Thursday, February 2, 2017

ஆடைகள்

உடல்  நலனைக்  கண்காணிக்கும்  ஆடைகள்.
     தட்ப  வெப்பத்திலிருந்து  நம்மைக்  காப்பதில்  ஆடைகளுக்கு  பெரும்  பங்குண்டு.
     கடும்  கோடைக்கு  ஏற்றது  பருத்தி.  அதேபோல்  குளிருக்கு  ஏற்றது  கம்பளி.  ஆனால்  இப்போது  உடல்நலனைப்  பற்றி  டாக்டருக்கு  தகவல்  தெரிவிக்கும்  ஆடைகளும்  தயாராகி  வருகின்றன.  அணிந்திருக்கும்  ஆடையில்  உள்ள  இழைகள்  உங்கள்  உடலின்  செயல்பாடு  மற்றும்  மூளையின்  செயல்பாடுகளை  டாக்டருக்குத்  தெரிவிக்கும்.  இதற்கேற்ப  இவை  செல்போன்  நெட்வொர்க்  மூலம்  இணைக்கப்பட்டிருக்கும்.  இந்த  ஆடைகளில்  பன்முக  தாமிரம், பாலிமர், கண்ணாடி,  வெள்ளி  இயழைகள்  உள்ளன.
--   (  தொழில்  நுட்பம் ).  வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள் 8,  2014.    

Wednesday, February 1, 2017

பாம்புகள்

பாம்புக்கு  நாக்குதான்  மூக்கு.
*   பாம்புகள்  மாமிச  உண்ணிகள்.  மனிதனின்  மூதாதையர்களாகக்  குரங்குகள்  கருதப்படுவதைப்  போல  பாம்புகளுக்கு
    மூதாதையர்  பல்லிகள்  என்று  கருதப்படுகின்றன.
*   பாம்புகளுக்குப்  பற்கள்  கிடையாது.  அதனால்  இரையை  அப்படியே  முழுமையாக  விழுங்க  வேண்டும்.  அதற்கேற்ற  மாதிரி
    பாம்புகளின் கபாலத்தில்  பலவகை  இருக்கும்.  ஏனெனில்  தனது  தலையை  விடப்  பெரிய  உயிர்களைத்  தின்பதற்கும்,
    வேகமாக  விழுங்குவதற்கும்  தசைகள்  தேவை.
*   பாம்புகள்  ஒல்லியான  உடலமைப்பைப்  பெற்றிருப்பதால்  அவற்றின்  சிறுநீரகங்கள்  பக்கவாட்டில்  இல்லாமல்  ஒன்றன்  பின்
    ஒன்றாக  அமைந்திருக்கும்.
*   பாம்புகளுக்குக்  கால்கள்  கிடையாது.  ஆனாலும்  உடலால்  நிலத்தில்  ஊர்ந்து  வேகமாக  நகரும்.  சில  பாம்புகள்  நீரிலும்
    வேகமாக  நீந்தும்.
*   பாம்புகளுக்குக்  கண்  இமைகள்  கிடையாது.
*   அண்டார்டிகா  கண்டத்தைத்  தவிர  உலகின்  சகல  பகுதிகளிலும்  பாம்புகள்  உள்ளன.
*   பாம்பின்  தோல்  மென்மையாகவும்  உலர்வாகவும்  இருக்கும்.  அது  சட்டை  என்று  அழைக்கப்படும்.
*   பாம்பு  தனது  தோல்  சட்டையை  ஆண்டுக்குப்  பல  முறை  உரிக்கும்.
*   பாம்பு  தனது  நாக்கின்  மூலம்  வாசனையை  அறிகிறது.
-- ஷங்கர்.  ( உயிரினம் ).  மாயாபஜார்.
--  'தி இந்து' நாளிதழ். புதன்,  ஜூன் 11, 2014.

Tuesday, January 31, 2017

உடல் உறுப்புகள்.

(  இதயம்,  தும்மல்,  நாக்கு,  கண்,  முடி,  எலும்பு,  தோல் ).
     மனித  உடலில்  உள்ள  உறுப்புகளிலேயே  கடிமையாக  உழைக்கும்  தசை  இதயம்தான்.  ஒரு  லாரி  30 கி.மீ.  ஓடத்  தேவையான  சக்தியை  ஒரு  நாளில்  அது  உருவாக்குகிறது.  நமது  வாழ்நாளில்  அது  உருவாக்கும்  சக்தியைக்  கொண்டு  நிலாவுக்குச்  சென்றுவிட்டுத்  திரும்பிவிடலாமாம்,
     ஒருவரது  சராசரி  வாழ்நாளில்  இதயம்  பம்ப்  செய்யும்  ரத்தத்தின்  அளவு  15 லட்சம்  பேரல் ( 1 பேரல்  என்பது 120 லிட்டர் ).
அத்துடன்  மனித  இதயத்தை  வெளியே  எடுத்து  வைத்தால்,  அது  ரத்தத்தைப்  பீய்ச்சி  அடிக்கும்  உயரம்  9 மீட்டர்.
     நமது  ஒற்றை  தும்மலின்  வேகம்  எவ்வளவு  தெரியுமா?  மணிக்கு  64  கி.மீ.  அதாவது,  ஒரு  புலி  ஓடும்  வேகம்.
     நமது  நாக்கில்  10,000  சுவை  உணரும்  மொட்டுகள்  உள்ளன.  நாக்கில்  சின்னச்  சின்ன  மேடாக  இருப்பவைதான்  இந்த
மொட்டுகள்.  சுவையை  அறிய  முகர்ந்துபார்க்கும்  திறனும்  அவசியம்.  மூக்கு  அடைத்திருக்கும்போது  சாப்பிடும்  உணவின்  சுவை  எப்படி  இருந்தது  என்று  யோசித்துப்  பாருங்கள்.
     தொடுதல்,  கேட்டலுக்கு  ஏற்ப  எதிர்வினை  ஆற்றும்  வகையில்  பார்வையற்றவர்களின்  கண்  மேலுறை  மாறிவிடுகிறது.  இதனால்தான்,  பார்வையற்றவர்கள்  குச்சிகளைக்  கொண்டும்,  தொட்டுப்  பார்த்தும்  பயணிக்க  முடிகிறது.
     நம்  தலையில்  உள்ள  ஒவ்வொரு  முடியும்  ஒவ்வொரு  மாதத்துக்கும்  6  மி.மீ., அதாவது  அரை  சென்டிமீட்டரைவிட  கொஞ்சம்  அதிகமாக  வளரும்.  இப்படியே  6  ஆண்டுகள்  வளர்ந்தபின்  அதற்கு  வயதாகிவிடும்.  அதனால்  அந்த  முடி  விழுந்துவிட்டு,  அதே  இடத்தில்  புதிய  முடி  முளைக்க  ஆரம்பிக்கும்.
     நாம்  பிறக்கும்போது  300 எலும்புகளுடன்  பிறக்கிறோம்.  ஆனால்,  மனிதனாக  வளர்ந்த  பிறகு  206  எலும்புகளே  இருக்கின்றன.  இதற்குக்  காரணம்  என்னவென்றால்,  சில  எலும்புகள்  ஒன்று  சேர்ந்துவிடுவதுதான்.
     நாம்  நினைப்பதற்கு  மாறாக,  தோல்தான்  நம்  உடலில்  உள்ள  மிகப்  பெரிய  உறுப்பு.  தொடர்ச்சியாக  வளர்ந்துகொண்டிருக்கும்  உறுப்பும்கூட .  நமது  தோல்  ஒரு  நிமிடத்துக்கு  50,000  செல்களை  இழக்கிறது.  நமது  வாழ்நாளில்  வளரும்  மொத்தத்  தோலின்  எடை  18  கிலோ.
--  தொகுப்பு :  ஆதி.  ( நம்பமுடிகிறதா? ).  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர்  3, 2014.   

Monday, January 30, 2017

மனித மூளை!

  உலகிலேயே,  ஏன்  பிரபஞ்சத்தில்  உள்ள  உயிரினங்களிலேயே  மனித  மூளைதான்  மிகவும்  புத்திக்கூர்மை  கொண்டது.  மனிதர்களின்  வாழ்க்கையில்  2  வயதில்தான்  மூளை  செல்கள்  அதிகபட்சமாக  இருக்கின்றன.  அதேநேரம்,  மனித  மூளை  முதிர்ச்சி  அடைய  20  ஆண்டுகள்  தேவைப்படுகின்றன.
     கருவறையில்  வளரும்  குழந்தையின்  மூளையில்  ஒவ்வொரு  விநாடியும்  8,000  புதிய  மூளைச்  செல்கள்  வளர்கின்றன.  பிறந்த  சில  மணி  நேரத்திலேயே  தாயின்  முகத்தைக்  கண்டுணர்ந்துகொள்ளும்  திறன்,  பிறக்கும்  குழந்தைகளுக்கு  உண்டு.
     நமது  மூளை  எல்லா  நேரமும்  வேலை  செய்துகொண்டே  இருக்கிறது.  ஒரு  மனித  மூளைக்குள்  ஒரு  நாளில்  சராசரியாக  70,000  எண்ணங்கள்  ஓடுகின்றன.  உண்மையில்  தூங்கும்போதுதான் மூளை  அதிகமாக  வேலை  செய்கிறதாம்.  கனவும்  அதன்  ஒரு  பகுதிதான்.  
     மனித  மூளையில்  60  சதவீதம்  கொழுப்பு  இருக்கிறது  என்றாலும்,  அது  கடுமையாக  வேலை  செய்கிறது.  மூளை  25  வாட்ஸ் மின்சாரத்தை  உற்பத்தி  செய்கிறது.  இதன்  மூலம்  ஒரு  பல்பையே  எரிக்க  முடியும்.
     மனித  மூளை  என்ற  உறுப்புக்கு  நேரடியாக  வலியை  அறியும்  உணர்வு  இல்லை.  அதனால், ஒரு  மனிதர்  விழித்திருக்கும்போதே  அவரது  மூளையில்  அறுவை  சிகிச்சை  செய்ய  முடியும்.
     மூளையால்  50,000  மாறுபட்ட  மணங்களை  நினைவு  வைத்துக்கொள்ள  முடியும்.
-- தொகுப்பு :  ஆதி.  ( நம்பமுடிகிறதா? ).  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர்  3, 2014.  

Sunday, January 29, 2017

நான்கு வழி தத்துவம்

  பெரிய  நான்கு  கோபுரவாசல்  ஆலயங்கள்  நான்கு  வழிகளை  காட்டுகின்றன.  அவை :  பக்திவழி,  ஞானவழி,  ராஜவழி,  கர்ம வழிகளை  குறிக்கும்.  எந்த  வழிகளானாலும்  நீ  இறைவனைக்  காணலாம்  என்பதே  அதன்  அர்த்த,ம்.
     கொடிமரம்  என்பது  இறைவனை  குறிக்கும்.  கொடிக்கயிறு  சக்தியைக்  குறிக்கும்.  உயரே  செல்லும்  கொடிச்சீலை  உயிர்களைக் ( மனிதர்கள்  உள்ளிட்ட  உயிரினங்கள் )  குறிக்கும்.  நந்தி  தர்மத்தை  குறிக்கும்.  கர்ப்பக்கிரகத்தில்  இருக்கும்  இறைவன்  எப்போதும்  தர்மத்தையே  பார்க்கிறான்  என்பதே  அர்த்தம்.
பஞ்சபத்ரம்
     வழிபாடுகளில்  அதிகம்  உபயோகப்படும்  துளசி,  வில்வம்,  அருகு,  வேம்பு,  வன்னி  ஆகிய  தாவரங்களைச்  சொல்லலாம்.  இந்த  ஐந்தும்  பஞ்சபத்ரம்  எனப்படும்.  பத்ரம்  என்றால்  இலை  என்று  பொருள்.  சிறந்த  மருத்துவ  சக்திகளை  கொண்ட  இந்த  மூலிகைகள்  தெய்வீகமானவை  என்று  சொல்லி  பூஜைக்குப்  பயன்படுத்த  அறிவுறுத்தப்பட்டன.
     இந்த  ஐந்து  இலைகளையும்  இறைவனுக்கு  அர்ப்பணித்து  தீர்த்தம்  விடப்  பயன்படுத்தும்  பாத்திரம்  பஞ்ச பத்ர  பாத்திரம்  என்று  அழைக்கப்படுகிறது.
-- தினமலர்  பக்திமலர்.  4-12-2014.   

Saturday, January 28, 2017

புதுசா கத்துக்க விருப்பமா?

  குட்டீஸ்  சேனலான போகோவில் 'மேட்' ( MAD)  நிகழ்ச்சிகளைப்  பார்த்திருக்கிருக்கிறீர்களா?   அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ராப்  குழந்தைகளுக்காக ஒரு  சேனலைத் தொடங்கியிருக்கிறார்.  'மேட்ஸ்டஃப்வித்ராப்'  ( MadstuffwithRob ) என்பதுதான் சேனலின் பெயர்.  இதிலும் மேட் நிகழ்ச்சிகள் உண்டு.  ஆனால்,  இதற்காக நீங்கள்  டி.வி. முன்னால்  காத்திருக்க  வேண்டியதில்லை.  இதை யுடியூபில்  எப்போது  வேண்டுமானாலும்  பார்க்கலாம்.
     புதிய  மேட்  நிகழ்ச்சியில் குட்டீஸ்களுக்கான  படைப்பாற்றலை  அதிகரிக்க  பல  புதிய  பகுதிகளைச்  சேர்த்திருக்கிறார்கள்.
'கூல் டூல்ஸ்' ( Cool  Tools )  என்ற  பகுதியில்  எப்படி  ஓவியம்  வரைவது  என்பதற்கான  குறிப்புகள்,  நுணுக்கங்கள்,  நுட்பங்களைத்  தெரிந்து  கொள்ளலாம்.  'ராப்சைக்ளிங்'  ( Rob  Cycling )  என்ற  பகுதியில்  பொருட்களை  மறுசுழற்சி  செய்யவும்,  கழிவுப்  பொருட்களைக்  கலைப்  பொருட்களாக  மாற்றுவது  எப்படி  என்பதையும்  கற்றுத்தர  போகிறார்கள்.
     'பிராங்க்  டிராங்க்'  ( Prank  Trank )  பகுதி  குறும்புத்தனங்களை  ஜாலியாகக்  கிண்டலடிப்பது பற்றியும்,  'டிராசம்  ஆவ்சம்'
( DrawsomAwesome )  பகுதி  கடினமானவற்றை  எப்படி  எளிதாக  வரையலாம்  என்பது  பற்றியும்  கற்றுத்  தரப்போகிறது.  இந்தப்  பகுதிகள்  ஒவ்வொன்றும்  3 - 4 நிமிடங்கள்  வரை  ஒளிபரப்பாக  உள்ளன.
      நிறைய  மேஜிக்  பகுதிகளும்  'மேட்  ஸ்டஃப்வித்ராப்'பில்  உங்களுக்காகக்  காத்திருக்கின்றன.  http:// www. youtube.com /
MadStuffWithRob/  என்று  இணைய தளத்தை  அம்மா,  அப்பா  உதவியுடன்  பாருங்களேன்.
-- என்.கௌரி.  (  மாயாபஜார் ).
--'தி இந்து' நாளிதழ். புதன்,  நவம்பர்  19,  2014.