Thursday, April 7, 2016

ஆன்மிகம்.

*  அபிமன்யுவின் தாய் சுபத்திரை.
*  ஜனகர், ராஜ ரிஷி என அழைக்கப்படுகிறார்.
*  மனீஷா பஞ்சகம் என்னும் நூலை இயற்றியவர் ஆதிசங்கரர்.
*  பீமன், அனுமனின் தம்பி.  இருவருமே வாயு பகவானின் புதல்வர்கள்.
*  'மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்' எனப் பாடியவர் வள்ளலார்.
*  வைணவத் தத்துவத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இறைவனிடம் சரணாகதி அடைதல்.
*  உலகெலாம் என்பது சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின் முதல் அடி.  இறைவனே முதல் அடி எடுத்துக் கொடுத்ததாக
    ஐதீகம்.
*  ஆறு விதமான தத்துவப் பார்வைகள் ஷட் தரிசனங்கள் எனப்படுகின்றன.  வைசேஷிகம் அவற்றில் ஒன்று.
*  ராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சினேசுவரத்தில் காளி கோயில் பூசாரியாக இருந்தார்.
*  ருத்ரம் என்பது யஜுர் வேதத்தின் ஒரு பகுதி.
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஏப்ரல் 17,2014.   

Wednesday, April 6, 2016

சனி கிரகம்

சனி கிரகத்துக்கு புதிய துணை கிரகம்.  நாசா கண்டுபிடிப்பு.
      சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் சனி கிரகமாகும்.  சனி கிரகத்துக்கு 61 துணைகோள்கள் உள்ளன.  இந்நிலையில் சனி கிரகத்துக்கு புதிதாக 62 வது துணைக் கிரகம் தோன்றியிருப்பதை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் காசினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
      சனிகிரகத்துக்கு  இருப்பதுபோன்றே புதிய துணைகிரகத்துக்கும் பிரகாசமான வளையம் உள்ளது.  பனிக்கட்டியை போன்று பளபளப்பாக அந்த வளையம் காணப்படுகிறது.
     இதுகுறித்து  நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கார்ல் கூறுகையில், 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள துணைகோள் ஆயிரத்து 200 கி.மீ. நீளமும், 10 கி.மீ. அகலமும் உள்ளது. சனி கிரகத்தில் இது போன்ற துனை கிரகத்தை இதற்கு முன் பார்த்ததில்லை.  புதிதாக கண்டுபிடித்துள்ள துணை கிரகத்துக்கு 'பெக்கி' எனப் பெயரிடப்பட்டுள்ளது,  புதிய துணை கிரகத்தின் மூலம் சனி கிரகத்தின் துணைக்கிரகங்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
-- தினமலர்.  17-4-2014.  

Tuesday, April 5, 2016

விடை தேடும் பயணம்


1.  தக்கல் முறையில் ரயிலில்முன்பதிவு செய்தால் -- முதல் வகுப்பில் செல்வது, முதியோருக்கான கட்டணச் சலுகையை
     அனுபவிப்பது, பள்ளி மாணவர்களுக்கான கட்டணச் சலுகையை அனுபவிப்பது ஆகிய மூன்றும் சாதியமில்லாதது.  பயணம்
     செல்வதற்கு அதிகபட்சம் ஒரு நாள் முன்னதாகச் செய்யப்படும் தக்கல் முறை முன்பதிவில் முதல் வகுபிலும் செல்ல
     முடியாது,வேறு எந்தச் சலுகைகளையும் அனுபவிக்க முடியாது.
2.  ஸ்விட்சர்லாந்தின் தேசிய மொழி -- ஜெர்மன் தான்.  ஸ்விஸ் என்பது ஒரு மொழி கிடையாது.   ஸ்விட்சர்லாந்தைப்
     பொறுத்தவரை நான்கு தேசிய மொழிகள் உண்டு.  அவை ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இத்தாலியன், ரோமான்ஷ் ஆகியவை.
3. "சஷ்டியை நோக்க சரவண பவனார்" என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் --  இயற்றப்பட்டது ஈரோட்டின் அருகிலுள்ள
      சென்னிமலையில்.  இதை எழுதியவர் தேவராய சுவாமிகள்.  இவர் தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்.
4.  ஆக்ரா கோட்டை ஜலாலுதின் முகம்மதுவால் எழுப்பியது.  திகைக்க வேண்டாம்.  அதுதான் அக்பரின் அசல் பெயர்.
5.  ஒடிஷாவில் தோன்றிய ஒடிஸியிலும், ஆந்திரத்தில் பிரபலமான குச்சிபுடி நடனத்திலும் சலங்கை அணிவார்கள்.  மணிப்புரி
     நடனத்தில் சலங்கைகள் அணிவதில்லை.
6.  ஸ்மார்ட் கார்டு என்பது சட்டைப் பைக்குள் வைக்கும்படியான ஒரு சிறிய பிளாஸ்டிக் அட்டை.  இதில் ஒருங்கிணந்த
     மின்னணுச் சுற்றுகள் ( integrated circuits ) இருக்கும்.  இதை அடையாள அட்டையாகவோ, தகவல்களைப் பதிவு செய்யும்
     அட்டையாகவோ, இவற்றின் தொடர்பான செயல்பாடுகளுக்காகவோ பயன்படுத்தலாம்.  ஏ.டி.எம். அட்டை ,  கடன் அட்டை ,
     செல்போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டு மூன்றுமே ஸ்மார்ட் கார்டுகள்தான்.
7.  நம் உடலை ரத்தம் முழுவதுமாக ஒரு முறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் 23 நொடிகள்.  தேசிய கீதத்தை உரிய
     முறையில் பாட எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் 52 நொடிகள்.  ஒரு குயரில் 24 தாள்கள் இருக்கும்.
--  ஜி.எஸ்.சுப்ரமணியன்,மனித வள ஆலோசகர், எழுத்தாளர், க்விஸ் மாஸ்டர்,.    வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 14 , 2014.                  

Monday, April 4, 2016

ஆங்கிலம் அறிவோமே.

 ENQUIRT  --  INQUIRY
உங்கள் பெயர் என்ன?
உங்கள் ஊர் எது?
திருச்சிக்கு எப்படி போக வேண்டும்?
இந்த பஸ் எப்போது கிளம்பும்?
    -- மேலே உள்ள கேள்விகளை எப்படிக் குறிப்பிடலாம்? Enquiry என்றா?  அல்லது Inquiry என்றா?
     Enquiry என்றுதான்.  Enquiry என்றால் தகவலைக் கேட்பது .  அப்படியானால் மற்றொரு வார்த்தையான Inquiry என்பதற்கு என்ன பொருள்?
     inquiry என்றால் ஆழ்ந்த விசாரனை என்று பொருள்.
     அதாவது Departmental inquiry, Police Inquiry என்பது போல.
     மனைவி கணவனிடம் இப்படிக்கேட்கிறாள்.
    "என்னங்க, பைக்கிலே யாரோ ஒரு பெண்ணை இன்னிக்கு ஏத்திக்கிட்டு வந்தீங்களாமே.  அவ யாரு ?"
     கணவன் ( கலக்கத்துடன் மனதிற்குள் யோசிக்கிறான் ) -- "இது சாதாரண Inquiry -- யா? அல்லது ஒரு Inquiry--யின் தொடக்கமா?"
--  ஜி.எஸ்.சுப்ரமணியன்,மனித வள ஆலோசகர், எழுத்தாளர், க்விஸ் மாஸ்டர்,.    வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 14 , 2014. 

Sunday, April 3, 2016

ஆழிப் புதையல்

  நாக்கில் ஒரே ஒரு சொட்டு விட்டாலே உப்புக்கரிக்கும் கடல் தண்ணீர் இருக்கும் பகுதிக்குக் கொஞ்சம் தள்ளி, நிலப்பகுதியில் ஊற்று தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறது.  அந்தத் தண்ணீர் கரிப்பதில்லை.  இனிக்கிறது.  இது எப்படி சாத்தியம்?
     இதற்குக் காரணம் கடற்கரையில் உள்ள மணல்குன்றுகள் கடல் நீரை உள்ளே புகவிடாமல் தடுத்துவருவதுதான்.  இப்படிக் கடற்கரையோர, கடல் சூழ்தொகிதி ( Coastal and marine ecosystem)பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
-- நேயா.  பொது அறிவு.
--  'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 14 , 2014. 

Saturday, April 2, 2016

ஆங்கிலம் அறிவோமே.

   ARTIST --  ARTISTE.  எம்.எஃப்.ஹூசேன், சின்னக்குயில் சித்ரா, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்.  ஆம் ஓவியரை மட்டுமல்ல பிற கலைஞர்களையும் ஆர்டிஸ்ட் என்றுதான் ஆங்கிலத்தில் கூறுவது வழக்கம்.
     அப்படியானால் பின்வருமாறு குறிப்பிடலாமா?
    "M.S.Hussain, A.R.Rahman and Chinna are popular artists".  இல்லை இது தப்பு. Hussin artist மற்ற இருவரும் artistes
( அதிகப்படியாக ஒரு "E"உட்கார்ந்து இருப்பதைக் கவனித்தீர்களா? )  அதாவது ஓவியரை artist என்று குறிப்பிடுகிறோம்.  ராஜா ரவிவர்மா, பிக்காசோ, எம்.எஃப்.ஹுசேன் எல்லோரும் artists.
     பாடகர், நடனக் கலைஞர் போன்ற perforrmers-ஐ artists என்று குறிப்பிடுவதுதான் வழக்கம்.
     பிரெஞ்சு மொழியில் artist என்பதையே artiste என்றுதான் எழுதுவார்கள்.  அது வேறு விஷயம்.
     சொல்லும்போதுகூட இந்த இரண்டு வார்த்தைகளையும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் உச்சரிக்க வேண்டும்.  artist என்பதை ar-tist இரண்டு பகுதிகளையும் சமமான அழுத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.  artiste என்று சொல்லும்போது "Teast" என்ற இரண்டாம் பகுதியை அதிக அழுத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.
     எம்.எஸ்.சுப்லட்சுமி - artiste, வான்கோ - artist.   சூர்யாவின் அப்பா சிவகுமார் எப்படி?  "E" உள்ள ஆர்டிஸ்டா அல்லது "E"இல்லாத ஆர்டிஸ்டா?  அவர் ஓவியர், நடிகர் ஆகிய இரண்டும் என்பதால் இரண்டும்தான்.
     இன்னொன்றையும் கூற வேண்டும்.  இப்போதெல்லாம் சிலர் நடைமுறையில் artiste என்று நான் சொன்னவகையைச் சேர்ந்தவர்களைக்கூட artist என்றே குறிப்பிடுகிறார்கள்.  Kerosene Oil என்று கூவி விற்றுக்கொண்டு போனால் புரியாது.  கிருஷ்ணாயில் என்று சொன்னால்தான் சுலபமாகப் புரியுமல்லவா அந்த மாதிரி ஆகிவிட்டது.
-- ஜி.எஸ்.சுப்ரமணியன்,மனித வள ஆலோசகர், எழுத்தாளர், க்விஸ் மாஸ்டர்,.    வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 14 , 2014.  

Friday, April 1, 2016

யுவான் சுவாங்.

   உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானித்திருக்கிறார்கள்.  அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன.  ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமனவர்தான் சீனப் பயணி யுவான் சுவாங்.
     நாட்டைவிட்டு இன்னொரு தேசத்துக்குச் செல்வது தேசக் குற்றம் என்று சீனாவில் கருதப்பட்ட காலம்.  அதையும் மீறி யுவான் சுவாங் இந்தியாவை நோக்கிப் பயணிக்கக் காரணம், தான் ஏற்றுக்கொண்ட புத்த மதம் தோன்றிய பூமியைப் பார்க்கும் ஆவல்.  புத்தர் ஞானம் அடைந்த புத்தகயாவைத் தரிசிக்கவும், போதி மரத்தின் நிழலில்தன் ஆன்மாவை இளைப்பாற்றவும், புத்தர் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதியில் நீராடவும், புத்த ஞானத்தைக் கற்பதும்தான்.  ஆனால், அதற்காக அவர் அடைந்த இன்னல்களும் சங்கடங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல.  கிட்டத்தட்ட 17 ஆண்டு கால அவரது பயணத்தில் குறுக்கே நின்றவை கொடும்பாலை, கடுங்குளிர், வெப்பக்காற்று, ஆழம் நிறைந்த ஆறுகள், வழிப்பறிகள், வானுயர்ந்த மலைகள், அரசர்களின் சுயநலம்... ஆகியவை.
     தன் 17 வருட ஆன்மிகப் பயணத்தில் இந்தியாவில் இருந்து யுவான் சுவாங் எடுத்துச் சென்றவை, 22 குதிரைகளில் 627 சமஸ்கிருத நூல்களும், 115 புனிதப் பொருட்களும், புத்தரின் பொற்சிலை ஒன்றும்தான்.  கடும்கட்டுப்பாட்டை மீறி சீனத் தேசத்தை விட்டு வெளியேறி வந்த யுவான் சுவாங், கி.பி.645-ம் ஆண்டு மீண்டும் சீனா வந்தபோது கோலாகலமாக வரவேற்கப்பட்டதும், சீன தேசத்தின் மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தபோது தான் வரித்துக்கொண்ட கொள்கைக்காக அதனை ஏற்க மறுத்ததும், இந்தியாவிலிருந்து கொண்டுவந்த சமஸ்கிருத நூல்களை சீனத்தில் மொழிபெயர்க்க ஆட்களை மட்டும் பெற்றுக்கொண்டு, அந்தப் பணியில் மட்டுமே தன்னை அர்ப்பணித்து 65-வது வயதில் இறப்பதுவும், யுவான் சுவாங்கின் வாழ்வு ஒரு கனவுபோல வாசகன் முன் விரிகிறது.
-- 'போதியின் நிழல்'  நூலில், அசோகன் நாகமுத்து.
-- ஆனந்த விகடன். 16-10-2013.