களுக்குச்  செய்யும்  காரியம்  முதன்மையானது.
      வெள்ளி  அல்லது  வெள்ளி  கலந்த  பாத்திரத்தில்  தண்ணீர்  தந்தால்கூட  முன்னோர்க்கு  அது  மகிழ்ச்சியை  உண்டாக்கும்.
---  காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.

Friday, March 6, 2015

கூடும் நாள், கூடா நாள்.

  மனையாளிடம்  இடையறாத  அன்பு  செலுத்திப்  பருவகாலத்தே  அவளோடு  மகிழ்ச்சி  கொள்க.  மாத  விலக்கில்லா  நாட்களில்  கூடலாம்..
     மாதவிடாய்  நாள்  முதல்  16  நாட்கள்  பெண்ணுக்குப்  பருவகாலம்.  விலக்கு  முதல்  நான்கு  நாட்கள்.  மற்றும்  ஏகாதசி,  திரியோதசி  நாட்களிலும்  கூடற்க.  மீதி  பத்து  நாட்கள்  கூடலாம்.  6, 8 ,10,  12,  14,  16  ஆகிய  இரட்டை  நாட்களில்  கூடினால்  ஆண்மகவு  பிறக்கும் .  5, 7,  9,  11,  13,  15  ஆகிய  ஒற்றை  நாட்களில்  கூடினால்  பெண்மகவு  பிறக்கும்.
     கலவியின்  இன்ப  ஊற்றில்  ஆண்  ஊற்று  அதிகமெனில்  ஆண்மகவும்,  பெண் ஊற்று  அதிகமெனில்  பெண்மகவும்  பிறக்கும்.  இரண்டும்  சமம்  எனில்  பிறப்பது  பேடி  ஆகும்.  ஊற்று  சுரக்கவில்லையெனில்  கரு  உண்டாகாது.
---  காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு. 

Thursday, March 5, 2015

பேல் பூரி.

கண்டது;
(  உடங்குடி  இருசக்கர  வாகனம்  பழுது  பார்க்கும்  கடையில் )
   மாதா பிதா 'ஸ்க்ரூ'தெய்வம்.

(  கிங்ஸ்  பொறியியல்  கல்லூரியின்  நாள்காட்டியில் )
   பார்ப்பதற்கு  வித்தியாமானனாக  இரு
   வித்தியாசம்  பார்ப்பவனாக  இருக்காதே.

( கள்ளக்குறிச்சியில்  ஓர்  ஆட்டோவில் )
   காதலின்  சின்னம்  கேட்டேன்
   கல்லறை  என்றாள்
   கல்லறை  எங்கே  என்றேன்
   என்னைக்  காதலி  என்றாள்.

(  பள்ளிச்  சுவரில்  எழுதப்பட்டிருந்த  வாசகம் )
   வெற்றி  என்றுமே  முடிவடையாது
   தோல்வி  என்றுமே  முடிவாகாது.
--  தினமணிகதிர்.  11 - 3 - 2012.  
---  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

Wednesday, March 4, 2015

தூய்மையான தங்கம்.

  பணக்கடவுளான  திருப்பதி  வெங்கடாசலபதி  உண்டியலில்  தினசரி  சுமார்  இரண்டு  கிலோ  தங்கம்  காணிக்கையாகச்  செலுத்தப்படுகிறது.
     தூய்மையான  தங்கம்  99.99%  தங்கம்  புல்லியன் ( Buillion )  என  அழைக்கப்படுகிறது.
     106.3  டிகிரி  சென்டிகிரேடு  வெப்பநிலையில்  தங்கம்  உருகும்.
     ஒரு  கிராம்  தங்கத்தைக்  கொண்டு  ஒரு  மேஜை  மீது  போடும்  விரிப்பு  அளவுக்குத்  தகடு  செய்து  விட  முடியும்.
     ராஜதிராவகம்  என்ற  ரசாயன  திரவத்தைத்  தவிர  வேறு  எதிலும்  தங்கம்  கரையாது.
     சுத்தமான  தங்கம்  என்பது  24  காரட்  தங்கம்.  இந்தியாவில்  22  காரட்,  ஐரோப்பாவில்  21  காரட்,  ரஷ்யாவில்  14  காரட்,  அமெரிக்காவில்  8 முதல்  14  காரட்  கொண்ட  தங்கம்  பயன்படுத்தப்படுகிறது.
     லண்டன்  உலோகச்  சந்தையில்  தங்கத்தின்  விலை  முடிவு  செய்யப்படுகிறது.  இங்கு  முதன்முதலில்  தங்கம்  வணிக  தீவில்  1919-ம்  ஆண்டு  விலை  நிர்ணயமானது.  இங்கே  நாளுக்கு  இரண்டு  முறை  விலை  நிர்ணயம்  செய்கிறார்கள்.
-- ( சி.சரவணன்  எழுதிய  ' தங்கத்தில்  முதலீடு '  என்ற  புத்தகத்திலிருந்து ).
-- தினமணிகதிர்.  11 - 3 - 2012.          
--- இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

Tuesday, March 3, 2015

சில படிப்புகள்

சங்குகள்  பற்றிய  படிப்பு-----------------காங்க்காலஜி.
பாசிகள்   பற்றிய  படிப்பு----------------பைகாலஜி.
தோல்  பற்றிய  படிப்பு- ------------------டெர்மட்டாலஜி.
குகைகள் பற்றிய  படிப்பு --------------- ஸ்பிலியோலஜி.
பூச்சிகள்  பற்றிய  படிப்பு --------------- எண்டோமாலஜி.
பாறைகள்  பற்றிய  படிப்பு ------------  லிதாலஜி.
மரங்கள் பற்றிய  படிப்பு ----------------  டெண்ட்ராலஜி.
பறவைகள்  பற்றிய  படிப்பு -----------  ஆர்னித்தாலஜி.
தசைகள் பற்றிய  படிப்பு ---------------  மையாலஜி.
செல்திசுக்கள் பற்றிய  படிப்பு --------  ஹிஸ்டாலஜி.
திமிங்கிலங்கள்  மற்றும்
டால்பிங்கள்  பற்றிய  படிப்பு ---------  செடாலஜி.
-- எஸ்.ஜே.அயனாகுமார்,  எட்டிமலை.  தினமணி  சிறுவர்மணி.  7 - 4 - 2012.
--   இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

Monday, March 2, 2015

எட்டு வகை மணம்.

பிராமம்,  தெய்வம்,  ஆருசம்,  பிரஜாபத்யம்,  ஆசுரம்,  காந்தருவம்,  ராட்சசம்,  பைசாசம்  என்று  திருமணம்  எட்டு  வகை.
வேதமறிந்த,  ஒழுக்கமுடைய,  மணமாகாதவனுக்கு  பெண்ணைத்  தானமாகக்  கொடுப்பது  ' பிராமம்.'
வேள்வித்  தீ  வளர்க்கும்  வேதம்  உணர்ந்தானுக்குப்  பெண்ணைக்  கொடுப்பது  தெய்வமணம்.
வளர்த்ததற்குப்  பரிசு ( பரிசம் )  பெற்றுக்  கொண்டுப்  பெண்ணைக்  கொடுப்பது  ஆருசம்.
மணமாகாதவனை  அழைத்து  நல்லறம்  புரிந்து  நெடுநாள்  வாழ்வீராக  என  வாழ்த்தி  பெண்ணைக்  கொடுப்பது  பிரசாபத்யம்.
பெற்றவன்  கேட்கும்  பொருளைக்  கொடுத்துப்  பெண்ணை  கொள்வது  ஆசுரம்
ஆணும்  பெண்ணும்  தாமே  மணந்து  கொள்வது  காந்தருவம்.
பெண்ணைத்  தூக்கிச்  சென்று  மணப்பது  ராட்சசம்.
மது  மயக்கத்தில்  அல்லது  தூக்கத்தில்  அல்லது  பைத்தியமாய்  உள்ள  பெண்னை  மணப்பது  பைசாசம்.
--- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.

Sunday, March 1, 2015

நட்பு

 வயதில்  பத்தாண்டு  மூத்தவரோடும்,  அறிவில்  ஐந்தாண்டு  மூத்தவரோடும்,  வேதமறிந்த  மூன்றாண்டு  மூத்தவரோடும்  சற்றே  முதிர்ந்த  பங்காளியோடும்  நட்பு  கொள்ளலாம்.
    பத்து  வயது  பிராமணன்  எனினும்  பிற  மூன்று  குலத்தார்க்கும்  பெற்ற  தந்தைக்கு  ஒப்பாவான்.  நூறு  வயது  சத்திரியன்  கூட  அவனுக்கு  மகனைப்  போன்றவனே.
    பிராமணன்,  அரசன்,  பெண்,  மணமகன்,  நோயாளி,  சுமைசுமந்தோன்,  தொண்ணூறு  வயது  முதியோன்,  வாகனமேறி வருவோன்  ஆகியோருக்கு  வழிவிட்டு  நிற்க.
   அவர்  யாவரும்  கூட்டமாய்  வந்தால்,  அரசனுக்கும்  பிராமணனுக்கும்  முதலில்  வழிவிடுக.  பிராமணனும்  அரசனும்  எதிரில்  வந்தால்  பிராமணனுக்கே  முதலில்  வழிவிடுக.
--- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்  
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.