Tuesday, May 5, 2015

" பான் கார்டு "

" பான்  கார்டு  தொலைந்தால்  மீண்டும்  பெறுவது  எப்படி?"
     " உங்கள்  ஊரில்  அமைந்திருக்கும்  பான்  கார்டு  வழங்கும்  அலுவலகத்தில்  பான்  கரெக் ஷன்  விண்ணப்பம்  பெற்றுக்கொள்ளூங்கள்.  அதை  நிரப்பி  அத்துடன்  நீங்கள்  பணிபுரிவதற்கான  அல்லது  படித்துக்கொண்டு  இருப்பதற்கான  அடையாள  அட்டை,  இருப்பிட  அடையாள  முகவரி  சான்றிதழ்  ஆகியவற்றின்  நகலையும்  உங்கள்  புகைப்படத்தையும்  விண்ணப்பத்துடன்  இணைத்து  அதே  அலுவலகத்தில்  சமர்ப்பியுங்கள்.  கட்டணமாக  100  ரூபாய்  செலுத்தினால்,  45  நாட்களுக்குள்  புது  பான்  கார்டு  பெற்றுக்கொள்ளலாம்.  பான்  கார்டு  கரெக் ஷன்  விண்ணப்பத்தில்  உங்கள்  பெயர்,  பிறந்த  நாள்,  முகவரி,  மின்னஞ்சல்  முகவரி  போன்றவற்றைக்  குறிப்பிடவேண்டும்.  தொலைந்துபோன  பான்  கார்டில்  தவறாக  இருந்தால்,  அதை  இதன்  மூலம்  திருத்திக்கொள்ளலாம்.  உங்கள்  ஊரில்  இந்த  அலுவலகம்  அமைந்திருக்கும்  முகவரி  அறிந்துகொள்ள  www.tin- nsdl.com  என்ற  தளம்  தட்டுங்கள்! "
-- ராஜன்,  இயக்குநர்,  ஹோலிஸ்டிக்  இன்வெஸ்ட்மென்ட்  பிளானர். ( இதுதான்...இதற்குத்தான்...இப்படித்தான் ! )
--  ஆனந்த விகடன்,  28 - 11 - 2012.

Monday, May 4, 2015

ஜோக்ஸ்.

*  " ஒற்றன்  வேலைக்கு  ஆள்  தேவை  என்பதை  எப்படிக்  கண்டுபிடித்தாய்?"
   " ஒட்டுக்  கேட்டேன்  மன்னா...."
   " யு  ஆர்  அப்பாயின்டட் !"
*  " நீ  மனசு  சொல்றதைக்  கேட்டு  நடப்பியா?  மூளை  சொல்றதைக்  கேட்டு  நடப்பியா?"
   " என்  சம்சாரம்  சொல்றதைக்  கேட்டுதான்  நடப்பேன் !"
*  " நீ  செய்த  தப்பு  என்ன  தெரியுமா?"
   " மாட்டிக்கிட்டதுதான்  எஜமான் !"
--- ஆனந்த விகடன்,  28 - 11 - 2012.  

Sunday, May 3, 2015


தவளை - தேரை.

தவளைக்கும்  தேரைக்கும்  என்ன  வித்தியாசம்  தெரியுமா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தவளை                                                                                              தேரை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தண்ணீர்  உள்ள  பகுதியில்  வசிக்கும்                                    வாழ  தண்ணீர்  தேவையில்லை.
உடம்பு  மெல்லியதாகவும்,  ஈரப்பதத்துடன்  இருக்கும்             உடம்பு  சொரசொரப்பாகவும்,  வரண்டுபோய்  இருக்கும்.
ஒல்லியான  தேகம்                                                              குண்டு  குண்டாக  இருக்கும்.
நீண்ட  கண்கள்  இருக்கும்                                                    பந்து  போல்  உருண்டையான  கண்கள்/
முன்னங்கால்கள்  நீண்டு  இருக்கும்                                       முன்னங்கால்கள்  குட்டையாக  இருக்கும்.
தத்தித்  தாவ  முடியும்                                                           குதிக்க  முடியாது.
-- தினமலர் ,  சிறுவர்மலர்.   நவம்பர்,  23.  2012.   

Saturday, May 2, 2015

இன்பாக்ஸ்

 *  ரிமோட்  கன்ட்ரோல்  இல்லாத  டி.வி.. கற்பனை  செய்ய  முடிகிறதா  உங்களால்?  1955 ல்  டி.வி.  ரிமோட்டைக்  கண்டுபிடித்த  யூகன்  போலே,  கடந்த  வாரம்  இறந்து  போனார். ஜப்பானின்  சிகாகோ  நகரில்  பிறந்து,  ஜெனித்  எலெக்ரானிக்ஸ்  நிறுவனத்தில்  வேலை  பார்த்த  போலே,  ரிமோட்டைக்  கண்டுபிடித்தபோது  முதலில்  யாரும்  அதன்  இயக்கத்தை  நம்பவில்லையாம்.  ஆயுளின்  இறுதியில்  போலே  வசம்  இருந்தது  மொத்தம்  18  பொருட்களுக்கான  காப்புரிமை.  அதில்  ஒன்று  ஃப்ளாட்  டி.வி. ரிமோட்.  சல்யூட்  சார்!
-- ஆனந்த விகடன்,  6 - 6 - 2012.  

Friday, May 1, 2015

ஜோக்ஸ் !

*  " உன்னைக்  கட்டிகிட்டதுக்கு  ஒரு  கழுதையைக்  கட்டியிர்க்கலாம்!"
   " நீங்க  சொல்லிட்டு  இருக்கீங்க... நான்  எப்பவோ  செஞ்சுட்டேன்!"
*   "சாமியாருக்கு  ஆங்கிலப்  பேச்சாற்றல்  அவசியமா  குருஜி?"
    "பின்னே... ஃபாரின்  ஃபிகர்ஸை  எப்படி  உஷார்  பண்றதாம்!"
*  " குற்றவாளிக்  கூண்டில்  இப்படி  எதுவுமே  பேசாம  நின்னா  எப்படி?"
   " மைக்...சோடா...இல்லாட்டி  எனக்குப்  பேச  வராது  ஜட்ஜையா!"
*  " திஸ்  வேஷ்டியை  வாஷ்  அண்ட்  கம்..."
   " தலைவர்  இங்கிலீஷ்ல  வெளுத்து  வாங்குவார்னு  சொன்னேன்ல்ல.." ;
--  ஆனந்த விகடன்,  6 - 6 - 2012.

சிதம்பர ரகசியம்

  (  சிறப்பு )   சிதம்பரம்  நடராஜர்  கோயில்  கும்பாபிஷேகம்  01-05.2015 .
பஞ்சபூத  தலங்களில்  ஒன்று
     உலகில்  வாழ்வதற்கு  பெரிதும்  ஒத்திசைவாக  இருப்பதில்  நிலம்,  நீர்,  காற்று,  ஆகாயம்,  நெருப்பு  என்னும்  பஞ்சபூதங்கள்  பெரும்பங்கு  வகிக்கின்றன.  அதில்  திருவாரூர்  தியாகராசர்  நிலதின்  அதிபதியாகவும்,  திருவானைக்காவல்  ஜம்புகேஸ்வரர்  நீருக்கு   அதிபதியாகவும்,  திருக்காளத்தி  காளஹஸ்தீஸ்வரர்  காற்றின்   அதிபதியாகவும்,  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர்  நெருப்பின்   அதிபதியாகவும்,  ஆகாயத்தின்   அதிபதியாக  சிதம்பரம்  நடராஜ  பெருமானும்  உள்ளனர்.
தரிசிக்க  முக்தி
     திருவாரூரில்  பிறந்தால்  முக்தி,  காஞ்சியில்  வாழ்ந்தால்  முக்தி,  திருவண்ணாமலையை  நினைக்க  முக்தி,  சிதம்பரத்தை  தரிசிக்க  முக்தி,  காசியில்  இறக்க  முக்தி  என்பார்கள்.
உடலின்  அமைப்பு
     மனிதனின்  உருவ  அமைப்பிற்கும்,  தங்கத்தால்  ஆன  நடராஜர்  சன்னதிக்கும்  நிறைய  ஒற்றுமை  இருக்கிறது.  பொன்னம்பலத்தில்  சிவாய  மந்திரம்  பொறிக்கப்பட்டு  வேயப்பட்டுள்ள  21  ஆயிரத்து  600  ஓடுகள்,  மனிதன்  ஒரு  நாளைக்கு  விடும்  சுவாசத்தின்  எண்ணிக்கையைக்  குறிக்கும்.  பொன்னம்பலத்தில்  அடிக்கப்பட்டுள்ள  72  ஆயிரம்  ஆணிகள்,  மனிதனின்  நாடி  நரம்புகளைக்  குறிக்கிறது.  கோயிலில்  உள்ள  9  வாசல்கள்,  மனித  உடலிலுள்ள  9  துவாரங்களை  நினைவுபடுத்துகிறது.  இது  தவிர  ஆன்மிக  ரீதியிலான  அமைப்பும்  உண்டு.  ஐந்தெழுத்து  மந்திரமான  சிவாயநம  என்பதின்  அடிப்படையில்  பொன்னம்பலத்தின்  ஐந்து  படிகளும்,  64  கலைகளின்  அடிப்படையில்  சாத்துமரங்களும்,  96  தத்துவங்களைக்  குறிக்கும்  விதமாக  96  ஜன்னல்களும்,  4  வேதங்கள்,  6  சாஸ்திரங்கள்,  பஞ்சபூத  அடிப்படையில்  தூண்களும்  அமைக்கப்பட்டுள்ளன.
தேரோட்டத்தில்  உலாவரும்  மூலவர்
    சிற்சபையில்  வீற்றிருக்கும்  மூலவரே,  தேரோட்டத்தின்  போது,  உற்சவராக  மாறி  தேரில்  அமர்ந்து  உலா  வருவது,  வெளியில்  வருவது  வேறு  எந்த  ஆலயத்திலும்  காணமுடியாத  ஒன்றாகும்.
10  தீர்த்தக்  குளங்கள்
       மூர்த்தி,  தலம்,  தீர்த்தம்  மூன்றாலும்  சிறப்பு  பெற்றதுடன்,  10  தீர்த்தங்கள்  உள்ளது  இத்தலம்.  
     இங்குள்ள  ஆயிரங்கால்  மண்டபத்தில்தான்,  சேக்கிழார்  பெரியபுராணம்  பாடி  அரங்கேற்றினார்.  இத்தலத்தில்  உள்ள  முருகப்பெருமானை  தனது  திருப்புகழில்  பாடியுள்ளார்,  அருணகிரிநாதர்.  
-- தொகுப்பு :-  நெய்வாசல்  நெடுஞ்செழியன்.
-- தினத்தந்தி.  அருள்தரும்  ஆன்மிகம்  இணைப்பு.  28-4-2015.
-- இதழ்  உதவி:  மு. விஷ்ணுவர்த்தன்,  திருநள்ளாறு.