Monday, July 6, 2015

பஞ்சவடி, சாகா, பழம்.

   ராமாயணத்தில்  வரும்  பஞ்சவடி  என்னும்  இடம்  கோதாவரி  தீரத்தில்  உள்ள  நாசிக்  என்ற  இடமே.  ' வடம் '  என்பது  ஆலமரத்தின்  பெயர்.  அங்கே ஐந்து  ஆலமரங்கள்  இருந்தன.  அதனால்  பஞ்சவடி  என்ற  பெயர்  வந்தது.  அங்கே  வனவாசத்தின்போது  ராமர்  வந்து  தங்கியபோது  சூர்ப்பனகை  வந்து  மூக்கு  அறுபட்டாள்.  நாசிகை  என்பது  மூக்கு.  சூர்ப்பனகையின்  மூக்கு  விழுந்த  இடமாதலில்  ' நாசிகா '  என்று  வந்து  அதுவே  ' நாசிக் '  ஆயிற்று.
      'சாகா'  மிருகம்  என்று  குரங்குக்குப்  பெயர்  சொல்வார்கள்.  ஆனால்,  அது  சாகாது  என்று  பொருள்  இல்லை!   சாகா  என்பது  தழையைக்  குறிக்கும்.  ஊனுண்ணாமல்  தழை,  தளிர்  முதலியவற்றை  உண்ணுவதால்  குரங்குக்கு  அந்தப்  பெயர்  வந்தது.
      எத்தனையோ  பழங்கள்  இருக்க  ஆண்டவன்  வழிபாட்டுக்கு  வாழைப்பழத்தை  பயன்படுத்துவது  ஏன்?  என்று  பலருக்குச்  சந்தேகம்.  வாழைப்பழம்  எல்லாக்  காலங்களிலும்  கிடைக்கும்  என்பதே  காரணம்!
-- ( ' விடைகள்  ஆயிரம் '  என்ற  நூலில்,  கி.வா.ஜகந்நாதன் ).
-- தினமணி கதிர்.  1 - 4 - 2012.
--  இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.      

Sunday, July 5, 2015

பிரெஞ்சு புரட்சி

 பிரெஞ்சு  புரட்சியின்போது  கொடிய  பாஸ்டில்  சிறை  உடைக்கப்பட்டது.  பல  வருடங்களாக  கை,  கால்களில்  விலங்குகளோடு  வாழ்ந்தவர்கள்,
வெளிச்சத்தையே  பாராமல்  இருட்டில்  சிறை  வைக்கப்பட்டவர்கள்  விடுதலை  செய்யப்பட்டனர்.  ஆனால்,  விடுவிக்கப்பட்டவர்களால்  வெளியே  வாழ  முடியவில்லை.  வெளிச்சத்தையே  அவர்களால்  பார்க்க  முடியவில்லை.  மறுபடியும்  சிறைக்குள்  வாழவே  அவர்கள்  அனுமதி  கேட்டுக்  கெஞ்சினார்கள்.  நம்ப  முடிகிறதா?  அடிமைகளுக்குத்  துயரங்களே  வாழ்வாகி  விடுகிறது.  அவர்கள்  எஜமானர்கள்  ஆக  விரும்புவதே  இல்லை!
-- சுகி.சிவம். ' எப்போதும்  சந்தோஷம் ' தொடரில்.
-- தினகரன்  ஆன்மிக  மலர்.  7 - 8 - 2010

Saturday, July 4, 2015

தமாஷ் !

*  " ஊட்டியில  எஸ்டேட்  இருக்குன்னு  சொன்னீங்களே ..... "
   " ஆமா,  அது  எம்  பேர்ல  இருக்குன்னு  சொல்லலையே  டார்லிங் ! "
*  " இனிமேல்  சத்தியமா  குடிக்க  மாட்டேன்னு  சொன்னீங்களே..."
   " விட்டுட்டேன்  டாக்டர் !"
   " குடிக்கிறதையா?"
   " ம் ஹூம்,  சத்தியம்  பண்றதை !"
* " ஜெனரல்  வார்டுல  இருக்க  விரும்புறீங்களா...ஸ்பெஷல்  வார்டுல  இருக்க  விரும்புறீங்களா?"
  " எங்கே  வேணாலும்  இருக்கென்  டாக்டர்.  ஆனா,  நான்  இருக்கணும்!"

வியாழனும், வெள்ளியும் அருகருகே!

  (  சிறப்பு ).
அற்புத  காட்சியை  இரவில்  காணலாம்.
     கடந்த  சில  நாட்களாக  இரவில்  வானத்தின்  வடகிழக்கில்  வெள்ளி  கிரகமும்,  வியாழன்  கிரகமும்  அருகருகே  தோன்றுகின்றன.  வெள்ளி  கிரகம்  மிகவும்  பிரகாசமாக  காட்சி  அளிக்கிறது.  இப்போது  வெள்ளிகிரகம்  பூமியில்  இருந்து  10  கோடி  கிலோ  மீட்டர்  தூரத்தில்  உள்ளது.  ஆனால்,  வியாழன்  கிரகம்74  கோடி  கிலோ  மீட்டர்  தூரத்தில்  இருக்கிறது.  2  கிரகங்களும்  சூரியனை  சுற்றி  வருகின்றன.  வியாழன்  விரைவில்  சூரியனை  சுற்றிவிடும்.
     ஆனால்  வெள்ளி  சுற்ற  ஆண்டுக்கணக்கில்  ஆகும்.  அவ்வாறு  வெவ்வேறு  சுற்றுப்பாதைகளில்  சுற்றும்  2  கிரகங்களும்  அருகருகே  வருவது  இயல்பு.  அதேபோல்தான்  இப்போது  வெள்ளி  கிரகம்  சுற்றும்போது  அது  வியாழன்  அருகே  வருகிறது.  அவ்வாறு  வரும்போது  வெள்ளி  கிரகமும்,  வியாழன்  கிரகமும்  அருகருகே  தெரியும்.
     இந்த  காட்சி  ஆண்டுக்கு  5  அல்லது  6  நாட்கள்தான்  தெரியும்.  இந்த  ஆண்டு  2  கிரகங்களும்  அருகருகே  தோன்றும்  காட்சி  கடந்த  30-ம்  தேதி  முதல்  தெரிகிறது.  தினமும்  இரவில்  7  மணி  முதல்  8.15  வரை  அந்த  காட்சியை  காணலாம்.  4-ஆம்  தேதி  இரவு  வரை  இந்த  அற்புத  காட்சியை  சாதாரண  கண்களிலேயே  காணலாம்.
-- தினமலர்  திருச்சி . வெள்ளி. ஜூலை  3,  2015.   

Friday, July 3, 2015

அறிந்து கொள்வோம் !

*  போலியோ  தடுப்பு  மருந்தை  கண்டுபிடித்தவர்  --  ஜோன்ஸ்  சால்க் .
*  நெயில்  பாலிஷில்  உள்ள  ரசாயனம்  --  அசிடோன் .
*  மத்திய  காபி  ஆராய்ச்சி  நிலையம்  --  பலேஹன்னூர்,  கர்நாடகாவில்  உள்ளது .
*  பெயின்ட்  தொழிலில்  வெளிப்படும்  மாசு  --  அலுமினிய  மாசு .
*  டெசிமல்  முறைக்கு  இந்தியா  --  1957 ம்  ஆண்டு  மாறியது .
*  சீக்கியர்களின்  10வது  குரு  கோவிந்த்சிங்கின்  மனைவி  பெயர்  --  மாதா  சுந்தரி .
*  ராயல்  பெங்கால்  புலிக்கு  முன்,  இந்தியாவின்  தேசிய  விலங்கு  --  சிங்கம் .
*  ஆசியாட்டிக்  சொசைட்டியை  நிறுவியவர்  --  வில்லியம்  ஜோன்ஸ் .
*  எமர்ஜென்சி  கொண்டுவரப்பட்டபோது  நாட்டின்  ஜனாதிபதியாக  இருந்தவர்  --  பக்ருதீன்  அலி  அகமது .
*  பீடியில்  சுற்றப்பட்டிருக்கும்  இலையின்  பெயர்  --  டெண்டு  இலை .
*  கடந்த  1962 ம்  ஆண்டு  இந்தியா  --  சீனா  போர்  நடந்தபோது,  இந்தியாவின்  ராணுவ  அமைச்சராக  இருந்தவர்  --
   கிருஷ்ண  மேனன் .
*  அதிக  பிரிகுவன்சி  கொண்டது  --  மைக்ரோவேவ் .
----   தினமலர் .23 . 1 . 2012 . 

Thursday, July 2, 2015

தெரியுமா ? தெரியுமே !

*  தலைக்கு  உள்ளே  இருக்கின்ற  காதுகளினாலும்,  உடலாலும்  மீன்கள்  தண்ணீருக்குள்ளே,  தங்களைச்  சுற்றி  எழும்
  சப்தங்களை  உள்வாங்கிக்  கொள்கின்றன  என்கிறது  நேஷனல்  வைல்ட்டு  லைப்  பெடரேஷன்  ஆய்வு !
*  இயற்கையாக  மனிதர்களுக்கு  வயது  ஏறஏற  முளையின்  அளவு  சிறியதாகிப்  போகிறது .  ஒவ்வொரு
    புத்தாண்டிற்கும்  1.9  சதவீதம்  மூளை  தன்னுடைய  கன  அளவை  இழக்கிறதாம் .இதனால்  நினைவாற்றல்
   குறைகிறது .  அதனால்தான்  ஞாபகமறதி  ஏற்படுகிறது 

Wednesday, July 1, 2015

டிப்ஸ்...டிப்ஸ் !

*  நாம்  நினைத்தது  நிறைவேற  வேண்டும்  என்றால்,  அதற்கு  நாம்  தீவிரமாக  ஆசைப்பட  வேண்டும்.  அது  நிச்சயம்  நடந்தே  தீரும்  என்று  நம்ப
    வேண்டும்.    -- குடியரசுத்  தலைவர்.  ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
* கோயில்களில்  இருக்கும்  கொடிமரத்தின்  தாத்பரியமே,  பஞ்ச  பூதங்களில்  ஒன்றான  ஆகாயத்தில்  அமைந்துள்ள  பிரம்மத்தின்  கதிர்களை  கோயிலின்
  கும்பத்திற்கு  செலுத்தி,  அங்கிருந்து  மூலவருக்கு  அதனை  அளிப்பதுதான்.  கொடி  மரத்திற்கு  முன்னால்  மட்டும்தான்  விழுந்து  கும்பிடவேண்டும்.  மற்ற
  இடங்களில்  செய்வது  தவறாகும்.
* பிரம்ம  முகூர்த்த  நேரத்தில் ( அதிகாலை  4.30  மணி  முதல்  5.30  மணி  வரை )  வாசல்  தெளித்து  கோலம்  போடும்  வீட்டின்  உள்ளே  ஸ்ரீமகாலஷ்மி
  ஆசையோடு  வருனாள்.  கோலத்தின்  நடுவில்  அகல்  விளக்கை  கிழக்கு  முகமாக  ஏற்றி  வைத்தால்,  அந்த  வீட்டில்  மங்கலம்  பெருகி,  செல்வம்
  நிறையும்.
* கோலத்தைக்  குனிந்து  நின்றுதான்  போட  வேண்டும்.  அமர்ந்தபடி  பொடக்கூடாது.  கோலத்தில்  தவறு  வராமல்  போடுவது  மிகவும்  நல்லது.
   ஒரு  வேளை  புள்ளிகளோ  இழைகளோ  தவறாகி  விடுமானால்,  அவற்றை  ஈரத்  துணியால்  ஒற்றி  எடுத்துவிட்டு  மறுபடி  போடவேண்டும்.  கோலத்தை
   ஒருபோதும்  கையாலோ  அல்லது  காலாலோ  அழிக்கக்கூடாது.
* பெரும்பாலான  கோயில்களில்  பலிபீடம்  அமைந்திருக்கும்.  பலிபீடம்  என்பது  பாசத்தைக்குறிக்கும்.  பலிபீடத்தை  ஸ்ரீபலிநாதர்  என்றழைப்பர்.
   ஆலயத்தில்  எட்டு  மூலைகளில்  பலி  பீடங்கள்  அமைந்திருக்கும்.  இதனை ' அஷ்ட  திக்பாலகர்கள் '  என்று  கூறுவர்.  இதற்கெல்லாம்  முதன்மையானது
   சிவனுக்கு  எதிரில்  நந்தியின்  பின்புறமாக  அமைக்கப்பட்டிருக்கும்!
--- குமுதம்  சிநேகிதி ,  ஆகஸ்ட்  15,  2006.