Saturday, January 7, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

*  'சரஸ்' என்பதன் பொருள் ...நீர், ஒளி.
*   கலமகளுக்குரிய நட்சத்திரம் ... மூலம்.
*   பிராஹ்மி என்பதன் பொருள் ... பிரம்மனின் மனைவி
*   சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் ... சரசுவதி அந்தாதி
*   வட நாட்டில் சரஸ்வதியின் வாகனம் ... அன்னப்பறவை
*   குமரகுருபரர் பாடிய சரஸ்வதி துதி ... சகலகலாவல்லி மாலை
*   கூத்தனூர் சரஸ்வதி கொயிலைக் கட்டியவர் ... ஒட்டக்கூத்தர்
*   மத்திய அரசின் ஞானபீட விருதின் சின்னம் ... வாக்தேவி ( சரஸ்வதி )
*   நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதியை ... நாமகள் என்பர்
*   நாமகள் இலம்பகம் இடன் பெற்றுள்ள காப்பியம் ... சீவக சிந்தாமணி
-- அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர்.  இதழுடன் இணைப்பு. சென்னை பதிப்பு.   செப்டம்பர், 30, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்,  விருகம்பாக்கம். சென்னை .92.   

Friday, January 6, 2017

நட்சத்திர காயத்ரி மந்திரம்!

 ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அந்தந்த ராசிக்கு உரிய கிரகத்துக்கான காயத்ரி மந்திரத்தைச் சொல்வது சிறப்பான பலன் தரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
     உங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது?  இதோ தெரிஞ்சுக்குங்க...  
மேஷம்.   விருச்சிகம்.   --   செவ்வாய்  காயத்ரி :
ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம : ப்ரசோதயாத்

ரிஷபம்.   துலாம்.   --   சுக்ரன்  கயத்ரி :
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ  சுக்ர : ப்ரசோதயாத்

மிதுனம்.   கன்னி.   --   புதன்  காயத்ரி :
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத  :  ப்ரசோதயாத்

கடகம்.   --   சந்திரன்  காயத்ரி :
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோம  :  ப்ரசோதயாத்

சிம்மம்.   சூரியன்  காயத்ரி :
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய :  ப்ரசோத்யாத்

தனுசு.   மீனம்-- குரு காயத்ரி :
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹி
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு :  ப்ரசோதயாத்

மகரம்.   கும்பம் -- சனி காயத்ரி :
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த :  ப்ரசோதயாத்
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  மே 1 - 15,  2014.   

Thursday, January 5, 2017

விமான ரகசியங்கள்!

பெரிய நிறுவனம் என்றால் ஒஸ்தியா?
     மிகப் பெரிய நிறுவனத்தின் விமானத்தில் செல்லும்போது பைலட்டும் நல்ல அனுபவம் பெற்றவாராக  இருப்பார் என்று நினைத்துவிட வேண்டாம்.  அவர்கள் உள் ஒப்பந்தத்தில் உள்ளூரைச் சேர்ந்த கற்றுக்குட்டி பைலட்டைக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துவதும் நடக்ககூடியதே!  அதிக நேரம் ஓட்டினால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதால், அந்தப் பைலட்டுகள் மெதுவாகவே ஓட்டுவதும் உண்டு.
ஹெட் போன் கதையும் அதுதான் !
     விமானத்தில் ஏறியதும் தரப்படும் ஹெட்போன்கள் புதிதல்ல.  ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதை ஒவ்வொரு பயணத்தின்போதும் துடைத்து புதிய கவரில் போட்டு புதிதுபோலத் தருவார்கள்.
சுத்தம் சுகாதாரம் எப்படி?
     தலையணை,  போர்வைகளை எல்லா நேரமும் துவைத்து, காயவைத்து எடுத்துத்தருவார்கள் என்று நினைக்க வேண்டாம்.  ஒரு பயணம் முடிந்ததும் அப்படியே பதவிசாக மடித்து எடுத்துவைப்பார்கள்.  கேட்கும்போது புன்சிரிப்போடு தருவார்கள்.  நாமும் சுகந்தமான வாசனையில் மனதைப் பறிகொடுத்து வாங்கிக்கொள்வோம்.  வாசனை பணிப்பெண்ணிடமிருந்து வந்தது என்று நமக்குத் தெரியாது!  மிகப் பெரிய நகரில் காலையில் புறப்படும் முதல் விமானத்தில் மட்டுமே உண்மையில் துவைத்து சுத்தப்படுத்திய போர்வைகள், தலையணைகள் ஏற்றப்படும்.  அதேபோல, உங்கள் சீட்டின் முன்னால் இருக்கும் ட்ரே பரிசுத்தமானது என்று நினைத்து, அதில் வேர்க்கடலை, பொரித்த வற்றல்- வடாமெல்லாம் வைத்துச் சாப்பிடாதீர்கள்.  உங்களுக்கு முன்னால் பயணம் செய்த தம்பதியின் குழந்தை அதில் 'சூச்சா' போய் காய்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
--  ஜூரி.  (கருத்துப் பேழை ).
-- 'தி இந்து' நாளிதழ்,  திங்கள், ஜூன் 9, 2014.  

Wednesday, January 4, 2017

செயற்கை மணல்.


     ஆற்று மணலுக்கு மாற்று பொருளாக, 'எம் சாண்ட்' எனப்படும் செயற்கை மணலை பயன்படுத்துவது, வழக்கத்துக்கு வந்துள்ளது.  தமிழகத்தில் சேலம், கரூர், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களில், இதற்கான ஆலைகள், அதிக எண்ணிக்கையில் வரத்துவங்கியுள்ளன.  இருப்பினும், செயற்கை மணலை பயன்படுத்துவது தொடர்பாக, மக்களிடம் இன்னும் போதிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
     துவக்கத்தில், கல்லுடைக்கும் ஆலைகளில் இருந்து, கழிவாக வெளியேற்றப்படும் துகள்களே, மேலும் பொடியாக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் சுத்தம் செய்யப்பட்டு, செயற்கை மணலாக பயன்படுத்தப்பட்டு வந்தது
     ஆனால், இப்போது இந்த நிலை மாறிவிட்டது.  செயற்கை மணல் தயாரிப்பதற்கென, தனியாக ஆலைகள் வந்துள்ள நிலையில், கல்லுடைக்கும் ஆலை கழிவுகளை பயன்படுத்துவது கைவிடப்பட்டு, குவாரிகளில் இருந்து, பொடி ஜல்லிகள் என்ற நிலையில், சிறு ஜல்லிகள் வாங்கப்பட்டு, செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது.
     பொடி ஜல்லிகள் வாங்கப்பட்டு நொறுக்குதல், சலித்தல், வகை பிரித்தல், வடிவமைத்தல், அலசி கழுவுதல் ஆகிய நிலைகளில், இதன் உருவாக்கம் அமைந்துள்ளது.  உயர் தொழில் நுட்ப அடிப்படையில், பல்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, இவை தயாரிக்கப்பட்டு, தேவையான நிறுவனங்களுக்கு  அனுப்பப்படுகின்றன.
     வழக்கமான மணலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவையை காட்டிலும்,இதற்கான கலவையில் சிமென்ட் தேவை, 20 சதவீதம் வரை குறைகிறது.  இதன்மூலம் கட்டுமான செலவில், சிமென்ட் வாங்குவதற்கு ஆகும் செலவும் மிச்சமாகும்.  அடிக்கடி செங்கல் விலை உயர்ந்து வரும் இன்றைய சூழலில், கட்டுமான பணிகளை மேற்கொள்வோருக்கு, இது சாதகமான விஷயமாக உள்ளது.
     பல்வேறு நிலைகளில் துல்லியமாக சுத்தப்படுத்தி தயாய்க்கப்படுவதால், வழக்கமான ஆற்று மணலில் இருப்பது போன்று இதில் மாசு, தூசு, களிமண் கட்டிகள், இலைகள் போன்றவை இருக்காது.  எந்த பணிக்கு, எந்த நிலையில் வேண்டுமோ அந்த அளவுக்கு செயற்கை மணல் கிடைக்கிறது எங்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
-- கனவு இல்லம்.
-- தினமலர் சென்னை சனி, 31-5-2014.                              

Tuesday, January 3, 2017

நீர்க் கசிவைத் தடுக்க...

   கட்டுமானப் பணிகளின்போதே நீர்க் கசிவையும் வெடிப்புகளையும் தடுக்க இப்போது புதிய வழிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.  அதாவது கான்கிரீட்டுடன் இந்தக் கலவையைச் சேர்க்கும்போது அந்தக் கலவைக்குள் நீர் புகாமல் தடுக்க முடியும்.  இந்தக் கலவையின் பெயர் பெனிட்ரான் அட்மிக்ஸ் ( Penetron Adimix ).
     பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைக் கான்கிரீட்டுடன் கலப்பதில் எந்த விகிதத்தைக் கடைப்பிடிப்பது என்று கேள்வி எழும்.  100 சதவீத கான்கிரீட்டின் சிமெண்ட் தன்மைக்கு 0.8 சதவீதம் கலந்தால் போதுமானது.  தண்ணீர்க் கசிவுத் தடுப்புக்காகப் பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை.  ஏற்கனவே இடப்பட்ட கான்கிரீட்டுகளின் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம்.  ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம்.  மேலும் இது மிகச் சிக்கனமான முறை.  இந்த்ஹக் கலவை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள் போன்ற இடங்களில் கட்டுமானங்கள் எல்லாம் நீருக்குள் மூழ்கிக் கிடக்கும்.  அதனால் கட்டுமானக் கம்பிகளுக்குள் நீர் புகுந்து கம்பிகளை அரித்துவிடும்.  அதனால் கட்டுமானம் மிக எளிதில் சேதமடைந்துவிடும்.  பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் இதைத் தடுக்க முடியும்.
-- லட்சுமி.   ( சொந்த வீடு ).
--  'தி இந்து' நாளிதழ் இணைப்பு.  சனி, நவம்பர் 29, 2014.   

Monday, January 2, 2017

பணம் கொழிக்கும் கட்டிடக் கலை

 கோபநோகன் நகரில் இருக்கும் டானிஷ் தொழிற்சாலைக் கூட்டமைப்பு கட்டிடமான 'தியா லைட்ஸ்' 4000 சதுர மீட்டர் பரப்புடையது.  அத்தகைய பிரம்மாண்டக் கட்டிடம் முழுவதும் பல கோடி வண்ணங்களில் தீ ஜுவாலை வளைந்து நெளிந்து திரிந்தால் எப்படி இருக்கும்?  கட்டிடக்கலை நிபுணர் மார்டின் கைவண்ணத்தில் 80,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கிறது.  'தியா லைட்ஸ்'.  பரிசு பெறும் வகையில் இதில் மற்றொரு சிறப்பம்சமும் இணக்கப்பட்டுள்ளது.  ஒரு சிறப்பு 'ஆப்' மூலம் இந்தக் கட்டிடத்தின் முன்னால் நின்றபடி ஒருவர் தன் ஸ்மார்ட் ஃபோனில் எதைக் கிறுக்கினாலும் அது அப்படியே அந்தக் கட்டிடத்தில் தோன்றும்.
--  ம.சுசித்ரா.   ( சொந்த வீடு ).
--  'தி இந்து' நாளிதழ் இணைப்பு.  சனி, நவம்பர் 29, 2014.