Friday, January 27, 2017

ஜோக்ஸ் !

*   "முன்பெல்லாம் எங்கள் தலைவரை, மருத்துவமனை, நகைக்கடைகளை திறக்க அழைத்தவர்கள் .. இப்போது அவர் ஆட்சியில்
      இல்லாத ஒரே காரணத்துக்காக, கட்டணக் கழிப்பிடத்தைத் திறக்க அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்."
*   "அன்னிக்கு  மெட்ராஸூக்கு நான் ஒண்ணுமிலாம வந்தவன்...."
    "இன்னிக்கி மெட்ராஸையே ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்க தலைவரே!"
*  "2016-ல் நாம ஆட்சி பீடத்துல ஏறலேன்னா என்னய்யா ஆகும்?"
   "போலீஸ் வேன்லயும் ... குற்றவாளி  கூண்டுலேயும் ஏற வேண்டியிருக்கும் தலைவரே!"
*  "என்னப்பா சர்வர், சிக்கன் பிரியாணியில கொம்பு மாதிரி ஏதோ கிடக்குதே"
   "சார், நாய்க்கு ஏதுசார் கொம்பு?"
--   ஆனந்த விகடன். 25-9-2013.   

Thursday, January 26, 2017

இந்தியர்கள் இப்போது என்ன செய்யவேண்டும்?

"நம் நாடு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது,  இந்தியர்களாகிய நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?"
     "இது நடந்தது தென் கொரியாவில்.  1997-98 களில் உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயம் தென் கொரிய அரசு ஊழியர்கள்,  சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் பணியாற்றினார்கள்.  தங்களுடைய சேமிப்பை, அரசுக்குக் கொடுத்து உதவினார்கள்.  இறக்குமதிப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தார்கள்.  'இறக்குமதிப் பொருட்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு நிலைமை வரவில்லை' என அரசு அறிவித்தும்கூட  அதைச்  செய்தார்கள்.  அப்போது 'டைட்டானிக்' திரைப்படம் அங்கு திரையிடப்பட்டது.  அது வெளிநாட்டுப் படம் என்பதால் அதைப் பார்க்க பணம் செலவழிக்க வேண்டாம் என்றும், அதனால் நமது பணம் வேறு நாட்டுக்கு உதவுகிறது என்றும் ஓர் இயக்கமாகவே செயல்பட்டார்கள்.  அரசுக்குத் தோள் கொடுத்து உதவுவதாக அவர்கள் கருதவில்லை.  தங்களையே அரசாங்கமாகக் கருதி செயல்பட்டார்கள்.  தேசப்பற்றின் மூலம் நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்ட விதம் பிரமிக்கவைகிறது!"
-- சிவ.ராஜ்குமார், சிதம்பரம். ( நானே கேள்வி... நானே பதில்...)  பகுதியில்.
--   ஆனந்த விகடன். 25-9-2013.      

Wednesday, January 25, 2017

அரசியல்வாதி.

"அன்றைய,  இன்றைய அரசியல்வாதிகளுக்கு என்ன வித்தியாசம்?"
     "முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த்போது, 'நான் ஆண்களிடம் தனியாகப் பேச வேண்டும்.  ஆகவே, பெண்கள் எல்லோரும் சென்று விடுங்கள்'  என்றாராம்.  பெண்கள் சென்றவுடன்  எம்.ஜி.ஆர். ஆண்களிடம்
'விஷயம் ஒன்றுமில்லை.  இங்கு கூட்டம் அதிகம்.  எல்லோரும் ஒரே நேரத்தில் கலைந்து சென்றால் நெரிசல் அதிகம் இருக்கும்.  அதனால்தான் முதலில் பெண்களை போகச் சொன்னேன்.  இனி நீங்களும் செல்லலாம்'  என்றாராம்.
-- விக்னேஷ்,  மதுரை.  ( நானே கேள்வி... நானே பதில்... ) பகுதியில்.
--   ஆனந்த விகடன். 25-9-2013.  

Tuesday, January 24, 2017

code

பாஸ்வேர்டிற்கு  பதில்  கோட் .
     தகவல்களை  பரிமாறிக்கொள்ள  டிவிட்டர்,  பேஸ்புக்  போன்ற சமூக  வலைதளங்களை  தான்  பெரும்பாலும்  பயன்படுத்தி  வருகின்றோம்.  இதுபோன்ற  சமூகவலை  தளங்கள்  பயன்படுத்தும்போது  ஏற்கனவே  நாம்  ஏதேனும்  இமெயில்  முகவரி  வைத்திருந்தால்  அதை  பயன்படுத்தி  பாஸ்வேர்ட்  கொடுத்துதான்  உள்ளே  நுழைய  வேண்டும்.  இனி, இமெயில்  ஐடி,  பாஸ்வேர்ட்  எல்லாம்  கொடுக்க  வேண்டிய  அவசியமில்லை.
     டிவிட்டர்  ஏற்பாடு  செய்திருந்த  தயாரிப்பாளர்கள்  மாநாட்டில்  code  வழியாக  லாக் இன்  செய்யும்  சேவையை  அறிமுகம்  செய்தது.  பாஸ்வேர்டிற்கு  பதில்  அந்த  தளங்கள்  தரும்  பாதுகாப்பான  codeடை  தந்தாலே  போதும்.  அமெரிக்கா,  ஐரோப்பா  நாடுகளில்  300  மில்லியன்  மக்கள்  ஸ்மார்ட்போன்  பயன்படுத்துகின்றனர்.  இன்னும்  சில  நாடுகளில்  940  மில்லியன்  ஸ்மார்ட்போன்களை  விற்பனையாகியுள்ளது.  இன்னும்  சில  நாடுகளில் ஸ்மார்ட்போன்  வைத்திருப்பவர்கள்  இமெயில்  முகவரி  இல்லாததால்,  அவர்கள்  அப்ளிகேஷன்களை  பயன்படுத்தாமல்  இருந்து  வருகின்றனர்.  அதனால்,  டிஜிட்ஸ்  என்ற  புதிய  திட்டத்தை  தயாரித்துள்ளோம்  என்றார் மாநாட்டின்  திட்ட  மேலாளர்  தெரிவித்தார்.
-- தினமலர்  திருச்சி  2-12-2014.
-- இதழ் உதவி :  P. சம்பத் ஐயர்,  திருநள்ளாறு. 

Monday, January 23, 2017

பொறுமை வேண்டும்

  ஒரு முறை உன்னதமான குஜராத்திக்காரர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தார்.  அவருக்கு அருகில் பயணம் செய்த இன்னொரு மனிதர் அந்த ரயில் பெட்டிக்குள் துப்பிக்கொண்டே இருந்திருக்கிறார்.  அப்போது அந்த உன்னத மனிதர், இவர் துப்பிய இடத்தைத் தாள்கொண்டு சுத்தம் செய்திருக்கிறார்.  அந்த மனிதரோ மீண்டும் மீண்டும் துப்பிக்கொண்டே இருந்துள்ளார்.  அந்த உன்னத மனிதரும் சுத்தம் செய்துகொண்டே இருந்திருக்கிறார்.  ஒரு ரயில் நிலையத்தில் இருவரும் இறங்கியபோது, வெளியே நின்ற ஒரு பெருங்கூட்டம், அந்த உன்னத மனிதருக்கு மாலை மரியாதைகள் செய்து, "மகாத்மா காந்திக்கு ஜே" என்று கோஷம் போட்டது.  ரயிலில் துப்பிக்கொண்டே வந்த அந்த மனிதருக்கு, ரயிலில் சுத்தம் செய்தவர் மகாத்மா காந்தி என்று  தெரிய வந்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.  அப்போது மகாத்மா காந்தி அந்த மனிதரைப் பார்த்து, "உங்களிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்"  என்று சொல்லியுள்ளார்.  அதற்கு அந்த மனிதர், "என்னிடமிருந்து நீங்கள் என்ன பாடம் படிக்க முடியும்?"  என்று கேட்டதற்கு,  காந்திஜி, "ஒருவர் எவ்வளவு கெடுதல் செய்தாலும் ஒருபோதும் பொறுமையை மட்டும் இழக்கக் கூடாது என்பதே அந்தப் பாடம்" என்று சொன்னார் காந்திஜி.
-- இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.  ( கருத்துப் பேழை ).
-- "தி இந்து' நாளிதழ். சென்னை . புதன், ஜூன் 11, 2014.     

Sunday, January 22, 2017

சங்கநாதம்!

   மகாவிஷ்ணு என்றாலே சங்கு, சக்கரம்தான் நம் ஞாபகத்துக்கு வரும்.  மகாபாரதத்தில் கிருஷ்ணனும், பஞ்ச பாண்டவர்களும் தங்களுடைய  சங்கை முழங்கி  சங்கநாதம் செய்தார்கள்.  ஒவ்வொருவருடைய சங்கிற்கும் தனிப்பெயர் உண்டு.
ஸ்ரீகிருஷ்ணன் -- பாஞ்சஜன்யம்.
யுதிஷ்டிரன் ( தர்மர் ) -- அனந்தவிஜயம்.
பீமன் -- பௌண்ற்றம்.
அர்ஜுனன் -- தேவநந்தம்.
நகுலன் -- சுகோஷம்.
சகாதேவன் -- மணிபுஷ்பகம்.
     இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,  முதன்முதலில் பீஷ்மர்தான் சங்கை ஊதினார்.  பிறகுதான் மற்றவர்கள் கோஷித்தனர்.  ஆக, கௌரவர்களே யுத்தத்தைத் துவக்கியவர் ஆகின்றனர்.
குத்துவிளக்கு!
     குத்துவிளக்கின் ஐந்து முகங்கள், 1. அன்பு,  2. மன உறுதி,  3. நிதானம்,  4. சமயோசிதபுத்தி,  5. சகிப்புத்தன்மை ஆகிய ஐந்து குணங்களை பிரதிபலிக்கின்றது.  அதனால்தான் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் குத்துவிளக்கு ஏற்றுகிறாள் மணமகள்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  நவம்பர் 16-30,  2013. 

Saturday, January 21, 2017

அஷ்டமங்கலப் பொருட்கள்!

  1. சாமரம்,  2. நிறைகுடம்,  3. கண்ணாடி,  4. அங்குசம்,  5. முரசு,  6. விளக்கு,  7. கொடி,  8. இணை மீன்கள்.  இந்த எட்டுப்
     பொருள்களும்  மங்கலப்  பொருட்கள்  என்கின்றன  புராணங்கள்.
இருந்தும்  பயனற்றவை!
     புண்ணியத்  தலங்களுக்குச்  சென்று  வராத  கால்கள்,  ஆண்டவனைக்  குனிந்து  வணங்காத  தலை,  கெஞ்சிக்கேட்பவனுக்கு  உதவாத  கைகள்,  நல்லவர்களின்  அறிவுரைகளைக்  கேட்டு  உள்வாங்காத  காதுகள்,  எடுத்த  காரியத்திற்கு  உழைக்காத  உடல்  ஆகிய  யாவையும்  இருந்தும்  பயனற்றவை.
அஷ்ட தனம்.
     ஆணோ, பெண்ணோ  ஒருவரிடம்  இருக்க  வேண்டிய  எட்டு  செல்வங்கள்  அஷ்ட  தனம்  எனப்படும்,  அவை :
     1. ரூபம்  அல்லது  அழகு,  2. சம்பத்து  ( சொத்து முதலானவை ),  3. வித்தை  ( பெற்றுள்ள  திறமைகள் ),  4. விவேகம்
( அறிவுத்திறனும் பண்பும் ),  5. குணம் ( நற்குணம் ),  6. தனம் ( பொன், பொருள் ),  7. குலம்,  8. வயது ( ஆயுள் ).
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  நவம்பர் 16-30,  2013.