Tuesday, September 6, 2016

தாய்ப்பால்

உலகிலேயே சிறந்த உணவு.
உலக தாய்ப்பால் வாரம் ( ஆகஸ்ட் 1 - 7 )
தாய்ப்பால்தான் குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவு. இதில் ஒப்பிட இயலாத பல பண்புகள் உள்ளன. அது குழந்தைக்கு முற்றிலும் பாதுகாப்பானது. தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் மற்றக் கிருமிகளும் அதில் சேரவே முடியாது. இருமல், சளி, மார்பு நோய் போன்ற சில நோய்த் தொற்றுக்களில் இருந்து குழந்தைக்கு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியைத் தாய்ப்பால் அளிக்கிறது. குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் அதில் அடங்கியிருக்கின்றன. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும். வயிற்றுப் பிரச்னை எதுவும் ஏற்படாது. ஆஸ்துமா, எக்சியா போன்ற ஒவ்வாமைகளினால் பாதிக்கப்படுவது மிகக் குறைவு. அனைத்துக்கும் மேலாகக் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பிரத்யேகமான பாசப் பிணைப்பைத் தாய்ப்பால் ஏற்படுத்துகிறது. இது குழந்தையின் மனநிலையில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
-- டி.கார்த்திக். நலம் வாழ.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஆகஸ்ட் 5,2014.

Monday, September 5, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. தினைப்புனத்தில் முருகன், வேங்கை மரமாக மாறி நின்றார்.
2. வயிற்று நோய் தீர ஆதிசங்கரர் முருகன் மீது பாடியது, சுப்ரமணிய புஜங்கம்.
3. திருப்பதியில் கோயிலுக்கு அருகிலுள்ள தீர்த்தம், சுவாமி புஷ்கரணி.
4. சிவாலயத்தில் தியானத்தில் லயித்திருப்பவர், சண்டிகேஸ்வரர்.
5. வள்ளிமலை சுவாமிக்கு அருள் புரிந்தவர், திருத்தணி முருகன்.
6. திருநீற்றுப்பதிகம் பாடப்பட்ட சிவத்தலம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்.
7. சங்கரநாராயணர் கோலத்தைப் பாடிய ஆழ்வார், பேயாழ்வார்.
8. திருப்பதி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ள காப்பியம், சிலப்பதிகாரம்.
9. தொண்டைமானுக்கு சக்ராயுதம் கொடுத்து உதவியவர், திருப்பதி ஏழுமலயான்.
10.சூரியனின் மனைவியர், உஷா, பிரத்யுஷா.
--அர்ச்சனைப்பூக்கள். பக்திமாலை.
-- தினமலர் ஆன்மிக மலர். சென்னை பதிப்பு . ஜூன் 24, 2014.

Sunday, September 4, 2016

மனதில் தோன்றிய ஏரி

இமயமலையிலுள்ள கயிலாயம் அருகிலுள்ளது மானசரோவர் ஏரி. 'மானசரோவர்' என்றால் 'மனதில் இருந்து தோன்றிய தடாகம்' என பொருள். சுத்தமான நீர் கொண்ட இந்த ஏரி, பார்வதியின் அம்சமாகும். வசிஷ்டர், மரீசி உள்ளிட்ட முனிவர்கள் பிரம்மாவிடம், சிவ வழிபாட்டுக்காக நீர் நிலை ஒன்றை அருளும்படி வேண்டினர். பிரம்மாவும் தன் மனதில் இருந்து இந்த தெய்வீக ஏரியை உருவாக்கினார். ஏரியின் நடுவில் சுவர்ணலிங்கமாக ( தங்கலிங்கம் ) சிவன், முனிவர்களுக்கு காட்சியளித்தார். இந்த குளத்து நீரே, பூமிக்கடியில் சென்று, கங்கையாக உற்பத்தியாவதாக கருதுகின்றனர். புனித நதிகளின் தாயாக போற்றப்படும் மானசரோவரை திபெத்தியர்கள் 'மகா சரோவர்' என்கின்றனர். 412 ச.கி.மீ.,பரப்பும், 300 அடி ஆழமும் கொண்ட இந்த ஏரி கடல்போல காட்சியளிக்கிறது.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர். சென்னை பதிப்பு . ஜூன் 24, 2014.

Saturday, September 3, 2016

வலம் வரும் முறை

திருவிழா காலத்தில் வலம் வரும் முறை
திருவிழா காலத்தில் சுவாமி வீதியில் பவனி வரும் போது, மூலவரின் எல்லா சக்தியையும் தன்னுடன் எடுத்துச் செல்வதாக ஐதீகம். அந்த சமயத்தில் கோயிலுக்குள் மூலவருக்கு அர்ச்சனை செய்தல், வலம் வருதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்கிறது 'சிவயோகி ஸம்வாதம்' என்ற நூலிலுள்ள ஸ்லோகம். ஏனெனில், கோயிலுக்குள் மூலவரும், உற்சவரும் ( பவன் வரும் சுவாமி ) ஒன்றாக இருக்கும் சமயத்தில் மட்டுமே வலம் வர வேண்டும் என்பது மரபு. இந்த நடைமுறை கொடிமரம், உற்சவர் அமைந்துள்ள கோயில்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மூன்று தடவை தீர்த்தம் வாங்குங்க !
பெருமாள் கோயிலில் தரிசனம் முடிந்ததும், துளசி தீர்த்தம் வழங்குவது வழக்கம். அதை ஒருமுறை வாங்கியே பருகுகிறோம். ஆனால், தீர்த்தத்தை பயபக்தியுடன், இருகைகளாலும் மூன்று முறை தனித்தனியாகப் பெற்று, தனித்தனியாகவே பருக வேண்டும் என்று ஸம்ருதி ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ம்முறை தீர்த்தம் பருக்கினால்தான், உடல், உள்ளம், வாக்கு ஆகிய மூன்றாலும்செய்த காயிகம், மாதஸம், வாசிகம் என்னும் மூன்று வித பாவங்களும் நீங்கும். பெருமாளின் தீர்த்தம் மட்டுமல்லாமல், கலசம் வைத்து பூஜிக்கப்பட்டு தரும் தீர்த்ததிற்கும் இது பொருந்தும்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர். சென்னை பதிப்பு . ஜூன் 24, 2014.

Friday, September 2, 2016

டிப்ஸ்...டிப்ஸ்...

* வித்தியாசமாக பஜ்ஜி செய்ய ஒரு ஐடியா... பீன்ஸ்களை ஒரு அங்குல நீளத்துக்கு வெட்டி, உப்பு, மிளகாய்த்தூள் கலந்த சூடான
தண்ணீரில் போட்டு வையுங்கள். வெந்நீர் ஆறியதும், பீன்ஸ் துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்துப்
பொரித்தெடுங்கள். டேஸ்ட் அருமையாக இருக்கும்.
* உங்களிடம் உள்ள அரிசியில் சாதம் வடித்தால் நிறம் மங்கலாக இருக்கிறதா? அரிசி வேக வைக்கும்போது தண்ணீருடன்
சிறிது கெட்டியான மோர் அல்லது பால் கலந்து விடுங்கள். சாதம் வெண்மையாகக் கிடைக்கும்.
* இட்லி மாவு புளித்து விட்டாலோ அல்லது மாவு குறைவாக இருந்தாலோ, ஒன்றிரண்டு பிடி வடித்த சாதத்துடன் பால் சேர்த்து
மிக்ஸியில் மசியுங்கள். இதை இட்லி மாவுடன் கலந்து, மிதமான தீயில் தோசை வார்த்துப் பாருங்கள். பேப்பர் ரோஸ்ட்
போல பிரமாதமாக இருக்கும்.
* இஞ்சி டீ தயாரிக்கும்போது, இஞ்சியை நசுக்கிப் போட கஷ்டமாக இருக்கிறதா...? கடையில் கிடைக்கும் இஞ்சி முரப்பாவை
வாங்கி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். டீ தயாரிக்கும்போது, இதில் ஒரு துண்டை சேர்த்தால் போதும்.
சர்க்கரையை சிறிது குறைவாகச் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான இஞ்சி டீ சுலபத்தில் தயார்.
-- வாசலிகள் பக்கம். விஜயலட்சுமி ராமாமிர்தம்.
-- அவள் விகடன். 26-2-2010.

Thursday, September 1, 2016

தெரியாத விஷயங்கள்

* நாகலாந்தில் ஆண் குழந்தைப் பிறந்தால், உடனேயே வெந்நீரில் குளிப்பாட்டுவார்களாம். இந்த சூட்டை தாங்கினால்தான்
குழந்தை வீரனாக வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
* கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க உதவிய ராணி எஸபெல்லா தன் வாழ்நாளில் இரண்டே இரண்டு முறை
மட்டும்தான் குளித்திருக்கிறாராம்.
* இந்தையாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707ம் ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள தரங்கம்பாடியில்தான்
ஆரம்பிக்கப்பட்டது.
* பர்மாவில் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் ஆசி வேண்டி, உறவினர்கள் இறந்தவர் வீட்டில் ஒருவாரம் படுத்து
தூங்குவார்களாம்.
-- ஆர்.சரஸ்வதி, பூனாம்பாளையம்.
-- தினமலர். பெண்கள்மலர். பிப்ரவரி 21, 2009

Wednesday, August 31, 2016

ஸ்மார்ட் போன்

   ஸ்மார்ட் போனில் பேட்டரி டக் டக்கென்று தீர்ந்து விடுவது இப்போது எல்லாருக்குமான பொதுப் பிரச்சனையாகவே ஆகிவிட்டது.  முக்கியமான நேரங்களில் கரெக்டாக பேட்டரி டெட் ஆகி சொதப்பி பலரையும் சிரமத்திற்குள்ளாக்கும்.  இதற்கு தீர்வாக யோட்டா என்னும் ரஷிய நிறுவனம் ஒரு புது வகை டெக்னாலஜியை கண்டுபிடித்திருக்கிறது.  இது என்ன?  பொதுவாக மொபைல் ஃபோனின் பெரும்பாலான பேட்டரி பவர் அதன் டிஸ்பிளே, வைஃபை, மற்றும் பிரவுசிங்கில் தான் அதிகம் செலவாகிறது.  இதனால், 'இன்க் கேஸ் பிளஸ் என்னும் ஒரு கறுப்பு வெள்ளை டிஸ்ப்ளே கொண்ட ஒரு கேஸை மொபைலின் பின்னே பொருத்திவிட்டால் போதும் - பேட்டரி 20 சதவீதத்துக்கும் கீழே குறையும் போது போனில் மெயின் கலர் டிஸ்பிளேவை ஆப் செய்து பின்னால் உள்ள கறுப்பு வெள்ளை டிஸ்ப்பிளேயை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபலை கூடுதலாக 6 - 8 மணி நேரத்திற்கு உபயோகிக்க முடியும்.  ஆப்பிள் / சாம்சங் மொபைலுக்கு இன்க் பிளஸ் கேஸ் ஏற்கனவே ரெடி.  அனேக மொபைல் மாடல்களுக்கு இந்த கேஸை தயாரிக்க ஆரம்பித்து விட்டதாம் இந்த கம்பெனி.
-- ரவி நாகராஜன்.  டெக் மார்கெட் ( அறிவியல்...மருத்துவம்... தொழிநுட்பம் )
-- சண்டே ஸ்பெஷல். தினமலர். 20-7-2014.