Friday, January 20, 2017

நாளைய உலகம்

அமேசான் ஸ்டிக்
     இனி வரும் காலங்களில் படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்க கேபிள் டி.வி., டிஷ் ஆன்டனா என்று  அலைய  வேண்டியதில்லை.  கையளவு  சாதனத்தில்  கடலளவு  வீடியோக்களை  பார்க்கலாம்.  இதற்காக, அமேசான் நிறுவனம்  அமேசான்  ஸ்டிக்  என்னும்  கருவியை  அறிமுகப்படுத்தியுள்ளது.  கிட்டதட்ட  ஒரு  பென்ட்ரைவ்  அளவு  உள்ள  அந்த  சாதனத்தை டி.வி.யின் யுஎஸ்பி போர்ட்டில்  இணைத்துவிடலாம்.  பிறகு  அதன்மூலம்  ஆயிரக்கணக்கான  படங்களையும்  டி.வி.சேனல்களையும் பார்த்து  மகிழலாம்.  இந்த  அமேசான் ஸ்டிக்  விரைவில்  அமெரிக்க  சந்தையை  தொடயுள்ளது.
வைப்ரேஷனாகும் வார்த்தை
     காது  கேளாதவர்களுக்கு  உதவுவதற்காக  வந்திருக்கிறது  வெஸ்ட்  ( versatile  extra - sensory transducer ) எனப்படும்  புதிய  சாதனம்.  இதன்மூலம்  ஒருவர்  பேசுவதை  அதிர்வாக ( வைப்ரேஷன் ) மாற்ற  முடியும்.  வாய்பேச  முடியாதவர்கள்,  காதுகேளாதவர்கள்  தங்களின்  மேலாடையில்  ஒரு  பேட்ஜை  போல  இதைக்  குத்திக்கொள்ளலாம்.  அதில்  உள்ள  ஸ்பீச்  ரெகக்னைசிங்  கருவி  வெளியிலிருந்து  வரும்  சப்தங்களை  உள்வாங்கிக்கொள்ளும்.  பிறகு  அந்த  சப்தத்துக்கு  ஏற்ப  அதிர்வலைகளை  ஏற்படுத்தும்.  தற்போது  ஆங்கிலத்தில் எட்டிப்பார்த்திருக்கும்  இந்த கருவி,  விரைவில் பல  மொழிகளிலும்  வரவுள்ளதாம்.
-- மா.மணிகண்டன்.  ( ரிலாக்ஸ் ).
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய்,  டிசம்பர் 2, 2014. 

Thursday, January 19, 2017

கனிமங்கள் -- 3.

வேகமாய்  சாகிறது  பூமி !
      'தமிழகத்தில்  காவிரி,  பாலாறு,  வைகை  உட்பட  17 நீர்ப்பிடிப்புப்  பகுதிகள்  இருக்கின்றன.  இவை  இல்லையெனில்,  தமிழகம்  பாலைவனமாகிவிடும்.  ஆனால்,  காவிடி தொடங்கி  பாலாறு  வரை  தோல்  தொழிற்சாலைகள், சாயப்  பட்டறைத்  தொழிற்சாலைகள்  ஆற்றை  விஷமாக்கி  வருகின்றன.  பாலாற்றங்கரையில் மட்டும்  சுமார்  800  தொழிற்சாலைகள்  இருக்கின்றன.  இவை  வெளியிடும்  குரோமியம்  கழிவு  நீர்  கலந்த  குடி நீரைத்தான் சென்னையின்  பாதி  மக்கள்  குடிக்கிறார்கள்.  பாலாறு  பகுதியில்  இருக்கும்  46 ஊற்களில்  27,800  கிணறுகளின்  தண்ணீரை  உபயோகிக்கவே  முடியவில்லை.  கிணற்றை  எட்டிப்பார்த்தாலே  ரசாயன  நெடி தாக்குகிறது.  உலகிலேயே  மிகவும்  மாசுபட்ட  நதி  என்று  குளோபல்  மேப்பில்  குறிப்பிடப்பட்டு  இருப்பது  பாலாறு  மட்டுமே.  இதை நம்ப  மறுப்பவர்கள்  பாலாற்றின்  வறண்ட  பகுதியைப்  போய்ப்  பாருங்கள்.  நமக்குச்  சோறிட்ட  அந்தத்  தாயின்  உடல்  முழுவதும்  நீலம்  நீலமாக  ரசாயனத்தால்  பூத்துக்கிடக்கிறது.
     தோல்  தொழிற்சாலைகளால்  ஆண்டுக்கு  10  ஆயிரம்  கோடி  அந்நியச்  செலாவணி  வருகிறது  என்கிறது  அரசு.  உண்மைதான்.  அமெரிக்க,  ஐரோப்பிய  நாடுகளுக்கு  அவ்வளவு  தோல்  பொருட்கள்  ஏற்றூமதி  ஆகின்றன.  ஏண்/  அமெரிக்கா, ஐரோப்பாவில்  கால்நடைகள்  இல்லையா>  அந்த  நாடுகளுக்குத்  தோல்  பொருட்களைத்  தயாரிக்கத்  தெரியாதா?  தெரியும்.  ஆனால்,  செய்யமாட்டார்கள்.  அவர்களைப்  பொறுத்த  வரை  இது  டர்ட்டி  இண்ட்ஸ்ட்டி'  என்கிறார்  கோபத்துடன் பேராசிரியர் ஜனகராஜன்.
--  டி.எல். சஞ்சீவிகுமார்.
--  ஆனந்த விகடன். 13-2-2013.  

Wednesday, January 18, 2017

கனிமங்கள் -- 4.

வேகமாய்  சாகிறது  பூமி
     "15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறைய கட்டுப்பாடுகள்  இருந்தன.  மினரல்  வாட்டர்  நிறுவனங்கள்,  ஹோட்டல்கள்,  தங்கும் விடுதிகள்  ஆகியவை  நாள்  ஒன்றுக்குக்  குறிப்பிட்ட  அளவு  மட்டுமே நிலத்தடி  நீரை  உறிஞ்சி  எடுக்க  முடியும்.  தவிர, தனியாக  இன்னொரு  போர்வெல்  போட்டு மழை நீர்  மற்றும்  பயன்படுத்தப்பட்ட  தீங்கு  இல்லாத  நீரைச்  சேகரித்து  மீண்டும்  பூமிக்குள்  செலுத்த  வேண்டும்.  வீடுகளுக்கும்  நிறுவனங்களுக்கும் போர்வெல்  போடவேண்டும்  என்றால், அரசிடம்  அனுமதி பெற வேண்டும்.  ஆனால்,  அந்த்ச் சட்டம்  காலப்போக்கில்  நீர்த்துவிட்டது.  மினரல்  வாட்டர் நிறுவனங்கள்  தாங்கள்  குறிப்பிட்ட  அளவு  தண்ணீரை பூமிக்குள்  மீண்டும்  செலுத்துவதாகச்  சொல்கின்றன.  உண்மையில்  சுத்திகரிக்கப்பட்ட  பின்பு  கிடைக்கும்  கழிவு  நீரைத்தான்  அவை  பூமிக்குள்  செலுத்துகின்றன.  அதில்தான்  டி.டி.எஸ்.  அளவு  இன்னும்  மிக  அதிகமாக  இருக்கும்.
      நாம்  குடிக்கும்  ஒரு  லிட்டர் குடிநீரில்  நைட்ரேட்  20  மில்லி கிராம்,  துத்தநாகம், ஃப்ளோரைடு  தலா  ஒரு மில்லி கிராம்,  சோடியம்  20  மில்லி கிராம்  அளவுக்கு  மிகாமல்  இருக்க  வேண்டும்.  ஆனால்,  இன்று  தமிழகத்தில்  பரவலாக  நாம்  குடிக்கும்  ஒரு  லிட்டர்  தண்ணீரில்  மேற்கண்ட  அளவை  விட  மூன்று  மடங்கு கூடுதலாக  ரசாயன  கனிமங்கள்  இருக்கின்றன.  இதனால்  சுவாச நோய்,  ரத்த சோகை,  பற்களில்  கறை  எலும்பு நோய்கள்,  சிறுநீரகக் கற்கள்  போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.  உடனடியாக  தமிழகம்  சுதாரிக்க  வேண்டிய  சூழல் இது !"  என்கிறார்  பேராசிரியர் சரவண பாபு.
--  ஆனந்த விகடன். 13-2-2013.  

Tuesday, January 17, 2017

கனிமங்கள் -- 2.

வேகமாய்  சாகிறது  பூமி !
     'கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார்கள்.  உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்கவேண்டும்,  ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன.  இந்த இடிபாட்டுப் பகுதியில் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை.  கடலில் உள்ள நீரோடங்களை நன்கு அறிந்தவை ஆமைகள்.  செயற்கைக் கோள் உதவியுடன் ஆமைகளை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது.  ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட்டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன.  இது இன்று நேற்று நடப்பதல்ல.  63 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமைகள்.  காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன.  ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலையும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்கலே.  இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன.  ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம்.  கடலின் நீரோட்டங்களில் பல்வேறு வண்ணங்களில் அடித்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.
-- கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கூறக் கேட்டது.
--  டி.எல். சஞ்சீவிகுமார்.
--  ஆனந்த விகடன். 13-2-2013. 

Monday, January 16, 2017

கனிமங்கள் -- 1.

வேகமாய்  சாகிறது  பூமி !
     தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். ( Total dissolved solids )  என்பார்கள்.  ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ்.-ஸின் அளவி 300 புள்ளீகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர்.  ஆனால், இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் நீரில் டி.டி.எஸ் ஸின் அளவு 3,000 -தைத் தாண்டிவிட்டது.
     ஆற்று நீர்,  கடல் நீர்,  குடி நீர் இந்த மூன்றுவிதத் தண்ணீன் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் சூரையாடுகின்றான்.
     கடல் நீர் :  'கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை.  அங்கு உயிரிங்கள் மிகக் குறைவு.  அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்த கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாகைருக்கிறது.  இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது.  டன் கணக்கில் நிலக்கரியும்,ஆலைக் கழிவு நீரும், பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன.  அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலில் அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும்.  மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளியேறவேண்டியதுதான்.  இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது.  முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான்.  உற்பத்தியின் அளவு மட்டுமல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது',
-- பேராசிரியர்  லால்மோகன் கூறக் கேட்டது.
-- டி.எல். சஞ்சீவிகுமார்.
--  ஆனந்த விகடன். 13-2-2013.  

Sunday, January 15, 2017

நத்தை

  'மழை வருமா... இல்லையா?'  என்று இனிமேல் ரமணன் சொல்லும் அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டாம்.  நத்தையைக் கவனித்தால் போதுமாம்.  ஆம், மழையைக் கணிப்பதில் நத்தை கில்லாடியாம்.  அருகில் இருக்கும் தாவரம் அல்லது கம்பத்தை நோக்கி நத்தை நகர்கிறது என்றால், மழை வரப்போகிறது என்று அர்த்தமாம்.  --  அத்தைகிட்ட சொல்லி ரெண்டு நத்தை வளர்கலாமே!
பெரிய பாறை
     பிப்ரவரி 16-ம் தேதி வான்வெளியில் ஒரு பெரிய பாறை பூமிக்கு அருகில் கடந்து செல்ல இருக்கிறதாம்.  கிட்டதட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் எடை உடைய அந்த பாறைக்கு டி.ஏ.14 எனப் பெயர்.  பூமிக்கு அருகில் கடந்து சென்றாலும், உரசும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்.  செயற்கைக்கோள்களுக்குப் பாதிப்பு இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். -- செல்போன் சினல் பாதிக்காமப் பார்த்துக்கங்கப்பா!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 13-2-2013.    

Saturday, January 14, 2017

ஆலயக் கிரியை வகைகள்

  சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப்பட்டுள்ளன.
1.   நித்தியக் கிரியைகள்.
2.   நைமித்திகக் கிரியைகள்.
3.   காமியக் கிரியைகள்.
     தினந்தோறும் ( குறைந்தது ஒரு காலம்,  அதிகபக்ஷம் 12 காலம் )  நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள்.
     ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் ( நிமித்தம் என்றால் காரணம் ).
     விசேஷக் கிரியைகள்.  அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷூ, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில்,  அல்லது காலங்களில், அல்லது முகூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள் கிரியைகள் காமியக் கிரியைகள்.
--  தினமலர் பக்திமலர்.  30-10-2014.